Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

குழப்பம் - ஆலோசனை - தீர்வு... 10

அதிரைநிருபர் பதிப்பகம் | December 27, 2011 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால் . . .
  
அன்பார்ந்த சகோதர சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)  நமது  வாழ்வில் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்கிறோம். பல காரியங்களில் நமக்கு குழப்பம் ஏற்படுகிறது செய்யலாமா? செய்யக்கூடாதா? ஒவ்வொரு காரியங்களையும் பிறரிடம் கலந்து ஆலோசனை செய்கிறோம். மனிதர்கள் தங்கள் அறிவில் பட்டதை கூறுவார்கள். என்னதான் அருமையான யோசனை தந்தாலும் நமக்கு நிம்மதி இருக்காது அந்த காரியம் நடந்து முடியும் வரை.

நாம் ஆரம்பித்த காரியம் நல்லபடியாக நடந்து விட்டால் நிம்மதி  என்ற மகிழ்வைத்தரும். நஷ்டத்தில், மனக்குழப்பத்தில், வேதனையில் விட்டுவிட்டால் இதை நினைத்து வாழ்நாள் முழுவதும் வேதனை அடைவோம். வாருங்கள் என்ன பிரச்சனைகளை நமது வாழ்வில் சந்திக்கிறோம் என்பதை பார்ப்போம்.

மாணவ, மாணவியர்களுக்கு:
10 ஆம் வகுப்பு முடித்தவுடன் +1ல் என்ன குரூப் எடுப்பது என்பதில் குழப்பம். +2 முடித்தவுடன் எந்த துறையை தேர்ந்தெடுப்பது? எந்த காலேஜை தேர்ந்தெடுப்பது? என்பதில் குழப்பம் என்ன செய்வது இதற்கு?

தாய், தந்தைக்கு:
பாசத்தோடு வளர்த்த மகளுக்கு எப்படிப்பட்ட மாப்பிள்ளையை பார்ப்பது அவன் நல்லவனா? கெட்டவனா? நல்ல குடும்பமா? பலபேரிடம் விசாரிக்கிறோம். வெளியில் பிறர் சொல்வதை நம்பி திருமணம் செய்து கொடுக்கிறோம். பிறகுதான் தெரிகிறது அவர்களின் சரியான குணம். என்ன செய்வது இதற்கு?

மகனுக்கு பெண் தேடுகிறோம். நல்ல பெண்ணா?  நல்ல குடும்பமா? மருமகள், மகனை நம்மோடு விட்டு வைக்குமா? அல்லது தனிக்குடித்தனம் என்று இழுத்துக் கொண்டு சென்றுவிடுமா? என்பதில் குழப்பம்? என்ன செய்வது இதற்கு?

வளைகுடா வாசிகளுக்கு:
குடும்பத்தை தொடர்ந்து நம்மோடு வைத்திருப்பதா? ஊரில் கொண்டு போய் நிரந்தரமாக தங்க வைத்து விடுவதா? என்பதில் குழப்பம்? என்ன செய்வது இதற்கு?

பிள்ளைகளுக்கு எந்த துறையை தேர்ந்தெடுப்பது, எந்த கல்லூரியில் சேர்ப்பது? என்பதில் குழப்பம்? என்ன செய்வது இதற்கு?

கம்பெனியில் சம்பளம் குறைவாக இருக்கிறது. இதே கம்பெனியில் தொடர்வதா? இல்லை வேறு கம்பெனிக்கு செல்வதா? சம்பளம் குறைவாக இருந்தாலும் தொல்லைகள் அதிகம் இல்லை. புது கம்பெனியில் சம்பளம் அதிகம் கிடைத்து தொல்லைகள் அதிகமாக இருந்துவிட்டால். . . என்பதில் குழப்பம்? என்ன செய்வது இதற்கு?

வளைகுடாவில் இருக்கும் திருமணமான பேச்சுலர்களுக்கு:
மனைவி மக்களை பிரிந்து எத்தனை காலம் தனிமையில் இருப்பது? ஊர் சென்று விடலாமா? தொழில் எதுவும் தொடங்கலாமா? என்ன தொழில் செய்வது? குழப்பம்? என்ன செய்வது இதற்கு?

தொழில் தொடங்குவோருக்கு:
நல்ல இடத்தை தேர்வு செய்து, தனியாகவோ, கூட்டாகவோ தொழில் தொடங்க இருக்கிறோம். ஆரம்பித்த தொழில் நல்லபடியாக நடக்குமா? என்பதில் குழப்பம்? என்ன செய்வது இதற்கு?


இன்ஷாஅல்லாஹ் தீர்வை அடுத்த பகுதியில் பார்ப்போம்...

- S.அலாவுதீன்

10 Responses So Far:

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

குழப்பமான ஆக்கத்தை அடுத்த ஆக்கம் வரும் வரை எங்களையெல்லாம் குழப்பத்தில் ஆக்கிவிட்டீர்கள்.
அலாவுதீன் காக்கா.

எனக்கு தெரிந்த ஒரு விசயத்தை சொல்லிவிடுகிறேன்.குழப்பத்திற்கு பயம் ஒன்றே காரணம் காக்கா.

Yasir said...

எதுவானலும் அதிக எதிர்பார்ப்புகளை குறைத்து ,நாம் மதி கொண்டு முயற்ச்சி செய்தாலும் அல்லாஹ் நமக்கு விதித்து நடக்கும் என்ற நம்பிக்கையும் உண்டாக்கி கொண்டால் குழப்பம்,ஏமாற்றம்,கோபம் ஆகியவற்றை தவிர்க்கலாம்....

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

வாழ்வில் நாம் எதிர்நோக்கும் முக்கியப்பிரச்சினைகளுக்கு குடும்ப நலவிரும்பிகள் என்பவர்களை வைத்து ஒரு கலந்தாய்வு (மஷ்வ்ரா) செய்வதை விட சம்மந்தப்பட்ட நாமே நம் பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்களை மட்டும் வைத்து ஒரு நல்ல முடிவு எடுக்கப்பட்டால் எல்லாக்குழப்பமும் தீரும். காரணம் நலவிரும்பிகள் என நாம் நம்பிக்கொண்டிருப்பவர்களில் பலர் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் போலித்தனமானவர்களாகவே பெரும்பாலும் இருக்கிறார்கள். இவர்களை வைத்து ஆலோசனை செய்வதை விட சும்மா அல்ஹம்துலில்லாஹ் என்று இருந்து விடுவதே மேல்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இந்த மூன்றில் முதல் இரண்டில் அதிக இடத்தை பிடிப்பதில் எங்க கம்பெனி ப்ப்ப்ப்ப்ளேளளளேனினினினிங்ங்ங்ங்ங் டீம் குழம்பி குழம்பி குழம்பி ஆலோசிப்பாய்ங்க !!! :)

தீர்வை சீக்கிரம் சொல்லவும் மாட்டாய்ங்க ! தீர்த்து வச்சதும்... அது சரியில்லை, இது சரியில்லை, எதுவுமே சரியில்லை இதை மட்டும் சொல்லிகிட்டே இருப்பாய்ங்க !

இருந்தாலும் அலாவுதீன் காக்கா எடுத்து வைக்கும் தனிமனித குழப்பம், அவர்களுக்கான ஆலோசனை மற்றும் தீர்வு நிச்சயம் பலனளிக்கும் என்று காத்திருக்கோம் இன்ஷா அல்லாஹ்...

sabeer.abushahruk said...

உணமையிலேயே நல்ல தீர்வுகள் வைத்திருக்கிறான் என்று அதன் பலனை அனுபவித்து வருபவன் என்ற வகையில் உறுதி தருகிறேன்.

காக்க வைப்பதில் அர்த்தமுள்ளது.

KALAM SHAICK ABDUL KADER said...

ளிமையான கனவேற்றால் இலக்கும் எட்டும்
.. ***** எதிர்ப்போரை அன்பென்னும் கயிறே கட்டும்!
தெளிவான எண்ணங்கள் வெற்றி ஈட்டும்
***** தோற்றாலும் வென்றாலும் பொறுமை காட்டு


அளவான நம்பிக்கை உனக்குள் வேண்டும்
***** அதற்குள்ளாய் வாழ்க்கையை அமைக்க வேண்டும்
வளமான வொழுக்கத்தைப் பேண வேண்டும்
***** வரம்புக்கு ளடங்கித்தான் வாழ வேண்டும்

புரிகின்ற மொழியாலே நீயும் சொல்லு
***** பிறர்நாடும் அமைதிப்புன் னகையால் வெல்லு
விரிகின்ற நட்பென்னும் வளையம் காக்கும்
***** விரைவாக வுன்பாதை வெற்றி நோக்கும்
--


1)கனவுகள் எளிதானால்
கடமைகள் எளிதாகும்

2) அன்பென்னும் கயிற்றால்
வம்பர்களைக் கட்டு

3) கருவின் சிசுவும்
கனியாகும் விதையும்
ஒரு காலம் வரை
பொறுப்பது போல்
பொறுத்தல் வேண்டும்

4) அதீதமான நம்பிக்கை
அவசரத்தின் குழந்தை

5) எப்படியும் வாழலாம்;
ஒழுக்கக் கேடானது
இப்படித்தான் வாழ்வதென்பது
ஒழுக்கத்தின் ஆணிவேர்

6) சொல்வதைத் தெளிவாகச்
சொல்வதற்குப் புரிந்த மொழி

7) பேச்சைக் காட்டிலும்
புன்னகையும் மௌனமும்
வலியது

8) முரண்பட்டோரையும்
அரவணைத்தலே
திரண்ட வெற்றிக் கதவு
திறக்கும் திறவுகோல்





--

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

அலாவுதீன் காக்கா,

கேள்விகளை நிறைய கேட்க வைத்துவிட்டீர்கள், விரைவில் தீர்வை பதியுங்கள்.. ஆவலுடன் காத்திருக்கிறோம்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

ஒரே கொழப்பமா இருக்குங்கோ!

அலாவுதீன்.S. said...

குழப்பம் விரைவில் தீரும் - இன்ஷாஅல்லாஹ்!

கருத்திட்ட சகோதரர்கள் அனைவருக்கும் நன்றி!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு