Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

"புதிய‌தோர் ஊர் செய்வோம்" வாருங்கள் 23

அதிரைநிருபர் | December 04, 2011 | , ,

விடுமுறையில் ஊரில் நமது மதிப்பிற்குரிய வாவன்னா சாரை பலமுறை சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது அல்ஹம்துலில்லாஹ். அவர்கள் நமதூரில் தொன்றுதொட்டு வரும் சமூகச்சீர்கேட்டையும், மார்க்கம் தூற்றும் பழக்க,வழக்கங்களையும் கலைந்தெறிய (துடைத்தெறிய) இன்றைய இளைஞர்களால் ஒரு மாபெரும் புரட்சி நமதூரில் வெடிக்க‌ வேண்டும் என்று உணர்ச்சி பொங்க கூறினார்கள்(அது தானே நம் எல்லோரின் ஆவலும்). வாவ‌ன்னா சார் போல் எத்த‌னையோ பெரிய‌வ‌ர்க‌ள் ந‌ம்மூரில் இது போன்ற‌ உய‌ரிய‌ எண்ண‌ங்க‌ளுட‌ன் வெளிக்காட்ட‌ வாய்ப்பின்றி வாய‌டைத்து ம‌வுன‌வாய் இன்றும் வாழ்ந்து வ‌ருகின்ற‌ன‌ர். வாழ்ந்து ம‌றைந்த‌வ‌ர்க‌ள் எத்த‌னையோ? அந்த‌ வ‌ல்லோனுக்கே வெளிச்ச‌ம்.

பல ஆண்டுகாலம் யாரும் அசைக்க முடியாமல் ஆண்டு வந்த நாட்டின் மன்னர்கள்/ஜனாதிபதிகளெல்லாம் இன்று மக்கள் புரட்சி ஏற்பட்டு (அது அமெரிக்காவின் தூண்டுதலாலோ அல்லது உள்நாட்டு மக்களின் கொந்தளிப்பாலோ என்பது ஆராயப்பட வேண்டிய விசயம்) ஒற்றுமையாக எல்லோரும் பல உயிர்த்தியாகங்களுக்கிடையே அந்நாட்டு தலைவர்களையே தூக்கி எறிந்து விட்டார்கள். இது போன்ற (பாதிக்கப்பட்ட) மக்கள் புரட்சி நமதூரில் வெகுவிரைவில் வெடித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. அப்ப‌டி வெடித்தாலும் நாம் நேச‌க்க‌ர‌ம் நீட்ட‌ த‌ய‌ங்க‌ப்போவ‌தில்லை.

அரசும் அதன் அலட்சியப்போக்கான அதிகாரிகளும் ஒரு புறம் அனைத்து தரப்பு மக்களுக்கும் தன்னால் இயன்ற துரோகம் செய்து வருவதுடன் உள்ளூர் ம‌க்க‌ளாக‌ இஸ்லாமிய‌ ச‌மூக‌த்த‌வ‌ர்க‌ளே ஒருவ‌ருக்கொருவ‌ர் மார்க்க‌ம் பேணாம‌ல் துரோக‌மும், நில (பிறர் உடைமை)அப‌க‌ரிப்பும், வ‌ர‌த‌ட்சிணை கொடுமையும்,குண்டாமத்து என்னும் பம்மாத்து வேலைகளும், பெண்ணுக்கு வீடு கொடுத்து மார‌டிப்ப‌தும், சில்ல‌ரைப்பிர‌ச்சினைக‌ளுக்கெல்லாம் விவாக‌ர‌த்து வேண்டுவதும், ஏழைக‌ளை ஏறெடுத்து பார்க்காத‌தும், தன்னை ஈன்றெடுத்த‌ பெற்றோர்க‌ளை உல‌கில் இருப்ப‌தை விட‌ சாவ‌தே மேல் என்று அற்ப‌ உல‌க‌ ஆதாய‌த்திற்காக‌ க‌ருதுவ‌தும், ஆண்க‌ளை எல்லாம் குடும்ப‌ பொறுப்பை த‌லையில் ஏற்றி ஊரை விட்டு அப்புற‌ப்ப‌டுத்துவ‌தும், காம இச்சைகளுக்காக எந்தக்கபோதிகளுடனோ காணாமல் போவதும், அண்ணன் தம்பிகளுக்கிடையே ஒருவருக்கொருவர் விட்டு கொடுக்காமல் போர்முனையை சந்திப்பது போன்ற சங்கடமான சூழ்நிலைகள் ச‌க‌ஜ‌மாக‌ எல்லா இட‌ங்க‌ளிலும், வீடுக‌ளிலும் ந‌ட‌ந்துவ‌ருமேயானால் அல்லாஹ்வுடைய‌ வேத‌னைக‌ளைத்த‌விர‌ வேறென்ன‌ அவ‌னிட‌மிருந்து நாம் எதிர்பார்க்க‌ முடியும்? நெருப்பு மழையன்றி பன்னீர் மழையை எப்படி எதிர்பார்க்க முடியும்?

அவ‌ன் நாடினால் இறைநிராக‌ரிப்ப‌வ‌ர்களை (காஃபிர்கள்) வைத்தே ந‌ம் சோலியை க‌ச்சித‌மாக‌ முடித்து சுவ‌டு தெரியாம‌ல் அழித்திடுவான் அல்ல‌வா? பண்டைய இஸ்லாமிய உண்மை வரலாறுகளை புரட்டிப்பார்க்க வேண்டாமா? ஏன் தான் சிந்திக்க‌ ம‌றுக்கிற‌தோ உள்ள‌ம்?

விழிப்புணர்வுகளை ஊரைத்திர‌ட்டி பிரச்சாரம் செய்து போர்க்கொடி தூக்கி ஆர‌ம்பிக்க‌ வேண்டிய‌ அவ‌சிய‌மில்லை. அவ‌ர‌வ‌ர் வீடுக‌ளிலிருந்து ஆர‌ம்பிக்க‌ வேண்டியுள்ள‌து. மார்க்க‌மும் அதைத்தானே சொல்லிக்கொண்டிருக்கிற‌து அன்று முத‌ல் இன்று வ‌ரைக்கும். மாற்று ம‌தத்தினரை தூற்றும் முன் ந‌ம்ம‌வ‌ர்க‌ள் முத‌லில் ந‌ல்ல‌வ‌ர்க‌ளாக மாற வேண்டும். வெறும் இஸ்லாமிய‌ சின்ன‌ங்க‌ள் ம‌ட்டும் ந‌ம்மை க‌ரை சேர்த்து விடாது. ந‌ல்ல‌ எண்ண‌ங்க‌ளே ந‌ம்மை சுவ‌ன‌ம் புக‌ செய்ய‌ வேண்டிய‌தை செய்யும்.

ஜாஹிர் காக்கா, விழிப்புணர்வுகளின் எழுச்சி எந்த‌ ரூப‌த்தில் வெடிக்குமென்று இறைவ‌னே அறிவான். அது உங்க‌ள் எழுத்து மூல‌மாக‌ கூட‌ இருக்கலாம். தொட‌ருங்க‌ள் ஒன்று சேர ஒரு சிலரல்ல ஓராயிரம்‌ ம‌க்க‌ள் காத்திருக்கிறார்க‌ள்.

அவ‌ர‌வ‌ர் ம‌த‌ங்க‌ளை அவ‌ர‌வ‌ர் மதித்து நடந்து ம‌னித‌ நேய‌ம் காக்க‌ப்ப‌ட‌ வேண்டும்.

"புதிய‌தோர் ஊர் செய்வோம்" வாருங்கள்......

மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

23 Responses So Far:

அதிரைநிருபர் பதிப்பகம் said...

MSM(n) அவர்களின் கருத்தாழமும், உணர்வுகளின் எழுச்சியும் "இன்றைய சவால் பகுதி - 4ல்" கருத்தாக பதியப்பட்டது அதன் தாக்கம் உணர்ந்து அப்படியே தனிப் பதிவாக இங்கே பதியப்பட்டுள்ளது.

இதேபோல் உளக் குமுறல்களும், ஆதங்கங்களும், ஆசைகளும் நம்மிடையே இருக்கும் தானே அதனையும் இங்கே பகிர்ந்திடலாமே !

ZAKIR HUSSAIN said...

To brother Naina Mohamed


உங்கள் எழுத்தில் நம் ஊர் முன்னேர இருக்கும் ஆர்வம் மிகத்தெளிவாக தெரிகிறது.

இன்ஷா அல்லாஹ் எழுதுகிறேன்....முதலில் ஊரில் நடக்கும் அவலங்களை பட்டியல் இடுவோம்.

பிறகு தீர்வுகளை அலசி ...வெளியிட்டு...பிறகு நோட்டீஸ் ஆக வினியோகிக்கும் வேலையயை ஆரம்பிக்கலாம்.

இறைவன் நல்லது நடக்க எப்போதும் அவன் துணையாய் இருப்பான். அவனது கருணையில் நாம் அனைத்தையும் சாதிக்கலாம்.

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

சகோ நெய்னாவின் ஆதங்க கருத்து ஒரு ஆக்காமாகவே உருவெடுத்துள்ளது என்று சொன்னால்.நம் குடும்ப முதல் குப்பை மேடு வரை ஊரின் அவலங்களும், அட்டுழியங்களும் தலை விரித்தாடுகிறது என்பதை உணர முடிகிறது.

பெண் பிள்ளைக்கு வீடு எழுதி கொடுக்க கூடிய வர்களே! ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொள்ளுங்கள்.எங்கள் உயிர் இருக்கு வரை வீட்டிலுள்ள எல்லா வற்றையும் அனுபவிப்போம்.அதற்க்கு தடை போட யாருக்கும் உரிமை இல்லை.இஷ்டம் இருந்தால் இருங்கள் இல்லையென்றால் வெளியேறிவிடுங்கள் என்று.

// ஜாஹிர் காக்கா, புர‌ட்சிக‌ள் எந்த‌ ரூப‌த்தில் வெடிக்குமென்று இறைவ‌னே அறிவான். அது உங்க‌ள் எழுத்து மூல‌மாக‌ கூட‌ இருக்கலாம். தொட‌ருங்க‌ள் ஒன்று சேர‌ ஓராயிர‌ம‌ல்ல‌ ப‌ல்லாயிர‌ ம‌க்க‌ள் காத்திருக்கிறார்க‌ள்.//

போதனைகள் மூலம் திருந்தாத ஊர்.இன்ஷா அல்லாஹ் எழுத்தின் மூலம் பொங்கி எழக் கூடிய புரட்ச்சியாளர்கள் மூலம்
திருந்தலாம்.

ஜாகிர் காக்கா தொடருங்கள் பல்லாயிரம் மக்களுக்கு அப்பார்ப்பட்டவர்களில் நானும் ஒருவன் காத்திருக்கிறேன் .

Yasir said...

ஒரு தீக்குச்சியை வைத்து பல மரங்கள் அடர்ந்த வனத்தையே அழித்துவிடலாம்....நம்மூரில் பாலாய்போன அநியாயங்களை அழிக்க ஒரு உணர்ச்சி மிக்க ஆக்கமும் அதனை கொண்டு சேர்க்க ஒரு சிறிய கூட்டமும் பத்தாத என்ன.....வாருங்கள் கைகோர்ப்போம்..வேரறுப்போம் சமுகக்கொடுமைகளை

N. Fath huddeen said...

அது சரி! கடயனல்லூர் பெண்கள் நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள ஹைரெ உம்மத் பத்திரிக்கை படித்தீர்களா?

கட்டாயம் நம் எல்லொரும் படிக்கவேண்டிய பிரதி.

அபூபக்கர்-அமேஜான் said...

நெய்னாவுக்கு எப்போவும் ஆதங்கமும், குமுறலும் இருந்துக் கொண்டே தான் இருக்கிறது. இதை இப்போதான் வெளிபடுத்தியிருக்கிறார் நம்ம ஊரில் பெண் பிள்ளைகளுக்கு தாய், தந்தையர் உயிருள்ளவரைக்கும் வீடுகளை எழுதிக் கொடுக்காமல் இருந்தால் நன்றாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் திருமணம் ஆகுவதற்கு முன்பே மாப்பிள்ளை வீட்டார்கள் வீடு, எத்தனை பவுன் நகை என்றல்லாம் வெட்கம் இல்லாமல் கேட்டுவிடுகிரார்கள். அந்த பெண்ணுக்கு பெற்ற தாய், தந்தையர்கள் வீடு எழுதி கொடுக்காமலோ, அல்லது நகைகள் வாங்கி கொடுக்காமலோ இருந்தால் வீட்டுக்கு வருகின்ற மருமகன் வீட்டை விட்டு வெளியை போ என்று பெண்ணை பெற்ற தாய், தந்தையரை கேவலமாக திட்டுகிறான். இதனால் மாமியா,மாமனார்,மருமகன்,மருமகள் பிரச்சினை என்றல்லாம் வருகிறது.

Unknown said...

//அல்லாஹ்வுடைய‌ வேத‌னைக‌ளைத்த‌விர‌ வேறென்ன‌ அவ‌னிட‌மிருந்து நாம் எதிர்பார்க்க‌ முடியும்? நெருப்பு மழையன்றி பன்னீர் மழையை எப்படி எதிர்பார்க்க முடியும்?//

//வெறும் இஸ்லாமிய‌ சின்ன‌ங்க‌ள் ம‌ட்டும் ந‌ம்மை க‌ரை சேர்த்து விடாது. ந‌ல்ல‌ எண்ண‌ங்க‌ளே ந‌ம்மை சுவ‌ன‌ம் புக‌ செய்ய‌ வேண்டிய‌தை செய்யும்.//

//அவ‌ர‌வ‌ர் ம‌த‌ங்க‌ளை அவ‌ர‌வ‌ர் மதித்து நடந்து ம‌னித‌ நேய‌ம் காக்க‌ப்ப‌ட‌ வேண்டும்.//

வைர வரிகள்!

அபு இஸ்மாயில் said...

அஸ்ஸலாமு அழைக்கும்
msm இன் மற்றுமொரு அருமையான ஆக்கம் பெண்களுக்கு வீடு விசயமாக பேசும் அனைவரும் தன்னை தானே ஒருமுறை பரிசோதித்து கொள்ளுங்கள் நாம் சரியாக இருக்கிறோமா என்று ? தவ்ஹீது பேசும் நபர்கள் நேற்று முன்தினம் நமது நிருபரில் நேரலை செய்த தவ்ஹீது வாதிகளும் அமல்களும் என்ற மிக சிறந்த உண்மையான பயான், இதை மீள் பதிவு அல்லது தரவிறக்கம் செய்ய நிருபர் நெறியாளர் ஏற்ப்பாடு செய்தால் நலம்.

அதிரைநிருபர் பதிப்பகம் said...

அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...

சகோதரர் அபூஇஸ்மாயில்:

தங்கள் சுட்டியிருந்த காணொளி இலவசமாக பார்த்திட

இங்கே சொடுக்கவும்

ஏற்கனவே இதுவரை ஒளிபரப்பிய காணொளிகளை காணலாம்.

தொடர்ந்து மார்க்க சொற்பொழிவு நேரலையை கண்டு பயனடைந்து வருவதற்கு அல்லாஹ் நற்கூலியை வழங்குவானாக !

அதிரைநிருபர் பதிப்பகம் said...

//தரவிறக்கம் செய்ய நிருபர் நெறியாளர் ஏற்ப்பாடு செய்தால் நலம்.//

விரைவில் அதற்கான வாய்ப்புகளையும் செய்திட முயற்சிக்கிறோம் இன்ஷா அல்லாஹ்.

தலைத்தனையன் said...

பெண்ணை கொடுக்கும் பையனின் தாய் தகப்பன் யார் என்று தெரிந்து கொள்வது நல்லது. பையன் நல்லவனாக இருந்தாலும், தாய் தகப்பனின் தவறான பரிந்துரையால் தவறு செய்யும் மாப்பிள்ளைகள் அதிரையில் அதிகம்.

மட்டுமல்லாமல், நன்றாக அவர்களைப்பற்றி தெரிந்திருந்தும் 'குடும்பம்' என்று கும்ப கர்ண தூக்கத்தில் நாம் எடுத்த தவறான முடிவினால் நாம் அவதிப் படுகிறோம்.

அல்லாஹ் பாதுகாப்பானாக.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அது சரி என்று சொல்லி வேறொரு கருத்தை சொல்லுவது 'அதெல்லாம் இருக்கட்டும் ஆகக்கூடிய காரியத்தை பாருங்கள்' என்று சொல்லுவது போல் எனக்கு இருக்கிறது உங்களுக்கு எப்படியோ?

சிறு குழுக்க‌ளாக‌ டிவிட்ட‌ர், ஃபேஸ் புக்கில் ஒன்றிணைந்த‌வ‌ர்க‌ள் நாட்டை ப‌ல்லாண்டு ஆண்ட‌வ‌ர்க‌ளையே புர‌ட்டிப்போட்ட‌ நிக‌ழ்கால‌ வ‌ர‌லாறுக‌ள் ந‌ம் க‌ண் முன்னே நிற்கும் ந‌ல்ல‌ சான்றுக‌ள்.

என‌வே எந்த‌ க‌ருத்தானாலும் அது நேர்மறையாக இருந்தாலும் சரி, எதிர்ம‌றையான‌ க‌ருத்தாக‌ இருந்தாலும் சரி ஆணித்த‌ர‌மாக‌ சொல்லுங்க‌ள் வேண்டா வெறுப்பாய் அல்ல‌...

மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

(மண)மகனே வாய்ப்பவளையும் உங்கள் வாப்பாம்மாக்களையும் இஸ்லாமியப்படி நீதம் செய்ய கற்றுக்கொண்டால் நாளைய ஐம்பதாயிரத்தில் ஒழுக்க சீலர்களில் நிச்சயம் ஒருவனாக மாற முடியும்.

நெய்னா,ஜாஹிராக்கா புரட்சியில் ஆயிரத்தில் ஒருவனாக.MHJ.

ZAKIR HUSSAIN said...

To Brother N. Fathhudeen.....

//அது சரி! கடயனல்லூர் பெண்கள் நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள ஹைரெ உம்மத் பத்திரிக்கை படித்தீர்களா?
கட்டாயம் நம் எல்லொரும் படிக்கவேண்டிய பிரதி. //

இக்பால் எனக்கு இ-மெயிலில் அனுப்பி இருந்தான். அது லோடிங் ஆவதர்க்குள் பொடி நடையா "கடைய நல்லூர்' போய் வந்திருக்கலாம்னு இருந்தது.

N. Fath huddeen said...

MALAYSIA JO! PLS PROVIDE ME YOUR EMAIL ID.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

"நல்ல குடும்பம் ஒரு பல்கலைக்கழகம்
கெட்ட குடும்பம் பிறரை பல்லிளிக்க வைக்கும்"

‍புதுமொழி‍‍

மு.செ.மு. நெய்னா முஹம்மது

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

சகோ. நெய்னாவின் குமுறலில் நானும் உடன்படுகிறேன்.

புரட்சி ஊடமும் என்ற ஒரு ஆயுதத்தின் மூலம் செய்ய முடியும்.

பொய் அனாச்சாரங்களை ஊடகத்தின் மூலம் தினிக்கிறார்கள், அதில் வெற்றியும் கண்டுள்ளார்கள் இறைநிராகரிப்பாளர்கள்.

ஏன் நம்மால் மார்க்கத்தை எத்திவைத்து புரட்சி செய்ய முடியாதா என்ன?

இன்ஷாஅல்லாஹ் முடியும்...

sabeer.abushahruk said...

சிந்திக்கத் தூண்டும் ஆக்கம். செயல்திட்டம் வரைந்து பின்பற்றினால் சாதிக்கலாம்.

Saleem said...

(மண)பெண் வீட்டில் வாங்கி உணவுகளை மணமகண் வீட்டில் வைத்து ஊர் விருந்து கொடுப்பதும் ஒரு வகையில் வரதட்சினைதான்??இதையும் முதலில் ஒளிக்க வேண்டும்!!!


M.F.முஹம்மது சலீம்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//பெண் வீட்டில் வாங்கி உணவுகளை மணமகண் வீட்டில் வைத்து ஊர் விருந்து கொடுப்பதும் ஒரு வகையில் வரதட்சினைதான்??இதையும் முதலில் ஒளிக்க வேண்டும்!!! //

ஆமா, ஆமா ! யாருக்கும் தெரியாமல் ஒளிக்கத்தான் வேண்டும்(ன்னு) வாங்கக் கூடாதுன்னு சொன்னவூட்டுலேயே சொல்லுவாங்க.... :)

அன்பளிப்புகளை பரிமாறிக் கொண்டால் நட்பு பலப்படும், ஆனால் அன்பு அளிப்புகளே-பறிப்புகளாக வேறுவிதமாக (அன்பு அழிப்பாக) நடந்தேறுகிறது... கேட்டு வாங்கினால் என்ன சொல்வது !?

Shameed said...

ஆக்கத்திற்கு ஒரு ஆக்கம் போட்ட நெய்னாவின் நல்ல நோக்கம் வெற்றி அடைய துவாவும் ஒத்துழைப்பும் உண்டு

இப்னு அப்துல் ரஜாக் said...

சிந்திக்கவேண்டிய ஆக்கம்.

அப்துல்மாலிக் said...

ஊருக்கு போய் அனுபவித்து எழுதும் கட்டுரை ஒவ்வொன்றும் கருத்தாழமிக்கது, உங்க புரட்சியில் என் பங்கும் உண்டு.

நமதூரில் கல்யாணம் என்ற முறையில் நடக்கும் சில/பல பழக்கவழக்கங்கள்களை களைய வேண்டும், இதுவே முதல் புரட்சி. தத்தமது வீடுகளிலிருந்து இதை ஆரம்பிப்போம், இன்ஷா அல்லாஹ்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு