Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இடிப்பும்! நடிப்பும்! படிப்பும்! - டிசம்பர் 6 9

அதிரைநிருபர் | December 06, 2011 | , ,

பாபர் மசூதி இடிப்பு:

பாபர் மசூதியை இடித்த மதவெறியர்கள் இந்தியாவின் இறையாண்மையையும் சேர்த்தே அன்று இடித்தார்கள். ஆனால் இழப்பு ஏற்பட்டது என்னவோ முஸ்லிம்களுக்கு மட்டுமே!. இந்தியாவின் இறையாண்மைக்கு எந்த ஒரு எழவும் ஏற்படவில்லை!!. காரணம் முஸ்லிம்களின் அமைதி!. முஸ்லிம்களும் பதிலுக்கு நாங்களும் கரசேவை செய்வோம் என்று கூறி இந்தியாவில் உள்ள எந்த கோயிலையும் கரசேவை செய்ய செல்லவில்லை. செல்லவும் மாட்டார்கள். ஏனெனில் மத வழிபாட்டு தளங்களை கண்ணியபடுத்த வேண்டும் என்பது இஸ்லாமிய கட்டளை.

பாபர் மசூதி வழக்கு தொடர்பான தீர்ப்பின் மூலம், ஏதோ இந்தியாவே ரணகலமாக ஆகப்போவதாக கூறி ஒரு மாயை ஏற்படுத்தி ராணுவத்தை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தினர். ஆனால் மூன்று காமெடியர்கள் வழங்கிய தீர்ப்பு, முஸ்லிம்களுக்கு பாதகமாக வந்தாலும் அதே அமைதியை மீண்டும் முஸ்லிம்கள் காட்டி, தங்களுக்கு தீவிரவாதத்தில் சிறிதும் நம்பிக்கை இல்லை என்று பறைசாட்டினர். அன்றே உள்துறை அமைச்சர் முஸ்லிம்களின் அமைதியை பாராட்டியதும் குறிப்பிடத்தக்கது. 

 
அநீதியான தீர்ப்பு வெளியான பின்பும், மீண்டும் இந்திய நாட்டு சட்டதிட்டத்தின் மேல் நம்பிக்கை கொண்டு, மேல்முறையீடு செய்து மீண்டும் இந்த சமூகம் காத்து இருக்கின்றது. இந்திய சுப்ரீம்கோர்ட், அஹமதாபாத் நீதிமன்றத்தில் என்ன நடக்கின்றது?. குரங்குகள் அப்பத்தை பங்கு போட்டது போல பாபர் மசூதியை பங்குபோட யார் சொன்னது?. என்று கேட்ட சாட்டையடி கேள்விகள், இன்னும் இந்த நாட்டில் நீதி சாகவில்லை, மாறாக அவசர சிகிச்சை பிரிவில் தான் இருக்கின்றது என்று விழி மேல் விழிவைத்து முஸ்லிம் சமூகம் காத்துக்கொண்டிருகின்றது.

அரசியல்வாதிகளின் நடிப்பு:
மசூதி இடிக்கப்பட்டதை தற்போது அனைத்து அரசியல் கட்சிகளும், அதை ஓட்டு பொறுக்கும் அரசியல் நோக்கோடு பார்க்கின்றார்களே தவிர, அநீதி இழைக்கப்பட்ட சமூகத்திற்கு உடனே தீர்வை ஏற்படுத்தி தர எவரும் முன்வருவதில்லை. காரணம் கேட்டால் வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது என்று கூறுவார்கள். அட அரசியல்அநியாக்க்காரர்களே, வழக்குமன்றத்தில் உள்ள மசூதி வழக்கை காட்டி ஓட்டு பொறுக்க முடிந்த உங்களால், ஆட்சிக்கு வந்ததும் அதை தீர்க்க முடியவில்லையா?. மசூதி இடிக்கப்பட்டதும் ஓடி ஒழிந்த நரசிம்மராவ் முதல், முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரிய சோனியா வரை இன்னும் துரோகம் தொடரவே செய்கின்றது. 

ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 6 வரும்!. வழக்கம் போல அரசியல் வா(வியா)திகள் பாராளுமன்றத்தில் கோஷம் போடுவார்கள்!!. பின் பாராளுமன்றம் பிற்பகல்வரை ஒத்திவைக்கப்படும். பின் இந்த சம்பிரதாயம் அடுத்த வருடத்திற்கும் ஒத்தி வைக்கப்படும். இந்த வருடமும் அதேதான் நடக்கப்போகின்றது. இதுதான் அரசியல் வியாதிகளும், ஆளும் வர்க்கமும் நமக்கு காட்டும் பாடம். அதில் எந்த வித மாற்றமும் இருக்கப்போவதில்லை!.

முஸ்லிம்கள் பெறவேண்டிய படிப்பு:
முஸ்லிம்கள் இந்தியாவில் பாபர் மசூதி விவகாரத்தில் மட்டும்தான் பாதிக்கப்பட்டுள்ளனரா என்றால் இல்லை. இடஒதுக்கீடு, அரசியல் அறியாமை, கல்வியறிவு இல்லாமை, பொய் வழக்குகள், பொருளாதாரத்தில் முன்னேற்றமின்மை, குஜராத் போன்ற மாநிலங்களில் வாழ்வுரிமையும் பாதுகாப்பின்மையும் என இந்த பட்டியல் நீளும். இந்த சமூகம் எல்லாவகையிலும் பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறுவதைவிட வஞ்சிக்கப்பட்டுள்ளது என்றே கூறவேண்டும். சுதந்திரத்திற்கு பாடுபட்ட இனம் இன்று அடிமைப்பட்டு கிடக்கின்றது. இதற்கெல்லாம் தீர்வுதான் என்ன?. முஸ்லிம்கள் தங்களை தாங்களே முதலில் உணரவேண்டும். 

வெள்ளையனிடம் அடிமைபட்டு கிடந்த இந்தியாவிற்கும், சுதந்திர இந்தியாவிற்கும் இடையில் முஸ்லிம்களின் வாழ்வில் என்ன ஏற்பட்டது என்று உணரவேண்டும். எங்கே நம் உரிமையை இழக்க ஆரம்பித்தோம் என்று அறியவேண்டும்.

அரசியல், மதவாத சூழ்ச்சியில், மீடியாக்களின் பொய்யில் சிக்குன்டதை உணரவேண்டும். நாம் வந்தேறிகள் இல்லை. இந்த தேசத்தின் உண்மையான குடிமக்கள். மற்ற இனத்திற்கு கிடைக்கும் அதே உரிமையும் அதிகாரமும் நமக்கும் நம் குழந்தைகளுக்கும் இனி கிடைக்க வேண்டும். இவ்வாறு உணரும் நாள் வரும்வரை நாம் அடிமைப்பட்டும், அதிகாரம் இழந்தும் கிடக்கவேண்டியே வரும்.

பாபர் மசூதி போராட்டத்தில் கூட ஆளுக்கொரு திசையில் போராட்டம் நடத்தி நம்மை நாமே பலவீனப்படுத்திக்கொண்டே உள்ளோம். ஒரு ஊரில், ஒரு மாவட்டத்தில் நான்கு இயக்கங்களின் தனி தனி போராட்டங்கள். ஒரு மாநிலத்தில் ஒரு இயக்கம் கூட்டம் நடத்தினால் அடுத்த மாநிலத்தில் வேறு கொடியுடன் வேறு இயக்கத்தின்போராட்டம். ஒவ்வொரு கூட்டத்திற்கும் பத்து நூறு பேர்கள். இவ்வாறு சென்றால் பின் நம் வலிமையை எங்கே எப்படி காட்டமுடியும்?.

ஆகையால் முதலில் முஸ்லிம்கள் மாநில அளவில் ஒன்றுபட்டு பின் தேசிய அளவில் ஒரே அணியின் தலைமையின் கீழ் ஒன்றுபட வேண்டும். இந்தியாவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை சாதாரணமானது அல்ல. உலக அளவில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் நாடுகளில் இரண்டாம் இடத்தில் இந்தியா உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள்!. பின் உங்கள் உரிமைகளை அரசியலிலும், ஆட்சி அதிகாரத்திலும் வெல்லுங்கள்!!.

பாபர் மசூதியை பொறுத்தவரையில் நம் சக்திக்கு உட்பட்டு நாம் போராட்டம், சட்ட நடவடிக்கை என்று சென்றாலும், நமக்கு தீர்வு இறைவனிடம் இருந்தே கிடைக்க வேண்டும். அவன் அருள் இல்லையென்றால் நிச்சயம் நம்மால் வெற்றிபெற முடியாது. எனவே ஒவ்வொரு முஸ்லிமும் அல்லாஹ்விடம் முறையிட்டு யா அல்லாஹ், இது உன்னுடைய இல்லம். உன்னை வழிபாடு செய்த இல்லம். இன்று நாசகார நாய்களினால் அது பாழ்பட்டு கிடக்கின்றது. மீண்டும் நாங்கள் அதே இடத்தில் உன்னை வழிபடவும், அதற்கான வெற்றியையும் நீயே எங்களுக்கு ஏற்படுத்தி தரவேண்டும் என்று கோரிக்கையை வையுங்கள். இறைவனின் நீதிமன்றத்தை விட உலகத்தில் வேறு எங்குமே சிறந்த நீதியும் நீதிமன்றங்களும் இல்லை.

-- அதிரை முஜீப்

9 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நல்லாக்கம்!
யாஅல்லாஹ் எங்களுக்கு ஒற்றுமையைக் கொடுத்து மீண்டும் அதே முழுமையான இடத்தில் நீ முழுமையாக ஏற்றுக்கொள்ளும்படியான உனது இல்லம் எழும்ப பேரருள் புரிவாயாக ஆமீன்.

அப்துல்மாலிக் said...

ஒற்றுமையிருந்தால் உண்டு வாழ்வு என்பதற்கினங்க, நமக்குள்ளே தேசியளவில் ஒற்றுமையை ஒரே ஒருமுறை காண்பித்தாலே அரசும், இடித்த கயவர்களும் ஒரு நிமிடமாவது ஆடித்தான் போவார்கள், இது நிறைவேறுமா இனி வரும் காலங்களில்........

தாஜுதீன் (THAJUDEEN ) said...

மார்க்க விசயத்தில் ஏற்படும் சிறு சிறு கருத்துவேறுபாடுகளால் பிரித்தாளாப்படும் போக்கை கொஞ்சம் ஓரம் கட்டிவிட்டு. சமுதாய நலன் என்ற அடிப்படையில் முஸ்லீம் அமைப்புகள் ஒன்றிணைந்தால் மட்டுமே நாம் சக்திவாய்ந்த சமூதாயமாக வலுபெற முடியும். கடந்த கால மதவெறி கும்பல்களின் தாக்குதலிருந்தும் இன்னும் நாம் படிப்பினை பெறவில்லை.

அரசியல்வாதிகளின் சூழ்ச்சிக்கு அடிபணியும் போக்கு மாறினால் தான் நம் சமுதாய பலம் பெரும் என்பது பல பாடங்கள் கற்றும் உணரப்படவில்லை என்பது மிகவும் வேதனை..

நாம் உண்மை முஸ்லீம்களாக வாழ்ந்து கேட்கும் துஆவே மிகப்பெரிய சக்திவாய்ந்த ஆயுதம்.

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

சகோ: முஜிப் சொன்னது.

// அரசியல், மதவாத சூழ்ச்சியில், மீடியாக்களின் பொய்யில் சிக்குன்டதை உணரவேண்டும். நாம் வந்தேறிகள் இல்லை. இந்த தேசத்தின் உண்மையான குடிமக்கள். மற்ற இனத்திற்கு கிடைக்கும் அதே உரிமையும் அதிகாரமும் நமக்கும் நம் குழந்தைகளுக்கும் இனி கிடைக்க வேண்டும். இவ்வாறு உணரும் நாள் வரும்வரை நாம் அடிமைப்பட்டும், அதிகாரம் இழந்தும் கிடக்கவேண்டியே வரும்.//

நம் நாட்டில் தரம் கெட்ட மீடியாக்களும், இந்தியாவிற்கு வந்தேறிய ஓநாய்களும்.இந்நாட்டின் குடிமக்களாகிய முஸ்லிம்களை அடிமை படுத்த நினைக்கிறார்கள்.உறுதியான ஈமான் இருக்கும் வரை எந்த ஓநாய்களாலும்.ஒன்றும் புடிங்கி விட முடியாது.காரணம்.( இன்னல்லாஹ் மஹ சாபிரீன் ) அல்லாஹ் பொருமையாளருடன் இருக்கின்றான்.இதை தின்னமாக நினைவில் கொள்ள வேண்டும். நம் சமுதாயத்திற்க்கிடையே ஏற்பட்டுள்ள ஒற்றுமையின்மையின் பல விரிசல் களை பயன்படுத்தி ஓநாய்கள் இஸ்லாம் என்ற கட்டிடத்தை தகர்த்தெறிய நினைக்கிறார்கள்.இயக்க வாதிகளே நல்ல பரஸ்பரமான சிமெண்டை கொண்டு விரிசலை அடையுங்கள்.நிம்மதியாக வாழலாம்.

அபூபக்கர்-அமேஜான் said...

முஸ்லிம் மக்கள் எல்லா விதத்திலும் தள்ளப்பட்டுயிருக்கின்றன அரசு சார்பில் எந்த விதமான சலுகைகளும்,ஒத்துழைப்புகளும் முஸ்லிம் மக்களுக்கு கிடையாது.முஸ்லிம் மக்கள் எந்த வித பாகுபடுயின்றி இயக்கங்கள் என்றல்லாம் பார்க்காமல் ஒன்று பட வேண்டும்.அப்படி ஒன்று பட்டால் தான் இழந்த பாபர் மசூதியை மீட்க முடியும்.முஸ்லிம் சமுதாயம் ஒன்று படாதவரை எந்த வெற்றியும் அடைய முடியாது. இறைவன் நாட்டத்தை தவிர எல்லா விசங்களுக்கும் முஸ்லிம்கள் ஒன்ற பட வேண்டும் அப்பொழுதுதான் நாம் நமக்கு உள்ள சலுகைகளையும்,பிரச்சினைகளையும் சாதிக்க முடியும். பாபர் மசூதியை இடித்த கயவர்கள் இந்த உலகத்திலேயே தண்டனையை அனுபவித்தே தீர்வார்கள் இறைவன் அவர்களை சும்மா விட மாட்டான்.இன்ஷா அல்லாஹ் இறைவன் நமக்கு ஒரு வெற்றியை தந்தருள்வானாக ஆமீன்.நாம் துஆ செய்துக்கொண்டே இருக்க வேண்டும்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

இந்திய இஸ்லாமியர்களின் வழிபாட்டு ஸ்தலமான பாபர் மசூதி இடிக்கப்படாமல் அன்றைய மத்திய, மாநில அரசால் இரும்புக்கரம் கொண்டு தடுக்கப்பட்டிருக்குமேயானால், அதற்குப்பின்னால் வந்த பம்பாய் தொடர் குண்டு வெடிப்பும், கலவரங்களும், உயிர், பொருட்சேதங்களும் அதைத்தொடர்ந்து நாட்டில் பரவலாக்கப்பட்ட தீவிரவாதமும், அதற்கு போட்டியாய் புற்றீசல் போல் ஆங்காங்கே முளைத்து வரும் காவி பயங்கரவாதமும் அதன் நாச வேலைகளும் தடுக்கப்பட்டு மக்கள் அவரவர் வாழ்வாதாரத்தின் முன்னேற்றத்தில் மட்டும் தன் முழு கவனத்தையும் செலுத்த ஏதுவாக இருந்திருக்கும். இன்றைய பிரதமர் மன்மோகன் சிங் இந்திய பொருளாதாரத்தின் 8% சதவீத வளர்ச்சியை பெரிதாக கூறிக்கொண்டு திரிவது போல் அல்லாமல் 80% சதவீத வளர்ச்சியை என்றோ எட்டிப்பிடித்திருக்கும். அமெரிக்க ஏகாதிபத்திய வல்லரசு பதவியை தட்டிப்பறித்திருக்கும்.

அபுல் க‌லாம் கூறிய‌து போல் க‌ன‌வு க‌ண்டால் ம‌ட்டும் போதாது. நாட்டில் உருவாகும் பூதாக‌ர‌ப்பிர‌ச்சினைக‌ளை த‌ன் ச‌ம‌யோசித‌ புத்தி கொண்டு இல்லையேல் இரும்புக்கரம் கொண்டு அட‌க்கினாலே நீங்க‌ளெல்லாம் உல‌க‌ப்பொருளாதார‌ மேதைக‌ளாக‌ உண்மையில் ம‌க்க‌ளால் க‌ருத‌ப்ப‌டுவீர்க‌ள். இல்லையேல் ப‌த்தாம் வ‌குப்பில் ப‌ல‌ த‌ட‌வை ப‌ரிட்சை எழுதி ஃபைலாகும் ஒரு முட்டாள் மாண‌வ‌னைப்போல் தான் க‌ருத‌ப்ப‌டுவீர்க‌ள்.

உண்மையில் உல‌க‌ப்புக‌ழ் பெற்ற‌ தாஜ்மஹாலின் வ‌ர‌லாறுக்குப்பின் (அது ஒரு மொகலாய மன்னரால் கட்டப்பட்டிருந்தும்) ஒரு கோவில் புதைக்க‌ப்ப‌ட்டிருந்தாலும் அதை அப்ப‌டியே விட்டிருப்பார்க‌ள். கார‌ண‌ம் ந‌ட‌ப்பு தாஜ்ம‌ஹாலைக்கொண்டு நாட்டிற்கு உல‌க‌ அர‌ங்கில் கிடைக்கும் பெருமையும், அதைக்காண‌ வ‌ரும் வெளிநாட்டு சுற்றுலாப்ப‌ய‌ணிக‌ள் மூல‌ம் நாட்டிற்கு வந்து சேரும் அந்நிய‌ச்செலாவ‌ணியும்.

இறை இல்ல‌ இடிப்பால் இறுதியில் வ‌ருந்த‌ப்போவ‌து இறைவ‌ன‌ல்ல‌. மாறாக‌ இடித்த‌வ‌ர்க‌ளும் அத‌ற்கு எல்லா வ‌கையிலும் துணை போன‌வ‌ர்க‌ளுமே....

அவரவர் மதம் அவரவரால் மதிக்கப்பட்டு நடக்கப்பட வேண்டும்; மனித நேயம் காக்கப்பட வேண்டும்.

ந‌ல்ல‌தோர் ஆக்க‌ம் த‌ந்த‌ ந‌ம‌தூர் முஜீப் அவ‌ர்க‌ளுக்கு என் ந‌ன்றிக‌ளும், பாராட்டுக்க‌ளும்.


மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். நல் ஆக்கம். ஆறா துயர் இந்த டிசம்பர் ஆறு! நம் இதயத்தில் இறங்கிய இடி! ஆனாலும் நம் ஓற்றுமையை நல் அடக்கம் செய்துவிட்டு சும்மா உயிர் தாங்கிய கேவலமாக சுரனையற்று வாழும் இனம் அல்லாஹ்தான் காப்பாற்றவேண்டும்.

sabeer.abushahruk said...

சிறப்பாக எழுதபட்ட அவசியமான நினைவூட்டல்.

நன்றி!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

சுட்டதை சுட்டிக்காட்டாமல் இருந்திட்டால் அடுத்த சூழ்ச்சிக்கு அடிவருடுவானுங்க... ஆறாத வடு இந்த ஆறாம் நாள் டிசம்பர் மாதம்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு