Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கடன் வாங்கி கடன் கொடுத்து.... 24

அதிரைநிருபர் பதிப்பகம் | December 15, 2011 | , , ,

தலைப்பிற்கும் சொல்ல வந்த விசயத்திற்கும் சம்மந்தமே இல்லாமல் படிப்பவர்களுக்கு தோனலாம். கீழே உள்ளதை படித்து கூட்டிக்கழித்து பார்த்தால் சம்மந்தம் ஆகிவிடும்.

ஊரில் சக நண்பர் ஒருவர் கேட்டுக்கொண்டதற்கிணங்கவும், நாமும் பல முறை கண்ணில் கண்டதன் விளைவாகவும் இது பற்றி எழுத நேரிட்டது. 

ஊரில் பெரும்பான்மையான பெண்கள் தன் குடும்பத்தில், தெருவில் நடக்கும் கலியாண வைபவங்களுக்கும், இன்னும் பிற விசேச காரியங்களுக்கும் மார்க்க வரம்பிற்குட்பட்டு தன்னை அலங்கரித்து பெண்கள் ஒன்றுகூடுமிடம் செல்வதில் தவறில்லை என்ற போதிலும் போதிய தங்க நகைகள் தன்னிடம் இல்லை என்ற காரணத்திற்காக அக்கம்பக்கத்து வீட்டில் தங்க நகைகளை இரவல் வாங்கி தன்னை அலங்கரித்து செல்வது ஊரில் பரவலாக இருந்து வரும் வழக்கமாக உள்ளது.


இது முற்றிலும் தவறானதும் தடுக்கப்பட வேண்டிய விசயமும் ஆகும். காரணம் அப்படி இரவல் (கடனாக) வாங்கி நகைகள் அணிந்து செல்லும் பொழுது அது வழியில் எங்கேனும் தவறி விழுந்து விட்டாலோ, திருடப்பட்டு விட்டாலோ, உடைந்து பகுதி விழுந்து விட்டாலோ அல்லது ஏதேனும் அதற்கு சேதாரம் ஏற்பட்டு விட்டாலோ நாம் அதை உடமைக்காரருக்கு உரிய முறையில் வாங்கிய படி திருப்பி செலுத்த நாம் கடமைப்பட்டுள்ளோம் அல்லவா? 

இன்றைய சூழ்நிலையில் பணங்காசுகள் இல்லாமல் தானே நாம் போதிய நகைகள் வாங்க இயலாமல் போய் விட்டது. அப்படி இருக்கும் பொழுது மற்றவர்களின் விலையுயர்ந்த நகைகளை ஒரு மணி நேரம் (அ) இரண்டு மணி நேர தேவைக்காக இரவல் வாங்கிச்செல்வதால் மேற்சொன்னபடி ஏதேனும் நடக்கக்கூடாத/எதிர்பாராத நிகழ்வுகள் நடந்து விட்டால் (அப்படி ஏதேனும் நடக்காமல் இறைவன் நம்மை பாதுகாக்க வேனும்) அதை நம்மால் திருப்பி கொடுக்க முடியுமா? அல்லது அதன் தொகையை உடனே ஏற்பாடு செய்து உரியவருக்கு திருப்ப முடியுமா? நகை இரவல் தந்தவள் உடன்பிறந்தவளாக இருந்தாலும் இன்றைய சூழ்நிலையில் சும்மா இருந்து விடுவாளா? அவள் சும்மா இருந்து விட்டாலும் அவள் கணவன் தான் சும்மா இருப்பானா? அதனால் நமக்கு வரும் பிரச்சினைகள், சண்டை, சச்சரவுகள் என்ன, என்ன? என்று நம் வீட்டு பெண்கள் சற்று சிந்திக்க வேண்டும்.

நம்மிடம் உள்ள நகைகளை மட்டும் அணிந்து சென்று விட்டால் கலியாணப்பந்தல் நம்மை திருப்பி அனுப்பி விடுமா? அல்லது உண்ட சோறு தான் செரிக்காமல் நின்று விடுமா?

இன்று 1 பவுன் விற்கும் விலைக்கு தேவையற்ற பிரச்சினைகளை நாம் ஏன் தேடிப்பிடித்து பெற வேண்டும்?

குடும்பத்தை நிர்வகிப்பது பெரும்பாலும் பெண்களாக இருந்தாலும் சம்பாதித்து கொடுப்பது ஆண்களல்லவா? 

எங்கோ நடக்கும் தவறுகளுக்கு அப்பாவி எவனோ ஒருவன் ஏன் பொறுப்பேற்க வைக்க வேண்டும்? 

இது போன்று அன்றாடம் நாம் ஆங்காங்கே படிக்கும் நல்ல பல விழிப்புணர்வு கருத்துக்கள் உதாசீனப்படுத்தப்பட்டு வருவதால் "கப்பலுக்கு போன மச்சான் கண்ணு ரெண்டு ஆசை வச்சான்" சோகக்கதைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. உலக ஆசாபாசங்களை அடக்கிய எதிலும் சிக்கனம் பேணும் நல்ல பெண் கிடைத்து விட்டால் "கப்பலுக்கு போன மச்சானை, கப்பலையே வாங்க வச்சாள்" என்று திருப்பி பாட வைத்து விடுவாள்.

ஒரு காலத்தில் இணையதளங்கள் மற்றும் வலைப்பூக்களெல்லாம் தோன்றும் முன் மனதில் தோன்றும் நல்ல பல கருத்துக்களை உடனுக்குடன் பகிர்ந்து கொள்ள வாய்ப்பே இல்லாமல் இருந்தது. பல விசயங்களை பகிர்ந்து கொள்ள இயலாமல் மனதிற்குள் புழுங்கி பூட்டி வைத்து மாண்ட நல்ல மனிதர்கள் எத்தனையோ. அல்ஹம்துலில்லாஹ் இப்படி வலைப்பூக்களில் எழுத நமக்கெல்லாம் வாய்ப்பளித்துள்ள அந்த வல்லோனுக்கே எல்லாப்புகழும்.

"நல்ல குடும்பம் ஒரு சிறந்த பல்கலைக்கழகம்" (அதுக்குத்தான் எல்லோரும் தம்மால் ஆன முயற்சிகளை செஞ்சிக்கிட்டு இருக்கிறோம்)

விழிப்புணர்வுகள் தத்தமது வீடுகளிலிருந்து புறப்படட்டும்......

- மு.செ.மு. நெய்னா முஹம்மது.

24 Responses So Far:

KALAM SHAICK ABDUL KADER said...

அருமை நண்பர் MSM,
அஸ்ஸலாமு அலைக்கும்
நீங்கள் இணைத்துள்ள நகைகளின் கண்கொள்ளாக் காட்சியும், இன்றைய தங்க விலைச் சரிவு (170 திர்ஹம்/கிராம்) செய்தி கேட்டதும் கையில் காசில்லாமல் வாங்க முடியவில்லையே(இது போன்ற அதிரடி விலைச்சரிவு மறுபடியும் கிட்டாதே) என்றெல்லாம் புலம்ப வைத்து விட்டாலும் “கடன் வாங்கக் கூடாது/கடன் அட்டையும் வைத்துக் கொள்ளக் கூடாது” என்ற வைராக்யமாய் உள்ள என் கொள்கையில் சலனங்கள் ஏற்படுத்தி விட்டன!

தலைத்தனையன் said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

மாப்ளே! எனக்கும் உனக்கு வந்த அதே எண்ணம்தான் ஏற்பட்டது தம்பி நைனாவின் கட்டுரையில் கண்ட நகைகளைப் பார்த்தவுடன். இவ்வளவு அழகா நகையை படம் எடுத்து பெண்களை இன்னும் பட படபுக்கு உள்ளாக்கனுமா? பலனளிக்கும் கட்டுரை இன்ஷா அல்லாஹ்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

//அதுக்குத்தான் எல்லோரும் தம்மால் ஆன முயற்சிகளை செஞ்சிக்கிட்டு இருக்கிறோம்//

விடாதியோ மச்சான் வரவேற்கிறோம்.கல்லையும் கரைத்திடுவோம்.
தொடரும் தவறான நிகழ்வுகள் நிறுத்தப்படவேண்டும்.

//நம்மிடம் உள்ள நகைகளை மட்டும் அணிந்து சென்று விட்டால் கலியாணப்பந்தல் நம்மை திருப்பி அனுப்பி விடுமா?//

அதானே! நீங்க நினைக்கிறபடி தங்கம் மாதிரி வாங்கி அணிந்து கலியாணப்பந்தல் திருப்பி அனுப்பப்படாமல் பாதுகாக்க எங்களிடம் 'டூப்ளிகெட்' வாங்கிட வாங்க என்று LMS(அ)அழைக்கிறாராம்.

தங்கமும் தன்மானப் பெண்களும் 'போட்டா' சூப்பர்.

KALAM SHAICK ABDUL KADER said...

தங்கமாய் நட்பு தரமாகும் மச்சானே
எங்கிருந் தாலு மிதயத்தா லொன்றாகி
பொங்குதே பாசம் பிறந்து.

Anonymous said...

புன்னகைக்கும் பொன் நகை!
விதம்விதமான நகைகள் வாங்குவதும் அதனை ‘டிஸைன் மாற்றி அழகு படுத்துகிறோம் பேர்வழி’ என்று ‘சேதாரப் படுத்துவதும்; வெளியே செல்லும் போதெல்லாம் பூட்டி ரதம் போல உலா வந்து திருடர்களுக்கு அழைப்பு விடுப்பதும் சமுதாயத்திலிருந்து நிரந்தரமாக விடுபட வேண்டும் என்பதே நமது ஆவல்!

sabeer.abushahruk said...

போச்சி,
வளையல் நல்லாயிருக்குதாம், சரியாப்போச்சி!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

கவியாக்கா சொன்னதிலிருந்து.....
//போச்சி,
வளையல் நல்லாயிருக்குதாம், சரியாப்போச்சி!ஜும்மாவுக்கு பின் வாங்கனுமாம்!!//

அதிரை நிருபர் வளையல் என்று பேர் வச்சா போச்சி.
துபாய் காரங்களுக்கு ஆர்டர் நிறைய வரப்போவுது.பணத்தோட ரெடியாயிருங்கோ!

ZAKIR HUSSAIN said...

நம் ஊரில் கேள்விப்பட்ட விசயம்: நகையயை இரவல் வாங்கி அடமானம் வைத்து பிறகு மீட்டுதர முடியாமல் சண்டை [ பானிப்பட்டு போர் மாதிரி தொடர்ந்து நடக்கிறது ]

இந்த ஆர்டிக்கிள் எழுதிய சகோதரர் நெய்னாவுக்கு வாழ்த்துக்கள்.

போட்டோ செலெக்ட் செய்தவரை யாரோ இப்படி வைதார்களாம்; " யான் வாப்பா இந்த மாதிரி போட்டோ போட்டு எங்க வைதெரிச்சலை வாங்கி கட்றிய...."

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.
வகை,வகையாய் நகை போடும் ஆசையில் பிறர் நகையை வாங்கி தவறு நேறும் பட்சத்தில் நிரந்தர பகையாகி போகும் உறவு!
நல்லதொரு கட்டுரை! திருக்குரனானில் சொல்ல பட்டது போல், நன்மைகளையும், தீமைகளையும் நம் கைகலாளேயே தேடிக்கொள்கிறோம்.
குறளில் சொல்ல பட்டது:
"பெருமைக்கும் ஏனைய சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளை கல்".
விளக்கம்: நம்முடைய செயலே நல் மதிப்பிற்கும், மதிப்பு கெடலுக்கும் காரணம். அது எதுபோல?
கட்டளை கல்= தங்கம் ஒரசி இது உண்மை தங்கமா ?போலியா என பார்க்கும் அந்த கருப்பு நிறக்கல் போல. வெல்டன் நைனா!

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

இங்கு கருத்திட்ட அன்பர்கள், நண்பர்கள், பெரியவர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

"வகைவகையாய் நகைநகையாய் வாங்கிப்போடுவதில் ஒன்றும் தப்பில்லை. அது தன் கணவன் உழைப்பில் பிரியத்துடன் வாங்கித்தந்ததானால் அது இன்னும் மெருகு கூடி மிளிர்ந்து கொண்டே இருக்கும் நாம் மண்ணாப்போகும் வரை (மடியும் வரை)".

தலைத்தனையன் அவர்களே! தாங்கள் என் தந்தையின் சாச்சா மகளுடைய (மர்ஹூமா சல்மா மாமி) மூத்த மைந்தன் முஹம்மது தமீமாக இருக்கும் பட்சத்தில் தாங்களும் எனக்கு மச்சானே...(நீண்ட நாட்களுக்குப்பிறகு ஆராய்ந்து அறிந்த உண்மையை தாமதமாக வெளிக்கொண்டு வந்தமைக்கு மன்னிக்கவும்).

நமதூரில் சில பெரிசுகள் தன் வீட்டு ஆண்மகனுக்கு (மணமகள்) பெண் தேடும் பொழுது மிகவும் ஒரு விசயத்தில் கவனமாகவும், கண்ணுங்கருத்துமாகவும் இருப்பது கவனிக்கப்பட்டது. "ஒரே ஒரு பெண் (மகள்) உள்ள வீடாய் பார்த்து அங்கு சம்மந்தம் செய்ய விரும்புவது" காரணம் அந்த வீட்டில் ஒரே பெண்ணாக இருப்பதால் அங்கு போதிய நகைகளும், இருக்கும் முழு வீடும், தாய்தந்தையரின் சொத்துபத்துக்கள் முழுவதும் அந்த ஒரே பெண்ணுக்குத்தானே வந்து சேரப்போகிறது அதனால்.

கடைசியில் கேட்டால் நாங்கள் மார்க்கப்படி பணங்காசுகள் (வரதட்சிணை) வாங்காமல் நிக்காஹ் மேடையில் பத்து பவுன் மணமகளுக்கு மஹராக கொடுத்து முடிக்கிறோம் என்று வெறும் பெருமை பேசித்திரிகிறார்கள். என்னா சித்துமத்து? உங்கள் சித்துமத்துக்கள் (சமத்துக்கள்/சூச்சியங்கள்) எல்லாம் சின்னாபின்னமாகிப்போகும் நாள் வெகுதொலைவில் இல்லை.

பத்தன் நெருப்பில் புடம்போட்டு போலி நகைகளின் வேசத்தை வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டு வருவது போல் வெகுவிரைவில் உங்கள் போலி மார்க்கப்பற்றும் இறைவன் முன் உலகறிய வெளிக்கொண்டு வரப்படும்....

கருத்துக்கள் எழுத ஆரம்பித்தாலே அது ஒரு கட்டுரையாக நீண்டு விடுகிறது என்ன செய்ய?

மு.செ.மு. நெய்னா முஹம்மது.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

MSM(n) : பதிந்திருக்கும் நகை கண்டு புன்னகை பூத்தார்களாம் ஊரில், இன்று காலை ஒருவர் சொல்லக் கேட்டது ! :)

மச்சான்ஸ் இரண்டு பேருமே சேர்ந்து கலக்கலாமே ! அவருக்கு வார்த்தைகள் அப்படியே வசப்படுகிறது, உங்களுக்கு வலைந்து கொடுக்கிறது, நீங்க ஸ்ட்ரெட்டா எழுதுவதனலே ! :)

வாழ்த்துக்கள்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

"ஒரு பொன்மாலைப்பொழுதில் பகலவன் அஸ்தமன திசை நோக்கி முக்காடிட்டு அமர்ந்திருக்கும் மூன்று பெண்கள் போல் உள்ளது கீழே கொடுக்கப்பட நகைகளை நோக்கிய பெண்களின் தோற்றம்"

வாழ்நாளில் ஆசைஆசையாய் வாங்கி அனுபவித்த நகைகள்
வாகனம் ஏறும்முன் எல்லாவற்றையும் கழற்றிச்சென்றுவிட்டனரே?
(என்ன தான் நகைக்கடலின் அதிபர் மகளாக இருந்தாலும் கடைசியில் ஒரு மூக்குத்தி கூட குத்தி அனுப்பப்படுவதில்லை மண்ணறைக்கு...)

நகை அணிந்தாலும் அணியாவிட்டாலும் பெண்மணிகளிடம் அழகு அடைக்கலமாகி இருப்பது படைத்த வல்லோனின் அற்புதமல்லவோ?

அழகே அடைக்கலமாகி இருக்கும் பெண்ணிடம் அற்பமானவற்றை எதிர்பார்த்து நிற்பது ஆண்மைக்கு இழுக்கல்லவோ?

மு.செ.மு. நெய்னா முஹம்மது.

navabar said...

சபாஷ்.சுப்பர்ப்.

தலைத்தனையன் said...

பெண்ணே !

பிறர் நகைக்க அணியாதே நகை
பலர் சிரிக்க சிந்தாதே நகை

நசைனர் நல்லார் இன்னபிற
நல்லோர் நாடுவார் நின் சிறப்பு

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸ்லாமு அலைக்கும்,

நெய்னா முஹம்மது,

MSMன் போராட்டத்தால் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. (தகவல் உபயம் கலாம் காக்கா).

ஓசி (இரவல்) நகை போடும் கலாச்சாரத்தை தூசி தட்டுவது தட்டியுள்ளீர்கள். ஜஸகல்லாஹ்..

நேரம் கிடைத்தால் இந்த காணொளியை காணுங்கள் http://www.ustream.tv/recorded/18990964 (குறிப்பு: இந்த 23வது நிமிடத்தில் உள்ள சொற்பொழிவை தயவுசெய்து கேளுங்கள்)

Shameed said...

புதுசா வந்த மாடல் நகைகளை அதிரை நிருபரில் விளம்பரபடுத்தி இருக்காங்கலலோன்னு விசயத்ததை படித்தால் நேர் மாற்றம்
வாழ்த்துக்கள் நெய்னா ஊரின் உள் விசயங்களை படம்பிடித்து போட்டதற்கு

KALAM SHAICK ABDUL KADER said...

//நகை அணிந்தாலும் அணியாவிட்டாலும் பெண்மணிகளிடம் அழகு அடைக்கலமாகி இருப்பது படைத்த வல்லோனின் அற்புதமல்லவோ?

அழகே அடைக்கலமாகி இருக்கும் பெண்ணிடம் அற்பமானவற்றை எதிர்பார்த்து நிற்பது ஆண்மைக்கு இழுக்கல்லவோ?

மு.செ.மு. நெய்னா முஹம்மது.//

தங்கமான தகவல்
வைரமான வரிகள்
வெள்ளியான சிந்தனை

வைரக்கற்களை தாளில் மூடி
இரும்புப் பெட்டகத்தில் வைப்பதேன்?
தான் மட்டுமே கண்டு இரசிப்பதை
திருடர்கள் கண்களில் படாமற் பாதுகாப்பதை ஏற்றுக் கொள்ளும் மனிதர்கள்,

வைரமாய் மின்னும் பெண்மணிகளின் தங்கமான அங்கங்களைத் தன்னைத் தொடும் உரிமையுள்ள கணவன் மட்டுமே கண்டு இன்புற வேண்டும் என்பதாற்றான் பிறரின் திருட்டுப் பார்வைக்கு ஆளாகாமல் இருக்கவே இரும்புப் பெட்டகமாய் “புர்கா” என்னும் கற்பைக் காக்கும்; பயபக்தியின் அடையாளமான மேலாடைப் போட்டு மூடுவதை மட்டும் ஏற்காமல் எள்ளி நகையாடுகின்றனர். இவர்கள் நகைப்பதால் பொன்னகையை மிஞ்சும் வைரமணிகளான எங்கள் முஸ்லிம் பெண்மணிகளை கூழாங்கற்களாகத் தெருக்களில் கண்பார்வைக்கு ஆளாக்க முடியாது.

sabeer.abushahruk said...

//நசைனர்//

நசைநர் - நண்பர்.

(வரவர இந்த தளம் டஃப்பான கொஸ்டின் பேப்பர் மாதிரி மாறி வருகிறது :))

sabeer.abushahruk said...

கொஞ்ச நேரம் கழிச்சி:

"நகை ஓசியும் வாங்கக்கூடாது. வளையல் வேற அழகா இருக்கு. புதுசாவெல்லாம் வாங்க வேணாம். கையிலே கெடக்கிறத கொடுத்துட்டு மாத்தினா மேக்கொண்டு எவ்ளோவ் கொடுக்க வேண்டி இருக்கும். ஏன் கேட்கிறேன்னா. இந்த கையிலே 6ம் அந்த கைய்லே 6ம் நெரந்து போட்டா உங்களுக்குப்(?) பிடிக்குமேன்னுதான்"

"இரு அந்த நெய்னாவிடம் எவ்ளோவ் இந்த நெய்னா தம்பியிடம் எவ்ளோவ் கடன் வாங்க முடியும்னு கேட்டுட்டு சொல்றேன்"

Yasir said...

அற்புதமான சிந்தனை...அதனை சொல்லியவிதம் அருமை...இரவல் வாங்கி நகைப்போட்டு செல்வது நகைப்புக்குறியது...
///ன்று விட்டால் கலியாணப்பந்தல் நம்மை திருப்பி அனுப்பி விடுமா// அப்படி கேளுங்கள் அப்படியே திருப்பி அனுப்பினாலும் நல்லதுதானே என்று இருந்துவிடவேண்டும்

Yasir said...

//நசைனர் நல்லார் இன்னபிற
நல்லோர் நாடுவார் நின் சிறப்பு//

நவீன வள்ளுவர் தலைத்தனையனின் இவ்வரிகளுக்கு யாரவது உரைபோட்டால் இன்னும் ரசிக்கலாம்...

அபூபக்கர்-அமேஜான் said...

அஸ்ஸலாமு அலைக்கும்

நம்ம ஊர் பெண்களுக்கு அடுத்தவரிடம் நகை கடன் வாங்காமல் தூக்கமே வராது. ஒவ்வொரு பெண்களையும் பார்த்து ஒவ்வொரு பெண்ணும் அந்த வளையல், தோடு, நெக்கிலஸ் நல்லாயிருக்கிடி எங்கே வாங்கினாடி அப்போ நானும் தான் என் கணவர்யிடமோ, காக்கா அல்லது தம்பியிடமோ சொல்லணும். இதில் என்ன கூத்து என்றால் எந்த கடையில் வாங்கியது அதையும் உன் மாப்பிள்ளையிடமாவது, அல்லது தமையன்ட்டையாவது சொல்லி விடு அதற்கு உள்ள பணத்தை நான் உனக்கு தருகிரேன் என்று. இந்த போட்டோவில் உள்ள படத்தை பெண்கள் பார்த்தால் நெய்னாவை சவுதிலிரிந்து நல்ல மாடலாக வாங்கி அனுப்ப சொல்லப்போரார்கள் போல் தெரிகிறது.

நெய்னாவுக்கு நிறைய ஆர்டர் வரப்போகுது நம்ம பெண்கள் வீட்டில் உள்ள நகைகளை போட்டால் மட்டும் பத்தாது அடுத்தவருடைய நகைகளையும் வாங்கி போட்டால் திருப்த்தியாக இருக்கும். வீட்டில் இருக்கிற நகைகளை போட்டால் கவுரவ பிரச்சினையாக கருதுகிறார்கள் அவள் அப்படி போட்டியிருக்கிறாள், இவள் இப்படி போட்டுயிருக்கிறாள் என்றல்லாம் கருத்து வேறுபாடு எழுகிறது. கணவரிடம் பாடாய் படுத்துகிறார்கள் அவள் அந்த மாடல் போட்டுயிருக்கிறாள் அது நல்லா இருக்கு அதை மாதிரி எனக்கும் வாங்கி கொடுங்கள் என்று. இன்றைக்கு தங்கத்தின் விலை குறைந்து இருக்கிறது நெய்னாவின் வார்த்தைகள் தங்கம் விருப்பவற்களுக்கு காதில் விழுந்ததோ,இல்லையோ என தெரிய வில்லை பவுணின் வில்லை சரிந்து இருக்கிறது. நம்ம பெண்களுக்கு யார் என்ன என்ன மாடல்கள் போட்டாலும் ஆசை எழத்தான் செய்கிறது. இனி குறைந்த விலைக்கு மாடல்கள் வளையல் வேண்டுமானால் நம்மூரில் டிசைன்ஸ் கடைக்கு போய் எடுத்து கடன் வாங்காமல் உங்களுடை செலவினங்கலை மிச்ச படுத்தி உங்களையும் அலங்கரித்துக் கொள்ளுங்கள்.

அபூ அப்துல்லாஹ் முஹமது யூசுஃப் இப்னு நூர் அஹமது சலஃபி said...

அன்பிற்குரிய அதிரை சகோதரர்களுக்கு.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

தங்க வளையல் அணியும் நங்கையரே! நரக நெருப்பை அஞ்சிக் கொள்ளுங்கள்!

தங்க வளையல் அனிவது பற்றி நபி(ஸல்) அவர்கள் என்ன சொன்னார்கள் என்பதை கொன்ஞ்ம் பாருங்கள்.

உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்!’ (அல்குர்ஆன்- 07:03)
மேலும் பார்க்க அல்குர்ஆன்: 2:38, 2:170, 6:106, 10:15, 3:103, 33:02, 39:03,10:109, 39:55, 46:09, 49:16

அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகையில்,
‘நான் உங்களுக்கு மத்தியில் இரண்டு விடயங்களை விட்டுச் செல்கின்றேன். அவ்விரண்டையும் நீங்கள் பற்றிப் பிடிக்கும் காலமெல்லாம் ஒரு போதும் வழிதவற மாட்டீர்கள். ஒன்று அழ்ழாஹ்வின் வேதம் மற்றையது எனது வழிமுறை என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரழி), நூல்: ஹாகிம்)

‘நான் உங்களிடையே கனமான இரண்டு பொருட்களை விட்டுச் செல்கின்றேன். அவற்றில் ஒன்று அழ்ழாஹ்வின் வேதமாகும். அதில் நல் வழியும் பேரொளியும் உள்ளது. எனவே அவ் வேதத்தை பலமாகப் பற்றிக் கொள்ளுங்கள்.’ (அறிவிப்பவர்: ஸைத் பின் அர்கம் (ரழி), நூல்: முஸ்லிம்-4782)

மேற்குறித்த அடிப்படையை மனதில் இறுத்தியவர்களாக, பெண்கள் வளைந்த வடிவம் கொண்ட தங்க நகைள் அணிவது ஹலாலா? ஹராமா?

‘நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அழ்ழாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி இருந்தால் அழ்ழாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும், (முஹம்மதுக்கும்) உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள்! ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை அழ்ழாஹ்விடமும், இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள்! இதுவே சிறந்ததும், மிக அழகிய விளக்கமுமாகும்.’ (அல்குர்ஆன்-4:59)

இன்று எமது இஸ்லாமிய சமுதாய மக்களில் பலர் அறியாத, அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடைசெய்த ஒரு விடயம்தான் பெண்கள் வளைந்த வடிவம் கொண்ட தங்க நகைகள் அணிவது ஹராம் என்பதாகும்.

இஸ்லாத்தின் பார்வையில் காப்பு, மாலை உள்ளடங்கலாக வளைந்த வடிவம் கொண்ட தங்க நகைகள் அணிவது ஹராமாகும். மாறாக, வளையல் அல்லாத தங்க நகைகளை தாரளமாக அணிந்து கொள்ளலாம்.
இது தொடர்பாக அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆதாரபூர்வமான நபிமொழிகள் தெளிவுபடுத்துகின்றன.

‘(உங்களில்) யார் தான் நேசிக்கின்றவளுக்கு (மனைவி, சகோதரி, தாய், உறவு முறைப்பெண்) ஆகியோருக்கு நரக நெருப்பினால் ஒரு வளையத்தை அணிவிக்க விரும்புகின்றாரோ அவர் தங்கத்தினால் ஒரு வளையலை அவளுக்கு அணிவிக்கட்டும். (உங்களில்) யார் தான் நேசிக்கின்றவளுக்கு நரக நெருப்பினால் ஒரு கழுத்தணியை அணிவிக்க விரும்புகின்றாரோ அவர் தங்க மாலையை அவளுக்கு அணிவிக்கட்டும். உங்களில் யார் தான் நேசிக்கின்றவளுக்கு நரக நெருப்பினால் காப்பு அணிவிக்க விரும்புகின்றாரோ அவர் தங்கக் காப்பை அணிவித்துக் கொள்ளட்டும். என்றாலும் வெள்ளியை உங்களுக்கு நான் ஏவுகின்றேன். அவற்றை தாராளமாகப் பயன்படுத்துங்கள்! என அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூற்கள்: முஸ்னத் அஹ்மத், ஸுனன் அபீதாவுத்-4236)

‘ஹுபைறா என்பவரின் மகள் (ஹிந்த்) அழ்ழாஹ்வின் தூதரிடத்தில் தங்க மோதிரம் அணிந்தவளாக வந்தாள். அப்பெண்னின் கையை அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தட்டிவிட்டார்கள்.

அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது இச்செயலை அப்பெண் பாத்திமா (ரழி) அவர்களிடத்தில் முறைப்பட்டாள். உடனே, பாத்திமா (ரழி) அவர்கள் தான் அணிந்திருந்த தங்க மாலையைக் கழற்றி ‘இதனை ஹஸனின் தந்தை (அலி ரழி) அவர்கள் தான் எனக்கு அன்பளிப்பாகத் தந்தார்கள்’ எனக் கூறினார். பாத்திமா (ரழி) அவர்களின் கரத்தில் தங்கமாலை இருக்கும் சமயத்தில் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கு வந்தார்கள்.

பாத்திமாவே! முஹம்மதின் மகள் பாத்திமாவின் கரத்தில் நரக நெருப்பினால் ஆன மாலை இருக்கின்றது என மக்கள் பேசிக் கொள்வது உனக்கு மகிழ்ச்சியளிக்கின்றதா! எனக் கேட்டு விட்டு அங்கு உட்காரமல் திரும்பி விட்டார்கள். உடனே பாத்திமா (ரழி) அவர்கள் அம்மாலையைக் கழற்றி கடையில் விற்று வருமாறு ஆளப்பினார்கள். மாலை விற்றவுடன் அப்பணத்தினால் ஒரு அடிமையை வாங்கி உரிமை இட்டார்கள். பாத்திமாவின் இச்செயல் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குக் கிடைத்த போது ‘நரக நெருப்பை விட்டு பாத்திமாவைக் காப்பாற்றிய அந்த அழ்ழாஹ்வுக்கே புகழ் அனைத்தும்’ எனக் கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: தவ்பான் (ரழி), நூல்:ஸுனனுன் நஸாயீ-5140)

மேலுள்ள நபிமொழிகள் மூலம் கழுத்தணி உள்ளடங்கலாக வளைந்த வடிவம் கொண்ட தங்க நகைகள் அணிவது ஹராம் என்பதை மிகத் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

வல்லாஹ் அஃலம்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு