Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிரை கல்விச் சேவையகம் AEM - அறிவிப்பு ! 15

அதிரைநிருபர் பதிப்பகம் | December 25, 2011 | , ,


அன்பிற்குரிய அதிரைச் சகோதரர்களுக்கு:  

அஸ்ஸலாமு அலைக்கும்.

சென்ற ஜனவரி 2011 - 14,15 ஆகிய தேதிகளில் நாம் நடத்திய கல்வி விழிப்புணர்வு மாநாடு பற்றிய விவரங்களையும் அதன் காணொளிகளையும் கண்டிருப்பீர்கள் என நம்புகின்றேன்.  முதல் மாநாடாக இருந்ததால், அதனைக் குறுகிய வட்டத்திற்குள்தான் சகோதரர்களை ஈடுபடுத்தி, அல்லாஹ் உதவியால், வெற்றிகரமாக நடத்தி முடித்தோம்.  அல்ஹம்து லில்லாஹ்!

இன்ஷா அல்லாஹ், எதிர்வரும் புத்தாண்டில் இரண்டாவது மாநாட்டைச் சற்று விரிவாகவும், அதிகமான சகோதரர்களின் பங்களிப்பிலும், பயனுள்ள பல நிகழ்ச்சிகளுடனும் நடத்தத் தீர்மானித்துள்ளோம்.  அது பற்றிய ‘மஷ்வரா’ விரைவில் தொடங்கவுள்ளது.  எனவே, பங்களிப்புச் செய்ய ஆர்வமுள்ள அதிரையின் அன்புச் சகோதரர்கள் உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும், உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை "ADIRAI EDUCATIONAL MISSION" என்ற மின்னஞ்சல் குழுமத்தில் இணைத்துக்கொண்டு உங்களின் அரிய / உரிய பங்களிப்புகளை வழங்குமாறு மிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இணைப்பு கூகுள் குழுமம் இதோ : adirai-edu-mission@googlegroups.com

உங்கள் புரிந்துணர்வுக்கும் அன்பாதரவுக்கும் மிக்க நன்றி.  வஸ்ஸலாம்.

அன்புடன்,

அதிரை அஹ்மது
+91 98 94 98 92 30

15 Responses So Far:

அதிரைநிருபர் பதிப்பகம் said...

அஸ்ஸலாமு அலைக்கும்...

அன்பிற்கினிய சகோதரர்களுக்கு,

முதல் கல்வி மாநாட்டில் உள்ளூரில் இருந்தவர்களை விட வெளிநாடு வாழ் அதிரைச் சகோதரர்களின் பங்களிப்பும் ஆதரவும் ஆலோசனைகளும் அதிமாக இருந்தது அல்ஹம்துலில்லாஹ், அதேபோல் வர இருக்கும் அடுத்த இரண்டாவது கல்வி மாநாட்டில் அதிரையில் இருக்கும் பெரும்பாலான சகோதரர்கள் இதில் பங்களிக்க வேண்டும் என்றும் கேட்டு கொள்கிறோம்.

அது மட்டுமல்லாது உள்ளூர் மற்றும் வெளிநாடு வாழ் அதிரை சகோதரர்களின் நல்லாதரவும் அவர்களின் அரிய ஆலோசனைகளும் அவசியமே எனவே தயை கூர்ந்து விருப்பமுள்ள சகோதரர்கள் தங்களை AEM மின்னாடல் குழுமத்த்தில் இணைத்துக் கொண்டு உங்களின் பங்களிப்பை நல்ல ஆலோசனைகளையும் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

சேக்கனா M. நிஜாம் said...

சகோ. அதிரை அஹமத் அவர்களுக்கு முதலில் என்னுடைய வாழ்த்துக்கள் !

கல்வி விழிப்புணர்வு என்பது மிக மிக பயனுள்ள நிகழ்வு. அதே நேரத்தில் கல்வி விழிப்புணர்வுடன் மார்க்க விழிப்புணர்வுவையும் சேர்த்து இதை ஒரு கண்காட்சியாக நடத்தினால் இன்னும் கூடுதலாக சிறப்பாக இருக்கும்.
இக்கண்காட்சியில் மாணவ , மாணவிகள் தங்களின் திறமைக்கேற்ப படிப்புகளை தேர்வு செய்யும் முறைகளை விவரித்தல், பிளஸ் டூ முடித்ததும் உயர் கல்வியை எங்கு படிக்கலாம் ? எப்படி கற்கலாம் ? , வேலை வாய்ப்புகள் பற்றி , சிறந்த கல்வி நிறுவனங்களை அடையாளம் கண்டு பிடித்து தெளிவு படுத்துதல், மாணவ , மாணவிகள் பயமின்றி தேர்வை எதிர்கொண்டு அதிக மதிப்பெண்கள் பெற வழிகாட்டுதல் இப்படி என்னற்ற பயனுள்ள தகவல்களை இக்கண்காட்சியின் வாயிலாக தெளிவுப்படுத்தலாமே.

அன்புடன்,
M. நிஜாமுதீன்
( 9442038961 )

குறிப்பு : சகோ. அதிரை அஹமத் அவர்களுக்கு இரண்டு முறை அலைபேசியில் அழைத்தேன் ! பதில் இல்லை..........BUSY ‘ யாக இருப்பார்களோ ?

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

அதிரை கல்விச் சேவையகம் AEM க்கு முதலில் வாழ்த்து தெரிவித்தவனாக.

நான் சொல்ல நினைத்ததை சகோ:எம்.நிஜாம் மூலம் பிரதிபலித்திருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.

// கல்வி விழிப்புணர்வு என்பது மிக மிக பயனுள்ள நிகழ்வு. அதே நேரத்தில் கல்வி விழிப்புணர்வுடன் மார்க்க விழிப்புணர்வுவையும் சேர்த்து இதை ஒரு கண்காட்சியாக நடத்தினால் இன்னும் கூடுதலாக சிறப்பாக இருக்கும்.//

நம் ஊரில் இஜாபா மற்றும் பல பள்ளிகளில் மக்தப் குர்ஆன் ஹதிஸ் வகுப்புகள் நடை பெறுகின்றன.அந்த மாணவர்களை கொண்டு மார்க்க நிகழ்ச்சிகளை மேடையில் நடத்திக் காட்டலாம்.சென்ற வருடம் ஆண்டு விழாவில் நல்ல நிகழ்ச்சிகளெல்லாம்
நடத்திக் காட்டினார்கள்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

நம் மக்களின் கல்வி விழிப்புணர்வுக்காக என்றும் விழித்துக்கொண்டிருக்கும் அதிரை அஹ்மத் சாச்சா அவர்களுக்கும் அதே ஆர்வத்தைக்கொண்டுள்ள அனைத்து அன்பார்களுக்கும் என் சலாத்துடன் கூடிய நன்றிகளும், ஆதரவும் என்றும் உண்டு.

சாச்சா, தற்சமயம் வெளிநாடுகளில் இருந்து அது அரபு நாடாக இருந்தாலும் சரி அல்லது ஐரோப்பா போன்ற மேற்கத்திய நாடாக இருந்தாலும் சரி விடுமுறையில் அச்சமயம் ஊர் வரும் நம் சகோதரர்களை வைத்து அவர்களுக்கு வரவேற்பும், உற்சாகமும் தந்து எவ்வித தயக்கமும் இன்றி இன்றைய சூழ்நிலையில் வெளிநாடுகளில் மற்றும் உள்நாட்டிலேயே சிறந்து விளங்கும் துறை எது? தோராயமான சம்பள விவரங்கள் அதனால் மக்கள் எவ்வாறெல்லாம் குடும்ப, சகல சந்தோசமாக இருக்கிறார்கள்? என்று தெளிவாக அனைவருக்கும் விளங்கும் படி நம்மூர்த்தமிழிலேயே முன்பே இதற்காக தயார் செய்து எப்படியாவது ஒரு சிறு சொற்பொழிவு மூலம் பேசவைத்தால் நிறைய பலனை நம் இளைய‌/வ‌ருங்கால‌ ச‌ந்ததியின‌ரிட‌மிருந்து எதிர்பார்க்க‌லாம் என்ப‌தே என் க‌ருத்து.

இவ்வ‌ள‌வு பேசும் நீ, என்னெத்தெ கிழிச்சா? என்று எதிர்ம‌றையான‌ கேள்விக‌ளுக்கு இட‌ம் த‌ராம‌ல் இவ‌ற்றை எல்லாம் சரிவர பின்ப‌ற்றாம‌ல் போன‌தால் ந‌ம் ச‌முதாய‌ம் எவ்வாறெல்லாம் ப‌ல‌ இன்ன‌ல்க‌ளுக்கு ஆட்ப‌ட்டு சோத‌னைக‌ளையும், வேத‌னைக‌ளையும் ச‌ந்தித்து வ‌ருகிற‌து என்ப‌தும் க‌ண்டிப்பாக எளிய நடையில் அங்கு சொல்ல‌ப்ப‌ட‌ வேண்டும் என‌வும் அன்புட‌ன் கேட்டுக்கொள்கிறேன்.

மேற்க‌ண்ட‌ வெளிநாடு வாழ் ச‌கோத‌ர‌ர்க‌ள் உரையாற்ற‌ த‌ய‌க்க‌ம் ஏதேனும் இருப்பின் உள்ளூரிலேயே மேடைப்பேச்சில் ப‌ழ‌க்க‌முள்ள‌வ‌ர்க‌ளை வைத்து மேற்க‌ண்ட‌ த‌க‌வ‌ல்களை உரியவர்களுக்கு எத்திவைக்க‌லாம்.

என் க‌ருத்துக்கு செவிசாய்க்க‌ப்ப‌டுமா? என்ப‌து த‌ங்க‌ளின் மேலான‌ ப‌ரிசீல‌னைக்குட்ப‌ட்ட‌து.

மு.செ.மு. நெய்னா முஹம்ம‌து.

Unknown said...

சகோ. சேக்னா நிஜாமுடன் விரிவாகப் பேசிக்கொண்டேன். அவருடைய ஆர்வத்தைப் பாராட்டுகின்றேன்; ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றேன்.

Yasir said...

அல்ஹம்துல்லாஹ் ஒத்த கருத்துக்கள் ஒற்றுமைக்கு ஊக்கமளிக்கிறது ...கடந்த ஆண்டைவிட மிகச்சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் வரும் கல்வி விழிப்புணர்வு மாநாடு அமையவேண்டும்..

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

மாநாடு சிறப்பாகவும் அதிகப்பலன் உள்ளதாகவும் அமைய என் ஒத்துழைப்பும் (இன்சா அல்லாஹ்) துஆவும்.

Abu Easa said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
சமூக நலனுக்காக செய்யப்படும் எச்செயலுக்கும் என் ஆதரவு என்றும் உண்டு. வல்ல அல்லாஹ் அதற்கு அருள் புரிவானாக.

அடிப்படைக் கல்வி எவ்வாறு போதிக்கப் படுகிறதோ அதைப் பொருத்தே மாணவர்களின் ஆற்றலும், ஆர்வமும் அதிகரிக்கும். ஆனால் இன்று அடிப்படைக் கல்வி ஏனோ தானோ என்று எடுத்துச் சொல்லப் படுகிறது.

என் பிள்ளைகள் இமாம் ஷாஃபி யில் படிக்கின்றனர். நான் விடுப்பில் இருக்கும் போது அவர்களுக்கு பாடம் போதிக்கப் பட்டிருக்கும் முறை கண்டு வியந்து போனேன். புத்தகங்களைப் படிக்கப் பழகிக் கொடுக்காமல் விடைகளைக் குறித்துக் கொடுத்து அதைப் படிக்கப் பழகிக் கொடுத்துள்ளனர். மேலும் பாட புத்தகங்கள் எவ்வாறு வடிவமைக்கப் பட்டுள்ளதோ, எவ்வாறு பாடங்கள் நடத்தப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளதோ அதேபோலல்லாமல் இஷ்டத்திற்கு நடத்தி பிள்ளைகளின் திறமையை மளுங்கடித்திருந்தனர்.

இது இமாம் ஷஃபியை குறை கூறுவதற்காக சொல்லப்பட்டதள்ள ஏனைய பள்ளிகளும் இதற்கு விதிவிலக்காக இருக்காது என்றே நினைக்கிறேன்.

அடிப்படைக் கல்வி வளமாய் இருந்தால் வசப்படும் வாழ்க்கை வெகு தொலைவிலில்லை. அதற்கான வழிமுறைகளை AEM கையாள வேண்டும்.

sabeer.abushahruk said...

இங்கு கருத்துச் சொல்லி ஆர்வமாகப் பங்கெடுத்து ஊக்கப்படுத்தும் சகோதரர்களில் எவரேனும் இன்னும் தங்களை AEM மின் குழுமத்துடன் இணைக்கவில்லையெனில் தயவு செய்து இணைத்துக்கொள்ளுங்கள்.

மேற்கொண்டு அங்கு பேசி ஆக்கபூர்வமாக காய் நகர்த்துவோம், வாருங்கள்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//sabeer.abushahruk சொன்னது…

இங்கு கருத்துச் சொல்லி ஆர்வமாகப் பங்கெடுத்து ஊக்கப்படுத்தும் சகோதரர்களில் எவரேனும் இன்னும் தங்களை AEM மின் குழுமத்துடன் இணைக்கவில்லையெனில் தயவு செய்து இணைத்துக்கொள்ளுங்கள்.

மேற்கொண்டு அங்கு பேசி ஆக்கபூர்வமாக காய் நகர்த்துவோம், வாருங்கள்.
//

அப்படியே நானும் கவிக் காக்கா சொன்னதை வழிமொழிகிறேன்... !

KALAM SHAICK ABDUL KADER said...

மாநாடு வெற்றி பெற எனது அவாவும்; து ஆவும். ஆனால், இம்முறையும் எனது வருடாந்திர விடுமுறை இன்ஷா அல்லாஹ் ஜூன் 15ல் தான் துவங்கும்.
இம்முறையும் இந்த அரிய பெரிய சேவைகளின் மாநாட்டில் நேரில் கலந்து கொள்ள ஊரில் இல்லாமற் போகும் நிலைமையினை எண்ணி மிகவும் வருத்தம். எங்கள் ACCOUNTS DEPARTMENT ல் ஆண்டுத் தணிக்கை முடிந்து தான் VACATION SCHEDULE போடுவார்கள். அதிலும் எனக்கு ஒதுக்கப்பட்டுள்ள ACCOUNTS PAYABLE கணக்குகள் முடிந்து தணிக்கைகள் யாவும் முடிவதற்கும் எனது விடுமுறை காலம் சரியாக ஜூன் மாதம் இன்ஷா அல்லாஹ் அமையும். என் மனதில் படும் ஆலோசனைகளை இக்குழுமத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு அறிவிக்கின்றேன்.

Unknown said...

சகோதரர்கள் பலர் AEM குழுமத்தில் தங்களை இணைத்துக்கொள்ள விரும்புவதாகத் தெரிகிறது. அத்தகையவர்களுக்கும், எல்லாருக்கும் பொதுவாகவும், இதில் எப்படி இணைவது, பதிந்துகொள்வது என்ற வழிகாட்டலைக் கூறுங்களேன், அபூ இப்ராஹீம்!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//அதிரை அஹ்மது சொன்னது…
சகோதரர்கள் பலர் AEM குழுமத்தில் தங்களை இணைத்துக்கொள்ள விரும்புவதாகத் தெரிகிறது. அத்தகையவர்களுக்கும், எல்லாருக்கும் பொதுவாகவும், இதில் எப்படி இணைவது, பதிந்துகொள்வது என்ற வழிகாட்டலைக் கூறுங்களேன், அபூ இப்ராஹீம்!//


AEM மின்னாடல் குழுமத்தில் அதிரைச் சகோதரர்கள் தங்களின் மின்னஞ்சலை இணைத்துக் கொள்ள
http://groups.google.com/group/adirai-edu-mission
என்ற சுட்டியை தட்டி அங்கே உங்களைப் பற்றிய சிறு அறிமுகம் (எங்களுக்கு நன்றாக தெரிந்தவராக இருக்கலாம் இருப்பினும் சம்பிராதமாக) குறிப்பொன்றை இட்டு அதாவது முழு பெயர், அதிரைப்பட்டினத்தில் வசிக்கும் தெரு, தற்போதை இருப்பிடம் இவ்வாறாக இருத்தல் நலம், விரும்பினால் அலைபேசி அலல்து தொலைபேசி எண்களையும் குறிப்பிட்டாலும் நன்மையே.

அடுத்த வழிமுறை தங்களுக்கு மேற்சொன்ன சுட்டியை தட்டிச் சென்றிட சிரமம் இருப்பின் நேரடியாக தங்களின் சிறு சுய அறிமுகத்துடன் adiraieducationalmission@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பினால் விபரங்கள் சரிபார்க்கப்பட்டு அடுத்த சில மணிநேரங்களில் உங்களின் மின்னஞ்சலை இணைத்துக் கொள்ளப்படும் இன்ஷா அல்லாஹ்...

இணைத்துக் கொண்ட பின்னர் தங்களின் மின்னஞ்சல் முகவரிக்கும் கூகுல் குரூப்ஸ்லிருந்து ஒப்புதல் வேண்டி மின்னஞ்சல் சுட்டி ஒன்று இணைத்து வரும் அதனையும் ஒரு தட்டு தட்டிவிட்டால் இணைப்பின் இசைவு இனிதே நிறைவு பெறுகிறது :)

மேலும் விபரங்களுக்கு nainathambi@live.in என்ற மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ளலாம்.

தலைத்தனையன் said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

அல்ஹம்துலில்லாஹ். குழந்தைப் பருவ காலத்து பெரும் நல்ல கல்விதான் நல்லதொரு மனிதனை, தலைவனை, கல்வியாளனை உருவாக்கமுடியும்.
வெறும் ஏட்டு படிப்போடு நின்றுவிடாமல், ஒழுங்கு, ஒழுக்கம், தூய்மை, மட்டுமல்லாமல் பொது அறிவு என்று எல்லா துறைகளிலும் அறிவு பெரும் வகையில் குழந்தைகளை வார்த்தெடுக்கவேண்டும்.

முக்கியமாக, சக, மாற்று மத, மற்றும் கடவுள் மறுப்பு கொள்கை உடையவரோடு பழகும் விதம் பற்றி தெரிந்துகொள்வதும், அவர்களின் கொள்கைகள் என்ன? அவர்களோடு கலந்துரையாடும்போதும், பழகும்போதும், அவர்கள் நம் மார்க்கம் சம்பந்தமாக கேட்கும் கேள்விகளை எப்படி எதிர்கொள்வது? என்றும் குழந்தைகளுக்கு பயிற்சி கொடுப்பது நல்லது.

குர்'ஆன் விரிவுரை, ஹதீஸ் கலை போன்ற மார்க்க பாடங்களில் முழு ஈடுபாட்டோடு கற்றுத்தரும் ஆசிரியர் பெருமக்களைக் கொண்டு பயிற்றுவிககவேண்டும்.

குழந்தைப்பருவ காலத்தில் கற்பதில் குழந்தைகளுக்கே உரிய சிறிய தடைகற்கள் ஏற்படும்:

1 ) DYSCALCULIA இது குழந்தைகளுக்கு கணக்கு போதிக்கும் ஆசிரியர்கள் 24 என்று சொல்லும்பொழுது குழந்தைகளின் மனதில் 42 என்று பதிவாகும்.

2 ) DYSLEXIA இந்த பிரச்னை இருக்கும் குழந்தைகளுக்கு, எந்த பாடத்தையும் மனதில் பதிய வைக்கும் திறன் குறைவாக இருக்கும்.

இதுபோன்ற குறைகள் உடைய குழந்தைகளை குறைவாக மதிக்க முடியாது. இவர்கள் இதுபோன்ற குறைகளால் DROP OUT ஆகி பள்ளிக்கு வெளியே சாதித்த சரித்திரங்கள் உண்டு. 2000 கண்டுபிடிப்புக்கு மேல் மனித சமூகத்துக்கு அர்பணித்த தாமஸ் ஆல்வா எடிசனும் Dislexic குழந்தையாகத்தான் இருந்திருக்கிறார்.

இதுபோன்ற குறை உடைய குழந்தைகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு PERFECTING CLASS என்று அதே பள்ளியில் தனியாக வைத்து சரி செய்யலாம். இது சுலபமான காரியம்தான். ஆனால் குழந்தைகளின் அப்பாவித்தனத்தை ரசிக்க தெரிந்த நல்ல மனிதராக இருப்பதோடல்லாமல் அவர்களின் மேல் அன்பு செலுத்தும் ஆசிரியராக் இருந்தால் மட்டுமே குழந்தைகளின் குறைகள் என்ன என்று தெரிந்து அதை சரி செய்ய முடியும்.

இந்த குறைகளையும் டீன் ஏஜ் கால ஆரம்பத்திற்குள் கண்டுபிடித்தால் அதை சரி செய்வது சுலபம். நல்ல திறமை மிக்க ஆசிரியர்கள் மிக, மிக அவசியம்.

முஹம்மத் தமீம்.

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

வருகிற ஆண்டில் கல்வி விழிப்புணர்வு மாநாடு சிறப்பாக நடைபெற வல்ல அல்லாஹ் நல்லருள் புரியட்டும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு