நம் மக்களுடைய ரசனையை பல்வேறு வகைப்படுத்தலாம், அவரவர்களுக்கு என்று தனிப்பட்ட ரசனைகள் ஏராளம் கொட்டிக் கிடக்கும். அப்படியான ரசனைகளுக்கு வடிகாலாக நான் ரசித்த சூழ்நிலைகளை, காட்சிகளை, அங்கே கண்டதை அப்படியே காட்சிப் படுத்திக் காட்டுவதில் மகிழ்கிறேன் - அல்ஹம்துலில்லாஹ்...
1. உலக அதிசயத்தில் ஒன்று இந்தியாவிலிருப்பதை அனைவரும் அறிந்ததே, அதுதான் தாஜ்மஹால் அங்கே சென்று அதனை பார்க்க கூடிய நல்ல வாய்ப்பு கிடைத்தது பணி மூட்டத்தின் ஊடே எடுக்கப்பட்ட படம்.
2. எப்போதுமே கண்ணிற்கும் மனதிற்கும் குளிர்ச்சி(தாங்க) நம்ம அதிரை - பட்டுக்கோட்டை அழகிய சாலை.
3. ஸ்டேட் கவர்மென்ட் ரோடல்லாம் நல்ல அகலமான சாலைகளாக மாறிவிட்டது ஆனால் பக்கத்தில் உள்ள செண்ட்ரல் கவர்மென்ட் போட்டதுங்க (ஸாரி இங்கிலீஸ்காரன் போட்டத இவய்ங்க பார்த்துக்கிறாங்க) போட்டதுபோல் அப்படியே கிடக்குதுங்க எப்போதான் நம்ம ஊருக்கு அகல ரயில் பாதை வருமோ !? (அட வரத்தான் போகுதுன்னு எங்கேயோ கேட்ட குரல் !)
4. என்னதான் நீங்க சுத்தம் சுகாதாரம் பார்த்தாலும் ஈ மொய்க்காத மீன் வாங்கவே முடியாது (இப்போ எல்லாமே e-goverment, e-gate, e-passport, e-fishதான் அதுவும் eMAILலதான் வருமாம் இனிமேல் :) ).
5. இப்படியும் ஒரு அழகான கட்டிட அமைப்பு கொண்ட ஒரு பள்ளிகூடம் இருக்கான்னு கேட்காதீங்க இருக்கு அது தஞ்சாவூரில்.
6. வெள்ளைக்காரன் காலத்தில் நிறுவியது இதில் இன்னும் மாற்றம் வரவில்லை இனி எப்போது தான் மாற்றம் என்பதும் தெரியவில்லை.
7. நடுவில் இருக்கும் இந்த இரண்டு இரும்புக் கோட்டையும் அழி-ரப்பரால அழித்து அந்த ரெண்டு ரோட்டையும் நேராக தூக்கிப் போட்டா பிராட் கேஜ் ஆகிடுமே ! இதுக்கா இத்தனை போராட்டங்கள் !?
8. பல ஆயிரம் மீட்டர்கேஜ் ரயில்களை கண்ட இந்த ஆலமரம் பிராட் கேஜ் ரயில்களை காண வேண்டி காத்துக்கிடப்பது போல் உள்ளது .
9. நம்மூர் தர்மாஸ்பத்திரி(!!?) என்னமோ பழசாகத்தான் கிடக்கு அங்கு உள்ள கார்கள் மட்டும் புதுப் புது மாடலாவுல இருக்கு.
10. கும்பகோணம் மன்னார்குடி அகல ரயில் பாதை வேலை நடந்தப்போ எடுத்த படம் (ஆறுதலுக்குதாங்க), ரயில் இல்லாத ஊருக்கு ரயில் பாதை போடுறாங்க ரயில் ஓடிய ஊருக்கு அகல ரயில் பாதை போட மாட்டேங்கிறங்க !
11. நெருங்கி அருகே சென்று பள்ளத்தை எட்டிப் பார்த்துடாதீங்க அப்புறம் இந்த இடத்திற்கும் சூ(ப்பரான)-சை(ட்)டு பாயிண்ட்டுன்னு பேர் வந்துரும்.
இனிமேல் உங்க பாடுதான், கண்களுக்கு காட்டியாகிவிட்டது இனி கருத்துக்களுக்காக கை கட்டி காத்திருப்பதிலும் ஒரு சுகமே...
இனிமேல் உங்க பாடுதான், கண்களுக்கு காட்டியாகிவிட்டது இனி கருத்துக்களுக்காக கை கட்டி காத்திருப்பதிலும் ஒரு சுகமே...
- Sஹமீது
42 Responses So Far:
7. நடுவில் இருக்கும் இந்த இரண்டு இரும்புக் கோட்டையும் அழி-ரப்பரால அழித்து அந்த ரெண்டு ரோட்டையும் நேராக தூக்கிப் போட்டா பிராட் கேஜ் ஆகிடுமே ! இதுக்கா இத்தனை போராட்டங்கள் !?
--------------------------
super kaaka:)
தாஜ்மஹால்,ரெண்டுரோட்டையும் பாத்துட்டு கொஞ்சங்கூடுதலாக நாலாவது படத்தை
பாத்துட்டு அஞ்சாவது படத்தை பார்க்கமுடியாமல் கீபோர்ட் ஈரமாயிடுச்சு
மின்னஞ்சல் வழி கருத்து
-------------------------------------------
படங்களும், கட்டுரையாளரின் வருணனையும் கண்களுக்கு நல்ல அறுசுவை. வாழ்த்துக்கள்.
"சில மனிதர்களின் உள்ளங்கள் போல் வரவர கெளக்கன் மீனின் சைஸும் சுருங்கி வருவது ஏனோ?"
(புடிச்ச பெரிய மீனையெல்லாம் இலங்கை கடற்படை அப்பிக்கிட்டு உட்டா வேறெ எப்புடி பெரிய மீனு கெடெக்குமா? என்று யாரோ முணுமுணுப்பது போல் தெரிகிறது. இலங்கை கடற்படையில் வேலைசெய்யும் ஒரு பயலும் மீன் மார்க்கெட் பக்கமே போவதே இல்லையாமே நெசமாலுமா?)
"ஒரு காலத்துலெ காக்கை கத்துனா தபால் வரும்ண்டு சொல்வாங்க. இப்பொ காக்கை கத்துனா ஈமெயில் தான் வரும்".
மு.செ.மு. நெய்னா முஹம்மது.
நமது ஊருக்கு அகல ரயில் பாதை வருவது போல் தெரியவில்லை இன்னும் சொல்ல போனால் அடிப்படை காரணமான கணினி மையமே நமதுதூருக்கு ஆரம்பம் ஆகவில்லை. இதற்கு முன்னர் வலைப்பூவிலும் கூட லோக்கல்களுக்கு மட்டும் தான் கணினி முன்பதிவு என்று வெளிவந்தது. ஆனால் இன்று அதிரை எக்ஸ்பிரஸ்சில் கூட வலைப்பூவில் வெளிவந்து இருக்கிறது ரயில் முன்பதிவு இல்லை என்று. மற்ற படங்கள் மிக அழகாகவும்,அருமையாகவும் இருந்தது.
1.இஸ்லாத்திற்கு பெயர் சொல்லும் உலக அதிசயம் இதன் குழந்தை தான் செக்கடிப் பள்ளியோ!
கேடு கெட்ட ஊடகம் செய்யும் சதிகளில் தாஜ்மகாலும் இருக்கிறது.அதான் சமீபத்தில் அதற்கு ஆபத்து என்று சொல்லி,அப்பரம் அதெல்லாம் இல்லை என்று நிரூபித்து கேடு கெட்ட ஊடகங்களுக்கு முகத்தில் கரிபூசி அரசு சார்பில் மறுக்கப்பட்டது.
2,3 மூன்றாம் கண்ணை பார்த்ததும் வாகனங்கள் ஒளிந்து விட்டதோ!
4.வாலெ மீனுக்கும் கெலெக்கென் மீனுக்கும் கொண்டாட்டம் தான்.கொசு மொய்க்குதே மீன் செத்துவிட்டதா.
5.பாக்கு மர தோரணத்தில் பள்ளிக்கூடம் சூப்பரு.
6.ரெண்டுக்கிடையே தற்காலிகமாக இதில் தார்ச்சாலை போட்டால் தெருவிலாவது பைக் நெரிசல் குறையும்.அதோடு பசுமைப்பயணமும் கிடைக்குமே.
7.உலகமே நவீன காலத்தில் சுருங்கிவிட்டதாம்.அப்பரம் இதை மட்டும் அகலமாக்கனுமா என்கிறார்களோ!
8.ஆலமரம் கண்ணீர் வடிக்கிறது.நான் மட்டும் ஒற்றுமை என்னும் கயிற்றை பற்றியிருக்கிறேன்.உங்களுக்கு எப்ப ஒற்றுமை வந்து நான் இருக்கும் இடம் எப்பொ 'பிஸி' யாகும் என்று கேட்கிறது.
9.கால் நடைகளும் கார்களும் புழங்கும் இடம்போலிருக்கு.
10.வேலையா நடக்குது ஆ... என்று பார்க்கும் போது மன்னர்குடின்னு போட்டு வெறுப்பேத்திவிட்டீர்களே!
11.இந்த இடம் நம் மார்க்கத்தில் அனுமதியில்லை.
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஹமீது காக்காவின் இ படங்கள் கண்ணை மொக்கிறது
சாஜஹான் மும்தாஜ் இவர்களின் நினைவு சின்னத்தை கண்டால் போதும் என்று மேக மூட்டங்கள் மற்றவர்களை திரை இட்டு கொண்டனவா?
// வெள்ளைக்காரன் காலத்தில் நிறுவியது இதில் இன்னும் மாற்றம் வரவில்லை இனி எப்போது தான் மாற்றம் என்பதும் தெரியவில்லை.//
வெள்ளைக்காரன் காலத்தில் நிறுவியது வெட்கமில்லாமல் கம்பீரமாகத்தான் நிற்கிறது. மாற்றம் வந்தால் மானமிழந்து போய்டுமா?
// நடுவில் இருக்கும் இந்த இரண்டு இரும்புக் கோட்டையும் அழி-ரப்பரால அழித்து அந்த ரெண்டு ரோட்டையும் நேராக தூக்கிப் போட்டா பிராட் கேஜ் ஆகிடுமே //
நேராக தூக்கி போட்டு பிராட் கேஜ் ஆக்கும்போது பிராடுகள் நடக்காமல் கூச் கூச்... வண்டிகள் ஓடினால் சரிதான் .
ஆளுகள் இல்லா அரசு மருத்தவமனையில்.இலவச புல்லு மேய்கிறதே இரண்டு ஆடுகள்.
கலக்கல், கண்குளிர்ச்சி,நக்கல்,நாசுக்கு,அறிவுரை,அறுசுவை,அதட்டல்,அறிவீனம் அனைத்தும் நிறைந்த கலவை உங்கள் கிளிக்ஸ்.....சும்மா சொல்லப்போன எல்லாம் கலந்த “ ஜிகிர் தண்டா” சுவை உங்கள் ஆக்கம்..வாழ்துக்கள் காக்கா
தாஜ் மஹால்..
இந்தியாவிலுள்ள நினைவுச் சின்னங்களுள் ஒன்று...
இது ஆக்ராவில் அமைந்துள்ளது.
முழுவதும் பளிங்குக் கற்களால் இக்கட்டிடம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆக்ரா நகரில் யமுனை ஆற்றின் கரையில் கட்டப்பட்டுள்ளது.
ஏழு உலக அதிசயங்களின் புதிய பட்டியலில் சேர்க்கப்பட்ட ஒன்றுதான் இதுவும்.
இக் கட்டிடம் முகலாய மன்னனான ஷாஜஹானால் மனைவி மும்தாஜ் மஹால் நினைவாக கட்டப்பட்டது.
22,000 பணியாட்களைக் கொண்டு 1631 முதல் 1654 ஆம் ஆண்டுக்கு இடையில் கட்டிமுடிக்கப்பட்டது.
இப்படியாக பள்ளிப் பருவத்தில் எழுதிய கட்டுரையின் சாரம் ஞாபகத்திற்கு வந்ததை மறைக்க முடியவில்லையே !
மொபைல் கவரேஜ் edge க்கு வந்தால்தான் டேட்டா சரளமாக பறிமாற்றம் நிகழுமாம் ! இந்த எட்ஜ் எப்படி ?
முதலும் நிறைவிலும் இருக்கும் படங்களுக்கிடையில் இருக்கும் இடங்களை நிரப்ப, கவிக் காக்கா, கவியன்பன் காக்கா, கிரவ்னு தம்பி இப்படி ஒரு கவிக் குடும்பமே அணி வகுக்கலாம்... அதற்குண்டான வழியை ஏற்படுத்திக் கொடுத்துட்டேனாம் இப்போ ! :)
//கவிக் காக்கா, கவியன்பன் காக்கா, கிரவ்னு தம்பி இப்படி ஒரு கவிக் குடும்பமே/// வழிமொழிகிறேன்....அ.நி மீது விழிவைத்து இவர்களின் வருகையை காத்திருக்கிறோம்
e-நக்கல் ஈஈஈஈ......சூப்பர்
ஒரு பள்ளிக்கு உரிய கட்டிடமாக அது தெரியவில்லை. என்றாலும் நல்ல சூழல். அழகு வண்ணங்கள். மற்ற படங்களை பல இடங்களில் பார்த்திருந்ததாலோ என்னவோ, இது பிடித்திருக்கிறது.
ஹமீத் காக்கா,
அனைத்து புகைப்படங்களும் அசத்தல், கூடவே ஈஈஈ நக்கல்...
அதென்ன காக்கா நம்மூர் இரயிலடி, மருத்துவமனைக்கு மக்கள் வருகிறார்களோ இல்லையோ ஆனால் ஆடுகள் மட்டும் வந்துவிடுகிறது புகைப்படம் எடுக்கும் போது?
எல்லாபடங்களும் ஏதோ பேசுகிறது. முக்கியமாக ரயிலடி படங்கள்....வாழ்க்கையில் ஒன்றிப்போன சில இடங்களில் இதுவும் ஒன்று.
இந்த தண்டவாளத்தில் கீழே விழாமல் நடப்பதே ஒரு உற்சாக உணர்வு.
தாஜுதீன் சொன்னது…
//அதென்ன காக்கா நம்மூர் இரயிலடி, மருத்துவமனைக்கு மக்கள் வருகிறார்களோ இல்லையோ ஆனால் ஆடுகள் மட்டும் வந்துவிடுகிறது புகைப்படம் எடுக்கும் போது? //
அரசுக்கும் ஆட்டுக்கும் ஏதோ சீக்ரட் லிங்க் இருக்குமோ! .
அந்த ரயிலடி ஆடா இந்த ஆடு!
Yasir சொன்னது…
//e-நக்கல் ஈஈஈஈ......சூப்பர் //
அதன் உரிமையாளர் "தம்பி"உடையான் படைக்கு அஞ்சான்
அபூ சுஹைமா சொன்னது…
//ஒரு பள்ளிக்கு உரிய கட்டிடமாக அது தெரியவில்லை//
ஹோம்மிலியான ஸ்கூல் வீட்டில் படிப்பது போன்ற ஒரு மனநிலை அங்கு படிக்கும் குழந்தைகளுக்கு.
தாஜ் மஹால் இந்தியாவிலையே மிக அழகான இடம் ஒன்று. அதை பார்ப்பதற்கு எல்லா நாடுகளிலிருந்து வருகிறார்கள் அந்த கண்கொல்லா காட்ச்சியை ரசிப்பத்தற்கு. பட்டுக்கோட்டை அதிரை சாலை இப்ப ரோடு போட்ட பிறகுதான் நன்றாக இருக்கிறது அதற்கு முன்னர் அந்த ரோட்டில் போகுவதற்கே மிக கடினமாக இருக்கும். ஆனால் ஒன்று இயற்க்கை உள்ள பசுமை நிறம் எப்போவும் மாறுவதில்லை. ஸ்டேட் கவர்மென்ட் அகல பஸ் பாதை போட்டு விட்டார்கள். ஆனால் செண்ட்ரல் கவர்மென்ட் (இங்கிலிஸ் காரன்) ஆட்சியில் ரயில்வே ரோடு போட்டது. இந்த அகல ரயில் பாதைக்கு விடிவு காலமே வராது போல தெறுகிறது கனவில் கண்டாலும் வரப்போவதில்லை. முதலில் ஈ திண்டுவிட்டுத்தான் அடுத்து நாம் உண்ணுகிறோம். அந்த அழகான வாலமீனும், கிழக்கமீனும், இறாலும் மற்றமீன்களையும். எந்த ஈமெயில்லில் வரப்போகுது அந்த மெயில் (ADDRESS) சை முடிந்தால் தாருங்கலேன் அப்போ இந்த மீன்கள் எல்லாம் ஈமெயிலுக்கு போகுவதற்க்காக தயாராக இருக்கிறதா? அல்லது வேற மீன்கள் வரப்போகுதா. தஞ்சாவூரில் எந்த இடத்தில் இருக்கிறது இந்த பள்ளிக்கூடம் தெரிந்தால் நானும் அந்த பள்ளிக்கூடத்தில் படித்துவிட்டு வருவேனே. வெள்ளைக்காரன் அதிரையை விட்டு ஓடினால் போதும் என்ற எண்ணத்தில் ஓடிவிட்டார்கள். இந்த ஊருக்கு மாற்றம் வந்தால் என்ன வராவிட்டால் நமக்கு என்ன? மாற்றமே நமது ஊருக்கு வருவதுப்போல் தெரியவில்லை. நாம் தான் மாற்றம் மாற்றம் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறோம் அதை செண்ட்ரல் கவர்மென்ட்டில் நினைக்க வில்லை. இந்த இரண்டு இரும்புக் கோட்டையும் தூக்குறது தான் பெரும் பாடு அந்த ரெண்டு ரோட்டையும் நேராக தூக்கிப் போடுவதற்குத்தான் இத்தனை போராட்டங்கள். அதை அப்படி போட்டாலும் பிராட் கேஜ் ஆகாது மற்ற இடத்திற்கும் பொருந்துமா என்று பார்க்க வேண்டும். இரண்டு ரோட்டையும் மாட்டும் பார்க்க கூடாது. பல ஆயிரம் பார்த்த ஆலமரம் மீட்டர்கேஜ்ஜை இந்த ஆலமரத்திற்கு இனி பிராட்கேஜ்ஜை பார்ப்பதற்கு வாய்ப்புகள் இல்லை. நம்மூர் தர்மாஸ்பத்திரி பழையது மாதிரி எல்லாம் கிடையாது இப்போ புதிய கட்டிடம் கட்டிவிட்டார்கள். பழைய ஆஸ்பத்திரியில் புதுவைகையான மருத்துவர்களுடைய கார்கள் போடப்படுகிறது. வீம்புக்காகவது அதிரை நகருக்கு ரயில் பாதை போடாமல் இருக்கிறார்கள். ரயில் இல்லாதா ஊராக இருந்தாலும் பரவாயில்லை அவர்களுக்கு பிராட் கேஜ் போட்டுக்கொடுபோம் ஆனால் அதிரை மக்கள்களுக்கு பிராட் கேஜ் கிடையாது என்று இந்த படத்தில் இருந்து உணர முடிகிறது. நான் சொன்னதற்கு நீங்கள் தாமதம் படுத்தாமல் உடனை அழகான படங்களை தந்த எஸ். ஹமீது காக்காவிற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
1)
முகலாயரின் கட்டிடக்கலை
மூடுபனியிலும் கட்டியங்கூறும்
உலக அதிசயங்களில் இன்னும்
உட்கார்ந்துள்ள அதிசயநிலை
தாஜ்மஹல்
2)
மேடுபள்ளமாய் இருந்தபோழ்து
வீடுபோய்ச் சேருவோமா என்றநிலை
இப்பொழுது இல்லாத நிலை
அப்படியொரு அழகியச் சாலை
அதிரை-பட்டுக்கோட்டை
சாலை
3)
மனதும் அகலமாகாததால்
மத்திய அரசின் பாதையும்
அகலாமாகாமல் முடக்கம்
4)
அதிரையின் வெள்ளைத் தங்கம்
அன்னியச் செலவாணி மற்றும்
விலைவாசி நிர்ணயக் காரணி
விலையேறினாலும் விற்றுவிடும்
கெலக்கன் மீன்
5)
ஆரோக்கியம், பாதுகாப்பு
ஆக்ஸிஜன் பெற்று தரும்
வட்டவடிவச் சோலை
நட்டநடுவில் கல்விச்சாலை
6)
கைகட்டி நிற்கும் அதிகாரிகள்
கைகாட்டியே விட்டதால்
கைகட்டி நிற்கின்றது காலத்தைப்போல்
கைகாட்டி
7)
குறுக்கும் நெடுக்குமாயிருந்தால்
குழப்பம் தான் வருமோ?
சேர்ந்து மீண்டும் பிரிதல்
கூடலுக்குப்பின் ஊடலோ?
8)
ஆலமரத்தின் தவத்தால்
ஆள்வோரின் மனமிரங்காதோ?
9)
அந்தக் கட்டிடம் கண்டதும்
அந்த நாள் ஞாபகம் வந்தது
அதிகம் குடித்தது காய்ச்சலுக்கு
அதிமதுரமான “தண்ணி மருந்து”
(நான் பிறந்து வளர்ந்து விளையாடிய
என் தாய்வீட்டுத் தெரு, ஆஸ்பத்திரித் தெரு
அறிமுகம் சரியா, அபூசுஹைமா)
10)
ஆலையில்லா ஊருக்கு
இலுப்பப்பூ சக்கரை
11)
பார்க்க அழகானது இடம்
மார்க்கத்திற்கு ஆகாத
தற்கொலையைத் தூண்ட வேண்டா
இக்கலையின் படம்
கம்பன் எக்ஸ்பிரஸ் ரயில் வருதோ இல்லையோ?? நம்ம அதிரை எக்ஸ்பிரஸ் ரயில் வருது...... பார்த்து சந்தோஸம் அடைவோமே!!!!!!!
தாஜ் மகால்:
ஷாஜஹான்
தான்
கட்டிய மனைவிக்காக
கட்டிய மகால்
காவியம் படைத்த
காதலர் யாவரும்
இறந்தே சிறந்தனர்
கணவன் மனைவியான
காதலர் மட்டுமே
காவியம் படைத்தனர்
காலத்தை ஜெயித்தனர்.
ஆதலால்
மானிடரே
காதல் செய்வீர்
கட்டிய மனைவியை :)
கூறுகட்டி மீனு விக்கும்
ஊரு விட்டு வந்தோம்
சோறு தண்ணி தேடித்தானே
வேறு மண்ணில் நொந்தோம்
பொறிச்ச றாலு ருசித்தும்
புளியானஞ் சோறு புசித்தும்
வளர்ந்த தெங்கள் கூட்டம்
வாழும் எந்த நாளும்
அகலப் பாதை!
நல்ல பிள்ளையென
நீண்டு
பூமி துளைத்து
சிலதும்
'சவலைப்பிள்ளையென
சோனியாய்த் தொங்கிக்கொண்டு
சிலதும்
விழுதுகள்....
ஆலமர நிழலில்
ஆளமர முடியாமல்
சிமென்ட் பெஞ்சில்
பறவை எச்சங்கள்...
நினைவில் மிச்சங்கள்!
மேல்திசையின் ஒளிப்பொட்டும்
மெல்லிய இறைச்சலும்
கொஞ்சம் கொஞ்சமாக
விட்டம் வளர்த்தும்
சப்தம் கூட்டியும்
நிலையம் வந்து...
பெட்டி படுக்கையோடு
வாப்பாவை ஏற்றிகொண்டு
கீழ்திசை நோக்கி
கருப்புச் சதுரம்
கடுகென குறைந்து
மறைந்த பொழுதுகள்...
மறையாது நினைவுகள்!
அதே
கீழ்திசையிலிருந்து
அடைமழை காலத்து
பிறை நிலவென
மெல்லத் தோன்றி
கருப்பு தேவதை
மூச்சிறைக்க
நிலையம் வந்து
வெளிநாட்டுப் பொருட்களோடு
வாப்பாவை இறக்கிச் சென்ற
அதிகாலை...
ஆனந்தத்தில்
அழுத பொழுதுகள்!
தனக்கான உணவு
தானிழுக்கும்
வண்டிக்கடியில்
வைத்திருப்பதறியாது
வாயசைத்துக் கொண்டிருந்த குதிரை.
மின் கம்பத்தின்
கட்டுப்பாட்டில்
உணவை அசைபோட
மனதோ நினைவுகளை...!
க்ளைடாஸ்கோப்பும்
கித்தாச் செருப்பும்
செஸ் போர்டும்
சாக்லேட்டும் அடங்கிய
பெட்டியை சுமந்த
கூலியும்
தர்காமுன் ஃபாத்திஹாவும்
பகிர்ந்தளித்த இனாமும்
நினைவுச்சின்னங்களின்
சுவர் கிறுக்கல்களாக
நினைவில் மிஞ்ச
அத்தனை இருப்புப் பாதைகளும்
தொடர்பறுந்து போய்விட
அடுத்த பட்ஜட்டின்
அகலப் பாதை
திட்டத்திற்கான
நிதி ஒதுக்கீட்டுக்காக
கைம்பெண்ணாய் காத்திருக்கிறது
எங்கள் ஊர்
ரயில் நிலையம்!
தாஜ் மகாலை பனித்திரையில் பார்க்க பார்க்க நேரில் பார்த்தபோது ஏற்பட்ட பரவசம் ஏற்படுவதால் அழகு குறித்துச் சட்டென தோன்றியது கீழே: (அ.நி. சென்சார் செய்வதற்குள் வாசித்துவிடுங்கள்
அழகு...!
மெளனம் அழகுதான்...
என்-
கண்களுக்கருகில்
உன்-
கன்னங்களிருக்கும்போது...
கவ்விக்கொள்ளும் தூரத்தில்
உன்-
இதழ்களிருக்கும்போது...
கண்ணுக்கெட்டாத தூரத்தில்
உன்-
அன்பான
நான்-
இருக்கும்போதல்ல!
கோபம் அழகுதான்...
பார்த்திருந்த
உன்னை -
காத்திருக்க வைத்தபோது...
மார்கழி இரவுகளில்
உனைப் பிரிந்து -
ஊர்வழி சென்றபோது...
மேகக் கூட்டம்போல
தூர தேசம் சென்று -
தேகம் வாடும்போதல்ல!
பொறுமை அழகுதான்...
அலைபாயும் கண்களை
அடக்கி ஆளும்போதும்...
அளவிலா சோகத்தில்
உளம் வாடும்போதும்...
மணவாளன் வருகைக்கு
தினம் ஏங்கும்போதும்...
பொறுமை -
அழகேதான்!
தாஜ்மகால் ரொம்ப படுத்திடிச்சுப்பா:
இனிமையானவளே!
நீ
வாங்கித் தந்த
விடிகாலையும்...
உனக்காக
விற்றுத் தீர்த்த
அந்தி மாலையு
மட்டு மல்லாது...
நடுநிசியும் நன்பகலும்
முன்னிரவும் முதிர்காலையும்
என-
எக்காலமும்
உன் நினைவுகள்!
உன்
கனிந்த
கன்னங்கள்
கவிதை பாடின,
அதில்
குவிந்த
எண்ணங்கள்
எதையோ நாடின!
நீயோ...
கிடைத்தும் கிடைக்காமல்
உண்டும் செரிக்காமல்
இரத்ததோடு
கலக்காத குளுக்கோஸாய்
என் சர்வமும்
வியாபிக்கிறாய்!
நானோ...
இனிப்பின்மேலான
இச்சையோடு
நீரிழிவுக்காரனைப் போல...!
-Sabeer
(thinnai 10/01/11)
//தாஜ் மகாலை பனித்திரையில் பார்க்க பார்க்க நேரில் பார்த்தபோது ஏற்பட்ட பரவசம் ஏற்படுவதால் அழகு குறித்துச் சட்டென தோன்றியது கீழே: (அ.நி. சென்சார் செய்வதற்குள் வாசித்துவிடுங்கள்)//
வாசித்தேன் சூப்பரு கவியாக்கா!
தாஜ்மஹால்!!! மூன்றாவது மனைவியின் மேல் கிறுக்குப்பிடித்த ஒரு கிறுக்கு அரசனால் கட்ட பட்ட அழகிய கல்லறைதான் இது. இது மார்கம் தெரியாத அந்த மன்னனைப்போல் மாற்று மதத்தினர் போற்றும் காதல் சின்னம்.இதனால் இந்திய முஸ்லிம்களுக்கு சிறப்பு என்ற எண்ணம் சிலர் கொண்டிருப்பது நம் துரதிஸ்டம் . இது காதலுக்காக பணத்தை விரயம் செய்த முட்டாள் மன்னனின் கணவு கோட்டை அதனால்தான் உலக அதிசயமாக்க போட்டார்கள் ஓட்டை! அழகிய கட்டிடம் கட்டட கலைக்கு கட்டியம் சொல்லும் நிச்சயம். ஆனாலும் நாம் காலரை தூக்கி விட்டு விடும் அளவிற்கு பெரிய விசயமல்ல!அழகாய் பிடிக்கபட்டுள்ள புகைப்படம். அருமை!!!!!!
அதிரை - பட்டுக்கோட்டை அழகிய சாலை.
-----------------------------------------------------------------------
அழகிய நிழலே கொஞ்சம் தூங்கு! வெயில் வேட்டை காரன் வந்து விரட்டும் வரை! இல்லையெனில் சாலையில் வாகனம் வந்து மிரட்டும் வரை!
மீனுக்கு தூண்டில் போடுவது இயல்பே எனில் இந்த மீன்கள் நம் நாவிற்கு போடும் தூண்டில் அதிரை மைந்தன் என்பதாலா? ! மீன்கள் செத்தும் உயிர்துடிப்பான ஒளிபட காட்சி!
குருகுலம் அந்த காலம்! வீட்டு மாடமும், கூடமும் பாடம் சொல்லும் பள்ளி கூடம் இந்த கா(கோ)லம். வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் அந்த காலம் வீடே கல்வி கூடம் அமைப்போம் இந்த காலம். (No More Home Sick).
அரசு சும்மா கை கட்டிகொண்டிருப்பதற்கு ஓர் அத்தாட்சி இந்த கைகாட்டி! எதை ,எதையோ காட்டி நம் கண்ணை கட்டி தண்டவாளத்தில் விட்டுச்சு அரசு! இனி இந்த தண்டவாளத்தை கடந்து தாண்டாதா இரயில்? பெரும்மூச்சில் தோற்றிடுதே சுடும் வெயில்!
கரடு,முரடான இந்த இரயில் சாலையில்! நடுவில் இருக்கும் இரும்பு "துண்டை போல்" நடுவன் அரசுவின் இதயமும் இரும்பாக இருப்பதும்., கேட்டால் பக்ஜெட்டில் "துண்டு" விழுந்து விட்டது என்பதும் வாடிக்கையாகிவிட்டது.
( நம் ஊரின் நிலைப்பார்த்து) இந்த ஆலமரம் அழுது, அழுது தலைவிரிகோலமாக காட்சி அளிப்பது., ஆள ஆட்சி அளித்த நமக்கு உதவாமல் மரமாகி போனது அரசு இயந்திரங்களும், அதை இயக்கும் இதயத்தில் ஈரமற்ற அரசியால் வாதி இனமும்.
நம்மூர் தர்மாஸ்பத்திரி(!!?
------------------------------
தர்மம் நோய்வாய் பட்டு அதர்மம் ஆடுவதால் , சில புல்லுரிவிகள் ஆடும் ஆட்டம் . கால்னடையை விட கேவலமாய் நம் நிலை ஆனால் நோய் தீர்க்கும் மருத்துவ விருந்தாளியோ (விசிட்டர்)ஒரு நாளும் கால் நடையா நடந்தது இல்லை! மிக உயர்ரக வாகன பயணம்... இப்படி சமூகத்தில் உள்ள நோய் தீர மருந்து??? நாம் விழித்து வரும் முன் காப்பதே!கை கோர்ப்பதே!
நம்மூர் இரயில் நிலையம்(அது நிலைக்கும்????) நிலை நினைத்து, நினைத்து ஏதும் சொல்ல முடியாத சோகம்! ஒரு காலம் வந்தாலும் ஆச்சரியமில்லை நமதூரில் துறை முகம் இருந்தது என்பது செய்தியானது போல் இரயில் ஓடியது, பின் ஓய்ந்தது.
தவறி விழுந்தால் அச்சச்சோ.... பாவம்! தெரிந்து விழ்ந்தாலும் பாவம்.சிலர் அகம்பாவம் என்னும் பள்ளத்தை விட இது ஆழம் இல்லை என்றாலும் விழுந்தால் எழுந்துவரமுடியுமென்பதோ, எலும்பு மிச்சும் என்பதோ நிச்சயமாய் இல்லாவே, இல்லை! ஆனாலும் காட்சி படபிடிப்பு நாமே வீழ்ந்து விடுவது போல் இருப்பது மலைப்பாய், மலையாய் நிமிர்ந்து நிற்கிறது!
இங்கே இன்னும் ஒரு தகவலை பறிமாற ஆசைப்படுகிறேன். மருத்துவ சகோ.ஜாஹிர்ன் மகனார் எடுத்த சில சிடில்கள் பார்க்க நேர்ந்தது! அவ்வளவு நேர்த்தி!பிரமிப்பை ஏற்படுத்தியது. இதைப்பற்றி கேமிராகவிஞர் விஞ்ஞானி அவர்களிடம் கூட அலவலாவினேன். படு சுத்தம் , தத்ரூபம்.... வர்னிக்க வார்தை தேடி கவிகாக்காவிற்காகவும். கவிஅன்பன் காக்காவிற்காகவும் காத்திருக்கிறேன். வார்தை தேடி அலையும் என் சிந்தைக்கு, அவர் தந்தையும், அவருடன் நீங்களும் உதவுங்கள். மொழி அறிவு போதித்த புண்னியம் உண்டாகும்.இப்படிக்கு ஆர்வலர்
”அழகு” அழகாக இனிமையாக இருந்தது கவிகாக்கா மிகவும் ரசித்தேன்..குளிர்காலத்தில் இப்படி உசுப்பேத்திவிடுவது அழகா ??
//சகோ.ஜாஹிர்ன் மகனார் எடுத்த சில சிடில்கள் பார்க்க நேர்ந்தது! அவ்வளவு நேர்த்தி!பிரமிப்பை ஏற்படுத்தியது. // நானும் பிரமித்து போனேன்...
கவிக் குடும்ப விழாவில் கலந்து கொண்ட மகிழ்வு, அங்கே ஆராவாரத்தையும் கண்டோம், அதிர்வுகளையும் காணலானோம், அதே நேரத்தில் வருடும் அழகினையும் ரசித்தோம் வரிகளாக...
எங்கிருந்துதான் கொட்டுதோ தெரியலையப்பா அருவிபோல் கவி வரிகள் !... இதுக்கு ஒரு அணைகட்டி(ட) போராட்டம் நடத்த மு.க.வை அழைத்தேன் இப்பொழுதுதான் அழுது முடித்தேன் அதற்குள் ஏன் இழுக்கிறாய் என்னை அந்தம்மாவை கேளு என்று சொல்லிட்டாருங்க(ப்பா) ! :)
//ஆதலால்
மானிடரே
காதல் செய்வீர்
கட்டிய மனைவியை :)/
மனைவியென்னும் மாதரசி நாடும் அன்பை
மகிழ்வுடனே மதித்திடுவோம் அவளின் பங்கை
நினைவிலென்றும் நீங்காது நெஞ்சில் மேவும்
நித்தமவள் வழங்கிவரு மின்பம் யாவும்
சுனைநீராய் வற்றாமல் தியாகம் செய்வாள்;
சுரக்குமன்பால் மறவாமல் நியாயம் செய்வோம்!
பனைமரமாய் நற்பலன்கள் தருவாள் என்றும்
பகுத்தறிவைப் பயன்படுத்திச் செய்வோம் நன்றி
சலவையையும் சளைக்காமல் செய்வாள்;ஊணும்
சமைத்திடுவாள்; இல்லத்தில் தூய்மை காணும்
நிலவினைப்போல் வெளிச்சமாக்கி வைத்துக் காத்து
நிற்குமவள் செயலுக்குச் சொல்வோம் வாழ்த்து
புலமையுடன் கூரறிவும் பெற்ற இல்லாள்
புத்தியுடன் கணவனுக்கு வழியும் சொல்வாள்
கலவரமாய் முகத்தினில் ரேகைப் பார்த்து
கவலைகளும் போக்கிடுவாள் அன்பை ஈந்து
இல்லாளை மதிப்போர்க்கு வாழ்க்கை இன்பம்
இல்லாத சந்தேகம் கொண்டால் துன்பம்
பொல்லாதப் பழிகளையும் நம்ப வேண்டா
பொய்சொல்லி ஆபத்தில் சிக்க வேண்டா
நல்லோராய்க் குழந்தைகள் வளர வேண்டி
நாடோறும் கஷ்டங்கள் யாவும் தாண்டி
சொல்லொண்ணாப் பொறுமையினை நெகிழ்ந்து யோசி
சொர்க்கமெனக் கொண்டாடி மகிழ்ந்து நேசி
ஷாஜஹான் தன் இன்னொரு மனைவிக்காக கருப்புகல்லில் (மார்பில் )இன்னுமொரு தாஜ் மஹால் கட்ட யமுனை ஆற்றின் அடுத்த கரையில் அஸ்திவாரம் போட்டதுடன் அவரின் மகன் ஔரங்க சீப் மக்களின் வரிப்பணத்தை வீணாகுகின்றாய் என்று சொல்லி ஷாஜஹானை ஜெயிலில் தூக்கி போட்டுவிட்டார் அஸ்திவாரம் போட்ட இடம் தாஜ் மகாலில் நின்று பார்த்தால் யமுனை ஆற்றின் மறுபக்கம் தெரிகின்றது, அதுவும் கட்டி முடிக்கப்பட்டிருந்தால் இந்தியாவிற்கு இரண்டு உலக அதிசயம் கிடைத்துதிருக்கும்
//அதுவும் கட்டி முடிக்கப்பட்டிருந்தால் இந்தியாவிற்கு இரண்டு உலக அதிசயம் கிடைத்துதிருக்கும்//
இதுக்கே கிரவ்ன் வசைமாறி பொழிந்துவிட்டார்.அதுவும் கட்டி இருந்தால் இணையமே தாங்காது போலிருக்கு.
Post a Comment