Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

25000 அடி வாங்கிய அதிரைநிருபர் 17

அதிரைநிருபர் | September 08, 2010 | , ,


அன்பான அதிரைநிருபர் வாசக சகோதர, சகோதரிகளுக்கு முதலில் அஸ்ஸலாமு அலைக்கும். அல்லாஹ்வின் உதவியாலும் உங்களின் ஆதரவு,                                   ஒத்துழைப்பு, பங்களிப்பு ஆலோசனைகளினாலும் நம் அதிரைநிருபர் வலைப்பூ மிகச் சிறப்பாக இணையக்கடலில் மிதந்து நாளுக்கு நாள் நம் அதிரை மக்களின் இதயத்தில் இடம்பிடித்து வருகிறது. அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.

நம் அதிரை நிருபர் ஆரம்பித்து மூன்று மாதத்தில் நம் அதிரை மக்களிடம் மட்டுமால்லாமல் மற்ற ஊர்  நம் சகோதரர்களிடமும் பிரபல்யமடைந்துள்ளது என்பதை வரும் பின்னூட்டங்கள், வருகையாளர்களின் கண்காணிப்பு  (tracking software) மற்றும் மின்னஞ்சல்கள் நமக்கு தெரியப்படுத்துகிறது. நாளுக்கு நாள் வருகையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது நம் அதிரைநிருபர் குழுவுக்கு மிக்க மகிழ்ச்சி.

"இணையத்தில் மூலம் நம் அதிரை மக்களிடம் ஒற்றுமையை ஏற்படுத்த ஏன் நம்மால் முடியாதா?" என்று கேள்வியுடன், பிரச்சினைகள் தூண்டாத, நல்ல செய்திகளை மட்டும் நம் மக்களிடம் பகிர்ந்துக் கொண்டு ஒற்றுமையை ஏற்படுத்தலாம் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்டது தான் நம் அதிரைநிருபர். இன்று அதிரைநிருபர் 25000 செல்ல அடிகள் வாங்கியுள்ளது, மிக்க மகிழ்ச்சி.

உங்கள் அனைவருக்கும் மீண்டும் நினைவுப்படுத்த விரும்புகிறோம். நம் அதிரைநிருபர் எந்த சர்ச்சையான செய்திகளை பதிவு செய்யாது, அப்படி பதியப்பட்ட செய்திகள் சர்ச்சையானது என்று தெரிந்தாலோ அல்லது வாசகர்கள் தெரியப்படுத்தினாலோ நிச்சயம் உடனே நீக்கப்படும் என்பதை உங்கள் அனைவருக்கு உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். அதிரைநிருபருக்கு என்று புதிய மடல் முகவரி தொடர்ந்து இயங்கி வருகிறது, adirainirubar@gmail.com  நீங்கள் அனைவரும் இதில் தொடர்பு கொள்ளலாம்.

மீண்டும் ஒரு முறை அனைவருக்கும் நினைவு படுத்த விரும்புகிறோம், நம் அதிரைநிருபர் வலைப்பூ எந்த அதிரை வலைப்பூவுடன் போட்டி போடவில்லை போட்டி போட வேண்டிய அவசியமும் இல்லை. மற்ற வலைப்பூக்கள் நடத்துபவர்களும் நம் சகோதரர்கள் என்ற எண்ணம் எப்போதும் அதிரைநிருபருக்கு உள்ளது என்பதற்கு நம்முடை அதிரைமணமே சாட்சி.  நமக்கு வரும் கட்டுரைகளை மற்ற சகோதரர்களின் அதிரை வலைப்பூக்களில் வெளியிட எந்த ஆட்சேபனைகளும் நம்மிடம் இல்லை. நல்ல விசயங்களை யார் வேண்டுமானாலும் தங்களின் வலைப்பூக்களில் பதிந்து மக்களை பயனடைய செய்யலாம்.

அலுவலக வேலைகள் அதிகம் இருந்தாலும் புனித ரமழான் மாதத்தில், நம்மால் முடிந்த வரை நம் மக்களுக்கு பயன் தரும் தகவல்கள் பறிமாறப்பட்டது, குறிப்பாக மக்கா, மதீனா நேரலை, நம்முடைய அதிரைமணத்தில் குறைந்த band widthல் தெரியும் மக்கா நேரலை (in flash)யை முதன் முதலில் ஒரு தமிழ் வலைப்பூவில் அறிமுகப் படுத்தியுள்ளோம் என்பதை பெருமையாக சொல்லிக்கொள்வதில் தவறில்லை என்று கருதுகிறோம். அதிரைமணத்தில் இருக்கும் மக்கா நேரலை நல்ல பயனுல்லதாக இருந்து வருகிறது என்பதை அதிரை சகோதரர்கள் மூலமும், நண்பர்கள் மூலம் அறிய முடிகிறது. அல்லாஹ் போதுமானவன்.

இனிவரும் நாட்களில் நிறைய நல்ல பல தகவல்கள் வெளிவர இருக்கிறது. ஹஜ்ஜுடைய மாதம் வருகிறது வழக்கம் போல் தன் எழுத்துக்களால் நம் அனைவரையும் நல்ல சிந்தனையின் பக்கம் திரும்ப செய்யும் நம் சகோதரர்களின் நல்ல கட்டுரைகள் வெளிவரும் என்று நாம் எதிர்ப்பார்கலாம்.

ஊரிலும், வெளிநாடுகளிலும், குடும்பங்களையும், நண்பர்களையும் விட்டு பிரிந்துள்ள நம் அனைத்து அதிரை சகோதர, சகோதரிகளுக்கு நல்ல செய்திகளை தந்து, நல்ல கருத்து பரிமாற்றத்துடனும் ஒற்றுமையுடனும் நல்ல மனநிம்மதியை ஏற்படுத்த அதிரைநிருபர் வலைப்பூ முயற்சி செய்யும். இன்ஷா அல்லாஹ்.

முக்கியமாக இங்கு குறிப்பிட்டு சொல்லக்கூடிய ஒரு விசயம். சகோதரர் ஷரபுதீன் நூஹூ அவர்களின் ஆற்வமூட்டலால் கல்வி விழிப்புணர்வு, வழிகாட்டல் முகாம் நடத்துவது சம்பந்தமாக நல்ல ஆக்கப்பூர்வமான கருத்துக்கள் பரிமாறப்பட்டது. ரமழான் மாதமாக இருப்பதால் நம் சகோதரர்கள் பலரிடம் தொடர்புக் கொள்ள முடியவில்லை, நேரம் கிடைக்கவில்லை. இன்ஷா அல்லாஹ் கல்வி வழிக்காட்டி நிகழ்ச்சி சம்பந்தமாக நல்ல செய்தி விரைவில் வெளியிடப்படும். நிச்சயம் இந்த வருடம் நம் அதிரையில் அனைத்து பள்ளி மாணவர்களையும் ஒன்றிணைத்து ஒரு நல்ல கல்வி வழிகாட்டி முகாம் நம் சகோதரர்களின் ஒத்துழைப்புடன் நம் அதிரைநிருபர் குழுவும் இணைந்து செய்யும் என்பதை மீண்டும் ஒரு முறை இங்கு அனைவருக்கும் உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். இன்ஷா அல்லாஹ்.

அதிரை ஷிஃபா மருத்துவமனை மறுமலர்ச்சி கட்டுரையை தொடர்ந்து. நம் அதிரைநிருபரில் மருத்துவம், உடல் ஆரோக்கியம் சம்பந்தமாக ஒரு தொடர் கட்டுரைகளை வெளியிடலாம் என்று எண்ணிவருகிறோம். இன்ஷா அல்லாஹ் விரைவில் வெளிவரும்.

அதிரைநிருபரில் கட்டுரைகளையும், செய்திகளையும் தொடர்ந்து நமக்கு அனுப்பிவரும் மு செ மு நெய்னா முகம்மது, அதிரை அஹ்மது, ஜாஹிர் ஹுசைன், அப்துல் ரஹ்மான், புதிய அறிமுகம் அபு ஈஸா மற்றும் பல சகோதர, சகோதரிகளுக்கும் (பெயர் குறிப்பிட்டால் பட்டியல் நீண்டுக்கொண்டே போகும்) மிக்க நன்றி. தொடர்ந்து இன்னும் உங்கள் ஆக்கங்களை நமக்கு எழுதி அனுப்புங்கள் உங்களுக்கு என்று தனி இடம் நம் அதிரைநிருபர் வலைப்பூவில் நிச்சயம் இருந்துக்கொண்டே இருக்கும். இவர்களைப்போன்று மற்ற திறமையானவர்களின் படைப்புகள் நம் அதிரைநிருபர் எதிர்ப்பார்கிறது. நல்ல கருத்தை எழுதும் நம் அதிரைவாசிகளை நம் அதிரைநிருபர் நிச்சயம் ஊக்கப்படுத்தும்.

பதிவுகளை ஊக்கப்படுத்தி தங்களின் கருத்துக்களை பதிந்துவரும், சகோதரர்கள் ஷாஹுல் ஹமீது, CROWN, அப்துல் மாலிக், ஷரபுதீன் நூஹு, ஷஃபி, நீடுர் அலி, ஹாலித், அபு இபுறாஹிம், ZAKIR HUSSAIN, SHEIK DAWOOD, YASIR, அஹ்மது இர்ஷாத், அப்துல் ரஹ்மான், சின்னக்காக்கா மற்றும் கருத்துக்கள் பதிந்துக்கொண்டிருக்கும், பதியப்போகும் அனைத்து சகோதர சகோதரிகள் அனைவருக்கும் மிக்க நன்றி.

நம் அதிரைநிருபர் வலைப்பூவிலும், அதிரைமணம் வலைப்பூ திரட்டியிலும்  பின் தொடர்பவர்கள் பட்டியலில் (FOLLOWERS) சில சகோதரர்கள் இணைந்துள்ளார்கள், இன்னும் நிறைய சகோதரர்கள் இணைந்து எங்களை ஊக்கப்படுத்துங்கள். உங்களுடைய ஊக்கம் எங்களை இன்னும் அதிகம் நல்ல செய்திகளை உங்களிடம் பகிர்ந்துக்கொள்ள தூண்டுதலாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

 "ஒரு சில ஏரியாவுக்காக அல்லாமல் ஊருக்காக ஒற்றுமையை மனதில் கருதி செயல்பட வேண்டும்"  என்று அன்பு சகோதரர் மாலிக் தங்களின் பின்னூட்டம் ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். நிச்சயம் அனைத்து ஏரியாக்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து செய்திகள் மற்றும் ஆக்கங்கள் வெளியிடம் முயற்சி செய்கிறோம். அனைத்து சகோதரர்களின் ஒத்துழைப்புடன் விரைவில் அதில் வெற்றியும் காண்போம். இன்ஷா அல்லாஹ்.

அதிரைநிருபர் வலைப்பூவுக்கு ஆதரவும், ஒத்துழைப்பும், ஆலோசனைகளும் வழங்கிவரும் நம் அனைத்து அதிரை மக்களுக்கும், மற்ற ஊர் சகோதரர்களுக்கும் மிக்க நன்றி.. எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்ல உடல் ஆரோக்கியத்தையும், நல்ல ஈமானையும் தந்தருவானாக என்று பிராத்தனை செய்தவர்களாக விடைப்பெறுகிறோம்.

தொடர்ந்து இணைந்திருங்கள்...


---அதிரைநிருபர் குழு

 

17 Responses So Far:

Yasir said...

வாழ்த்துக்கள் அதிரை நிருபர்...

Yasir said...

அமெரிக்காவில் ஒரு கூட்டம் செப்டம்பர் 11-ல் குரான் காப்பிகளை எரிக்க போவதாக கூறி உள்ளது...அந்த கூட்டத்துக்கு..அல்லாஹ் ஈமானை வழங்க அனைவரும் துவா செய்வோம்..அப்படியில்லையென்றால் அவர்களை அழித்துவிட துவா செய்வோம்

Yasir said...

for the news
http://www.bbc.co.uk/news/world-us-canada-11223457

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அடி மேல் அடி (வாங்கி)வைத்து மேலும் வளர வாழ்த்துக்கள், ஆக்கபூர்வமான அதிரை நலனையே குறியாக இருக்க வேண்டும் என்று அதிரைநிருபரை மீண்டும் வாழ்த்துகிறோம்

Shameed said...

25000 அடி வாங்கிய அதிரைநிருபர் மகிழ்ச்சியாக உள்ளது.
அதிரை நிருபருக்கு விழும் ஒவ் ஒரு அடியும் முன்னேற்றத்தின் ஒவ் ஒரு படி

Shameed said...

Yasir said...
அமெரிக்காவில் ஒரு கூட்டம் செப்டம்பர் 11-ல் குரான் காப்பிகளை எரிக்க போவதாக கூறி உள்ளது...அந்த கூட்டத்துக்கு..அல்லாஹ் ஈமானை வழங்க அனைவரும் துவா செய்வோம்..அப்படியில்லையென்றால் அவர்களை அழித்துவிட துவா செய்வோம்.

தம்பி யாசிர் தமது ஆதங்கம் புரிகின்றது அல்லாஹ் அவர்களுக்கு ஈமானை வழங்க நாம் அனைவரும் துவா செய்வோம்.

Shameed said...

முதலில் வாழ்த்துக்கள்.
உங்கள் வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது. ஆனால்,
இந்த உயரத்திற்கான உங்கள் உழைப்பு அபரிதமானது. you derserve it.
தொடருங்கள்.

//ஷபீர் அவர்களின் ஆக்கங்களை தனி பதிவாக பதிவு செய்யலாமே//

உங்கள் அன்புக்கு நன்றி!

எழுதக் கூடாதென்றில்லை. நீங்கள் உள்ளிட்ட எழுத்தாளர்களின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாதே என்ற தயக்கம்தான்.

எழுதவில்லையே தவிர நம் ஊர் மக்களின் ஆக்கங்களை வாசிக்காமல் விடுவதில்லை.

குறிப்பாக, உங்களின் முயற்சிகளை சேவையென்றே கருதுகிறேன்.செய்தியைச் சொல்லி மட்டும் நின்று விடாமல் அதன் தண்மைக்கேற்ப எச்சரித்தோ, வாழ்த்தி வரவேற்றோ, வழிகாட்டியோ, அடுத்த கட்டத்திற்கு ஊக்கிவித்தோ எழுதும் பாங்கு நேர்த்தியானது.

சகோ. அதிரை அஹமது அவர்களின் எழுத்தில்
முழுமையும், தலைமைக்கான லாவகமும், வசீகரமும் என்னைக் கவர்ந்தவை.

ஜமீனைத் தோண்டத் தோண்ட கிடைக்கும் பொக்கிக்ஷ்ம் போல
ஜமீல் காக்காவை சீண்டச் சீண்டக் கிடைக்கும் விளக்கங்கள், வரையறைகள் கண்டு வியந்திருக்கிறேன்.

சகோ. க்ஷாஃபி அவர்களின் தமிழ் ரொம்பப் பிடிக்கும். கருத்து மோதல்களின்போது சொற்சண்டை என்னை வசீகரிக்கும். விவாதங்களின்போது தமிழின் திமிர் பிடிக்கும்.

சகோ, நெய்னாவுக்கும் எனக்கும் ஏதோ விட்ட குறை தொட்ட குறை இருக்குமோ என்று எண்ணுமளவுக்கு
எனக்குப் பிடித்த ஹோம்சிக் குறிப்புகளை அழகாகத் தருகிறார். தொகுத்து புத்தகமாக்கினால் துட்டு கொடுத்து வாங்கவும் தயார்.

சகோ.crownனின் எழுத்துக்கள் பிடித்தாலும் அதைவிட அவரின் எண்ணங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.
தமிழ் எழுத்துக்களை அவர் கையாலும் லாவகத்தின் தனித்தன்மை பிடிக்கும்.

தம்பி யாசிர்,

அமீரகத்தில் அவர் வீட்டில் இரண்டு மாதங்கள் தங்கியிருந்தேன்...வாடகையே கொடுக்கவில்லை.
அவரும் கொடுக்கவில்லை... அதன் பிறகு நான்கு ஆண்டுகளாக என் மனவீட்டில் தங்கியிருப்பதற்கு.

அன்பு, பனிவு போன்ற சாந்தமான விக்ஷ்யங்களையே ஆயுதமாக பிரயோகித்து மனதைக் கொள்ளை கொல்லும் போக்கு எழுத்திலும்
மிளிர்வது பிடிக்கும்.

ஐயா, (இப்படித்தான் சாகுலை நாங்கள் அழைப்போம்)
ஐயாவுடன் தொடர்பில் இருப்பவர்களுக்கு ஆயுசு நூறு(சிரித்தால் ஆயுள் கூடுமல்லவா?)
கோபத்திலும் குறும்பு கலப்பது, தன்னைச் சுற்றி எப்போதும் சந்தோக்ஷ்மான சூழல் நிலவ வைப்பது, கலகலப்பாய் கலாய்ப்பது போன்ற குணங்கள் மட்டுமே தெரிந்து வைத்திருந்த எனக்கு, பின்னூட்டங்களின் மூலம் கொஞ்சும் தமிழும், அறிவியல் ஆக்கமும்
மகிழ்ச்சியான

சபீருக்காக

சாவனா

அதிரைநிருபர் said...

வருகை தந்தது வாழ்த்திக்கொண்டிருக்கும் அனைத்து சகோதரர்களுக்கும் மிக்க நன்றி.

குறிப்பிட்டு சொல்லும்படியாக சகோதரர் சபீர் அவர்களின் பின்னூட்டம் (நமக்கு மடலாகவும் வந்தது) நம்மைக்கும், கட்டுரையாளர்களுக்கும் நல்ல ஊக்கம் தருவதாக உள்ளது. சகோதரர் சபீர் அவர்களுக்கு என்று தனி வாசகர் வட்டம் விரைவில் நம் அதிரைநிருபரில் உருவாகும் என்று எதிர்ப்பார்க்கலாம்.

சகோதரர் சபீர் உங்களின் வெளிப்படையான கருத்துக்கள் அருமை. வாழ்த்துக்கள்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

சபீருக்காக - சாவனா(வுக்காக) Shahulhameed said...

எழுதக் கூடாதென்றில்லை. நீங்கள் உள்ளிட்ட எழுத்தாளர்களின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாதே என்ற தயக்கம்தான்.//

அட, இப்படியெல்லாம் சொல்லப்படாது... அதான் ஐயா இருக்காரே, தட்டி தட்டி(த்)தருவதற்கு.. நாங்க இருக்கோமே உசுப்பேத்திவிட... ஜமாய்ங்க சஃபீர்(காக்கா) என்ன ஐயா(வான)சாஹூல் !

ஒவ்வொருவரையும் நினைவுகூர்ந்து அவரவரின் தனித்தன்மையை போட்டு உடைத்தது அருமை, இதுவே ஒரு கலைதானே...

இதுக்கு அதிரை மொழி(ப்)பெயர்ப்பாளர் என்னா சொல்வார் !

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும் எல்லாப்புகழும் அல்லாஹுக்கே உரிதாகுக.சகோ.சபீர் நீங்கள் என் எழுத்தை படித்ததைவிட எண்ணத்தை படித்ததாக சொன்ன உங்கள் பெருந்தன்மைக்கு முதற்கண் நன்றி சொல்கிறேன்.உங்களை தனிப்பட்ட முறையில் எனக்கு பச்சயம் இல்லை ஆனால் என் இதயத்துக்கு பரிச்சயம் நண்பர் சித்தீக்,மச்சான் அஸ்லாம் ஆகியோர் சிலாகித்து சொல்வார்கள் உங்களைப் பற்றி,உங்கள் இல்லத்தரசி(ராத்தா)வின் விருந்தோம்பல்,விகடகவி(ஐயா)ஆகியொரைப்பற்றி நிரம்ப கேள்விப்பட்டு மனதுக்குள் நட்பை இந்த நிமிடம் வரை பேணிவருகிறேன்.சந்திக்க ஆவல் கொண்டு சந்திக்கவே முடியாமல் ,பழக முடியாமல் தவித்த கணம் உண்டு. ஆனாலும் அதுவும் வாய்த்தது ஆனால் நல்ல சந்தர்பத்தில் அல்ல, நண்பன் நவாசின் துர்மரணத்தின் கணத்த பொழுது அவனை அடக்கம் செய்ய நாம் எல்லாரும் கூடினோம்.இன்னும் அந்த மாறத கணம் கல் போல் நெஞ்சை அழுதிகொண்டிருக்கிறது. நண்பனாய்,சகோதரனாய் அவன் விட்டுச்சென்ற நட்பும் அந்த ரணமும் என் உயிர் ஓயும் வரை நெஜ்சோடு இருக்கும்.அவன் எழுதுக்கு என்னை ஆசான் என்பான் என் எழுதுக்கு அவனே ஆசான் அதுவே நிசம். மற்றவர்களின் ஆக்கத்தை பாரட்ட நல்ல ரசனை மட்டுமல்ல நல்ல மனமும் வேண்டும் அது உங்களிடம் நிரம்ப இருப்பது கண்டு சந்தோசம்.அப்புறம் ஒருவிசயம் தான் ரொம்ப,ரொம்ப தன்னடக்கமாகத்தெரிகிறது(எழுதக் கூடாதென்றில்லை. நீங்கள் உள்ளிட்ட எழுத்தாளர்களின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாதே என்ற தயக்கம்தான்) ஹாஹாஹாஹாஹ் இது ரொம்ப ஓவர்.
வஸ்ஸலாம்.
Mohamed Thasthageer
crowngeer@yahoo.com

Shameed said...

சபீர்
(நம்மூர்வாசிகளின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாதே என்ற தயக்கம்தான். மற்றப்டி இலக்கிய ஆர்வத்தில் குறைவில்லை.)

மீன் குஞ்சிக்கு நீந்த தெரியாதா !!!

கழுகுகுக்கு பரகத் தெரியாதா !!!

சிங்கத்திற்கு வேட்டையாட தெரியாதா !!!

சச்சினுக்கு ரன் எடுக்க தெரியாதா !!!!!

மன்மோகன் சிங் குக்கு கணக்கு தெரியாதா !!!

இவர்களுக்கு இது முடியாது என்றால் நான் ஒத்துக்கொள்வேன்

நம்மூர்வாசிகளின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாது

என்று சொன்னால் நான் ஒத்துகொள்ள மாட்டேன்

அந்த பதில் தங்களின் தன்னடக்கமாக காட்டுவதகதான்

நான் எடுத்துகொள்வேன்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

Shahulhameed said...
Thursday, September 09, 2010 6:04:00 AM
சபீர்
(நம்மூர்வாசிகளின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாதே என்ற தயக்கம்தான். மற்றப்டி இலக்கிய ஆர்வத்தில் குறைவில்லை.) //
------------------------
மீன் குஞ்சிக்கு நீந்த தெரியாதா !!!

அதானே ! அதனைப் பிடித்து பொறிக்கத் தெரிந்தவர்களாச்சே

கழுகுகுக்கு பறக்கத் தெரியாதா !!!

ஏன் கழுகுப் பார்வை படாத இடத்திற்கு சென்றும் திரவியம் தேடுபவர்களாச்சே

சிங்கத்திற்கு வேட்டையாட தெரியாதா !!!

அட ஆட்டைக் அவங்க பக்கத்தில் கட்டிவிட்டு இப்படியா கேட்கிறது

சச்சினுக்கு ரன் எடுக்க தெரியாதா !!!!!

நீங்க வேற சும்மா போட்டுக் கொடுங்க நல்லாவே அடிக்கட்டும்..

மன்மோகன் சிங் குக்கு கணக்கு தெரியாதா !!!

இவர் நம்ம ஸ்கூல்ல படிக்கலையே சாஹுல்

இவர்களுக்கு இது முடியாது என்றால் நான் ஒத்துக்கொள்வேன்

ஐயா !தாங்கள் இழுத்துகிட்டு வாங்க இங்கே அவங்களை நாம ஒத்துக்க வைப்போம்

நம்மூர்வாசிகளின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாது

நம்(மூர்வாசிகளா?)எ(ழுத்)தில் வேகமா இருக்கு சொல்லவேயில்லையே

என்று சொன்னால் நான் ஒத்துகொள்ள மாட்டேன்

சாஹுல் அட விடுங்க இப்படித்தான் ஸ்கூல்ல நல்லா மார்க் எடுக்கிறவங்க சொல்வாங்க நான் எப்போதும் போலத்தான் படித்தேன் என்றும், சுமாரா மார்க் எடுக்கிறவங்க சொல்வதென்னவோ நல்லாத்தான் படிச்சேன் ஆனா...

அந்த பதில் தங்களின் தன்னடக்கமாக காட்டுவதகதான்

நான் எடுத்துகொள்வேன்

என்னங்க இதப் போய் நீங்க எடுத்துகிட்டு அவங்க அவங்ககிட்டே இருக்கட்டும் தானா பொங்கிவரும் பாருங்க

சும்மா ஒரு Changeக்காக (பெருநாள் நேரமாச்சேன்னு நெனக்காதிங்க ! :))

எல்லோருக்கும் இனிய ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்

Yasir said...

//அமீரகத்தில் அவர் வீட்டில் இரண்டு மாதங்கள் தங்கியிருந்தேன்...வாடகையே கொடுக்கவில்லை.
அவரும் கொடுக்கவில்லை... அதன் பிறகு நான்கு ஆண்டுகளாக என் மனவீட்டில் தங்கியிருப்பதற்கு//..அதைவிட பெரிதாக ஒன்றை கோடிகள் கொடுத்தாலும் கிடைக்காத ஒன்றை எனக்கு தந்து விட்டு சென்று இருக்கீறீர்கள் காக்கா...உங்கள் நட்பு...i proud to be your friend and brother kakka, தன்னடக்கத்தை கொஞ்சம் வாடகைக்கு விட்டு விட்டு..அதிரை நிருபர் வாசகர்ளுக்காக உள்ளத்தை குளிர வைக்கும் உங்கள் எழுத்தை சீக்கிரம் ஆரம்பியுங்கள் காக்கா

Shameed said...

அபுஇபுறாஹிம் said...
நாங்க இருக்கோமே உசுப்பேத்திவிட... ஜமாய்ங்க சஃபீர்(காக்கா)

உசுப்பேத்துரத்த பாத்துகிறேன் உசுப்பேத்துரத்த கேட்டுகிறேன்

உசுப்பேத்துரத்த இப்போதங்க( நீங்க எழுதி) படிகின்றேன்

நல்லாவே உசுப்பேத்திரீங்க

Shameed said...

//அமீரகத்தில் அவர் வீட்டில் இரண்டு மாதங்கள் தங்கியிருந்தேன்...வாடகையே கொடுக்கவில்லை.
அவரும் கொடுக்கவில்லை... அதன் பிறகு நான்கு ஆண்டுகளாக என் மனவீட்டில் தங்கியிருப்பதற்கு//..அதைவிட பெரிதாக ஒன்றை கோடிகள் கொடுத்தாலும் கிடைக்காத ஒன்றை எனக்கு தந்து விட்டு சென்று இருக்கீறீர்கள் காக்கா...உங்கள் நட்பு...i proud to be your friend and brother kakka, தன்னடக்கத்தை கொஞ்சம் வாடகைக்கு விட்டு விட்டு..அதிரை நிருபர் வாசகர்ளுக்காக உள்ளத்தை குளிர வைக்கும் உங்கள் எழுத்தை சீக்கிரம் ஆரம்பியுங்கள் காக்கா *********


உள்ளத்தில் இருந்து வார்த்தைகள் உரு(வி)கி வருகின்றன

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு