அல்லாஹ்வின் திருப்பெயரால் . . .
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) - இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!
இந்த கட்டுரை இத்தொடரோடு முடிவதால் தொடர் 1 முதல் 15 வரை ஒரு முன்னோட்டம் பார்த்துவிடுவோம்.
கடன் அட்டையில் வாங்கும் கடன் விபரங்கள், வளைகுடாவுக்கு வந்தவர்களின் கடன் வாங்கும் நிலைகள். (மேலும் விபரமாக படிக்க)
ஊரிலிருந்து வளைகுடா சகோதரர்களுக்கு கடன் கேட்பவர்களின் நிலைகள், ஆடம்பர கடன், சகோதரிகள் வாங்கும் கடன்கள், புதிய நகைகள் செய்வது, நகை கடன், வங்கியின் நிலைபாடு, இரவல் நகை கடன், ஆகியவைகள் பற்றிப்பார்த்தோம். (மேலும் விபரமாக படிக்க)
இஸ்லாம் என்றால் என்ன?, வட்டி கடைகள், ஏலச்சீட்டு கடன், தினச்சீட்டு கடன், வாரச்சீட்டு கடன். (மேலும் விபரமாக படிக்க)
கடன் எனும் கடலில் தள்ளிய சகோதரிகள், ஊதாரி கணவனுக்கு கொடுத்து ஏமாந்த சகோதரிகள், பாலைவனத்தில் பிடித்துவிடும் சகோதாரிகள், காலமெல்லாம் கணவனை பாலைவன வெயிலில் போராட வைத்த சகோதரிகள், கடன் எனும் நிழல் கூட தன்மீதும் கணவன் மீதும் விழாமல் காத்துக்கொண்ட பெண்மனி. (மேலும் விபரமாக படிக்க)
நாம் தொழுவது எதற்காக?, நன்மை எதில் உள்ளது, பிறசமுதாயத்தவர்களின் உதவிகள், அழகிய மனிதநேயத்திற்கு சொந்தக்காரர்கள், யார் கவலைப்படமாட்டார்கள். (மேலும் விபரமாக படிக்க)
வெற்றி பெற்றோரின் நிலை, நமது ஜகாத்துகள் பயன் அளிக்கிறதா?, அல்லாஹ்வுக்காக அழகிய கடன் கொடுப்பவர் யாரும் உண்டா?. (மேலும் விபரமாக படிக்க)
மன்னிப்பு வேண்டுமா? கடனை தள்ளுபடி செய்யுங்கள், கடனைத் திருப்பி கேட்கும்போது நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள்,தர்மம் செய்த கூலி வேண்டுமா? கடன் வாங்குவோர் நிலை,கட்டாய கடன்,கடனை திரும்ப அடைப்பதில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும். (மேலும் விபரமாக படிக்க)
கடனிலிருந்து பாதுகாப்புத் தேடுதல்,கடன் வாங்கியவர்களின் திருப்பிச் செலுத்தும் எண்ணமும் ஏமாற்றும் எண்ணமும்,கடன் கொடுத்தவருக்குக் கடுமையாக பேச உரிமையுண்டு.(மேலும் விபரமாக படிக்க)
பிள்ளைகளின் சேமிப்பு, வாங்கும் பொருட்களில் சிக்கனம்,துணிமணிகள், வீண் விரயம்,தள்ளுபடி, வளைகுடா சகோதரர்களின் சிக்கனம், சிக்கனமா? கஞ்சத்தனமா?. (மேலும் விபரமாக படிக்க)
வட்டியில்லா கடன் திட்டம்,பைத்துல்மால்,பொருளாதார சுனாமி,இன்றைய செல்வந்தர்களின் நிலை என்று அனைத்துவிதமான தலைப்புகளிலும் தொடர் 1 முதல் 15வரை பார்த்தோம். (மேலும் விபரமாக படிக்க)
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே ஒன்றுமில்லாத காரியங்கள், கதைகளுக்கெல்லாம் உருவான விதத்தை வெளியிட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இந்த கடன் என்பது வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்று இந்த ஆக்கம் உருவான விதத்தை தெரிவிப்பதில் சில படிப்பினைகள் இருப்பதால் விளக்குகிறேன்.
கடன் கட்டுரை உருவான விதம்:
நான் வளைகுடா நாட்டில் வந்த நாள் முதல் வேலை, ரூம், தொழுகை என்று வாழ்க்கை ஓடிக்கொண்டு இருந்தது. என்னை சுற்றி இருந்தவர்கள் பெயர் தாங்கி முஸ்லிமாக, வெள்ளிக்கிழமை மற்றும் தொழுபவர்களாக இருந்தார்கள். இந்த சகோதரர்களோடு சேர்ந்து இருந்த பொழுது உண்மையான மார்க்கத்தையும், இஸ்லாத்தில் அழைப்பு பணி இருப்பதையும் அறியாமல் இருந்தேன். பல ஆண்டுகள் இவர்களோடு சேர்ந்து இருந்தபொழுது மார்க்கத்தில் எந்த முன்னேற்றமும் என்னிடம் கிடையாது. (இன்றளவும் வளைகுடா நாடுகளில் இருக்கும் நமது சகோதரர்கள் மார்க்கத்தை அறிய முயற்சி செய்யாமல் சினிமா, சீரியல், பாடல்கள் என்று நேரங்களை வீண் விரயம் செய்து வருகிறார்கள். உலகம் முழுவதும் அழிவுகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. மறுமை பயம் இல்லாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். இவர்களுக்கு வல்ல அல்லாஹ் நேர்வழி காட்டட்டும்).
இந்த நேரத்தில் அழைப்பு பணி செய்யும் ஒரு சகோதரர் மூலம் தவ்ஹீது சகோதரர்கள் சேர்ந்து அழைப்பு பணி செய்வதை அறிந்தேன். அந்த சகோதரர் அங்கு அழைத்து சென்று அறிமுகம் செய்து வைத்தார். வல்ல அல்லாஹ்வின் மிகப்பெரிய கருணையால் தூய்மையான மார்க்கத்தை அறிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. வார பயானுக்கு தொடர்ந்து செல்ல ஆரம்பித்தேன். இவர்கள் மூலம் யு.ஏ.இல் அனைத்து இடங்களிலும் நடந்த பயான்களுக்கு சென்று வந்தேன்.
மறுமை சிந்தனையுள்ள சகோதரர்களோடு பழகும் வாய்ப்புகள் அதிகம் கிடைத்தது. நான் பல ஆண்டுகள் பழகிய சகோதரர்கள் தொழக்கூட ஆர்வம் இல்லாமல் இருந்தார்கள். தவ்ஹீது சகோதரர்களின் அறிமுகம் எனக்கு வல்ல அல்லாஹ் கொடுத்த வாய்ப்பே. தவ்ஹீத் சகோதரர்கள் சேர்ந்து கையெழுத்து பிரதி நடத்தி வந்தார்கள். (கையால் எழுதி அல்ல, கம்யூட்டர் மூலம் டைப் செய்து) இதன் ஆசிரியர் கீழக்கரையைச் சேர்ந்த சகோதரர் அப்துல்லாஹ் செய்யது ஆபீதீன், ஃபுஜைராவில் இருந்தார். இதன் காப்பியை எனக்கு மெயில் மூலம் அனுப்பி சரிபார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
ஒரு தடவை ஃபுஜைராவில் நடந்த பயானுக்கு சென்றிருந்தோம் அங்கு தங்கி மறுநாள் காலை அங்கு கடலில் குளிக்க சென்றோம். கடலிலேயே மசூரா சகோ. அ.செய்யது ஆபீதீன் என்னை சத்தியப்பாதை கையெழுத்து பிரதியின் ஆலோசனைக்குழுவில் சேர்க்க வேண்டும் என்று மற்ற ஆலோசகர்களிடம் கூறினார். அந்த குழுவில் உள்ளவர்கள் ஆமோதிக்க நான் ஆலோசனைக்குழு உறுப்பினரானேன்.
இதன் பிறகு சில மாதங்கள் கழித்து இந்த கையெழுத்து பிரதியை மாத இதழாக வெளியிட வேண்டும் என்று எல்லோரும் ஆலோசனை செய்து தமிழ்நாட்டில் பதிவு செய்து ஆசிரியர் அவர்களின் தந்தை அப்துல்லாஹ் அவர்களின் உதவியுடன் சத்தியப்பாதை என்ற பெயரில் மாத இதழாக வெளி வந்தது. பிறகு சில மாதங்கள் கழித்து மீண்டும் ஒரு மசூராவில் என்னை உதவி ஆசிரியராக சேர்க்க வேண்டும் என்று சகோ. அ.செய்யது ஆபீதீன் அறிவித்தார். ஆலோசனை குழுவிலிருந்து உதவி ஆசிரியர் ஆனேன். மீண்டும் ஒரு மசூராவில் என்னை இணை ஆசிரியராக அறிவித்தார். ஆலோசனைக்குழு உறுப்பினர் என்ற நிலையில் இருந்து உதவி ஆசிரியர், இணை ஆசிரியர் நிலைக்கு என்னை கொண்டு வந்தார். அல்ஹம்துலில்லாஹ்!. இந்த நேரத்தில் பத்திரிக்கையின் முழுப்பொறுப்பையும் இருவரும் கவனித்து வந்தோம்.
எனக்கு ஆசிரியர் பொறுப்பு கிடைத்தவுடன்தான் இந்த கடன் வாங்கலாம் வாங்க ஆக்கத்தை இதில் எழுத ஆரம்பித்தேன். பொருளாதார பற்றாக்குறையால் இந்த இதழை தொடர்ந்து நடத்த முடியாமல் நிறுத்தி விட்டோம்.
அதிரை நிருபரில் ஆக்கம் வெளியானது:
ஒரு நாள் தற்செயலாக அதிரைநிருபரை பார்க்க நேர்ந்தது. சபீர் அதிரை நிருபரில் கவிதை வெளியிட்டது பற்றி என்னிடம் கூறியபோது நான் எழுதிய ஆக்கத்தை வெளியிட கேட்டு சொல்லும்படியும், அதிரை நிருபரில் கட்டுரைகள் வரவேற்கப்படுகிறது என்று வெளியிட்டிருந்தார்கள் என்றும் கூறினேன். என் மெயிலுக்கு அனுப்பி வை நான் அவர்களுக்கு அனுப்பி வெளியிட ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்ல நானும் அனுப்பி வைத்தேன்.
என்னிடம் சாப்ட் காப்பி இல்லை, சத்தியப்பாதை இதழ்தான் இருந்தது. முதல் ஆக்கத்தை ஸ்கேன் செய்து அனுப்பி வைத்தேன். இது சம்பந்தமாக சகோதரர் தாஜுதீனிடம் பேசினேன். ஆனால் தாஜுதீனிடம் இருந்து பதில் எதுவும் வராத காரணத்தால் வேறு ஒரு இணையதளத்துக்கும் இந்த ஆக்கத்தை அனுப்பி வைத்தேன். அந்த இணையதளத்திடம் இருந்து இரண்டு தடவை பதில் வந்தது. ஆக்கம் முழுவதுமாக இருக்கிறதா? நாங்கள் ஆலோசனைக்குழுவில் வைத்து கலந்து கொண்டு தங்களுக்கு பதில் தருகிறோம் என்று பதில் மெயில் வந்தது. அதன்பிறகு இன்று வரை அவர்களிடம் இருந்து பதில் இல்லை. ஒரு வேளை பதில் அன்றே வந்திருந்தால் அந்த இணையதளத்தில் இந்த ஆக்கம் வெளியாகியிருக்கும்.
சபீரிடம் இருந்து போன்: என்ன ஆச்சு ஏன் உன் ஆக்கம் வரவில்லை என்று, நான் தாஜுதினிடம் இருந்து பதில் இல்லை என்றேன். சரி நான் பேசுகிறேன் என்று சொன்ன பிறகு தாஜுதீனிடம் இருந்து போன் வந்தது. காக்கா உடல் நலமில்லாத காரணத்தால் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று அதன் பிறகு நான் ஆக்கத்தை அனுப்பி வைத்து நிறைவுரைக்கு வந்து விட்டேன்.
சத்தியப்பாதை இதழில் வெளிவந்தது கரு என்றால் அதிரை நிருபரில் வெளியானது முழுக்குழந்தை என்று சொல்லலாம். ஏன் என்றால் மேலும் பல அனுபவங்கள் மூலமும், தற்பொழுது உள்ள நிகழ்வுகளையும் சேர்த்து எழுதும் வாய்ப்புகள் கிடைத்தது. அதிக அளவில் வாசகர்களின் வரவேற்பையும் பெற்றுக்கொண்டது இந்த ஆக்கம்.
நன்றியுரை :
உலகை படைத்து பரிபாலித்து வரும் வல்ல அல்லாஹ்வுக்கே என்னுடைய முதல் நன்றி! (அல்ஹம்துலில்லாஹ்!) இந்த ஆக்கத்தை எழுதக்கூடிய சூழலை கொடுத்து எழுத வைத்தவன் வல்ல அல்லாஹ்வே!
அப்துல்லாஹ் செய்யது ஆபிதீன்:
என்னை ஆசிரியராக நியமித்து பின் எனக்கு இந்த ஆக்கத்தை எழுத வாய்ப்பு அளித்ததற்கு என் நன்றியை சகோதரர் செய்யது ஆபிதீனுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். வல்ல அல்லாஹ் சகோதரருக்கு நல்லருள் புரியட்டும்.
சபீர்:
அதிரை நிருபருக்கு அறிமுகம் செய்து வைத்து, ஆக்கம் வெளிவருவதற்கு முயற்சியும் செய்து மேலும் எழுதுவதற்கும் ஊக்கத்தையும் கொடுத்த சபீருக்கு என்னுடைய நன்றி! வல்ல அல்லாஹ் சகோதரருக்கு நல்லருள் புரியட்டும்.
தாஜுதீன்:
நான் இரண்டு வாரம் தொடர்ந்து கட்டுரையை அனுப்பிய பிறகு காக்கா நீங்கள் நேரடியாக பதிவு செய்து கொள்ளலாம் என்று சொன்னபொழுது நான் நேரடியாக பதிந்தால் ஏதாவது தவறுகள் வந்தால் திருத்த வாய்ப்பிருக்காது என்று கூறிய பிறகு எனது ஆக்கத்தை படித்து பிறகு அதற்கான அழகிய படங்களை தேடி எடுத்து வேலை பளுவுக்கு இடையிலும் சிறந்த முறையில் பதிவு செய்த சகோ.தாஜுதீனுக்கு எனது நன்றி! வல்ல அல்லாஹ் சகோதரருக்கு நல்லருள் புரியட்டும்.
அபுஇபுறாஹிம்:
ஆக்கம் வெளிவந்தவுடன் முதல் வாசகராக வந்து பின்னூட்டம் பதிந்ததற்கும் மற்றவர்களும் பின்னூட்டம் இடுவதற்கு ஊக்கமாக இருந்ததற்கும் எனது நன்றி! வல்ல அல்லாஹ் சகோதரருக்கு நல்லருள் புரியட்டும்.
வாசகர்கள்:
சகோதரர்கள்: அபுஇபுறாஹிம், தாஜுதீன், சபீர், யாசிர், தஸ்தகீர், ஹமீது, அப்துல்மாலிக், ஜாகிர், ஜலால், அஜீஸ், ஹாலித், நிஷாத் மீரா, ஜமீல் காக்கா,அஹ்மது காக்கா, ரியாஷ் அஹமது, அப்துர்ரஹ்மான், நீடுர் அலி, மீராஷாஹ், அதிரை அபூபக்கர், ஹிதாயத்துல்லாஹ், அபு ஆதில், அஹமது இர்ஷாத், அபு இஸ்மாயில், அபு ஈசா, MSM நெய்னா முகம்மது, பின்னூட்டம் பதிந்த வாசகர்களுக்கும், படித்தும் பின்னூட்டமிட வசதி இல்லாத வாசகர்களுக்கும், படித்து பயன் பெற்ற சகோதரிகளுக்கும் எனது நன்றி!
ஒரு ஆக்கத்தை எழுதி பதிந்தால் மட்டும் போதாது அதை படித்து கருத்தை தெரிவிக்கும் வாசகர்கள் இருந்தால்தான் அந்த ஆக்கத்திற்கு வெற்றி! அந்த வகையில் கருத்திட்ட, கருத்திட முடியாத வாசகர்கள் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் நல்லருள் புரியட்டும்.
நிறைவுரை:
வல்ல அல்லாஹ்வின் அருளால் இந்த ஆக்கம் தொடராக வெளிவந்து என்னால் முடிந்தளவு நமக்குள் நடைபெறும் அனைத்து விதமான கடன்களையும் குர்ஆன், மற்றும் நபி(ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழியில் கடன் வாங்குபவர், கொடுப்பவர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் கடனற்ற வாழ்க்கை வாழ நாம் எப்படி சிக்கனமாக இருக்க வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்தி விட்டேன். இன்ஷாஅல்லாஹ் இதன்படி வாழ நாம் அனைவரும் நம்மை தயார்படுத்திக்கொள்வோம்.
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே இதில் நிறைகள் இருந்து அதனால் நீங்கள் பயன் அடைந்து இருந்தால் அது இவ்வுலகையும், மனிதர்களையும் மற்ற படைப்பினங்களையும் படைத்து பாதுகாத்து வரும் சர்வ சக்தி படைத்த வல்ல அல்லாஹ்வுக்கேச் சேரும் - அல்ஹம்துலில்லாஹ்! குறைகள் இருந்தால் பலகீனம் நிறைந்த படைப்பாகிய மனிதனான என்னேயேச் சேரும்.
உங்கள் முகங்களை கிழக்கு நோக்கியோ, மேற்கு நோக்கியோ திருப்புவது நன்மையன்று மாறாக அல்லாஹ், இறுதிநாள் வானவர்கள், வேதம், மற்றும் நபிமார்களை நம்புவோரும் உறவினர்கள், அனாதைகள், ஏழைகள், நாடோடிகள், யாசிப்போருக்கும், மற்றும் அடிமைகளை விடுதலை செய்வதற்கு (மன) விருப்பத்துடன் செல்வத்தை வழங்குவோரும், தொழுகையை நிலை நாட்டுவோரும், ஸகாத்தை வழங்குவோரும், வாக்களித்தால் தமது வாக்கை நிறைவேற்றுவோரும், வறுமை, நோய், மற்றும் போர்க்களத்தில் சகித்துக் கொள்வோருமே நன்மை செய்பவர்கள், அவர்களே உண்மை கூறியவர்கள், அவர்களே (இறைவனை) அஞ்சுபவர்கள். (அல்குர்ஆன் : 2: 177)
வாசகர்களுக்கு அன்பான கோரிக்கை:
அதிரை நிருபரில் வெளியான முக்கியமான ஆக்கங்களை வெளியிட வேண்டுமென்பது அனைவரின் விருப்பமாக இருக்கிறது. ஆக்கங்களை நோட்டீஸாக வெளியிட வேண்டுமெனில் பொருளாதாரம் வேண்டும் ஒருவரே பொறுப்பு எடுப்பது சிரமமான காரியம். பரிட்சைக்கு படிக்கலாமா? என்ற ஆக்கத்தை மிகுந்த பொருட் செலவில் செலவு செய்து அதிரை நிருபர் குழு மட்டும் பொறுப்பு எடுத்து வெளியிட்டார்கள் என்பதை நான் அறிவேன்.
வாசகர்கள் அனைவரிடமும் என்னுடைய சொந்த கருத்தாக தெரிவிப்பது: வெளிவந்த நோட்டீஸ் செலவிலும், இனி நோட்டீஸாக வெளியிடப்போகும் செலவிலும் தங்களின் பங்களிப்பை (நன்கொடை) செய்து நன்மையை அனைவரும் பெற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். (நன்மையை ஒருவரே எடுத்துக்கொள்ளாமல் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தெரிவித்துள்ளேன்). எந்த ஆக்கங்களை நோட்டீஸாக, புத்தகமாக வெளியிட போகிறார்கள் அதற்கு என்ன செலவாகும் என்ற விபரங்களை அதிரை நிருபர் குழுதான் வெளியிட வேண்டும். வாசகர்களின் கருத்தை தெரிவியுங்கள்.
நம்பிக்கை கொண்டோரே! பேரமோ, நட்போ, பரிந்துரையோ இல்லாத நாள் வருவதற்கு முன் நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல் வழியில்) செலவிடுங்கள்! (அல்குர்ஆன் : 2:254)
அவதூறு பரப்புபவர் - புறம் பேசுபவர்களுக்காக:
உனக்கு தெரியுமா? சேதி? அதிரை நிருபர் குழு நன்கொடை வசூலிக்க ஆரம்பித்து விட்டார்களாம் என்று புறம் பேச ஆரம்பிப்பவர்களின் கவனத்திற்கு வல்ல அல்லாஹ்வின் எச்சரிக்கை:
நன்மையிலும். இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன். (அல்குர்ஆன் : 5:2)
--- நிறைவுற்றது ---
-- S. அலாவுதீன்
அன்பு நேசங்களே..
அஸ்ஸலாமு அலைக்கும்,
கடந்த 2010 அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் நம் அதிரைநிருபரில் மிகுந்த வரவேற்பை பெற்ற கடன் வாங்கலாம் வாங்க தொடர் விழிப்புணர்வு பதிவு இந்த பதிவுடன் நிறைவடைகிறது. முதலில் இறைவனுக்கே எல்லா புகழும். அல்ஹம்துலில்லாஹ்…
இந்த அற்புதமான விழிப்புணர்வு கட்டுரையை நம் அனைவருக்கும் பரிசாக தந்து பயனடைய செய்த எங்கள் அன்பு பாசம் நிறைந்த சகோதரர் S. அலாவுதீன் அவர்களுக்கு மிக்க நன்றி. இது போன்ற தொடர் மூலமே அதிரைநிருபரின் தரம் உயர்ந்துள்ளது என்று சொல்லிக்கொள்வதில் பெருமையடைகிறோம்.
மக்கள் பயனடைய வேண்டும் என்ற எண்ணத்தில் நம் அனுமதியுடனும் மற்றும் நம் அனுமதியில்லாமலும் இந்த தொடர் ஆக்கத்தை வெளியிட்ட சகோதர வலைப்பூக்களுக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து பின்னூட்டங்களுடன் சகோதரர் அலாவுதீன் அவர்களை ஊக்கமும் உற்சாகமும் அளித்துவந்த சகோதர சகோதரிகள் அனைவருக்கும் மிக்க நன்றி.
இந்த தொடர் நம் அதிரைநிருபரில் வெளிவர காரணமாக இருந்த சகோதரர் சபீர் அவர்களுக்கும் மிக்க நன்றி. உங்கள் இருவருக்காக நாங்கள் எல்லாம்வல்ல இறைவனிடம் துஆ செய்கிறோம். இந்த தொடர் ஆக்கத்தை படித்தவர்களும், படிக்கபோகிறவர்களும் இந்த இருவருக்காவும் துஆ செய்யுங்கள்.
அதிரைநிருபர் தேடல் பகுதியில் “கடன் வாங்கலாம் வாங்க” என்று தட்டினால் போதும் இந்த தொடர் ஆக்கத்தின் சுட்டிகள் அனைத்தும் கிடைக்கும். மேலும் கூகுல் தேடல் இணையத்திலும் “கடன் வாங்கலாம் வாங்க” என்று தேடினால் நம் அதிரைநிருபர் வலைத்தளமே முன்னனியில் வரும். இது மட்டுமல்ல கூகுல் தேடலில் அதிரை அலாவுதீன், சகோதரர் அலாவுதீன், அலாவுதீன் காக்கா என்று தேடிப்பருங்கள் சகோதரர் அலாவுதீன் அவர்களின் ஆக்கங்களே முதல் வரிசையில் கிடைக்கும்.
வல்ல அல்லாஹ் நம் சகோதரர் அலாவுதீன் அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக.
இது போன்று நன்மை தரும் விழிப்புணர்வு ஆக்கங்கள் எழுத அல்லாஹ் நம் சகோதரர் அலாவுதீன் அவர்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தையும், நல்ல செல்வ வளத்தையும் தந்தருள்வானாக என்று துஆ செய்கிறோம். வாசக நேசங்களே நீங்கள் அனைவரும் துஆ செய்யுங்கள்…
மீண்டும் எல்லா புகழும் இறைவனுக்கே..
தொடர்ந்து இணைந்திருங்கள்…
அதிரைநிருபர் குழு