Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பேறு பெற்ற பெண்மணிகள் - தொடர் - 3 7

அதிரைநிருபர் பதிப்பகம் | August 23, 2011 | , ,

மக்களுக்கேற்ற மார்க்கம்

"அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்! கபீரா! லா இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்! வ லில்லாஹில் ஹம்து!"

இப்படி, மக்காவின் 'அரஃபாத்' பெருவெளியில் அனைத்துலகக் காப்பாளன் அல்லாஹ்வைப் பெருமைப் படுத்திப் புகழ்ந்தும் அவனது அருள்வேண்டி அபயக்குரல் எழுப்பியும் ஹஜ்ஜுப் பயணிகள் ஒரே குரலில், ஒரே மொழியில் எழுப்பிய ஓசை, மேலை நாட்டுச் சகோதரி ஒருவரின் இதயத்தை உருகச் செய்தது என்றால், அதன் காரணம் யாது?

"இறைவனின் இறுதித்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தை இது நினைவூட்டுகின்றது, ஹஜ் எனும் புனிதப் பயணத்தின் இறுதியும் உச்ச கட்டமுமாகிய 'அரஃபாத்'தில் அனைவரும் ஒன்று கூடும் இத்தருணத்தை விடப் பொருத்தமான வேறு அனைத்துலகச் சமாதான ஒன்றுகூடல் எங்கேனும் உண்டா ?"

"கருப்பர், வெள்ளையர், மஞ்சள் நிறத்தவர், மாநிறங் கொண்டோர், அரசர்கள், ஏழைகள், பணக்காரர்கள் - அனைவருமே ஒரே உடையில், ஒரே குரலில், ஒரே இறைவனைப் புகழ்ந்து இறைஞ்சும் புனிதக் கூட்டமைப்பன்றோ இது?!?

"மனிதர் அனைவரும் அமைதியை, சமாதானத்தை விரும்புகின்றனர். அது உண்மையில் இங்கல்லவா கிடைக்கின்றது?! இதைவிடப் பொருத்தமான தருணம் வேறு என்ன இருக்கிறது?"

இவைதாம், அப்போது பேறு பெற்ற பெண்மணியின் இதயக் குரல்கள்.

அது 1931ஆம் ஆண்டு, இங்கிலாந்தின் அரச் பதவி வகிக்கும் குடும்பத்தைச் சேர்ந்த செல்வி ஐரீன் ஜேன் வென்டவொர்த் ஃபிட்ஸ்வில்லியம், மதங்களின் ஒப்பீட்டுக் கல்வி (Study of Comparative Religions) பயில்வதற்காக எகிப்துக்குப் பயணமானார்.

அங்கே சென்று படிப்பைத் தொடங்கிய சில நாட்களிலேயே, இஸ்லாம் எனும் உண்மை மார்க்கம் இவரது இதயத்தை ஈர்த்தது. அதே ஆண்டிலேயே முஸ்லிமாக மாறி 'ஆயிஷா' என்ற பெயரைச் சூட்டிக் கொண்டார்!

1935ஆம் ஆண்டு ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றினார் ஆயிஷா, ஹஜ்ஜில் காணப்படும் அனைத்துலக ஒற்றுமை உணர்ச்சியைக் கண்டு வியந்து அடிக்கடி கூறுவார் ஆயிஷா. தன் தங்கை எவலினுக்கு இஸ்லாத்தை பற்றி எடுத்துரைத்து, அவரை இஸ்லாத்தை தழுவச் செய்தார்.

அண்ணல் பெருமானார்(ஸல்) அவர்களின் அழகான அறிவுப் பூர்வமான - துணிவான உண்மை மார்க்கப் பிரச்சாரத்தைப் பற்றி அடிக்கடி வியந்துரைப்பார் ஆயிஷா.

"எனது தாய்நாட்டு மக்களுக்குத் தேவையான அவர்கள் பின்பற்றத் தகுந்த துணிவு, நேர்மை, கழிவிரக்கம், அநீதியிழைத்தோரை அற்புதமாக மன்னிக்கும் தன்மை ஆகிய அனைத்தும் அப்பெருமகனாரிடம் குடிகொண்டிருந்தன. அவர்களிடம் இயல்பாக அமைந்திருந்த துணிவும், வல்ல இறைவன் மீது அசைக்க முடியாத நம்பிக்கையுமே, அவர்களை வெற்றிக் கொடி நாட்டச் செய்தன எனக் கூறினால், அது மிகையாது.

அந்த இறுதித் திருநபி அவர்கள்தாம் முதன்முதலாக எம் பெண்களின் சமூகத் தகுதியையும் மதிப்பையும் உயர்த்தியவர். இன்று கூடச் செஇல ஐரோப்பிய நாடுகளில் காணக் கிடைக்காத பெண்ணுரிமையினை 1400 ஆண்டுகளுக்கு முன் பெற்றுத் தந்தவர் இந்த நபியவர்கள்தாம்!

அயர்லாந்தின் அரச குடும்பக் கோட்டையைத் துணிவுடன் திறந்து வந்து, இஸ்லாமிய இன்பச் சோலையில் புகுந்த ஆயிஷா வென்டவொர்த் ஃபிட்ஸ்வில்லியம் பேறு பெற்ற பெண்மணிகளுள் ஒருவர்தானே!


உடன் பிறப்புகளுக்கு

"ஹாய்"

பதினாறு ஆண்டுகள் சவுதியில் முஸ்லிமாயிருந்து விட்டுத் தன் பெற்றோரையும் உறவினரையும் கண்டு மகிழ அமெரிக்காவுக்குச் சென்ற பாத்திமாவுக்குக் கிடைத்தது, இந்த வரவேற்புதான்!

அன்புடன் கூடி ஆரத் தழுவல் இல்லை! முகம் மலர்ந்த முத்தம் இல்லை! நாலைந்து பேர் கூடிய நல்விசாரனை இல்லை! காரணம்?

பதினாறு வயது பருவப் பெண்ணாயிருந்த போது, 1957ஆம் ஆண்டில், ஜெனரால் முஹம்மத் அமீன் என்னும் சவுதி விமானப் படை வீரரைக் கணவராகக் கைப்பிடித்து, ஜித்தாவில் இல்லற வாழ்வைத் தொடங்கினார் பாத்திமா.

அடுத்த பதினாறு ஆண்டுகள் சவுதியில் முஸ்லிம் பெண்ணாக வாழ்ந்துவிட்டுத்தான், தன் உறவினர்களைக் காண ஆவலும் அமெரிக்காவுக்கு வந்தார்.

ஆனால், அங்கு அவருக்குக் கிடைத்த வரவேற்பு, பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்தது.

ஆம்! நாகரிகத்தின் உச்சக்கட்டதில் இருக்கும் ஒரு சமுதாயத்தில் பிறந்து வளர்ந்துவிட்டு, அதற்கு மாற்றமான முஸ்லிம் பண்பாட்டில் முஸ்லிம் பெண்ணாக வாழ்ந்து, மீண்டும் தன் உறவினரை அந்த நாகரிகப் பண்பாட்டில் சென்று சந்திப்பது என்றால், அங்கிருக்கும் பலருக்கு அது வேடிக்கையாகவும் வெறுப்பாகவும்தானே இருக்கும்?

ஆனால், அந்த ஏமாற்றமான சூழ்நிலையிலும், பாத்திமா தன்னை ஆறுதல் படுத்திக் கொண்டு, தன் வீட்டாரிடம் இஸ்லாமிய அழைப்புப் பணியைத் தொடங்கினார்.

"ஏசு என்ற மனிதப் புனிதரை எப்படி உங்களால் கடவுளாக ஏற்றுக் கொள்ள முடிகிறது?" என்று கேட்டுவிட்டு, குர்ஆனில் இறைவன் கூறும் கீழ்காணும் வசனத்தை ஆங்கிலத்தில் படித்துக் காட்டினார் பாத்திமா. "அறிவார்ந்த ஆதாரமெல்லாம் அல்லாஹ்விடமே இருக்கின்றன. அவன் நாடியிருந்தால், உங்கள் அனைவரையும் திண்ணமாக நேர்வழியில் செலுத்தியிருப்பான் என்று (நபியே) கூறுவீராக!" வகையறியாது வாயடைத்துப் போன உறவினர்கள் மெளனமாக அவ்விடத்தை விட்டு அகன்றனர்.

சென்ற 1979 வரை தன் உறவினர்களுடன் தொடர்வு வைத்திருந்த பாத்திமா, தன்னுடன் பிறந்த ஒன்பது பேர்களுள் சகோதரி ஒருவரையும் சகோதரர் ஒருவரையும் மட்டும் முஸ்லிமாக மாற்ற முடிந்தது. சென்ற 46 ஆண்டுகளாக சவுதியில் வாழ்ந்து வருகின்றார்.

கடந்த சுமார் பத்தாண்டுகளாக இஸ்லாமியத்ட் தொண்டில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ள பாத்திமா, தன் வீட்டில் வாரந்தோறும் புதிய முஸ்லிம்களை ஒன்று கூட்டி, அவர்களுக்கு இஸ்லாமியக் கல்வியறிவுடன் இஸ்லாமியப் பண்பாட்டினையும் பயிற்றுவிக்கின்றார்.

முஸ்லிமான ஒவ்வொருவரும் பெயரளவில் அன்றி, அன்றாட வாழ்க்கை நடைமுறையில் இஸ்லாமிய வாழ்க்கையை மேற்கொண்டு ஒழுகுவது பற்றிய பயிற்சியையும் அளிக்கிறார் பாத்திமா. குர்ஆனைத் 'தக்வீது' முறைப்படி ஓதும் பயிற்சியும் அவருடைய வீட்டில் நடத்தப் பெறுகின்றது!.

தொடரும்.. 
- அதிரை அஹ்மது


இந்த அருமையான புத்தகத்தை நம் அதிரைநிருபர் வலைத்தளத்தில் தொடராக பதிந்திட அனுமதி தந்த IFT நிறுவனத்தாருக்கு எங்கள் உளமார்ந்த நன்றியும் துஆவும் என்றும் நிலைத்திடும் இன்ஷா அல்லாஹ்...

7 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அவசியம் அறிய வேண்டிய வரலாற்றுத்தொடர்.
ஆக மத ஆராய்ச்சி வான் ஆராய்ச்சி என ஆராயும்போது அங்கே இஸ்லாமே வெல்கிறது என்பது தெளிவாகிறது.
அறியத்தந்த நன்றிக்குரியவர்கள்:- அ.நி; அ.அ; IFT

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அல்குர்ஆனை ஆராய்ந்தவர்கள் அதன் பால வராமல் யாரும் இருந்ததில்லை... ஏராளாமான எடுத்துக் காட்டுகள்...

பேறு பெற்ற பெண்மணிகளின் வரலாறு அதற்கு மற்றுமொரு காட்டு !

அரிய தகவல்கள் ஆழ்ந்து வாசிக்க வைக்கும் எழுத்து நடை !

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அளக்கும்.

அல்லாஹ் யாருக்கு ஹிதாயத்தை கொடுக்க நாடிவிட்டனோ நிச்சயமாக அவர்கள் வெற்றி பெற்று விட்டார்கள்.நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்விவின் திரு வசனங்களை ஓதி காண்பிக்கும் போது மக்கத்து காஃபிர்கள். தன் விரல்களால் இரு காதுகளையும் பொத்திக்கொன்டர்கள்.காரணம் கல்நெஞ்சம் படைத்த அவர்களின் நெஞ்ச்சத்தை உடைத்து எறிந்துவிடும் என்பதற்காக.

நபி(ஸல்) அவர்களின் தலையை எடுக்காமல் என் வால் விடாது என்று வீர வசனம் பேசி சுற்றி வந்த உமர்(ரலி) அவர்கள்.பிறகு நபி(ஸல்) அவர்கள் மீது யார் களங்கம் கர்ப்பிக்கின்றானோ அவனுடைய தலையை என் வால் விடாது என்று சொல்ல வைத்தது புனித மிக்க திரு குர்ஆன் வசனம்.

ஆம் அவற்றை உணர வேண்டிய முறைப்படி உணர்ந்தார்கள்.உணர்கிறார்கள்.இன்று பேர் பெற்ற பெண்களாக ஆகிறார்கள்.

நாமும் அவற்றை சரியான முறையில் உணர்ந்து அவர்களை போல் பேர் எடுப்போமாக.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். அருமை!இன்னும் எதிர்பார்ப்பை தூண்டியவுள்ள உயிரோட்டமான தொடர்.

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும் என்ற வார்த்தை தவறுதலாக பதிவாகியுள்ளது .மன்னிக்கவும்

sabeer.abushahruk said...

//"மனிதர் அனைவரும் அமைதியை, சமாதானத்தை விரும்புகின்றனர். அது உண்மையில் இங்கல்லவா கிடைக்கின்றது?! இதைவிடப் பொருத்தமான தருணம் வேறு என்ன இருக்கிறது?"//

இதை உணர்ந்தவுடன் முஸ்லிமாதல் தவிர்க்க முடியாத்து.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

இஸ்லாத்தை உலகுக்குஎ எடுத்துச்செல்வதில் முதலில் இருப்பவர்கள் புதிதாக இஸ்லாத்திற்கு வந்த முஸ்லீம்கள் என்பதற்கு சகோதரி ஃபாத்திமா ஒரு எடுத்துக்காட்டு.

தொடரட்டும் நல்ல செய்திகளுடன் பேறு பெற்ற பெண்மணிகள்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு