அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) இறைவனின் சாந்தியும் சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)
நோன்பு கடைசி பத்து நம்மை நெருங்கி வந்து கொண்டு இருக்கிறது. ஆயிரம் மாதங்களைவிட சிறந்த இரவும் நம்மை கடந்து செல்ல இருக்கிறது. ஆயிரம் மாதங்களைவிட சிறந்த இரவான லைலத்துல் கத்ரை பற்றி இந்த தொடரில் பார்ப்போம்.
‘‘நிச்சயமாக மகத்துவமிக்க இரவில் இதை(குர்ஆனை) நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும், ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம்! இது வைகறை வரை இருக்கும்.’’ (அல்குர்ஆன்: 97:1,5)
இருபத்தி ஏழாம் கிழமை:
நாம் சிறு வயதில், பெரிய வயதாக கூட இருக்கலாம். இருபத்தி ஏழாம் கிழமை என்ற தினத்தை கொண்டாடி இருக்கிறோம். இன்று புது துணி உடுத்தி இரவு முழுவதும் பள்ளியில் இருந்து தொழுது பின் டீ, உணவுகள் நமக்கு கொடுக்கப்படும். இந்த இரவை மட்டும் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் செய்தார்கள் என்று தெரியவில்லை. நாமும் அறியாமல் செய்து வந்தோம்.
மேலும் தஸ்பீஹ் நபில் தொழுகையும் தொழுது வந்தோம். இந்த தொழுகையும் நபி(ஸல்) அவர்களால் காட்டித்தரப்படவில்லை. இருபத்தி ஏழாம் இரவில் மட்டும் அமல்கள் செய்து விட்டு மற்ற இரவுகளில் எதுவும் அமல்கள் செய்யாமல் இருக்கிறார்கள்.
நம் இறைத்தூதர் நபி(ஸல்) அவர்கள் இந்த இரவை பற்றி என்ன சொல்லி இருக்கிறார்கள் என்பதை கீழ்க்கண்ட ஹதீஸ்கள் தெளிவாக விளக்கம் தருகிறது.
'நபி(ஸல்) அவர்கள் லைலத்துல் கத்ரு பற்றி (அது எந்த இரவு என்று) அறிவிப்பதற்காகத் (தம் வீட்டிலிருந்து) வெளியே வந்தார்கள். அப்போது இரண்டு முஸ்லிம்கள் சச்சரவு செய்து கொண்டிருந்தார்கள். (இதைக் கண்ணுற்ற நபி(ஸல்) அவர்கள்) 'லைலத்துல் கத்ர் பற்றி உங்களுக்கு அறிவிப்பதற்காக நான் (வீட்டைவிட்டு) வெளியேறினேன். அப்போது இன்னின்ன மனிதர்கள் தமக்குள் சச்சரவு செய்து கொண்டிருந்தனர். உடனே அது (என் நினைவிலிருந்து) அகற்றப்பட்டுவிட்டது. அதுவும் உங்களுக்கு ஒரு நன்மையாக இருக்கலாம். (ரமலான் மாதத்தின் இருபத்து) ஏழு (இருபத்து) ஒன்பது (இருபத்து) ஐந்து ஆகிய இரவுகளில் அதனைப் பெற முயலுங்கள்' என்று கூறினார்கள்' (அறிவிப்பவர்: உபாதா இப்னு ஸாமித்(ரலி), புகாரி: 49)
'ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்!' என 'நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) புகாரி: 2017 )
இந்த (லைலத்துல் கத்ர்) இரவு எனக்குக் காட்டப்பட்டது; பின்னர் அது எனக்கு மறக்கடிக்கப்பட்டுவிட்டது; எனவே கடைசிப்பத்து நாள்களில் அதைத் தேடுங்கள்! (அந்த நாள்களிலுள்ள) ஒவ்வொரு ஒற்றைப்படை இரவிலும் அதைத் தேடுங்கள்! (அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) புகாரி: 2018 )
பாவங்கள் மன்னிக்கப்படும் இரவு:
'நம்பிக்கை கொண்டவராகவும் நன்மையை எதிர்பார்த்தவராகவும் லைலத்துல் கத்ர் எனும் புனித இரவில் நின்று வணங்குகிறவரின் முந்தைய குற்றங்கள் மன்னிக்கப்படும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி) புகாரி: 35 )
'லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறவரின் முன் பாவம் மன்னிக்கப்படுகிறது. ரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.' (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி) புகாரி: 1901 )
ரமளானின் கடைசி பத்தில் வணக்கம்:
நபி(ஸல்) அவர்கள் ரமளானின் கடைசிப்பத்து நாட்களில் அதிகமாக வணக்கத்தில் ஈடுவடுவார்கள். ஏனைய மாதங்களில் இந்த அளவு ஈடுபடுவதில்லை. (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), முஸ்லிம்)
மேலும் அறிவிக்கிறார்கள்:-
நபி(ஸல்) அவர்கள் ரமளானின் கடைசிப்பத்து நாட்கள் வந்துவிட்டால் தமது கச்சையைக் கட்டிக்கொண்டு அவற்றின் இரவுகளில் விழித்திருந்து வணக்கம் புரிவார்கள். தமது குடும்பத்தினரையும் விழித்தெழச் செய்வார்கள். (புகாரி முஸ்லிம்)
லைலத்துல் கத்ர் இரவில் ஓதும் துஆ:
அல்லாஹ்வின் தூதரே! லைலத்துல்கத்ரின் இரவை நான் அடைந்தால் அதில் என்ன ஓதவேண்டும் என்று கேட்டேன். அதற்கு பின்வரும் துஆவை ஓதுமாறு நபியவர்கள் கூறினார்கள்.
اَللَّهُمَّ إِنَّكَ عَفْوٌ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّيْ
அல்லாஹும்ம இன்னக்க அஃப்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஉஃபு அன்னீ.
பொருள்: இறைவா! நிச்சயமாக நீ மன்னிக்கக்கூடியவன். மன்னிப்பை விரும்புவனாக இருக்கின்றாய்.எனவே என்னை மன்னிப்பாயாக. (அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) ஆதாரம்: திர்மிதீ)
சகோதர சகோதரிகளே ஆயிரம் மாதங்களை விட சிறந்த ஒரு இரவு, நமது பாவங்கள் மன்னிக்கப்படும் இரவு நெருங்கி வருகிறது. அதனால் இந்த இரவை தவறவிட்டு விடாமல் (நபி(ஸல்) அவர்கள் காட்டித்தராத அமல்களை செய்யாமல்) ஒற்றைப்படையான இரவுகளில் நம்பிக்கையுடன் அமல்களை அதிகமதிகம் செய்து பாவ மன்னிப்பு கோரி வல்ல அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடையும் நன்மக்களாக நாம் அனைவரும் மாறுவதற்கு முயற்சிகள் செய்வோம் -இன்ஷாஅல்லாஹ்!.
இன்ஷாஅல்லாஹ் வளரும்.. .
- S.அலாவுதீன்
நோன்பாளிகள் 1நோன்பாளிகள் 2
நோன்பாளிகள் 3
நோன்பாளிகள் 4
நோன்பாளிகள் 5
நோன்பாளிகள் 6
15 Responses So Far:
இன்ஷா அல்லாஹ் !
பனுள்ள ஆதாரங்களுடன் தெளிவான பதிவு !
அலாவுதீன் காக்கா அவர்களின் எழுத்து சூழலுக்கு ஏற்ப மாக்கம் சொல்லித் தருவதில் முதன்மையே !
ஜஷாக்கல்லாஹ் ஹைர்.
பருவத்திற்கேற்ப பலனுள்ள பதிவு.
அவ்விரவை அமல்களின் மூலம் அனைவரும் அடைவோமாக!
அஸ்ஸலாமு அலைக்கும்.
அலாவுதீன் காக்கா ஹதீஸ் ஆதாரங்களுடன் லைலத்துல் கதரை பற்றி எழுதிய விதம் அருமை .பயனுள்ள பதிவு அல்லாஹ் நம் மீது கொண்டுள்ள கருணையின் வெளிபாடுதான்.ரமலானில் கடைசி பத்து என்கிற அருமையான பருவக்காலத்தை நமக்கு வழங்கியுள்ளான்.அதை சரியான முறையில் பயன்படுத்தி.அமல்கள் என்ற ஆயுதத்தால் மகசூல் என்ற நன்மைகளை கவனமாக அறுவடை செய்வோமாக.
அலாவுதீன் காக்காவின் லைலத்துல் கதிர் பற்றி எடுத்து கூறிய ஹதீஸ்கள் மிக தெளிவாக இருந்தன மேலும் சரியான நேரத்தில் பதியப்பட்டதும் பாராட்டுக்குரியது
அலாவுதீன்,
ஆயிரம் பதிவுகளைவிடச் சிறந்தது "லைலுத்துல் கதிர்" பற்றிய உன் இந்த பதிவு.
அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா!
to read a dha'vaa poem pls visit
http://www.satyamargam.com/1756
கவிக் காக்கா :
அசத்திட்டீங்க !
வரிகள் எங்கேயிருந்துதான் வரிஞ்சு கட்டிகிட்டு வந்து நிற்கிறதோ அல்லாஹ் அக்பர் !
கருத்தினை(யம்) அங்கே இட்டேன் !
பகிர்வுக்கு நன்றி..!
மின்னஞ்சல் வழி கருத்து
------------------------------------------
இந்த புனித மாதத்தில் தொடர்ந்து கேட்டு வரும் பயான்களில் அடிக்கடி எடுத்துச் சொல்லப்படும் இந்த துஆ வை பட்டென்று ஞாபகத்தில் கொண்டுவர முடியாமல் தவித்திருந்த நேரத்தில் இந்தப் பதிவில் தெளிவாக அரபியிலும் அதனை தமிழில் பதிந்து நல்லது செய்துள்ளீர்கள்.
==========
லைலத்துல் கத்ர் இரவில் ஓதும் துஆ:
அல்லாஹ்வின் தூதரே! லைலத்துல்கத்ரின் இரவை நான் அடைந்தால் அதில் என்ன ஓதவேண்டும் என்று கேட்டேன். அதற்கு பின்வரும் துஆவை ஓதுமாறு நபியவர்கள் கூறினார்கள்.
اَللَّهُمَّ إِنَّكَ عَفْوٌ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّيْ
அல்லாஹும்ம இன்னக்க அஃப்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஉஃபு அன்னீ.
பொருள்: இறைவா! நிச்சயமாக நீ மன்னிக்கக்கூடியவன். மன்னிப்பை விரும்புவனாக இருக்கின்றாய்.எனவே என்னை மன்னிப்பாயாக. (அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) ஆதாரம்: திர்மிதீ)
===============
நோன்பாளிகள் தொடர் ஐந்தும் ஒவ்வொரு விடயங்களை விவாதித்து தெளிவு சொல்லி இருக்கிறது,
இந்த பனுள்ள தொடரை எழுதும் சகோதரர் அவர்களுக்கும் நன்றி, இதுபோல் இன்னும் எழுத வேண்டும் இன்ஷா அல்லாஹ்.
உம்முஹாசிம்
சென்னை
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,
அன்புச் சகோதரர் S.அலாவுதீன் அவர்களுக்கு,
மிகவும் அவசியமான பயனுள்ள ஆதாரங்களுடன் எடுத்துரைத்திருக்கிறீர்கள்.
எல்லாம் வல்ல அல்லாஹ் இப்புனித மாதத்தின் சிறப்பைக் கொண்டு நம் அனைவரின் அனைத்து நற்காரியங்களையும் பொருந்திக் கொள்வானாக.
மீதமிருக்கும் ரமளானுக்குள் குறைந்தது இரண்டு பதிவுகளாவது எழுதுங்கள்.
இறுதியில் பெருநாள் அன்று நம் செயல்களும் அமல்களும் எப்படி இருக்க வேண்டும் என்று விளக்கமாக எழுதினால் நன்றியுடையளாக இருப்பேன்.
ஜஸாக்கல்லாஹ் ஹைர்.
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
கருத்திட்ட சகோதரர்கள் அனைவருக்கும் (கணிணி தகராறால்) தாமதமான நன்றி!
அன்புச் சகோதரி Ameena A. அவர்களுக்கு வஅலைக்கும் ஸலாம்(வரஹ்)
//// மீதமிருக்கும் ரமளானுக்குள் குறைந்தது இரண்டு பதிவுகளாவது எழுதுங்கள்.////
தாங்கள் மார்க்கத்தை அறிந்து கொள்வதில் மிக ஆர்வமாக இருக்கிறீர்கள். மாஷாஅல்லாஹ்! வல்ல அல்லாஹ் தங்களுக்கு மார்க்கத்தில் நல்ல அறிவை தந்து தூய்மையான மார்க்கத்தை தாங்கள் அறிந்து அதன்படி நடப்பதற்கு நல்லருள் புரியட்டும்!
கணிணி பழுதாக இருப்பதாலும், நேரமின்மையாலும் தொடர்ந்து உடன் எழுத முடியவில்லை. ரமளானுக்குள் இரண்டு பதிவுகளை பதிய வைக்க முயற்சி செய்கிறேன். இன்ஷாஅல்லாஹ்!
ஜஸாக்கல்லாஹ் ஹைர்!
// (கணிணி தகராறால்) தாமதமான நன்றி!///
அலைக்குமுஸ்ஸலாம் காக்கா, தகறாறு கட்டுப் பாட்டுக்குள் வந்திடுச்சா... இல்லைன்னை ஏதும் தகராறை சமாளிக்க ஏதும் உதவி தேவையென்றால் தம்பி(கள்) ரெடி !
அன்புச் சகோதரர் அபுஇபுறாகீம்: அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)கணிணி பல மாதங்களாக தகரார் பண்ணியது. இந்த வாரத்தில் கணிணி மருத்துவர் பார்மெட் செய்தார். மீண்டும் வேலை செய்யவில்லை, பிறகு சரிசெய்து விட்டு, ஹார்ட் டிஸ்க் மாற்ற வேண்டும் என்றார். தற்பொழுது டைப் செய்ய முடிகிறது. ஆனால் பெரிய சிரமம், பயங்கர சத்தத்துடன் கணிணி (ஜெனரேட்டர் போல்)இயங்குகிறது. சத்தம்தான் சிரமமாக இருக்கிறது.
தாங்கள் கேட்டதற்கு நன்றி! இன்ஷாஅல்லாஹ்! பெருநாளைக்கு பிறகு என்ன செய்யலாம் என்று பார்ப்போம்.
சகோதரி கோரிக்கை வைத்துள்ளதால் நோன்பாளிகள் தொடர்: 28 நோன்புக்கு முன்பாக இரண்டு தொடர் அனுப்பி விடுகிறேன் இன்ஷாஅல்லாஹ்!
// ஆனால் பெரிய சிரமம், பயங்கர சத்தத்துடன் கணிணி (ஜெனரேட்டர் போல்)இயங்குகிறது. சத்தம்தான் சிரமமாக இருக்கிறது.//
எதுக்கும் ஒரு ரெண்டு அடி தள்ளி உக்காரு. ஜெனெரேட்டர் என்பதால் ஏதும் மின்சாரம் உருவாக்கும் சாத்தியம் உண்டா என்று உற்று நோக்கு. ஷாக் அடிக்கப் போகுது ஒரு தோல் உறை தச்சிப்போட்டு, நல்ல சூராவைக்கொண்டு ஒரு தடவை ஓதிப்பார்த்திடு.
இது எதுக்கும் சரி வரலேன்னா என்னய மாதிரி ஒரு புது லாப்டாப் வாங்கிடு.
Post a Comment