அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) இறைவனின் சாந்தியும் சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!). இந்த தொடரில் நோன்பு பெருநாள் தர்மம் - ஸதக்கத்துல் ஃபித்ர் கொடுப்பதின் அவசியத்தைப் பற்றி பார்ப்போம்.
பித்ரு ஸகாத்:
பித்ரு ஸகாத் என்பது நோன்பு வைத்திருக்கும்போது நோன்பாளி வீணான காரியங்களில் ஈடுபட்டதற்குப் பரிகாரமாகவும், ஏழைகளின் (அன்றைய) உணவுக்கு வழியாக இருப்பதற்காகவும் நபி(ஸல்) அவர்கள் விதியாக்கினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி), அபூதாவூத்).
பித்ராவின் நோக்கம்:
ரமலானை தொடர்ந்து வரும் நோன்பு பெருநாளில் ஏழைகள் பயன் அடைந்து மகிழ்ச்சியுடன் அவர்களும் பெருநாளை கொண்டாடவும், நோன்பாளிக்கு தருமமாகவும் வலியுறுத்தப்பட்டுள்ளதை ஹதீஸ் மூலம் விளங்க முடிகிறது.
நபி(ஸல்) அவர்கள் பெருநாள் தர்மத்தைக் கடமையாக்கி ‘‘இன்றைய தினம் ஏழைகளைத் தேவையற்றவர்கள்’’ ஆக்குங்கள் என்றும் கூறினார்கள்.(அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) பைஹகீ, தாரகுத்னீ)
ஃபித்ரா யார்? கொடுக்க வேண்டும்:
நோன்பு நோற்றவர்கள், நோற்காதவர்கள், வசதியானவர்கள், வசதியற்றவர்கள் என்ற வித்தியாசம் இல்லாமல் குடும்ப உறுப்பினர் அனைவருக்கும் கட்டாயம் கொடுக்கப்பட வேண்டும். ஒருவர் தன் குடும்பத்தின் பெருநாள் தினத்தின் செலவு போக கொடுக்கும் சக்தி உள்ள அனைத்து முஸ்லிம்கள் மீதும் இந்தப்பெருநாள் தருமம் கட்டாய கடமையாக இருக்கிறது.
ஃபித்ரா பெருநாள் தர்மத்தின் அளவு எவ்வளவு:
முஸ்லிமான ஆண்கள் பெண்கள், பெரியவர், சிறியவர், அடிமை, சுதந்திரமானவர் ஆகிய அனைவருக்கும் பேரீத்தம்பழம் அல்லது கோதுமை ஆகியவற்றிலிருந்து பெருநாள் தர்மம் தலா ஒரு 'ஸாவு' என்று நபி(ஸல்) அவர்கள் நிர்ணயம் செய்தனர். (அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) புகாரி).
நாங்கள் நோன்புப் பெருநாள் தர்மமாக ஒரு ஸாவு அளவு ஏதேனும் உணவையோ ஒரு ஸாவு அளவு தீட்டாத கோதுமையையோ அல்லது ஒரு ஸாவு அளவு பேரீச்சம் பழத்தையோ அல்லது ஒரு ஸாவு அளவு பாலாடைக் கட்டியையோ அல்லது ஒரு ஸாவு அளவு உலர்ந்த திரட்சையையோ கொடுப்போம். (அறிவிப்பவர்: அபூ ஸயீதில் குத்ரீ(ரலி) புகாரி:1506).
நபி(ஸல்) அவர்களின் காலத்தில் பெருநாள் அன்று ஒரு ஸாவு உணவை தர்மமாகக் கொடுத்து வந்தோம். அக்காலத்தில் தீட்டாத கோதுமையையும் உலர்ந்த திராட்சையும் பாலாடைக் கட்டியும் பேரீச்சம் பழமும்தான் எங்களின் உணவாக இருந்தன. (அறிவிப்பவர்: அபூ ஸயீதில் குத்ரீ(ரலி) புகாரி:1510).
ஃபித்ரா பெருநாள் தருமம் எப்பொழுது கொடுக்க வேண்டும்:
பித்ரு ஸகாத்தை பெருநாள் தொழுகைக்கு மக்கள் புறப்படுமுன்பே வழங்கிவிட வேண்டுமென நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி), புகாரி).
நபித்தோழர்கள் பெருநாளைக்கு ஒருநாள் முன்பாக அல்லது இரண்டு நாட்களுக்கு முன்பாக இத்தர்மத்தை வழங்குபவர்களாக இருந்தனர். (அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி), புகாரி).
நமது உணவு அரிசியாக இருப்பதால் அரிசியைத்தான் தர்மமாக வழங்கி வருகிறோம். ஊரில் ‘‘ஒரு ஸாவு அரிசிக்கு’’ எவ்வளவு பணம் வருகிறது என்று நிர்ணயம் செய்து அதன்படி கூட்டாக வசூலித்து ஏழைகளுக்கு வழங்கி வருகிறார்கள்.
அரிசியை மட்டும் கொடுத்தால் ஏழைக்கு அரிசி மட்டும்தான் சேரும். குழம்பு மற்ற உணவுகள் தேவைப்படும். அதனால் பணமாக வசூலித்து பெருநாள் அன்று செய்யப்படும் உணவுகளுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வசூல் செய்பவர்கள் கொடுத்து வருவதை பார்த்து வருகிறோம்.
வளைகுடா நாடு: யு.ஏ.இல் ஒரு நபருக்கு ஃபித்ராபணம் 20 திர்ஹம் என்று நிர்ணயம் செய்திருக்கிறார்கள்.
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! தாமதப்படுத்தாமல் பெருநாளைக்கு முன்பாக இந்த ஃபித்ராவை (பெருநாள் தர்மத்தை) கொடுத்து நன்மையை பெற்றுக்கொள்ளுங்கள்.
இன்ஷாஅல்லாஹ் வளரும்.. .
-- S. அலாவுதீன்|| நோன்பாளிகள் 1 || நோன்பாளிகள் 2 || நோன்பாளிகள் 3 || நோன்பாளிகள் 4 || நோன்பாளிகள் 5 || நோன்பாளிகள் 6 ||
11 Responses So Far:
அஸ்ஸலாமு அலைக்கும். மிக தெளிவான விளக்கம். அல்ஹம்துலில்லாஹ்.
தக்க தருனத்தில் தகுந்த நன்மை தரும் விளக்கங்கள்
ஜஸாக்கல்லாஹ் ஹைர்.
அஸ்ஸலாமு அலைக்கும்.இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். நண்பனின் ஆகிரத்துடைய வாழ்வை அல்லாஹ் சிறப்பாக்கிவைப்பானாக ஆமீன். அன்னாரின் குடும்பத்தினருக்கு அல்லாஹ் பொருமையையும்,சமாதானத்தையும் அருள்வானாக ஆமீன்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,
சகோதரரே, தெளிவான ரத்தினச் சுருக்கமான நினைவூட்டல் உங்களின் கட்டுரையில்.
ஜஸாக்கல்லாஹ் ஹைர்.
எல்லாம வல்ல அல்லாஹ் நம் அமல்கள் அனைத்தையும் அங்கீகரிப்பானாக!
அஸ்ஸலாமு அலைக்கும்.
நோன்பாளிகள் 6 .வது ஆக்கத்தில் அடி எடுத்து வைத்து அழகு நடை போடும் அலாவுதீன் காக்கா.லைலத்துல் கத்ரு,ஈத் பெருனாளுடைய சிறப்புக்களையும் பதிந்து வீர நடை போட அல்லாஹ்விடம் உங்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து நன்மைகளை வழங்க.துஆ செய்தவனாக.
அஸ்ஸலாமு அலைக்கும்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். நிச்சியமாக நாமும் அவர்களுக்கு பின் செல்லக் கூடியவர்களாக இருக்கின்றோம்.அல்லாஹ் அந்த சகோதரின் அனைத்து பாவங்களையும் மன்னித்து.கபுருடைய கேள்வி கணக்குகளை இலகுவாக்கி அங்குள்ள வாழ்க்கையை வெளிச்சமாகி வைப்பானாக ஆமீன் .
ஜஸாக்கல்லாஹ் ஹைர்.
அழகுற பகிர்ந்திடப்பட்ட ஆக்கம் - ஜஸாக்கல்லாஹ் !
கரு !
நோக்கம் !
யாரெல்லாம் !
எவ்வளாவு !
எப்படி !
படிக்கட்டுகளைப் போல் அடுக்கி வைத்து சொல்லிய விதம் அருமை !
அஸ்ஸலாமு அலைக்கும்,
அலாவுதீன் காக்கா,
விரிவாக சொல்லப்பட வேண்டிய பித்ரா தொடர்பான தகவல்களை மிகச்சுருக்கமாக எல்லோருக்கும் மிக எளிதில் புரியும்படி பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.
அல்லாஹ் தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் நல்லருள் புரிவானாக.
நோன்பாளிகள் பகுதி-7 நோன்பு முடிவடைவதற்குள் வெளிவருமா காக்கா?
அலாவுதீன்,
கணினி
சப்தம் குறைத்ததா
அல்லதுன்
காதுகளைப்
பஞ்சு நிறைத்ததா?
எப்படியோ
எங்களுக்குக் கிடைத்ததே
வழிகாட்டுதல்கள்
நன்றி
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
கருத்திட்ட அனைத்து சகோதரர்களுக்கும் நன்றி!
சகோதரிக்கும் நன்றி!
ஜஸாக்கல்லாஹ் ஹைர்!
Post a Comment