அதிரையில் கல்வி - ஆவணப்படம்: PART 1
அல்லாஹ்வின் திருப்பெயரால்.....
அஸ்ஸலாமு அலைக்கும்,
அன்பான அதிரைநிருபர் வாசக நேசங்களே !
(யாவற்றையும்)படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக. ´அலக்´ என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான். ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி. அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான். மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான். (அல்குர்ஆன் 96:1 முதல் 96:6 வரை).
யாரேனும் ஒருவர் கல்வியைத் தேடிச் சென்றால் அதன் மூலம் அல்லாஹ் அவருக்கு சொர்க்கப் பாதையை எளிதாக்கி விடுகின்றான்.
(நபிமொழி, அறிவிப்பவர்: அபூஹுரைரா -ரலி, நூல் : முஸ்லிம்)
(நபிமொழி, அறிவிப்பவர்: அபூஹுரைரா -ரலி, நூல் : முஸ்லிம்)
"கல்வி கற்பது ஒவ்வொரு முஸ்லிமினதும் கட்டாயக் கடமையாகும்." என நபி (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள். (பைஹகி'') .
அறிந்தோரும், அறியாதோரும் சமமாவார்களா? நல்லுபதேசம் பெறுவோரெல்லாம் அறிவுடையோரே (அல்குர்ஆன் 39:9)
இஸ்லாம் கல்விக்கும் அறிவுக்கும் அதிமுக்கியத்துவத்தை எடுத்து வைக்கிறது அதோடு அதனை செயல்படுத்தவும் சொல்கிறது. அல்லாஹ் இறக்கிய முதல் அல்குர்ஆன் வசனமே அத்தாட்சி. கல்வியைத் தேடிப் பெறுவதையும் கற்றுக் கொடுப்பதையும் இஸ்லாம் அதிகம் வலியுறுத்துகிறது. கல்விக்கும் இஸ்லாம் தந்திருக்கிற மகத்துவங்களை நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்.
சரி முக்கிய விசயத்துக்கு வருகிறோம்.
நேற்று 01-08-2011 அதிரை வலைப்பூக்களின் இணைய வரலாற்றில் ஓர் மைல்கல்லாக சப்தமின்றி சாந்தம் காட்டி மிகச் சிறப்பான எழுச்சியை ஆவணப்படம் ஒன்றினை கண்டோம். அதனை அதிரைப்பட்டினத்தின் கல்வியின் தரம் அதன் போக்கு இன்றைய நிலை இவ்வாறாக முக்கிய விடையங்களை கையில் எடுத்துக் கொண்டு நம் சகோதர வலைத்தளம் அதிரை பிபிசி யில் அதன் மிகச் சிறந்த தொழில்நுட்ப இளைய படையின் அற்புத முயற்சி வெளிப்பட்டது.
அதுவே ! அதிரையில் கல்வி ஓர் ஆய்வு ஆவணப்படம் பகுதி 1. நமதூர் கல்வி தொடர்பாக இதுபோன்று இதுநாள் வரை யாரும் இப்படியான முயற்சிகளை சிரத்தை எடுத்து மிகச் சிறப்பான காணொளியை செய்துகாட்டவில்லை என்றே நாம் கருதுகிறோம். இது ஒரு புதிய முயற்சி மட்டுமல்ல இளைய சமுதாயத்தின் எழுச்சி. அதிரைபட்டினத்தில் கல்வியில் எழுச்சி ஏற்படுத்த எடுக்கப்பட்ட வெற்றியின் படிக்கட்டுகள் இனிவரும் சமுதயம் தொடர்ந்து படிகட்டும் என்று. இம்முயற்சியை எல்லோரும் உளமார பாராட்டியே ஆகவேண்டும். மேலும் இதன் தொடராக அடுத்தடுத்த ஆவணப்படத்தினை (காணொளி) விரைவில் வெளியிட உள்ளார்கள். முழு ஆவணப்படம் வெளியானதும் குறுந்தகடுகளிலும் அதனை வெளியிடவும் முயற்சித்து வருகிறார்கள்.
அதுவே ! அதிரையில் கல்வி ஓர் ஆய்வு ஆவணப்படம் பகுதி 1. நமதூர் கல்வி தொடர்பாக இதுபோன்று இதுநாள் வரை யாரும் இப்படியான முயற்சிகளை சிரத்தை எடுத்து மிகச் சிறப்பான காணொளியை செய்துகாட்டவில்லை என்றே நாம் கருதுகிறோம். இது ஒரு புதிய முயற்சி மட்டுமல்ல இளைய சமுதாயத்தின் எழுச்சி. அதிரைபட்டினத்தில் கல்வியில் எழுச்சி ஏற்படுத்த எடுக்கப்பட்ட வெற்றியின் படிக்கட்டுகள் இனிவரும் சமுதயம் தொடர்ந்து படிகட்டும் என்று. இம்முயற்சியை எல்லோரும் உளமார பாராட்டியே ஆகவேண்டும். மேலும் இதன் தொடராக அடுத்தடுத்த ஆவணப்படத்தினை (காணொளி) விரைவில் வெளியிட உள்ளார்கள். முழு ஆவணப்படம் வெளியானதும் குறுந்தகடுகளிலும் அதனை வெளியிடவும் முயற்சித்து வருகிறார்கள்.
அதிரையில் கல்வி ஓர் ஆய்வு ஆவணப்படத்தில் நமதூரில் உள்ள கல்வியாளர்கள், பொதுமக்கள், மாணவர்களின் கருத்துக்களும் வெளிவர உள்ளது. இதோ உங்கள் பார்வைக்காக கல்வி ஓர் அய்வு ஆவணப்படம் பகுதி 1, இதில் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியை ரோசம்மா அவர்கள் முக்கிய கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார்கள் இதில் பெற்றோர்களுக்கு சொல்லும் செய்தியைக் கேளுங்கள்.
நிறையிருப்பின் புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே. இது அதிரை இளம் ஊடக எழுச்சியாளர்களின் கன்னி முயற்சி. குறை ஏதும் இருப்பின் சுட்டிடுங்கள், இதேபோல் வெளியாக இருக்கும் அடுத்தடுத்த ஆவணப் படங்களில் சரிசெய்து செவ்வனே பணியாற்றிட உதவிடும் இன்ஷா அல்லாஹ் !
இதை நீங்கள் பார்ப்பதோடு மட்டுமல்லாமல், வீட்டில் உள்ள மாணவ மணிகளின் தாய்மார்களும் அவசியம் காணும்படியும் செயலால் உதவிடுங்கள். நேரம் ஒதுக்கி தேவையற்ற தொடர் சீரியல்கள் பார்ப்பதற்கு மாறாக, நம் வருங்கால சந்ததியினர் பற்றிய கவலையில் எடுக்கப்பட்டிருக்கும் இது போன்ற காணொளிகளை காண்பது எவ்வளவோ பயனுல்லதாக இருக்கும்.
கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் அதிரைநிருபர் வலைத்தளம் இந்த ஆவணப்படத்தை வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். மற்ற பகுதிகளும் நம் அதிரைநிருபரில் பின் தொடர்ந்து வரும் இன்ஷா அல்லாஹ்.
மனமார்ந்த வாழ்த்துக்கள் அதிரை பிபிசி சகோதரர்களுக்கு ! கல்வி சம்பந்தப்பட்ட ஆவணப்படத்தை நம் அதிரைநிருபர் வலைத்தளத்திலும் பகிர்ந்து கொள்ள முன்வந்தமைக்கும் நன்றி.
மேலும் இது போன்ற கல்வி தொடர்பான காணொளிகள் காண அதிரை காணொளி http://adiraivideos.blogspot.com/ என்ற வலைத்தளத்திற்கு சென்று பார்க்கலாம்.
தொடர்ந்து இணைந்திருங்கள்...
n அதிரைநிருபர் குழு.
12 Responses So Far:
அருமையான பதிவு.
தலைமை ஆசிரியை அவர்களின் ஆலோசனைகளை பெற்றோர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
நன்றி அதிரை நிருபர் / நன்றி அதிரை பி பி சி
மாஷாஅல்லாஹ்!
நல்லதொரு முயற்சி!
அழகிய தெளிவான காணொளி!
அவசியமான அழகிய பணி!
நம் சமுதாய கண்மனிகளின்!
நலத்தை கவனத்தில் கொண்டு
சிறப்பான முயற்சி எடுத்த
அதிரை பிபிசி குழுவினர்
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
வல்ல அல்லாஹ் தங்களுக்கு
நல்லருள் புரியட்டும்!
பதிந்த அதிரை நிருபருக்கும் நன்றி!
கல்வி!கல்வி!கல்வி!
இதை வைத்துதான் பிறர்
நம்மை ஆட்டிபடைக்கிறார்கள்
பண்பாடுடன் , மார்க்கத்துடன்
கூடிய கல்வி நம்
சமுதாய மாணவ, மாணவிகளுக்கு
கிடைக்க வேண்டும்
சகோதரர்களே! தங்களின்
அதிரையில் கல்வி ஓர் ஆய்வு!
பணி தொடரட்டும்!
ஜஸாக்கல்லாஹ் ஹைர்!
WELL DONE ! Excellent work !
மாஷா அல்லாஹ் !
தொடரட்டும்... Director : Abu Umar (you have done it), Writing : Abu Zaid (கலக்கல்), Voice : Mohammed SIS(Supper Intergrated Sounds)... Camera : Samsudeen (Weldone)
வாழ்த்துக்கள்...
அல்ஹம்துலில்லாஹ் !
அருமையான பதிவு.
தலைமை ஆசிரியை அவர்களின் ஆலோசனைகளை பெற்றோர்கள் பின்பற்ற வேண்டும்.
நன்றி: அதிரை நிருபர் / நன்றி அதிரை பி பி சி
நல்ல செயலை கையாண்டு இருக்கிறீர்கள், really proud of you young guys !
இது யார் - நம்ம ரோஸம்மா டீச்சாரா ? எத்தனை வருடங்களாகிவிட்டது அவர்களை பார்த்து, அப்போது கண்ட இளமையான அவர்களின் சிரித்த முகமே இன்றும் என் நினைவில் இருக்கிறது.
மிகவும் பயனுள்ள அவசியமான கருத்தை சொல்லி இருக்கிறார்கள்.
மன்னிக்கவும் - தேவைக்கு அதிகமாக மாணவர்களின் கைகளில் செலவுக்கு காசு கொடுப்பதை தவிர்க்க வேண்டும், படிக்கும் காலங்களில் அவர்களை வெளியில் தன்னிச்சையாக பொருள்கள் வாங்கும் அல்லது சாப்பிடும் உரிமையை கொடுக்கக் கூடாது அதனை வீட்டில் உள்ள பெரியவர்கள்தான் வைத்திருக்க வேண்டும். இது அதிராம்பட்டினத்தில் நான் நேசிக்கும் சமுதாயத்தில் இன்னும் நடந்துகொண்டிருக்கும் கசப்பான உண்மையாகும்.
இவ்வாறு சுட்டிக் காட்டியமைக்கு மன்னிக்கவும், வேறு வழி எனக்கு தெரியவில்லை என்னுடைய கருத்தாக சொல்வதற்கு இந்த அதிரைநிருபர் எனக்கு ஒரு வடிகால்.
ஆஷா
முதலில் அதிரையின் கல்வித்திறனை உயர்த்தும் வகையில் பாடுபட்டுக்கொண்டிருக்கும் அனைத்து சகோதரர்களுக்கும் என் வாழ்த்துக்கள், தெளிவான பகிர்வு தெளிவான கருத்து, நிச்சயம் முழுமுதற்கொண்டு பெற்றோரே காரணம் தன் மக்களின் கல்விவளர்ச்சியில். முழு கவனம் செலுத்தினால் நலன்.
பகிர்வுக்கு நன்றி
நல்ல பயனுள்ள கணொளி அதிரை பி.பி.சி நண்பர்களே....great job !!! ரோஷம்மா டீச்சரின் அறிவுரைகளை ரோஷத்துடன் எடுத்து செயல்படுத்துவது பெற்றோர்களின் கடமை....கல்யாணத்தைவிட பிள்ளைகளின் கல்விக்கு முக்கியத்துவம் பெற்றோர்கள் கொடுக்க வேண்டும்
அஸ்ஸலாமு அலைக்கும்,
மாஷா அல்லாஹ்,
உண்மையில் சமூக அக்கறையுடன் எடுக்கப்பட்ட மிக அற்புதமான ஆவணப்படம்.
இதற்காக மிகுந்த சிரமத்துடன் வேலை செய்துவரும் அனைத்து சகோதரர்களுக்கும் மிக்க நன்றி.
இது போன்ற காணொளிகள் நிச்சயம் நம் மாணவர்களின் பெற்றோர்களிடம் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்துமில்லை.
இந்த அற்புதமான கல்வி ஆய்வை தொடருங்கள்..
http://deviyar-illam.blogspot.com/2011/08/blog-post.html
எந்திரன் உருவாக்கும் கல்வி...
பகிர்வுக்காக மட்டும்...
அஸ்ஸலாமுஅலைக்கும். நல்ல தொரு சிறப்பான முயற்சி. தலைமை ஆசிரியர் ரோஸம்மா அவர்களின் ஆலோசனை மிக மிக அருமை. கண்டிப்பாக பின்பற்றவேண்டிய கடமை.மேலும் தோழி ஆஸா அவர்கள் குறிப்பிட்டுள்ளது போல் அந்த் கசப்பான உண்மையும் கவனிக்கபட வேண்டியது அவசியம். ஆஸா அவர்களின் சமூக அக்கறையுடன் கூடிய , மத நல்லெண்னம் கொண்ட கருத்திற்கு நன்றி!.
அஸ்ஸலாமு அழைக்கும்
முதலில் அதிரை நிருபர் நிர்வாகிகள் மற்றும் கருத்திட்ட அனைத்து சகோதரர்களுக்கும் நன்றி . கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு முன் அதிரையை பற்றி M.S.T தாஜுதீன் காக்கா அவர்களால் படிப்புதான் பாஸ்போர்ட் என்ற ஆவணப்படம் தயாரித்து வெளியிடப்பட்டது அதற்கு பிறகு எந்த ஒரு ஆவணப்படமும் வெளிவந்ததாக தெரியவில்லை. ஊரில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் எனக்கு நல்ல தொடர்பு இருந்ததால்
அவர்களிடத்தில் கல்வி பற்றி ஒரு சிறு பேட்டி எடுத்து போடவேண்டும் என்ற நோக்கத்தில்தான் அதிரை பிபிசி பங்களிப்பாளர்களிடம் கூறினேன் . அனால் பேட்டி எடுத்து முடித்தவுடன் அதை ஆவணப்படமாக மாற்றினால் நன்றாக இருக்கும் என்று அபுஉமர் மற்றும் அபுஜைத் ஆகியோர் ஆலோசனை வழங்கி அவர்களின் கடின முயற்சியால் கிட்டத்தட்ட 15 நாட்கள் சிரமப்பட்டு முதல் பகுதி வெளியிடப்பட்டது . இறைவனுக்கே எல்லா புகழும் . நமதூர் மக்களிடம் கல்வி பற்றி எடுக்கப்பட்ட இந்த ஆவணப்படத்திற்கு மாஷா அல்லாஹ் நல்ல வரவேற்பு .இன்ஷா அல்லாஹ் அடுத்த பகுதியை விரைவில் வெளியிடுகிறோம் .
வஸ்ஸலாம்
முகம்மது sis
//இன்ஷா அல்லாஹ் அடுத்த பகுதியை விரைவில் வெளியிடுகிறோம் .//
தம்பி முஹம்மத், நல்ல திறமையானவர்கள் (இயக்குவதிலும் / சிக்கலை சின்னா பின்னாமாக்குவதிலும் - trouble shoot) சுற்றியிருப்பதால் நிச்சயம் அடுத்தடுத்த பகுதிகள் இன்னும் மேல் தரம் பெற்று வெளிவரும் என்று ஆவலாய் இருக்கிறோம் இன்ஷா அல்லாஹ் !
Post a Comment