அதிரைநிருபரில் கவிதை என்று பதிவுக்குள் வந்திட்டால் அதன் எழிலாய் வழிமேல் விழி வைத்து காத்திருக்கும் கிரவுனுரை அங்கே நிச்சயம் தொடரும் அப்படியிருக்க இதென்ன இங்கே முகவுரை என்று ஆச்சர்யப்பட வேண்டாம்.
எழுதியவர் பிரசவித்தபின்
வாசிப்பவர் கருவுறும் விந்தை.*/
இது தான் கரு... அதிரைநிருபரின் ஆஸ்தான கவி அவர்கள் பிரசவித்த கவி வரிகளால் அதிரை என்.ஷஃபாத்தின் கவிதை கருவுற்ற விந்தை நிகழ்வு இதோ.....
உள்ளுக்குள் கருவொன்று.
ஈன்று புறந்தருதல்
எந்தலைக் கடனென்று.
(*) ஆரம்ப காலங்கள்..ஆச்சர்யங்கள்.
எனக்குள்ளா?
எனக்குள்ளுள்ளேயுமா?
எதற்காக?
எப்படி?
கேள்விகளின் வேள்விகளில்
தூக்கம் தொலைக்கும்
இருட்டுப் பகல்கள்
எத்தனை எத்தனை!!
(*) அழகாக இருக்குமா?
அர்த்தங்கள் கொடுக்குமா?
இப்படி இருப்பது
அப்படி ஆகினால்
எப்படி இருக்கும்?
செப்படி வித்தை
செய்து பார்க்கும் மனசு.
(*) வேகம் கூட்டும்
தேகக் காற்றும்-
திணறலுடன் கூடிய
தித்திப்பு ஏற்றும்.
(*) உள்ளே இருப்பதை
உலகுக்குச் சொல்லுதல்
இத்தனை கடினமா?
இத்தனை வடிவமா?
ஆழ்ந்த்த சிந்தனையில்
அமர்ந்து அமர்ந்து
குறுக்கு வலிக்கும்-உடல்
முறுக்கப் பிடிக்கும்.
(*) தட்டிக்கொடுக்கும்
சில நேரம்,
எட்டி உதைக்கும்
சில நேரம்,
எண்ண ஓட்டங்கள்.
(*) நிலைகொள்ளாக் கால்களை
நீட்டி மடக்கி
வலிகளை ஒன்றுதிரட்டி
வரும் வேளை...
(*) மொழிக்குடம் உடைந்து
அவசரம் அவசரமாய்
அறுவை சிகிச்சையில்தான்
பிறக்கின்றன என்
கவிக் குழந்தைகள்.
- அதிரை என் ஷஃபாத்.
15 Responses So Far:
//மொழிக்குடம் உடைந்து
அவசரம் அவசரமாய்
அறுவை சிகிச்சையில்தான்
பிறக்கின்றன என்
கவிக் குழந்தைகள்.//
எங்கிருந்தப்பா இந்த மொழிக்குடம் உமது கண்ணுக்கும் கைக்கும் சிந்தைக்கும் கிடைக்கிறது ?
மெய்யாலுமே... எங்களுக்கு கவிக் காக்கா, கிரவுன்(னாக)தம்பி, அதோடு கவித் தம்பி (என்.ஷஃபாத்)... ஆஹா !
சொடுக்கும் வினாடிகளில் கவிதையை பிரசவிக்கும் உமது திறன் வியக்கத்தக்கது... அந்த தருனங்களின் உம் பிரசவ வேதனையை துள்ளியமாக எடுத்துச் சொன்னவிதம் அற்புதம் !
கட்டுக்குள் கவிராஜ்யத்தில் கோலோச்சும் குறுநில மன்னர்கள் அதுவும் அதிரைநிருபரிலே !
சூப்பர் பிரசவம். அருமை சஃபாத்.
பிரசவம் வேதனை அல்ல,கவிக்காக்கா இருக்கும் வரும் சாதனை தான்.
கிரவ்னார் அதற்கு பக்குவமான அறுவை சிகிச்சையாளர்.
தம்பி MHJ :
//கிரவ்னார் அதற்கு பக்குவமான அறுவை சிகிச்சையாளர்//
இப்படியிருக்க வேண்டும் "கிரவ்ன்(னார்) அதற்கு பக்குவனமான அறு(சு)வை சிகிச்சையாளர்"
// "கிரவ்ன்(னார்) அதற்கு பக்குவனமான அறு(சு)வை சிகிச்சையாளர்"//
மிகச்சரி காக்கா! வாங்க சுவையாளரே!வருக!வருக!
அஸ்ஸலாமுஅலைக்கும்.
தம்பி என்னடா இப்படி? உன்னிடம் நேற்றுதானே சொன்னேன். காக்கா வேலைப்பளு கொஞ்சம்(கொஞ்சும் தமிழில்)காத்திருங்கள் என்றாய். என்னிடமும் ரகசியமா? இல்லை கருத்தரித்த வெக்கமா? இப்படி அடக்கமா,அமைதியா அழகாய் கவிக்குழந்தை தந்துவிட்டு கருத்தரிப்பதெல்லாம் கத்தரிப்பில் முடிவதாய் ஒரு சபை அடக்கம்.இங்கே ஈன்றெடுத்தது தந்தைகுலமாக விந்தையும் நிகழ்ந்தது.
(*) ஆரம்ப காலங்கள்..ஆச்சர்யங்கள்.
எனக்குள்ளா?
எனக்குள்ளுள்ளேயுமா?
எதற்காக?
எப்படி?
கேள்விகளின் வேள்விகளில்
தூக்கம் தொலைக்கும்
இருட்டுப் பகல்கள்
எத்தனை எத்தனை!!
--------------------------------------------------
ஆயிரம் கேள்விகளும்,வேள்விகளும் என்னைபோல் சாமானியனுக்கு இருக்கலாம்.உனக்குமா?போதுமடடப்பா உன் பெருந்தன்மை ஆனாலும் வல்லவனுக்கும் இது நேரும் பல நேரம்.
பகல் கணவா? இல்லை பாதி இரவா? எனத்தோன்றும்,தூக்கம் இழக்கும்.பகலையும் இருளாக்கும், இருளையும் பகலாக்கும். தனிமை விரும்பும் நாவு சொல்லிப்பார்த்து,சொல்லிபார்த்து வார்தையாய் வார்த கவிகுழந்தையின் செயலை எண்ணிபார்க்கும்(அதிரை மொழியில்: திட்டு முட்டு, திகரடியாய் இருக்கும்)இன்ப அவஸ்தை.
(*) அழகாக இருக்குமா?
அர்த்தங்கள் கொடுக்குமா?
இப்படி இருப்பது
அப்படி ஆகினால்
எப்படி இருக்கும்?
செப்படி வித்தை
செய்து பார்க்கும் மனசு.
--------------------------------------------------
தந்தை போல் இருக்குமா?தாய் போல் இருக்குமா?என கருசுமக்கும் தாய்க்கு வரும் நினைப்பும் சிந்தனையும்,கவி சுமக்கும் கவிஞருக்கும் இருக்கும். கவி குழந்தை எப்படி எந்த வடிவில் பிறக்கும் என நினைக்கும்.
வேகம் கூட்டும்
தேகக் காற்றும்-
திணறலுடன் கூடிய
தித்திப்பு ஏற்றும்.
------------------------------------------------
அப்பாடா என்னை ஆசுவாசப்படுத்திகொள்கிறேன். மூத்தகவியும் தோத்த கவியாவார்(சபிர்காக்கா போல சிலர் விதிவிலக்கு)உன் வார்தை வேகத்தில் தடுமாறும் , இன்ப சுவையேறும்(ஏற்றும் விந்தை)உன்னிடத்தில் என் இதயம் கொடுத்தேன்.உனக்கு தேகம் தேக்கு அதில் காற்றையும் தேக்கு!ஆனாலும் என் மேனி தாங்காதப்பா இத்தைனை பரிசோதனைக்கும்.
---------------------------------------------------------------
உள்ளே இருப்பதை
உலகுக்குச் சொல்லுதல்
இத்தனை கடினமா?
இத்தனை வடிவமா?
ஆழ்ந்த்த சிந்தனையில்
அமர்ந்து அமர்ந்து
குறுக்கு வலிக்கும்-உடல்
முறுக்கப் பிடிக்கும்.
------------------------------------
இத்தனை கடினமா?,இத்தனை வடிவமா? சிந்தைனை படிவம்! ஆமாம், குறுக்குவலி மட்டுமல்ல ,கிறுக்கும் பிடிக்கும் , படிபவரையும் கவர்ந்து கவிபித்து பிடிக்க வைக்கும்.இந்த குழந்தையை யாவரும் விரும்புவர்.
தட்டிக்கொடுக்கும்
சில நேரம்,
எட்டி உதைக்கும்
சில நேரம்,
எண்ண ஓட்டங்கள்.
------------------------------------------
சிலையாய் சில நிமிடம் நின்றுவிட்டேன். எண்ண ஓட்டம் தன் காலில் சுளுக்கு வந்து உட்கார்ந்து, உன் கருத்தின் அழகை காலின் சுளுக்கு வலியுடன் ரசிக்கலானது.
நிலைகொள்ளாக் கால்களை
நீட்டி மடக்கி
வலிகளை ஒன்றுதிரட்டி
வரும் வேளை...
மொழிக்குடம் உடைந்து
அவசரம் அவசரமாய்
அறுவை சிகிச்சையில்தான்
பிறக்கின்றன என்
கவிக் குழந்தைகள்.
-------------------------------------------------------
சுகப்பிரசவமாய் அழகிய கவிகுழந்தை பெற்றெடுத்தும் உனக்குள் ஒரு வித குற்றவுணர்சியா? ஏன் தந்தைமானவன் தாயுமானவன் ஆனான். இந்த மாணவன் ஆசிரியன் ஆனான். நீ பிரசவிக்கும் கவிகுழந்தைகளை பிரசுரிக்கும் அதிரை நிருபர் அல்லவா அனந்தம் கொள்கிறது.தாய் மாமனாய் என் மனதும் இன்பத்தில் தள்ளாடுது. இனி வருவர் பலர் ,பல பரிசுகளுடன். வாழ்துக்களுடன். தலைமை கவி வருவார் சீரும் சிறப்புடன் வாழ்துக்களும் தருவார் அகம் மகிழ்வார் . வாழ்க பல்லாண்டு.
மொழிக்குடம் உடைந்து........
--------------------------------------------
இன்ப தழிழாறு தவளதொடங்கியது.
ஷ்ஃபாத்,
கருவொன்றை வைத்து கவி பின்னும் நேர்த்தியை உம்மிடம் கண்டிருந்தாலும் கவிதையையே கருவாக்கி அதை நீங்கள் தமிழ் மருத்துவமனையில் பிரசவித்திருப்பது பரவசப்படுத்துகிறது.
கிரவுனுக்கு முன்னரே வந்துருந்தால் பின்னூட்டத்தில் பிரகாசித்திருக்கலாம். பின்னால் வந்ததால் பின்னூட்டத்திற்கு போஷாக்கு போதாமல் போவது இயற்கையே
நல்ல புனைவு தம்பி. வாழ்த்துகள்!
இனி கவிதையைப் பற்றிச் சில:
//ஈன்று புறந்தருதல்
எந்தலைக் கடனென்று.//
இது ஒரு முதுபெரும் கவிஞர்களின் வார்த்தை ஜாலம். உரத்த சிந்தனைக்காரர்கள் கையாலும் அஸ்திரம். தமிழ்த் தீவிரவாதிகளின் ஆயுதம். வாசிப்பவரைத் தன்பக்கம் கையைப் பிடித்து இழுத்து உட்காரவைக்கும் தந்திரம். வெரி ஸ்மார்ட் எக்ஸ்ப்ரெஷன்.
//மொழிக்குடம்//
இந்த வார்த்தையைப்பற்றி நான் அபு இபுறாகீமுடன் உரையாடுகையில் ரொம்ப உணர்ச்சிவசப்பட்டவனாக இருந்தேன்.
இதுவரை எந்த கவிஞனும் எழுதாத உவமானம். பனிக்குடம் உடைதலோடு பொறுத்தி மொழிக்குடத்தை உடைத்த் நீர் என் சார்பாக முதுகில் தட்டி ஒரு "சபாஷ்" போட்டுக் கொள்ளுக்கள்.
இறுதி முடிச்சில் மட்டும் எனக்கு உடன்பாடில்லை. பிரசவ வேதனையை அனுபவைத்தாலும் எப்போதும் உமது டெலிவரிகளை நார்மல் டெலிவரியாகவே நான் காண்க்கிறேன்.
நிறைய எழுதுங்கள் தம்பி.
எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே உரியன..
வாசித்த எல்லோருக்கும், வாழ்த்திட்ட உள்ளங்களுக்கும் என் நன்றிகள். இந்த கவிதை எழுத உந்து சக்தியாக் அமைந்த கவிதை தந்த கவிக்காக்கா அவர்களுக்கும், "கிரவுனார் நோட்ஸ்" போடும் அளவுக்கு விளக்கம் தந்த தஸ்தகீர் காக்கா அவர்களுக்கும் ஒரு Special தேங்க்ஸ்!!
அருமை சகோ என்.ஷஃபாத், வாழ்த்துக்கள்
Post a Comment