அல்லாஹ்வின் திருப்பெயரால்..
அன்பான அதிரைநிருபர் வாசக நேசங்களே, அஸ்ஸலாமு அலைக்கும்.
புனித ரமளான் மாதத்தில் இபாத்தத்துக்களில் கவனம் செலுத்திவரும் இவ்வேலையில், ஒரு முக்கியமான ஒரு சொற்பொழிவை இங்கு உங்கள் அனைவருக்கும் பகிர்ந்துக்கொள்வது சரியான தருனம் இதுவே என்று கருதுகிறோம். நம்முடைய உயிருனும் மேலான முஹம்மது நபி ஸல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தங்களின் வாழ்நாட்களில் நடந்த சில நிகழ்வுகள் நமக்கு எத்தனை பேருக்கு தெரியும்.
இன்றைய காலத்தில் நம் பெண்கள் போலித்தனமான சினிமாக்கள், டீவி சீரியல்களை பார்த்து அழுதுகொண்டிருப்பதை நாம் அன்றாடம் ஒவ்வொரு விடுகளில் காணமுடிகிறது. எது எதுக்கெல்லாம் அழுவது என்று விவஸ்தையில்லாமல் போய்விட்டது இந்த நவீன விஞ்ஞான வளர்ந்த உலகில். இந்த சொற்பொழிவை கவனமாக கேளுங்கள், நம்முடைய நபிகளார் அவர்கள் எந்த எந்த நிகழ்வுகளில் அழ நேரிட்டது என்று கேளுங்கள், இதை கேட்ட பின்னராவது போலித்தனத்தை பார்த்து அழுவதை விட்டுவிட வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக.
இந்த அற்புதமான சிந்தனையை தூண்டும் சொற்பொழிவை நிகழ்த்திய மவ்லவி ஜமால் முஹம்மது மதனி அவர்களுக்கு அல்லாஹ் நல்லருள் புரிவானாக. இந்த உரையின் ஒலியை வெளியிட்ட இஸ்லாம் கல்வி இணையதள சகோதரர்களுக்கும் அல்லாஹ் நல்லருள் புரிவானாக.
4 Responses So Far:
அற்புதமான உணர்ச்சிபூர்வமான சொற்பொழிவு !
"நல்லா சொன்னாஹமா" நு சொல்றாங்கப்பா.
நானு இன்னும் முழுசா கேட்கல. இவங்க விலாவாரியா சொல்லுவாங்க இனி.
அஸ்ஸலாமு அலைக்கும்,
சகோதரர் ஜமால் முகம்மது மதனி அவர்களின் உருக்கமான உரை, நிறைய வரலாற்று சம்பவங்களை கேட்க நேரிட்டது, அல்ஹம்துலில்லாஹ்.
இதேபோல் இன்னும் நிறைய பதியுங்கள்.
ஜஸாக்கல்லாஹ்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
சகோ;ஜமால் முஹம்மது மதனி அவர்களின் சொற்ப்பொழிவை இன்னும் கேட்கவில்லை என்றாலும்
//நபி (ஸல்) அவர்களை அழவைத்த நிகழ்வுகள்// என்ற தலைப்பை படித்தவுடன் என் மனம் கலங்குதே!
ஸல்லல்லாஹு அலா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் .
Post a Comment