Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பிரமிக்க வைக்கும் அதிரை பைத்துல்மால் ! 5

அதிரைநிருபர் பதிப்பகம் | August 11, 2011 |

ஒவ்வொரு வருடமும் அதிரை பைத்துல்மாலுக்கான ஜகாத், ஃபித்ரா மற்றும் ஸதக்கா நிதியுதவியகளைப்பெற துபையிலுள்ள அதிரைவாசிகள் தங்குமிடங்களுக்கு துபை கிளை பைத்துல்மால் நிர்வாகிகள் செல்வது வழக்கம். கடந்த 2004 ஆம் ஆண்டுமுதல் ஒவ்வொரு ரமழானிலும் இவ்வாறு செய்து வருகிறோம். அல்ஹம்துலில்லாஹ்!

ஒவ்வொரு வருடமும் நமதூர்வாசிகளைச் சந்திக்கும்போது அதிரை பைத்தில்மாலின் செயல்பாடுகளில் ஒருசில குறைநிறைகளைச் சுட்டிக்காட்டுவதும்,அதற்கான பதிலை/விளக்கத்தை அதிரை பைத்துல்மால் தலைமையகத்தில் இருந்து பெற்று தெரிவிப்பதுமாக இருந்து வருகிறோம்.

இந்தமுறை நமதூர்வாசிகளிடமிருந்து முந்தைய வருடங்களைப்போல் குறைகள் எதுவும் சொல்லப்படாதது சற்று ஆச்சரியத்தைத் தந்தது. பொதுவாகவே மனிதர்களால் நடத்தப்படும் எந்த அமைப்பின் செயல்பாடுகளிலும் ஒருசில குறை/நிறைகள் விமர்சிக்கப்படுவது இயற்கை என்றாலும், வழக்கத்திற்கு மாறாக இவ்வருடம் அத்தகைய குறை எதுவும் சுட்டிக்காட்டப்படாதது மகிழ்ச்சியாக இருந்தது. அல்ஹம்துலில்லாஹ்!

கடந்த 18 வருடங்களாக நமதூருக்கென அதிரை பைத்துல்மால் செய்துவரும் சேவைகள் அதிரையில் பொதுநல அமைப்புகளின் வரலாற்றில் இல்லாத ஒன்று என்பதை அதிரைவாசிகளும் அக்கம்பக்க ஊர்வாசிகளும் உணர்ந்து அதிரை பைத்துல்மாலை அங்கீகரித்துள்ளனர். எனக்குத் தெரிந்து அதிரை பைத்துல்மாலின் செயல்பாடுகளில் ஆர்வம் கொண்டு கூத்தநல்லூர், அய்யம்பேட்டை போன்ற ஊர்களில் அதிரை பைத்துல்மாலின் செயல்திட்டத்தை அறிந்து இதேபோன்று பைத்துல்மால்களை உருவாக்கியுள்ளனர்.

பெரும்பாலும் முஸ்லிம் அமைப்புகள் என்றாலே ஆண்டுக்கொரு மீலாது விழாவோ அல்லது கத்தூரி விழாவோ நடத்தி, தப்ரூக் வழங்கி கூடிக்கலைவதே நாம் இதுவரை கண்டுவந்துள்ளோம். ஆனால் பைத்துல்மாலோ சற்று வித்தியாசமான பிரச்சினைகளை கையிலெடுத்து செயல்பட்டு வருகிறது. பெயருக்கேற்ப பைத்=வீடு, மால்=நிதி. அதாவது நிதியகம் என்ற வகையில் பொதுமக்களின் பொருளியல் சார்ந்த பிரச்சினைகளுக்கு மார்க்க ரீதியிலான தீர்வுகளை வழங்கி வருவது இஸ்லாமிய அமைப்புகளின் செயல்பாட்டில் இல்லாத ஒன்று.

முஸ்லிம்களுக்கான பொருளாதார உதவிகளை மையமாகக் கொண்டு இயங்கினாலும், பிறமதத்தவருக்கும் நிதி சார்ந்த உதவிகளைச் செய்து வந்துள்ளது. ஜகாத் விநியோகம் குறித்த குர்ஆனிய வழிகாட்டலில் முஸ்லிமல்லாத வறியவர்களும் ஜகாத் நிதியில் பங்குபெறத் தகுதியானவர்கள் என்பதால் பைத்துல்மாலால் சமயநல்லிணக்கம் வளர்க்கும் அமைப்பாகவும் செயல்பட முடிகிறது. இது பிறமத அமைப்புகளிடம் இல்லாத மற்றுமொரு சிறப்பு அம்சமாகும்.

கடந்த 18 வருடங்களாக பைத்துல்மாலின் சேவைகளை பின்னோக்கிப் பார்க்கும்போது வெரும் 1000 ரூபாய் மூலதனத்துடன் தொடங்கப்பட்ட ஓர் அமைப்பு இந்தளவுக்கு வளர்ந்திருப்பது அதன் செயல்பாடுகளுக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரமே என்றால் மிகையில்லை. முழுக்க முழுக்க பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வந்தாலும் அல்லாஹ்வின் பெருங்கிருபையினால் இதுவரை ஒரு ரூபாய்கூட பொருளாதார மோசடி குற்றச்சாட்டு எழுந்ததில்லை.பைத்துல்மாலை உருவாக்கி பல்வேறு விமர்சனங்களுக்கிடையிலும் நடத்தி செயல்பட்டு வரும் நல்லுள்ளங்களின் முயற்சிகளைப் பொருந்திக் கொள்வானாக! ஆமின்.

உங்கள் ஜகாத், ஃபித்ரா மர்றும் ஸதகா தர்மங்களை பைத்துல்மாலுக்குச் செலுத்தி இறைப்பொருத்தம்நாடிய பயணத்தில் உங்களையும் இணைத்து,பன்மடங்கு நன்மை தரும் ரமலானில் உங்கள் நன்கொடைகளைச் செலுத்தி பைத்துல்பாலின் சேவைகள் தொடர்வதற்கு உதவிக்கரம் நீட்டுங்கள். 

- அதிரைக்காரன்

5 Responses So Far:

அப்துல்மாலிக் said...

மேலும் எந்தக்குறையும் வைக்காமல் சீறும் சிறப்பாகவும் நம் சமுதாய முன்னேற்றத்தை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்பட்ட எல்லாம் வல்ல இறைவனிடம் இறைஞ்சுகிறேன். இதற்காக செயல்பட்ட செயல்பட்டுக்கொண்டிருக்கின்ற அனைத்து நிர்வாகிகளுக்கும் என் வாழ்த்துக்களும் துஆவும்

Shameed said...

அதிரைகாரனின் அதிரை பைத்துல்மால் கட்டுரை உண்மையில் பிரமிக்க வைக்கின்றது

sabeer.abushahruk said...

மிக்க நன்றி அதிரைக்காரன். நம்மூர் பைத்துல் மாலைப்பற்றிய இந்த விளக்கம் நிச்சயம் நம் மக்களிடை பைத்துல்மாலின்மேல் மேலும் மதிப்பைக்கூட்டும்.

இதுபோன்ற கட்டுரைகளில் அதிரைக்காரனின் விளக்கங்கள் மிகச் சிறப்பாகவே அமைகின்றன.

லாங் லிவ் பைத்துல்மால்! வாழ்க அதிர்சிக்காரன்!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அழகுற அடுக்கி வைக்கப்பட்ட செயல்பாடுகளாலும் அசைக்க முடியாத பிரச்சினைகளையும் தாண்டி நிலைத்து நடைபோடும் அதிரைபத்துல்மால் இன்னும் சிறப்புடனும் மென்மேலும் ஆக்கப் பணிகளில் செயலாற்றிட வாழ்த்துக்கள் !

வளர்ச்சி பிரமிப்பே !

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

பல கோணங்களில் பலர் இருந்தாலும் ஒரே குடையின் கீழ் ஒற்றுமையாய் திறம்பட நிர்வகித்து வளர்ந்த பைத்துல்மால் என்றும் ஒற்றுமையாய் மேலும் வளர்ந்திட வாழ்த்துக்களும் துஆவும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு