Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஆ மீ ன் . . . . ! 30

அதிரைநிருபர் பதிப்பகம் | August 26, 2011 | , , ,

யா ரஹ்மானே எங்களின் பாவம்
நீங்கிடச் செய்வாயே!
இந்த சங்கை மிகுந்த ரமளானின் பொருட்டால்
ரஹ்மத்தைச் சொறிவாயே!

பசியினை மறந்தோம் தாகமும் பொறுத்தோம்
உடல் நலம் காப்பாயே!
உனை துதிக்கவே பிறந்தோம் தூக்கமும் துறந்தோம்
மன நலம் காப்பாயே!

திருமறை வசனம் தினம் தினம் பயின்றோம்
அறிவினைத் தருவாயே!
எங்கள் திருநபி வாழ்ந்த வழிதன்னில் வாழ்வோம்
நேர் வழி தருவாயே!

நேரத்தில் தொழுதோம் நிறைவாகத் தொழுதோம்
ஏற்று நீ அருள்வாயே!
இந்த ரமளானின் சிறப்பாம் உபரியும் தொழுதோம்
உவப்புடன் ஏற்பாயே!

சஹரினில் விழித்தோம் வயிறார புசித்தோம்
பரக்கத்தைத் தருவாயே!
இன்று மஃரிபு வரைக்கும் மன நிறைவோடு
பொறுமையும் தருவாயே!

தீயதைத் துறப்போம் தேவையைக் குறைப்போம்
தைரியம் தருவாயே!
எங்கள் இதயத்தில் ஈமான் உறுதியாய் விளங்க
ஆசியும் புரிவாயே!

இரவினில் விழித்தோம் இறை உனை துதித்தோம்
ஈடேற்றம் அருள்வாயே!
இரு கரம் விரித்து ஏந்தியே கேட்டோம்
நிஃமத்தைச் சொறிவாயே!

சக்காத்து கணக்கோடு சதக்காவும் கொடுத்தோம்
தவுளத்தைச் சொறிவாயே!
புனித ரமளானின் பெயரால் பொருளையும் பகிர்ந்தோம்
பொருந்தியும் கொள்வாயே!

ஒற்றுமைக் கயிற்றை உறுதியாய்ப் பிடிக்க
உளமாற்றம் அருள்வாயே!
ஓரிறை ஈமான் உலகெங்கும் நிலவ
இஃக்லாசைத் தருவாயே!

இனி வரும் வருடம் பொறுமையாய் இருப்போம்
போய் வா ரமளானே!
எங்கள் பாவங்கள் கழித்து வாழ்க்கையை அளித்த
வளமான ரமளானே!

(குறிப்பு: முதல் நான்கு வரிகள் நம்தூரின் பழமை வாய்ந்த ‘நோன்பை வழியனுப்பும்” பாடலிலிருந்து நன்றியுடன் எடுத்தாண்டுள்ளேன்)


- சபீர்
Sabeer abuShahruk




Please press PLAY button to hear again from the below audio player



30 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

மாஷா அல்லாஹ் !

இறைஞ்சலோடு ! இனிமையான குரலால் வசியம் செய்திடும் கவி (ஆண்)குயில் ! கலக்கல் !

இப்படியும் ஒரு பாதை போட்டுக் காட்டித்தான் முடியுமா ! ஆம் கவிக் காக்கா உங்களால் முடியுமென்பது இங்கே உணரப்படுகிறது !

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும்.
ஆமீன்,ஆமீன்,ஆமீன்.
எல்லாம் அறிந்தவன் அல்லாஹ்.ஒரு முதலாளியிடம் வேலை நன்கு செய்து
அவனிடம் கூலி வாங்குவதற்குள் மேல் மூச்சு, கீழ்மூச்சு வாங்கிவிடும். இசுலாமிய முதலாளிகளும் நொட்டை, சாக்கு, போக்கு சொல்லும் காலம் இது. அதனிலும் சலுகை அவர் நல்லவர் என்றால் தரலாம். ஆனாலும் சலுகை எதிர்பார்த்து கொடிபிடிக்கும் காம்ராட்கள் தான் அதிகம். இப்படி நாம் செய்த வேலைக்கு கூலி கேட்கவே குறுகிவாழ வேண்டிய சூழல். ஆனாலும் நாம் வல்ல அல்லாஹ்வின் அடிமை. அவனுக்கு வணக்கம் செய்வது நம் கடமை ஆனால் அல்லாஹ் நமக்கு கூலியும், சலுகைகளையும் வாரி வழங்கும் வள்ளலாக இருப்பதுடன் நம் மீது கருமை சொறிபவனாகவும் ,ரஹ்மத்தையும்,பரகத்தையும் வழங்கி நமக்கு இன்னும் கேட்கும் உரிமையும் தந்துள்ளான்.கேள் தருகிறேன் என்று உரிமையை தந்தவன் நம் இறைவன் அல்லாஹ். மிக கருனை மிக்கவன்., அவனிடம் சாதாரனமான அடிமை நாம். ஆனாலும் நம் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கிறான் அவனிடன் நாம் செய்த காரியங்களை கூறத்தேவை இல்லை எல்லாம் அறிந்தவன். ஆனாலும் நாம் செய்த காரியத்தை சொல்லி, சொல்லி இதற்கு இது தா என உரிமையுடன் கேட்கிறோமே அவன் நம்மிடம் கோபப்படுகிறானா? இந்த உலகில் முதலாளி என்பவனும், தொழிலாளியும் அவனின் அடிமையே ஆனாலும் பெரும்பாலான முதலாளி அப்படியா நடக்கிறார்கள்?. அல்லாஹுக்கு அஞ்சிகொள்ளட்டும். அதுபோல் தொழிலாளியும் நேர்மை மிக்கவராக இருக்கனும். அல்லாஹ் சொல்கிறான் எவன் தன் எஜமான் என்று சொல்லக்கூடிய முதலாளியிடம் நேர்மையாக இல்லையோ அவன் என்னிடம் நேர்மையாக நடக்கமாட்டான். கவனம் கொள்வோம் கவிஞர் கேட்பது போல் நாமும் கேட்பது நம் கடமையும், இறைவனுக்கு மகிழ்வைத்தரக்கூடியதும் தூஆ என்னும் செய்கையும். எல்லாரும் இதை கவனம் கொண்டு அல்லாஹ்விடம் கேட்டு சுவனம் செல்வோம் ஆமீன். காலத்தில் நையப்பட்ட சரியான ஆடை இந்த கவிதை.தையல் காரர் வழக்கமாய், கச்சிதமாய் எல்லாருக்கும் பொருந்த கூடியவகையில் தைத்துள்ளார்.அல்ஹம்துலிலாஹ்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

ஆமீன்...
அருமை வேண்டல் வரிகள்.
அகில அதிபதியே
அங்கீகரிப்பாயாக!
அமல்களில் இன்றுபோல்
அதிகமாய் என்றும் உன்
அச்சத்துடன் வாழச் செய்வாயாக!
ஆமீன்...

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும். முதலில் கவிதையைத்தான் படித்தேன். பிறகுதான் இனிய குரல் கேட்டு இறகாய் பறந்தேன். அருமையான உச்சரிப்பும்,இனிமையும் குழைத்து தந்த அந்த சகோதரருக்கு வாழ்த்துக்கள்.(யார் அது?)

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

பிரியமில்லாமல் பிரிய இருக்கும் பிரியமான ரமழானை
சீராட்டி, பாராட்டி வாழ்த்தி வழியனுப்பி வைக்கும் வரிகள்
அந்த வல்லோனே கூலியாய் வந்திறங்கும் ரமழானில்
பொறுமையுடன் பெற்றுக்கொள்ள துரிதப்படுத்துவோம்
எம் தூயசெயல்களை போற்றிப்புகழ்வோம் அந்த வல்லோனை

பாவிகளைக்கூட பரிசுத்தப்படுத்தும் புனித ரமழானே! உன்னை
வழியனுப்ப தகுதிகள் எமக்கு இல்லையெனினும் தாரை வார்க்கும் என் கண்ணீரே ரோடு போட்டு வழியனுப்புகிறேன்.‌

நடுநிசியில் இறைவனை நின்று வணங்க வைத்து விட்டு
எம்மை இப்படி நடுவழியில் விட்டுச்செல்கிறாயே?
சுவர்க்கம் வரை எம்மை கொண்டு செல்லமாட்டாயா?
பாலாற்றில், தேனாற்றில் எம்மை பருகச்செய்ய‌ மாட்டாயா?
படைத்தவனை கண் முன்னே காணச்செய்யமாட்டாயா?

அடுத்த வருட உன் வருகைக்கு ஏக்கத்துடன் காத்திருப்பேன்
இறைவன் என்னை இவ்வுலகிலிருந்து எடுக்கவில்லையெனில்

நல்ல பல அமல்கள் மூலம் ஒரே மாதத்தில் எங்களின்
இருப்பு நிலைக்குறிப்பை (ஆமான்லாமா) நிலைகுலையச்செய்தாயே? இதையே இறுதி மூச்சுவரை தந்திடுவாயாக...

விரைவில் எம்மை விட்டு பிரிய இருக்கும் உன்னை எண்ணி வாயடைத்து நிற்கிறேன். கலங்கிய கண்களும், ததும்பிய கண்ணீரும் சாட்சிகளாய் சென்றுவா பிரியமான ரமழானே! இறைவனிடம் எமக்கு நல்ல சிபாரிசு செய்திடுவாயாக!


சபீர் காக்கா, உங்கள் கவிதைக்கும் என் கண்களுக்கும் என்ன சம்மந்தமோ? இறுதியில் வந்து விழுவது கண்ணீரைத்தவிர வேறெதும் இல்லை.

மொளனமாய் தொடருடரட்டும் உங்கள் கவிப்புரட்சி

மு.செ.மு. நெய்னா முஹம்மது.

sabeer.abushahruk said...

//யார் அது?//

வ அலைக்குமுஸ்ஸலாம் கிரவுன். நிஜமாவே யாருனு தெரியலையா?

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

சபீர் காக்கா,

ஒரு சின்ன சந்தேகம். இந்த கவிதையை (அ) கவிதையைப்போல் பாடலாக என் மாமா நான் சிறுவனாக (கிட்டத்தட்ட இருவது வருடங்களுக்கு முன்) இருக்கும் பொழுது தமிழில் பாடக்கேட்டிருக்கிறேன். கேஸட்டிலும் கேட்ட ஞாபகமுண்டு.

இது தாங்களே வடித்த கவிதையா? இல்லை தாங்களை வருட வைத்த கவிதையா? சொல்லுங்களேன்....ப்ளீஸ்....

மு.செ.மு. நெய்னா முஹம்மது.

sabeer.abushahruk said...

அன்புச் சகோதரர் நெய்னா,
அஸ்ஸலாமு அலைக்கும்.
சரியாகச் சொன்னீர்கள். இந்த வழியனுப்பும் பாடல் நமதூரில் வருடா வருடம் தமாம் விடும்போது எல்லா பள்ளிகளிலும் கேட்கப்பட்ட துஆ. அதிலிருந்து முதல் நான்கு வரிகளை நான் எடுத்தாண்டுள்ளதாக நன்றியுடம் மேலே குறிப்பிட்டிருக்கிறேன்.

அந்த நான்கு வரிகள் தவிர மொத்த துஆவும் நான் அ.நி. வாசகர்களுக்காகக் கேட்ட துஆ.

(நானும் முன்பு இந்த துஆவைப் பாடிக் கேட்டிருக்கிறேன். ஏதாவது வரிகள் ரிப்பிட்டிஷனாக் அமைந்தால் சுட்டிக்காட்டினால், மாற்றி அமைத்தோ அல்லது அதற்கும் ஒரு நன்றியோ சொல்லிக்கொள்ளலாம்தானே :))

Ameena A. said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

ஆமீன்.....

அன்புச் சகோதரர் அவர்களின், கவிதை வரிகளின் வளமும் உருகும் வேண்டுதலும் எங்களின் கண்களின் நீர் துளிர்க்கிறது - மாஷா அல்லாஹ்.

குரலுக்குக்ச் சொந்தக் காரர்களில் ஒருவரைத் தெரிகிறது மற்ற சகோதர்கள் யாரோ ?

நல்ல முயற்சி மட்டுமல்ல முன் உதாரணம் !

Yasir said...

dear kavikakka,my eyes filled with tears while reading this poem,May Allah shower His blessing on (all of) us in this holy month and forever,unfortunately internet center which i went didn't have headphone to hear this audio....hopefully tonight i can..great work A.N

crown said...

sabeer.abushahruk சொன்னது…

//யார் அது?//

வ அலைக்குமுஸ்ஸலாம் கிரவுன். நிஜமாவே யாருனு தெரியலையா?
---------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். அட! நீங்களா? இதுக்காக தனி ஆர்வத்துடன் பாடி இருப்பதால் விளங்காமல் போய் விட்டதோ என் மூளைக்கு(காதுக்கு?).ஆனால் கோரஸ்ஸில் ஒலிக்கும் ஒருவரின் வாய்ஸ் உடனே விளங்கி விடுகிறது.எல்லாப்புகழும் அல்லாஹுக்கே! இதுபோல் பெருனாள் கவிதை எழுதி அதை ஒலிபரப்பு செய்வீர்களா? (என்ன உங்களால் (அ/ நி குரூப்)முடியாததா?) அட்வான்ஸ் வாழ்துக்கள்.

sabeer.abushahruk said...

இதை பதிவு செய்ய நானும் அபு இபுறாஹீமும் பட்டபாடு சுவாரஸ்யமானது.

வீட்டில் பிள்ளைகள் சப்தமிடுவர் என்று அஜ்மானில் வேண்டாமென்றாயிற்று. துபையில் பார்க்கிங் செய்வதற்குள் விடிஞ்சிடும். அதனால் ரெண்டுக்கும் நடுவே ஷர்ஜாவில் என் ட்டொயொட்டா க்காம்ரியின் உள்ளே அமர்ந்து பதிவு செய்தோம்.

ட்டெக்னிக்கல்லி இம்ப்ரூவ்ட் பை தாஜுதீன்.

crown said...

sabeer.abushahruk சொன்னது…

இதை பதிவு செய்ய நானும் அபு இபுறாஹீமும் பட்டபாடு சுவாரஸ்யமானது.

வீட்டில் பிள்ளைகள் சப்தமிடுவர் என்று அஜ்மானில் வேண்டாமென்றாயிற்று. துபையில் பார்க்கிங் செய்வதற்குள் விடிஞ்சிடும். அதனால் ரெண்டுக்கும் நடுவே ஷர்ஜாவில் என் ட்டொயொட்டா க்காம்ரியின் உள்ளே அமர்ந்து பதிவு செய்தோம்.

ட்டெக்னிக்கல்லி இம்ப்ரூவ்ட் பை தாஜுதீன்.
---------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். நல்ல சிரத்தை எடுத்ததால் சிறப்பாய் வந்துள்ளது. அஜ்மானில் என்ன? அந்தமானிலோ, அந்த வானிலோ கூட பதிவு செய்யும் நிலையில் தான் அ/ நி உள்ளது.(அல்ஹம்துலில்லாஹ்). (எங்கே மர்ம யோகி உடனே கிரவுனை வாயடைக்க செய்யவும்).துபையில் பார்க்கிங் செய்ய முடியாத சூழலில் ஷார்ஜாவுக்கு நடுவே காரினுள் வைத்து பதிந்தாலும். மனதில் பதியும் படியான பதிவு.இரண்டான் கெட்டத்தனமாய் இல்லாமல் முதல் தரமாய் அமைந்துஇருக்கு.வெல்டன்.

Shameed said...

கூட்டு துவாவும் கூட்டு முயற்சியும் படு சூப்பர் ( கவிகாகா காருக்கு வெளியோ வேலை பார்த்தது போக இப்போ காருக்கு உள்ளேயும் வேலை பார்க்க ஆரம்பிச்சாசா )

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

சபீர் காக்கா,

அனைத்து வரிகளும் மனசுல அப்படியே பதிந்துவிட்டது காக்கா.

ஜஸக்கல்லாஹ்..

தங்களின் இனிமையான குரல் கேட்கும் பலருக்கு நீங்கள் எவ்வளவு மென்மையானவர் என்று புலப்படும்.

இது புதிய முயற்சியே என்றாலும், இது போன்று நிறைய தங்களிடமிருந்து ஒரு வாசகனாக எதிர்ப்பார்க்கிறோன்.

அல்லாஹ் போதுமானவன்.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். வீட்டில் சொன்ன ஒரு செய்தி! கேட்டதும் நிறைவாயும், மகிழ்வாயும் இருந்ததை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.இதை ரிங்டோன் போடமுடியுமா என கேட்டாள். சரி எப்படி ரிங்டோன் பதிவது?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

மொத்தம் நான்கு எம்.பி. (கொள்ளலவு) அதனைச் சுறுக்கிச் செய்யலாம்...

அது சரி இந்த தூஆ முடியுற வரைக்கும் *(இல்லாள்)* ஃபோனை எடுக்க மனமில்லாமல் இருந்தால் என்ன(டா)ப்பா செய்வே !?

முதல் நான்கு வரிகளை மட்டுமென்றால் மின்னஞ்சலில் அனுப்பித் தருகிறேன்... (சீக்கிரம் ஃபோனை எடுப்பதற்காக)..

crown said...

Assalamualikum.
First 4 Lines ok

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

Done ! check your y..oo & gmail both id...

குறிப்பு : நார்ஷா ஏதும் அனுப்பிட வேண்டாம் !

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//இதை பதிவு செய்ய நானும் அபு இபுறாஹீமும் பட்டபாடு சுவாரஸ்யமானது.//

யாங் காக்கா !

எவ்வ்ளோ இடம் மாத்தினோம் நம்ம மாஸ்டர் ரெக்கார்டிங் செய்ய.... பாடிக் கொண்டிருக்கும் போது மழை, இடம் மாற்றியதும் அங்கே டங் டங் சத்தம், மற்றொரு இடம் சென்றதும் கண்டெய்னர் வருகை, இதைவிட ஷார்ஜா டிரைனேஜ் எடுக்கும் லாரி வருகை !

இப்புடி சொல்லிகிட்டே போகலாம்...

Unknown said...

குரலின் இனிமையும், எழுத்தின் எளிமையும் அற்புதம்.

அப்துல்மாலிக் said...

எழுதுவதே கடினம் அதையே குரலால் இனிமையா பா(டி)யும் காட்டியாச்சு, அருமை காக்கா, படிப்பதைவிட கேட்டது மனதில் பதிந்தது

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும் .

ஆமீன்.ஆமீன்.யா ரப்பில் ஆலமீன்.

சபீர் காக்கா கன்னியமிக்க விருந்தாளியை அதற்குரிய வழிமுறைகளோடு அனுப்பிய விதம் அருமை.அல்லாஹ் உங்கள் து ஆவை ஏற்ற்றுக் கொள்வானாக ஆமீன்.

யா அல்லாஹ் . யா ரஹ்மானே!

பசித்திருந்தோம்.தாகித்திருந்தோம்.
கண்களை அங்கும் இங்கும் அலையை விட்டோம் இந்த
ரமளானின் பொருட்டால் எங்களை மன்னிப்பாயாக.

குர் ஆனை ஓதினோம் ,திக்ர்கள் செய்து கொண்டே
புறம் பேசுவதை தொடருகிறோம் எங்களை இந்த
ரமளானின் பொருட்டால் மன்னிப்பாயாக

நபி(ஸல்) அவர்களை மனமார நேசிக்கின்றோம்.
அவர்களின் சுன்னத்துக்கு மாற்றமாக பித் அத்களில்
உழல்கின்றோம்.இந்த ரமளானின் பொருட்டால்
எங்களை மன்னிப்பாயாக.

தினமும் உலமாக்களின் போதனைகளை
கேட்கிறோம்.அதை உணராத பாவியாக இருக்கின்றோம்
இந்த ரமளானின் பொருட்டால் எங்களை மன்னிப்பாயாக

விருந்தாளியாக வந்த உன்னை.
சரியான முறையில் கவனிக்க வில்லை
காரணத்தால் எங்களை சபிக்காத நிலையில் போய்
வா ரமலானே!

எங்கள் பாவ மூட்டைகளை எறிந்துவிட்டு.நன்னமை
முடிச்சிகளையும் மட்டும் சுமந்து போய் வா ரமலானே!

இன்ஷா அல்லாஹ் நாளை மறுமை நாளில்
சந்தோசமான நிலையில்.உங்களை சந்திப்பேன்
என்று சாந்த தன்மையோடு போய் வா ரமலானே!

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே! அல்லாஹ் கூலி தரக்கூடிய நாள் நெருங்கிவிட்டது இந்த ரமளானில் அவன் தந்த வேலையை நாம் சரியாக செய்ய வில்லை. செய்து இருக்க மாட்டோம்.எனவே அவனிடத்தில் அழுது கூனி குறிகி கூலியை பெறுவோமாக .ஆமீன்

sabeer.abushahruk said...

யா அல்லாஹ்,
 
ஏட்டையோ எழுத்தையோ பார்ப்பவனல்ல
நீ - எங்கள்
இதயத்தையும் எண்ணங்களையும் பார்ப்பவன்
 
பாடும் பாட்டின் பாவம் பார்ப்பவனல்ல
நீ - நாங்கள்
படும் பாட்டின் பாவம் போக்குபவன்
 
எங்கள் பலவீனங்களை
பலங்களாக மாற்று
எங்கள் செலவீனங்களைச்
சிக்கனமாக மாற்று
 
உன்னிடம் கேட்கும்போது
அழகிய முறையில்
கேட்பதையே விரும்புபவன் நீ
அதையே முயன்றோம்
சொற்குற்றம் பொருட்குற்றம் பொறுத்து
எங்களின்
துஆக்களைக்ச
கபூல் செய்துகொள்வாயாக
 
மன்னிப்பை  மட்டுமே உன்னிடம் கேட்பதெனில்
மற்றவற்றை யாரிடம் கேட்போம்
எனவேதான்
எல்லாவற்றையுமே உன்
ஒருவனிடம் மட்டுமே கேட்கிறோம்
 
 நிச்சயமாக
நீயே மன்னிப்பவன்
மன்னிப்பதை விரும்புபவன்
எங்களையும்
மன்னித்தருள்வாயாக, ஆமீன்.
 

அதிரை தாருத் தவ்ஹீத் said...

கட்டு நல்லாத்தானிருக்கு.

மெட்டுதான் வந்தியக்கொத்துப் பாடல்களை நினைவூட்டுகிறது.
வேறு மெட்டில் போட்டிருக்கலாம்.

sabeer.abushahruk said...

// வந்தியக்கொத்துப்//
ஹாஹ்ஹாஹா...

காக்கா, வந்தியக்கொத்துன்னா என்னா? ஏன் கேட்கிறேன்னா, இந்த ராகம் என்னுதில்லை. சிறு பிராயத்தில் கேட்ட ராகம்.அவ்வளவே.

எப்படியோ, கட்டு நல்லாருக்குன்னீங்களே, கொஞ்சம் சப்தமா கோலாலம்பூர் காரனுக்கு கேட்கிறமாதிரி சொல்லுங்க.

crown said...

sabeer.abushahruk சொன்னது…

// வந்தியக்கொத்துப்//
ஹாஹ்ஹாஹா...
காக்கா, வந்தியக்கொத்துன்னா என்னா? ஏன் கேட்கிறேன்னா, இந்த ராகம் என்னுதில்லை. சிறு பிராயத்தில் கேட்ட ராகம்.அவ்வளவே.
------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.வந்தியக்கொத்து பாடல்னா கோவிலில் பாடும் (ஜால்ரா)கோரஸ் பாடல்னு நினைக்கிறேன்.சரியானு ஜமில் காக்காவிடம் கேட்டு சொல்லுங்கள்.

crown said...

sabeer.abushahruk சொன்னது…

crown,
u mean bhajans?
------------------------------------------------
Assalamualikum . Not Really.

அதிரை தாருத் தவ்ஹீத் said...

வந்தியக் கொத்து = பெந்த கொஸ்தே

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு