Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அமீரகத்தில் அதிரையின் ஆளுமை ! - பெருநாள் சந்திப்பு: காணொளி 13

அதிரைநிருபர் பதிப்பகம் | August 30, 2011 | , , ,

அல்லாஹ்வின் திருப் பெயரால்...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...









அல்லாஹ் அக்பர், அல்லாஹ் அக்பர்
அல்லாஹ் அக்பர்
லாயிலாஹ இல்லல்லாஹ்
அல்லாஹ் அக்பர் அல்லாஹ் அக்பர்
வலில்லாஹில் ஹம்து !

நம்மையெல்லாம் படைத்து பாதுகாத்து வரும் அந்த ஓர் இறையை போற்றி, அல்லாஹ்வின் கிருபையால், ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் அதிரைச் சகோதரர்களின் நோன்பு பெருநாள் சந்திப்பினை நல்லுள்ளம் கொண்ட அதிரை இளைஞர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.


இன்று (30-ஆகஸ்ட்-2011) தேரா - துபாய், ஈத்கா மைதானத்தில் பெருநாள் தொழுகை முடிந்ததும், ஏராளமான அதிரைச் சகோதரர்களின் சங்கமம் வங்கக் கடலின் வெந்நிற நுரை பொங்கியெழும் சந்தோஷமான ஆர்ப்பரிக்கும் சகோதரர்களின் உணர்வை அங்கே காண முடிந்தது.

இது ஒரு கன்னி முயற்சிதான், ஆனாலும் கண்கொள்ளா காட்சி. இனிவரும் காலங்களிலும் இதுபோன்ற நிகழ்வுகளை தொடர்ந்து நடத்திட தூண்டும் ஆர்வமும் ஒவ்வொரு சகோதரர்களின் முகத்திலும் கண்டதென்னவோ சொல்லாமல் சொல்லியது.... இங்கு வராதவர்களும் வந்திருக்கலாமோ என்றும் ஏங்க வைத்தது.

நல்லுறவையே நடுவில் வைத்து நாலாபுறமும் இருக்கும் அதிரைச் சகோதரர்களை அரவனைக்க விடுக்கப்பட்ட அழைப்பினை ஏற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து சங்கமித்த சகோதரர்கள் மற்றும் இந்நிகழ்வை ஏற்பாடு செய்த சகோதரர்கள் அனைவருக்கும் ஜஸாக்கல்லாஹ் ஹைர் !

இத்தருணத்தில் ஒரு முக்கிய விடயத்தை பதிகிறோம், உங்களின் மடிக் கணினி அல்லது, மேசைக் கணினி, அல்லது கையடக்க கணினி, அல்லது அலைபேசி இவைகளில் எதனைத் திறந்ததும் இன்று மின்னஞ்சல் ஒன்றினை கண்டிருப்பீர்கள் அதுதான், அதிரை கல்விச் சேவையகம் அறிமுகம் ! அங்கே எடுத்து வைக்கப்பட்டிருக்கும் நலனைக் கருத்தில் கொண்டு உங்களின் பங்களிப்பை (குழுமத்தில் இணைவதிலும்) செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ்...

كل عام و انتم بخير

ஜஸாக்கல்லாஹ் ஹைர் !


- அதிரைநிருபர்-குழு

13 Responses So Far:

Ahamed irshad said...

ஆஹா சூப்ப‌ர் ப‌கிர்வு.. அருமை வாழ்த்துக்க‌ள்..

ஈத் முபார‌க்...

sabeer.abushahruk said...

அதிரை நிருபர்:

அமைதியின் அழுத்தமான ஆளுமை
அருமையான பதிவு
அற்புதமான முயற்சி
சிலசமயம்...
அவசர உதவிக்கும் :)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

மின்னஞ்சல்கள் தொடர்ந்து வரப்பெற்று அழைத்தவர்கள் யரென்று தெரியாமல் குழம்பியிருந்த நிலையிலும், Who is Who யார் யாரெல்லாம் என்ற கேள்விக் கணைகள் எழத்தான் செய்தது... அதன் பின்னர் ஒன்றன் பின் ஒன்றாக சுய அறிமுகங்களும் பரஸ்பரம் தொடர்ந்ததது மின்னஞ்சலுக்கு பின்னாலும்.

அட ! அதிரை மக்களின் ஆர்வம் ஒன்றாக சந்திக்க வியக்க வைத்தது, இது ஒரு ஏக்கமாக இது நாள் வரை இருந்திருக்கலாம், அல்லது யார் யாரெல்லாம் வந்திருக்கிறார்கள் என்று காணத்தூண்டும் ஆவலுடன் அங்கே வந்திருக்கலாம், அல்லது நோக்கம் நல்லதே அதன் பங்கில் நாமும் பங்கெடுப்போமே என்ற உணர்விலும் வந்திருக்கலாம்.

எது எப்படியிருந்தாலும், ஒரு நாள் இப்படி ஒரு ஒங்கினைப்பு வேண்டுமென்று ஏங்க வைத்தது என்னவோ உண்மை !

அவரவர்களின் உள்ளத்தில் உள்ளதை அல்லாஹ் நன்கறிவான் !

Muhammadh said...

Masha Allah great meeting... Alhamdulillah...
All praise belongs to allah...

ZAKIR HUSSAIN said...

My Dear Brothers in UAE.... i really miss you...

zubair said...

லெ.மு.செ ஜூபைர்

அருமையான இந்த ஏற்பாடு மிக்க மகிழ்ச்சி இது போன்று வரும் ஆண்டுகளில் மற்ற நாடுகளிலும் நம்மூரை சார்ந்த மக்கள் மனகசப்புகளை நீக்கி ஒற்றுபட துஆ செய்வோம். இவற்றின் தாக்கம் இறைவன் நாடினால் நம்மூரிலும் மாற்றத்தை ஏற்படுத்தும்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அமீரக அதிரை ஒருங்கிணைவின் அருமைக் காணொளிகள்.
நாளை ஒட்டுமொத்த அதிரையின் ஒருங்கிணைவை காணவேண்டும்.
அது இனி ஒன்றுபட்ட அதிரை என பறைசாற்ற வேண்டும்.
இனி நம் தேவைகளை ஒன்றுபட்டு போராடி பெறவேண்டும்.

Unknown said...

பார்த்து நாளாகிப்போன நன்பனையும் சகோதரனையும் சுற்றமும் பார்த்தேன்!

அல்ஹமதுலில்லாஹ்!ஈத் முபாரக்!!

noohu said...

அருமையான இந்த ஏற்பாடு.வாழ்த்துக்க‌ள்..

அபு இஸ்மாயில் said...

அஸ்ஸலாமு அழைக்கும் மிக அற்புதமான ஏற்பாடு மற்ற பகுதிகளில் இருந்து வந்தவர்களுக்கு உணவு (பெருநாள் பசியற) ஏற்பாடு யார் செய்தது.? இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய ஹஜ்ஜு பெருநாள் அன்றும் இதுபோல் ஒரு சிறந்த ஒன்று கூடல் ஏற்பாடு செய்யலாம்

அதிரைநிருபர் பதிப்பகம் said...

மின்னஞ்சல் வழி கருத்துக் கவிதை
---------------------------------------------------------

மண்ணின் மைந்தர் கூடியே
மகிழ்வா லாரத் தழுவியே
எண்ணம் குளிரப் பேசியே
எல்லாம் மறந்துச் சிரிக்கவே
எண்ணி லடங்கா நினைவிலே
ஈகைத் திருநாள் கழிந்ததே
கண்ணை இமைதான் காத்திடும்
கடமை யுணர்வு கண்டுதான்
விண்ணி லிருந்து இறைவனும்
விரைந்து வாழ்த்தி யருளுவான்

யாப்பிலக்கண: மா+மா+விளம் (அரையடிக்கு)என்னும் வாய்பாட்டில் அமையும் அறுசீர் விருத்தம்
கீழ்க்காணும் சுட்டியைச் சொடுக்கினால்

மேற்காணும் கவிதையின் விளக்கம் காணொளியின் காணலாம்
”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பிறப்பிடம்)
அபுதபி(இருப்பிடம்)

எனது வலைப்பூத் தோட்டம் http://www.kalaamkathir.blogspot.com/

அப்துல்மாலிக் said...

இந்த சந்திப்பின் மகிழ்ச்சியை எந்தவகையில் வெளிப்படுத்தினாலும் தகும், எல்லாவகையான இயக்கங்களையும் கடந்து சந்தித்தது பெருமைக்குரியது இதுவே அதிரையன்களின் ஒற்றுமையை பரைசாற்றும் ஒரு சிறு புள்ளி, இன்ஷா அல்லாஹ் வரும் காலங்களில் இது மாதிரி சந்திப்புகள் அடிக்கடி நடைபெற ஊக்கப்படுத்தவேண்டும், இந்த ஏற்பாட்டிற்காக பாடுபட்ட்ட அனைவருக்கு என் நன்றிகள் பல...

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்

அமீரகத்தில் இந்த வருட நோன்புப் பெருநாள் சந்திப்பு,உண்மையில் மறக்க முடியாதது.

இது போன்று தொடர்ந்து மாதம் ஒருமுறையாவது செய்யவேண்டும். நிச்சயம் ஊர் நலனுக்காக ஒரு நல்ல பலனைத் தரும் என்பது சந்தித்த எல்லோருடைய நம்பிக்கை.

பள்ளி பருவத்தில் பழகிய நண்பர்கள் பலரை பல வருடங்கள் கழித்து மீண்டும் நேரில் காண்பது மிக்க மகிழ்ச்சியே.

இந்த சந்திப்பு ஏற்பாட்டார்களை நிகழ்வுக்கு வந்த அனைவரும் பாராட்டினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு