Friday, January 10, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஊடக போதை ! 54

அதிரைநிருபர் | December 08, 2011 | , , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அன்பானவர்களுக்கு....
முகவுரை:
இன்று நேற்று என்றில்லாமல் நீண்ட காலமாக இஸ்லாத்திற்கு எதிரான வேலையில் உலகில் உள்ள பெரும்பாலான ஊடகங்கள் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் ஈடுபடுகிறார்கள் என்பதை நம்மில் பலர் அறிந்திருந்தாலும் அவைகளை பொருட்படுத்தாமல், பின் விளைவுகளை அலசி ஆராயாமல் காலத்தை கடத்திக் கொண்டிருக்கிறோம். இவற்றால் நாம் அடைந்து வரும் இன்னல்களுக்கு அளவே இல்லை. வருங்கால சந்ததியினரும் இந்த கேடுகெட்ட ஊடகங்களால் பல கொடிய இன்னல்களை சந்திக்க நேரிடும் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
சைத்தானின் கட்டுப்பாட்டில் உள்ள அநேக ஊடகங்களின் அட்டூழியங்களை அவ்வப்போது கட்டவிழ்த்து விடும் நிகழ்வுகளை வைத்து அலசி ஆராயும் விதமாக இந்த பதிவை தொடராக பதியலாம் என்ற எண்ணம் வலுப்பெற்றது.
பொய்யை மற்றும் ஆபாசத்தை மட்டுமே மூலதனமாக கொண்டு செயலாற்றி வரும் உலக, இந்திய, தமிழ் ஊடகங்களை எதிர்த்திடும் அல்லது களையெடுக்கும் வேலையை நாம் செய்ய உணர்ச்சிகளின் வேகம் ஒரு புறமிருந்தாலும். அவ்வப்போது அதிரையில் இணைய மற்றும் தினசரி ஊடகத்துறையில் சாதனை படைக்க துடிக்கும் பலருக்கு ஊக்கமும், உற்சாகமும் தந்து நல்ல படிப்பினைகளுடன் கூடிய வழிகாட்டலுடன், யாருடைய மனதையும் புண்படுத்தாமல், மாறாக பண்படுத்தி. நட்புரீதியான விமர்சனங்களை எடுத்து வைத்து அவர்களை மெருகூட்டவும் ஒரு வழியை ஏற்படுத்தலாம் என்ற கோணத்திலும் இந்தப் பதிவு ஒரு தொடராக பயணிக்க உள்ளது.
ஊடகம் (தினசரி பத்திரிக்கைகள், வாரப்பத்திரிக்கைகள், மாதப்பத்திரிக்கைகள், தொலைக்காட்சி, சினிமா, இணையம், மின்னாடல் குழுமம்) என்ற போர்வையில் நடைபெரும் விரட்டியடிக்கப்பட்ட சைத்தானியத்தனத்துக்கும், முனாஃபிக்தனத்துக்கும் (நயவஞ்சகத்திற்கும்) சாட்டையடி கொடுக்கும்விதமாக (நமக்குள்) தனிமனிதச் சாடல்கள் எவ்விதத்திலும் கலந்துவிடாமல் அதே நேரத்தில் அழகிய பெயர்களைக் கொண்டு அல்லது அழைக்கும் பெயரே அழகென்றால் உங்களைப்பற்றிய தனிமின்னஞ்சல் அறிமுகம் செய்து கொண்டு அனைத்து வாசக நேசங்களும் மேலான கருத்துக்களை பதியலாம்.
அதிரை ஊடகங்கள்:
முதலில் வெளி ஊடகங்களை அவதானிக்கும் முன் இணைய ஊடகத்தில் அதிரைவாசிகளின் பங்கு எவ்வாறு உள்ளது?. வலைப்பூக்களின் எண்ணிக்கையும் அதனை கையாளும் விதமும், நுட்பமும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஏறிய விலையை குறைக்க அரசுகள் முழி பிதுங்குவதுபோல் எண்ணிக்கையை குறைப்பது சாத்தியமாகுமா என்பது கேள்விக் குறியே. தகவல்கள் / செய்திகளின் தரத்தை வைத்து நாமும் கனிசமான எண்ணிக்கையில் அதிரை வலைத்தளங்கள் / இணையதளங்களின் பக்கம் சென்று நமக்கு தேவையான நல்லவைகளை எடுத்துக் கொண்டு, நல்லவை அல்லாதது என்றறியப்படுபவைகளை அப்படியே ஒதுக்கி வைக்கிறோம்.

இது ஒரு புறமிருந்தாலும் போலியான புனைபெயர்களை விரும்பிய வகையில் வைத்துகொண்டு உண்மையின் / நேர்மையின் / சாடுவதற்கு ஒதுங்கும் நிழல்களாக வெகு சில சகோதரர்கள் ஏதோ சமூகத்தையும் ஊடகத்துறையிலும் மாற்றம் செய்யலாம் என்றும் துடிக்கிறார்கள். இது சரியா / தவறா என்பதை விரிவாகத்தான் பார்க்க வேண்டும்.
போலிப் புனைபெயர்களில் (தங்களை யாரென்றே தெரியப்படுத்தாதவர்கள்) எழுதுபவர்களாகட்டும், அப்படி எழுதுபவர்களை ஊக்குவிப்பவர்களாகட்டும். அவர்கள் எடுத்து வைக்கும் வாதம் அல்லது நல்ல / எதிரான கருத்துக்கள் சரியாக இருக்கும் பட்சத்தில், முகம் / நிஜப் பெயர் தெரியாத நிழலாக கருத்துரையாடுவதால் பின்னூட்டத்தில் பின்னால் ஒட்டவும் / ஊக்கம் ஊட்டவும் செய்வதில் என்ன பயன் என்பதை உணர்ந்துதான் அவ்வாறு போலிப் புனைபெயர்களில் எழுதுகிறார்களா என்பது வினாவுக்குரியதே !
மற்றொரு பார்வையில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நன்மையை நாடி இதுபோன்று போலியான புனைபெயர்களில் வலம் வருகிறோம் என்ற ஒரு வாதத்தை எடுத்துக் கொண்டால். உண்மையை ஒளிந்துக்கொண்டு எடுத்துச்சொல்ல இஸ்லாத்தில் அனுமதியுண்டா? அப்படியிருக்குமாயின் அதனைச் சான்றாக எடுத்துக் காட்டிவிட்டு போலியான புனைபெயரில் எழுதுவதில் நியாயம் உள்ளது. சில சந்தர்ப்பங்களில் போலி புனைபெயர்வாதிகளின் எழுத்துக்கள் நல்ல ரசனைக்காக படிப்பதற்கும் ஆராவரமாக இருக்கும்படியான நகைச்சுவையுடன் வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் போலி புனைபெயரில் விழிப்புணர்வு என்பது நம்பகத் தனமையற்ற முற்றிலும் போலித்தனமான ஊடக நயவஞ்சகம் என்று சொல்லுவதை விட வேறு என்னதான் சொல்ல முடியும். மொத்தத்தில் நிழலோடு உரையடுவதால் நேர விரையமே மிச்சம்.
'இறைத்தூதர் அவர்களே! இஸ்லாத்தில் சிறந்தது எது?' என்று நபித்தோழர்கள் கேட்டதற்கு 'எவருடைய நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறாரோ அவரின் செயலே சிறந்தது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ மூஸா(ரலி) அறிவித்தார் ஷஹீஹ் புகாரி, Volume :1 Book :2.

உண்மை விசுவாசி தன் நாவினாலோ அல்லது கரத்தாலோ சக முஸ்லீமுக்கு அநீதி இழைக்க மாட்டான் என்பது மேல் சொன்ன நபிமொழியின் மூலம் உணர்த்தப்படுகிறது.
(நபியே!) நீர் கூறுவீராக: மனிதர்களின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்;  (அவனே) மனிதர்களின் அரசன்;  (அவனே) மனிதர்களின் நாயன்; பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் தீங்கை விட்டும் (இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்); அவன் மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான்;  (இத்தகையோர்) ஜின்களிலும், மனிதர்களிலும் இருக்கின்றனர்.  அல்குர்ஆன் 114:1 முதல் 114:6 வரை.
உண்மையான இறை விசுவாசி சைத்தனின் செயலான ஒழிந்து பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்க மாட்டான் என்பது மேற் சொன்ன திருக்குர்ஆன் வசனத்தின் மூலம் உணர்த்தப்படுவதை கவனிக்கலாம். நன்மை செய்கிறோம் என்றும் விழிப்புணர்வு செய்கிறோம் என்றும் சொல்லி மக்களிடையே வீண் குழப்பம் ஏற்படுத்தி தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் நம்பகத் தனமையை நிலைநாட்டாமல் போலிப்பெயர்களில் வலம் வருபவர்கள் விரட்டியடிக்கப்பட்ட சைத்தானின் சூழ்ச்சியில் சிக்கியிருக்கிறார்களோ என்ற அச்சம் ஏற்படுவதை தவிர்க்க இயலவில்லை.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்'  மனிதர்களிலேயே மிகவும் மோசமானவன் இரட்டை முகத்தான் ஆவான். அவன் இவர்களிடம் செல்லும்போது ஒரு முகத்துடனும் அவர்களிடம் செல்லும்போது இன்னொரு முகத்துடனும் செல்கிறான். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.  ஷஹீஹ் புகாரி. 42 Volume :7 Book :93.
'நான்கு பண்புகள் எவனிடம் உள்ளனவோ அவன் வடிகட்டிய முனாஃபிக் ஆவான். அவற்றில் ஏதேனும் ஒன்று யாரிடமேனும் இருந்தால் அதை விட்டொழிக்கும் வரை நயவஞ்சகத்தின் ஒரு பண்பு அவனிடம் இருந்து கொண்டே இருக்கும். நம்பினால் துரோகம் செய்வான்; பேசினால் பொய்யே பேசுவான்; ஒப்பந்தம் செய்தால் அதை மீறுவான்; விவாதம் புரிந்தால் நேர்மை தவறிப் பேசுவான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். ஷஹீஹ் புகாரி, Volume :1 Book :2.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (பெற்றெடுத்த) தாய்மார்களுக்குத் துன்பம் தருவதையும், பெண் குழந்தைகளை உயிருடன் புதைப்பதையும் (நிறைவேற்றக் கடமைப்பட்டுள்ள பிற மனிதர்களின் உரிமைகளை) நிறைவேற்றாமலிருப் பதையும் பிறரின் செல்வத்தை (அநியாயமாக) அபகரித்துக் கொள்வதையும் தேவையற்ற வீண் பேச்சகள் பேசுவதையும் அதிகமாக கேள்விகள் கேட்பதையும், செல்வத்தை வீணாக்குவதையும் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு ஹராமாக (விலக்கப்பட்டதாக) ஆக்கியுள்ளான். என முகீரா இப்னு ஷுஅபா(ரலி) அறிவித்தார். ஷஹீஹ் புகாரி Volume :2 Book :43
இரட்டை முகத்தவன் (மனிதர்களின் மிகவும் மேசமானவன்), விவாதம் புரிந்தால் நேர்மை தவறி தனிமனித தாக்குதல் செய்பவன்(நயவஞ்சகத்தனம்), தேவையாற்ற வீண் பேச்சால் அதிகம் கேள்வி கேட்பவன் (விலக்கப்பட்ட செயல்) என்று மேலே சொல்ல பட்ட ஹதீஸ்களுடன் வலைத்தளங்களில் வெளியிடும் / அனுமதிக்கப்படும் சில போலிப் புனைபெயர் பின்னூட்டங்களை சற்றே அலசிப் பார்த்தால் மேற் சொன்ன மூன்று தன்மைகளில் ஒன்றோ அல்லது மூன்றுமோ ஒத்துபோவதை நம்மால் உணராமல் இல்லை. இது போன்ற வீண் சந்தேகங்களை குழப்பங்கள் விளைவிக்கும் போலி புனைபெயர்வாதிகளை ஊக்கப்படுத்துவதும் நேர விரயமே என்பதும் தெளிவே.
அழகிய பெயர்களை விரும்புபவர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு மேல் சொன்ன செய்திகளை மனதில் கொண்டு போலி புனை பெயர்வாதிகளின் நல்ல துணைப் பெயருடைய வாதிகளாக மாற்றிட, கருத்துக்களை நியாயமாக பரிமாறி நம் உண்மை பெயர்களில் அல்லது (அறிமுகப்படுத்தப்பட்ட) அடையாளப் பெயர்களில் வந்து நாமும் தெளிவுற்று மற்றவர்களையும் முடிந்தவரை தெளிவுற செய்யலாம். இது முடியாவிட்டாலும் குறைந்த பட்சம் நண்மையின் பக்கம் அழைப்பதற்காக அல்லாஹ்விடம் துஆ செய்வோம் இன்ஷா அல்லாஹ்.
முக்கியமாக ஒன்றினை நன்கு அறிந்து கொள்ள வேண்டும் நம் சமுதாயச் சகோதரர்கள் அனைவரும் சமுதாய பற்றுடையவர்களே, அவர்கள் அனைவரும் அல்லாஹ்விற்கு அஞ்சியவர்களே. அவரவர் உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ் நன்கறிந்தவ்ன். வேதனைக்குறிய விஷயம் நம் சமுதாயச் சகோதரர்களின் பெயர்களிலேயே, ம்மைப் போன்றே முகமுன் கூறியே (காவிக்)குரோதக் கும்பல் குழப்பங்களை விளைவிக்கும் நோக்குடன் நம்மிடைய ஒன்றுவிட்டு நன்றாக பழகி நம் வலைத்தளங்களிருந்தே தகவல்களை திரட்டி நமக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி கொண்டிருப்பதையும் சமீபத்தில் கண்டறியப்பட்டது தவளை தன் வாயால் கெடும் என்பதைப் போன்றே நிகழ்ந்தது. இவைகளை மனதில் நிறுத்தி நெஞ்சுரம் உடையவர்களாக நாம் நிமிர்ந்து நின்று ஊடக போதை போக்கி அங்கே இலகுவாக வலம் வருவோம், அந்தக் (காவிக்)கும்பலின் சதிவிளையாட்டை முறியடிப்போம் கைகோர்ப்போம்.
நம்மில் போலிப்பெயர் பின்னூட்டங்களின் வாயிலாக அறிந்தோ அறியாமலோ குழப்பங்களோ / சிந்தனைச் சிதறல்களிலோ ஈடுபட்டிருந்தால் அல்லாஹ்விடம் தவ்பா செய்து திருந்திக் கொள்வோமாக. போலி புனைபெயர்கள் வாயிலாக உண்டாகும் குழப்பங்களால் பாவ செயல்களிலிருந்து அல்லாஹ் நம் எல்லோரையும் பாதுகாப்பானாக என்று பிரார்த்தனை செய்தவர்களாக இந்த பதிவை நிறைவு செய்கிறோம்.
இணைய தொழில் நுட்பத்தால் இணையத்தில் அறியமுடியாதது என்று இருப்பது அரிதே என்று சொல்லும் அளவுக்கு நுட்பங்கள் நிறைந்திருக்கும் இக்கால கட்டத்தில்.இணையத்தின் தொடுப்பு எங்கிருக்கிறது அதன் மடிப்புகள் எங்கெல்லாம் மயங்குகிறது, அவைகள் எவ்வாறு செல்கிறது அடுத்து எங்கே வைக்க இருக்கிறது வேட்டு. இப்படியாக புரியாதவர்களுக்கு சூன்யமாக இருக்கும் வலைச் சிக்கலில் சிக்கியவர்களை மீட்டெப்பதும் சாத்தியமே அதனை அடுத்த பதிவுகளில் காணலாம் இன்ஷா அல்லாஹ்.
- அதிரைநிருபர் குழு

54 Responses So Far:

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். அறிமுகபடுத்திக்கொண்டு ஒரு விசயத்தை அலசுவது அதன் ஆக்கத்தின் மேல் மேலும் ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தும். மறைமுகம் இல்லாத எந்த ஒரு விசயமும் எளிதில் ஈர்த்துவிடும். நல்ல நோக்கத்தில் எழுதியிருக்கும் இந்த ஆக்கத்தின் மூலன் இனி வரும் காலத்திலாவது அறிமுகப்படுத்திக்கொண்டு ஆக்கங்கள், கருத்து பதியலாமே.

அபூ சுஹைமா said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

இதுகுறித்த வெளிப்படையான விவாதத்திற்கு முதலில் நன்றி.

போலிப் பெயருக்கும் புணைப் பெயருக்கும் நிறையவே வித்தியாசம் உள்ளது. இந்தத் தளத்தில் அபுஇபுறாஹீம் என்ற பெயரில் தன்னுடைய புணைப் பெயரில் எழுதுகிறார். இதே பெயரை நானும் பயன்படுத்தினால் அது போலிப் பெயர். அல்லது அபுஇபுறாஹீம் என்பதை அபூ இபுறாஹீம் என்றோ அல்லது அபு இப்றாஹீம் என்றோ பயன்படுத்தினாலும் அது போலிப் பெயர்.

புணைப் பெயரைப் பயன்படுத்த இஸ்லாத்தில் தடை இல்லை என்பதை இந்த ஆக்கத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள ஹதீதுகளே தெளிவுபடுத்திவிடும். உதாரணமாக அபூ மூஸா (ரலி). இவர் மூஸாவின் தந்தை என்ற குறிப்பு மட்டுமே உள்ளது. மூஸாவை அறிந்தவர்கள் வேண்டுமானால் இவரது பெயரையும் அறிந்திருக்க முடியும். மூஸா என்பவரை அறியாத நாம் இவரது பெயரை அறிய மாட்டோம். அதற்காக இந்த ஹதீதை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று கூற முடியாது.

இந்த ஆக்கத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள மற்றொரு புணைப் பெயர் அபூ ஹுரைரா(ரலி). மிக முக்கியமான இந்த சஹாபியின் உண்மையான பெயர் நம்மில் பெரும்பாலோருக்குத் தெரியாது.

எனவே புணைப் பெயரைப் பயன்படுத்த மார்க்கத்தில் எவ்விதத் தடையும் இல்லை. ஒரே ஒரு நிபந்தனை அந்தப் பெயர் இஸ்லாத்துக்கு விரோதமானதாக இருக்கக் கூடாது. வேறு ஒருவரின் அடையாளத்தைப் போன்ற பெயராகவும் இருக்கக் கூடாது.

அபூ சுஹைமா said...

M.H. ஜஹபர் சாதிக் சொன்னது…
//புனைப்பெயரில் வரும் பின்னூட்டங்களை குறிப்பாக அதிரை எக்ஸ்.மற்றும் BBC தவிர்த்துவிடுவது நல்லது.//

ஜஹபர், முதலில் புணைப் பெயர்கள் தவறா என்பதில் ஒரு முடிவு காண்போம்.

ஜஹபர் சாதிக் என் பள்ளித் தோழன் எனவே உன்னை நான் அறிவேன். இதுபோன்றே அதிரையின் மற்ற சகோதரர்களும் உன்னை அறிந்திருப்பார்கள் என்று கூற இயலாது. உன்னைப் பற்றித் தெரியவில்லை எனில், உன்னை தனி மடலில் தொடர்பு கொண்டு, நீ யார்? எந்த தெரு?, எத்தனை வயது? போன்ற விவரங்களைக் கேட்டறிந்து கொள்ளலாம். அப்படியும் ஒரு தெளிவு கிடைக்காமல் போனால், நீங்க மேலத்தெருதானே, ஹாஜா ஷரீஃப் தெரியுமா? அப்துல் ஹலீம் தெரியுமா? அவங்களோட க்ளாஸ்மேட் நான் என்று கூறலாம். இது தனி மடல்களில் சாத்தியம். பொது வெளியில் இது சாத்தியம் இல்லை.

நடுத்தெருவைச் சார்ந்தவர்களுக்கும் தற்போது லண்டனில் இருப்பவர்களுக்கும் வேண்டுமானால் உன்னைப் பற்றித் தெரியக் கூடும். உன்னைப் பற்றித் தெரியாதவர்களிடம் இத்தனையையும் அறிமுகப்படுத்திக் கொள்வது வரை, அதாவது உன்னைப் பற்றித் தெரியாதவரை ஜஹபர் சாதிக் என்பதே கூட புணைப் பெயர் போலத்தான்.

sabeer.abushahruk said...

அபு சுஹைமாவின் கருத்தில் அர்த்தமுள்ளது.
காட்டாக: ஊரிலோ நாட்டிலோ உள்ள ஏதாவது ஓர் அவலத்தை சுட்டிக்காட்ட விழையும்போது அந்த அவலத்தால் பலன் பெற்றுவரும் ஓர் இயக்கத்தாலோ கூட்டத்தாலோ சுட்டிக்காட்டியவருக்கு இன்னல் வரும் வாய்ப்புள்ளதால் அவர் தம்மை வெளிக்காட்டிகொள்வதில் விவேகம் இல்லை. எனவே, அந்நிலையில் அடையாளம் காண முடியாத ஒரு பெயரேத் தேவைப்படுகிறது.

ஆனால், அதே சமயம், சாதாரண உரையாடல்களின்போது அடையாளம் காணப்பட்ட புனைப்பெயரிலோ (உ.அபு இபுறாகீம், அபு சுஹைமா, க்ரவுன்) சொந்தப்பெயரிலோ தோன்றுவதே சிறந்தது.

இத்தொடரின் நிறைவுக்குள் இலக்கை எட்டிவிடமுடியுமெனில் சந்தோஷமே.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்..

//போலிப் பெயருக்கும் புணைப் பெயருக்கும் நிறையவே வித்தியாசம் உள்ளது. இந்தத் தளத்தில் அபுஇபுறாஹீம் என்ற பெயரில் தன்னுடைய புணைப் பெயரில் எழுதுகிறார். இதே பெயரை நானும் பயன்படுத்தினால் அது போலிப் பெயர். அல்லது அபுஇபுறாஹீம் என்பதை அபூ இபுறாஹீம் என்றோ அல்லது அபு இப்றாஹீம் என்றோ பயன்படுத்தினாலும் அது போலிப் பெயர்.//

இபுறாஹிமுடையை வாப்பாவாகிய நெய்னாதம்பின் பெயரை காட்டு எடுத்த கருத்தாகியதால் தெளிவாக சொல்வதென்றால்... கட்டுரையில் முழுமையாக வாசித்ததால் சொல்கிறேன்.

புனைப்பெயர்கள் (அறியப்பட்ட) என்பது தாங்கள் குறிப்பிட்ட ஹதீஸ்களின் அறிவிப்பாளரையே காட்டாக சுட்டியதுபோல் கட்டுரையிலும் நன்கு அறியப்பட்ட நம்பகத்தன்மையுடைய தகவலை பதிபவர்களுக்குத்தான் பொருந்தும்

புணைப் பெயர்கள் என்று வைத்துக் கொண்டு எதை வேண்டுமானுலும் எழுதாம்தான் (அது எழுத்துச் சுதந்திரம்) இஸ்லாத்திற்கு எதிராக எழுதாத வரையில் மட்டுமே.

இது நமக்குள் : சொல்லப்பட்ட விஷயம் மாற்றாக புரிந்துணர்வுப்பட்டதோ என்ற ஐயமே எழுகிறது..

புனைப்பெயர்களில் வார்த்தையாடலும் உரையாடல்களும் நமக்குள் ஏன் ? நம்மை நாமே சரி செய்து கொள்ள நேரடியாக அறிமுகப்படுத்திக் கொண்டு உரையாடலாமே என்ற நோக்கமும் உள்ளடக்கம்.

புதிது புதிதாக முளைத்துக் கொண்டு புரட்சியும் புல்லரிப்பும் செய்கிறோம் என்று வரக்கூடிய பெயர்களை காட்டாக வைத்துதான் எழுதப்பட்டது.

அதி முக்கியமாக :

//முக்கியமாக ஒன்றினை நன்கு அறிந்து கொள்ள வேண்டும் நம் சமுதாயச் சகோதரர்கள் அனைவரும் சமுதாய பற்றுடையவர்களே, அவர்கள் அனைவரும் அல்லாஹ்விற்கு அஞ்சியவர்களே. அவரவர் உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ் நன்கறிந்தவன். வேதனைக்குறிய விஷயம் நம் சமுதாயச் சகோதரர்களின் பெயர்களிலேயே, நம்மைப் போன்றே முகமுன் கூறியே (காவிக்)குரோதக் கும்பல் குழப்பங்களை விளைவிக்கும் நோக்குடன் நம்மிடைய ஒன்றுவிட்டு நன்றாக பழகி நம் வலைத்தளங்களிருந்தே தகவல்களை திரட்டி நமக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி கொண்டிருப்பதையும் சமீபத்தில் கண்டறியப்பட்டது தவளை தன் வாயால் கெடும் என்பதைப் போன்றே நிகழ்ந்தது. இவைகளை மனதில் நிறுத்தி நெஞ்சுரம் உடையவர்களாக நாம் நிமிர்ந்து நின்று ஊடக போதை போக்கி அங்கே இலகுவாக வலம் வருவோம், அந்தக் (காவிக்)கும்பலின் சதிவிளையாட்டை முறியடிப்போம் கைகோர்ப்போம்.//

அதிரைநிருபர் said...

அன்பு சகோதரர் அபூ சுஹைமா அவர்களுக்கு...

இங்கே குறிப்பிட்டுள்ளது போலிப்பெயர் (அறியப்படாத) பின்னூட்டவாதிகளை மட்டுமே குறிப்பிட்டுள்ளோமே தவிர, அறிமுகமான புணைப்பெயர்களான, அபூ சுஹைமா, அபூ பிலால், அபூ மூஸா அல்லது அபுஇபுறாஹீம் போன்ற புணைப்பெயர்களை அல்ல.

உதாரணத்திற்கு இன்னாருடைய மகன், மகள், இன்னாருடைய தகப்பன் என்று தன்னை அழகிய முறையில் (அறிமுகப்படுத்தப்பட்ட வகையில்) அடையாளப்படுத்தி வரும் புணைப் பெயர் குறித்து இந்த பதிவு தவறாக ஏதும் சொல்லவில்லை.

தான் யார் என்று தெரியப்படுத்தாமலேயே கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் நிழலாக வருபவர்களின் பின்னூட்டங்களில் நம்கத்தன்மை ஏற்படுவதில்லை (அவைகள் வதந்திகளாவோ வேறு விதமாகவோ மாறிவிட வாய்ப்புகள் அதிகமே).

அவர்களை ஊக்கப்படுத்துவது சரியா / தவறா ? என்பதுதான் இங்கே வைத்திருக்கும் வினா !? இதுபோன்ற போலிப்புணைப்பெயர் பின்னூட்டவாதிகள் பொதுவில் பின்னூட்டம் என்ற பெயரில் வீண் சந்தேகங்களையும் தனிமனித சாடல்களையும் ஏற்படுத்தி குழப்பமேற்படுத்துகிறவர்களை இங்கு குர்ஆன் ஹதீஸ்களை எடுத்துகாட்டி குறிப்பிட்டுள்ளோம்.

இதுபோன்ற போலிப்புணைப்பெயர் பின்னுட்டவாதிகளின் பெயர் பின்னூட்டங்களால் நல்ல அறிமுகமான புணைப்பெயருடன் கருத்திடுபவர்களை கூட சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்க்கும் நிலைக்கு தள்ளப்படுகிறது.

இவைகள் அனைத்தையும் அதிரைத் வலைப்பூக்களை மையமாக வைத்தே எழுதப்பட்டது.

அதற்காகத் தான் போலிப் புணைப்பெயர்வாதிகள் என்று அநேக இடங்களில் குறிப்பிட்டுள்ளோமே அன்றி, தாங்கள் குறிப்பிட்டது போல் அபூ முஸா, அபூ ஹுரைரா, அபூ சுஹைமா அபுஇபுறாஹிம் என்ற பெயர்களை அல்ல என்பதை தெளிவு படுத்திக் கொள்கிறோம்.

அபூ சுஹைமா said...

இந்த தளத்தில் பங்களிப்பாளர்களாக இருக்கக் கூடிய அபூஈசா, அலாவுதீன், அப்துல் மாலிக், இர்ஷாத், அஜிஜுதீன், யாசிர், அதிரை முஜீப் போன்ற பெயர்களும் என்னைப் பொறுத்தவரை புணைப் பெயர்களே. காரணம் இவர்களை எனக்குத் தெரியாது. இவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்று முயன்றதும் இல்லை. ஆனால் இவர்களின் எழுத்துகளை வாசித்தே வருகிறேன். அவர்களது கருத்துகள் பிடித்துப் போயிருந்தால் பின்னூட்டமும் இடுவேன்.

முஜீப் டாட்காம் தளத்தை நடத்தும் அதிரை முஜீப் என்பவன் என் பள்ளித் தோழன்தான் என்பதை அண்மையில் ஊர் சென்றிருந்த போதுதான் அறிந்தேன். அதுவரை அதிரை முஜீப் என்பதுவும் புணைப் பெயராகத்தான் எனக்கு இருந்தது.

அதுபோலவே அதிரை புதியவன், அதிரைக்காரன் என்ற பெயர்களும். இவர்களைப் பற்றி அறிந்தவர்களுக்கு இவர்கள் யாரெனத் தெரியும். யாரெனத் தெரிய விரும்புவோர் சம்பந்தப்பட்ட நபர்களைத் தொடர்பு கொண்டால் அறிமுகப்படுத்தக் கூடும்.

அதிரை புதியவன் என்ற பெயரில் ஒருவர் எழுதும்போது அதிரைப் புதியவன் என்று ஒருவர் எழுதினால் அது போலிப் பெயர். அதுபோலவே அதிரைக்காரன் என்ற பெயரில் ஒருவர் எழுதும் போது அதிரைகாரன் என்று எழுதுவது தவறு.

அதிரைக்காரன் said...

சக மனிதர்களுடன் உரையாடும்போது இன்னாருன்தான் உரையாடுகிறோம் என்று தெரிந்தால் கருத்துக்களை உரிமையாக எடுத்து வைக்கலாம். புணைப்பெயரில் எழுதுபவர் யாரென்று தெரிந்தபிறகு அவர் எந்தப்பெயரில் சொன்னாலும் அதில் எந்த வித்தியாசமும் இல்லை.அதாவது நான் அதிரைக்காரன் என்ற பெயரில் ஒருகருத்தும் என் சொந்தபெயராகிய ஜமாலுதீன் என்ற பெயரில் மாற்றுக்கருத்தும் கொண்டு இரட்டை நிலைப்பாட்டுடன் குழப்புவது முனாஃபிக் தனம்.ஆனால்,எந்தப்பெயரில் சொன்னாலும் நான் ஒரேகருத்தையே சொல்வேன் என்பதால் இணைய பொதுவெளிகளில் சொந்தப்பெயரைவிட புணைப்பெயரே எனக்கு வசதி.

மேலும்,எழுத்துலகில் புணைப்பெயரில் எழுதுவது அங்கீகரிக்கப்பட்ட ஒன்றே(சுஜாதா,ஜன்னாமைந்தன்).மார்க்கத்திலும் இதற்கு தடையில்லை. அதிகமான ஹதீதுகளை தொகுத்த "முஹம்மது இப்னு இஸ்மாயில் இப்னு இப்றாஹிம் இப்னு அல் முஹிராஹ் (ரஹ்) அவர்களை பலருக்கு தெரியாது. ஆனால் புகாரி (இமாம்) என்றால்தான் விளங்கும். சோவியத் ரஷ்யாவிலிருந்து பிரிந்த தற்போதைய உஸ்பெகிதானிலுள்ள (அக்கால கொரசான்) புகாராவில் பிறந்தவர். அவரது ஊர்பெயரால் புகாரிய் என்று அறியப்படுகிறார். அவ்வகையில்தான் அடியேனும் பெயர்காரணமும்! :)

வலைப்பூக்கள் அறிமுகமாகிய காலகட்டத்தில் சொந்தப்பெயரில் கருத்து சொன்னவர்கள் பட்ட மனஉளைச்சல்கள் குறித்து சகோ.நெய்னா தம்பி அறிவார் என்றே நம்புகிறேன்.அவ்வகையில் புணைப்பெயர் தவறில்லை ஆனால் போலிப்பெயர்கள் தவறு என்பது என் நிலைப்பாடு.

ZAKIR HUSSAIN said...

புனைப்பெயர்...ஒரிஜினல் பெயர், இதில் இவ்வளவு விசயம் இருக்கிறதா?...இதை வைத்தே ஒரு எபிசோட் ஓட்டிடலாம் மாதிரி இருக்கே.

எது எப்படி இருந்தாலும் எழுதியதற்க்கு நாம்தான் பொறுப்பு எனும் எண்ணம் வந்துவிட்டால் பிரச்சினைகள் குறைவு.

அபூ சுஹைமா said...

சகோ. அபுஇபுறாஹீம் அவர்களின் பெயரை நான் உதாரணமாகக் காண்பித்தது, என்னை அவர் நன்கறிந்தவர் என்ற முறையிலும் இந்தத் தளத்தின் நெறியாளர் என்ற முறையிலும்தானே அன்றி வேறு காரணங்கள் இல்லை என்றறிக.

//இங்கே குறிப்பிட்டுள்ளது போலிப்பெயர் (அறியப்படாத) பின்னூட்டவாதிகளை மட்டுமே குறிப்பிட்டுள்ளோமே தவிர, அறிமுகமான புணைப்பெயர்களான, அபூ சுஹைமா, அபூ பிலால், அபூ மூஸா அல்லது அபுஇபுறாஹீம் போன்ற புணைப்பெயர்களை அல்ல.

உதாரணத்திற்கு இன்னாருடைய மகன், மகள், இன்னாருடைய தகப்பன் என்று தன்னை அழகிய முறையில் (அறிமுகப்படுத்தப்பட்ட வகையில்) அடையாளப்படுத்தி வரும் புணைப் பெயர் குறித்து இந்த பதிவு தவறாக ஏதும் சொல்லவில்லை.//

புணைப் பெயர்கள் தவறில்லை. ஆனால் அந்தப் புணைப் பெயரில் இருப்பவர் யார் எனத் தெரிய வேண்டும் என்று நீங்கள் இந்தப் பின்னூட்டம் மூலம் கூறுவதாக நான் கருதுகிறேன்.

இது அனைவருக்கும் பொருந்தாது என்றே நான் நினைக்கிறேன். முந்தைய பின்னூட்டத்தில் குறிப்பிட்டது போன்று, உங்களுக்கு அறிமுகமான அனைவருமே எனக்கும் அறிமுகமானவர்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

எனக்கு அவர்கள் அறிமுகம் ஆகும் வரை அந்தப் பெயர்களும் என்னைப் பொறுத்தவரை புணைப் பெயர்களே.

அதிரைக்காரன் said...

மேற்கண்ட எனது கருத்தில் "ட" விடுபட்டுள்ளது. //சக மனிதர்களுடன் உரையாடும்போது இன்னாரு"ட"ன்தான் உரையாடுகிறோம்// வாசிக்கவும்

தஸ்தகீர் : சரிடா மாப்ளே! :)

அபூ சுஹைமா said...

கவிதை, கட்டுரைகளுக்கு மட்டுமே கருத்துகள் இடுவோம். இதுபோன்ற பிரச்சனைகளில் எங்களின் நிலையை பொதுவில் தெரிவிக்காமல் அமைதி காப்போம் என்று இருக்காமல் அதிரை நிருபரில் பின்னூட்டம் இடுபவர்கள் இந்த ஆக்கத்திற்கும் பின்னூட்டம் இட்டு தங்கள் கருத்தைத் தெரிவிக்க வேண்டுகிறேன்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//அதுபோலவே அதிரைக்காரன் என்ற பெயரில் ஒருவர் எழுதும் போது அதிரைகாரன் என்று எழுதுவது தவறு.//

மிகச் சரியே இதே போன்று எழுதத் தூண்டுதலாகிவிடுகிறதே அறியப்படாத புணைப்பெயர்களை அரவனைப்பதால் என்றுதான் சொல்ல வந்த விடையம். :)

//வலைப்பூக்கள் அறிமுகமாகிய காலகட்டத்தில் சொந்தப்பெயரில் கருத்து சொன்னவர்கள் பட்ட மனஉளைச்சல்கள் குறித்து சகோ.நெய்னா தம்பி அறிவார் என்றே நம்புகிறேன்.அவ்வகையில் புணைப்பெயர் தவறில்லை ஆனால் போலிப்பெயர்கள் தவறு என்பது என் நிலைப்பாடு. //

சகோ.அதிரைக்காரன் சொல்வது மிகச் சரியே... இதுதான் கட்டுரையின் சாரமே ! ஜஸாக்கல்லாஹ் ஹைர்...

அன்றைய உலைச்சலில் ஏன் இன்றளவிலும் ஏற்படும் அப்படியான அல்லது உலைச்சலில் சிக்காதவர்கள்தான் இப்படி பொழுதை கழிப்பதற்காகவும், சீண்டலுக்கும், Woondelக்கும் நல்ல விமர்சனம் எழுதுபவர்களை போன்றே எழுதி காயப்படுத்தி விடுகிறார்கள் கண்டனங்கள் எழும்போது மனதில் (உள்)காயம் பட்டபின்னர் "மன்னித்துக் கொள்ளுங்கள்" என்ற அடுத்த பின்னூட்டமும் தொடர்கிறது..

இப்படியான நிகழ்வுகளை நமக்குள் தவிர்க்கலாம் என்பதே.

//// மேட்டரு எனக்கும் கிரவ்ன் (எ)தஸ்தகீருக்கும் உள்ளதாச்சே ! :)

aa said...

புனைப் பெயர்களில் ஒழிந்து கொண்டு எழுதுவது மார்கத்தில் அனுமதிக்கப்பட்டதல்ல. நம் சம காலத்தில் வாழ்ந்த மார்க்க மாமேதை ஷேய்ஹ் நாசிருத்தீன் அல்பானி அவர்கள் இதை “கோழைதனமான ஏமாற்று வேலை” எனச் சொல்கிறார்கள்.
(பார்க்க: http://salafimeet.dailyforum.net/viewtopic.php?f=1&t=3)

நம்முடைய மார்கத்தில் எந்த செய்தியும் அறிவிப்பாளர் தொடருடன் தான் அங்கீகரிக்கப்படும்.அறிவிப்பாளர் தொடரில் ஒரு சின்ன அடையாளச் சிக்கல் ஏற்பட்டாலும் ஒட்டுமொத்த அறிவிப்பும் பலகீனமானது என்றே தீர்மானிக்கப்படும், கருத்து எவ்வளவு சரியாய் இருந்தபோதினும் சரியே.

மேலும் இது போன்ற புனைப் பெயர்களில் ஒழிந்து கொண்டுதான் அடுத்தவர் மீது அவதூறுகளும் வசைமாறிகளும் அள்ளி வீசப்படுகிறது.

அதேசமயம், உண்மையான பெயர்களில் எழுதும்போது Psychologically உங்களுக்கு பொறுப்புணர்வு அதிகம் உண்டாகும். எதைப் பற்றி யாரைப் பற்றி எழுதினாலும் வரம்புக்குட்பட்டு எழுதுவீர்கள்.

எனினும் நன்கு அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் புனைப் பெயர்களில் எழுதுவது தவறில்லை என்றே நினைக்கிறேன். உதாரணமாக, என்னுடைய பெயர் ஃபிர்தௌஸ். என்னைப் பற்றி நான் இன்னாருடைய மகன் இன்னார் இந்த தெரு,இந்த ஊர் என்று தெளிவான சுய அறிமுகத்திற்குப் பின்னர் இப்னு அஷ்ரஃப் என்றோ அல்லது வேறு ஏதெனும் எனக்குப் பிடித்த நல்ல புனைப் பெயர்களிலோ எழுதுவதில் தவறில்லை என்றே நினைக்கிறேன். ஆனால் துரதிருஷ்டவசமாக நம் ஊர் வலைப்பூக்களில் எழுதுவோர் வெள்ளைரோஜா, துக்ளக், மதியழகன் என்று தங்களுடைய அடையாளத்தை மறைக்கும் ஒரு உத்தியாகவே புனைப் பெயர்களைப் பயன்படுத்துகின்றனர். இவர்களைக் குறித்து என்னிடம் கேட்டால் “கோழைகள்” என்பதே என்னுடைய ஒற்றை வரி பதிலாய் இருக்கும்.

aa said...

அனாமத்தான சுய அறிமுகமற்ற போலி புனைப் பெயர் வாதிகளான் கோழைகளிடமிருந்து வரும் பின்னூட்டங்கள்/கட்டுரைகளை நமதூர் வலைபூக்கள் பிரசுரிக்க கூடாது என்று நமதூர் வலைப்பூ நிர்வாகிகளுக்கு இதன் மூலம் நான் கோரிக்கை வைக்கிறேன். குறிப்பாக நமதூரின் மூன்று முன்னோடி வலைப்பூக்களான எக்ஸ்பிரஸ், நிருபர்,பிபிஸி நிர்வாகிகள் இதில் கவனம் செலுத்த வேண்டுகிறேன்.

இந்த பெயரில்லா கோழைகள் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டால் எதிர்காலத்தில் மிகப்பெரிய Identity Crisis ஏற்படும் என்பது என்னுடைய எண்ணம். மேலும் இவர்கள் ஒழிந்து கொண்டு எழுதுவதால் யார் மீது வேண்டுமானலும் எளிதில் அவதூறு பரப்ப முடியும்.

சுருக்கமாகச் சொல்வதானால் இவர்கள் நவீன மொட்டை கடுதாசிக்காரர்கள். மொட்டைக் கடுதாசிகளால் சமூகத்திற்கு நிச்சயமாக நன்மை இல்லை.( இந்த கோழைகள் எவ்வளவு தான் சமூகத்திற்கு நன்மை செய்வதாக பிதற்றினாலும் சரியே). மாறாக மொட்டை கடுதாசிகளால் அறுந்த உறவுகளும் முறிந்த குடும்பங்களும் தான் அதிகம்.

இந்த தீயப்பழக்கத்தை இந்நிலையிலேயே அறுத்து எறிய வேண்டும். அல்லது நாம் நம்முடைய எதிர்காலச் சந்ததிகளை மொட்டைக் கடுதாசி காரர்கள் மிகைத்த்து வாழும் சமுதாயமாக விட்டுச் சென்ற பழிச்சொல்லுக்கு ஆளாவோம். முன்வருவார்களா வலைப்பூ நிர்வாகிகள்?

அதிரைக்காரன் said...

//புனைப் பெயர்களில் ஒழிந்து கொண்டு எழுதுவது மார்கத்தில் அனுமதிக்கப்பட்டதல்ல.//

சகோ.ஃபிர்தவ்ஸ், உங்கள் வாக்கியத்தில் "ஒளிந்து கொண்டு" (ஒழிந்து கொண்டு என்றால் 'அழிந்து கொண்டு' என்று அர்த்தம்:) என்பதை தவிர்த்து புணைப்பெயரில் எழுதுவது மார்க்கத்தில் அனுமதிக்கப்படாததா? என்பதை சான்றுகளுடன் வைக்கவும்.

நானும் என் ப்ரொஃபைலில் ஜமாலுதீன் என்றும்,வேறொரு ப்ரொஃபைலில் வேறொரு பெயரிலும் முன்னுக்குப்பின் முரணாக அல்லது குழப்பம் ஏற்படுத்தும் நோக்கில் செயல்பட்டால் அது புணைப்பெயராக இல்லா விட்டாலும் தவறு. இதைத்தான் நீங்கள் புணைப்பெயருக்கு மட்டும் பொருத்திக் குழப்பிக்கொள்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.சொந்தப் பெயரில்/புணைப்பெயரில் அல்லது எந்தப்பெயரில் இருந்தாலும் மார்க்க வரம்பை மீறாமல் எழுதவேண்டும் என்பது எல்லாருக்கும் பொருந்தும்.

ஊடகங்களில் நமது பொறுப்புகள் அதிகரித்துள்ள நிலையில் நல்ல கருத்துள்ளோர் ஏதாவது ஒரு பெயரில் இயங்கட்டுமே. எழுதுபவருக்கும் வாசிப்பவருக்கும் பயனுள்ளதாக இருப்பதே அவசியம்.

aa said...

@அதிரைக்காரன்: ’ஒழிந்து/ஒளிந்து’ வித்தியாசத்தை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.

என்னுடைய கருத்தை முழுமையாக படிக்கவும் //நன்கு அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் புனைப் பெயர்களில் எழுதுவது தவறில்லை என்றே நினைக்கிறேன். உதாரணமாக, என்னுடைய பெயர் ஃபிர்தௌஸ். என்னைப் பற்றி நான் இன்னாருடைய மகன் இன்னார் இந்த தெரு,இந்த ஊர் என்று தெளிவான சுய அறிமுகத்திற்குப் பின்னர் இப்னு அஷ்ரஃப் என்றோ அல்லது வேறு ஏதெனும் எனக்குப் பிடித்த நல்ல புனைப் பெயர்களிலோ எழுதுவதில் தவறில்லை என்றே நினைக்கிறேன். //

புனைப் பெயர்களில் ஒளிந்து கொண்டு (அதாவது கோழைத்தனமாக அடையாளத்தை ஒளித்துக்கொண்டு) எழுதுவது அனுமதிக்கப்பட்டதல்ல என்பதற்கு சேஹ் அல்பானி அவர்களின் தீர்ப்பை மேற்கோள் காட்டியிருந்தேன் (சுட்டியை கிளிக் செய்து ஆங்கில கட்டுரையை வாசிக்கவும்)

அதிரைக்காரன்: ஊடகங்களில் நமது பொறுப்புகள் அதிகரித்துள்ள நிலையில் நல்ல கருத்துள்ளோர் ஏதாவது ஒரு பெயரில் இயங்கட்டுமே
Vs
அஹமத் ஃபிர்தௌஸ்: நம்முடைய மார்கத்தில் எந்த செய்தியும் அறிவிப்பாளர் தொடருடன் தான் அங்கீகரிக்கப்படும்.அறிவிப்பாளர் தொடரில் ஒரு சின்ன அடையாளச் சிக்கல் ஏற்பட்டாலும் ஒட்டுமொத்த அறிவிப்பும் பலகீனமானது என்றே தீர்மானிக்கப்படும், *கருத்து எவ்வளவு சரியாய் இருந்தபோதினும் சரியே* .

Unknown said...

அப்பப்பா...! எத்தனை எத்தனை உணர்வோட்டங்கள்!
புனைப்பெயர் - தவறு. புணைப்பெயர் - தவறு. புனைபெயர்தான் சரி. அதாவது, புனைந்த பெயர், புனைகின்ற பெயர், புனையும் பெயர் என்று முக்காலத்துக்கும் உரித்தாகி, 'வினைத் தொகை' எனும் இலக்கணப் பிரிவைச் சாரும். இது இருக்கட்டும்.

வலைத்தளப் பொறுப்பாளர்களுக்கு அறிமுகமான புனைபெயர்களை அனுமதிக்கலாம். அவ்வாறு யாரென்று அறியப்படாதவற்றைப் புறந்தள்ளலாம்.

அண்மையில் புனைபெயரில் ஒளிந்திருக்கும்ஒருவரின் கருத்து நன்றாயிருந்ததால், அதைப் பாராட்டி, "நீங்கள் யார்?" என்று கேட்டபோது, அவர் சொன்ன பதில்: (மறைந்தே இருப்பேன்.) அப்போதுதான் சில பெரும்புள்ளிகளையும் விமரிசிக்கலாம்." Just forget them.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//புனைபெயர்தான் சரி. அதாவது, புனைந்த பெயர், புனைகின்ற பெயர், புனையும் பெயர் என்று முக்காலத்துக்கும் உரித்தாகி, 'வினைத் தொகை' எனும் இலக்கணப் பிரிவைச் சாரும். இது இருக்கட்டும்./

எங்கள் ஆசான் அவர்களுக்கு... :)

பள்ளிக் காலங்களில் இலக்கணம் தலையில் வைக்கப்பட்ட கனமாக இருந்தது.

இன்று இலக்கணமும் இலக்கியமும் இனிமையோ இனிமை நீங்கள் சொல்லித் தரும்போதும் உங்களின் எழுத்துக்களை வாசிக்கும்போதும்!

அப்படியே ஆகட்டும் தங்களின் பரிந்துரைப்படியே இன்ஷா அல்லாஹ்.../

Unknown said...

என்னப்பா இது? எத்துக் குத்தா, ஏறுக்கு மாறா, மேலே கீழே, கீழே மேலே பதிவாகுது...!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

//இந்த கேடுகெட்ட ஊடகங்களால் பல கொடிய இன்னல்களை சந்திக்க நேரிடும் என்பதை யாராலும் மறுக்க முடியாது.//
இதை கருத்தில் கொண்டே எல்லா வகையிலும் நாம் ஆக்கப்பூர்வமான முயற்சியில் இறங்க வேண்டும்.அவ்வப்போது ஒன்றிணைந்து எதிர்ப்புகளை கச்சிதமாக செய்து காட்டி தடுக்க வெண்டும்.

புனைப்பெயரில் வரும் (சர்ச்சைக்குரிய, பிறர் மனம் பாதிக்கும் என கருதக்கூடிய) பின்னூட்டங்களை குறிப்பாக அதிரை எக்ஸ்.மற்றும் BBC தவிர்த்துவிடுவது நல்லது.

சுஹைமாவுடைய அன்புத்தந்தையே என் தோழனே.நீ சொல்ல வந்த விசயங்கள் அனைத்தும் மற்றும் அடைப்புக்குறிக்குள் எழுத விடுபட்டதை என் ரயில் பயணத்தில் தான் உணர்ந்தேன். நீ சொல்வதை மறுப்பதற்க்கில்லை.

இது போகட்டும். நம் பிள்ளைகளின் கல்யாணப் பத்திரிக்கையிலாவது ஒரிஜினல் பெயருக்கு வந்தால் சரி தான் தோழா!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//என்னப்பா இது? எத்துக் குத்தா, ஏறுக்கு மாறா, மேலே கீழே, கீழே மேலே பதிவாகுது...! //

தனிக் குடில் (blogger) சேவை வழங்கிய வசதிகளில் முதலில் கருத்தூட்டமிடுபவர்களை முதலிலும் கடைசியாக கருத்தூட்டமிடுபவர்களை கடைசியிலும் காட்டுவதை வழமையாக் கொண்ட அமைப்புடன் இருக்கிறது.

சமீபத்தில் "நட்புக்குத் தோழர்கள்" பரிசு என்ற பதிவுக்கு கிடைத்த வரவேற்பும் அதற்கு பதியப்பட்ட பின்னூட்டங்கள் 200க்கு மேல் தாண்டியதால் கருத்தை பதிந்த பின்னர் வாசிக்க கீழே ஓடவேண்டியிருப்பதை சகோதரர்கள் உணர்த்தியதாலும் அவர்களின் வேண்டுகோளுக்கினங்க, முதலில் பதிந்த கருத்து கீழும் அடுத்தடுத்த பின்னுட்டங்கள் ஒன்றன் முன் ஒன்றாக மேலாக வரும்படி செய்திருக்கிறோம்... :)

Shameed said...

அபூ சுஹைமா சொன்னது…

//கவிதை, கட்டுரைகளுக்கு மட்டுமே கருத்துகள் இடுவோம். இதுபோன்ற பிரச்சனைகளில் எங்களின் நிலையை பொதுவில் தெரிவிக்காமல் அமைதி காப்போம் என்று இருக்காமல் அதிரை நிருபரில் பின்னூட்டம் இடுபவர்கள் இந்த ஆக்கத்திற்கும் பின்னூட்டம் இட்டு தங்கள் கருத்தைத் தெரிவிக்க வேண்டுகிறேன்//


பின்னூடமிடுவது கிடைக்கும் நேரத்தில் வாசிக்கும் போது ரசித்தையும் நேசித்ததையும் பதிகிறோம் இதுவே வேலையாக இருப்பதுமில்லை. அதுவும் வேலை நேரங்கள் தவிர்த்து கிடைக்கும் ஓய்வு நேரத்தில்தானே பதியமுடியும்

Shameed said...

என்னை பொறுத்தவரை வாப்பா உம்மா வைத்த பெயரை ஒதுக்கி வைத்து விட்டு புனை பெயரோ துணை பெயரோ தேவை இல்லை எந்த விசயமாக இருந்தாலும் தன் சொந்தபெயரில் சொல்ல வேண்டும் ,சொந்த பெயரில் சொல்ல முடியவில்லை என்றால் அந்த விஷயத்தை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றுதான் சொல்வேன் இது என் தனிப்பட்ட கருத்து

அபூ சுஹைமா said...

அதிரை அஹ்மது சொன்னது…

//வலைத்தளப் பொறுப்பாளர்களுக்கு அறிமுகமான புனைபெயர்களை அனுமதிக்கலாம். அவ்வாறு யாரென்று அறியப்படாதவற்றைப் புறந்தள்ளலாம்.

அண்மையில் புனைபெயரில் ஒளிந்திருக்கும்ஒருவரின் கருத்து நன்றாயிருந்ததால், அதைப் பாராட்டி, "நீங்கள் யார்?" என்று கேட்டபோது, அவர் சொன்ன பதில்: (மறைந்தே இருப்பேன்.) அப்போதுதான் சில பெரும்புள்ளிகளையும் விமரிசிக்கலாம்." Just forget them.//

நன்றி மாமா!

பின்னூட்டங்களை அனுமதிப்பது தொடர்பாக அதிரை எக்ஸ்பிரஸின் நிலைப்பாடு ஒவ்வொரு பதிவின் கீழும் கொடுக்கப்பட்டுள்ளது. அது இதுதான்...

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

தனிநபர்களைத் தாக்கி எழுதும் பதிவுகளை அனுமதிக்காத அதேவேளை அதிரை எக்ஸ்பிரஸையோ, அதன் முக்கியப் பங்களிப்பாளர்களையோ தாக்கி வரும் பின்னூட்டங்களை அனுமதித்தே வருகிறோம். அவற்றுக்குப் பதில் அளிக்கும் முகமாய்.

அதிரைக்காரன் கூறியது போன்று, சொந்தப் பெயரில்/புணைப்பெயரில் அல்லது எந்தப்பெயரில் இருந்தாலும் மார்க்க வரம்பை மீறாமல் எழுதவேண்டும் என்பது எல்லாருக்கும் பொருந்தும்.

வெள்ளைரோஜா, துக்ளக், மதியழகன் போன்ற பெயர்களைச் சுட்டிய சகோ. ஃபிர்தவ்ஸ் இதே தளத்தில் அதுரப்பழசு என்ற புணைப் பெயரிலும் தலைத்தனையன் என்ற பெயரில் எழுதியதையும் சுட்டவில்லை. காரணம் இந்தப் பெயர்களில் எழுதியவர்கள் தனி நபர் தாக்குதல் தொடுக்கவில்லை. அநாகரீகமாக எழுதவில்லை. எனவே இவர்களின் பின்னூட்டங்கள் பிரச்சனையாகத் தெரியவில்லை.

இதுவே அதிரை எக்ஸ்பிரஸின் நிலைபாடு.

நீங்கள் எழுதுவது யாராகவேனும் இருக்கட்டும். மார்க்க வரம்பை மீறாமல் எழுதட்டும்.

அபூ சுஹைமா said...

//அஹமத் ஃபிர்தௌஸ்: நம்முடைய மார்கத்தில் எந்த செய்தியும் அறிவிப்பாளர் தொடருடன் தான் அங்கீகரிக்கப்படும்.அறிவிப்பாளர் தொடரில் ஒரு சின்ன அடையாளச் சிக்கல் ஏற்பட்டாலும் ஒட்டுமொத்த அறிவிப்பும் பலகீனமானது என்றே தீர்மானிக்கப்படும், *கருத்து எவ்வளவு சரியாய் இருந்தபோதினும் சரியே*//

பின்னூட்டங்களில் கருத்திடுவோரின் கூற்றுகள் மார்க்கச் சட்டங்களன்று. எனவே அறிவிப்பாளர் தொடரை இதற்கு ஒப்பாய் கூறுவது சரியன்று. இது சரியென நீங்கள் வாதிடுவீர்களெனில், என்னைப் பொறுத்தவரை அஹ்மது ஃபிர்தவ்ஸ் யாரென அறீயப்படாதவர். :-) (அதாவது நீங்கள் யார் என எனக்குச் சரியாத் தெரியவில்லை.)

அபூ சுஹைமா said...

Shameed சொன்னது…

//பின்னூடமிடுவது கிடைக்கும் நேரத்தில் வாசிக்கும் போது ரசித்தையும் நேசித்ததையும் பதிகிறோம் இதுவே வேலையாக இருப்பதுமில்லை. அதுவும் வேலை நேரங்கள் தவிர்த்து கிடைக்கும் ஓய்வு நேரத்தில்தானே பதியமுடியும்.//

ஹமீது காக்கா,

என்னுடைய வேண்டுகோளைத்தான் எழுதினேன். கட்டளையை அல்ல. :-)

அதிரை நிருபரில் வெளியான விவாதத்திற்குரிய, நம்மையும் பாதிக்கக் கூடிய பல கட்டுரைகளுக்கு பின்னூட்டங்கள் குறைவாகவும் நம் மொழி வளத்தைப் பறைசாற்றும் கவிதைகளுக்கு கூடுதல் பின்னூட்டங்களும் வந்துள்ளதை ஏற்கனவே அறிந்ததாலேயே இந்த வேண்டுகோள்.

அபூ சுஹைமா said...

இறுதியான பின்னூட்டம் டைப்பிக் கொண்டிருக்கும்போது, என் அருகில் இருந்த ஜமாலுத்தீன் (பீ.மு.) மற்றொரு நபரிடம் "முஜீப் டாட் காமென்றால் யாருடா?" என்று கேட்டான்.

அவன் என்னிடம், "யாரு? நடுத்தெருவுல கடை வச்சிருக்காரே! அவரா?" என்றான். சிரித்தேன். "கடல்கரைத் தெருவா" என்றான். அதற்கும் சிரித்தேன்.

இதுவரை அவர்களுக்கு முஜீப் டாட்காம் முஜீப் புனை பெயர்தான். இந்த கமெண்டை பதிந்த பின்னர்தான் அவர்களிடம் சொல்ல வேண்டும். :-)

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

எது எப்ப‌டியோ என் புனையில்லாத‌ பெய‌ர் : மு.செ.மு. நெய்னா முஹ‌ம்மது தானுங்கோ. ந‌ம் எழுத்திற்கு நாம் தான் பொறுப்பு என்ப‌த‌ற்காக‌வும், இந்த‌ நெய்னாவாக‌ இருக்குமோ அந்த‌ நெய்னாவாக‌ இருக்குமோ? என்ற‌ ச‌ந்தேக‌த்திற்கு இட‌ம் கொடுக்காமல் இருப்பதற்காகவும் என் குடும்ப‌ விலாச‌ம் பெய‌ருக்கு முன்னால் செருக‌ப்ப‌ட்டுள்ள‌து.

உண்மையை ஆணித்த‌ர‌மாக‌ எடுத்துரைப்ப‌தால் சில‌ ச‌ம‌யம் வாழ்க்கைப்படிகள் உயரலாம் இல்லையேல் அடிக‌ளென்ன‌, அடித்துக்கொல்ல‌வும் ப‌ட‌லாம். எதற்கும் நாம் த‌யாராக‌த்தான் இருக்க‌ வேண்டும்.

மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.
புனை பெயர்களின் போராட்டத்திற்கு மத்தியில் தன் பெயரை புதுப்பித்துக் கொண்ட எம்.எஸ்.எம். நெய்னாவின் புதுமை.நீங்களும் புறப்புடுங்கள் குடும்ப விலாசத்தோடு.எளிதாக நீங்கள் யாரெண்டு புரிந்திடலாம்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

அழகான அறிமுகப்படுத்தப்பட்ட புனைபெயரில் எழுதுவதில் தவறில்லை.

போலியான பெயர்களின் குழப்பம் விளைவிப்பவர்களுக்கு ஓர் எச்சரிக்கையாகவே இந்த பதிவில் உள்ள குர்ஆன் மற்றும் ஹதீஸ்களை நாம் எடுத்துக்கொள்ளலாம். அநேக போலிபெயர் பின்னூட்டங்களை படித்துப்பார்த்தால் மேல் சொன்ன குர்ஆன் வசனம் மற்றும் ஹதீஸ்களில் ஏதாவது ஒரு தன்மை அல்லது அனைத்து தன்மைகளும் கொண்டதாகவே இருக்கிறது என்பதை அவதானிக்க முடிகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. அறிந்தோ அறியாமலோ மார்க்க வரம்புகள் மீரப்படுகிறதா இல்லையா?

போலியான பெயர்களில் வந்து பின்னூட்டம் என்ற பெயரில் நல்லதோ கேட்டதோ எழுதிவிட்டு, நாங்கள் யார் என்று சொல்ல மாட்டோம் எங்கள் கருத்தை மட்டும் சொல்லுவோம் என்பது எவ்வகையில் அவர்களின் கருத்துக்கு நம்மகத்தன்மை ஏற்படுத்தும் என்பது புரியவில்லை.மார்க்கத்தின் அடிப்படையில் எவ்வகையான போக்கு என்பதையும் புரிந்துக்கொள்ள முடியவில்லை.

இது போன்ற போக்கை சரி என்று மார்க்க ரீதியாக யாராவது விளக்கினால் எல்லோருக்கும் பயனுல்லதாக இருக்கும். நிழல்களோடு உரையாடுவது வெறும் பொழுதுபோக்காக மட்டுமே இருக்க முடியுமே தவிர சமூக பொருப்புணர்வு என்று சொல்லுவது சற்றே யோசிக்க வைக்கிறது.

எல்லாவற்றையும் மிக அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே..

aa said...

@அபூசுஹைமா: //பின்னூட்டங்களில் கருத்திடுவோரின் கூற்றுகள் மார்க்கச் சட்டங்களன்று. எனவே அறிவிப்பாளர் தொடரை இதற்கு ஒப்பாய் கூறுவது சரியன்று.//. இது பிழையானக் கூற்று. மார்க்கச் சட்டங்கள் மட்டுமல்ல, விமர்சனங்கள், தகவல்கள், வரலாறு, செய்திகள் உள்ளிட்ட எதுவாக இருந்தாலும் நம்பகத்தண்மை அவசியம். அதே போல் மார்க்க கல்வி பயில்வதிலும், யாரிடம் பயில்கிறோம் என்பது மிக மிக முக்கியம். “யார் நல்லது/சரியானது சொன்னாலும் ஏற்றுக்கொள்வோம்” என்பது வழிகேடு மட்டுமல்ல, அப்பட்டமான மடமைத்தனத்தின் வெளிப்பாடு.

“ஈமான் கொண்டவர்களே தீயவன் ஒருவன் உங்களிடம் செய்தி கொண்டு வந்தால் அதை தீர விசாரித்துக் கொள்ளுங்கள்", (இல்லையேல்) அறியாமையினால் (குற்றமற்ற) ஒரு சமூகத்துக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம், பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே வருத்தப்படுவீர்கள்" (அல் குர்ஆன் - 49:6)”

அபூசுஹைமா: // இது சரியென நீங்கள் வாதிடுவீர்களெனில், என்னைப் பொறுத்தவரை அஹ்மது ஃபிர்தவ்ஸ் யாரென அறீயப்படாதவர். :-) (அதாவது நீங்கள் யார் என எனக்குச் சரியாத் தெரியவில்லை.)//

முதலில் ஒருவரை அடையாளம் தெரியவில்லை என்பதற்கும், ஒருவர் தன்னுடைய அடையாளத்தை மறைக்கிறார் என்பதற்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன். உதாரணமாகச் சொல்வதானால், ஒரு சபையில் ஒருவர் எழுந்து பேசுகிறார் என வைத்துக்கொள்வோம். சபையில் இருக்கும் பிறிதொரு நபர் “யார் இவர், இவரை எனக்கு அறியவில்லையே” என பிறரிடம் விசாரிக்கிறார். இது ஒரு வகை. இன்னுமொரு வகை அதே சபைக்கு ஒரு கோழை மொட்டைக் கடுதாசி(பெயர், முகவரி இல்லாத அனாமத்து கடுதாசி) அனுப்புகிறார். இந்த இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை நீங்கள் நன்கு அறீவிர்கள்.

அடுத்து நான் யார் எனத்தெரிவதற்கு பல வகைகள் உண்டு. பின்னூட்டத்தில் உள்ள என்னுடைய பெயரை கிளிக் செய்தாலே என்னப் பற்றி சிறு அறிமுகம் உண்டு. மேலும் அதிரைநிருபரின் நிர்வாகிகள் என்னை நன்கு அறிவர்.
உங்கள் தகப்பனார் மர்ஹும் அலி(ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் என்னை “மச்சானுடைய பேரன்” என உரிமையுடன் அழைப்பார்கள். அடுத்து அதிரை எக்ஸ்பிரஸ் Google Groupல் நானும் ஒரு உறுப்பினரே, அப்படி உறுப்பினராகச் சேரும் போது என்னைப் பற்றிய முழு தகவலும் அதில் உள்ளது. அதையும் நீங்கள் படித்து அறிந்து கொள்ளலாம். இப்பவும் என்னை உங்களால் அறிந்து கொள்ள முடியவில்லை என்றால், அது என் தவறல்ல.

அஹமத் ஃபிர்தௌஸ்
(ஆலடித் தெரு)
தொடர்புக்கு: ahamed.firdhous@gmail.com

Unknown said...

எல்லா செயல்களும் மனதில் கொண்ட நிய்யத்தின்(எண்ணத்தின்) படி நடக்கின்றன. அதனால் நிய்யத்தை விரிவுபடுத்துவது அவசியம். அதாவது நம்முடைய எழுத்தாக்கங்கள் நம்மூர் சகோதர சகோதரிகளுக்கு மட்டுமன்று, விரிவாகி உலத்தின் தமிழ் தெரிந்த சகோதர சகோதரிகளுக்கும பயன்படும் வகையில் இருக்கவேண்டும். சுய சீர்திருத்தமும் சமூக முன்னற்றமும் சீர்திருத்தமும் முன்னிலையாய் ஆக்கத்தில் அமையும்போது தரம் மிளிரும். புனைபெயர் ஒரு பொருட்டல்ல. நல்ல நிய்யத்(எண்ணம்) அடிப்படை அனைத்து படைப்பாளி((அழிவாளிகளல்ல))களுக்கும்.

அபூபக்கர்-அமேஜான் said...

புனை பெயர்களை வைத்து எல்லா ஊடகத்தை மிரட்டவும் செய்யலாம் அதை நேரத்தில் பாராட்டி பேசவும் செய்யலாம். ஏன் புனை பெயர் பேரில் கருத்துக்கள் பரிமார வேண்டும் நல்ல கருத்துக்களை சொல்லும்போது உண்மையான பெயரில் சொல்ல வேண்டியதுதானே. உண்மையான பெயரை சொன்னால் யாரும் ஒன்றும் செய்ய போவது கிடையாது நீங்கள் எந்தவிதமான அச்சமுமின்றி நல்ல விஷயங்களை பரிமாறலாம். புனை பெயர் வைக்கும் போது நல்ல விசயங்கள் சொன்னாலும் யார் என்று குழப்பத்தில் இருக்க வேண்டும் உங்களுடைய அழகான பெயர் இருக்கும் போது ஏன் புனை பெயர் வைக்கணும். புனை பெயர் வைப்பவர்கள் அவர்களுடைய கருத்துக்களை ஆழமாக சிந்தித்து எழுதுகிறார்கள் அப்படி எழுதினாலும் யார் என்று தெரியாமல் போய்விடுகிறது அவர்களுக்கு எந்த விதமான பதில்களும் கிடைக்கவில்லை. கல்யாண பத்திரிக்கையிலும் செல்ல பெயர் சொல்லி புனை பெயர் தான் போடிகிறார்கள் புனை பெயர்களை நிறுத்த வேண்டும்.
எது எப்படி இருந்தாலும் எழுதியதற்க்கு நாம்தான் பொறுப்பு எனும் எண்ணம் வந்துவிட்டால் பிரச்சினைகள் குறைவு.

Yasir said...

தாமதமாக கருத்து பதிவதற்க்கு மன்னிக்கவும் பணி மட்டும் பண பிசி... குழப்பங்களை ஏற்படுத்தும் புனைபெயர்தான் சமுதாய சாபக்கேடு ..உலகில் பெயர்கள் எதற்க்காக வைத்து அழைக்கபடுகின்றன..ஒருவரிடம் நம்மை அறிமுகபடுத்தி கொள்ளவும் நமக்கென ஒரு அடையாளத்தை உண்டுபண்ணவும்தான்....எல்லா விசயத்தில் நீங்கள் (உங்கள மனசாட்சியை கேட்டு சொல்லுங்கள்) மார்க்கம் சொன்னதையும்,நபி (ஸல் ) அவர்கள வாழ்ந்தபடியுமா வாழ்ந்து வருகிறீர்கள்...100% இல்லாவிட்டாலும் அட்லீஸ்ட் 2% சதவீதமாவது ??.....புனைப்பெயர்கள் குழப்பதை ஏற்படுத்துமே தவிர...தங்கள் சொல்லவரும் கருத்தை கண்ணியப்படுத்தாது....உண்மையை சொல்லப்போனால் குழப்பவாதிகள்தான் அறிந்திராத புனைபெயர்களில் புழங்குவார்கள்..புனைபெயர்கள் அதிகம் பயன்படுத்துவர்களும் அதனால் பயன் அடைந்து வருபவர்களும் இஸ்ரேலியர்கள்தான் (முக்கியமா மொசாத்)...பல உதாரணங்களை என்னால் அதற்க்கு சொல்லமுடியும்..அதனால் யூதர்கள் தங்கள் திட்டங்களை எளிதாக முடிக்க பயன்படுத்தும் புனைப்பெயர்களை நீங்கள் பயன்படுத்தாதீர்கள்...உங்கள் கருத்து சொல்லப்பட்டால் உங்கள் உயிருக்கும் அல்லது மற்றவகையிலும் பாதிப்பு ஏற்படும் என்று தெரிந்தால்..கருத்து சொல்லவேண்டாம்..சும்மாவாது இருங்கள்.

வாப்பா உம்மா ஆடு வெட்டி அருமையாக வைத்த அழகான பெயர்களை பயன்படுத்துங்கள்.....தன் குழந்தைகளின் பெயர்களை சேர்த்து அழைத்துகொள்வது கூட எனக்கு சரியாக படவில்லை(பயன்படுத்தி கொண்டிருப்பவர்கள் மன்னிக்கவும்)... ஒவ்வொரு மனிதனுக்கும் தனி, சொந்த அடையாளம் வேண்டும் என்பது என் கருத்து..நாளை உங்கள் மகன்/மகள் எதாவது மானக்கேடான செயலை செய்துவிட்டுவரும்போது ( அல்லாஹ் காப்பற்றவேண்டும் )..அவன் வாப்பா என்றே சொல்ல கூச்சப்படும் நீங்கள் ...அவன் பெயரை உங்களுடன் சேர்த்துக்கொண்டதற்க்கு அறுவருப்புபடுவீர்கள்..எந்த நாட்டு இமிக்கிரேஷனாவது புனைபெயர்களை அனுமதிக்கிறதா அது சட்டவிரோதமும் கூட so be yourself...Show your own identity. Let’s make healthy social and environmental atmosphere

aa said...

@யாசிர், கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

//.தன் குழந்தைகளின் பெயர்களை சேர்த்து அழைத்துகொள்வது கூட எனக்கு சரியாக படவில்லை// தன் குழந்தையின் பெயருடன் தன்னை இணைத்து அழைப்பது தவறல்ல. மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டது தான்.இன்னும் சொல்லப்போனால் 1400 ஆண்டுகளாக இந்த பழக்கம் இஸ்லாமிய சமுதாயத்தில் இருந்தே வந்துள்ளது. சத்திய ஸ்ஹாபாக்களும் அவர்களை பின்தொடர்ந்து வந்த சத்தியவான்களும் இத்தகைய பெயர்களை பயன்படுத்தி வந்தே உள்ளனர். இதை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அங்கீகரித்தே உள்ளார்கள். அல்லாஹ்வின் தூதர் அவர்களுக்கே அபுல் காசிம் என்ற சிறப்பு பெயரும் உண்டு என்பது கூடுதல் தகவல்.

பிரச்சினை என்னவென்றால் இத்தகைய பெயர்களை தன்னுடைய அடையாளத்தை மறைக்கும் ஒரு உத்தியாகவும்,பிறரை ஒளிந்து கொண்டு விமர்சிக்க ஒரு ஆயுதமாகவும் பயன்படுத்துவதே. இஸ்லாமிய வரலாற்றில் நாம் படிக்கும் நாயகர்களின் புனைப் பெயர்களுடன் அவர்களுடைய நிஜப் பெயர், நாடு, கோத்திரம் உள்ளிட்டவற்றையும் நாம் சேர்த்தே பார்க்கலாம். இவர்கள் யாரும் புனைப் பெயரை அடையாளத்தை மறைக்கும் கோழைச்செயலுக்காக பயன்படுத்தவில்லை.

*நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு* பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்;அல்குர்ஆன் 49:13

Yasir said...

//தன்னை இணைத்து அழைப்பது தவறல்ல. மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டது தான்// தங்களின் கண்ணியமான விளக்கத்திற்க்கு நன்றி சகோ.அஹ்மத்ஃபிர்தவுஸ்....மகன்/மகள் பெயரை சேர்த்துக்கொள்வது அரபுகளின் கலாச்சார வழக்கம்...ஆனால் அது இஸ்லாம் இல்லை....இந்திய முஸ்லிம்களின் வழக்கத்தில் அது இல்லை நாம் நமது மார்க்கத்தின் அனைத்து சட்டத்திட்டங்களையும் கடைபிடித்து இத மட்டும் விட்டிருந்தால்..ஒகே ஒத்துகொள்ளலாம்...மார்க்கத்தில் அவசியமாக கடைப்பிடிக்கவேண்டியவை 1000 மிச்சம் இருக்க இச்சிறிய விசயத்தை மட்டும் எடுத்துகொண்டு சிலர் பெருங்குழப்பதை ஏற்படுத்துவதைதான் சொல்லவந்தேன்..மற்றபடி கருத்து அழகாக,ஆரோக்கியமாக இருந்தால் ஒரு தடவை சுய அறிமுக படுத்திவிட்டு உங்கள் பேத்தி/ பேரன் பேரில் கூட எழுதுங்கள்...அதில் தவறு இல்லை..

அபூ சுஹைமா said...

அன்புச் சகோ. பிர்தவ்ஸ்,

உங்களைப் பார்த்த நினைவில்லை. என்றாலும், நெருங்கிவிட்டீர்கள். அல்ஹம்துலில்லாஹ். சாட்டிங்கில் தொடர்பு கொண்டு இன்னார் என்றும் கூறினீர்கள். எனவே, "யாரென அறியப்படாதவர்" என்ற கமெண்டை திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். :-)

என்னுடைய நிலைப்பாட்டை மீண்டும் தெளிவுபடுத்திக் கொள்கிறேன்.

புனை பெயரைப் பயன்படுத்த இஸ்லாத்தில் தடை இல்லை. புனை பெயர் இஸ்லாத்துக்கு விரோதமான பொருளைக் கொண்டிருக்கக் கூடாது. புனை பெயர் வேறு ஒருவரின் அடையாளத்தைப் போல (இதுதான் போலிப் பெயர்)வும் இருக்கக் கூடாது. புனை பெயரில் எழுதுபவர் யார் என அறிந்து கொள்ள ஆவல் ஏற்பட்டால் அவர்களைத் தனி மடல்களில் தொடர்பு கொண்டு கேட்கலாம். சொந்தப் பெயரிலோ புனைபெயரிலோ எந்தப் பெயரில் எழுதினாலும் மார்க்க வரம்பை மீறாமல் எழுத வேண்டும்.

இவற்றை இந்தப் பதிவுக்கு நான் இட்டுள்ள பின்னூட்டங்களில் குறிப்பிட்டுள்ளேன்.

அதிரைக்காரன் கூறியது போன்று புனைபெயரில் ஒரு மாதிரியாகவும் சொந்தப் பெயரில் அதற்கு மாற்றமாகவும் எழுதுவது நயவஞ்சகத்தனம்.

புனை பெயரில் எழுதுபவர்கள் தங்களுக்கு அச்சுறுத்தல் என்பதால் தங்கள் அடையாளத்தை மறைத்து எழுதுகின்றனர். (காண்க சபீர் காக்காவின் பின்னூட்டம்.) நான் அதிரை வலைப்பூக்களில் அபூசுஹைமா என்ற பெயரைத் தவிர வேறு பெயர்களில் வரவில்லை என்பதால், இதற்குமேல் இதுகுறித்து பொதுவில் கூறவிருப்பமில்லை.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//அபூ சுஹைமா சொன்னது… புனைபெயரைப் பயன்படுத்த இஸ்லாத்தில் தடை இல்லை. புனை பெயர் இஸ்லாத்துக்கு விரோதமான பொருளைக் கொண்டிருக்கக் கூடாது. புனை பெயர் வேறு ஒருவரின் அடையாளத்தைப் போல (இதுதான் போலிப் பெயர்)வும் இருக்கக் கூடாது. புனை பெயரில் எழுதுபவர் யார் என அறிந்து கொள்ள ஆவல் ஏற்பட்டால் அவர்களைத் தனி மடல்களில் தொடர்பு கொண்டு கேட்கலாம். சொந்தப் பெயரிலோ புனைபெயரிலோ எந்தப் பெயரில் எழுதினாலும் மார்க்க வரம்பை மீறாமல் எழுத வேண்டும்.//

இங்கு புனைபெயர்கள் மற்றும் போலி புனைபெயர்கள் பற்றிய சுய விளக்கம் மட்டும் தரப்பட்டு வருகிறதே தவிர, இது போன்ற அனுகுமுறை பற்றி மார்க்க ரீதியான தெளிவான விளக்கம் இதுவரை யாரும் தரவில்லை.

//அபூ சுஹைமா சொன்னது… புனைபெயரில் எழுதுபவர்கள் தங்களுக்கு அச்சுறுத்தல் என்பதால் தங்கள் அடையாளத்தை மறைத்து எழுதுகின்றனர்.//

சக முஸ்லீம் சமூகத்துடன் கருத்துப் பரிமாற்றம் செய்யும் போது அச்சுறுத்தல் என்ற அடிப்படையில் இப்படி புனைபெயரிலோ அல்லது தங்களை அடையாள படுத்த மறுக்கும் போலி புனைபெயரிலோ வந்து தங்களின் கருத்துக்களை எடுத்துரைப்பது இஸ்லாமிய அடிப்படையில் சரியா? யாராவது தெளிவுபடுத்தினால் நிச்சயம் புனைபெயர் அல்லது போலி புனைபெயர் விடையத்தில் நல்ல தெளிவு ஏற்படும்.

இப்னு அப்துல் ரஜாக் said...

சொந்தப் பெயரிலோ,புனைப் பெயரிலோ எழுதுவது தவறல்ல.என்ன எழுதுகிறார்கள் என்று மட்டுமே பார்ப்பது நலம்.அவரவர்க்கு சில காரணங்கள் இருக்கும்.சொந்தப் பெயரில் எழுதும் பலர் சுய தம்பட்டம் கொண்டு எழுதுவதும்,புனைப் பெயரில் எழுதுபவர்கள் கண்ணியமாகவும் எழுதுவதையும் நாம் காண முடியும்,அதேபோன்று உல்டாவாக நடப்பதும் உண்டு.அல்லாஹ்விற்காக எழுதுபவர்கள் இதை கண்டு கொள்ளாமல் விடுவதே நல்லது.இது கருத்து சுதந்திரம்,பிளாக் நடத்தும் நம் சகோதரர்கள் எப்போதும் மட்டுறுத்தல் செய்து கமென்ட் வெளியிடுவது நல்லது.யார் என்று தெரியாவிட்டாலும்,(சொந்தப் பெயர்,புனைப் பெயர் மற்றவர்களுக்கு அவர் அனானிதான்.

அபூ சுஹைமா said...

தாஜுதீன் சொன்னது…

//இங்கு புனைபெயர்கள் மற்றும் போலி புனைபெயர்கள் பற்றிய சுய விளக்கம் மட்டும் தரப்பட்டு வருகிறதே தவிர, இது போன்ற அனுகுமுறை பற்றி மார்க்க ரீதியான தெளிவான விளக்கம் இதுவரை யாரும் தரவில்லை.//

தாஜ்,

புனைபெயருக்கும் போலிப் பெயருக்கும் வித்தியாசம் உள்ளது. இரண்டும் ஒன்றல்ல. இதற்கான உதாரணத்தை ஏற்கனவே நான் கூறியுள்ளேன். போலி பெயர் புனைபெயர்களில் இருந்து மட்டும்தான் உருவாக்க முடியும் என்பதில்லை. அபூசுஹைமா என்ற பெயரைக்கூட ஒருவர் போலியாக வைத்துக் கொள்ள முடியும். அதிரை அஹ்மது என்ற பெயரில் வேறு சிலரும் நமதூரில் இருக்கக் கூடும். ஆனால், அதிரை அஹ்மது என்ற பெயர் பதிவர் வட்டத்தில் குறிப்பிட்ட நபரைச் சுட்டும் பெயராக அறியப்பட்ட பின், அந்தப் பெயரைப் பயன்படுத்துவது கூட கூடாது என்பதுதான் எனது நிலை.

அதிரை எக்ஸ்பிரஸை மீண்டும் இயக்குவது என்று முடிவு செய்த பின் (ஷஃபாத்தின் வேண்டுகோளை அடுத்து) "பயணிக்கும் உறுதியில்" என்ற தலைப்பில் வெளியான ஆக்கத்தில் புனை பெயர் குறித்து எழுதியது..... (இது பதிவர்களுக்குத்தான். பின்னூட்டமிடுபவர்களுக்கு அல்ல...)

http://adiraixpress.blogspot.com/2011/11/blog-post.html

பதிவர்கள் யார் என நிர்வாகத்திடம் அறிமுகப்படுத்திக் கொண்டு புனை பெயர்களில் பதியலாம். அல்லாஹ்வுக்கு அஞ்சியபடி, பொதுநலன் பேணும் பதிவுகளை சொந்தப் பெயரிலோ அல்லது பலருக்கும் பரிச்சயமான புனைபெயரிலோ எழுதி அனுப்பலாம். அத்தகைய பதிவுகளுக்கும் பின்னூட்டங்களுக்கு சம்பதப்பட்ட பதிவரே பொறுப்பு என்பதோடு தேவையெனில் அதிரை எக்ஸ்பிரஸ் சார்பில் விளக்கமும் கொடுக்கப்படும்.

புனைபெயர்கள் மார்க்கத்தில் தடுக்கப்பட்டதல்ல என்றாலும் அப்பதிவில் உரையாடும்போது சில சந்தர்ப்பங்களில் ஸலாம் கூற, பாராட்டு தெரிவிக்க போன்ற சூழல்களில் எளிதில் அடையாளம் காணும் வகையில் பெயரை வைத்துக்கொண்டால் வாசகர்களுக்கு வசதியாக இருக்கும் என்பதை சம்பந்தப்பட்ட பதிவர்களுக்கு ஆலோசனையாகச் சொல்கிறோம். வாசகர்கள் நிர்வாகத்தை தனிமடலில் தொடர்பு கொண்டு "இவர் யார்?" எனக் கேட்டால் அவரிடம் தங்களுடைய உண்மைப் பெயர்களைக் கூற அனுமதி தரும் புதிய பங்களிப்பாளர்கள் இணைக்கப்படுவார்கள்.

Anonymous said...

புனை பெயர் வைத்து தேவை இல்லாத செய்திகளை எழுதாமல் இருந்தால் சரிதான். புனை பெயர்களை தடுத்து விட்டு நிஜ பெயர்களை வாப்பா,உம்மா வைத்த பெயர்களை எழுதுங்கள்.வாப்பா, உம்மா உங்களுக்கு நல்ல பெயர்கள் வைத்திருக்கும் போது ஏன் புனை பெயர் வைக்க வேண்டும்.

மு.செ.மு.அபூபக்கர்

Kuthub bin Jaleel said...

//வாப்பா உம்மா ... அருமையாக வைத்த அழகான பெயர்களை பயன்படுத்துங்கள்..... //

தம்பி Yasir சொன்னது மிகச் சரி. நல்லதைச் சொல்ல துணிச்சல் வேண்டும். கூடுதலாக photo-வும் இருந்தால் நல்லது.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்பு சகோதரர் அபூ சுஹைமா

(பொதுவில் விவாதிப்பதால் முறை சொல்லி அழைக்கவில்லை)

மார்க்க ரீதியான விளக்கம் இதுவரை கிடைக்கவில்லை. பரவாயில்லை. இருந்தாலும் இதுவரை போலிபெயர்களுக்கும் புனைப்பெயர்களுக்கும் உள்ள வித்யாசத்தை விளக்கியமைக்கு மிக்க நன்றி. ஜஸகல்லாஹ்.

அநேக வலைத்தளங்களில் போலி புனைபெயர்களில் சிலர் மார்க்க வரம்பை மீறுகிறார்கள் என்பதை ஒரு எச்சரிக்கையாக குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் சில போலிபெயரில் வரும் பின்னூட்டங்களின் தன்மைகள் இந்த பதிவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வலை/இணையதளங்களின் அருமை பெருமை கருதாமல், ஊடகம் என்பது பொழுது போக்குக்காக மட்டுமல்ல என்பதை உணர்ந்து, சமுதாய நலன் கருதி மார்க்கத்தை எவ்வகையிலும் விட்டுக்கொடுக்காமல் நன்பகத்தன்மை ஏற்படுத்தும்விதமாக, குறைந்தபட்சம் நம் மக்களுடன் பொதுவில் உரையாடும் போதாவது நம் கருத்துக்களை நியாயமாகவும், ஆதாரங்களுடன் எடுத்துவைத்து ஊடகத்துறையில் கண்ணியத்துடன் தன்னிரைவு பெற்ற சமுதாயமாக நம் சமுதாயம் உருவாகும் காலம் வெகுவிரையில் இல்லை. இன்ஷா அல்லாஹ்.

Ahamed irshad said...

இந்த தளத்தில் பங்களிப்பாளர்களாக இருக்கக் கூடிய அபூஈசா, அலாவுதீன், அப்துல் மாலிக், இர்ஷாத், அஜிஜுதீன், யாசிர், அதிரை முஜீப் போன்ற பெயர்களும் என்னைப் பொறுத்தவரை புணைப் பெயர்களே. காரணம் இவர்களை எனக்குத் தெரியாது. ///

அபூ சுஹைமா..இது கூட‌ என‌க்கு தெரியாத‌ பெய‌ர்தான்..ஆனால் உங்க‌ளை தெரியும்.:)) உங்க‌ கூட‌ சாட்டில் பேசியிருக்கிறேனே காக்கா..க‌டைசியில் தேட‌ப்ப‌டுவோர் லிஸ்ட் மாதிரி ஒரு லிஸ்ட‌ போட்டு என்னையும் தெரியாதுன்னு சொல்லீட்டீங்க‌ளே..இதை க‌ண்டிச்சு டீ குடிச்சிட்டு வ‌ந்துடுறேன்..

அபூ சுஹைமா said...

அஹமது இர்ஷாத் சொன்னது…

//இந்த தளத்தில் பங்களிப்பாளர்களாக இருக்கக் கூடிய அபூஈசா, அலாவுதீன், அப்துல் மாலிக், இர்ஷாத், அஜிஜுதீன், யாசிர், அதிரை முஜீப் போன்ற பெயர்களும் என்னைப் பொறுத்தவரை புணைப் பெயர்களே. காரணம் இவர்களை எனக்குத் தெரியாது. ///

அபூ சுஹைமா..இது கூட‌ என‌க்கு தெரியாத‌ பெய‌ர்தான்..ஆனால் உங்க‌ளை தெரியும்.:)) உங்க‌ கூட‌ சாட்டில் பேசியிருக்கிறேனே காக்கா..க‌டைசியில் தேட‌ப்ப‌டுவோர் லிஸ்ட் மாதிரி ஒரு லிஸ்ட‌ போட்டு என்னையும் தெரியாதுன்னு சொல்லீட்டீங்க‌ளே..இதை க‌ண்டிச்சு டீ குடிச்சிட்டு வ‌ந்துடுறேன்.. //

அட.... அவரா நீயி... (எதாவது ஸ்டைலுல படிச்சிக்குங்க) :-)

மன்னிச்சுக்குங்கய்யா... ஆனாலும் இன்னும் ஒங்கள நேர்ல பாத்த நினைவு இல்லை. :-)

அப்புறம்... அப்துல் மாலிக்... யாரென்று தெரியவில்லை... ஆனால் ரெண்டு மூணு மடல்களில் உரையாடிய நினைவு.

அதிரை முஜீப்தான் என் நண்பேன்டான்னு சொல்லிட்டேனே...

பிறரின் பெயர்களையும் புனைபெயர் என்று கூறியிருப்பதன் காரணம் அவர்களை எனக்குத் தெரியாது என்பதாலேயே. வேறு காரணங்கள் இல்லை.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//பிறரின் பெயர்களையும் புனைபெயர் என்று கூறியிருப்பதன் காரணம் அவர்களை எனக்குத் தெரியாது என்பதாலேயே//

இன்னும் புனைப்பெயர்கள் "pass"தானா (தெரியாதென்பதால்) :)

எங்கள் மாமாவின் மகானாரே (எனக்கு உங்களை (நம்) சிறு வயது முதலாக மிக நன்றாக தெரியும் என்பதனாலே) ! என்னுடைய மகனை தெரியுமா ? (அப்படின்னா இபுறாஹிம் புனைப் பெயரா :) ? )

ஆமாம் ! என்று சொன்னாலும் விடப்போவதில்லை, வீட்டு அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தவும் ரெடி :)

அபூ சுஹைமா said...

அபுஇபுறாஹீம் சொன்னது…

//பிறரின் பெயர்களையும் புனைபெயர் என்று கூறியிருப்பதன் காரணம் அவர்களை எனக்குத் தெரியாது என்பதாலேயே//

இன்னும் புனைப்பெயர்கள் "pass"தானா (தெரியாதென்பதால்) :)

எங்கள் மாமாவின் மகானாரே (எனக்கு உங்களை (நம்) சிறு வயது முதலாக மிக நன்றாக தெரியும் என்பதனாலே) ! என்னுடைய மகனை தெரியுமா ? (அப்படின்னா இபுறாஹிம் புனைப் பெயரா :) ? ) //

மிக நீண்ட நாள்கள் அபுஇபுறாஹீம் என்றால் யார் எனத் தெரியாமல்தான் இருந்தேன். இபுறாஹீம் பற்றிய செய்தி எனக்குக் கிடைக்காததால். கேட்க வேண்டிய இடத்தில் (வேறு யார்? இல்லாளிடம்தான்) கேட்ட பின்னரே அறிந்தேன். மகிழ்ந்தேன்.

தனது உண்மையான பெயரை விடுத்து, தாமே சூட்டிக்கொள்ளும் பெயர்தான் புனைபெயர்.

அது கற்பனைப் பெயராக இருக்கலாம். மல்லியை விரும்புபவர் மல்லிகை நேசன் என்று வைத்துக் கொள்வது போன்று.

அல்லது காரணப் பெயராகவும் இருக்கலாம். இபுறாஹீமின் தந்தை அபுஇபுறாஹீம் என்பதாக.

இபுறாஹீம் என்பது புனைபெயரன்று; அபுஇபுறாஹீம் புனைபெயர்.

காத கொடுங்க... தமிழ் மீதான காதலால், அழகப்பன் என்ற பெயரை புனைபெயராகப் பயன்படுத்தத்தான் எனக்கு ஆசை. காரணம் அழகனின் (ஹசனின்) அப்பன் நான் என்பதால். ஆனா, நம்ம மக்கள் இதப் பிரச்சனை ஆக்கிடுவாங்களோன்னு பயம்.

அப்புறம் இப்னு அலிய் என்பதுவும் எனக்குப் பிடித்தமான என் புனைபெயர்களில் ஒன்று. ஆனால், இதை தற்போது வலைப்பூக்களில் உபயோகிப்பது இல்லை.

Yasir said...

//யாசிர், போன்ற பெயர்களும் என்னைப் பொறுத்தவரை புணைப் பெயர்களே காரணம் இவர்களை எனக்குத் தெரியாது.///சகோ.அபூ சுஹைமா ..என்னை இப்பவாது தெரிந்து கொள்ளுங்கள்....

உண்மையான பெயர் : முகமது யாசிர்
காதிர் முகைதீன் பள்ளியின் முகப்பு பலகையை நோக்கினால் 10வது மற்றும் 12வதில் முதல் மார்க் எடுத்தவர்கள் பட்டியலில் என் பெயரும் உண்டு
வாப்பா பெயர் : அப்துல் ரெஜாக் (பம்பாய் நானா என்றால் எல்லாருக்கும் தெரியும்,”துபாய்” என்ற சொல்லை தஞ்சை மாவட்டதிற்க்கு அல்ல பாதி தமிழகத்திற்கே அறிமுகம் செய்தவர்கள் )
வீடு : கடற்கரைத்தெரு ...சுடுதண்ணி மரைக்காவிட்டிற்க்கு பக்கத்துவீடு..லேடி மீன் மார்க்கெட் அருகில்

இனிமெயும் என்ன தெரியதவன் என்று நிங்கள் சொன்னால் & எழுதினால் காசு போனால்போகட்டும் நட்பு வேண்டும் என்று கருதி அதிரைக்கே (நீங்க அதிரையிலேதானே இல்லை வேர நாட்டிலா) வந்து இறங்கி உங்களிடம் என்னை அறிமுகபடுத்திவிட்டு திரும்பிவிடுவேன் :)

ZAKIR HUSSAIN said...

To Bro Yasir,

//அப்துல் ரெஜாக் (பம்பாய் நானா என்றால் எல்லாருக்கும் தெரியும்,”துபாய்” என்ற சொல்லை தஞ்சை மாவட்டதிற்க்கு அல்ல பாதி தமிழகத்திற்கே அறிமுகம் செய்தவர்கள் )//


எங்கள் பம்பாய் நானா பெயரைப்படித்தவுடன் ஒரு உற்சாகம் வந்தது. 1974 - 1975 வருடங்களில் எங்கள் தெரு [தரகர்தெரு] பள்ளைவாசலில் உட்கார்ந்து என் அண்ணன் எஸ்.எம் முகம்மது முஹைதீன் [ ஜலீலா ஜுவல்லரி ] , காசிம் மாமா [போஸ்ட் ஆபிஸ்] இன்னும் சிலருடன் அரட்டை அடித்த காலத்துக்கே திரும்பி போய்விட மாட்டோமா என ஏக்கம் இருக்கிறது.

இவர்கள் எல்லாம் துபாய்க்கு வந்த சூழ்நிலையை சொன்னபோது ' நாங்க வரும்போது ஒன்னு ரெண்டு சிமினி விளக்கு மாதிரி துபாய்லெ விளக்கு எரியும்.'

இப்போது உள்ள சூழ்நிலையய பார்த்தால்...

அபூ சுஹைமா said...

Yasir சொன்னது…

//இனிமெயும் என்ன தெரியதவன் என்று நிங்கள் சொன்னால் & எழுதினால் காசு போனால்போகட்டும் நட்பு வேண்டும் என்று கருதி அதிரைக்கே (நீங்க அதிரையிலேதானே இல்லை வேர நாட்டிலா) வந்து இறங்கி உங்களிடம் என்னை அறிமுகபடுத்திவிட்டு திரும்பிவிடுவேன் :) //

இப்ப, யாசிர எனக்கு தெரியும்.... ஆனா தெரியாது... :-)

அதிரை அல்மாஸ் said...

அஸ்ஸலாமு அலைக்கும் அலாவுதீன் காக்கா அவர்களே தாங்களின் துவக்கமே மிக நன்றாக உள்ளது 9 வது மாதம் முடிந்து 10வது மாதம் துவக்கத்தில் நிறுத்திவிட்டீர்கள் SSLC தேர்வு எழுதி விட்டு அதன் ரிசல்டுக்கு காத்திருப்பது போல் மணம் துடித்துக்கொண்டுள்ளது ஒரு நல்ல ரிசல்டை சொல்லுங்கள் நாங்கலெல்லாம் காத்திருகிறோம். இதன் உண்மையான பயன் நம் சமுதாயத்தை சென்றடைய அல்லாஹ் துணை செய்ய வேண்டும் அல்லாஹ் உங்களுக்கு சிறந்த ஞானத்தை கொடுத்து இத்தொடர் வெற்றியாக முடிய துவா செய்கிறோம்

கோ.மு.அ. ஜமால் முஹம்மது. said...

சம்சுல் இஸ்லாம் சங்கம் எடுத்த முடிவு, பொதுக்குழுவை கூட்டி எடுக்கப்பட்டதா? அல்லது கூட்டாமல் எடுக்கப்பட்டதா?

விபரம் கிடைக்குமா?

K.M.A. JAMAL MOHAMED
த.பெ / கோ.மு.முகம்மது அலியார்.
அதிரை 13 வாடி வண்டிப்பேட்டை
CONSUMER & HUMAN RIGHTS.
TAMIL NADU.

Rafeek said...

பள்ளி வாசல் சொத்தை ஆக்கிரமித்த ஒரு சில குடும்பத்தினர் தம் செயலை மறைபதற்காக இவ்வாறு ஹைதர் ஆலிம் மேல் குற்றம் சுமத்தி திசை திருப்புகிறார்கள் ....... அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள். ...... பள்ளி சொத்தை திருப்பி கொடுத்து விடுங்கள்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.