வாக்குக் கண் அல்லது மாறுகண்
கண் விழித்திரை மற்றும் கண்மணி இயல்பானதாகத் தோன்ற வேண்டும்
கார்ணியா என்றழைக்கப்படும் கண் விழித்திரை, மற்றும் கண்மணியின் கரும்பாகம் இயல்பான தோற்றத்தைக் கொண்டிருக்கவேண்டும். அவை வித்தியாசமாகத் தோன்றினால், கண்களை ஒரு கண் மருத்துவரால் பரிசோதிக்கப்பட வேண்டும்.
வாக்குக் கண் அல்லது மாறுகண் பார்வையை சீர்திருத்துவதற்கு, ஒரு அறுவைச் சிகிச்சை இருக்கின்றது பலவீனமான தசையை இறுக்கமாக்குவது மற்றும் வலிமையான தசையைத் தளர்த்துவது போன்றவற்றை அறுவைச் சிகிச்சையில் செய்து கண்களை நன்கு நேர்வரிசைப்படுத்துகின்றனர்.
வாக்குக் கண் பார்வை அறுவைச் சிகிச்சையின்போது என்ன சம்பவிக்கிறது அறுவைச் சிகிச்சைக்கு முன், ஒரு பொதுவான மயக்க மருந்து என்றழைக்கப்படும் ஒரு விசேஷ “நித்திரைக்கான மருந்து” கொடுக்கப்படும். இது அறுவைச் சிகிச்சை நேரம் முழுவதும் அருவை சிகிச்சை செய்யப்படுபவர் நித்திரையில் இருப்பார் ஆபரேஷன் செய்யும்போது எந்த வலியையும் உணரமாட்டார்
அறுவைச் சிகிச்சையில் மருத்துவர் கண்களிலுள்ள பலவீனமான தசையை இறுக்கமாக்குவார் மற்றும்/அல்லது வலிமையான தசையைப் தளர்த்துவார். அறுவைச் சிகிச்சை மருத்துவர் கண் தசைகளை அதன் புதிய ஸ்தானத்தில் வைப்பதற்கு அகத்துறிஞ்சக்கூடிய தையல்களை உபயோகிப்பார். இந்தத் தையல்கள் அகற்றப்பட வேண்டியதில்லை. அறுவைச் சிகிச்சைக்குபின் 6 முதல் 8 வாரங்களில் இவை தாமாகவே கரைந்துவிடும். அறுவைச் சிகிச்சையின்போது, கண் அதன் குழியிலிருந்து ஒரு போதும் எடுக்கப்படமாட்டாது. கண்ணைச் சுற்றியிருக்கும் தோலும் வெட்டுப்பட மாட்டாது. லேசர் கதிர்கள் எதுவும் உபயோகிக்கப்படமாட்டாது.
ஆப்ரேஷனுக்குப் பிறகு கண்கள் பல வாரங்களுக்கு சிவந்தும் கொஞ்சம் வீங்கியும் இருக்கும். இரு வாரங்களின் பின் சிவந்த நிறமும் வீக்கமும் குறையத் தொடங்கும். வீக்கம் மோசமடைந்தால் அல்லது சிவந்த நிறம் தொடர்ந்திருந்தால், ஆப்ரேஷன் செய்த மருத்துவரிடம் சென்று காட்டவும். அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட கண்ணில் கொஞ்சம் வலி அல்லது அசௌகரியம் இருக்கலாம். வலி அல்லது அசௌகரியத்திலிருந்து நிவாரணமடைய டாக்டரிடம் மருந்து கேட்டு வங்கிக்கொள்ளவேண்டும்..
அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் எல்லாம் இரட்டையாகத் தோன்றலாம். பெரும்பாலும், கண்களின் வீக்கம் குறைந்து, கண் தசையின் புதிய ஸ்தானத்துக்குப் பழக்கப்படுத்தப்படும்போது, இது மறைந்துவிடும். முன்பு போல நன்கு பார்க்கமுடியாவிட்டால் அல்லது இரட்டைப் பார்வை தொடர்ந்திருந்தால் கண் மருத்துவரிடம் காட்டுங்கள்
அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் இரண்டு கண்களிலிருந்து இளம் சிவப்பு நிற கண்ணீர் அல்லது இரத்தம் கலந்த திரவம் சிறிதளவு வெளியேறலாம். இந்த திரவம் வெளியேறுவது குறையாவிட்டால் அல்லது மேலதிக இரத்தம் கலந்த கண்ணீர் வெளியேறினால், கண் டாக்டரிடம் செல்லவும். கண்களைச் சுற்றி, விசேஷமாக அவன் நித்திரையிலிருந்து விழிக்கும்போது, வெள்ளை நிறத் திரவம் வெளியேறியிருப்பதை காணப்படலாம் சில சமயங்களில் தெளிவான மஞ்சள் நிற கண்ணீரும் காணப்படலாம்.
கண்களைக் கழுவுவதற்காக ஒரு சுத்தமான முகந்துடைக்கும் துணியை வெந்நீரில் பிழியவும். 1 முதல், 2 நிமிடங்களுக்கு முகந்துடைக்கும் துணியை கண்களின்மேல் போட்டுவிடவும். பின்பு வெளியேறிய திரவத்தை மெதுவாகத் துடைத்து விடவும். மற்றபடி மஞ்சள் அல்லது பச்சை நிறத் திரவம் ஏதாவது வெளியேறியிருந்தால். கண் மருத்துவரிடம் காட்டவும்
வாக்குக் கண்பார்வைக்கான அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் அன்டிபையோடிக் மருந்து மற்றும் கோட்டிசோன் சொட்டு மருந்துகொண்டு பராமரிக்கவேண்டும்
இந்த மனோராவைப் பார்த்த்துமே தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னனின் கதைகள் நிறைய கிடைக்கும் அவர் ஆண்ட கால்த்தில் கட்டி எழுப்பிய மினாராதான் இன்று மனோரா என்று அழைக்கப்பட்டு மல்லிபட்டினத்தில் அவரின் பெயரை சொல்லிக்கொண்டு கம்பீரமாக நிற்கின்றது. சுற்றுப்புற கிராமங்களிலிருந்து அங்கு சுற்றுலா செல்பவகளுக்கு அதன் சுற்றுப்புற சூழல் ஒவ்வொருவரின் மனதை கொள்ளை கொள்கின்றது எனறால் மிகையாகாது
அந்த சரபோஜி மன்னர் ஒரு கண் சிகிச்சை நிபுனர் என்பது யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் சரபோஜி ராஜா போன்ஸ்லே 2 உலக வரலாற்றிலேயே கைதேர்ந்த டாக்டராகவும் கண் அறுவை சிகிச்சை நிபுணராகவும் இருந்திருக்கிறார் என்பதே இன்றைய தலைமுறையினர் நம்ப முடியாத வரலாற்று பதிவாகும்.
மக்கள் நோய் தீர்க்க மருத்துவ முறைகளை கண்டதுடன் வாயில்லா ஜீவன்களான யானை குதிரை ஒட்டகம் மாடுகள் ஆகியவற்றுக்கும் மருத்துவ முறைகளை கண்டு முன்னோடியாக திகழும் முதல் டாக்டர் சரபோஜி மன்னர்தான். இவர் (1777-1832) கல்வி சிறக்க சரஸ்வதி மகாலையும் கலை சிறக்க சங்கீத மகாலையும் நோய் தீர்க்க தன்வந்திரி மகாலையும் தஞ்சையிலேயே உருவாக்கியவர்.
மராட்டிய மாவீரன் சத்ரபதி சிவாஜியின் வம்சா வளியினரான சரபோஜி மன்னர் 1799ல் காலத்தின் கட்டாயத்தால் கிழக்கிந்திய கம்பெனியிடம் தஞ்சாவூர் ராஜ்ஜியத்தை ஒப்டைக்க வேண்டியதாயிற்று. தஞ்சாவூர் கோட்டையை மருத்துவம் உள்ளிட்ட சகல புலங்களின்கோட்டையாக மாற்றியமைத்தார். ராமேஸ்வர யாத்ரீகர்கள் கர்ப்பிணிகள் முதியவர்கள் ஆதரவற்றோர்களுக்காக சத்திர தர்மங்களை ஏற்படுத்தியதன் மூலம் ஏராளமானவர்களுக்கு வேலைவய்ப்புகளையும் உருவாக்கினார்.
இவற்றையெல்லாம் விட இவரது மகுடத்தில் ஒளி வீசும் மாணிக்கமாக திகழ்வது சித்த யுனானி ஆயுர்வேத மருத்துவ ஆய்வு தொகுப்பான சரபேந்திர வைத்திய முறைகளை உலகிற்கு வழங்கியது எனலாம். அரண்மனை அந்தபுரத்தில் பெரும் மூலிகை தோட்டமே இருந்திக்கிறது. மருத்துவத்திற்கு தேவையான பொருட்களை சேமித்து வைக்க ஒரு கொட்டடியே (கிடங்கு) இருந்திருக்கிறது. மன்னர் சரபோஜி மருத்துவக் கல்லூரியில் படிக்காதவர்.
கண் சிகிச்சைக்கென சிறப்பு பயிற்சி பெறாதவர். ஆனாலும் கண் அறுவை சிகிச்சை நிபுணராக எப்படி இருக்க முடிந்தது என்பது இன்றைய மருத்துவ உலகின் ஜாம்பவான்களுக்கு புரியாத புதிர் பழைய ஆவணங்களில் இருந்து ஆங்கிலேயரான கண் டாக்டர் மெக்டீன் தன்வந்திரி மகாலில் சரபோஜி மன்னருக்கு உதவியாக இருந்ததாகவும் அவருக்கு கிழக்கிந்திய கம்பெனியே ரூபாய் 4 ஆயிரம் சம்பளம் வழங்கியதாகவும் தெரிகிறது. மன்னர் சரபோஜி கண்புரை அறுவை சிகிச்சை செய்த 50 பேரின் விபரங்கள் சரஸ்வதி மகாலில் உள்ளது. இதில் நோய் பற்றிய ஆய்வு நோயாளியின் விபரம் ஆபரேஷன் விபரம் ஆபரேஷனுக்கு முன்னும் பின்னும் நோயாளியின் நிலை ஆகியவை கவனமுடன் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஸ்கேன் எக்ஸ்ரே இல்லாத இந்தகால கட்டத்தில் நோயுற்ற கண் ஆபரேஷனுக்கு முன்னும் பின்னும் என்று வண்ணத்தில் ஓவியமாக தீட்டி பதிவு செய்திருப்பது மன்னனின் நிபுணத்துவத்துக்கு சான்றாக உள்ளது. நோயாளிகள் தான் டாக்டர்களுக்கு சிகிச்சை அளித்ததற்காக பணம் கொடுப்பர். ஆனால் மன்னர் சரபோஜி இலவச சிகிச்சை அளித்ததுடன் நோயாளி வீட்டுக்கு செல்லும்போது 2 ரூபாயை கைச்செலவுக்கு கொடுத்து அனுப்பினார்.
அடுத்த தொடரில் வெள்ளெழுத்து பற்றிய இடம்பெறும்
(தொடரும்)
அதிரை மன்சூர்
14 Responses So Far:
புருவத்தை உயர்த்தவைக்கும் பிரமிப்பான, சரபோஜி பற்றிய வரலாற்றுக் குறிப்புகளுடன் ஒரு தேர்ந்த கண் மருத்துவரின் கட்டுரை போன்ற பொலிவையும் பெற்று, சிறப்புடன் பயணித்துச் செல்கிறது 'கண்களிரண்டும்' தொடர்.
மாஷா அல்லாஹ்!
தெரியாத பல தகவல்கள்,கண்கள் பற்றிய இத் தொடர் மூலம் அறிவொளி பரப்பும் உங்களை எவ்வளவு வாழ்த்தினாலும் தகும்.ஜஸாக்கல்லாஹ் கைர் மச்சான்.
கனகச்சிதமான அதேசமயம் முழுமையான தகவல்கள்!!!
கலக்குகிறீர்கள் மன்சூர்.
என் நண்பர் ஒருவர். பெயர் பாலா. சவுதி வந்தபோது தமக்குள்ள மாறுகண் குறைபாட்டால் தாழ்வுமனப்பான்மையால் அவதியிற்றார்.
அவருக்கு 3,000 ரியால் செலவில் ஜுபைலில் கண் அறுவை சிகிச்சை செய்து மாறுகண்ணிலிருந்து விடுபட்டு இப்போதும் நேர்கொண்ட பார்வையோடு நலமாக இருக்கிறார்.
sabeer.abushahruk சொன்னது…
//என் நண்பர் ஒருவர். பெயர் பாலா. சவுதி வந்தபோது தமக்குள்ள மாறுகண் குறைபாட்டால் தாழ்வுமனப்பான்மையால் அவதியிற்றார்.//
அவரின் கல்யாணத்தில் எனக்கு மட்டும் "பாயா"கறி கொடுத்தாரே அந்த பாலவா இந்த பாலா
அந்தக்கால ராஜாக்களெல்லாம் அந்தபுரத்தில் வனப்பான யுவதிகளை பணிப்பெண்ணாக வைத்திருப்பதும் அடுத்த நாட்டு மன்னர்களோடு போர் தொடுப்பதிலுமே கண்ணும் கருத்துமாய் இருந்தபோது, சரபோஜிமட்டும்
கண்வைத்தியத்திலேயே கண்ணாய் இருந்தது இவர் ஒருவழக்கத்துக்கு மாறான மன்னர் என்பதை காட்டுகிறது. இவரின் இன்னொரு ப்ளஸ் பாயிண்ட் அந்தப்புற தோட்டத்தில் அழகிகளின் நடமாட்டத்துக்கு பதிலாக மூலிகை செடிகளை நட்டது.
தலைநகர் டில்லிக்குப் போகலாமென்று தமிழ்நாடு எக்ஸ்பிரசில் ஏறினால் அந்த ரயில் ஆந்திராவில் விஜயவாடா , மகராஷ்டிராவில் நாக்பூர் , மத்தியப் பிரதேசத்தில் போபால் , உத்தரபிரதேசத்தில் ஆக்ரா , ஹரியானாவில் பரிதாபாத் ஆகிய ஸ்டேஷன்களில் நின்று செல்வது போல்
கண்களைப் பற்றி எழுத ஆரம்பித்த இந்தத்தொடர், முன்பே சொன்னது போல் பல் வேறு துறைகளை தொட்டுச் செல்கிறது. இப்போது வரலாறு பாக்கி இருந்தது அதையும் தொட்டுவிட்டீர்கள்.
இவ்வளவு நாட்கள் இந்தத் திறமைகளை வைத்துக் கொண்டு எங்களை எல்லாம் ஏமாற்றி வந்து இருக்கிறீர்கள்.
இன்னும் இதுபோல் எத்தனையோ பேர்கள் ஒளிந்துகொண்டு இருக்கிறார்களோ ?
மனம் நிறைந்த பாராட்டுக்கள் தம்பி மன்சூர்.
தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் போல அல்ல ராஜதானி எக்ஸ்பிரஸ் போல செல்கிறது தொடர்.
அஸ்ஸலாமு அலைக்கும்
கண்கள் இரண்டும் தொடர் பற்றிய எல்லோருடைய வாழ்த்துப்பா பார்த்து உள்ளம் மகிழ்ந்தேன் ஜஸாக்கல்லாஹ் கைரன்
எல்லோருக்கும்
பெரிய அனுகுண்டு ஒன்னு அடுத்த தொடரில் காத்திருக்கின்றது பொருத்திருந்து பாருங்கள்
///கண்களைப் பற்றி எழுத ஆரம்பித்த இந்தத்தொடர், முன்பே சொன்னது போல் பல் வேறு துறைகளை தொட்டுச் செல்கிறது. இப்போது வரலாறு பாக்கி இருந்தது அதையும் தொட்டுவிட்டீர்கள். ///
காக்கா எல்லாம் கண்கள் இரண்டும் செய்யும் வேலைகள்
////அவரின் கல்யாணத்தில் எனக்கு மட்டும் "பாயா"கறி கொடுத்தாரே அந்த பாலவா இந்த பாலா///
ஹமீது பாய் என்னது பாலா கொடுத்த பாயா கறியா?
///அந்தக்கால ராஜாக்களெல்லாம் அந்தபுரத்தில் வனப்பான யுவதிகளை பணிப்பெண்ணாக வைத்திருப்பதும் அடுத்த நாட்டு மன்னர்களோடு போர் தொடுப்பதிலுமே கண்ணும் கருத்துமாய் இருந்தபோது, சரபோஜிமட்டும்
கண்வைத்தியத்திலேயே கண்ணாய் இருந்தது இவர் ஒருவழக்கத்துக்கு மாறான மன்னர் என்பதை காட்டுகிறது. இவரின் இன்னொரு ப்ளஸ் பாயிண்ட் அந்தப்புற தோட்டத்தில் அழகிகளின் நடமாட்டத்துக்கு பதிலாக மூலிகை செடிகளை நட்டது.///
பாரூக் காக்காகவின் பின்னூட்டங்களில் குறும்பு தலைகாட்டாமல் இருக்காது
குறும்பு இல்லாத பின்னூட்டமே இல்லை
அதுவும் நல்ல கலகலப்பாகத்தான் இருக்கின்றது
சின்ன வயசுல என்ன சேட்டை பன்னிருப்பாகன்னு நினைச்சுக்கூட பார்க்க முடியவில்லை
///தலைநகர் டில்லிக்குப் போகலாமென்று தமிழ்நாடு எக்ஸ்பிரசில் ஏறினால் அந்த ரயில் ஆந்திராவில் விஜயவாடா , மகராஷ்டிராவில் நாக்பூர் , மத்தியப் பிரதேசத்தில் போபால் , உத்தரபிரதேசத்தில் ஆக்ரா , ஹரியானாவில் பரிதாபாத் ஆகிய ஸ்டேஷன்களில் நின்று செல்வது போல்///
அன்சாரி காக்கா அடுத்த இரண்டாவது ஸ்டேசன்ல இறங்கப்போறேனே
///புருவத்தை உயர்த்தவைக்கும் பிரமிப்பான, சரபோஜி பற்றிய வரலாற்றுக் குறிப்புகளுடன் ஒரு தேர்ந்த கண் மருத்துவரின் கட்டுரை போன்ற பொலிவையும் பெற்று, சிறப்புடன் பயணித்துச் செல்கிறது 'கண்களிரண்டும்' தொடர்.
மாஷா அல்லாஹ்///
///னகச்சிதமான அதேசமயம் முழுமையான தகவல்கள்!!!
கலக்குகிறீர்கள் மன்சூர்.//
எனது பால்ய நன்பர்கலான சபீர் & இக்பால் உங்களுடன் இருக்கும்போது இந்த நார் மனத்தைதானே தரும்
உங்களிடமிருந்து வரும் நற்மனத்தினால் இந்த நார் மனக்காதா என்ன?
//பாரூக் காக்காவின் பின்னூட்டங்களில்....//அதிரை மன்ஸூர் சொன்னது.சின்னவயசில்அப்படியெல்லாம் ஒன்றுமில்லை! தளத்தில் கலகலப்பு உண்டாக்கவே இப்படி சிலவரிகளை போடுகிறேன்.என்தாயார் சினிமா பார்க்க காஸு தரவில்லை என்றால் எங்கள்வீடு கலகலப்பாக இருக்கும்? அதாவது பானை சட்டிகள் பீங்கான் மங்குகள் உடைபடும்.அவ்வளவே!
Post a Comment