Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 69 1

அதிரைநிருபர் பதிப்பகம் | May 16, 2014 | ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!

அரபா நாள், மற்றும் முஹர்ரம் 9,10
நாட்களில் நோன்பு வைப்பதின் சிறப்பு!

''(துல்ஹஜ் பிறை 9) அரபா நாளில் நோன்பு வைப்பது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ''சென்று போன மற்றும் வர உள்ள வருடங்களின் பாவங்களை அது அழிக்கும்'' என பதில் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 1250 )

''ஆஷுரா (முஹர்ரம் 10ஆம்) நாளில் நபி(ஸல்)  அவர்கள் நோன்பு வைப்பார்கள். அந்த நோன்பு பற்றி (மற்றவருக்கும்) கட்டளையிட்டார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 1251 )

''ஆஷுரா நாளில் நோன்பு வைப்பது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அப்போது ''சென்ற வருடத்தின் குற்றங்களை அழிக்கும்''  என்று பதில் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 1252 )

''வரும் ஆண்டில் நான் இருந்தால், (முஹர்ரம்) 9 ஆம் நாளிலும் நோன்பு வைப்பேன்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (முஸ்லிம்) ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 1253 )

ஷவ்வால் மாதம் ஆறு நாட்களில் நோன்பு வைப்பது விரும்பத்தக்கது

''ஒருவர் ரமளானில் நோன்பு நோற்று, அடுத்து ஷவ்வாலின் ஆறு நாட்கள் தொடர்ந்து நோன்பு வைத்தால், காலம் முழுதும் நோன்பு வைத்தவர் போலாவார்'' என்று நபி(ஸல்) கூறினார்கள்.  (அறிவிப்பவர்: அபூஅய்யூப் (ரலி) அவர்கள் (முஸ்லிம்) ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 1254 )

திங்கள், வியாழக்கிழமைகளில் நோன்பு வைத்தல்

''திங்கள்கிழமை நோன்பு வைப்பது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேள்வி கேட்கப்பட்டது. அப்போது, ''இன்றுதான் நான் பிறந்தேன். இன்று தான் நான் நபியாக அனுப்பப்பட்டேன். அல்லது இன்று தான் என் மீது (குர்ஆன்) இறக்கப்பட்டது'' என்று பதில் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 1255 )

''திங்கள், வியாழக்கிழமைகளில் (மனிதர்களின்) செயல்கள் எடுத்துச் சமர்ப்பிக்கப்படும். நான் நோன்பாளி என்ற நிலையில் என் செயல் (இறைவனிடம்) எடுத்து சமர்ப்பிக்கப்படுவதை விரும்புகிறேன்''  என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)அவர்கள்(திர்மிதீ)(ரியாளுஸ்ஸாலிஹீன்:1256 )

''என் தோழர் எனக்கு மூன்று காரியங்களை உபதேசித்தார்கள். நான் வாழும் காலமெல்லாம் அவற்றை விடமாட்டேன். 1) ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு வைப்பது, 2) லுஹாத் தொழுகை தொழுவது, 3) வித்ருத் தொழும் வரை தூங்காமல் இருப்பது. (அறிவிப்பவர்: அபூதர்தாஉ (ரலி) அவர்கள் (முஸ்லிம்) ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 1259 )

''மாதத்தில் மூன்று நாட்கள் நோன்பு வைத்தால், 13,14,15 ஆம் நாட்களில் நோன்பு வைப்பீராக'' என்று நபி(ஸல்) கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அபூதர்(ரலி) அவர்கள் (திர்மிதீ)                      (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1262)

''நோன்பாளியை நோன்பு துறக்கச் செய்தால், அவருக்கு அந்த நோன்பாளியின் கூலி போன்று உண்டு. எனினும், அந்த நோன்பாளியின் கூலியில் எதுவும் குறைந்து விடாது'' என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸைத் இப்னு காலித் அல்ஜுஹ்னீ (ரலி) அவர்கள் (திர்மிதீ ) ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 1265 )

''நபி(ஸல்) அவர்கள் ரமளானின் கடைசி பத்து நாட்களில் இஹ்திகாஃப் இருப்பார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 1268 )

ஹஜ் கடமையும், அதன் சிறப்பும்

அல்லாஹ் கூறுகிறான்:

''அதில் தெளிவான சான்றுகளும் மகாமே இப்ராஹீமும் உள்ளன. அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார். அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. யாரேனும் (ஏக இறைவனை) மறுத்தால் அல்லாஹ் அகிலத்தாரை விட்டும் தேவையற்றவன்.'' (அல்குர்ஆன் : ஆலு இம்ரான் 3:97)

''இஸ்லாம், ஐந்து விசயங்கள் மீது கட்டப்பட்டுள்ளது. 1) அல்லாஹ்வதை; தவிர வேறு கடவுள் இல்லை. மேலும் முஹம்மத் (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் என சான்று கூறுதல், 2) தொழுகையைப் பேணுதல், 3) ஜகாத் வழங்குதல், 4) ஹஜ் செய்தல் 5) ரமளானில் நோன்பு வைத்தல் என்று  நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 1271)

''ஒரு உம்ரா, மற்றொரு உம்ராவுக்கு இடையில் ஏற்பட்ட பாவங்களை அழித்து விடும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு கூலியாக, சொர்க்கத்தைத் தவிர வேறு இல்லை'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 1275)

''இறைத்தூதர் அவர்களே! செயல்களில் மிகச்சிறந்ததாக தியாகம் செய்வதை நாங்கள் கருதுகிறோம். நாங்கள் தியாகம் (ஜிஹாத்) செய்யலாமா? என்று கேட்டேன். 'எனினும் ஜிஹாதில் சிறந்தது, ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ்தான்'  என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் ( முஸ்லிம்) ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 1276)

''(துல்ஹஜ் மாதம் 9 ஆம் நாளான) அரஃபா நாளில் நரகத்தில் இருந்து தன் அடியார்களை (விடுதலை செய்வது போல்) அல்லாஹ் வேறு எந்த நாட்களிலும் மிக அதிகமாக விடுதலை செய்வதில்லை என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 1277 )

''ரமளானில் உம்ரா செய்வது, ஹஜ்ஜுக்கு சமமாகும். (அல்லது என்னுடன் ஹஜ் செய்வதற்கு சமமாகும்)'' என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (புகாரி , முஸ்லிம்) ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 1278 )

''இறைத்தூதர் அவர்களே! தன் அடியார்கள் மீது அல்லாஹ் கடமையாக்கிய ஹஜ், வயது முதிர்ந்த என் தந்தைக்கு ஏற்பட்டு விட்டது. வாகனத்தின் மீது கூட அவரால் இருக்க இயலாது. அவர் சார்பாக நான் ஹஜ் செய்யலாமா?'' என்று ஒரு பெண் கேட்டார். 'ஆம்' என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்  (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 1206)

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''

இன்ஷாஅல்லாஹ் வளரும்…

அலாவுதீன் S.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு