Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

என் இதயத்தில் இறைத்தூதர் ! - 12 - "சிறுபான்மையும் பெரும்பான்மையும்" 6

அதிரைநிருபர் பதிப்பகம் | May 25, 2014 | , , ,

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் ரலி அறிவித்தார்கள் "ஒரு ஜனாசா எங்களைக் கடந்து சென்றது, உடனே நபி ஸல் அவர்கள் எழுந்து நின்றார்கள். நாங்களும் எழுந்து நின்றோம், பின்பு நாங்கள், "இறைத்தூதர் அவர்களே, இது ஒரு யூதனின் ஜனாசா என்றோம். அதற்கு நபி ஸல் அவர்கள் "ஜனாசாவைக் கண்டால் எழுந்து நில்லுங்கள்" என்று கூறினார்கள். ஆதாரம் : புகாரி, முஸ்லிம்.

நம் தலைவர் அண்ணல் நபி ஸல் அவர்களின் வாழ்வில் நமக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது என்று அல்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான். 

எந்தெந்த நாடுகளில் மக்கள் சிறுபான்மை இனத்தவராக வாழ்கிறார்களோ அங்கெல்லாம் அவர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டும், நசுக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும் வருவதை நாம் எல்லா நிலைகளிலும் கண்டு வருகிறோம். அங்கு நடைபெறும் அரசாங்கமாக இருந்தாலும், பெரும்பான்மை இனமாக இருந்தாலும், சரி. அவர்கள் மூலம் சிறுபான்மை மக்களுக்கு துயரங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் மற்றும் பெரும்பானமை இந்துக்கள் மூலம், முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும், காஷ்மீர் மக்களும், தலித்களும்,பழங்குடி இன மக்களும்,  இலங்கையில் அங்குள்ள அரசு மற்றும் புத்த மத பெரும்பான்மையினர் முஸ்லிம்களுக்கும்,  தமிழர்களுக்கும், பர்மாவில் அந்த நாட்டு அரசும், அங்குள்ள மக்களும் முஸ்லீம்களுக் கெதிராகவும், ஈரானில் ஷியா என்ற வழிகேட்டைக் கொண்ட அந்த அரசும். ஷியாக்களும், முஸ்லிம் களுக்கு எதிராகவும்,பாகிஸ்தானில் உள்ள அரசும்,மக்களும் அங்கு சிறுபான்மையாக உள்ள சீக்கியர், இந்துக்களுக் கெதிராகவும்   என்று இப்படி பட்டியல் நீண்டு கொண்டே போகும் அளவிற்கு சிறுபான்மையினரின் எல்லா நலன்களும் பறிக்கப்பட்டு, பழைய துணிகள் போல் சுருட்டப்பட்டு, மூலையில் தூக்கி விசப்படுகிறார்கள்.

இஸ்ரேல் என்றொரு  நாடு பாலஸ்தீன் என்ற நாட்டை வைத்து உருவாக்கப்பட்டு இன்று அந்த மக்கள் சொந்த மண்ணிலே அகதிகளாக நிற்கிறார்கள். இதே பாலஸ்தீனில், எப்பொழுதெல்லாம், முஸ்லீம்களின் ஆளுமைகளின் கீழ் இருந்தததோ, அன்றெல்லாம் யூதர்கள் மிகவும் நிம்மதியாக வாழ்ந்ததை வரலாறு சொல்கிறது. கிறிஸ்தவர்களின் ஆட்சியில்தான் அவர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டது.

நபிகள் நாயகம் ஸல் அவர்களின் காலத்தில் யூதர்கள் மிக சிறுபான்மையினராக வாழ்ந்த ஒரு நேரம். யூதர் ஒருவர், முஸ்லிம் ஒருவருக்கு எதிரான வழக்கு ஒன்றை கொண்டு வந்து, நபிகளாரிடம் முறையிடுகிறார்.

நபிகள் நாயகம் ஸல் அவர்கள் இருவரிடமும் விசாரனை செய்கிறார்கள். யூதர் பக்கமே நியாயம் இருப்பதாகத் தெரிகிறது. எனவே யூதருக்கு ஆதரவாகவும், முஸ்லிமுக்கு எதிராகவும் தீர்ப்பு வழங்கப்படுகிறது. இதுபோல பல எண்ணற்ற சம்பவங்களை நாம் காண முடியும். யூதருடைய இறந்த உடல் கொண்டு வரப்பட்டபோது கூட , அது ஒரு யூதருடையதுதான் என தெரிந்தும் எழுந்து நின்று மரியாதை செய்கிறார்கள். இப்படிப்பட்ட ஒரு மாமனிதரை நாம் காணவே முடியாது.

ஆனால், மனிதர்களிடையே உள்ள அகம்பாவம், திமிர், நான் மெஜாரிட்டி, நீ மைனாரிட்டி, உயர்ந்தவன், தலித், தாழ்ந்தவன் இன்னும் இது போன்ற சிந்தனையில் ஏற்பட்ட கோளாறுகளால் மீரட்,பீவண்டி போன்ற கலவரங்கள் நடந்தன.இன்னும், குஜராத், முஸாஃபர் நகர் போன்ற சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அரசும், போலீசும், காவிகளும் அன்றைய குஜராத் முதலைச்சர் தலைமையில் சுமார் 3000க்கு மேல் முஸ்லிம்கள் கொன்றொழிக்கப்பட்டதை எவராலும் மறக்க இயலுமா ?

இப்படி ஒரு பக்கம் நசுக்கப்பட்டு, பொய் வழக்குகள் போடப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டு ,பல வருடங்கள் கழிந்து, பல மேல் முறையீடுகள் மூலமாக - அவர்கள் நிரபராதிகள் என்று கடைசியில் விடுவிக்கப்படுவது தான் பெரும்பாலும் நடை பெற்று வருகிறது.

இப்படி ஒரு பக்கம் இருக்க அதே அநீதிக் காரர்கள் இன்று இந்திய தேசத்தை ஆளும் வர்க்கமாக இருக்க படைத்தவன் அல்லாஹ் நாடியிருக்கிறான். அந்த வல்லவனுக்குத் தெரியும் தான் நாடியோருக்கு நல்வழிகாட்ட இன்ஷா அல்லாஹ்.

இனி ஒரு குஜராத் போன்று இன்னொரு முறை நிகழா வண்ணம் கண்டிப்புடன் நடந்து கொள்வது மோடி மற்றும் பாஜகவின் முக்கியப் பொறுப்பாகும். சிறுபானமை இன மக்களின் உரிமைகளைப் பேணி நடப்பது ஒரு பிரதமராக மோடி அவர்களின் கடமையாகும். என்ன நடக்கப் போகின்றது என போகப் போகத் தெரியும்.

3:189. வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது; இன்னும் அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்.

முஸ்லிம்களுக்கென்று குர்ஆனும், நபிகள் நாயகம் ஸல் அவர்களின் போதனைகளும் இருக்கின்றன.அந்த இரண்டின் படிதான் ஒரு முஸ்லிம் வாழ வேண்டும் என பணிக்கப்பட்டுள்ளோம். எனவே,அந்த முறையில் வாழ எங்களுக்கு எல்லாவித சகல சவுகரியங்களும் செய்ய வேண்டியது இந்தியப் பிரதமராக பதவி ஏற்க இருக்கும் மோடியின்   கடமையாகும்.அனைத்து தரப்பு மக்களும் - இந்திய மக்கள் என்ற உணர்வுடன் வாழ இது மிக அவசியமாகும்.

காந்தி சொன்ன 'உமர் ரலி' அவர்களின் ஆட்சியே இந்தியாவுக்கு வேண்டும் என்ற இலக்கை நோக்கி இந்தியா நகரட்டும். மெஜாரிட்டி மக்களை மைனாரிட்டிக்கள் மதிக்கவும், மைனாரிட்டி மக்களை மெஜாரிட்டி மக்கள் அரவணைக்கவும்  வல்லோனிடமே பிரார்த்திப்போம்.

தொடரும் (இன்ஷா அல்லாஹ்)

இப்னு அப்துல் ரஜாக்

6 Responses So Far:

sheikdawoodmohamedfarook said...

காந்தியடிகளை சுட்டுக்கொன்ற கட்சியின் ஆசியுடன் ஆட்சிக்குவந்த மோடிஜி அவர்கள் காந்தியார் சொன்னஉமர்ரலி அவரகளின் ஆட்சியை இந்தியாவுக்கு கொண்டுவர நேரமாகாது அல்லா நாடினாலே தவிர.

sabeer.abushahruk said...

நபிமொழி சொல்லி தற்காலத்தில் எப்படி விட்டுக்கொடுத்து வாழவேண்டும் என்று முன்மொழிவது ஆக்கபூர்வமான சிந்தனையாகும்.

Ebrahim Ansari said...

கெட்டுப் போனவர்கள் விட்டுக் கொடுத்ததில்லை. ; விட்டுக் கொடுத்தவர்கள் கெட்டுப் போனதில்லை.

சகிப்புத்தன்மையும் பொறுமையும் மனித குணங்களில் மகத்தானவை என்பதை மனித குலத்துக்கு சொல்லியும் செய்துகாட்டியும் வாழ்ந்தும் சென்ற பெருமானார் ( ஸல்) அவர்களின் வாழ்வின் அம்சங்களை துளித் துளிகளாகத் தரும் இந்தத் தொடர் கூட ஒரு வகையில் அருமருந்துதான்.

adiraimansoor said...

மச்சான் இன்ஷா அல்லாஹ்
அந்த நாட்கள் தொலைவில் இல்லை
நிச்சயம் வரும் அதற்குத்தான் இந்த சோதனை என்பதை நாம் புரிந்து கொண்டு புறுமையை கையால்வோம் அல்லாஹ் நம் பொறுமைகளை சோதிப்பதாகவே நாம் கருதவேண்டும்

adiraimansoor said...

///கெட்டுப் போனவர்கள் விட்டுக் கொடுத்ததில்லை. ; விட்டுக் கொடுத்தவர்கள் கெட்டுப் போனதில்லை. ///

///உமர்ரலி அவர்களின் ஆட்சியை இந்தியாவுக்கு கொண்டுவர நேரமாகாது அல்லா நாடினாலே தவிர.///

அன்சாரி காக்கா சொல்வதும்
பாரூக் காக்கா சொல்வதும்
மிகா ஆழமான வார்த்தைகள்

இப்னு அப்துல் ரஜாக் said...

வாசித்த,கருத்திட்ட,துவா செய்த எல்லா சகோதர சகோதரிக்கும் நன்றி.
இன்னும் சிறிது நேரத்தில் இந்தியப் பிரதமராக மோடி பதவி ஏற்க இருக்கிறார்.எல்லாம் வல்ல அல்லாஹ்,இந்த ஆட்சி எல்லாருக்கும் பொதுவான ஒன்றாகவும்,சிறுபான்மை மக்களின் உரிமைகளும் மதிக்கும் ஆட்சியாகவும்,ஊழலற்ற ஒன்றாகவும் அமைய அல்லாஹ் அருள் புரிவானாக.


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு