முதல் படம் பிரைல் பற்றிய புகைப்படம்
இரன்டாவது படம் தமிழ் மிரர் என்று எழுதப்பட்டுள்ளது (நன்றி தமிழ் மிரர்)
தற்கால வளர்ச்சியில் பார்வையற்றவர்கள் பிரைல் முறையில் உள்ளீடு செய்யும் முறை.
ஓட்டு பதிவு இயந்திரங்கள் வருவதற்கு முன் சாதாரன சீட்டில் முத்திரை குத்தி ஓட்டு போட்ட கால கட்டத்தில் பார்வையற்ற வாக்காளர்கள், யாருடைய உதவியும் இன்றி ஓட்டளிக்க, சட்டசபை தேர்தலில் பார்வையற்றோர் எழுத்து (பிரைல்) முறையை அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும் நடைமுறைப்படுத்த தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு .இருந்தது பார்வையற்ற வாக்காளர்களுக்காக அவர்கள் இளகுவாக ஓட்டளிக்க கீழ்க்கண்ட வசதிகள் செய்யப்பட்டு இருந்தன
ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் உள்ள ஓட்டுச்சீட்டில் உள்ளபடி வேட்பாளரின் வரிசை எண், அவருடைய பெயர் கொண்ட மாதிரி ஓட்டுச்சீட்டு, தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும், பார்வையற்றோர் எழுத்து முறையில் அச்சிடப்பட்டிருந்தது இம்முறையைப் பயன்படுத்த விரும்பும் பார்வையற்ற வாக்காளர், ஓட்டுச்சாவடி அதிகாரியிடம் மேற்கூறிய மாதிரி ஓட்டுச் சீட்டை வாங்கி, அதைப் படித்துவிட்டு, ஓட்டளிக்கும் அறைக்குச் சென்று ஓட்டளிக்க வேண்டும்.
பார்வையற்ற வாக்காளர் விரும்பினால், தேர்தல் நடத்தல் விதிப்படி துணைக்கு ஒருவரை அழைத்துச் செல்லலாம். பார்வையற்றோர் நலச் சங்கங்கள், பார்வையற்றோர் விடுதி காப்பாளர்கள் மேற்கண்ட வசதிகளை அனைத்து பார்வையற்றோருக்கும் செய்து கொடுக்கின்றனர். வாக்கு பதிவு இயந்திரம் வந்த பிறகு இவர்கள் எப்படி வாக்களிக்கின்றார் என்ற விபரம் தெரியவில்லை
கண் தெரியாதார் வாழ்வின் அன்றாடம் ஒவ்வொன்றும் நாம் அறியாத புதிய உலகின் நடைமுறைகளாக இருக்கும் .ஆண்-பென் பேதமின்றி அன்புகொண்டு உறவாடும் அவர்களின் உலகம் எத்தனை ஆரோக்கியமானதாக இருக்கிறது. சாதி-மத பேதமற்ற-விதவிதமான சத்தங்கள் –குரல்கள் மட்டுமே மனித அடையாளங்களாக மாறிப்போகிற அந்த உலகம் பற்றிய இப்படைப்பு நமக்குள்- கண் தெரிந்த மனிதர்களாகிய நமக்குள் பல கேள்விகளை எழுப்பி நம் வாசக மனச்சாட்சியை உலுக்குகின்றது. தொட்டுத் தொட்டு உணரும் அவர்களின் உலகம், தொட்டால் தப்பு தொட்டால் தீட்டு என்று இழிந்து கிடக்கும் நம் உலகை மௌனமாகக் கேலி செய்து சிரிக்கிறது.
பார்வை இல்லாமையால் வாழ்வில் அவர் எதையும் இழக்கவில்லை என்பதை படித்த பார்வை அற்ற சிலரிடம் காணமுடியும். அவர்கள் மடிக் கணினியை வைத்துக் கொண்டு மிகவும் லாவகமாக தட்டச்சு செய்கின்றார். கையடக்கத் தொலைபேசியில் தனக்குத் தேவையானவர்களின் பெயர்களைத் தேடியெடுத்து பேசுகின்றார். பார்வையற்றவர்களுக்கான 'குரல் மென்பொருளை' மேற்படி சாதனங்களில் நிறுவி வைத்துள்ளதால், இவர்களால் இவர்களுக்கு தேவையானவற்றை உள்ளீடு செய்ய முடிகின்றது அவர்களாலும் தற்போதைய அபார வளர்கச்சியுற்ற அறிவியல் சாதனங்களை உபயோகிக்கும் வகையில் பிரத்தியோகமாக மென்பொருட்கள் தயார் செய்து உபயோகத்தில் இருப்பது அவர்களின் வாழ்க்கைக்கு அது உறுதுணையாக செயல் பட்டுக்கொண்டிருப்பது கண்ணுள்ள நமக்கு தெரிய வாய்ப்பில்லை, காரணம் நாம் அவர்களின் வாழ்வியலை பற்றி சிந்திப்பதே இல்லையே .
'தமது அங்கயீனமான பிள்ளைகளை பல பெற்றோர் அவமானமாகக் கருதுகின்றார்கள். அவ்வாறான பிள்ளைகளை வெளியில் காட்டுவதற்கே வெட்கப்படுகின்றார்கள். ஆனால், அது முற்றிலும் தவறான நடவடிக்கை என்பதை மேலை நாடுகலில் வாழும் இஸ்லாம் அல்லாத மாற்று மதத்தவர்கள் மாற்று திறனாலிகளுக்கு எத்தனை முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள் என்பதை சற்று சீர் தூக்கி பார்க்க கடமை பட்டுள்ளோம். இப்படி பட்டவர்கள் புறக்கணிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கின்றர்கள்.
அங்கயீனமான பிள்ளைகள் இருக்கும் குடும்பத்தவர்கள், உங்கள் பிள்ளைகளை வெளியில் கொண்டு வாருங்கள். சமூகத்தில் அவர்களையும் சாதாரணமானதொரு பிரஜையாக்குவதற்கு உழையுங்கள்!'
அவர்களுக்கு அழகாக ஆடைகளை அனுவியுங்கள் அது அவர்களுக்கு ஒரு அங்கீகாரத்தினைப் பெற்றுத் தரும். அநேகமாக, மாற்றுத் திறனாளிகள் சுயமாக இயங்க முடிவதில்லை. தமது நிலையை எண்ணி அவர்கள் கவலையாலும், மனச் சோர்வுகளாவும் பீடிக்கப்பட்டுடிருப்பதால் ஆடை விஷயத்தில் ஆர்வம் செலுத்தாமல், கிடைத்ததை அணிந்து கொண்டு செல்வதுண்டு. இது கூடாது. நேர்த்தியாகவும், அழகாகவும் மாற்றுத் திறனாளிகள் ஆடை அணியும் போது, அவர்களைத் தரக்குறைவாகப் பார்ப்போர் கூட, தமது எண்ணத்தினை மாற்றிக் கொள்வார்கள். இப்படி செய்வதில் எப்போதும், அழகாக ஆடை அணிவதில் ஆர்வமுடையவன் என்று போற்றுவார்கள் தன்னுடன் சேர்த்துக்கொள்ள ஆசைபடுவார்கள் இந்த விஷயத்திலுள்ள பெறுமானம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்
சவூதி அரேபியாவிலும்கூட மாற்று திறனாலிகளுக்கு எத்தனை முக்கியத்துவம் கொடுத்து அவர்களுக்கு அப்படி ஒரு குறை இருப்பதையே அவர்கள் என்னத்தில் வராத அளவுக்கு வைத்துள்ளார்கள். சவூதி அரசாங்கமும் என்னற்ற சலுகைகளை அவர்களுக்கு வாரி வழங்குகின்றது
நமது நாட்டிலோ அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை காரணம் அவர்களிடமிருந்து எதையும் கறக்கமுடியாது அல்லவா அதனால் இப்படி பட்டோர்களை ஒரு மூலையில் முடங்க செய்து விடுகின்றனர் மட்டுமல்லாது இந்திய அரசாங்கத்தால் அவர்களுக்கு கிடைக்கும் சில சலுகைகளை அவர்களின் பெயரைவைத்து மற்றவர்கள் அனுபவித்துவரும் காட்சிகள் ஏராளம் அதுதான் வல்லரசை நோக்கி பீடு நடைபோடும் இந்திய திருநாடு.
அடுத்த தொடரில் கண் திருஷ்டி பற்றி தொடரும்
(வளரும்)
அதிரை மன்சூர்
9 Responses So Far:
//நமது நாட்டிலோ அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை காரணம் அவர்களிடமிருந்து எதையும் கறக்கமுடியாது அல்லவா அதனால் இப்படி பட்டோர்களை ஒரு மூலையில் முடங்க செய்து விடுகின்றனர் மட்டுமல்லாது இந்திய அரசாங்கத்தால் அவர்களுக்கு கிடைக்கும் சில சலுகைகளை அவர்களின் பெயரைவைத்து மற்றவர்கள் அனுபவித்துவரும் காட்சிகள் ஏராளம் அதுதான் வல்லரசை நோக்கி பீடு நடைபோடும் இந்திய திருநாடு. //
சரியாக சொன்னீர்கள் மச்சான்.உண்மையில் அவர்களுக்கு நாம் மதிப்பளித்து நடக்க வேண்டும்.ஆனால் அரசோ கண்டுகொள்வதில்லை.அந்த பதுவா தான் இந்தியா இன்னும் முன்னேறவில்லையோ என்னவோ?
//அங்க ஹீனமான பிள்ளைகளை பெற்றோர்அதை அவமானமாக கருதுகிறார்கள்// காரணம் அந்தப் பிள்ளைகளின் பிறவிக்குறைபாட்டை வைத்தே அந்தக் குடும்பங்களுக்கு நூற்றாண்டு காலம் நிலைத்திருக்கும் இழிவான பட்டப்பெயர்களை வைத்து அழைத்து மகிழும் பழக்கம் நமக்கு உண்டே!
பிள்ளைகளை திருடி, அங்க ஹீனமாக்கி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் அவர்களை காட்டி பணம் பறித்து பிழைக்கும் கூட்டமும் இங்கே உண்டு.இங்கே'' இரக்கத்தை நினைப்பவன்பொன்னை இழப்பான்;கருணையை நினைப்பவன் காசை இழப்பான்; பாசத்தை நினைப்பவன் பர்ஸை இழப்பான்.
கண்ணும் கருத்துமாகப் படித்துப் பயன் பெற வேண்டிய தொடர்.
//நமது நாட்டிலோ அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை காரணம் அவர்களிடமிருந்து எதையும் கறக்கமுடியாது அல்லவா அதனால் இப்படி பட்டோர்களை ஒரு மூலையில் முடங்க செய்து விடுகின்றனர் மட்டுமல்லாது இந்திய அரசாங்கத்தால் அவர்களுக்கு கிடைக்கும் சில சலுகைகளை அவர்களின் பெயரைவைத்து மற்றவர்கள் அனுபவித்துவரும் காட்சிகள் ஏராளம் அதுதான் வல்லரசை நோக்கி பீடு நடைபோடும் இந்திய திருநாடு//.
சமூகத்தின் கோளாறான கண்பார்வையையும் சுட்டிக் காட்டி இருக்கிறீர்கள்.
அண்மையில் மாற்றுத்திறனாளிகள் என்று அழைக்கபப்டுகிற உடல் ஊனமுற்றோர்கள் தங்களுடைய உரிமைகளுக்காக தெருவில் இறங்கிப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.. இவர்களை போலீஸ் வேனுக்குள் அடித்து இழுத்து தள்ளிக்கொண்டு போனது காவல்துறை. பரிதாபமான இந்தக் காட்சிகளை தொலைக் காட்சிகள் காட்டின. அரசின் மனம் இளகவில்லை. இன்னும் இந்தப் போராட்டத்துக்கான கோரிக்கைகள் நிர்வாணம் கிடைக்காமல்தான் அவைகளும் ஊனமுற்று நிற்கின்றன.
அரபு நாடுகளில் - குறிப்பாக ஓமனில் உடல் ஊனமுற்ற நேஷனளுக்காக இட ஒதுக்கீடு உண்டு. ஒரு நிறுவனத்தின் மொத்த பே ரோலில் ஐந்து சதவீதம் உடல் ஊனமுற்றவர்கள் இருக்க வேண்டும். அவ்விதம் இல்லாவிட்டால் வெளிநாட்டிலிருந்து வேலைக்கு ஆட்களைக் கொண்டு வருவதற்கான விசா கிடைக்காது. இதற்காக மினிஸ்ட்ரி ஆப் லேபரில் கிளியரன்ஸ் வாங்கி இணைக்க வேண்டும். . நமது நாட்டில் இப்படி Mandatory ஆக இல்லை. ஆனால் மனிதாபிமானம் என்கிற தலைப்பில் மணிக்கணக்கில் மேடையில் நாம் பேசுவோம்.
உடல் ஊனமுற்றவர்களுக்கான பெட்ரோல் பங்க் போன்றவற்றின் இட ஒதுக்கீடு என்பது பெயரளவிலேயே. அவ்விதம் ஊனமுற்றவரின் பின்புறத்தில், ஒரு பணமுதலை இருக்கும். பெயரளவில் மட்டுமே இந்தச் சலுகை.
முன்பு எஸ் டி டி பூத்கள் ஊனமுற்றவர்களால் நடத்தப் பட்டு வந்தன. ஆனால் காலப் போக்கில் இவற்றுக்கு அவசியம் இல்லாமல் போய்விட்டது. .
கண்ணில் ஆரம்பித்து பல சமூகப்பரிமானங்களையும் அலசும் தம்பி மன்சூரை மனதாரப் பாராட்டுகிறேன்.
//முன்பு எஸ் டி டி பூத்கள் ஊனமுற்றவர்களால் நடத்தப் பட்டு வந்தன. ஆனால் காலப் போக்கில் இவற்றுக்கு அவசியம் இல்லாமல் போய்விட்டது. .
கண்ணில் ஆரம்பித்து பல சமூகப்பரிமானங்களையும் அலசும் தம்பி மன்சூரை மனதாரப் பாராட்டுகிறேன். //
இந்த கருத்தை நானும் வழிமொழிகிறேன். இதில் இரண்டு விசயம் இருக்கிறது. நமது சகோதரர் அதிரை மன்சூர் எடுத்து எழுதியிருக்கும் விசயம். ஒரு ஆப்தால்மாலஜிஸ்ட்டிடம் இத்தனை நாள் நேர்முகமாக பேட்டி கண்டதுபோல் இருக்கிறது.
அடுத்தது Telco வளர்ச்சியினால் கண்பார்வையற்றவர்கள் நடத்தி வந்த தொழிலுக்கும் பாதிப்பு ஏற்படும்போது அந்த Telco கம்பெனிகள் அதற்கான Corporate Responsibility இல்லாமல் நடந்து கொண்டது, பிறகு அந்த கண்பார்வையற்றவர்களின் சோற்றில் மண் அள்ளிப்போட்டு விட்டு ஒவ்வொரு வருடமும் தனது பங்குகள் எந்த அளவு சந்தையில் முன்னேற்றம் கண்டிருக்கிறது என்று சந்தோசப்படுவது.
இது போன்ற அநியாயங்கள் மதங்களை கடை பிடிக்காத ஜெர்மன் போன்ற நாடுகளிடம் அதிகம் கிடையாது. [ உடனே அவன் பொம்பளைங்களெ போகப்பொருளா பார்க்கிறானே....என்று வாதிக்கும் அறிவாளிகள் நாம் இந்தியாவில் நடக்கும் பெண்களுக்கு எதிரான அத்தனை அநியாயத்துக்கும் கவலைப்படாமல் வழக்கம் போல் டிவி யிலும் சினிமாவிலும், எவன் ஜெயிச்சாலும் நமக்கு ஒன்னும் உதவி செய்யாத தேர்தலிலும் கவனம் செலுத்துவதில் மட்டும் தவறுவதல்லை.
அஸ்ஸலாமு அலைக்கும்
பின்னூட்டமிட்ட சகோதரர்கள் அணைவர்களுக்கும்
ஜஸாக்கல்லாஹ் கைரன்
//ஜெர்மன்காரன் பொம்பளைங்களை போகப்பொருளாய் பார்க்கிறானே// மருமகன்ஜாகிர் ஹுசைன் சொன்னது./
ஆனால்அதிராம்பட்டினத்தில் பெண்கள் போகப்பொருள் அல்ல;யோகப்பொருள்!. வீடுவாசல்! நகைநட்டு!சொத்து சுகம்! சீர்சீராட்டு எல்லாம் கையில்வாங்கிய பின்னே மாப்பிள்ளை வலதுகாலை எடுத்து வைத்துபெண் வீட்டில் நுழைகிறான்.
பெண்/ஒருநாட்டில் போகம்;இன்னொரு நாட்டில் யோகம்! ஒருபெண்ணுக்குதான் எத்தனை கோலங்கள்? எத்தனை கோணங்கள்?
கண்களைப் பற்றிய துல்லியமான தகவல்களையெல்லாம் தேடிப்பிடித்து, அதேசமயம் சலிப்பு இல்லாத சுவாரஸ்யத்துடன் விவரித்து வரும் கட்டுரையாளரின் பணி போற்றத்தக்கது! நன்மைகளை அள்ளிக்கொள்கிறார்! மாஷா அல்லாஹ்!
பிறவிக் குறைகளை இழிவாகப் பழிக்கும் நம் சமூகத்தினர்களிடம் ஒரு விஷயத்தைப் பகிர்ந்துகொள்ள விழைகின்றேன். ஜப்பானிய மொழியில் செவிடன் என்றோ குருடன் என்றோ தனியாக வார்த்தைகள் இல்லையாம். மாறாக, காதால் கேட்க இயலாதவர் என்றும் கண்களால் காண இயலாதவர் என்றும் மரியாதையுடன் தான் குறிப்பிடுவார்களாம். உண்மையா மன்சூர்?
1999ல் வெளியான 'The Color of Paradise' என்ற 'Iranian Movie' கிடைத்தால் பாருங்கள். ஒரு ஹாஸ்டலில் தங்கிப்படிக்கும் தாயில்லாத, (வாப்புச்சா உடைய செல்லப்பிள்ளை) மாற்றுத் திறனாளி மாணவன் முஹம்மத், தன் உள்ள உணர்வுகள் ஒவ்வொன்றையும் எவ்வளவு திறமையுடன் வெளிப்படுத்துகின்றான் என்பதைக் காணலாம்!
Post a Comment