Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

என் இதயத்தில் இறைத்தூதர் - 9 - ஆனந்தாவின் அபிநயம் ! 12

அதிரைநிருபர் பதிப்பகம் | May 04, 2014 | , ,

ஆனந்தாவின் அபிநயம் !

கலிஃபோர்னியாவில் உள்ள ஒரு ஊரில் இருக்கும் பெரிய மால்  அது. அந்தக் காலை நேரம் மிக அமைதியாக இருந்தது பெரிய அளவில் கஸ்டமர்கள் இல்லாத நேரம். அந்த நேரம் தான் அக்கம் பக்கத்து கடைக் காரர்கள் அளாவாளாடும் நேரமாகும். வழக்கம் போலவே, அவன் வந்தான், பிறப்பில் இங்கிலாந்துக் காரன் மனைவியோ கனடாக் கார். இங்கிலாந்து கனடாவும் இருவருக்கும் பிடிக்காமல் போகவே அமெரிக்காவில் குடியேறினர். கிறிஸ்தவனாக இருந்து, ஹரே ராம ஹரே கிருஷ்ணா இயக்கத்தில் ஈடுபட்டு ஆனந்தா என்று பெயரிட்டு,  பஞ்ச, கச்சம், குடுமி என்று மாரிப் போய், காசி, மதுரா என்று சிலகாலம் சுற்றியவன். பல புராணங்களையும் படித்து விட்டு, இறுதியில் அவை அத்தனையும் 'myth' கட்டுக்கதைகள்" என்று தெளிவு கிடைத்தது, அதனை விட்டும் வெளியேறியவன்.

காசி மதுராவில் இந்தியாவிலிருந்தெங்கும் வரும் பல பெண்களை வைத்து கேளிக்கைகள் நடப்பதாகவும், கஞ்சா ஹெராயின் போன்ற போதைப் பொருட்கள் சாதாரணமாகப் புழங்கும் என்றும் சொல்வான். பெண்களை ஆடு மாடுகளைப் போல் அடிமையாக நடத்தும் வழக்கம் இந்தியாவில் இன்னும் இருக்கிறது என்றும், கணவன் இறந்தவுடன் நடக்கும் 'சதி' போன்ற வழக்கங்களைக்கொடுமையானவை என்றும் சொல்லுவான். இந்தியாவின் வெளித்தோற்றம் உலகுக்கு வேறுமாதிரியாகவும், அதன் உண்மையான தோற்றம் கொடூரமானவை, பெண்களுக்கு எதிரானவை என்றும் எடுத்துரைப்பான். இவைகளை நான் நேரில் தெரிந்து கொண்டேன் என்றும் இதனால்தான் அந்த இயக்கத்தை விட்டு, வெளியேறியதாகவும் சொல்லியவன், இடையிடையே அபிநயத்துடன் பரத நாட்டியமும் ஆடிக் காட்டுவான்.

ஒருநாள் இஸ்லாம் பக்கம் பேச்சு போனது, இன்றைய மீடியாக்கள் என்ன உளருகின்றனவோ, பொய்யான தகவல்களைப் பரப்புகின்றனவோ அவைகளை அப்படியே வாந்தி எடுக்க அவன் தவறவில்லை.

நம்மால் முடிந்த அளவு, "அப்படி இஸ்லாம் சொல்லவில்லை, இப்படித்தான் இருக்கிறது ,இவைகளெ ல்லாம் வீணான முறையில் இஸ்லாத்தின் மேல் இட்டுக் கட்டி விடப்பட்டக் கட்டுக் கதைகள்தான் என்பதை விளக்கிய போதும், அவன் அதை முழுமையாக ஏற்றுக் கொண்டதாக தெரியவில்லை.

'லகும் தீனுக்கும் வலியதீன்' என்று விட்டு விட்டாலும் எப்படி அவனுக்கு புரிய வைப்பது என்று மட்டும் கவலையாக இருந்தது. ஒவ்வொரு காலையிலும் வேண்டுமென்றே சீண்டுவதும், அதனால் டென்ஷன் ஏறுவதும் வாடிக்கையாக ஆகிவிட !

ஒரு நாள் அந்த ஆங்கிலப் புத்தகம் கிடைத்தது. The last sermon of the Prophet" என்பது அதன் பெயர். அந்தப் புத்தகத்தை அவரிடம் நீட்டினேன்.

"this book contains a words from our prophet Muhammad sal.if you want to weigh Islam, you should read first Quran and our prophet's sayings,it is called hadeeth.And then you can judge".

அந்தப் புத்தகத்தை வாங்கிக் கொண்டார், அடுத்த நாள் அந்த புத்தகத்துடன் வந்தார். இன்று அவர் முகத்தில் கோபமாக பேசும் அறிகுறிகள் இல்லை, அமைதியாக இருந்தது,அவரே சொன்னார், "Prophet Muhammad is not died, he live with us. I was so impressed of what he says about human.He is great. I am so sorry that I made you angry" என்று சொல்லிவிட்டு, தனது இரு கைகளையும் கூப்பி வருத்த தெரிவிக்க, நான் என்னளவில் மனதுக்குள் சொல்லிக் கொண்டேன். "நபிகள் நாயகம் ஸல் அவர்கள் இறந்து விட்டார்கள் .அல்லாஹ் மட்டுமே உயிரோடு இருப்பவன். ஆனால், நபிகள் நாயகத்தின் வாழ்க்கை  முறை (சுன்னா) அதற்கு இறப்பில்லை"

அன்றிலிருந்து, இஸ்லாத்தைப் படித்துக் கொண்டிருக்கிறார், ஆனந்தா நாளை 'அப்துல்லாஹ்'வாக மனம் மாற்றம் பெற துஆச் செய்வோமாக ! (இன்ஷா அல்லாஹ்)
தொடரும்...
இப்னு அப்துல் ரஜாக்

12 Responses So Far:

Ebrahim Ansari said...

//"நபிகள் நாயகம் ஸல் அவர்கள் இறந்து விட்டார்கள் .அல்லாஹ் மட்டுமே உயிரோடு இருப்பவன். ஆனால், நபிகள் நாயகத்தின் வாழ்க்கை முறை (சுன்னா) அதற்கு இறப்பில்லை"//

அனைவரின் இதயங்களிலும் இடம் பெற வேண்டிய வரிகள்.

சகோதரர் இப்னு அப்துல் ரசாக் அவர்களின் இரத்தினச் சுருக்கமான இந்தப் பதிவுகள் யாவும் அருமையானவை.

சுருக்கமான வாழ்க்கைப் பாடங்கள். .அவற்றை சுவைபடச் சொல்வது சிறப்பு. மாஷா அல்லாஹ்.

Adirai anbudhasan said...

அல்ஹம்துலில்லாஹ், நல்ல விஷயம், அல்லாஹ் அம்மனிதருக்கு ஹிதாயத் நல்கட்டும். நாமும் அல்லாஹ், அல்லாஹ் என்று சொல்லிக்கொண்டே நம் செயல்களை திருத்திக்கொள்ளாமல் இருந்து, மற்றவர்கள் நம் செயலைக்கண்டு இறை மார்கத்தை கணிக்காமல் இருக்க அல்லாஹ் உதவிபுரியவேண்டும்.

யார், யாருக்கு எந்தவகையான ஹிதாயத்தை அருள வேண்டுமோ, அதை அருள தகுதி பெற்றவன் அல்லாஹ் ஒருவனே. அல்ஹம்துலில்லாஹ்

sabeer.abushahruk said...

முன்னெடுத்த முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள் தம்பி இப்னு அப்துர்ரஜாக்.

sheikdawoodmohamedfarook said...

'நோய்நாடிநோய் முதல் நாடி' என்று சொல்வார்கள்.அதாவது ஒரு வைத்தியன் நோய்என்னவென்று அறியவேண்டும் அதன் பின் அந்தநோய் வந்ததற்கான காரணம் என்னஎன்று தெரிந்து அதற்கான மருந்தை கொடுத்தால் நோய் நீங்கும்.அதை விட்டுவிட்டு''இவன் ஒரு காபீர்!இவன் திருந்தவே மாட்டான்! இவனோடு சகவாசம் வச்சுகிடவே கூடாது!இவன்கூடஇருந்துசாப்பிடவே கூடாது'' என்றெல்லாம் நாம் ஒதுங்கிப் போனால்காத்து வாங்ககூடஇஸ்லாம்நம் வீட்டைவெளியே மூக்கை நீட்டாது.மருந்தைகொடுக்காமல்அதை மடியில் கடிக்கொண்டிருந்தால் நோய் நீங்காது! தம்பி இப்னுஅப்துல்ரசாக் கைராசிக்கார நல்லவைத்தியர்! நல்ல மருந்து கொடுத்திருக்கிறார்.பாராட்டுக்கள்.அஸ்ஸலாமுஅலைக்கும்.

Ahmed Ali said...

யா அல்லாஹ்! அந்த ஆனந்தாவுக்கு,உன் புறத்திலிருந்து ஹிதாயத் என்னும் நேர் வழியைக் கொடுத்து, லாயிலாஹ இல்லல்லாஹ் என்று விரைவில் கலிமா மொழியக்கூடிய பெறும் பாக்கியம் கொடுத்து, சுவனத்தில் ஆனந்தமாக சுற்றிவர கிறுபை செய்வாயாக.....அதன் முழு நன்மையையும் இப்னு அப்துற் றஜ்ஜாக் அவர்களுக்கு குறையின்றிக் கொடுப்பாயாக....ஆமீன்....


Ahmed Ali said...

யா அல்லாஹ்! அந்த ஆனந்தாவுக்கு,உன் புறத்திலிருந்து ஹிதாயத் என்னும் நேர் வழியைக் கொடுத்து, லாயிலாஹ இல்லல்லாஹ் என்று விரைவில் கலிமா மொழியக்கூடிய பெறும் பாக்கியம் கொடுத்து, சுவனத்தில் ஆனந்தமாக சுற்றிவர கிறுபை செய்வாயாக.....அதன் முழு நன்மையையும் இப்னு அப்துற் றஜ்ஜாக் அவர்களுக்கு குறையின்றிக் கொடுப்பாயாக....ஆமீன்....


M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

இஸ்லாத்தைப் படித்துக் கொண்டிருக்கும் ஆனந்தா நாளை அப்துல்லாஹ்-வாக மனம் மாற்றம் பெற துஆச் செய்வோமாக . இன்ஷா அல்லாஹ்

ZAKIR HUSSAIN said...

இதுதான் சரியான முறை ...எனது மார்க்கம்தான் சிறந்தது , உன்னுடையது எதற்கும் உதவாது என்று பேசினால் நிச்சயம் அவர் வெறுத்து ஓடியிருப்பார். புத்தகங்களை படிக்க கொடுப்பதும், நமது மார்க்கத்தில் அவர்களது பிரச்சினைக்கு என்ன தீர்வு இருக்கிறது என்பதை எடுத்து சொல்வதும் இன்றைய கால கட்டத்தில் ஒரு நல்ல பணி....மார்க்கம் வளர.

Keep up your Good work brother Ibnu Abdul Razak.

Yasir said...

அன்றிலிருந்து, இஸ்லாத்தைப் படித்துக் கொண்டிருக்கிறார், ஆனந்தா நாளை 'அப்துல்லாஹ்'வாக மனம் மாற்றம் பெற துஆச் செய்வோமாக ! ஆமீன்

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும்.அன்றிலிருந்து, இஸ்லாத்தைப் படித்துக் கொண்டிருக்கிறார், ஆனந்தா நாளை 'அப்துல்லாஹ்'வாக மனம் மாற்றம் பெற துஆச் செய்வோமாக ! ஆமீன்

Ebrahim Ansari said...

தம்பி ஜாகிர் சுட்டிக் காட்டியுள்ள இதுதான் நல்ல முறை என்கிற கருத்தில் பல பொருள்கள் பொதிந்து இருக்கின்றன. தேவையற்ற விவாதங்களை ஒதுக்கிவிட்டு பிற மத சகோதரர்களுக்கு நல்ல நூல்களை பரிசளித்துப் படிக்கச் செய்வது ஒரு 'ஜென்டில்மேன்" முறை. இந்த முறை அமைதிப் புரட்சிக்கு வழி வகுக்கும்.

இப்னு அப்துல் ரஜாக் said...

கருத்துரை வழங்கிய,வாசித்த,ஆலோசனை தந்த,துவா செய்த அனைத்து சகோதர,சகோதரிகளுக்கும் நன்றி.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு