Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 70 4

அதிரைநிருபர் பதிப்பகம் | May 23, 2014 | , ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!

‘’ ஆட்சியதிகாரம் ‘’

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன். (அல்குர்ஆன்: 3:189)

வானங்கள், பூமி மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டவைகளின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைப்பான். அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன். (அல்குர்ஆன்: 5:17)

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது என்பதை நீர் அறியவில்லையா? தான் நாடியோரை அவன் தண்டிப்பான். தான் நாடியோரை மன்னிப்பான். அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன். (அல்குர்ஆன்: 5:40)

அவனே அல்லாஹ். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. இவ்வுலகிலும், மறுமையிலும் புகழ் அவனுக்கே உரியது. அதிகாரமும் அவனுக்கே. அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்! (அல்குர்ஆன்: 28:70)

''அல்லாஹ்வே! ஆட்சியின் அதிபதியே! நீ நாடியோருக்கு ஆட்சியை வழங்குகிறாய். நீ நாடியோரிடமிருந்து ஆட்சியைப் பறித்துக் கொள்கிறாய். நாடியோரைக் கண்ணியப்படுத்துகிறாய். நாடியோரை இழிவு படுத்துகிறாய். நன்மைகள் உன் கைவசமே உள்ளன. நீ அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்'' என்று கூறுவீராக! (அல்குர்ஆன் : 3:26)

நம்பிக்கை கொண்டோம் என்று கூறியதன் காரணமாக சோதிக்கப்படாமல் விடப்படுவார்கள் என மனிதர்கள் நினைத்து விட்டார்களா? (அல்குர்ஆன்: 29:2)

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது என்பதையும், அல்லாஹ்வையன்றி உங்களுக்குப் பாதுகாவலனோ, உதவுபவனோ இல்லை என்பதையும் நீர் அறியவில்லையா? (அல்குர்ஆன் :2:107)

பூமியில் ஆணவத்தையும், குழப்பத்தையும் விரும்பாதவர்களுக்காக அந்த மறுமை வாழ்வை ஏற்படுத்தியுள்ளோம். நல்ல முடிவு (இறைவனை) அஞ்சுவோர்க்கே.(அல்குர்ஆன்: 28:83)

நற்கூலி பெறுவதில் தியாகிகளின் தகுதியைப் பெறுபவர்

''தியாகிகள் ஐவர் :  1) பிளேக் நோயினால் இறந்தவர், 2) காலரா நோயினால் இறந்தவர்,  3) நீரில் மூழ்கி இறந்தவர்,  4) கட்டிடம் இடிந்து விழுந்து இறந்தவர், 5) அல்லாஹ்வின் பாதையில் உயிரை இழந்தவர் என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) ( ரியாளுஸ்ஸாலிஹீன்:1353 )

'' உங்களில் தியாகிகள் என எவரைக் கருதுகிறீர்கள்?''  என்று நபி (ஸல்) கேட்டார்கள். ''இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் வழியில் கொல்லப்பட்டவரே தியாகி ஆவார்'' என்று நபித்தோழர்கள் கூறினர் ''(அப்படியெனில்) என் சமுதாயத்தில் உயிரை தியாகம் செய்தோர், மிகக் குறைவாகவே இருப்பர்'' என நபி(ஸல்) கூறினார்கள். ''இறைத்தூதர் அவர்களே! அவர்கள் யார்?'' என்று கேட்டார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள், ''அல்லாஹ்வின் வழியில் கொல்லப்பட்டவர், உயிரைத் தியாகம் செய்தவராவார். மேலும் அல்லாஹ்வின் வழியில் இறந்தவர், உயிரைத் தியாகம் செய்தவராவார். பிளேக் நோயில் இறந்தவரும் உயிரைத் தியாகம் செய்தவராவார். காலரா நோயினால் இறந்தவரும் உயிரைத் தியாகம் செய்தவராவார். நீரில் மூழ்கியவரும் உயிரைத் தியாகம் செய்தவராவார்'' என்று கூறினார்கள்.  (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 1354 )

''தன்  சொத்தைப் பாதுகாப்பதில் கொல்லப்பட்டவர், இறை வழியில் தியாகம் செய்தவர் ஆவார்'' என்று நபி(ஸல்) கூறினார்கள்.(அறிவிப்பவர்:அப்துல்லா இப்னு அம்ருப்னுல் ஆஸ் (ரலி)அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1355)

''தன் சொத்தைப் பாதுகாப்பதில் கொல்லப்பட்டவர், இறைத்தியாகி ஆவார். தம் உயிரைப் பாதுகாக்க கொல்லப்பட்டவரும், தியாகி ஆவார். தன் மார்க்கத்தை பாதுகாக்க கொல்லப்பட்டவரும், தியாகி ஆவார். தன் குடும்பத்தைப் பாதுகாக்க கொல்லப்பட்டவரும், இறைத்தியாகி ஆவார்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஅஹ்வர் என்ற ஸயீத் இப்னு ஸைத் இப்னு அம்ரு இப்னு நுஃபய்ல்  (ரலி) அவர்கள் (அபூதாவூது, திர்மிதீ) ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 1356 )

''நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, ''இறைத்தூதர் அவர்களே! என் சொத்தை ஒருவர் எடுத்துக் கொள்ள வந்தால் என்ன செய்வது? என்று கூறுங்கள்'' என்று கேட்டார். ''உன் சொத்தை அவருக்கு  கொடுத்து விடாதே! என்று கூறினார்கள். ''என்னை அவர் தாக்கினால் என்ன செய்வது?'' என்று கேட்டார். ''நீயும் அவனைத் தாக்குவாயாக!'' என்று கூறினார்கள். என்னை அவர் கொன்று விட்டால் என்ன செய்வது?'' என்று கேட்டார். ''நீ தியாகி (ஷஹீத்) ஆவாய்'' என்று கூறினார்கள். ''அவரை நான் கொன்று விட்டால் என்ன செய்வது? என்று கேட்டார். ''அவர் நரகம் செல்வார்'' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1357 )

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''

இன்ஷாஅல்லாஹ் வளரும்...

அலாவுதீன் S.

4 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஜஸாக்கல்லாஹ் ஹைரன் காக்கா...

//நம்பிக்கை கொண்டோம் என்று கூறியதன் காரணமாக சோதிக்கப்படாமல் விடப்படுவார்கள் என மனிதர்கள் நினைத்து விட்டார்களா? (அல்குர்ஆன்: 29:2)//

இன்றைய பதிவு பயனுள்ள அற்புதமான நினைவூட்டலடங்கிய - அழுத்தமாகச் சொல்லும் இறைச் சட்டம் !

எக்காலத்திற்கும் ஒரே சட்டம் அது அல்லாஹ்வின் ஆட்சி அதிகாரத்திற்கு உட்பட்ட சட்டமாகும் !

இப்னு அப்துல் ரஜாக் said...

எக்காலத்திற்கும் ஒரே சட்டம் அது அல்லாஹ்வின் ஆட்சி அதிகாரத்திற்கு உட்பட்ட சட்டமாகும் !
unchanging code (Qur'an) ,
in the changing world.










































sabeer.abushahruk said...

எத்தனை முறை அருந்தினாலும் தெவிட்டாத ஒரே மருந்து இந்த அருமருந்து!

மருந்தையே விருந்தெனத் தந்துவரும் அலாவுதீனுக்கு நன்றி.

Ebrahim Ansari said...

//''அல்லாஹ்வே! ஆட்சியின் அதிபதியே! நீ நாடியோருக்கு ஆட்சியை வழங்குகிறாய். நீ நாடியோரிடமிருந்து ஆட்சியைப் பறித்துக் கொள்கிறாய். நாடியோரைக் கண்ணியப்படுத்துகிறாய். நாடியோரை இழிவு படுத்துகிறாய். நன்மைகள் உன் கைவசமே உள்ளன. நீ அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்'' என்று கூறுவீராக! (அல்குர்ஆன் : 3:26)//

இன்றைய நிலையில் முஸ்லிம்கள் திரும்பத் திரும்பபடித்து நம்பிக்கை கொள்ள வேண்டிய வரிகள்.

ஜசாக் அல்லாஹ் ஹைரன் சகோதரர் அலாவுதீன்.

நேற்று சேதுபாவா சத்திரத்தில் புதிய பள்ளித் திறப்புவிழாவுக்கு சென்று இருந்தோம். அதிரையே திரண்டு வந்திருந்தது. அதனால் இந்த மருந்தை நான் அருந்த ஒரு நாள் தாமதம்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு