Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கண்கள் இரண்டும் - தொடர் 37 12

அதிரைநிருபர் பதிப்பகம் | May 19, 2014 | ,


கண்திருஷ்டி

கண்ணுக்கு ஓர் அபரிமிதமான ஆற்றலை அல்லாஹ் வழங்கியுள்ளான். அண்மையில் ஊடகங்களில் வெளியான ஒரு செய்தியை அனேகமாகப் பலரும் பார்த்திருப்பீர். ஒரு சிறுவன், அவன் சில பொருட்களைப் பார்க்கிறான். அவனின் பார்வையினால் அந்த பொருட்கள் வலைகின்றன. கண்ணுக்கு அவ்வாறான சக்தியிருக்கிறது. இது குறித்து சிறுவனின் கண்ணில் காணப்பட்ட அபரிமிதமான சக்தியினால்தான் அவ்வாறு ஏற்படுகிறது என்பதை விஞ்ஞானமும் ஏற்றுக்கொண்டதாக படித்தேன் அது எந்த அளவுக்கு உண்மை என்பது புலப்படவில்லை இருந்த போதிலும் கண்களுக்கு மிகப் பெரிய சக்திகள் இருப்பது மறுக்க முடியாத விஷயம் என்பதால் இப்படியும் இருக்கலாம் என்ற அனுமானத்தில் அதை இங்கே குறிப்பிடுகின்றேன்

சிலருக்கு அல்லாஹ் அபரிமிதமான் சக்திகளை கொடுத்திருப்பதும் ஏற்றுக்கொள்ளப்பட வெண்டிய விஷயமே சமீபத்தில் யூ டியூபில் ஒரு வீடியோ வளம் வந்தது அதில் கேரளாவைச் சேர்ந்த ஒருவர் 220வால்ட் 480 வால்ட் கரண்டை உடலில் செலுத்துகின்றார் அவரை அந்த கரண்ட் ஒன்றுமே செய்யவில்லை இதுவும் இறைவனால் அவருக்கு வழங்கப்பட்ட ஒரு ஆற்றல் அவர் இப்படி செய்கின்றார் என்று நாம் கரண்டைதொட்டுகூட பார்க்க முடியாது

சில வகைப் பாம்புகள் உலகில் காணப்படுகின்றன. அவை நம்மைப் பார்த்தாலே போதும் நமது பார்வை போய் விடும் அவை நம்மைத் தீண்டவே தேவையில்லை. ஏனெனில் அவற்றின் பார்வையில் ஒரு விதமான  சக்தியிருக்கிறது என்று டிஸ்கவரி சேனலில் பார்த்து இருக்கின்றேன்  ஆகவே சில படைப்புக்களுக்கு இது போன்ற ஆற்றலை அல்லாஹ் வழங்கியுள்ளான். என்பதை நாம் விளங்க வேண்டும் அவ்வாறு கண்களில் காணப்படுகின்ற சாதாரண பார்வையால் கண்ணேறும் ஏற்படுகின்றது.சொல்வதைவிட ஒருவரின் மனசில் ஏற்படும் தீங்கான என்னங்களை கண்ணின் வழியாக வெளிப்படுத்துவதையே கண்திருஷ்டி என்று கூறலாம்

தீங்கை ஏற்படுத்தும் ஒருவரது பார்வைக்கு கண்திருஷ்டி அல்லது கண்ணேறு என்று கூறுவார்கள். நபி (ஸல்) அவர்கள், 'கண்ணேறு (ஏற்படுவது) உண்மையே' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி), நூல்: புஹாரி 5740, 5944,)

'ஆந்தையினால் ஏதும் இல்லை, (ஆந்தை அலறுவதால் ஏதும் இல்லை) கண்ணேறு உண்மையாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

(அறிவிப்பவர்: ஹாபிஸ் அத்தைமீமி (ரலி), நூல்: திர்மிதி 2140)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘கண்ணேறு (திருஷ்டிபடுவது) உண்மைதான்” என்று கூறினார்கள். மேலும், பச்சை குத்துவதைத் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரழி)  ஆதாரம் : புஹாரி

கண்திருஷ்டி தீய என்னங்களால் ஏற்படுகிறது, என்பதற்கு நபி (ஸல்) அவர்களின் இந்த ஹதீஸ் ஆதாரமாகும். கண்ணேறு பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, 'அது ஷைத்தானின் வேலையாகும்' என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி), நூல்: அபூதாவூது 3859)

ஆச்சரியமான ஒன்றைக் கண்டால் ஏங்கிவிடக் கூடாது. ஏனெனில் மனக்கண்ணுக்கு அல்லாஹ் வித்தியாசமான ஆற்றலைக் கொடுத்துள்ளான். அதனால் பாதிப்புக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதை இஸ்லாம் அன்றைக்கே ஏற்றுக் கொண்டு விட்டது. அப்படியான ஒரு பாதிப்பை ஏற்படுத்தாமல் காத்துக் கொள்ள வேண்டுமாயின் சந்தோச உணர்வுகளை ஏற்படுத்திக் கொள்வதோடு அணைவர்களோடும் அதை பகிர்ந்து கொள்ள வேண்டும்.

‘எனது சகோதரரிடத்தில் காணப்படும் இந்த சிறப்பைப் பார்த்து எனக்குப் பொறாமையில்லை. அல்லாஹ் அவருக்கு பரகத் செய்யட்டும். என்று சொல்ல வேண்டும். ஆனால் சிலர் முதலில் ஏங்கி விடுவர். அதற்குப் பின்னர் தான் தன்னை சுதாகரித்துக் கொண்டு நான் இப்படி சொல்லக் கூடாது…. என்று கூறுவர். 

எனவே உள்ளத்திலிருக்கும் தீய எண்ணங்கள் இவ்வாறான வேளைகளில் பார்வையினால் வெளிப்படுகின்றன. அதனால்தான் நபியவர்கள் அல்லாஹ் உனக்கு பரகத்துச் செய்வானாக என்று நீங்கள் கூறியிருக்கக் கூடாதா?’ என்று கூறினார்கள். 

எதை  அல்லாஹ் தன்னுடைய வஹீ மூலம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அறிவித்தானோ அதை நமக்கு அப்படியே தந்தார்கள் நம்மை பற்றி மக்கள் ஏதாவது நினைத்துவிடுவார்களோ என்று எதையும் நமக்கு மறைக்கவில்லை 

மேலே நாம் பார்த்த ஹதீஸ்களிலிருந்து நாம் உண்மையை விளங்கலாம். அதாவது அல்லாஹ் எதை வஹீ மூலம் உண்மை என்று சொன்னானோ அதை நபியவர்கள் உண்மை என்று  சொன்னார்கள்.. நபியவர்கள் கூறியிருப்பவைகள் இன்றுள்ளவர்களுக்கு பகுத்தறிவுக்கு முரண்படுவதாகத் தெரியலாம். அன்றுள்ளவர்களுக்கும்  தெரிந்திருக்கலாம். ஆனால் இன்று விஞ்ஞானம் இமாலய வளர்ச்சியிலிருக்கிறது. ஆரம்ப காலங்களில் விஞ்ஞானம் வெறுமனே சடரீதியான நம்பிக்கையில்தான் வளர்ந்து வந்தது. ஆனால் விஞ்ஞானம் இன்று ஆன்மாவிற்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துள்ளது..

இறை மறையின் வசனங்களைக் கொண்டு ஓதி ஊதும்போது அல்லாஹ் அந்த இறை வசனங்கள் மூலம் சிபா அளிக்கின்றான். அதற்காக கண்ட கண்ட லெப்பை மார்களிடம் சென்று இந்த காரியத்தை செய்ய தேவையில்லை  அவர்களிடம் செல்லும்போது ஷிர்க் (இணைகற்பிக்கும் ) கலக்கும்  வார்த்தைகளைக் கொண்டு சிலபேர் செய்து கொண்டிருக்கின்றார்கள் இது முற்றிலும் ஒழிக்கப்படவேண்டியவை. நம் வீட்டில் உள்ளவர்களே அல்லாஹ்வின் தூய திருநாமங்களையோ, குர்ஆனின் வசனங்களையோ ஓதி இறைவனிடம் கேட்வேண்டும் ஓதுவதை அடுத்தவர்கள் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் தெளிவாக ஓதவேண்டும். பிறமதத்தினரைப் போல ஷைகுமார்கள் முணுமுணுப்பதையோ மந்திரமாக உச்சரிப்பதையோ மார்க்கம் அனுமதிக்கவில்லை.

கண்ணேறு என்பது உண்மையாக இருந்தாலும் அதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக முகத்தில் காயமேற்படுத்தல். வீட்டு மனைகலிலும் புதிதாக கட்டப்படும் வீடுகளிலும் பூசனிக்காயில் கரும்புள்ளி குத்தப்படுவது வீட்டிற்கு முன்னால் தொங்கவிடப்படுவதயும் கம்புக்கு வேட்டி சட்டை மாட்டி வைக்கும் காட்சிகளையும் நாம் கண்டிருக்கின்றோம் இப்படி அடையாலம் இட்டு தொங்கப்படுவதை இஸ்லாம் தடைசெய்துள்ளது. ஆகவே கண்ணிலிருந்து காத்துக்கொள்வதற்காக இவை போன்று செய்யப்படும் அனைத்து  நடை முறைகளும் கூடாது என்பதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

கண்திருஷ்டியின் பாதிப்புகள் எவ்வாறு இருக்கும் என்பதை நமது நாயகம் கரீம் ரஸூல் ( ஸல்) அவர்கள்  கண்ணேறு முகத்தில் கருஞ்சிவப்பான படர்தாமரையை உண்டாக்கும். அதற்கான ஆதாரம். நபி (ஸல்) அவர்கள் என் வீட்டில் ஒரு சிறுமியைப் பார்த்தார்கள். அவளுடைய முகத்தில் கருஞ்சிவப்பான படர்தாமரை ஒன்று இருந்தது. நபி (ஸல்) அவர்கள் இவளுக்கு ஓதிப்பாருங்கள். ஏனெனில் இவள் மீது கண்ணேறு பட்டிருக்கிறது என்று சொன்னார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புஹாரி 5739)

கண்திருஷ்டியினால் வியாதிகள், சுகவீனம் உண்டாகும் என்பதை மேற்கண்ட நபிமொழியிலிருந்து விளங்கிக் கொள்ள முடிகிறது. கண்திருஷ்டியிலிருந்து மீள்வது எப்படி?

எளிமையான ஒரே வழி சூரத்துல் ஃபலக்,  சூரத்துன்னாஸ் என்ற அல்குர்ஆனின் கடைசி இரண்டு அத்தியாங்களை ஓதுவது தான். சூரத்துல் ஃபலக்,  சூரத்துன்னாஸ் அத்தியாயங்களை கண்ணேறு இறங்கும் வரை ஓதுவதைக் கொண்டு ஷைத்தானிடமிருந்து நபி (ஸல்) அவர்கள் பாதுகாப்புத் தேடிக் கொண்டிருந்தார்கள். அவ்விரு சூராக்களும் இறங்கிய பின் இவற்றை எடுத்துக் கொண்டு மற்றவைகளை விட்டு விட்டார்கள்' என்று அபூஸயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். 

(நூல்கள்: நஸயீ, இப்னுமாஜா 3511, திர்மிதி 2135)

மேற்கண்ட அத்தியாயங்களை ஓதுவதே கண்திருஷ்டி ஏற்படாமல் இருக்க வழியுமாகும்.

கண்திருஷ்டியிலிருந்து மீள்வதற்கு ஓதிப்பார்க்க அனுமதி உண்டு. அதற்குரிய ஆதாரங்கள். 'விஷகடி, கண்ணேறு, சிரங்கு ஆகியவற்றுக்காக மந்திரிக்க நபி (ஸல்) அவர்கள் அனுமதித்தார்கள்' என்று அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். 

(நூல்: திர்மிதி 2132)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்ணேறுவி(ன் தீய விளைவி)லிருந்து விடுபட ஓதிப்பார்த்துக் கொள்ளும்படி கட்டளையிட்டார்கள் அல்லது எனக்குக் கட்டளையிட்டார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புஹாரி 5738)

'சிரங்கு, கண்ணேறு ஆகியவற்றுக்குத் தவிர மந்திரித்தல் கிடையாது' நபிமொழி. (அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன்                   (ரலி), நூல்: திர்மிதி 2134)

மந்திரித்தல் ஓதிப்பார்த்தல் இரண்டும் ஒரே பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. நபி (ஸல்) அவர்கள் அனுமதித்த முறையில் ஓதிப்பார்ப்பது அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும். அதுவல்லாத முறையில் ஓதிப்பார்ப்பது தடுக்கப்பட்டதாகும். அதற்குரிய ஆதாரங்கள். 'யார் சூடுபோட்டுக் கொள்கிறாரோ அல்லது மந்திரிக்கிறாரோ அவர் தவக்குலில் (உறுதியான நம்பிக்கையில்) இருந்து நீங்கி விட்டார்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(அறிவிப்பவர்: முகீரா பின் ஷுஃபா (ரலி), நூல்கள்: அஹ்மது, நஸயீ, இப்னுமாஜா, இப்னுஹிப்பான், ஹாகிம், திர்மிதி 2131) 

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் கண்திருஷ்டியை கழிப்பதற்காக கட்டப்பட்ட கயிற்றை அறுக்குமாறு கட்டளையிட்டார்கள். மிருகங்களுக்கு கூட கறுப்புக் கயிறு கட்ட நபி (ஸல்) அவர்கள் அனுமதிக்க வில்லை. மனிதர்களுக்கு எப்படி அதை கட்ட முடியும். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய பிரயாணம் ஒன்றில் அவர்களுடன் இருந்தேன். 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தூதுவர் ஒருவரை அனுப்பி எந்த ஒட்டகத்தின் கழுத்திலும் (ஒட்டக வாரினால் ஆன கண் திருஷ்டி கழிவதற்காக கட்டப்படுகின்ற) கயிற்று மாலையோ அல்லது வேறெந்த மாலையோ இருக்கக் கூடாது. அப்படியிருந்தால் கட்டாயம் அதைத் துண்டித்து விட வேண்டும் என்று (பொது மக்களிடையே) அறிவிப்புச் செய்தார்கள். அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல்லாஹ் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள் அப்போது மக்கள் தங்கள் உறங்கும் இடத்தில் இருந்தார்கள் என்று அபூபஷீர் (ரலி) அவர்கள் கூறியதாக நான் எண்ணுகிறேன் என்று கூறுகிறார்கள்.   (நூல்: புஹாரி 3005)

'எந்த வித விசாரணையும் இன்றி சொர்க்கம் செல்லும் எழுபதினாயிரம் பேர் ஓதிப் பார்க்காது, இறைவனையே சார்ந்திருப்பவர்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (நூல்: புஹாரி 5705)

இங்கே ஓதிப்பார்ப்பது என்பது நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த முறையில் அமைவதை குறிக்கும். நபி (ஸல்) அவர்கள் தனக்குத் தானே ஓதிப்பார்த்திருக்கிறார்கள் என்பதிலிருந்தும் அனுமதிக்கப்பட்ட முறையில் ஓதிப்பார்க்கலாம் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் தமது படுக்கைக்கு (உறங்கச்) சென்றால் ஒவ்வொரு இரவிலும் தமது உள்ளங்கைகளை இணைத்து அதில் குல்ஹுவல்லாஹுஅஹத், குல்அவூது பிரப்பில் ஃபலக், குல்அவூது பிரப்பின் னாஸ் ஆகிய (112,113,114) அத்தியாயங்களை ஓதி ஊதிக் கொள்வார்கள். பிறகு தம் இரு கைகளால் (அவை எட்டும் அளவிற்கு) தமது உடலில் இயன்ற வரையில் தடவிக் கொள்வார்கள். முதலில் தலையில் ஆரம்பித்து பிறகு முகம் பிறகு தம் உடலின் முற்பகுதியில் கைகளால் தடவிக் கொள்வார்கள். இவ்வாறு மூன்று முறை செய்வார்கள்.  (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூது (ரலி), நூல்: புஹாரி 5017)

நடை முறையில் கண்திருஷ்டியை கழிக்க 'தலைசுற்றிப் போடுதல்' என்ற முறை உள்ளது. இது மாற்றுமத சமூகத்திலிருந்து முஸ்லிம் சமுதாயத்தில் நுழைந்து விட்ட வழக்கமாகும். பட்ட மிளகாய், உப்பு, முச்சந்தி மண், வீட்டுக் கூறையின் ஓலை இவை போன்றவற்றை கண்திருஷ்டி பட்டவரின் தலையை மூன்று முறை சுற்றி நெருப்பில் போட்டு விடுவார்கள். இன்னும் இது போன்ற வழக்கங்களும் நடைமுறையில்உள்ளன. இம்முறைகள் முற்றிலுமாக தடுக்கப்பட வேண்டிய மூடப்பழக்கமாகும். இதனால் கண்திருஷ்டி குணமாகாது

களிப்பு (கண்திருஷ்டிக்கு பார்த்த) களித்த அந்த சாம்பலை நம் தாய்மார்கள் மிதிக்கவோ தாண்டவோ விடமாட்டார்கள். பிள்ளைகளையும் மிதிக்கவோ தாண்டவோ விடமாட்டார்கள் அப்படி தாண்டிவிட்டு அதற்கு தகுந்தார்போல் அந்த பிள்ளைக்கு எதேச்சயாக ஏதாவது சுகக்குறைவு வந்துவிடால், கல்ச்சல்ல போவாள்ட்ட எத்தனை தடவை சொல்ரது ரோட்ல நடக்கும்போது பூமிய பார்த்து நட களிப்பயெல்லாம் கண்டால் மிதிச்சிடாதே என்றால் கேட்கிறாளா சனியன் தொலஞ்சிடுவா, மேலேயே பார்த்து நடந்து சனியனை வீட்டுக்கு  அள்ளி வந்துட்டா என்னா செய்வது என்றே தெரியவில்லையே சவுர்மாட்டே போயி களிப்பு களிச்சிட்டு வந்திடலாம்.  சுபானல்லாஹ் ஈமான் எப்படி பறிபோவுதுண்டு பாருங்கள்  எத்தனை மூட நம்பிக்கைகள்  அல்லாஹ் பாதுகாப்பானாக.

அடுத்த தொடரில் வாக்குக் கண் அல்லது மாறுகண் பற்றி தொடரும்

(வளரும்)

அதிரை மன்சூர்

12 Responses So Far:

adiraimansoor said...
This comment has been removed by the author.
adiraimansoor said...

மாயம்! மாயம்!! மாயம்!!!
எங்கே சென்றது ஒட்டு மொத்த முஸ்லீம் சமுதாயத்தின் ஓட்டுகள் கிருஸ்துவ சமுதாயத்தின் ஓட்டுகள் பூர்வீக திமுக ஓட்டுகளின்னும் மோடியின் எதிர்ப்பலை ஓட்டுகள் எல்லாம் எங்கே சென்றது அப்படியா ஒரு இடமில்லாமல் திமுக வாஷ் அவுட் என்றால் சிந்திக்க வேண்டாமா
சூழ்ச்சிகள் பெரிதாக நடத்தப்பட்டிருப்பது தெரியவில்லையா

இனி மின்னானு வாக்கு பதிவு இயந்திரத்திற்கு
விடை கொடுத்தால்தான் ஏமாற்றுக்காரர்களின் சூழ்ச்சியில் இருந்து தப்ப முடியும்
மக்களால் தேர்ந்தெடுத்தவர்கள் ஆட்சி அதிகாரத்தில் வர முடியும் இந்த பிரட்சனையை எதிர் கட்சிக்கு கொண்டு செல்லுவது ஒவ்வொருவருடைய தார்மீக கடமை
மின்னனௌ இயந்திரம் நாம் என்ன சொல்கின்றோமோ அதை அது கேட்கும்
கீழ் காணும் தளத்தில் சென்று இந்த வீடியொவை பாருங்கள் ஒட்டு மொத்த மக்களும் ஏமாற்றபட்டிருப்பது தெரியவரும் எப்படி எப்படியெல்லாம் மின் வாக்கு பதிவு இயந்திரத்தை மாற்றி அமைத்து மக்களை ஏமாற்ற முடியும் என்பது உங்களுக்கும் தெரியவரும்
இதை எல்லோரிடமும் பரப்புங்கள்
அடுத்த முறை யாரும் ஏமாற்றப்படக்கூடாது
அரசியல் வாதிகள் சிலபேர் நம் எல்லோரையும் கூ முட்டையாக நினைத்துள்ளதை களைய வேண்டும்
அவசியம்
இந்த வீடியோவை பாருங்கள்
http://indiaevm.org

தளத்தை எனக்கு அறிமுகப்படுத்திய

இபுராஹீம் அன்சாரி கக்காவுக்கு நன்றி

இப்னு அப்துல் ரஜாக் said...

ஹதீஸ் பார்வையில் கண்ணேரு,அருமை

sheikdawoodmohamedfarook said...

வாழ்நாள் முழுவதும் வாழ்வின் சுகங்களையே காணாதவர்கள் பொறாமை மற்றும் ஏக்க கண்களை கொண்டு நன்றாக வாழ்பவரை பார்த்து பார்த்து வாடுவதால்,மனம் குமுருவதால் உண்டாவதே கண்ணெச்சில்.இதிலிருந்து தப்பிக்க ரசூலுல்லாஹ் சொன்ன படிசெய்வதே சிறப்பு!.

Ebrahim Ansari said...

" பார்வையிலே உன் பார்வையிலே ஒரு வேதியல் மாற்றத்தை நிகழ்த்திவிட்டாய். " என்று பாடல் வரிகள் ஏன்?

திருஷ்டி படும் என்று குழந்தைகளுக்கு கருப்பு மையால் ஒரு ரவுண்டு கட்டம் கட்டுவது

பூசணிக்காயைப் போட்டு உடைத்து சுற்றுச்சூழலை வீணாக்குவது

கட்டிடங்களுக்கு முன் சோளக்கொல்லை பொம்மையை வைப்பது அல்லது ஒரு பானையைக் கவிழ்த்துவைத்து அதில் கரும் புள்ளிகளைக் குத்தி வைப்பது

வீட்டின் முன் வாசலில் சீனாக்காரத்தை சணலால் சுற்றிக் கட்டுவது

( இவை எல்லாம் நமது மக்களாலும் செய்யப்படுவது-)

இச்செயல்களால் கண்ணூரு விழாமல் இருக்குமா?

sabeer.abushahruk said...

அருமை...அருமை!

மார்க்கம் சார்ந்து தொடரை நகர்த்திச்செல்வது பாராட்டத்தக்கது!

sabeer.abushahruk said...

http://www.satyamargam.com/articles/arts/lyrics/2360-travel-for-ever.html

adiraimansoor said...

///திருஷ்டி படும் என்று குழந்தைகளுக்கு கருப்பு மையால் ஒரு ரவுண்டு கட்டம் கட்டுவது

பூசணிக்காயைப் போட்டு உடைத்து சுற்றுச்சூழலை வீணாக்குவது

கட்டிடங்களுக்கு முன் சோளக்கொல்லை பொம்மையை வைப்பது அல்லது ஒரு பானையைக் கவிழ்த்துவைத்து அதில் கரும் புள்ளிகளைக் குத்தி வைப்பது

வீட்டின் முன் வாசலில் சீனாக்காரத்தை சணலால் சுற்றிக் கட்டுவது

( இவை எல்லாம் நமது மக்களாலும் செய்யப்படுவது-)

இச்செயல்களால் கண்ணூரு விழாமல் இருக்குமா?///

இதெல்லாம் மாற்று மதகலாச்சாரம் என்பது உங்களுக்கு தெரியும் இது மற்றவர்களுக்கும் புரிய வேண்டும் என்பதை மனதில் வைத்து நீங்கள் அதை ஒரு கேள்வியாக
கேட்டிருப்பதிலிருந்தே அறிகின்றேன்

Ebrahim Ansari said...

தம்பி மன்சூர் !

இது பற்றி ஒரு கருத்து சொல்ல விரும்புகிறேன்.

நீங்கள் குறிப்பிட்டு இருப்பது உண்மைதான்.

கண் திருஷ்டிக்காக இதெல்லாம் பரிகாரமாக செய்யபடுகிறது.

பரவலாக மற்றவர்களும் - சில இடங்களில் நம்மவர்களும் கூட இதெல்லாம் செய்கிறார்கள். நமது ஊரில் இல்லாமல் இருக்கலாம். மற்ற சில ஊர்களில் நான் பார்த்து கவனித்து வருகிறேன்.

இத்தகைய செயல்களின் பின்னணியில் தொடர்புடைய கொத்தனார், ஆசாரிகள் ஆகியோருடைய தவறான வழிகாட்டுதலும் காரணமாக இருக்கலாம்.

ஒரு பிற மத நம்பரிடம் இது பற்றிக் கேட்டபோது அவர் சொன்னதான் சாராம்சம்

ஒரு அழகான வீடு கட்டும்போது அதன் அருகில் ஒரு சோளக்கொல்லை பொம்மை அல்லது பானையை போட்டு வைத்து கவிழ்த்து வைப்பதற்கு காரணம் இருக்கிறதாம். அதாவது புதிய வீட்டை ஊடுருவிப் பார்க்காமல் இவை தடுக்கிறதாம். அதனால் கண் திருஷ்டி படாதாம். ( எல்லாத்துக்கும் காரணம் வைத்திருப்பார்கள் என்பது வேறு விஷயம். )

இது போன்ற ஒரு காரணத்தை கண்ணதாசனும் சொல்கிறார்.

நாம் நமக்குரிய வழிகாட்டுதலகலையே பின்பற்றுவோமாக!

அதிரை தேனருவி said...

''கண்ணின் கடைவிழியை காதலியர் காட்டி விட்டால் மண்ணில் குமரற்கு மாமலையும் ஓர் கடுகாம்''என்று பாரதிதாசன் பாடினார். மா மலையை உடைத்தெறியும் சக்திகூட கண் பார்வைக்கு உண்டு.

sheikdawoodmohamedfarook said...
This comment has been removed by the author.
adiraimansoor said...

அன்சாரி காக்கா

நீங்கள் எழுதிய அத்தனை கலாச்சாரங்களும் நமதூரிலும் நம்மின் முன்னோர்களிடையே கரைபுரண்ட விசயம்தான் இறைவன் உதவி கொண்டு சில மூட நம்பிக்கைகள் மறைந்துவிட்டன அதில் இன்னும் சில இருக்கத்தான் செய்கின்றது காலப்போக்கில் இன்ஷா அல்லாஹ் அதுவும் மறைந்துவிடும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு