அளவற்ற
அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின்
திருப்பெயரால். . .
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி
வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!
ரமளானில் தர்மம் செய்தல்
''நபி(ஸல்)
அவர்கள் மக்களிலேயே அதிகம் தர்மம்
செய்பவர்களாக இருந்தார்கள். அவர்களை ஜிப்ரீல் (அலை) சந்திக்கும் வேளையில்
ரமளானில் மிக அதிகமாக நன்கொடையளிப்பவர்களாக இருந்தார்கள். ரமளானின் ஒவ்வொரு
இரவிலும் அவர்களை ஜிப்ரீல்(அலை) அவர்கள் சந்தித்து, குர்ஆனை அவருக்கு கற்றுக்
கொடுப்பார்கள். நபி(ஸல்) அவர்கள் தன்னை ஜிப்ரீல்(அலை) சந்திக்கும் வேளையில் வேகமாக
வீசும் காற்றை விட அதிக தர்மம் செய்பவர்களாக இருந்தார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்
(புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1222 )
''(ரமளானின்
கடைசி) பத்து நாட்கள் வந்து விட்டால், நபி(ஸல்) அவர்கள் இரவில்
விழித்திருப்பார்கள். தன் குடும்பத்தாரை விழிக்கச் செய்வார்கள். தன் கீழாடையை
(இறுகக்) கட்டிக் கொள்வார்கள். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா
(ரலி) அவர்கள் (புகாரி,
முஸ்லிம்) (
ரியாளுஸ்ஸாலிஹீன்: 1223 )
ஷஃ பான்
பதினைந்துக்குப்பின்,
ரமளானுக்கு முன் நோன்பு வைப்பது
கூடாது.
''ஒருவர்
ரமளானுக்கு முன் ஒரு நாள், அல்லது இரண்டு நாள் முன்பு நோன்பு வைக்க வேண்டாம்.
ஆனால் வழமையாக நோன்பு வைப்பவரைத் தவிர, அவர் அந்நாளில் நோன்பு வைக்கட்டும்'' என்று
நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள்
(புகாரி, முஸ்லிம்) (
ரியாளுஸ்ஸாலிஹீன்: 1224 )
''ஷஃ பானின் பாதி நாட்களுக்குப் பின்னர் நோன்பு வைக்காதீர்கள்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (திர்மிதீ)
( ரியாளுஸ்ஸாலிஹீன்:1226 )
பிறை பார்க்கும் சமயம் கூற வேண்டியவை
''நபி
(ஸல்) அவர்கள் பிறையைப் பார்த்து விட்டால்,
''அல்லாஹும்ம அஹில்லாஹு அலய்னா பில் அம்னி வல் ஈமானி
வஸ்ஸலாமதி வல் இஸ்லாமி, ரப்பீ வரப்புக்கல்லாஹு ஹிலாலு ருஷ்தின் வகய்ரின்'' என்று கூறுவார்கள்.
துஆவின்
பொருள்: இறைவனே! பாதுகாப்பு, இறை நம்பிக்கை, அமைதி, இஸ்லாம் ஆகியவை
மூலம் இதை எங்கள் மீது தோன்றச் செய்வாயாக! பிறையே! என் இறைவனும், உன் இறைவனும்
அல்லாஹ்தான். நீ நேர்வழி மற்றும் நல்லவற்றின் பிறையாக உள்ளாய்). (அறிவிப்பவர்: தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரலி) அவர்கள் (திர்மிதீ)
(ரியாளுஸ்ஸாலிஹீன்: 1228 )
ஸஹரின் சிறப்பு, அதை சுப்ஹ் நேரம்
ஏற்படாத வரை பிற்படுத்துவது.
''நீங்கள்
ஸஹர் - செய்யுங்கள். ஏன் எனில், ஸஹரில் பரக்கத் (அபிவிருத்தி) உள்ளது'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள் (புகாரி,
முஸ்லிம்) ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 1229 )
நோன்பு துறக்க அவசரப்படுதலின் சிறப்பு
''நோன்பை
துறக்க அவசரப்படுவது மூலம் மக்கள் நல்லதிலேயே தொடர்ந்து இருப்பார்கள். என நபி(ஸல்)
கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஹ்தா (ரலி) அவர்கள் (புகாரி,
முஸ்லிம்) (
ரியாளுஸ்ஸாலிஹீன்: 1233 )
''என்னிடம்
என் அடியார்களில் மிக விருப்பமானவர், அவர்களின் நோன்பு துறப்பதை விரைந்து
செய்பவரே! என்று அல்லாஹ் கூறியதாக நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள்
(திர்மிதீ) ( ரியாளுஸ்ஸாலிஹீன்:1235 )
''ஒருவர்
நோன்பு துறந்தால், பேரீத்தம் பழத்தால் நோன்பு துறக்கட்டும்! அது
கிடைக்கவில்லையானால் தண்ணீரால் நோன்பு துறக்கட்டும்! அதுவே சுத்தமானதாகும்'' என்று
நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸல்மான் இப்னு ஆமிர் ழப்பிய்யி (ரலி)அவர்கள் (அபூதாவூது,
திர்மிதீ) ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 1238 )
நோன்பாளி தன் நாவு,
மற்றும் உறுப்புகளை தீயதை விட்டும்
பாதுகாத்தல்
''உங்களில்
ஒருவர் நோன்பு வைக்கும் நாளில் இருந்தால், அவர் தீயப் பேச்சு பேச வேண்டாம்.
கூச்சல் போட வேண்டாம். ஒருவர் அவரைத் திட்டினால் அல்லது அவரிடம் சண்டை போட்டால்
''நான் நோன்பாளி என அவர் கூறட்டும்'' என்று
நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி,
முஸ்லிம்) (
ரியாளுஸ்ஸாலிஹீன்: 1240 )
''பொய்
பேசுவதை, பொய் கூறி செயல்படுவதை விடாத ஒருவர், தன் உணவையோ, பானத்தையோ
விட்டுவிடுவதால் அல்லாஹ்விற்கு எந்த தேவையும் இல்லை'' என்று நபி(ஸல்) கூறினார்கள்.(அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள்
(புகாரி) ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 1241 )
''உங்களில் ஒருவர் மறந்து சாப்பிட்டுவிட்டால்,
அல்லது குடித்துவிட்டால் அவர் தன் நோன்பை முழுமைப்படுத்தட்டும்! அவருக்கு அல்லாஹ்
தான் உணவளித்தான், குடிக்கச் செய்தான்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி,
முஸ்லிம்) (
ரியாளுஸ்ஸாலிஹீன்: 1242 )
''ரமளானுக்குப்பின்
பின் நோன்புகளில் மிகச் சிறந்ததது, அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதம் (நோன்பு)
தான், கடமையான தொழுகைக்குப்பின் தொழுகையில் மிகச்சிறந்தது, இரவுத்
தொழுகைதான்'' என்று அல்லாஹ் கூறியதாக
நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) ( ரியாளுஸ்ஸாலிஹீன்:1246 )
''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் – நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)
'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''
இன்ஷாஅல்லாஹ்
வளரும்
அலாவுதீன் S.
9 Responses So Far:
வாழ்வதற்கேற்ற இனிய மார்க்கம்
""அல்லாஹும்ம பாரிக்லனா ரஜப, வஸஹ்பான, வபல்லிக்ஹ்னா ரமலான்"" என்று நபி (சல்) அவர்கள் ரஜபு மாதத்திலேயே துவா ஓதி வருவார்கள்...... அது போன்று நமக்கு இம்மாதத்திலேயே நோன்பு பற்றிய தகவல்களை சொல்லிய சகோதரர் அலாவுதீன் அவர்களுக்கு ஜஸாகல்லாஹு க்ஹைரன்...... தங்கள் தலைப்பைப் படிக்க ஆரம்பிக்கும் பொழுதே உள்ளம் அமைதி அடைந்து விடுகிறது....!!!!! மாஷா அல்லாஹ்!!!
நோம்புக்கு அட்வாண்ஸ் உபதேசம் தந்தமைக்கு ஜஸாக்கல்லாஹ் ஹைர்.
நோம்புக்கு இன்னும் 50 நாட்கள்.....
அஸ்ஸலாமுஅலைக்கும்.வாழ்வதற்கேற்ற இனிய மார்க்கம்
இடர் நீக்கும் தொடர் மருந்து வழங்கும் அலாவுதீனுக்கு நன்றி.
""அல்லாஹும்ம பாரிக்லனா ஃபீ ரஜப வ ஷஹ்பான வ பல்லிக்ஹ்னா ரமலான்"" என்று திருத்தி வாசிக்கவும்......ஜசாகல்லாஹ்....
//பொய்பேசுவதைபொய்கூறிசெயல்படுவதை விடாத ஒருவர்.....// இந்த நபிமொழியே அச்சுஅடித்து எல்லாசுவர்களிலும் பசைபோட்டு ஓட்டவேண்டும்.
//பொய் பொய்பேசுவதைபொய்கூறிசெயால்படுவதை .....பசைதடவிநோட்டீஸ்கள் வேண்டும்//shaikdawood mohamed farookசொன்னது //பசைஇல்லையென்றால்நோன்பு கஞ்சியை பசையாக தடவி நோட்டீஸ்கள் ஓட்டலாம்.
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
கருத்திட்ட சகோதரர்கள் அனைவருக்கும் நன்றி!
Post a Comment