Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

என் இதயத்தில் இறைத்தூதர் ! - 10 - மாசு ! 8

அதிரைநிருபர் பதிப்பகம் | May 11, 2014 | ,


எனக்கு முன்னால் இருந்த ஒரு பாதிரியார்,அவரிடம் சில கேள்விகள் கேட்டு - உண்மை நிலைகளை அவர் அறிய வேண்டும் என்ற ஆவல் பிறக்க அவரிடம் எனது உரையாடல்'


"சார் எனக்கு சில சந்தேகங்கள் ! கேட்கலாமா ?"



ஓ! தாராளமாக கேளுங்கள் !"



"என் பெயர் இதோ இந்த ரேஷன் கார்டில் இருக்கிறது, உங்களுடைய பெயர் "இன்னதுதான்" என்று ஏதேனும் ஒரு ஆதாரம் இருக்கிறதா ? ரேஷன் கார்டுதான் என்றில்லை,எந்த id களாக இருந்தாலும் பரவாயில்லை.



"ம்... இல்லை! ஆனால், என்னை பலர் "இவ்வாறுதான்" கூப்பிடுவார்கள்.



சரி, என் பெயரை என் தந்தை வைத்தார், உங்கள் பெயருக்கு ஆதாரம் தர உங்கள் ஐடி, ரேஷன் கார்டில் ஒன்றுமில்லை. அது போகட்டும், உங்கள் பெயரை 'இவ்வாறு; கூப்பிடுவார்கள், என்று சொல்கிறீர்கள். அவர்கள் யாவர் ? என சொல்ல முடியுமா "



"பொதுவாகப் பலர்....!"



ஒகே... விட்டுத் தள்ளுங்கள்.



நான் ஒரு முஸ்லிம், என் பெயர் அரபியில் இருக்கிறது. நீங்கள் ஒரு கிறிஸ்தவர். உங்கள் பெயரை "பலர்" சொல்லும் படி அழைக்கப்படும் உங்களுக்கு அது சொந்த மொழியா ? இல்லை வேத மொழியா ?



"இல்லை, எதுவும் இல்லை,நாங்களாக  பலவாறு வைத்துக் கொள்வோம்"



அது இருக்கட்டும் திருக்குர்ஆனை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) இறைவன் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்' (அல்குர்ஆன் 4 : 82)இன்றளவும் எதுவும் மாறவில்லை, யாராலும் மாற்றிடவும் முடியாது. 



ஆக, உங்கள் பெயரையும் பலர் பல மொழிகளில் குறிப்பிடுகின்றனர். மூல மொழியில் இல்லாத, வெரும் மொழி பெயர்ப்பில் மட்டுமே, அதுவும் பலமுறை மாற்றப்பட்டு வரும் பைபிள் மாதிரி எனில் ஏற்றுக் கொள்வீர்களா ?நீங்கள் வெறும் மொழி பெயர்ப்பை மட்டும் வைத்துக் கொண்டு,ஒவ்வொரு முறை பிரிண்ட் செய்யும் போது மாற்றியும் விடுகிறீர்கள்.சில பல வசனங்களை தூக்கியும் விடுகிறீர்கள்.அதனாலும் பல முரண்பாடுகள் உள்ளன என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா?



ஆமாம் உண்மைதான்.



உதாரணமாக இஸ்ரவேல் மக்கள் மீது கடவுள் கோபம் அடைந்தாராம். இஸ்ரவேலருக்கு எதிராகத் திரும்பும் படி தாவீது ராஜா கடவுளால் ஏவப்பட்டாராம். இதனால் தாவீது ராஜா தனது சேனாதிபதியாகிய யோவாபிடம் இஸ்ரவேல் மற்றும் யூதா ஜனங்களின் தொகையை கணக்கெடுக்கும் படி ஆனையிட்டாராம். இதை பழைய ஏற்பாட்டின் 2 சாமுவேல் 24:1 பின்வருமாறு கூறுகின்றது:



'கர்த்தருடைய கோபம் திரும்ப இஸ்ரவேலின்மேல் மூண்டது. இஸ்ரவேல் யூதா என்பவர்களை இலக்கம் பார் என்று அவர்களுக்கு விரோதமாய்ச் சொல்லுகிறதற்கு தாவீது ஏவப்பட்டான்.' - 2 சாமுவேல் 24:1



இந்த வசனத்தில் கர்த்தருடைய கோபம் இஸ்ரவேலரின் மீது மூண்டதாகவும், அதன் தொடர்ச்சியாக இஸ்ரவேல் மற்றும் யூதா ஜனங்களின் தொகையை கணக்கிடும் படி தாவீது ராஜா கர்த்தரால் ஏவப்பட்டதாகவும் இந்த வசனம் கூறுகின்றது. ஆனால் இதற்கு மாற்றமாக 1 நாளாகமம் 21:1ம் வசனம் தாவீதை கணக்கெடுக்கும் படி தூண்டியது கர்த்தரல்ல, சாத்தானே தூண்டினான் என்று கூறுகின்றது:



'சாத்தான் இஸ்ரவேலுக்கு விரோதமாய் எழும்பி, இஸ்ரவேலைத் தொகையிடுகிறதற்குத் தாவீதை ஏவிவிட்டது' - 1 நாளாகமம் 21:1



இந்த வசனத்தில் தாவீதை இஸ்ரவேலருக்கு எதிராக திருப்பியது கர்த்தரல்ல சாத்தானே என்கிறது. ஆனால் 2 சாமுவேல் 24:1ம் வசனமோ கர்த்தர்தான் தாவீதை ஏவினார் என்கிறது. உன்மையில் தாவீதை இஸ்ரவேலர்களுக்கு எதிராக திருப்பியது சாத்தானா? அல்லது கர்த்தரா? சாத்தான் தான் தூண்டினான் என்றால் 2 சாமுவேல் 24:1ல் கர்த்தர் என்று சொல்லப்படுவது எப்படி? சாத்தானுடைய இடத்தில் எப்படி கர்த்தர் வந்தார்? அல்லது கர்த்தருடைய இடத்தில் சாத்தான் வந்தானா? இந்த இரண்டு வசனங்களில் எது சரி?
தாவீது ராஜா தனது சேனாதிபதியாகிய யோவாபிடம் போர்வீரர்களின் கணக்கெடுக்க சொல்கின்றார். ஆந்த கணக்கெடுத்த சம்பவத்தை பழையஏற்பாட்டின் இரண்டு இடங்களில் சொல்லப்பட்டுள்ளது. அதன் படி அவர் கணக்கெடுத்து தாவீதிடம் கணக்கை ஒப்படைத்தாராம்.



இஸ்ரவேலர்களில் உள்ள மொத்த போர்வீரர்கள் எத்தனைப் பேர்?



மொத்தம் '11 லட்சம் பேர்' என்று கணக்கு கொடுத்ததாக 1 நாளாகமம் 21:5 லும் அதற்கு மாற்றமாக மொத்தம் '8 லட்சம் பேர்' என்று கணக்கு கொடுத்ததாக 2 சாமுவேல் 24:9 லும் நேர் முரணாக சொல்லப்பட்டுள்ளது. உன்மையில் யோவாப் இஸ்ரவேலர்கள் பற்றி கணக்கெடுத்தது எவ்வளவு?



அதே யோவாப் யூதாவில் உள்ள மொத்த போர்வீரர்கள் எத்தனைப் பேர் என்றும் கணக்கெடுத்து தாவீது ராஜாவிடம் கொடுத்தாராம்.



யூதா கோத்திரத்தில் உள்ள மொத்த போர்வீரர்கள் எத்தனைப் பேர்?



மோத்தம் '4 லட்சத்து எழுபதினாயிரம் பேர் இருந்தார்கள்' என்று கணக்கு கொடுத்ததாக 1 நாளாகமம் 21:5 லும் அதற்கு மாற்றமாக மொத்தம் '5 லட்சம் பேர் இருந்ததார்கள்' என்று கணக்கு கொடுத்ததாக 2 சாமுவேல் 24:9 லும் நேர் முரணாக சொல்லப்பட்டுள்ளது. உன்மையில் யோவாப், யூதாக் கோத்திரத்தில் உள்ள போர்வீரர்களைப் பற்றி கணக்கெடுத்தது எவ்வளவு?



இந்த சம்பவங்களின் தொடர்ச்சியாக காத் என்பவன் தாவீதிடத்தில் கார்த்தர் சொன்ன செய்தியை சொன்னதாக சொல்லப்படுகின்றது. அந்தச் செய்தியில் சில வருடங்களுக்கு பஞ்சம் வராலாம் என்று சொன்னதாக சொல்லப்படுகின்றது. அது எத்தனை வருடம் என்று காத் தாவீதிடத்தில் சொன்னான்?



ஏழு வருடங்களுக்கு பஞ்சம் வரும் என்று சொன்னான் - 2 சாமுவேல் 24:13



இல்லை இல்லை மூன்று வருடங்களுக்கு பஞ்சம் வரும் என்று சொன்னான் என்று 1 நாளாகமம் 21:12 ல் சொல்லப்படுகின்றது. இதில் எது சரி?



சிலவற்றை மட்டுமே உதாரணமாக சொன்னேன்.பைபிளின் முதல் பக்கத்தில் இருந்து அதன் கடைசி பக்கம் வரை என்னால்,சொல்லிக் கொண்டே இருக்க முடியும்.



நீண்ட மௌனம்.அவரால் வாய் திறக்க இயலவில்லை.



எந்த மொழியாக இருந்தாலும்  அந்தந்த மொழிக் கென்று சில தனித் தனமைகள் இருக்கும், ஆங்கிலமோ, தமிழோ, அரபியோ எதுவாக இருந்தாலும்  சரிதான்.



ஒரு மொழியிலுள்ள வேதத்தையோ, இலக்கியங்களையோ  எவ்வளவுதான் திறமையுடன், பிற மொழிகளில் பெயர்த்தாலும் மூல நூலின் சாறை, எதார்த்தத்தை பிற மொழிகளில் அப்படி கொண்டு வந்திட முடியாது. எப்படியும் சிறிதேனும் கூடுதலோ குறைவோடுதான் மொழி பெயர்க்க முடியும். இல்லையா ?



ஆம் உண்மைதான்.



அப்படியானால் உங்கள் பையிள் மூல மொழியில் இல்லை என்பதனாலும் தன் ஒரிஜினலாட்டியை இழந்து விட்டது. உங்கள் பெயரைப் போலவே, சரிதானே!?



ஆமாம் ! ஏற்றுக் கொள்கிறேன், ஒவ்வொன்றுக்கும் ஒரு ஒரினினல் தன்மை இருக்கிறது என்பதை ஒத்துக் கொள்கிறேன். பைபிள் அந்த ஒரிஜினாலிட்டியை இழந்து விட்டதன் உண்மையை என் பெயர் மாற்றம் குறித்தும் சம்பந்தப் படுத்தி விளக்கியதற்கு நன்றி !



பரவாயில்லை சகோதரரே ! நமக்கென்று சில அடையாளங்கள் இருக்கின்றன,. அந்த அடையாளத்தை நாம் மாற்றி விடும்போது, அதன் மூலத் தன்மை போய்விடுகிறது. உதாரணமாக திருக் குர்ஆன் எந்த மொழியில் இறங்கியதோ அது இன்றும் பேசப்படுகிறது, போற்றப்படுகிறது. ஆனால், பைபிளோ இறக்கப்பட்டதோ ஒரு மொழி - அது இன்று இல்லை. பல்வேறு மாற்றங்களுடன் பல மொழிகளில் அதன் சுய  அடையாளத்தை  இழந்து  மாசுபட்டு கிடக்கிறது.மூலம் இல்லை என்பதால் அவரவர் மொழி வசதிக் கேற்ப,சுய பொருள் கொடுக்கப்பட்டு - சின்னா பின்னமாகி விட்டது. 



ஆனால், குர்ஆனைப் பொருத்த வரை மொழி பெயர்க்கப்படும்போது கூட, மூலம் என்ன சொல்கிறது என்பதைக் கண்டு, நாங்கள் மொழி பெயர்க்கிறோம். ஏனெனில், குரான் இறங்கிய அரபு மொழி இன்றும் உயிருடன் உள்ளது.

சரி,போதும் என எண்ணுகிறேன்,



உங்களுடன் உரையாடிது மிக்க மகிழ்ச்சி ! நன்றி !



இன்ஷா அல்லாஹ் தொடரும்



இப்னு அப்துல் ரஜாக்



(குறிப்பு : இந்த பதிவுக்கான சாரம் - சிராஜ் அப்துல் ஹை அவர்களின் நூலில் இருந்தும்,http://egathuvam.blogspot.com/ இருந்தும்  தழுவி எழுதப்பட்டது.)

8 Responses So Far:

Adirai anbudhasan said...

இது போன்ற விஷயங்கள், பல காலங்களாக, பலராலும் பேசப்பட்டு, பலரும் அறிந்த விஷயங்கள் தான்.
பல காலங்களுக்கு முன்பே, தென் ஆப்பிரிக்க இந்தியரான மர்ஹூம் அகமது தீதாத் என்பவர், ஐரோப்பிய,அமெரிக்க நாடுகளுக்கெல்லாம் பயணம் செய்து, பெரிய பெரிய கிருத்தவ பாதிரியார்கலுடனெல்லாம் வாதம் செய்து வாயடக்கசெய்திருக்கிறார். இன்றும் அவரது வீடியோக்கள் you tube இல் காணக்கிடக்கிறது. நம்மூர் DR சாகிர் நாயக் கூட, அவரை ரோல் மாடலாக கொண்டு தான் செயல் படுகிறார்.
தீதாத் அவர்களின், ஆதார பூர்வமான வாதங்கள், சிறிய சிறிய வெளியீடுகளாக கிடைக்கின்றன. அல்லாஹ் சுபஹான ஹுவத்தாலா தன கருணையை அன்னாரது வாதங்களின் மூலமாக பலருக்கு ஹிதாயத்தாக வ்ழங்கியிருக்கிரான்.
இன்றும் பல யூத, கிருத்துவ போதகர்கள் இஸ்லாத்தில் இணைவதற்கு, காரணமாகும், இன்று நாடு இருக்கும் கால கட்டத்தில், எத்தனையோ விஷயங்கள் இருக்க, இவைகளை பேசுவது உசிதமா என்று மனதில் எண்ணம் வருகிறது!!!!!......

அதிரை தேனருவி said...
This comment has been removed by the author.
sabeer.abushahruk said...

சுவாரஸ்யமான, பொருள் பொதிந்த உரையாடல்.

இப்னு அப்துல் ரஜாக் said...

//இது போன்ற விஷயங்கள், பல காலங்களாக, பலராலும் பேசப்பட்டு, பலரும் அறிந்த விஷயங்கள் தான்.
பல காலங்களுக்கு முன்பே, தென் ஆப்பிரிக்க இந்தியரான மர்ஹூம் அகமது தீதாத் என்பவர், ஐரோப்பிய,அமெரிக்க நாடுகளுக்கெல்லாம் பயணம் செய்து, பெரிய பெரிய கிருத்தவ பாதிரியார்கலுடனெல்லாம் வாதம் செய்து வாயடக்கசெய்திருக்கிறார். இன்றும் அவரது வீடியோக்கள் யூ ட்யூப் இல் காணக்கிடக்கிறது. நம்மூர் ட்ரைவ் சாகிர் நாயக் கூட, அவரை ரோல் மாடலாக கொண்டு தான் செயல் படுகிறார்.
தீதாத் அவர்களின், ஆதார பூர்வமான வாதங்கள், சிறிய சிறிய வெளியீடுகளாக கிடைக்கின்றன. அல்லாஹ் சுபஹான ஹுவத்தாலா தன கருணையை அன்னாரது வாதங்களின் மூலமாக பலருக்கு ஹிதாயத்தாக வ்ழங்கியிருக்கிரான்.
இன்றும் பல யூத, கிருத்துவ போதகர்கள் இஸ்லாத்தில் இணைவதற்கு, காரணமாகும், //
எல்லாம் வல்ல அல்லாஹ் சகோ அஹமத் தீதாத் அவர்களின் பாவங்கள் பொறுத்து - ஜன்னத்துள் பிர்த்தௌஸ் கொடுப்பானாக,சகோ ஜாகிர் நாயக் அவர்களுக்கு நீண்ட ஆயுள் கொடுப்பானாக,ஆமீன்.

//இன்று நாடு இருக்கும் கால கட்டத்தில், எத்தனையோ விஷயங்கள் இருக்க, இவைகளை பேசுவது உசிதமா என்று மனதில் எண்ணம் வருகிறது!!!!!......//

சகோ அவர்களே,அறிவு எங்கெல்லாம் கிடைக்கிறதோ அங்கு சென்று தேட வேண்டும்.இன்றைய நாட்டு சூழலில் என்ன விஷயங்கள் வேண்டுமோ அதைப் படிப்பதும்,படித்ததை - நல்ல விஷயத்தை சொல்வதும் - அதன் சாதக,பாதகத்தை விளக்குவதும் ஒரு வகை போதனையே.
அதே போன்று,கியாம நாள் வரும் வரை இஸ்லாத்தை நம் பேச்சில்,எழுத்தில் நம் மக்களுக்கிடையிலும்,மற்ற மக்களுக்கிடையிலும் எப்படி கொண்டு போக வேண்டுமோ,அதே போன்று இதுதான் கிறிஸ்தவம்,இதுதான் பைபிள்,இந்து மதம் இதுதான் என்று நாம் படித்ததை - பிற மாற்று மத மக்களிடமும்,நம் மக்களிடமும் கொண்டு சென்று கொண்டே இருக்க வேண்டும்.இதுவும் ஒரு வகையான போதனையே.எந்த சூழ்நிலையில் இது எனக்கு தெரியும் என் ஒருவன் விலகி விடுவானோ,அந்தக் கணமே அவனுடைய மூளைக்கு சீல் வைத்தாகிவிட்டது என்றே பொருள்.தேடிக் கொண்டே இருக்க வேண்டும்,சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.
மேலும்,உரையாடல் வடிவில் இக்கட்டுரை தொகுக்கப் பட்டாலும் கீழே மேற்கோள் காட்டியபடி ஒரு சிறந்த அறிங்கர் எழுதிய நூலும்,பைபிள் விஷயத்தை நம் மக்கள் தெரிந்து,அவர்களின் சூழ்ச்சி வலையில் வீழாது இருக்க வேண்டும் என்ற அவாவினாலும் தொடங்கப்பட்ட பிளாக்கும் விளக்கிய விடயங்களே அவைகள்.நீங்களும் இந்தக் குறிப்புக்களை மக்களிடம் கொண்டு போக கடமை பட்டுள்ளீர்கள்.
மீண்டும் ஒன்று,அறிவை பிரித்து விடாதீர்கள்.தேடுங்கள்,படியுங்கள்,சொல்லுங்கள்.

இப்னு அப்துல் ரஜாக் said...

என் சிறு வேண்டுகோள்

நீங்கள் அன்பு தாசன் (அன்புக்கு அடிமை) என்பதை விட,

அல்லாஹ்வுக்கு அடிமையாக - அல்லாஹ் தாசன்,அப்துல்லாஹ் என இருக்கலாமே?

மாற்று மத சகோதரர்கள்தான் அன்பே சிவம்,அன்பே கடவுள்,அன்பு தாசன் என்றெல்லாம் அழைத்துக் கொள்வார்கள்.சிந்திக்க வேண்டுகிறேன்.

அதே போல நெற்றிக் கண் என்ற சகோதரருக்கும் ஒன்று.

அல்லாஹ் நமக்கு சரியான விதத்தில்,இடத்தில் கண்களை பொருத்தியுள்ளான்.நெற்றியில் பொருத்த வில்லை.நெற்றிக் கண் பற்றிய கொள்கை இந்து மத புராண - இதிகாசத்திலிருந்து வந்தவையாகும்,திருத்திக் கொள்வீர்கள் என நம்புகிறேன்.

இப்னு அப்துல் ரஜாக் said...

ஜஸாக்கல்லாஹு கைரன் ஷபீர் காக்கா

sheikdawoodmohamedfarook said...

பைபிலில் சிலவரிகளை சொல்லிபாதிரியாரை உசுப்பி இருக்கிறீர்கள்.இனி அவர் தனியே சிந்தித்து தெளிவு பெற அல்லாஹ் நாடுவான்.ஆமீன்!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு