Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

என் இதயத்தில் இறைத்தூதர்! -11- "அல்ஹம்துலில்லாஹ்" 8

அதிரைநிருபர் பதிப்பகம் | May 18, 2014 | ,


அதிரைநிருபரில் சகோதரர் தாஜுதீன் அவர்கள் எழுதி வரும் "அவர்கள் வாழ்வும், நம் வாழ்வும்" தொடர் 31 ல் "அல்ஹம்துலில்லாஹ்" என அல்லாஹ்வைப் புகழ்ந்து போற்றும் சிறப்பையும் ஆனால் அதற்கு நேர் மாறாக - அல்லாஹ்வை புகழாமல் நாம் நடந்து கொண்டிருக்கும் நிலைமையினைப் பற்றியும் எழுதியிருந்ததை சகோதரர்கள் அறிவர்.  அருமையான அந்த தொடரில் அவர் "அல்ஹம்துலில்லாஹ்" என்று புகழ்வதன் மேன்மையை விளக்கியதைப் படிக்க நேர்ந்தவுடன், எனக்கு ஏற்பட்ட அந்த தொடர்பை எழுத வேண்டும் என ஆவல் கூடியது.

பல வருடங்களுக்கு முன், ஒருவர் குவைத்தில், அவர் மிஸ்ரி (எகிப்த்தியர்) என எண்ணுகிறேன், எவ்வாறு இருக்கிறாய் என்று கேட்டார். 'அல்ஹம்துலில்லாஹ்' என்று சொன்னேன். பிறகு அவர் கேட்டார், 'நன்றாக இருந்தால், நன்றாக வேலை போகிறது என்றால் மட்டும்தான் அல்ஹம்துலில்லாஹ்வா ? எல்லாவற்றுக்கும் "அல்ஹம்துலில்லாஹ்" என சொல்ல வேண்டும் என்றார். அதை அவர் சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டு போய்விட்டார். ஆனால், அதில் ஆயிரம் உண்மைகள் பொதிந்திருப்பதை, பல சந்தர்ப்பங்களில் உணர ஆரம்பித்தேன்.

சில தப்லீக் ஜமாத் பயான்களில் கேட்டது நினைவுக்கு வருகிறது, அதன் சாராம்சம், "அல்லாஹ்விடம் நாம் கேட்டு அதை தந்துவிட்டால் ஒரு அல்ஹம்துலில்லாஹ், ஒருக்கால் அது அப்போது நமக்கு கிடைக்கவிலை என்றால் இரண்டு அல்ஹம்துலில்லாஹ், ஏனெனில், அதன் மூலம் அல்லாஹ் நமக்கு ஏதாவது நாடியிருப்பான்,என்று  அடிக்கடி சொல்வார்கள்.பல நல்ல விஷயங்களை முன்னுதாரணமாக போதிக்கும் தப்லீக் ஜமாத் (நான் முதன்மையாகக் கருதுவது நமக்கிடையே பள்ளிவாசலின் தொடர்பை ஏற்படுத்த உதவுவது) சில பித்அத்களை செய்வதும், ஊக்குவிப்பதும், மேலும் தஃலீம் என்ற பெயரில் மார்க்க முரணான இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை அங்கே அங்கீகரிப்பது போன்ற தோற்றத்தை உருவாக்குவது போன்றவைகளை கலைந்தால் - மிக மிக நன்மை தரும் செயலாகும். ஆனால், ரியாதுஸ் ஸாலிஹீன் போன்ற ஹதீஸ் தொகுப்புக்களை தஃலீம் வகுப்பில் படிக்கிறார்கள் என்பது மிக ஆரோக்கியமான செயலாகும். அல்ஹம்துலில்லாஹ்.

 என் மாமா நெய்னா முஹம்மது அவர்கள் எமெர்ஜென்ஸியில் அனுமதிக்கப்பட்டு, 8 நாட்கள் ஐ.சி.யூ.வில் வைத்து கோமா நிலைக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்தது. அந்த ஐ.சி.யூ வார்டின் இரு அறைக்கு அடுத்து, சகோதரி நூரா என்ற எகிப்திய நாட்டைச் சேர்ந்தவரின் தாய்க்கும் இதே நிலையில் (coma) சிகிச்சை நடைபெற்றுக் கொண்டு இருந்தது. அருகில் இருக்கும் மஸ்ஜித் அஸ் ஸலாம் என்ற பள்ளிவாசலில் இருந்து அந்த இருவருக்கும் பலர் துஆச் செய்ய வந்தனர். அதிரையைச் சேர்ந்த ஆண்கள் பெண்கள் அதிகளவில் வந்து துஆச் செய்த வண்ணமிருந்தனர்.

எனது குடும்ப உறுப்பினர்கள்  அனைவரும் என் மாமாவின் அருகில் இருந்து கவனித்துக் கொண்டிருந்தனர், அவர்கள் அனைவரும் கவலை தேய்ந்த வாடிய முகத்துடன் இருப்பதை கவனித்த அந்த சகோதரி 'நூரா' அவர்கள் குர்ஆன் - ஹதீஸ் சொல்லி, பொருமையை  கைக்கொள்ளும்படி சொல்லி மிக ஆருதலாக இருந்தார்கள். அவர்களின் தாய்க்கும் இதே கன்டிஷனில்தான் இருக்கிறது என்று சொன்னார்கள்.

2014 ஜனவரி 26ம் தேதி பகல் சரியாக 12 மணியளவில் அல்லாஹ்வின் நாட்டப்படி - என் மாமாவின் உயிர் பிரிந்தது. 'இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அல்லாஹ்வின் நாட்டம் இதுதான் என சபுர் செய்து கொண்டோம்.

அப்போது சகோதரி நூரா அவர்கள் ஹாஸ்பிடல் உள்ளே நுழைந்தவுடன், என் மாமாவின் மரணச் செய்தியை சொன்னேன். கனப் பொழுது தாமதிக்கவில்லை, அந்த சகோதரியின் வாயிலிருந்து வந்த வார்த்தை, "அல்ஹம்துலில்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்ஹம்துலில்லாஹ்" என்பதுதான். ஒரு கனம் திகைத்துப் போனேன், இன்னாலில்லாஹி என்றுதான் முதலில் சொல்வார்கள் என்று எண்ணினேன். அந்த சகோதரி சொன்னார்கள் "கவலைப் படாதே சகோதரனே ! இந்த மௌத் உன் மாமாவிற்கு நல்லதாக அமையும். அல்லாஹ் நமக்கு எது செய்தாலும் அது நன்மைதான்" என்று சொல்லிவிட்டு, "இன்னாலில்லாஹி"சொல்லி பிறகு துஆச் செய்தார்கள். நானும் அல்ஹம்துலில்லாஹ் என்று சொல்லிவிட்டு என் குடும்பத்தார்களிடம் நடந்ததைக் கூறினேன். அவர்களும் உடனே, அல்ஹம்துலில்லாஹ் என்று சொன்னார்கள்.

சில வாரங்களுக்கு முன்னர் நான் வேலை செய்யும் அந்த Mallக்கு அந்த சகோதரி நூரா வந்தார்கள். அருகில் அவர் கணவர், என் அருகில் வந்த சகோதரி நூரா, "அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரரே,அல்ஹம்துலில்லாஹி ரப்பில்  ஆலமீன்,என் தாயும் மரணமடைந்து விட்டார்கள்." என்று சொல்லிவிட்டு, "உங்கள் மாமா அடக்கம் செய்யப்பட்ட Greater Sacramento Muslim Cemetery -ல் தான் அடக்கம் செய்தோம்" என்று சொல்ல நான் இன்னாலில்லாஹி சொல்லிவிட்டு "அல்ஹம்துலில்லாஹ் என்றேன்.

அவர்களின் பக்குவம் என்னைக் கவர்ந்தது, என் மனைவி மக்களிடம் இதையும் பகிர்ந்து கொண்டேன், அல்ஹம்துலில்லாஹ்வின் பெரிய மகத்துவத்தையும், அப்படி சொல்லும்போது, "நான் அல்லாஹ்வின் கீழான அடிமை, அடிமை, அவன்தான் நம் எஜமான்,ரப்பு  என்று தலை முதல் கால் வரை உளப்பூர்வமாக உணரமுடிகிறது அல்லவா?.அல்ஹம்துலில்லாஹ் !

என் மாமாவின் மறைவுக்குப் பின்னர் அடுத்த வெள்ளிக்கிழமை - ஜும்ஆ  தொழுகைக்கு AAF (American Adirai Forum)அமைப்பின் செக்ரட்டரி ஷிப்லி காக்கா, நாகூர் சகோதரர் அப்துல் ரஹ்மான் ஆகியோருடன் மஸ்ஜித் அல் சலாம் சென்றேன். அங்கு நடந்த பயான் என்ன தெரியுமா ?

"அல்ஹம்துலில்லாஹ்" என்பதன் மகத்துவம் பற்றி மாத்திரமே ! எல்லாவற்றுக்கும் அல்லாஹ்வைப் புகழ வேண்டும்! நல்லது அல்லது கெட்டது என்று எல்லாவற்றுக்கும் அல்லாஹ்வைப் புகழ்ந்து விட்டு பிறகு மற்ற தீயவை நடக்காமல் இருக்க - துஆ செய்ய வேண்டும், என்பதுதான் அந்த வெள்ளிக் கிழமை பயானின் சாரம்.அல்ஹம்துலில்லாஹ்.

இன்ஷா அல்லாஹ்,நம் ஒவ்வொருவரின் மூச்சும்,பேச்சும் அல்லாஹ்வைப் புகழ்ந்து கொண்டே இருக்கட்டும்.அதற்கு அல்லாஹ் நமக்கு அருள் செய்வானாக,ஆமீன்.

அல்ஹம்துலில்லாஹ் !

சகோதரர்களே, கீழ் கண்ட இந்த சிறு பயானையும் கேட்டு பயனடைவோம்.




இந்த பதிவுக்கு தொடர்புடைய மார்க்க சொற்பொழிவையும் கேட்டு பயன்பெறுங்கள்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்....

இப்னு அப்துல் ரஜாக்

8 Responses So Far:

Iqbal M. Salih said...


அல்ஹம்துலில்லாஹி அலா குல்லி ஹால்!

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும், சகோதரர் இப்னு அப்துல் ரஜாக்,

அல்ஹம்துலில்லாஹ்...

இன்றைய சூழலுக்கு ஏற்ற நல்ல நினைவூட்டல். சந்தோசம் மற்றும் சோதனையான காலகட்டத்திலும் அல்லாஹ்வை புகழவேண்டும் என்பது நல்ல முஸ்லீமின் பண்பு.

அல்ஹம்துலில்லாஹ்...


தங்களின் இந்த பதிவுக்கு தொடர்புடைய இந்த பயானை கேளுங்கள் " http://www.youtube.com/watch?v=MXLIEBMhbhs அல்ஹம்துலில்லாஹ், உரை மெளலவி முஜாஹித் இப்னு ரசீன் அவர்கள்"

sabeer.abushahruk said...

அல்ஹம்துலில்லாஹ் !

adiraimansoor said...


அல்ஹம்துலில்லாஹி அலா குல்லி ஹால்!

இப்னு அப்துல் ரஜாக் said...

கருத்திட்ட,வாசித்த,துவா செய்த சகோதர,சகோதரிகளுக்கு நன்றி.
அல்ஹம்துலில்லாஹ்

இப்னு அப்துல் ரஜாக் said...

சகோ தாஜ்,மிக பயனுள்ள பயான்.
அல்ஹம்துலில்லாஹ்

Ebrahim Ansari said...

அல்ஹம்துலில்லாஹ் நேற்று முழுக்க திருமண நிகழ்வுகள். இன்றுதான் படிக்க இயன்றது.

படித்த உடன் மனதில் இயல்பாகத் தோன்றியது அல்ஹம்துலில்லாஹ்.

இந்தத் தொடர் எளிமை! பக்குவம்! படிப்பினை !

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும்.அல்ஹம்துலில்லாஹி அலா குல்லி ஹால்!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு