Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மாட்டுக்கறிக்கு ஓட்டுப் போடுங்கள் - குறுந்தொடர் (2) 7

அதிரைநிருபர் பதிப்பகம் | January 12, 2015 | , , , ,

கடந்த அத்தியாயத்தில் மாட்டுக்கறி உணவாக சாப்பிடப்படுவது வேதகாலம்தொட்டு பரவலாக இருந்த பழக்கம்தான் என்பதையும், இந்த உணவுப் பழக்கம் மத ரீதியான சடங்குகளிலும், மரியாதை நிமித்தமாகவும் மேற்கொள்ளப்பட்டன என்பதையும், விவேகானந்தர் போன்ற மகான்கள்  என்று  போற்றப்பட்டோரும் இதனை ஏற்றுக் கொண்டும்  குறிப்பிட்டும் இருககிறார்கள் என்பதையும் ஆதாரங்களுடன் பார்த்தோம். அப்படி இருந்த மாட்டுக்கறி பின்னர் ஏன் இப்படியானது? ஒரு உணவுப் பதார்த்தத்துக்கு  எப்படி மத சாயம் பூசப்பட்டது? என்பதை இப்போது காணலாம். 

முன் அத்தியாயத்தில் பார்த்தபடி வேதகாலத்தில் பசுக்கள் கொல்லப்பட்டாலும் ,        உண்ணப்பட்டாலும் அதில் ஒரு விதிவிலக்கு இருந்திருக்கிறது. அதாவது அந்தப் பசுக்களில் கூட “அக்ஞா” என்று அழைக்கப்பட்ட பசுக்கள் இருந்திருக்கின்றன.  “அக்ஞா” என்ற சொல்லுக்கு கொல்லத் தகாதவை என்று அதர்வண வேதம் குறிப்பிடுகிறது. இந்த கொல்லத் தகாத பசுக்கள் எவை என்றால் அவை ஒரு பிராமணருக்கு, ஒரு பலி நடத்திய பிறகு தட்சணையாக- கூலியாக – உயிருடன் கொடுக்கப்படும் பசுக்களாகும். அதாவது ஒரு பிராமணருக்கு கூலியாக கிடைத்த பசு மட்டுமே புனிதமானது அது கொல்லப்படக்கூடாதது; உண்ணப்படக்கூடாதது. இந்த புனிதப்பசுவின் அரிச்சுவடி இப்படித்தான் ஆரம்பிக்கிறது. 

அத்துடன் புத்த, சமண மதங்கள் தோன்றி வளரும்போது பொதுவாக விலங்குகளை வதை செய்வது, அறுப்பது, உண்பது வெறுக்கப்பட காரணமானது. உயிர்  வதைக்கு பொதுவான கருத்து விதைக்கப்பட்டது. அதில் கூட பசுவுக்கு என்று தனியான அந்தஸ்து பிரச்சாரப்படுத்தப்படவில்லை. பிற உயிர்களைக் கொல்லாதே என்கிற பொதுப்பிரிவில்தான் வந்தன. ஆகவே வன்முறைக்கு எதிரான  முறைகளை உபநிடதக் கொள்கைகள் வலியுறுத்தியதித்தத் தொடர்ந்தும்,  புத்தம், சமணம் ஆகியவற்றின் எழுச்சி,  வைணவத்தின் மையக்கருத்து ஆகியன தாம் விலங்குகளைக் கொல்லாமையை உறுதிப்படுத்தின. 

ஐந்தாம் மற்றும் ஆறாம் நூற்றாண்டுகளில் இந்திய சமூகம் நில பிரபுத்துவம், ஜமீன்தார் முறை போன்றவற்றிற்கு மெல்ல மாறத்தொடங்கிய சூழல் வளர்ந்தபோது பசு புனிதமானது என்கிற தத்துவமும் வளர்த்தெடுக்கப்படத்தொடங்கியது.  நிலப்பிரபுத்துவம், குறு நில மன்னர்கள் என்கிற அமைப்புகள் மலரத்தொடங்கியபோது சில சட்டங்கள், சம்பிரதாயங்கள் அரசமைப்பில் உருவாக்கப்பட்டன. அந்தப் பணிகளில் ஆளுமை செலுத்திய பிராமணர்கள், மாட்டிறைச்சி தின்பதை தடுத்து நிறுத்த சட்டமாக்க அரசர்களுக்கு ஆலோசனை சொன்னார்கள். இதற்கு காரணம் மாடுகள் பெருமளவில் விவசாயத்துக்கு பயன்படவேண்டும் – உணவுக்காக அழிக்கப்படக்கூடாது என்பதே. அதோடு கூடவே அரசவைய்ல் வேலை செய்துவந்த பிராமணர்களுக்கு பெருமளவில் பசுக்களே தானமாக வழங்கப்பட்டன. அவை புனிதப்பசுக்களாக நடத்தப்பட்டன. வேளாண்மைச் சமூகத்திலும்  பசுக்களின் பொருளியல் மதிப்பு அந்நிலையை முதன்மைப்படுத்தின. அத்துடன் பசுக்களின் பாலும் உணவாகப் பயன்பட்டதும், பாலைத்தொடர்ந்த அதன் சார்பு உணவுகளான தயிர், வெண்ணெய், நெய் போன்றவைகளுக்கும் பஞ்சம் வரக்கூடாது என்கிற எண்ணத்திலும் அவைகளைத்தருகிற பசுக்களுக்கு, விலங்குகளுக்கு மத்தியில் ஒரு வி.ஐ. பி அந்தஸ்து தரப்பட்டது. 

தாயைப்போல பால் தருவதால் பசு இப்படி கோ மாதா என் குல  மாதா என்று கொண்டாடப்பட்டது. “ பாதிப்புள்ளே பொழைக்குதப்பா பசும்பாலைத் தாய்ப்பாலா நம்பி” என்று அந்தக்காலத்திலேயே இருந்ததிருக்கும் போலத்தோன்றுகிறது. இந்த அடிப்படையில் சட்டத்தில் ஏற்பட்ட நடைமுறைகளுக்கு  'கலிவர்ஞா' என்று பெயர். இந்த முறைப்படி , முன் நடந்த முறைகள் மாற்றப்பட்டன பசுவைக் கொல்வது தவறு என்று பார்ப்பன கருத்துக்கள் பிரச்சாரமாய் பரவத்தொடங்கின. 

அத்துடன் மக்களிடம் உயர்வு தாழ்வு கற்பித்த வேதங்கள் உயர்ந்தொரையும் , தாழ்ந்தோரையும்  வேறுபடுத்திப்பார்க்க கையில் எடுத்த ஒரு ஆயுதமாகவும் மாட்டிறைச்சி இருந்தது. மாட்டிறைச்சி தின்போர் புலையர் என்றும், சூத்திரன் என்றும், தாழ்த்தப்பட்டோன் என்றும் முத்திரை குத்தப்பட்டனர். சுருக்கமாக ,  பெற்ற  தாய்க்கு சமமாக  பால் தரும் பசுவை    அறுத்து புசிப்பவர்கள் தீண்டத்தகாதவர்கள் என்று தாழ்த்தப்பட்டோரை தரம் பிரிக்கவும் புனிதப்பசு கருவியாயிற்று.  

இந்தியாவை பல்வேறு காலங்களில் ஆண்ட வெவ்வேறு ஆட்சியாளர்களாலும்  பசு அரசியல் கருவியாக்கப்பட்டது. “இவன் ரெம்ப நல்லவண்டா” என்று மற்றவர்களால்     மதிக்கப் படவேண்டுமேன்று எண்ணிய அரசர்கள் தங்களின் கைகளில் குத்திக்கொண்ட அக்மார்க் முத்திரை இந்த  புனிதபசு கொள்கை. இதற்கு இந்த அரசர்களை தூண்டியவர்கள்      அரசவைகளில் திவான்களாகவும் ,ராஜ ரிஷிகளாகவும் நிழல் நிர்வாகம் செய்த பிராமணர்களே. இந்த சூழ்ச்சிக்கு  மொகலாய மன்னர்களும் தப்பவில்லை.  

சமணர்களையும் பார்ப்பனர்களையும் மதிக்கும் பொருட்டு நல்லெண்ணத்தை பறைசாற்றும்  வகையில்  பசுக்களைக் கொல்வதற்கு மொகலாயப் பேரரசர்களான பாபர், அக்பர், ஜஹாங்கீர், ஒளரங்கசீபு ஆகியோர் தடை விதித்தனர்.  'நாம் இந்துக்கள் இம்மண்ணின் மைந்தர்களாகிய நாம் பசுக்களைக் கொல்வதோ அதன் வழி பார்ப்பனர்களை ஒடுக்குவதோ கூடாது' என்று பசுக்களையும் பார்ப்பனர்களையும் காப்பாற்ற வந்த அவதாரமாகக் கருதப்படும் மாமன்னர் சிவாஜி பறைசாற்றியிருக்கிறார்.

'சிக் குகா' அல்லது 'நாம்தாரி' என்னும் பெயரில் 1870-களில் பஞ்சாப்பில் தொடங்கப்பட்ட 'இந்து பசுப் பாதுகாப்புப் படை' தான் முதலில் பசுக்களை அரசியல் கருவியாக்கியது; அவர்களுடைய இக்கருத்தியல் பின்னர் தயானந்த சரஸ்வதி அவர்களால் 1882-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட 'முதல் கோரக்கினி சபை'யால் வலுப்படுத்தப்பட்டது. இவ்வமைப்புத் தான் குறிப்பிட்ட பிரிவு மக்களின் சின்னமாகப் பசுவை அடையாளப்படுத்தியது. 

மேலும் சுவாமி தயானந்த சரஸ்வதி , ஆரிய சமாஜ் என்கிற ஒரு இயக்கத்தை தோற்றுவித்து பசுவின் புனிதம் பற்றி நாடெங்கும் பரவலாக ஒரு இயக்கம் நடத்தினார். ஆரிய சமாஜம் என்பது வேறு பல நல்ல கருத்துக்களையும்  மக்களிடம் பிரச்சாரம் செய்தது. அவற்றுள் சில சிலை வணக்கம் ஒழிக்கப்படவேண்டும், குழந்தை மணம் தடுக்கப்பட வேண்டும், விதவை மணம் ஊக்குவிக்கப்பட வேண்டும், பிறப்பிலேயே மனுநீதியால் விதிக்கப்பட்ட சாதிப் பாகுபாடுகள் அகற்றப்பட வேண்டும் ஆகியனவாகும். இத்துடன் பசுவை போற்றவேண்டும் என்கிற கருத்தும் சுவாமி தயானந்த சரச்வதியால் போதிக்கப்பட்டது. உயர் சாதியினர் இந்த சுவாமி தயானந்தா சரஸ்வதி போதித்த ஏனைய கருத்துக்களை வசதியாக புறக்கணித்துவிட்டு பசுவைப் போற்றவேண்டும், போஷிக்க வேண்டும் என்கிற கருத்தை  மட்டும் பிடித்து தொங்கினர்.  

மாடுகளின் ,  அதிகஅளவு எடை கொண்ட  மாமிச கறி  அளவினை உத்தேசித்தும், விலை குறைவாக கிடைப்பதை உத்தேசித்தும், அன்றாட உணவுக்கும்,  பக்ரீத் போன்ற பண்டிகை காலங்களில் அவர்களின் மார்க்க நம்பிக்கையான பலி இடுவதற்கும் ஏழைகளுக்கு தானம் செய்வதற்கும்  முஸ்லீம்கள் , மாடுகளை அதிக அளவில் வாங்கத்தொடங்கியபோது சுவாமி தயானந்த சரஸ்வதியின் பிரச்சாரத்தால்  மாட்டுக்கறி உண்ணும  முஸ்லிம்களை  நோக்கி , அதியே காரணமாக்கி  1880-களிலும் 1890-களிலும் கலவரங்களை ஏற்படுத்தினார்கள். 

இவ்வாறு பசுவதை என்பது செய்யக்கூடாதது- பசுபுனிதமானது என்றெல்லாம்  கடும் பிரச்சாரம் நிகழ்ந்தாலும் ,  1888-ம் ஆண்டில் வடமேற்கு மாகாண உயர் நீதிமன்றம், 'பசு புனிதமான பொருள் அல்ல  என்று  தீர்ப்பு அளித்தது. இது  அவர்களுடைய வேகத்தை மட்டுப்படுத்தியது.; ஆனால் கோபத்தை அதிகப்படுத்தியது. நீதிமன்றத்தில் மூக்குடைந்தவர்கள் காவி உடையணிந்து தடி எடுக்க ஆரம்பித்தனர். இந்து – முஸ்லீம்களுக்கிடையில் ஏற்பட்ட பல கலவரங்களுக்கு பசுவே கருப்பொருள் ஆனது.  கோ மாதா கொல்லப்படுகிறாள் என்று உணர்ச்சியை தூண்டிவிட்டார்கள். 

1893-ம் ஆண்டு உத்திரப் பிரதேசத்தின் அஜாம்கர் மாவட்டத்தில் கலவரம் நடந்தது. அக்கலவரத்தால் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். 1912-13-ல் அயோத்தியாவில் கலவரம் மூண்டது. 1917-ல் ஷாகாபாத்தில் பெரிய கலவரம் மூண்டது. பல முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர்; அவர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. 

இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னும்  பல துன்பமான நிகழ்வுகள் பசுவின் பொருட்டால் நடைபெற்றன.  பசு வதையைத் தடுக்க வேண்டும் என்று 1966-ம் ஆண்டு இந்தியாவில் உள்ள மதவாத அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் சேர்ந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட பேரணியைப் பாராளுமன்றம் முன்பு நடத்தின. அப்போது மூண்ட கலவரத்தில் எட்டுப் பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்; பலர் காயமடைந்தனர். காந்தியடிகளின் ஆன்மீக வாரிசாகக் கருதப்படும் ஆச்சாரிய வினோபா பாவே பசுவதையைத் தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி 1979-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் உண்ணாவிரத  போராட்டம் நடத்தினார். இப்படியாகப் பசு அரசியல் கருவியானது.

பசு வதையைத் தடுக்க வேண்டும் என்று சொன்ன ஆதிக்க சாதி அமைப்புகள் எவையும் 'பசுவைக் கொல்லக்கூடாது என்று வேதங்களிலோ பார்ப்பன எழுத்துகளிலோ எந்தக் குறிப்பும் இல்லை' என்பதையும் 'காலாகாலமாகப் பசு தின்னப்பட்டு வந்திருக்கிறது' என்பதையோ காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை.

இதனால் -

உண்ண உணவின்றி அவதிப்படும் ஏழை மனிதனை பற்றி கவலைப்படாமல் மாட்டைப்பற்றி கவலைப்பட்டோர்-

மாட்டுக்கறியை உண்ணக்கூடாது ஆனால் மாட்டு  மூத்திரத்தை குடிக்கலாம், வீட்டிலும், உடைகளிலும், உச்சந்தலைகளிலும்  தெளித்துக்கொள்ளலாம் என்றும் ஒவ்வாத  சாத்திரம் பேசியோர்-

பைபிளில் கூட ஆதம் -  ஏவாளுக்கு எல்லாவற்றையும் படைத்து அனுபவிக்கக் கொடுத்த இறைவன் ஒரு பழத்தைக் காட்டி சுவைக்கக்கூடாது என்று  தடுத்த கதை இருக்கிறது. ஆனால் எந்த நான்கு வேதங்களிலும் , உபநிதங்களிலும் மாட்டை அறுப்பதும்  புசிப்பதும்  தடுக்கப்படவில்லையே என்று சிந்திக்காதோர்-

மகாவிஷ்ணு எடுத்த பத்து அவதாரங்களில் ஒரு அவதாரம் கூட பசு அவதாரம் எடுத்ததாக குறிப்பிடப்படவில்லையே - பன்றி  அவதாரம்கூட எடுத்தார்- நரகலை தின்னும் பன்றிக்கு வேதங்கள் கொடுத்த மதிப்புக்கூட பசுக்கு கொடுக்கவில்லையே அதை ஏன்           புனிதமாக்கவேண்டுமென்று என்று யோசிக்க அறிவுபூர்வமாக மறுத்தோர்-  

ஆள் திரட்டுவதற்கும், அரசியல் நடத்துவதற்கும் பசு மாட்டை பயன்படுத்த ஆரம்பித்தனர். அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை மக்களுக்கெதிராக பாவப்பட்ட பசுவை புனிதமாக்கி, பசுவின் பெயரால் நாட்டில் பல வன்முறை கலவரங்களை நடத்தினர்.  

அடுத்த அத்தியாயத்தில் நிறைவுறும்.
இபுராஹீம் அன்சாரி


7 Responses So Far:

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

நாட்டை அபகரித்துக் கொள்வதற்க்கான திட்டத்தில் ஒன்றுதான்.வந்தேறிகள் கையில் எடுத்துக் கொண்ட மாட்டுப் பிரச்சனை.

பாவம் இவங்களை கனவுல மாடு முட்டுது போலும்.

ஆனால் ஒரு உண்மை மாட்டுக்கறி சுக்கா வச்சா அப்படிதான் ஈக்கும்.

sheikdawoodmohamedfarook said...

''மாட்டுக்கறிக்குஓட்டுபோடுங்கள்!''என்ற தலைப்பு என்னவோ கசாப்பு கடைகாரர் விளம்பரம் போல் தோன்றினாலும் படித்த போது குறிப்பிட்ட சிலமிருகங்கள் மதவேற்றுமையே தூண்டவும்மானிடவர்க்கங்களில்பகைமைவெறுப்பு கலவரத்தை தூண்டவும் பயன்பட்டு இருக்கிறது' ' என்பதை அறியத்தரும்வரலாற்றுபாடமாகஇருக்கிறது. இந்தியவிடுதலைபெற்றபின்காங்கிரஸ்கட்சியின் தேர்தல்சின்னம்ஏர்கலப்பைபூட்டியஇரண்டுகாளைமாடுகள். ''மாட்டுபெட்டியேமறக்கமுடியுமா? என்னாசொன்னாலும்மக்கள்மனசை மாத்தமுடியுமா?''பாட்டுஊரெங்கும்கேக்கும்.

sheikdawoodmohamedfarook said...

சிலஆண்டுகளுக்குமுன்பு'கோவில்களில்பிராணிகளைபலிடக்கூடாது''என்றுஜெயலலிதாஅரசுசட்டம்போட்டது.பலமானஎதிர்ப்புகிளம்பியும்அரசுகாது கொடுத்துக்கேட்க்கவில்லை.அடுத்ததேர்தலில்அதுவேஜெயலலிதாஆட்சிக்குசங்குஊதியது.

sabeer.abushahruk said...

பீஃப் பர்கர் ஒன்னு துன்னக்கொடுத்தா கோஷமெல்லாம் ஓஞ்சி போய்டும். பசு புனிதமானது; மனிதன் தீண்டத்தகாதவன்.

என்ன கர்மம் புடிச்ச கோட்பாடுகளோ தெரியலே. இன்னும் இதற்கு அடிபணிந்து கிடக்கும் மக்களை என்னவென்று சொல்வது!

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//மகாவிஷ்ணு எடுத்த பத்து அவதாரங்களில் ஒரு அவதாரம் கூட பசு அவதாரம் எடுத்ததாக குறிப்பிடப்படவில்லையே - பன்றி அவதாரம்கூட எடுத்தார்- நரகலை தின்னும் பன்றிக்கு வேதங்கள் கொடுத்த மதிப்புக்கூட பசுக்கு கொடுக்கவில்லையே அதை ஏன் புனிதமாக்க வேண்டுமென்று என்று யோசிக்க அறிவுபூர்வமாக மறுத்தோர்- //

அஸ்ஸலாமு அலைக்கும் காக்கா,

அறிவிப்பூர்வமாக அவர்கள் கடவுள்கள் யோசிக்காதபோது, அதுகளை வணங்குபவன் எப்படியாப்பட்ட அறிவாளியாக இருப்பான்?

இன்றும் மிருகங்களைவிட கேவலமாக நடத்தப்படும் நம் தொப்புள் கொடி உறவுகளான் தலித் சமூகம் சிந்திக்க வேண்டும்.

ஜஸக்கல்லாஹ் ஹைரா காக்கா..

தாஜுதீன் (THAJUDEEN ) said...

/பீஃப் பர்கர் ஒன்னு துன்னக்கொடுத்தா கோஷமெல்லாம் ஓஞ்சி போய்டும்./

ஹா ஹா... சபீர் காக்கா..

பீப் பர்கர் தின்னுட்டு, அடுத்த நாள் கோமியத்தில் வாய் கொப்பழித்து, முகத்தை கழுவிட்டு டமிழிசை சவுண்டராஜன் போல் டிவி சேனல்களில் கூச்சலிடுவார்கள்.

Ebrahim Ansari said...

Thambi thajudeen wa alaikkumussalam. Happy to c u after long time.Jasakkallah.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு