நெல்மணி விளையும் வயல்வெளியும்
உவர்மணி விளையும் உப்பளமும்
நெத்திலி நீந்தும் கடற்கரையும்
நெத்தெனக் காய்க்கும் தோப்புகளும்
குளிரலைக் கொஞ்சும் குளக்கரையும்
குளித்தபின் சிலுப்பும் குருவிகளும்
குரல்வளை கனத்த தவளைகளும்
குரல்வழி அழைத்த பாம்பினமும்
பாங்கொலி எழுப்பும் விடியல்களும்
பயமின்றிப் புழங்கும் வீதிகளும்
பல்லிகள் நடக்கும் சுவறுகொண்ட
பள்ளியில் நடத்தும் தொழுகைகளும்
நடக்கையில் நீளும் சாலைகளும்
கடக்கையில் காணும் காட்சிகளும்
தூரத்தில் உதிக்கும் சூரியனும்
ஈரத்தை உலர்த்தும் இலைதழையும்
கிழக்கிலே விடிந்த வெளிச்சம்கண்டு
விளக்கினை அனைத்த கம்பங்களும்
இலக்கிலே பறக்கும் பறவைகளும்
பிழைக்கவே விழிக்கும் சொந்தங்களும்
அடுப்பிலே கொதிக்கும் பால்குடிக்க
இடுப்பிலே இருக்கும் குழந்தைகளும்
உடுப்பிலே தனித்த தோரணையில்
விடுப்பிலே மகிழும் வாலிபரும்
புத்தகம் கனக்க பிள்ளைகளும்
புத்தியை வளர்க்க பள்ளிகளும்
பக்தியில் திளைத்த பிரார்த்தனையால்
புக்ககம் நுழைந்த மணமக்களும்
மல்லிகை மணக்கும் இரவுகளும்
மனதினிற் கினிய உறவுகளும்
மதிமுகம் சிவந்த மங்கையரும்
மனமகிழ் வளிக்க ஆடவரும்
பழகியே களித்தத் தோழர்களும்
பார்த்துத்தான் சிரித்த பிரியங்களும்
விலகியே பிரிந்துச் சென்றாலும்
உலகிலே நிலைக்கும் ஊர்நினைவு
மஸ்ஜிது மிகுந்த தெருவழகும்
தஸ்பிஹு சொல்லும் வீடுகளும்
முஸ்லிமாய் மூமீனாய் நிறைவாக
விஸ்தார மன்றோ எம்சமூகம்
சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்
42 Responses So Far:
அதிரையின் பேரழகை, அதன் இயற்க்கை வனப்பை கவிதையில் இவ்வளவு அழகாக சொல்ல என் நண்பனால் மட்டுமே முடியும்.
இருப்பினும் இவ்வளவு அழகுக்கு சொந்தமாக ஒருகாலத்தில் அதிரை இருந்தது உண்மை. ஆனால் இன்றைய நிலைமையில் எல்லா தோப்புகளும் தான் மனைகளாக, வீடுகளாக மாறி அழகு சிதைந்த அதிரை ஆக அல்லவா இருக்கின்றது ?
கவிதையில் காலை, மாலை, இரவு என்ற மூன்று நேரத்தையும் அழகிய வருணனையோடு கொண்டுவந்த விதம் அருமை. செக்கடி பள்ளியின் ஓவியத்தை அசலாக காட்டினால் கவிதைக்கு இன்னும் மெருகு கூடியிருக்கும் என்று நினைக்கத்தோன்றுகின்றது.
அபு ஆசிப்.
காதரு,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அதெல்லாம் ஒரு காலம்டா. வர்ணங்களை வானவில்லில் மட்டுமே கண்டு வந்த நமக்குக் காட்சிகளில் நிறங்களும் பிரதிகளில் கருப்பு வெள்ளையும் மட்டுமே காணக் கிடைத்த காலம்.
அதிரையின் மண்ணிலும் அதிரையர்களின் மனத்திலும் ஈரம் நிலவிய காலம்.
கண்ணுக்கு எட்டிய தூரம்வரை பசுமையும் எட்டாத தூரத்திற்கு சற்று நெருக்கம்வரை கடலின் நீலமும் ஊரையே வண்ணமயமாகக் காட்டும்.
கால்பந்தாட்டத் திடலில் உன் கச்சல்க்கட்டை யாராலும் அவிழ்க்கவே முடியாது. இஸ்லாமியப் பாடல்களை நீ பாடும்போது யாரும் லயிக்காமல் இருக்கவே முடியாது.
அதெல்லாம் ஒரு காலம்டா.
அப்பவெல்லாம் உனக்குத் தலை நிறைய அலையலையாய் நெர்ர்ர்றைய முடியிருக்கும்....ம
Nice poem...!
Even though the grammatical aspects are not fully applted in this poem, this is the best of Sabeer's poems, I consider...!
கண்ணாடியின்றி டைப் செய்ததால் ஏற்பட்ட appltd தவறு. Please read as applied.
ஒருகாலத்தில்அதிராம்பட்டினத்தின்தாகம்தனித்தமன்னப்பன்குலத்தையும் ஊரின்வடக்குஎல்லைநுழைவாயிலில்கரிசல்மண்ஏறியையும்சுற்றிபசுமை செழியன்குளத்தையும்பெரியஜூம்மாப்பள்ளிகடல்கரைதெருஜும்மாபள்ளி தரகர் தெரு பள்ளி தக்வா பள்ளி ரயிலடி ஆகியவை கவிதையில் சிறப்பு செய்திருந்தால்சிறப்பாக இருக்கும். அதிரையின்கவிதைஅழகஇருக்குஇருந்தாலும்அதிரையின்அன்றிருந்த வனப்பும் பண்பாடும்பாசமும்வாசமும்எங்கேபோனது?
அன்பிற்குரிய அஹ்மது காக்கா,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
தங்களின் அரும்புப்பாடல்கள் வரிசையில் "சோலையும் பாலையும்" என்ற பாட்டில் சோலையான இந்தியாவைவிட்டு பாலையான அஜ்மானுக்குச் சென்றதாக எழுதியிருந்தீர்கள்.
அந்தப் பதிவிற்கான வீட்டுப் பாடமாகத்தான் இதை 'அழகான ஊரைவிட்டு வெளியூரில் குடியேறுவதாக' எழுதத் துவங்கினேன். நேரமின்மை காரணமாக முடிக்க இயலாததால் வேறு திசையில் பயனப்பட்டு நிறைவு செய்தேன்.
இலக்கண வரம்புகளுக்குள் நிற்க முனையவில்லை என்றாலும் முதல் இரண்டு பத்திகளில் மரபுவைத்தான் முயற்சி செய்தேன்.
அன்பிற்குரிய ஃபாரூக் மாமா,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
மஸ்ஜிதுகளும் மஸ்ஜிதை அடுத்தக் குளங்களும் ஊருணிகளும் சிற்றோடைகளும் ஆறும் ஏரிகளும் நமதூருக்கே அமைந்துவிட்ட அழகு!
எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகச் சிதிலமடைந்து வருவது வேதனையான ஒன்று.
தங்களுக்குஇந்தக் கவிதைப் பிடித்துப் போனதில் மகிழ்ச்சி.
மற்றொரு பதிவில் தங்கள் விருப்பப்படி விடுபட்டவைகளை எழுதுவோம், இன்ஷா அல்லாஹ்!
//உங்களுக்குஇந்தக்கவிதைபிடித்துப்போனதில்மகிழ்ச்சி//கவிதைஎனக்குபிடிக்கும்.ஆனால்மருமகனின்கவிதைஎன்னையே பிடித்துக்கொண்டது.நான்யாரையும்அவர்களுக்குமுன்னால்புகழ்வதில்லை. என்றாலும்மருமகனின்கவிதைகள்'இம்'என்றால்எழுநூறும்'அம்'என்றால் ஆயிரமும்நயகாராநீர்வீழ்ச்சிபோல்'ஸோ'யென்றஓசையுடன்கொட்டுவது கண்டு''அதிராம்பட்டினத்துமண்ணில்இப்படிஒருகவிஞனா?''என்று வியக்கிறேன்.இதுஉண்மைவெறும்புகழ்ச்சியல்ல.அஸ்ஸலாமுஅலைக்கும்
பழையஅதிராம்பட்டினத்துவாசனையேமூக்குக்குகொண்டுவரும்கவிதை ஒன்றுபோட்டால்மண்வாசனையைமனம்நுகரும்.மனபாரமும்கொஞ்சம் நகரும்.
பாஸ்...இது பழைய அதிராம்பட்டினம் பற்றியதா?.இப்ப பல விசயங்கள் மிஸ்ஸிங்
இப்படியான கவிதை படிச்சா சுத்தி பிளாக்&ஒயிட்டாவே தெரியுது
அதிரையின் அசத்தல் (கவிதை) முத்திரை....
பெரும்பாலான பள்ளிவாசல்களின் சாயல் கொஞ்சம் மாறிக் கொண்டு வந்தாலும், இன்னும் அதே இளமை கம்பீரத்துடன் இருக்கும் செக்கடிப் பள்ளி... ஊரின் 'பெரும் புள்ளி'தான்
நமதூரின் பெரும்பாலான பள்ளிவாசல்களின் புகைப்படங்கள் இருக்கிறது அனைத்தையும் வரைகலை படமாக கொண்டு வந்து அனைவருக்கும் ஞாபகர்த்தமாக கொடுக்க ஆசை !
பார்ப்போம் முடியுமா என்று !
மாஷா அல்லாஹ்...கவிக்காக்காவின் சொல் வளமையில் எங்கள் மனது மகிழ்ச்சியால் நிறைகின்றது பழைய அதிரையின் (??? ) நிஜம் எங்கள் மனக்கண் முன்னால் வந்து செல்கின்றது
//அஸ்ஸலாமுஅலைக்கும்//
வ அலைக்குமுஸ்ஸலாம் ஃபாரூக் மாமா.
உங்களைப்போன்ற ரசனைமிக்கவர்களுக்குப் பிடிக்குமளவிற்கு எழுத வைக்கும் அல்லாஹ் ஒருவனுக்கே எல்லா புகழும்.
ஜாகிரு,
கால்பந்துத் தையல்களின் ஹெக்ஸோகன்ஸ், ஸ்செஸ் போர்டின் சதுரங்கள், ஒலியும் ஒளியும் பார்த்த டிவி, முத்து காமிக்ஸ், ஆனந்த விகடன் (முன்ஜாக்ரதை முத்தண்ணா) போன்று கனவுகளும் கருப்பு வெள்ளைதானேடா.
கற்காலத்தைத் தொடர்ந்து கருப்பு வெள்ளைக்காலம். தற்காலத்தில் எல்லாம் வண்ணமயமாகிவிட்டதால் அதிரை, பனிமூட்ட காலத்தின் ஹைவேபோல மங்கலாகத்தான் தெரியும்.
பதுப்பிக்கப்படாத கவிதைத் தொகுப்பைப் போல புதுப்பிக்கப்படாத ஊர் நினைவுகள் ஏராளம் உண்டு. ஊருக்கு 'ஒண்ணா' போனால் இன்னும் அதிகம் கனவுகளை அடையாளம் கண்டு வரலாம்.
அபு இபுறாகீம்,
ஊரைப்பற்றிய என் வர்ணனைகளை "அதிரையின் முத்திரை" என்று அருமையானத் தலைப்பு வைத்து வெளியிட்டமைக்கும், புகைப்படமாகவே பார்த்துவந்த செக்கடிப் பள்ளியை வரைகலையில் கலக்கி வித்தியாசப்படுத்திக் காட்டியமைக்கும் நன்றி.
தங்களின் விருப்பம்போலவே நம்மூரின் எல்லா பல்ளிகளையும் வரைகலையில் ஆவணப்படுத்தத் தங்களுக்கு இறைவன் நேரத்தையும் ஆரோக்கியத்தையும் தருவானாகவும், ஆமீன்.
யாசிர்,
ஜஸாக்கல்லாஹ் க்ஹைர்!
நேரம் ஒதுக்கி வாசித்துக் கருத்திட்டமைக்கு நன்றி.
தங்கள் ஆக்கங்களை வாசித்து வெகு நாட்களாகிவிட்டது, கவனிக்கவும்.
சபீரு அதிரையின் சிறப்பு அருமை
கருத்தாய் கவிபடைக்கும் கவிஞர்களும்
காணத்துடித்திடும் குளக்கரையும்
காலையில் கூவும் கூக்கூ குருவிகளும்
கருஇருட்டில் மின்னும் மின்னட்டாம் பூச்சிகளும்
மடிப்பிள்ளைகூட படிக்கச் செல்லும் அழகுகளும்
மார்தட்டி வெற்றிபடைக்கும் மாணாக்களும்
துடிப்பான இளைஞ்சர்கள் கூட்டங்களும்
துவளாது செய்திடும் பொதுச்சேவைகளும்
வனப்பாய் வாழ்ந்திடும் செல்வந்தர்களும்
வந்தோரையும் வாழவைக்கும் அதிரையர்களும் ...........
இப்படி நமதூரின் சிறப்பை இன்னும் சொல்லிக் கொண்டு போகலாம் நட்பே
Assalamu Alaikkum
Dear brother Mr. AbuShahruk,
A beautiful poem portraits the greatness of our town in nice wordings.!!!
I think grayed graphics of the masjid actually contrasts with greenish and cool environment of Adirampattinam expressed in the poem.
Thanks and best regards
B. Ahamed Ameen from Dubai.
மெய்சா,
ஊர் அழகை மட்டுமல்ல ஊராரின் வாழ்வியலையும் சொல்லி மகிழவே முயன்றேன்.
நாம் சின்னப் பசங்களாக இருக்கும்போது பள்ளிக்கூட காலத்தில் நமதூரின் எழில் தூக்கலாகவே இருந்தது. காதர் சொல்வதுபோல் வீட்டுமனைகளும் கட்டடங்களும் ஊரை அகலப்படுத்தி இயற்கை வளங்களைச் சிதிலப்படுத்திவிட்டபடியால் அழகான அதிரை கனவாகவே நிலைத்துவிட்டது.
உன் வாசிப்பிற்கும் கருத்திற்கும் நன்றி.
wa alaikkumussalam warah...
dear thambi B.Ahamed Ameen,
Thanks for your possitive comment and it is so encouraging.
True. As you said and my friend Kader felt, a colourful picture of masjid would be suitable for the theme of this posting; but to support a poem it always has to be in a different angle, we thought.
A line art is something classic and it is preferable to support an article written in this format.
i wish it is, somehow, acceptable! :-)
jazakallah khair.
Missing you Crown, especially in this moment!
You look very busy .
Take care of your health and let me have your opinion on this poem once you find leisure.
Assalamu Alaikkum
Dear brother Mr. AbuShahruk,
I mean that I contrast with brother Mr. Khadir's. Hope you got that poem is highlighted-making contrast- by grayed graphical picture of the masjid.
//To support a poem it always has to be in a different angle, we thought.// its right.
Thanks and best regards,
B. Ahamed Ameen from Dubai.
ஹூம்.. இது மாதிரி கவிதைகலிள் மாத்திரமே காண முடிகிறது நாம் இழந்தவற்றை!
பெரும்பாலான பள்ளிவாசல்களின் சாயல் கொஞ்சம் மாறிக் கொண்டு வந்தாலும், இன்னும் அதே இளமை கம்பீரத்துடன் இருக்கும் செக்கடிப் பள்ளி... ஊரின் 'பெரும் புள்ளி'தான் naina thambi
sabeer.abushahruk சொன்னது…
Missing you Crown, especially in this moment!
You look very busy .
Take care of your health and let me have your opinion on this poem once you find leisure.
----------------------------------------------------------------------
Assalamualikum yes kakka i have some busy but i read all its so nice poem about our mother land.
தலைப்பே வியப்பில் ஆழ்துகிறது!மேலும் தவிப்பை உண்டாக்குகிறது! நம் ஊரின் சிந்தனை எப்பவும் நம்ம ஊரும்,உறவும் நினைக்கையில் மேலும் நினைவு ஊறும்!ஊர்ந்து நகரும் நாட்களும் தேயாமல் ,ஓயாமல் வளரும்!
நெல்மணி விளையும் வயல்வெளியும்
உவர்மணி விளையும் உப்பளமும்
நெத்திலி நீந்தும் கடற்கரையும்
நெத்தெனக் காய்க்கும் தோப்புகளும்
-----------------------------------------------------------------------
வார்த்தை மணியாய்,கோர்த்து வாசிக்கையில் தென்றலாய் சும்மா வருடிச்செல்கிறது,இதயத்தை திருடி சென்று அதிரையில் அவிழ்து விடுகிறது!
நெல்மணி விளையும் வயல்வெளியும்
உவர்மணி விளையும் உப்பளமும்
-------------------------------------------------------------------
மொத்தமாய் பாராட்டை அறுவடை செய்யும் வரிகள்!இனிக்கிறது கை'மனம்.
குளிரலைக் கொஞ்சும் குளக்கரையும்
குளித்தபின் சிலுப்பும் குருவிகளும்
குரல்வளை கனத்த தவளைகளும்
குரல்வழி அழைத்த பாம்பினமும்
-------------------------------------------------------
குளிரலை ஈரலை குளிர்விக்கிறது!
தலைசிலுப்பும் குருவியின் காட்சி கண்முன்னே விரிகிறது!தவளை தனக்கு தானே வலை விரித்துகொள்ளும் காட்சி படமாய் விரிகிறது.
பாங்கொலி எழுப்பும் விடியல்களும்
பயமின்றிப் புழங்கும் வீதிகளும்
பல்லிகள் நடக்கும் சுவறுகொண்ட
பள்ளியில் நடத்தும் தொழுகைகளும்
--------------------------------------------------------------------------
வர்னிக்கும் ''பாங்கே'' ஊருக்கு இழுக்கிறது!
நடக்கையில் நீளும் சாலைகளும்
கடக்கையில் காணும் காட்சிகளும்
தூரத்தில் உதிக்கும் சூரியனும்
ஈரத்தை உலர்த்தும் இலைதழையும்
----------------------------------------------------------------------
வார்த்தை பசுமையாய் விரிகிறது!ஒரு வித தெம்பும் ஏக்கமும் உண்டாக்கும் நினைவூட்டல்!கவிதை கொஞ்சுகிறது!
கிழக்கிலே விடிந்த வெளிச்சம்கண்டு
விளக்கினை அனைத்த கம்பங்களும்
இலக்கிலே பறக்கும் பறவைகளும்
பிழைக்கவே விழிக்கும் சொந்தங்களும்
----------------------------------------------------------------------
மாஷா அல்லாஹ்! இயல்பான விசயத்தை இப்படி அழகாய்,அடுக்கும் சொல் வளம்!இது உங்க பலம்!
அடுப்பிலே கொதிக்கும் பால்குடிக்க
இடுப்பிலே இருக்கும் குழந்தைகளும்
உடுப்பிலே தனித்த தோரணையில்
விடுப்பிலே மகிழும் வாலிபரும்
-----------------------------------------------------------------------
இனிய வார்த்தை தொகுப்பு! அ. நி. கவிதை வகுப்பெடுப்பு!மகிழ்சியின் அணிவகுப்பு!சிறப்பு!
புத்தகம் கனக்க பிள்ளைகளும்
புத்தியை வளர்க்க பள்ளிகளும்
பக்தியில் திளைத்த பிரார்த்தனையால்
புக்ககம் நுழைந்த மணமக்களும்
மல்லிகை மணக்கும் இரவுகளும்
மனதினிற் கினிய உறவுகளும்
மதிமுகம் சிவந்த மங்கையரும்
மனமகிழ் வளிக்க ஆடவரும்
-----------------------------------------------------------------------
இல்லறத்தை அழகாய் பாடம் நடத்தியிருக்கிறார் கவிஞர்! கவிதை சோலையில் எம்மை தள்ளி இனிய சுகந்தத்தில் திக்குமுக்காட செய்கிறார் கவிஞர்!இளமை துள்ளுகிறது, இன்று என் திருமண நாள் கூட ஆகையால் தீடீரென எனக்குள் பரவும் இன்பத்தீயாய் இந்த கவிதை வரிகள்!(திருமண நாள் கொண்டாடுவதில்லை என்றாலும் நினைவை தூண்டிய கவிதை)!!!!
பழகியே களித்தத் தோழர்களும்
பார்த்துத்தான் சிரித்த பிரியங்களும்
விலகியே பிரிந்துச் சென்றாலும்
உலகிலே நிலைக்கும் ஊர்நினைவு
மஸ்ஜிது மிகுந்த தெருவழகும்
தஸ்பிஹு சொல்லும் வீடுகளும்
முஸ்லிமாய் மூமீனாய் நிறைவாக
விஸ்தார மன்றோ எம்சமூகம்
-------------------------------------------------------------------
முத்திரை பதிக்கும் வரிகள்! மொத்தத்தில் மனச என்னவோ செய்கிறது!பாராட்டுக்கள் கவியரசே! மண் மணம் கமழும் கவிதை!வேறு நாட்டில் குடியுரிமை கிடைத்தாலும் மண்ணின் மைந்தன் என்பது என்றும் அழியாது!அது அழகான முத்திரை! நம் சமூக கோட்டையின் வாசல் ஊர்!
இதன் வாயிலில் வளர்ந்திருக்கும் மலர்தோட்டம் ஊர்!
பதிவுக்கு நன்றி.
கவிதை நச்.
அருமை. வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது. (காசுக்கடை கோஸ் முஹம்மது பேரன்)
த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com
சகோ. இப்னு அப்துல் வாஹித்
சகோ. அப்துல் மாலிக்
சகோ. K.M.A. ஜமால் முஹம்மது
ஜஸாக்கல்லாஹ் க்ஹைர்!
வ அலைக்குமுஸ்ஸலாம் க்ரவ்ன்,
பரீட்சை எழுதிவிட்டு ரிஸல்ட்டுக்குக் காத்திருப்பது போன்றதொரு பதட்டம் உங்கள் கருத்தை வாசிக்கும்வரை. அப்படி பழக்கி வைத்திருக்கிறீர்கள், என்ன செய்ய?
தமிழில் திறம்படைத்தத் தங்கள் கருத்துகள் எந்த ஒரு எழுத்தாளனுக்குமே ஓர் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிடுவது வியப்பில்லை.
வேலைச்சுமைக்கிடையே நேரம் ஒதுக்கி வாசித்துப் பாராட்டியமைக்கு மிக்க நன்றி.
அழகு கவிதை காக்கா !! பலமுறை படித்தும், மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுகின்றன ஒவ்வொரு பத்தியும் ! மட்டுப்படுத்த முடியா மனமகிழ்வில் வெளிப்பாடாய் அதே நடையில் இதுவும் வந்து விழுகிறது !
தன்னன தானன தனனனா
தானன தன்னன தானனா.
என்னவோர் அற்புத நடையழகு!
பண்ணொன் றமைத்து பாடிடலாம் !
அன்புடன்,
ஷஃபாத்
தம்பி ஷஃபாத்,
ஜஸாக்கல்லாஹ் க்ஹைர்!
//என்னவோர் அற்புத நடையழகு!
பண்ணொன் றமைத்து பாடிடலாம் !//
பாடிட வேண்டியதுதானே?
(உங்கள் கருத்தைத் தம்பி ஜாஃபருக்கு முன்னெடுத்து அனுப்பி விடுகிறேன்)
Post a Comment