Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மற்றும் - 8 8

ZAKIR HUSSAIN | January 20, 2015 | , , ,

மருத்துவம் இப்போது பெரும்பான்மையான மூட நம்பிக்கைகளை ஒழித்து விட்டது. இருப்பினும் ஹஜ்ஜுக்கு போய் விட்டு வந்த பிறகும் அட்டூழியம் செய்யும் ஆட்கள் மாதிரி சிலர் கொஞ்சம் உடம்பு தன் வசத்துக்கு வந்த பிறகு செய்யும் அலப்பரைகளை கீழ்க்கண்டவாறு பட்டியலிடலாம்.

சில விசயங்கள் நானே பார்த்தது, சில விசயங்கள் எனக்கு தெரிந்த மருத்துவர்கள் / மருத்துவக்கல்லூரி பேராசிரியர்கள் என்னிடம் சொன்னது. [அது எப்படி மருத்துவத்துறை பழக்கமானது என்றால்... அது தொழிலும் / தொழில் சார்ந்த துறையும்... ஏறக்குறைய குறிஞ்சி / நெய்தல் / பாலை மாதிரி]

ஆரம்ப காலங்களில் டயாபெட்டிக் பற்றி அறிவு இல்லாததால் மயக்கம் போட்டவர்களை [ஹைப்போ] 'முனி அடிச்சிடுச்சிப்பா ' என்று எந்த விதமான சிகிச்சையும் இல்லாமல் படுக்க வைத்து விசிறி வீசி... வருபவர்கள் எல்லாம் அல்வாவும் , சீனி வழிந்த பலகாரமும் வாங்கி வந்து அந்த பேசன்ட்டை கவுக்க "உதவி' யிருக்கிறார்கள்.

பென்சின்லின் வந்த சமயத்தில் அதிகம் 'இயக்க வெறி' இல்லாததால் அதை அப்படியே ஏற்றுக்கொண்டதால் நிறைய பேசன்ட் பிழைத்திருக்கிறார்கள். யாராவது ஒரு அறிவு ஜீவி ' அது யூதன் கண்டுபிடித்தது என்று கொழுத்தி போட்டிருந்தால் பல முஸ்லீம் நாடுகளில் மக்கள் தொகை பெறுவாதி குறைந்திருக்கும்.

பொதுவாக மருத்துவ மாணவர்கள் 'எலக்டிவ் போஸ்டிங்" கில் ஏதாவது மருத்துவமனையில் பணியாற்ற வேண்டும். அப்போது ஒருமுறை எமர்ஜென்சியில் ஒருவன் வந்து என்னை உடனே பார்த்தாக வேண்டும் இல்லாவிட்டால் உங்களை சும்மா விட மாட்டேன். என்று எகத்தாளம் பேசியிருக்கிறான். அவனுக்கு வயது இருபது இருக்கும் அப்போது. பொதுவாக அநியாயத்துக்கு எகத்தாளம் பேசுபவர்கள், பெரும்பாலும் வெளியில் அதிகம் செருப்படி படுவது சகஜம். மற்ற மருத்துவ மாணவர்கள் அந்த பந்தா பார்ட்டியை பார்த்து பேசன்ட் மெடிக்கல் ஹிஸ்டரி எடுப்பதற்கு பயந்து என் மகனிடம் சொல்ல என் மகன் கேட்ட் முதல் கேள்வி [மெடிக்கல் சம்பந்தம் இல்லாமல் இருந்தாலும்] “இந்த மாதிரி காயம் வர்ர அளவுக்கு இன்னொருத்தன் உன்னை அடிப்பதற்கு நீ என்ன செஞ்சே?' என்பதுதான்.

"இது கீழே விழுந்ததாலெ அடி பட்டது. என்னை யாரும் அடிக்க முடியாது. நான் யார் தெரியுமா.. எங்க ஏரியாவிலெ என் பேர் சொன்னாலே தெரியும்...நான் அவ்வளவு டெர்ரர் பார்ட்டி" என அவன் பிதற்ற...

"போடா வெண்ணெ.... இந்த பந்தாவெல்லாம் இந்த எமர்ஜென்சி டிப்பார்ட்மென்ட்லெ வந்து பீத்துனெ... அப்புறம் வாசல்லெதான் போலீஸ் பீட் இருக்கிறது. நான் இப்போ கூப்பிட்டேன் அவனுக வந்து ஒன்னெ அள்ளிட்டு போனா... நேரா சங்குதான்... நீயே முடிவு பன்னு' என என் மகன் சொல்ல... ' சாரி டாக்டர்... இது சண்டை போட்டதாலெ வந்த காயம் தான். " என ஒத்துக் கொண்டான்.

பொதுவாக ஆம்புலென்ஸ் / டாக்டர்கள் / மற்றும் பாராமெடிக்கலுக்கு யாரும் தடையாக இருந்து  இங்கு போலீஸில் சிக்கினால், சிக்கியவனுக்கு நிச்சயம் லைஃப் சப்போர்ட் தேவைப்படும் அளவுக்கு 'கவனிப்பு" இருக்கும் [போலீசில்].


சரி ஏன் அவனை அப்படி கண்டித்தாய் என்று நான் கேட்டேன்...'பிறகென்ன நான் வேலை பார்த்த அந்த 3 மாத போஸ்டிங்கில் குறைந்தது 8 தடவை வந்திருப்பான் "கீழே விழுந்திட்டேன்' என்று -என் மகன் சொன்னான்.

சிலர் அனாட்டமி தெரியாமல் பல சமயங்களில் தானாகவே தனக்கு ஏதோ ஆகிவிட்டது என்று புலம்பும் அல்லது தூக்கம் இல்லாமல் அவஸ்தை படுவது என்பது ரொம்ப சகஜம். அதிலும் சிலர் இன்டர்நெட்டை பார்த்து அதில் உள்ள விசயங்களை வைத்துக் கொண்டு  தானாகவே குழம்புவது இன்னும் அதிகம். இன்னும் சிலர் வாட்ஸப் / ஃபேஸ்புக்கில் மக்களை  பயங்காட்டுவதையே முழுநேரத்தொழிலாக செய்கிறார்கள். மருத்துவ விசயங்களில் உண்மை இருக்கிறதா இல்லையா / கிளினிக்கல் டெஸ்ட் படி நிரூபிக்கப்பட்ட நிவாரணமா என்பதெல்லாம் இவர்களில் கண்ணில் படுவதில்லை...

இடுப்பு எலும்பில் அழுத்தம் இருந்து வலித்ததால் ஒருவர் தனக்கு கிட்னி பிரச்சனை என்று 2 நாள் சரியாக சாப்பிடாமல் கவலைப்பட்டார், எதேச்சையாக 'நீங்கள் ஏன் முகம் வாடி இருக்கீங்க... எதுவும் பிரச்சினையா?' என்று கேட்டவுடன் ...அவர் சொன்ன விவரப்படி அவரது கிட்னி அவரது இடுப்பு எலும்புக்கு அருகில் இருப்பது போலவே சொன்னார்...

அதற்கு நான் சொன்ன பதில் ' உங்களுக்கு மட்டும் எப்படி ஆண்டவன் கிட்னியை பெரிய வாழைப்பழம் சைசுக்கு படைத்தான்" என்றவுடன் 'லேசாக அவர் கண்ணில் நம் ஊர் கம்பன் இரவில் செம்படவர்தெரு பக்கம் வளையும்போது வரும் வெளிச்சம் தெரிந்தது.

பிறகு அவருக்கு படம் வரைந்து பாகத்தை குறிக்காமல் உடனே கூகிள் இமேஜில் கிட்னி எங்கே இருக்கிறது என்று சுட்டிக்காட்டிவுடன் அவர் இடுப்பு விலா எலும்பை அழுத்தி கிட்னியை ஏதோ சூப் சட்டியில் இறைச்சி தேடுவது மாதிரி துலாவி துலாவி அழுத்திக் கொண்டிருந்தார். 'விட்டுருங்க...இப்படி விலா எலும்பை அழுத்தினால் ஆர்தோபெடிக் டாக்டரிடம்தான் போய் நீங்கள் நிற்க வேண்டி வரும் என்ற உடன் அவர் ஏதோ சாவியை காணாக்கியது போல் நிலத்தைப் பார்த்தே சோகமாக நடந்தார்.

எனக்கு தெரிந்த ஒரு கேஸ்ட்ரோஎன்ட்டாலஜிஸ்ட் சொன்ன விசயம்....' நோன்பு பெருநாள் முடிந்தவுடன் நான் விடுமுறையில் வெளியே போவதில்லை" ஏன் என கேட்டதற்கு அவர் சொன்ன பதில்தான் ஆச்சர்யம். "பெருநாள் அன்றைக்கே எல்லோரும் வெளுத்துக்கட்டுவதால் குடல் சிரமப்பட்டு நொண்ட ஆரம்பித்தவுடன் என்னைப்போன்ற டாக்டரிடம் தான் வர வேண்டும்."

நம் ஊர் பகுதிகளில் நடக்கும் விருந்துக்கும் தஞ்சாவூரில் இருக்கும் டாக்டர்கள் வாங்கும் சொத்துக்கிரயத்துக்கும் ஏறக்குறைய மனோராவுக்கும் ராஜராஜ சோழனின் கோயிலுக்கும் உள்ள சுரங்கம் மாதிரி ஒரு தொடர்பு இருக்கிறது.

உடம்பு ஒத்துக்கொள்கிறதோ இல்லையோ... "கூப்பிட்டு சாப்பாட்டுக்கு போகலைனா கோவிச்சுக்குவாங்க" என்ற ஒப்பற்ற தத்துவத்தால் ஏதோ கிரைன்டரில் போட்டு அரைப்பது போல் அடிக்கடி விருந்தில் வெளுத்துக் கட்டுகிறார்கள். இதைப்பற்றி முன்பு ஒரு முறை எழுதியிருந்தேன். அது நிறைய பேரால் வாசிக்கப்பட்டது... கடைபிடிக்கப்பட்டதா என்பது எனக்கு தெரியாது.

டி வி ரிமோட்டை எடுத்து தர சின்ன பிள்ளைகளை ஏவுவது, அளவுக்கு அதிகமான கார்போஹைட்ரேட் ..."தேமே"னு வாழ்வது [sedentary life] அளவுக்கு அதிகமான நேரத்துக்கு இரவில் வெட்டியாக விழித்திருப்பது அல்லது டி.வி யில் ஒரு ப்ரோக்ராம் விடாமல் பார்த்தே விடுவது என்று கங்கணம் கட்டி டெய்லி அதே "பொழப்பா" இருப்பது எல்லாம் தொடர்ந்து உங்களை நோய்க்கு இழுத்துச் செல்லும் காரணிகள்.

இதைப் பற்றியெல்லாம் ரோட்டில் மருந்து விற்பவனை விட அதிகம் தெரிந்து இருக்கும்... கடை பிடிக்காத வரை மருந்து கடைகளுக்குத்தான் லாபம். இப்போது இந்தியாவை ஒரு புதிய நோய் தாக்க ஆரம்பித்து விட்டது. இந்த ஜூசை குடித்தால் உனக்கு ப்ரஸ்ஸர் குறையும், சுகர் குறையும். இந்த டாக்டரின் மருந்தில் எய்ட்ஸ் குணமாகும். அல்லது இந்த மருந்தில் கேன்சர் குணமாகும் [ உடனே அடையாறு கேன்சர் இன்ஸ்டிட்யூட் நம்பர் உடன்] இப்படி வாட்ஸப் / இமெயில் என்று வந்து கொண்டே இருக்கிறது.

இவர்கள் சொல்வது உண்மையென்றால் நீங்களும் நானும் இவ்வளவு கஷ்டப்பட்டு உழைக்க வேண்டியதில்லை. அவர்கள் சொல்லும் மருந்தை ஒரு 10 பெரிய பெட்டி அளவுக்கு வாங்கிக் கொண்டு ஒரு காரில் வைத்துக் கொண்டு ஒரு மாவட்டத்தை சுற்றி விற்றாலே நாம் பெரும் பணக்காரர்கள் ஆகிவிடலாம். எல்லாவற்றிலும் மிகைப்படுத்தப்படுதலே தமிழனின் இப்போதைய நோய்.

நானும் இந்த கேன்சர் மருந்து பற்றி விசாரிக்க அடையாறுக்கு அழைத்துக் கேட்டேன். அங்கு உள்ள ஃபார்மசியில் சொன்ன விசயம் ' அப்படி ஒன்று இல்லை. நீங்கள் சொன்ன மருந்து கேன்சருக்கு உள்ள மருந்துதான் [ஒரு டைப் கேன்சருக்கு மட்டும் எழுதப்படும் பல மருந்துகளில் அதுவும் ஒன்று - ] அந்த மருந்து மட்டும் 100% நிவாரணம் தராது. மற்றும் அது டாக்டர் ப்ரஸ்க்ரிப்சன் இல்லாமல் வாங்க முடியாது.

Forward  செய்யு முன் யோசித்தால் நன்று.

ZAKIR HUSSAIN

8 Responses So Far:

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

ஜாகிர்,

'வைத்தியம் பார்த்துக் கொண்டால் எல்லாம் சரியாகிவிடும்' என்கிற மனப்பான்மைதான் நோயை வரவழைத்துக்கொள்ள செய்யும் முதல் ஏற்பாடு.

சிலர் தம் உடல் உபாதைகளை பெரிதுபடுத்திக்கொண்டு அவதிப் படுவதையும்வேறு சிலர் தமக்கு ஏற்பட்ட நோயைப் பற்றி பொடுபோக்குத்தனமாக இருந்துவிடுவதையும் சுவாரஸ்யமாக அலசியுள்ளாய்.

மேலும் மேலும் 'மற்றும்'வேண்டும்.

Ebrahim Ansari said...

சிறந்த அசத்தலான அலசல்.

இப்போ ஊரில் நாட்டு மருந்து சீசன். உபயம் அனைத்து டிவி சானல்களும்தான். ஒரு தாடி வைத்த பெரியவர் ஏதாவது பச்சிலை பனங்கல்கண்டு தேன் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்.
அதே போல் டயாக்யூர் , பச்சைத் தேயிலை, மல்லிகைப்பூ லேகியம் ஆகியவைகளையும் தாங்கள் வாங்கி அழுதது போதாது என்று மற்ற வர்களுக்கும் சிபாரிசு செய்வதுதான் தாங்க இயலவில்லை.

அதே போல் உடல்நலமில்லாதவர்களை விசாரிக்க வருபவர்கள் தரும் மெடிகல் டிப்ஸ் தாங்க முடியவில்லை.

ஒரு அதிரைவாசி அவர் பாணியில் சொன்னார் நம்ம ஊரில் துப்பட்டி போட்ட எல்லாரும் டாக்டர்கள் . தஞ்சாவூரில் உள்ள அத்தனை டாகடர்களின் பெயர்களும் அவர்களின் வேலை நேரங்களும் பலருக்கு அத்துப்படி.

sabeer.abushahruk said...

//சிலர் இன்டர்நெட்டை பார்த்து அதில் உள்ள விசயங்களை வைத்துக் கொண்டு தானாகவே குழம்புவது இன்னும் அதிகம்.//

ஹிஹி நானுந்தேன் அப்படி. நெட்ல பார்த்து குழம்புவேன், அல்லது உன்னிடம் ஃபோனில் கேட்டு.

என்னைப்போல்தான் பலர் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும் ஜாஹிர் காக்கா,

சூப்பர் காக்கா,

////பென்சின்லின் வந்த சமயத்தில் அதிகம் 'இயக்க வெறி' இல்லாததால் அதை அப்படியே ஏற்றுக்கொண்டதால் நிறைய பேசன்ட் பிழைத்திருக்கிறார்கள்.//

ஹி ஹி நிறைய பேரின் மைண்ட் வாய்ஸ் இது..

//ஆரம்ப காலங்களில் டயாபெட்டிக் பற்றி அறிவு இல்லாததால் மயக்கம் போட்டவர்களை [ஹைப்போ] 'முனி அடிச்சிடுச்சிப்பா ' என்று எந்த விதமான சிகிச்சையும் இல்லாமல் படுக்க வைத்து விசிறி வீசி... வருபவர்கள் எல்லாம் அல்வாவும் , சீனி வழிந்த பலகாரமும் வாங்கி வந்து அந்த பேசன்ட்டை கவுக்க "உதவி' யிருக்கிறார்கள்.//

பேய் விரட்டுகிறவன் என்று பித்தலாட்டம் செய்பவனின் வருமானத்தையும் உயர்த்த உதவி இருக்கிறார்கள்..

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//அதிலும் சிலர் இன்டர்நெட்டை பார்த்து அதில் உள்ள விசயங்களை வைத்துக் கொண்டு தானாகவே குழம்புவது இன்னும் அதிகம். இன்னும் சிலர் வாட்ஸப் / ஃபேஸ்புக்கில் மக்களை பயங்காட்டுவதையே முழுநேரத்தொழிலாக செய்கிறார்கள்.//

இப்போ குடும்பத்துக்கு குடும்பம் வாட்ஸப்ல குரூப் வச்சிருக்காங்க காக்கா... புளியமரத்தடி, கடைத்தெரு முக்கம், செக்கடிமேடு, மீன் மார்கெட், ஜாவியா என்று குரூப் ஆரம்பிச்சாலும் ஆச்சரியமில்லை..

என்ன அடிக்க ஜய்ஸா அப்பா கம்பெடுத்து வரப்போகிறார்கள்...

sheikdawoodmohamedfarook said...

தஞ்சாவூர்ஹார்ட்டாக்டரைபாக்கஒருதுப்பட்டிபோட்டஅம்மாபோனிச்சு .டாக்டர்கேட்டார்''ஏம்மாரெண்டுமாசமாஆளையேகாணோம்?' 'அம்மாசொன்னுச்சு''எங்கூருலேரெண்டுமாசமாகல்யாணவிருந்தே நடக்கலேயே!''

Yasir said...

காக்கா கடினமான ,அவசியமான பல விசயங்களை இப்படி ரசிக்க கூடிய நகைச்சுவைடன் சொல்வது உங்களின் தனித்தன்மை.....அந்த இரயில் வெளிச்சமும் / சூப்பில் இறைச்சி தேடுவதும், ஹாஹாஹா சூப்பர் உவமானங்கள்

Shameed said...

//பென்சின்லின் வந்த சமயத்தில் அதிகம் 'இயக்க வெறி' இல்லாததால் அதை அப்படியே ஏற்றுக்கொண்டதால் நிறைய பேசன்ட் பிழைத்திருக்கிறார்கள். யாராவது ஒரு அறிவு ஜீவி ' அது யூதன் கண்டுபிடித்தது என்று கொழுத்தி போட்டிருந்தால் பல முஸ்லீம் நாடுகளில் மக்கள் தொகை பெறுவாதி குறைந்திருக்கும்.//


வாழைப்பழத்தில் இல்லை இல்லை பலாப்பழத்தில் ஊசி ஏற்றியது போல் உள்ளது

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு