Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அசாதாரணமான குறிக்கோள்... 2

அதிரைநிருபர் பதிப்பகம் | January 16, 2015 | ,

:::: தொடர் - 6 ::::

நபித்துவம் கிடைக்கப்பெற்ற தொடக்க நேரம் அது. ஏறத்தாழ, அந்தத் தூது செய்தியைத் தனியராக நபியவர்கள் மக்கத்து மக்களிடம் எடுத்தோதிக் கொண்டிருந்த நாள்கள் அவை. அது பற்றி அறிவிப்பாளர் ஒருவர் கூறுகின்றார்:

“அன்றொரு நாள், நான் மக்காவை அடுத்த ‘மினா’வின் ஒரு மலை முகட்டில் நின்று கொண்டிருந்தேன். மினா ஹஜ்ஜுப் பயணிகளின் கூடாரங்களால் நிரம்பியிருந்தது. நான் உற்று நோக்கினேன். அந்த கோடைகால நடுப்பகலின் ததிக்கும் சூட்டில் ஒவ்வொரு கூடாரமாக நுழைந்து, ஒருவர் வெளிவந்து கொண்டிருந்தார்! வணங்கத் தகுந்த இறைவன் அல்லாஹ் ஒருவன்தான் என்றும், கற்சிலைகள் வணங்கத் தகுதியற்றவை என்றும் செய்தி அறிவித்துக் கொண்டே வந்தார். சிலர் செவிமடுத்தனர்; ஆனால், ஏற்றுக் கொள்ளவில்லை. பலர் எதிர்த்து, அவரை விரட்டினார்கள்! இன்னும் சிலர் அவரின் கூற்றை ஏற்காதது மட்டுமன்றி, எதிர்ப்புக்காட்டி அடிக்கவும் செய்தனர்! அந்த மனிதர் கூறியதை ஒருவர்கூட ஏற்றதாகத் தெரியவில்லை.

“அங்கே அவருக்கென்று சிறிய கூடாரமும் இருந்தது. அந்தக் கூடாரத்தின் அருகில் இருந்த பாறையில் சாய்ந்து கொண்டு சற்றே இளைப்பாறினார், பகலில் பாறையின் சூட்டையும் பொருட்படுத்தாமல், அவரின் மகள் அந்தக் கூடாரத்திலிருந்து வெளிப்பட்டு, தந்தையின்  முகத்தைக் கழுவிவிட்டுக் குடிக்கவும் சிறிது தண்ணீர் புகட்டினார். தன் தந்தையின் நிலையைக் கண்டு கவலையுற்று, ‘என்னரும் தந்தையே! என்ன செய்துவிட்டார்கள் உங்களை?!’ என்று அதரங்கள் துடிக்கக் கேட்டார்.

“அதற்கு அந்த மனிதர், ‘கவலை கொள்ளாதே மகளே! ஒரு நாள் வரும். அப்போது, இந்த எனது செய்தியானது, இப்பூவுலகின் நிலையற்ற மற்றும் நிலையான வசிப்பிடங்கள் அனைத்திற்குள்ளும் சென்றடையும்’ என்று கூறினார்.”

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நற்செய்தி வேறொன்றும் இல்லாமல் இது மட்டும் இருந்தாலே போதும். அன்னாரின் தூதுத்துவ உண்மையை நிலைநாட்ட. ஒரு செய்தி மக்களால் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கான எவ்வித அறிகுறியும் இல்லாத நிலையில், இறைத்தூதர் ஒருவரைத் தவிர வேறு எவரால் இப்படி உறுதியாக உரைக்க முடியும் ? அதற்கான மன வலிமை, உறுதி , பொறுமை ஆகியவை இருந்தால் அல்லவா அவரால் இந்தத் தூதுச் செய்தியை முன்னெடுத்துச் செல்ல முடியும் ?

தாம் ஏற்றெடுத்து மேற்கொண்ட இறைச் செய்தியை, அதனால் ஏற்பட்ட ஏமாற்றத்திற்கு மேல் ஏமாற்றத்திற்குப் பின்னாலும், இறைத்தூதர் ஒருவரால் அன்றி எவராலும் இப்படி உறுதியாக கூற முடியும்?

மக்களின் மறுப்புக்கு மேல் மறுப்பைச் சந்தித்த பின்னரும், தம் தூதுச் செய்தி இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் ஏற்றுக் கொள்ளப்பட்டே தீரும் என்ற மன உறுதி, நபி(ஸல்) ஒருவரைத் தவிர வேறு எவருக்கு வரும்?

சிலருக்குப் புதிராக இருக்கலாம். ‘விரைவில் ஒரு நாள் வரும். அப்போது இப்பூவுலகின் மேலிருக்கும் ஒவ்வொரு வீட்டினுள்ளும். இந்த இறைச் செய்தி சென்றடையும்’ என்று உறுதியாகத் தம் மக்களிடம் கூறிய அந்த நேரத்தில், செவிமடுக்க யாரும் இருக்கவில்லை; சேர்ந்து போகத் துணையுமில்லை. இந்தகைய சூழலில், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்ததால், அன்றோ அவர்களால் இவ்வாறு கூற முடிந்தது ? எதிரிகளிடமிருந்து தன்னையே காத்துக் கொள்ளக்கூட முடியாத நிலையில் இருந்த மனித, உலகைக் காரிருளிலிருந்து காப்பாற்ற எவ்வாறு முடியும் என்று வியந்தால், அதற்கு மறுமொழி, அவரிடமிருந்த அசைக்க முடியா இறைநம்பிக்கைதான்! ஒப்பற்ற குறிக்கோளில் அசைக்க முடியாத உறுதி வைத்தால்தான் உயர்ந்த எதிர்பார்ப்பைக் கொள்ள முடியும்.

எவெரெஸ்ட் சிகரத்தை எட்டிப் பிடித்துவிட வேண்டும் எனும் உறுதியோடு அதன் அடிவாரத்தில் வந்து நிற்கும் மலையேறிக்கு அங்கே வைத்து யாரும் பயிற்சி கொடுக்க வேண்டிய தேவையில்லைதானே? அவனுக்குரிய பயிற்சி முன்பே கிடைத்திருக்கும். அதுபோன்று, இறைத்தூதருக்கு இறைவன் கொடுத்த பயிற்சிதான், சாத்தியமில்லாததாக நாம் கருதும் செயற்கரிய செயலைச் செய்ய வைத்தது.

ஒரு குறிக்கோளை அடைவதற்காக நாம் எடுக்கும் முயற்சியில் ஏற்படும் தொல்லைகளுக்கும் உரிய அளவுக்குத்தான், அதனால் கிடைக்கும் வெற்றியும் மகிழ்ச்சியும் இருக்கும் நம்பிக்கையில் மாற்றம் செய்யும் புரட்சிதான் மிகப்பெரிய புரட்சியாகும். காலம் காலமாகக் கொண்டுள்ள நம்பிக்கையால் செயல்படும் மனிதனை மாற்றுவது என்பது செயற்கரிய செயல்தான். இதுபோன்று ஒரு மாபெரும் சமுதாயத்தை மாற்றும் புரட்சியை இறையருள் பெற்ற தூதர் ஒருவரால்தான் நிறைவாகச் செய்ய முடியும். இதுதான் அசாதரணம் என்பது.

அந்த அசாதாரணக் குற்குக்கோளுடன் தான் அண்ணல் நபியவர்கள், மடமையில் மூழ்கியிருந்த மனிதர்கள் நிரம்பிய ஒரு சமுதாயத்தின் முன்பு எதிர்த்து நின்றார்கள். தமக்கு மிகப் பெரிய எதிரியாக இருந்த அபூஜஹ்லின் வீட்டுக் கதவைத் தட்டியபோதும், தாம் மேற்கொண்ட தளராத குறிக்கோள்கள்தான் தம்மை இயக்கியதைக் கண்டார்கள். எப்படியும் அவன் சத்தியத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவர்களிடம் இருந்தது. தன்னால் முடிந்த மிகப்பெரிய தொல்லைகளையும் துன்பங்களையும் கொடுத்த அந்த எதிரிக்கும் இறைத் தண்டனையிலிருந்து பாதுகாப்புக் கிடைக்க வேண்டும் என்றல்லவா நபியவர்கள் ஆசைப்பட்டார்கள்? இந்த செயற்கரிய செயலை, இறைத்தூதர் ஒருவரால் அன்றி வேறு யாரால் செய்ய முடியும்.

இன்னொன்று. இந்த அசாதரணக் குறிக்கோளில் முயற்சி செய்வதே ஒரு பயிற்சிதான். இதுபோன்ற ஒரு முயற்சியில் ஈடுபடுவது பற்றி அரபுகள் கூறும் முதுமொழி ஒன்று என் நினைவுக்கு வருகின்றது: “அந்தப் பணி உன் முதுகை ஒடித்து விட்டால், அதன் பொருள், அது உன்னை வலுப்படுத்திவிட்டது என்பதே.” இதுபோன்றுதான், ஓர் அசாதராணக் குறிக்கோளுக்காப் பாடுபடுவதும். அதனால் அவர் உறுதியையும் வலிமையையும் பெறுவது திண்ணம். அல்லாஹ்வின் தூதரும் அவர்களைப் பின்பற்றிய தொடக்க கால முஸ்லிகளும் இதே வலிமையத்தான் தங்கள் உழைப்பின் மூலம் பெற்றார்கள். அல்லாஹ்வின் அன்பைப் பெறுவதற்காகத்தான் நபியவர்களும் நல்லறத் தோழர்களும் தம்மையே அபர்ணித்தார்கள். எந்தத் தயக்கமும் இன்றி அவர்களால் இத்தகைய அர்ப்பணிப்புகளைச் செய்ய முடிந்தது!

இப்போது புரிகின்றதா, தலைமைத்துவத்தின் மூலம் சாதனை படைப்பதற்கு, அசாதாரணக் குறிக்கோளும் அர்ப்பணிப்புகளும் இன்றியமையாதவை என்பது?
தொடரும்…
அதிரை அஹ்மது

2 Responses So Far:

sabeer.abushahruk said...

//தாம் ஏற்றெடுத்து மேற்கொண்ட இறைச் செய்தியை, அதனால் ஏற்பட்ட ஏமாற்றத்திற்கு மேல் ஏமாற்றத்திற்குப் பின்னாலும், இறைத்தூதர் ஒருவரால் அன்றி எவராலும் இப்படி உறுதியாக கூற முடியும்?//

Allahu Akbar !

இப்னு அப்துல் ரஜாக் said...

அல்லாஹ் தூய்மையானவன்

அல்லாஹ்வின் தூதர் உண்மையானவர்கள்

மாஷா அல்லாஹ்

அருமையான கட்டுரை தொடர்

நன்றி சாச்சா

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு