Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

திரைகடலோடி திரவியம் தேடு...??? - காணொளி பாடல்... 14

அதிரைநிருபர் பதிப்பகம் | August 19, 2016 | , , ,



காசு பணங் கேட்கல
கைக் கடியாரங் கேட்கல
காத ராக்கா பொண்டாட்டியாட்டம்
கைக் கொலுசுங் கேட்கல

பட் டெடுத்துக் கேட்கல
பகட்டு வாழ்வு கேட்கல
பக்கத்து வீட்டு பாத்துமாபி
படுக்கும் மெத்த கேட்கல

கட்டி முத்தங் கேட்கல
கட்டில் சொகங் கேட்கல
கட்டிவச்ச மல்லிச் சரம்
கசங்கி உதிர கேட்கல

வூடு வாசல் கேட்கல
ஊறும் கெணறு கேட்கல
வூட்டு நடு உத்தரத்தில்
ஊஞ்சல் கட்டிக் கேட்கல

தோட்டந் தொரவு கேட்கல
தொங்கட்டானுங் கேட்கல
தோடு நடுவில் பதித்துவைக்க
தோதா வைரம் கேட்கல

காடு கழனி கேட்கல
காரு வாங்கி கேட்கல
காது ரெண்டும் ஜொலிஜொலிக்க
கனத்த நகை கேட்கல்

வாய்க்கா வரப்பு கேட்கல
வாத்து கோழி கேட்கல
வாய்க்கு ருசியா வக்கனையா
வறுத்த கறி கேட்கல

கேட்ப தெல்லாம் சொற்பமய்யா
கிடைத்து விட்டால் சொர்க்கமய்யா
கஞ்சி கூழே போதுமய்யா
கூடிக் குடிச்சா வாழ்க்கையய்யா

கண் முழிக்கும் காலையெலாம்
கனக்கும் நெஞ்ச லேசாக்க
கண் நெறைஞ்ச கணவர் உமை
காணுஞ் சொகம் கேட்கிறேன்

கத்திமுனை இளமை தனை
கடக்க துணை கேட்கிறேன்
கட்டி அவிழ்க்கும் சீலையோடு
கண்டு ரசிக்க கேட்கிறேன்

சேர்ந்து உண்ணக் கேட்கிறேன்
சிரித்துப் பேசக் கேட்கிறேன்
சாவு வந்து சேரும்வரை
சகல சுபிட்சம் கேட்கிறேன்

மாலை வெயில் சாயும்காலம்
மடியில் சாய கேட்கிறேன்
மறுபடியும் விடியும் வரை
முடியா காதல் கேட்கிறேன்

வீட்டுக்குள்ளே வெறுமையிலே
வீழ்ந்து சாக விரும்பல
வாழத்தானே வாழ்க்கைப் பட்டேன்
வாழ வைக்கக் கேட்கிறேன்

கிடைக்கும் செல்வம் போதுமய்யா
கண்ணீர் விற்க வேண்டாமய்யா
கணவன் மனைவி பொழப்புயிது
காசு தீர்க்காக் கணக்குயிது

சபீர் அஹ்மது அபுஷாரூக்
குரல் : ஜஃபருல்லாஹ்



14 Responses So Far:

Jafarullah Ismail said...

கப்பலுக்கு போன மச்சான் பாடலை நினைவூட்டுகிறது.
அருமையான வரிகள்.
அற்புதமான குரல்
பாராட்டுக்கள் சகோதரர்களே...

Jafarullah Ismail said...

கப்பலுக்கு போன மச்சான் பாடலை நினைவூட்டுகிறது.
அருமையான வரிகள்.
அற்புதமான குரல்
பாராட்டுக்கள் சகோதரர்களே...

crown said...
This comment has been removed by the author.
crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும்.வாசிக்கும் போதே உள்ளம் தடுமாறும் படி வரிகளின் வீரியம் அதிகம். அப்பப்பா அல்லாஹ்வின் அருள் நிழல் உங்க எழுத்து மேல விழும் படி செய்திருக்கிறான்! அருமை என சும்மா வார்தையில் சொல்லி நகர முடியாத ஆசைகள் ,சோகத்தின் கணத்தை கானமாக்கி இருக்கீங்க! பாடியபின் இது இந்த கால கப்பலுக்கு போன மச்சான்! அதையும் தாண்டி சக்கரை பந்தலில் தேன் மழை பாடகரின் குரல் வசிகரம் !பிரமிப்பு!வாழ்த்துக்கள்!

அதிரை.மெய்சா said...

திரைகடலான உன் எழுத்து ஜஃபருல்லாஹ்வின் இனிய குரலில் திரவியமாய் பெருகி ஓங்கி ஒலிக்கிறது. அருமை.

crown said...

காசு பணங் கேட்கல
கைக் கடியாரங் கேட்கல
காத ராக்கா பொண்டாட்டியாட்டம்
கைக் கொலுசுங் கேட்கல

பட் டெடுத்துக் கேட்கல
பகட்டு வாழ்வு கேட்கல
பக்கத்து வீட்டு பாத்துமாபி
படுக்கும் மெத்த கேட்கல
----------------------------
தேவையான ஒப்பிடல் இருந்தாலும் அதுபோல் பவுசானா ஏதும் கேட்கல!பொறாமையாய் ஏதும் கேட்கல,போட்டியா ஏதும் கேட்கல!

crown said...

கட்டி முத்தங் கேட்கல
கட்டில் சொகங் கேட்கல
கட்டிவச்ச மல்லிச் சரம்
கசங்கி உதிர கேட்கல
--------------------------
இல்லறம் சொல்லும் இன்பம் ஏதும் கேட்கல!வாழ்கையை புதுப்பிக்கும் அந்த சுகம் கேட்கல!திருமணபந்ததின் ஆதார சுருதி கேட்கல!

crown said...

வூடு வாசல் கேட்கல
ஊறும் கெணறு கேட்கல
வூட்டு நடு உத்தரத்தில்
ஊஞ்சல் கட்டிக் கேட்கல

தோட்டந் தொரவு கேட்கல
தொங்கட்டானுங் கேட்கல
தோடு நடுவில் பதித்துவைக்க
தோதா வைரம் கேட்கல

காடு கழனி கேட்கல
காரு வாங்கி கேட்கல
காது ரெண்டும் ஜொலிஜொலிக்க
கனத்த நகை கேட்கல்

வாய்க்கா வரப்பு கேட்கல
வாத்து கோழி கேட்கல
வாய்க்கு ருசியா வக்கனையா
வறுத்த கறி கேட்கல
---------------------------------
வருமையை போக்கும் வசதியை கேட்கல!வாய்க்கு சுவையாய் விருந்துண்ண கேட்கல!பகட்டாய் வாழ திகட்டும்படி பணம் காசு கேட்கல!

crown said...

கேட்ப தெல்லாம்?
ஒன்றாய் வாழ,ஒன்றி வாழ வாழ்கைதான் கேட்குறா!கண்ணீரை துடைத்து துடைத்து அந்த முந்தானையும் இத்து போச்சு!கட்டியவன் இருக்கும் போதே ,உறவுகள் முறிக்காமலே இத்தாவில் இருக்கும் நிலைபோல் ஆச்சு!

crown said...

இந்த போராட்டம் மாறட்டும் வாழ்வில் வசந்தம் வந்து வீசட்டும்!வளரும் போதே வாப்பா என குழந்தை தொட்டு அந்த ஸ்பரிசத்துடனே பாசமாய் வளரட்டும் ஆமீன்!

Ebrahim Ansari said...

கவிதை இனிப்பு. குரல் இனிமை.
ஆனால் ட்யூன் இதற்கு வேறு போடவேண்டும். அது Folk ஸ்டைலில் இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும்.

ஆயினும் பாராட்டுக்கள்.

Unknown said...

கருத்திற்கு நன்றி...

// இதற்கு வேறு போடவேண்டும். அது Folk ஸ்டைலில் இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும். //

இதை அப்படி பாடத்தான் நினைத்தேன்.. (பாட்டுக்கு மெட்டமைப்பது கொஞ்சம் சிரமம்) ஆனால் இதில் கொஞ்சம் சோகம் இருப்பதால் ராகத்தை மாற்றிப் பாடினேன் ..

sabeer.abushahruk said...

கருத்திட்ட சகோதரர்களுக்கு மிக்க நன்றி.

க்ரவ்னின் கருத்து ஆழமானது. பாட்டுக்கு பதக்கம் கிடைத்ததுபோல் மகிழ்ச்சி.

சந்தங்கள் ஜாஃபரை பாடாய்ப் படுத்தினாலும் இதைப் பாட்டாய்ப் பாடி சிலிர்க்க வைத்ததும் மகிழ்ச்சி.

நன்றி.

N. Fath huddeen said...

பாடல் மிக அருமை!
அதற்கேற்றாற் போல் குரலும் இனிமை.
மாஷா அல்லாஹ்!

இரண்டு விஷயம்:

1. பாடலின் முதல் அடி: "கடல் கடந்து பொருளீட்ட..." வும் சேர்த்து பிரசுரித்து இருந்தால் மிக நன்றாக இருக்கும்.

2. தலைப்பு: //திரைகடலோடி திரவியம் தேடு...???// சற்று மாற்றி போட்டால் இன்னும் மெருகூட்டி இருக்கும். காரணம் "...திரவியம் தேடு..." என்ற கட்டளை வார்த்தை இடம் பெற்றிருப்பது "போய் தேடு" என்பது போல் இருக்கிறது. ஆனால், பாடலோ கேள்வியும் பதிலுமாக இருக்கிறது.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு