Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

குற்றாலம் 2011 9

அதிரைநிருபர் பதிப்பகம் | August 11, 2011 | ,

குற்றாலம்...

இந்த முறை ஊர் போன போது இங்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. [போன முறை சபீர் ஊரில் இருந்ததால் என் மொத்த ஸ்க்யெடுலையும் அவன் கவனித்துகொள்வதால் ஒரு நல்ல செக்ரட்டரியாய் நடந்து கொள்வான். நான் தான் சம்பளம் ஏதும் தருவதில்லை] தமிழ்நாட்டுக்கு இயற்கை தந்த மிகப்பெரிய சொத்தாக இந்த ஊரை நான் கருதுகிறேன். ஆனாலும் தமிழனின் வழக்கமான கேர்லஸ் புத்தியால் இந்த இயற்கையான அருவிக்கும் அதன் சம்பந்தபட்ட பகுதிக்கும் ஒரு சுற்றுப்புற சூழலின் தாக்கம் ஏற்படும் காரணிகள் அதிகம். இயற்கையான நீர்வீழ்ச்சியில் ஏதோ பச்சை எண்ணெய் தேய்த்து குளிக்கிறார்கள்.




இதுபோன்ற எண்ணைகள் சுற்றுவட்டாரங்களில் கோழி பொரிக்க பயன்படுத்தி மிஞ்சிய எண்ணைகள் என குமுதம் ரிப்போர்ட்டரிலோ, அல்லது ஜூனியர் விகடனிலோ படித்த ஞாபகம். இங்கு அருவியில் குளிக்க வரும் சிலர் வாயில் அடிக்கும் சாராய வாடை சத்தியமாக புத்தகம் படிக்க விட்டிருக்க வாய்ப்பில்லை.



கலப்படமற்ற பாலில் நல்ல டீ ,காப்பி

குற்றாலம் உருப்பட சில யோசனைகள்.


சீசனில் மட்டும் திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி, அடிசனல் கலெக்டர் ஒருவரை நியமித்து [ அவருடைய டெபுடி கலெக்டர் சரியான தேர்வாக இருக்கலாம்] அந்த அடிசனல் கலெக்டருக்கு சிறப்பு அதிகாரம் [ குற்றாலம் , தென்காசி , செங்கோட்டை பகுதிகளுக்கு மட்டும் ] தந்து குற்றாலத்தில் சுத்தம் , போக்குவரத்து , சாலை / வடிகால் பராமரிப்பு , மற்றும் விடுதி [ தங்குவதும் / உண்ணுவதும் ] நெறிப்படுத்துவது , ] அருவிகளுக்கான வசதிகள் மேம்படுத்துதல் , மற்றும் 100 போலீசார்கள் , சுழல்முறையில் கடமையில் ஈடுபடுத்தி மக்களை குப்பை போடாமலும், முறையில்லாமல்பொது இடங்களில் நடந்து கொள்வதை கண்கானித்து, சிறிய அளவிலான தண்டனை / அபராதம் [ குற்றம் செய்தால் ] , முதலில் அறிவிப்பு பலகைகள் இருக்க வேண்டும்.


பொது இடத்தில் இப்படி "உச்சா' போகும் உயர்ந்த மனிதர்!!!

பொதுவாக இந்தியர்கள்களை கட்டுப்படுத்துவது எளிது. தண்டனைப்பயம் அவர்களை நிச்சயம் வழிப்படுத்தும். இல்லாவிட்டால் ஊர் முழுக்க "புளிச் , புளிச்" என வெத்திலை பாக்கு போட்டு துப்பும் அவர்கள் சிங்கப்பூர் வந்ததும் எப்படி நல்ல பிள்ளை ஆகிறார்கள் , சிம்பிள்..."தண்டனை"

பெண்களுக்கும் , ஊனமுற்றோர்களும் பாவப்பட்ட ஜன்மங்களா என்பது போல் கழிப்பிடம் நடந்து போகும் இடங்களில் அவர்களுக்கான எந்த வசதியும் இல்லை.


மாம்பழம் , பலாப்பழம் சீசன் ஆதலால் அநியாயத்துக்கு கொசு, நான் பார்த்த ஒரு காட்சி காரின் பின்னால் ஒரு ஆளின் பெயர் எழுதி அவர் வாங்கிய [ படித்த!!] பட்டம் அவர் ஒரு வக்கீல் என்றது, அதிலிருந்து இறங்கிய அவர் பழங்களை குறங்கு தின்பதுபோல் தின்று விட்டு அப்படியே தனக்கு பக்கத்திலேயே கொட்டினார் . வெள்ளைக்காரன் கொடுத்த சுதந்திரம் தவறாக புரியப்பட்டிருக்கிறது,  இந்தியா முழுதும்….

திருநெல்வேலி இருட்டுகடை அல்வா [ ஊர் திரும்பும்போது ..]



- ZAKIR HUSSAIN

9 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//சிம்பிள்..."தண்டனை" // - மிகச்சரியே !

அசத்தல் காக்கா: நிழற்படங்கள் மட்டுமா அழகு உங்களின் வர்ணனையும் ஆட்சி அதிகாரம் வேண்டும்னும் கேட்கும் எமக்கு கொடுக்கு மாவட்ட ஆட்சியாளர்களின் ஆளுமை என்றால் எப்படியிருக்கனும்னு பாடம் எடுத்திருக்கிறீர்கள் !

உங்களின் ஒவ்வொரு ரசனைக்கு ஒரு தனித்தன்மையான வாசனை ! அதனை சுவாசிப்பவர்களுக்குத்தான் தெரியும் அதன் அருமை !

எங்கே கவிக் காக்காவில் தொடங்கி கவித் தம்பிகள் வரை இனிமேல் கியூவில் காத்திருப்போமே ! :)

sabeer.abushahruk said...

குற்றாலத்திற்கு ஆஃப் சீஸனில் செல்லும் ஒரு சாபம் கிடைத்தபோது கண்டவை:

சற்று நேரத்தில்
நின்றுவிடும் நிலையில்
நீர் வீழ்ந்துகொண்டிருந்தது

எண்ணெய் தேய்த்துக் குளித்தவர்
என்னைத் தேய்த்ததால்
எண்ணெய் குளியல்
எனக்கும்

சாரல் இல்லை யென்று
யார் சொன்னது?
சக சுற்றுலாப் பயணியின்
உற்சாகக் கத்தலில்
சாராயச் சாரல்!

சீஸன் இழந்து
பலகீனமாய்ப்
பயணப்பட்டுக்கொண்டிருந்தது
நீர்வீழ்ச்சி!

தம்பி, ஒழுங்காக் குளிக்காம போட்டா புடிச்சிக்கிட்டு நின்டா இப்படித்தான் காச்சல் வரும். உடம்பு தேவலாமா?

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

குற்றால படங்களும் குற்றம் காணா அதிகார வர்க்கங்களுக்கு பாடங்களும் அருமை.

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.
அன்பிற்குரிய ஜாகிர் காக்கா உங்களுடைய குற்றால படங்கள் அருமை மக்கள் குளிக்க கூடிய அருவியை விட.5 .வது 6 .வது படம் குப்பைகளின் அருவி இந்தியாவின் மகிமையை பறைச்சாட்டுகிறது.உங்களுக்கு அவார்டு கொடுத்தே ஆகனும்.

அதிரை fact said...

பிரபல மார்க்க அறிஞர் முப்தி உமர் ஷரீப் காசிமி அவர்கள் சிறப்பு பயான் இங்கே adiraifact.blogspot.com கிளீக் செய்யவும்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

குற்றாலம் சீசனில்லை என்று தெரிந்து விட்டதோ !?

Shameed said...

தவறை யார் வேண்டுமானாலும் சுட்டிக்காட்டிவிடலாம் அதை நிவர்த்தி செய்வது எப்படி என்று சொல்லி கட்டுரையை எழுதும் உங்கள் தனி திறமை உண்மையில் பாராட்டுக்குரியது

நீங்கள் ஊரில் இருந்தது குறைவான நாட்கள்
ஆனால் கிரகித்து கொண்ட செய்திகளோ கூடுதல்

Shameed said...

ஈக்களை இத்தனை கிளியராக யாரும் போட்டோ எடுப்பார்கள் என்று அந்த கேமராவை செய்த கம்பெனிகாரன் கூட நினைத்து பார்த்து இருக்க மாட்டான் !!

ZAKIR HUSSAIN said...

உற்சாக வார்த்தைகளில் என்னை வசியப்படுத்தும் அபு இப்ராஹிம், சாகுல் ,அபு பக்கர், ஜஹபர் சாதிக் அனைவருக்கும் நன்றி.
சாகுல் அந்த ஈக்கள் குற்றாலத்தில் உள்ள ஈத்தொகையில் 0.00001% தான். [ நீங்களும் இந்த அவஸ்தையை அனுபவித்ததால் நான் ஏதும் எழுத தேவையில்லை]

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு