Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இஸ்லாம் - மனித நேயப் பிரகடனம் ! 10

அதிரைநிருபர் பதிப்பகம் | August 07, 2011 | , ,

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் பெயரால்...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

இஸ்லாம் மனித நேயத்தை இம்மண்ணில் நிலை நிறுத்த ஏராளமான வழிமுறைகளைக் கையாண்டிருக்கிறது. அனைத்தையும் படைத்து, பாதுகாத்து, உணவளிக்கின்ற ஓர் இறை அல்லாஹ் இஸ்லாத்தை மனித குலத்திற்கான வாழ்க்கை நெறியாக தேர்ந்தெடுத்துக் கொன்டான். மனித நேயம் இம்மண்ணில் தழைத்தோங்க வேண்டுமெனில் இஸ்லாமே ஒரே தீர்வு. இஸ்லாத்தின் வணக்க வழிபாடுகளில் அநேகமும் மனிதன் தனக்கும், மனித சமூகத்திற்கும், ஏனைய உயிரிணங்களுக்கும் நன்மை செய்வதே! அதில் ஒன்று நம் சிந்தனைக்காக இங்கே.

யார் பிறருக்காக பிரார்த்தனை செய்கிறார்களோ அவர்களுக்காக வானவர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள் - நபி மொழி.

இது மேலோட்டமாகப் பார்க்கும்போது சாதாரனமாகத் தோன்றினாலும் உள்ளார்ந்து பார்த்தால் மிகப் பெரும் தத்துவம் இதில் அடங்கியிருப்பதை உணர முடியும். ஊனமுற்றவர்கள், உடல் பருத்தவர்கள், முதுமையிலும் கடினமான வேலை செய்பவர்கள் என பொதுவாக கஷ்டப்படுவோரை நாம் கண்டாலோ அல்லது வாழ்க்கையில் பல இன்னல்களோடு வாழ்ந்து கொன்டிருப்பவர்களைப் பற்றி செய்தியைக் கேட்டாலோ அவர்கள் மீது பரிதாபப்பட்டு "ஒவ்வொரு நாளும் தங்களுடைய அன்றாட வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய எத்தகைய சிரமங்களை இவர்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்று எண்ணியவர்களாக "எங்களுடைய இறைவனே இவர்களுடைய காரியங்களை இலேசாக்கி வைப்பாயாக! உன்னுடைய புறத்திலிருந்து அவர்களுக்கு உதவியாளர்களை அனுப்பி வைப்பாயாக என! சத்தியத்தின் வழிகளிலே அவர்களை நிலைத்திருக்கச் செய்வாயாக!" என ஒருவர் பிரார்த்தித்தால் அவருக்காக வானவர்கள் அல்லாஹ்விடத்திலே பிரார்த்திப்பார்கள்.

மேற்சொன்னபடி ஒருவர் பிரார்த்திக்க தொடங்கிவிட்டால் இறக்கம், பிறர் துன்பத்தில் இன்பம் கொள்ளாமை, கஷ்டத்தில் இருப்பவருக்கு உதவும் தன்மை, என ஏராளமான நற்பன்புகள் அவரிடத்தில் ஏற்பட்டுவிடும். அப்படிப்பட்ட ஒரு மனித சமுதாயத்தையே இறை மார்க்கமான இஸ்லாம் வார்த்தெடுக்கிறது. பிறர் துன்பம் கண்டு துவண்டுவிடும் எவரும் பிறருக்கு தீங்கிழைக்க மாட்டார். அதைத் தான் இஸ்லாம் மனித இனத்திடம் எதிர்பார்க்கிறது

இன்று உலகில் மனிதர்களுக்கு இழைக்கப்படும் அநேக தீங்குகளும் மனிதர்களாலேயே இழைக்கப்படுகிறது!மனிதனைத் தவிர்த்து வேறு எந்த இனமும் தனது இனத்தை கொன்று குவிப்பதில்லை!

கடந்த மாதம் 22-ம் தேதி வெள்ளிக்கிழமை மதியம் நார்வே தலை நகர் ஓஸ்லோ-வில் நடந்த குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கி சூட்டை அரங்கேற்றியவன் அண்டர்ஸ் பெஹ்ரிங் ப்ரேவிக் என்கிற பயங்கரவாதி. சுமார் 94 உயிர்களை கொன்று குவித்த இவன் இறை மார்க்கமான இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களை அவனது வலைப்பூ மூலம் பரப்பி வந்ததாக காவல் துறையின் விசாரனையில் தெறிய வந்துள்ளது.

இஸ்லாம் மனித நேயத்தை மனிதர்களுக்கு மத்தியில் நிலை நாட்ட ஏராளமான வழிவகைகளை செய்திருக்க இஸ்லாத்திற்கு எதிரான எவரும் மனித இனத்திற்கு எதிரானவராகத்தானே இருக்கமுடியும்! அதைத்தான் நார்வேயில் நடந்ததாயினும், குஜராத், பாகல்பூர், மும்பை, கோவை, தில்லி, மாலேகான், ஆந்திரா, அஜ்மீர்என அனைத்து நிகழ்வுகளும் நிரூபித்திருக்கின்றன.

பாதிக்கப்பட்டவரின் பிரார்த்தனைக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்! ஏனெனில் அவருக்கும் அல்லாஹ்வுக்குமிடையில் எத்திரையும் இல்லை. தீங்கிழைக்கப்பட்டவர் மன்னிக்காத வரை அல்லாஹ் உங்களை மன்னிக்க மாட்டான்! என பிறருக்குத் தீங்கிழைக்காமல் வாழும் வாழ்க்கையையே இஸ்லாம் போதித்திருக்க அதற்கு எதிரான கொள்கை கொன்ட எவரும் மனித குலத்திற்கு எதிரானவர் என்பதே நிரூபனம்.

ம அஸ்ஸாலாம்

அபு ஈசா



10 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

நல்ல சிந்தனைத் தூண்டல்... !

//இஸ்லாம் மனித நேயத்தை மனிதர்களுக்கு மத்தியில் நிலை நாட்ட ஏராளமான வழிவகைகளை செய்திருக்க இஸ்லாத்திற்கு எதிரான எவரும் மனித இனத்திற்கு எதிரானவராகத்தானே இருக்கமுடியும்! அதைத்தான் நார்வேயில் நடந்ததாயினும், குஜராத், பாகல்பூர், மும்பை, கோவை, தில்லி, மாலேகான், ஆந்திரா, அஜ்மீர், என அனைத்து நிகழ்வுகளும் நிரூபித்திருக்கின்றன.//

மிகச் சரியே...

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

இஸ்லாமும் அது சொல்லும் மனிதநேயமும் நல்லதொரு தெளிவான தொகுப்பு.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அருமையான, சிந்தனையைத்தூண்டும் ஆக்கம் தந்த அபு ஈசாவிற்கு நன்றிகள்.

சில தினங்களுக்கு முன் நார்வே தலைநகர் ஓஸ்லோவில் ஒரு கிருஸ்தவ வெறியனால் அந்த நாடு அமைதியுடன் அன்றாடம் இஸ்லாத்தின் பக்கம் திரும்பிக்கொண்டிருப்பதை விரும்பாமல் அப்பாவி பொது மக்கள் 93 பேர் சுட்டும், குண்டு வைத்தும் கொல்லப்பட்டனர். இந்த கொடூர தாக்குதல் ஒரு கிருஸ்தவனால் நடத்தப்பட்டதால் ஊடக உலகமும், ஐ.நாவும் அதை ஆட்டுவிக்கும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளும் வாயடைத்து நிற்கின்றன. அந்த செய்தியை அப்படியே மறைத்து படிப்படியே காணாமல் ஆக்கச்செய்து விட்டன. என்ன கொடுமை? இஸ்லாமிய எதிர்ப்பு கொள்கையைக்கொண்ட நாடுகளும், அதன் தலைவர்களும் காலப்போக்கில் அந்த கோடூரனுக்கு நோபல் பரிசு சிபாரிசு செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

"அரசன் அன்றே கொல்வான்; ஆனால் அல்லாஹ் நின்றும் கொல்வான், நிற்காமலும் கொல்வான்"

என்னுடைய‌ மைத்துன‌னும் குண்டு வெடிப்பு நடந்த இடத்தின் அருகாமையில் தான் வேலை செய்கிறார். அல்லாஹ் அங்குள்ள‌ முஸ்லிம்க‌ளை பாதுகாக்க‌ போதுமான‌வ‌ன்.

மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

அப்துல்மாலிக் said...

பகிர்வுக்கு நன்றி அபுஈஸா

sabeer.abushahruk said...

இதைவிடச் சுறுக்கமாகவும் அழகாகவும் மண்டைல ஏறுகிற மாதிரியும் உங்களைத் தவிர வேறு யாரும் சொல்லிவிட முடியுமா என்பது சந்தேகமே.

நாம் ஒரே ஃப்ளாட்டில் இருக்கும்போது, துபையில், வெள்ளிக்கிழமைகளில் காலையில் எல்லோரும் உறங்க நாமிருவர் மட்டும் அமர்ந்து விவாதிப்போமே அந்த அபு ஈஸாவை உமது எழுத்தில் காண்கிறேன்.

வாழ்த்துகள். மனிதநேயம் பற்றிய என் கவலை கீழே:

மடிந்துபோன மனித நேயம்:

மனித நேயம் மடிஞ்சி போச்சு
பகல் வேஷம் மலிஞ்சி போச்சு
சுயநலம் எனும் கூட்டுக்குள்ளே
சுருங்கிப் போச்சு மனித நேயம்!

காயம்பட்ட காகம் கண்டு
கரையும் காக்கைக் கூட்டம்
காயம் கண்டு கரையும் அந்த
நேயம் எங்கே மனிதா?

ஒட்டுமொத்த கூட்டமும்
கட்டுக்கோப்பா வழ்ந்தோம்
காயம் பட்டு மனதிலே -மனித
நேயம் விட்டுப் போச்சு!

நாகரிகப் போர்வைக்குள்ளே
தனிமைப்பட்டான் மனிதன்
நாயைவிட கேவலமாய்
நன்றி கொன்றான் மனிதன்!

காசுபணம் கணக்குப் போட்டு
பாசம் நேசம் விற்றான்
அக்கம்பக்க வீட்டாரோடு
பரிச்சயத்தை வெறுத்தான்!

மனித நேய மகாசக்தி
மடிந்து போன காரனம்
எல்லைச் சண்டை நாட்டிலே
கொல்லைச் சண்டை வீட்டிலே!

ரெண்டடி நிலத்திற்காக
தடியடி வரைப் போகிறாய்
ஆறடியில் அடங்கும்போது
காலடி கூடக் கிடைக்காது!

நாடி அடங்கிப் போகயிலே
நாலு பேரு வேனும் -அந்த
நாலு பேரு வேனுமெனில் - மனித
நேயம் வளர்க்க வேனும்!

-Sabeer abuShahruk,

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அதிரை நிருபரின் ஆஸ்தான கவி என்று ஒவ்வொரு கருத்து ஊட்டம் தரும்போது நிருபிக்கப்படுவது நினைத்து பெருமை கொள்கிறோம் அல்ஹ்மதுலில்லாஹ் !

//மனித நேய மகாசக்தி
மடிந்து போன காரனம்
எல்லைச் சண்டை நாட்டிலே
கொல்லைச் சண்டை வீட்டிலே//

அதெப்படி நூல் வைத்து அளந்து பார்த்துச் சொல்கிறீர்கள் !?

மனங்களை நேசிக்க வரிகள் உங்களிடம் யாசகம் கேட்டே ஆகவேண்டும் கவிக் காக்கா..

ZAKIR HUSSAIN said...

/நாடி அடங்கிப் போகயிலே
நாலு பேரு வேனும் -அந்த
நாலு பேரு வேனுமெனில் - மனித
நேயம் வளர்க்க வேனும்!//

இது தெரியாமத்தான் ஈகோ வில் குளித்துக்கொண்டிருக்கிறார்கள்..

அபு ஈசா ..மிக எளிமையாக எழுதி அசத்தியிருக்கிறீர்கள்.நிறைய எழுதுங்கள் ..நிறைய பேருக்கு பயன்படும் உங்கள் எழுத்து.

மற்றவர்களுக்காக அழும் கண்ணீரில் அர்த்தம் இருக்கிறது என்பதை இதைவிட தெளிவாக சொல்ல முடியுமா என்பது சந்தேகம்.

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
'உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் (அறிவிப்பவர்: அனஸ்(ரலி) நூல்: புகாரி : எண் : 13)

மனித நேயம்தான் - இஸ்லாம் மார்க்கம்.

வாழ்த்துக்கள் சகோதரரே!

Abu Easa said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது!

நிச்சயமாக முஸ்லிம்களின் உள்ளம் எப்பொழுதும் இறக்கம் கொன்டு ஈரமாகவே இருக்கும். பிறருடைய இன்னல் கண்டு நாம் வருந்தினாலும் அவர்களுக்காக நாம் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பதை நினைவூடுவதற்காகவும், இஸ்லாமிய எதிர்ப்பு சக்திகளின் உண்மை முகம் என்ன என்பதை மக்கள் உணர வேண்டும் என்பதற்கே இப்பதிவு.

அல்லாஹ்வின் அருளும், நான் சிறு துரும்பை அசைத்தாலும் மலை நகர்ந்ததாய் ஊக்கமளிக்கும் உங்களைப் போன்றோரும் இருக்கும் வரை என் எண்ணத்தில் உதிப்பதை எழுதுகிறேன் இன்ஷா அல்லாஹ்!

படித்த, கருத்துமிட்ட அனைவருக்கும் நன்றி!
சொன்னபடி, கேட்டபடி சத்தியத்தை பின்பற்றி வாழ வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தித்தவனாக...

மஅஸ்ஸலாம்
அபு ஈசா

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

சகோ:அபு ஈஷா நல்ல சிந்தனையோடு.வருத்தப்படக்கூடிய ஒரு பதிவு .வாழ்த்துக்கள்.

//காசுபணம் கணக்குப் போட்டு
பாசம் நேசம் விற்றான்
அக்கம்பக்க வீட்டாரோடு
பரிச்சயத்தை வெறுத்தான்! //

எல்லா குடும்பத்திலையும் இந்த கூக்குரவுதான் காக்கா.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு