ஊர் போய்வந்தால்
ஏதாவது எழுத மேட்டர் நிச்சயம் கிடைக்கும் என்பது தெரிந்தாலும் எல்லாவற்றையும்
எழுதத்தான் முடியவில்லை. பொதுவாக நீண்ட ஆர்டிக்கிள் எழுதி வஞ்சிப்பதில்லை என சபதம்
எடுத்திருப்பதால் முடிந்த அளவு சுருக்கமாக எழுதியிருக்கேன். [இதை சொல்றதுலெ ஒரு
பத்தி வேஸ்ட் ஆயிடுச்சே என கமென்ட் எழுதுவதை தவிர்க்க] கையில் காமெரா,
2 மொபைல் ஃபோன், ஆறாய் ஓடும் வியர்வையை துடைக்க கர்ச்சீப்
இவைவகளை கையில் வைத்துக்கொண்டு கைலியை உடுத்திக்கொண்டு நடப்பது ஒரு டெஸ்ட்தான்
எனக்கு. [வெள்ளை கைலி கட்டினால்தான் மதிப்பு-advice by Sabeer & Mohamed Ali !!].
ஊரின் அகலம் குறைந்து
ஒரு இன்ச் கிடைத்தாலும் அதற்கும் ஒரு விலை / மனை என்று ஊர் முன்னேறியிருக்கிறது.
மார்க்கெட்டில் ஏலம் விடுபவர் " 3600...3600, 3650...' என்று சொல்லும்போது ஏதோ மோட்டோர் சைக்கிளுக்குத்தான் ஏலம் என்று நினைத்தால் அது இறால். அப்படியே மார்க்கெட் மாஸ்கிங்-இல் 'ப்ளாக் & ஒயிட்'டுக்கு கற்பனை செய்தால் மொத்த மீன் மார்க்கெட்டு பொருள்களும் 3000 த்தை தாண்டாது . கிணற்று அடி, உமல், தேங்காய் கீற்று.... எல்லாம் வெளிநாட்டு சபுராளிகள் அதிகமான பிறகு மாயமாகி விட்டது.
மார்க்கெட்டில் ஏலம் விடுபவர் " 3600...3600, 3650...' என்று சொல்லும்போது ஏதோ மோட்டோர் சைக்கிளுக்குத்தான் ஏலம் என்று நினைத்தால் அது இறால். அப்படியே மார்க்கெட் மாஸ்கிங்-இல் 'ப்ளாக் & ஒயிட்'டுக்கு கற்பனை செய்தால் மொத்த மீன் மார்க்கெட்டு பொருள்களும் 3000 த்தை தாண்டாது . கிணற்று அடி, உமல், தேங்காய் கீற்று.... எல்லாம் வெளிநாட்டு சபுராளிகள் அதிகமான பிறகு மாயமாகி விட்டது.
தற்போதைய
சூழ்நிலை ஊர் ராஜஸ்தான் பாலைவனம் மாதிரி சரியான உஸ்னம். விமானம் கீழே இறங்குமுன்
ஹ்யூமிடிட்டி பயமுறுத்துகிறது. கீழே தெளிவாக தெரியாமல் வெண்புகை சூழல் மாதிரி
இருந்ததை பக்கத்தில் இருந்த அறிவாளி ' என்னன்னே... திருச்சி
முழுக்க பனி இப்படி சூழ்ந்திருக்கு" நு கேட்கும்போது "லொட்"னு
மண்டையில் குட்டனும்போல இருந்தது.
வழக்கம்போல்
பட்ஜெட் விமானமாதலால் 'சீட்'டில் உட்காருவதற்கு ஏறக்குரைய பிணத்தை போட்டோ எடுக்க
வைத்திருப்பதுபோல் அசைய முடியாத சின்ன சீட்டில்தான் உட்கார வைத்து அழைத்து
வருகிறார்கள்.
பக்கத்தில்
"புள்ள பூச்சி" மாதிரி ஒரு குடைச்சல் பார்ட்டி உட்கார்ந்து கொண்டு சார்
நீங்க சாப்பிடற சாப்பாட்டிலெ ஃபுட் பாயிசனாயிட்டா என்ன சார் செய்வீங்க" என
கேட்டு எதற்கும் ரிஸ்க் எடுத்தால் ஏடாகூடமா ஆயிடும்" நு பயம்
காட்டிக்கொண்டே வந்தார். " யோவ்.... இப்ப பறக்குற உயரமே 36,000 அடி... இதிலெ இல்லாத ரிஸ்க்கா இந்த சாப்பாட்டெ சாப்பிட்டு வரப்போவுது" என்று
கேட்டவுடன் என்னிடம் ஏன் சார் இப்படியெல்லாம் பயமுறுத்துரீங்கனு கேட்டுட்டு... இஸ்ட
தெய்வத்தை வேண்டிக்கொண்டார்.
பிறகு ஏதோ ஒரு சாமியார்/குரு பெயரைச்சொல்லி கன்னத்தில் போட்டுக்கொண்டு "ஒன்னும் ஆகாது நான் என் குரு கிட்டே வேண்டிக்கிட்டேன்" என்றாரே அதுதான் எனக்கு காண்டு.' யோவ் ..உன் குரு என்ன திருச்சி ஏர்போர்ட் கன்ட்ரோல் ரூம்லயா நிக்கிறாரு... அதுசரி, உங்க குருவும் இந்த ஃபிளைட்லெ வந்தா யார்கிட்டே வேண்டிப்பாரு?' என்று நான் கேட்டவுடன் 'சார் நீங்க தந்தை பெரியார் கட்சியா?" என்றார். ' ஏன் உங்களுக்கு பிடித்த தலைவரை விளிக்க வேறு உறவு முறையே கிடைக்கலையா?' நான் இப்படி கேள்விக்கு மேல் கேள்வி கேட்டவுடன் அப்புறம் என்னுடன் அவர் "காய்" விட்டு விட்டார்.
அதிராம்பட்டினத்து
வெயில் சும்மா சொல்லக்கூடாது. மூனு தலைமுறைக்கு வர வேண்டிய வியர்வையை இந்த
தலைமுறையிலேயே வெளியாக்கிவிடுகிறது. இதில் கரன்ட் கட் [ அதிராம்பட்டினத்தில்
இன்வர்ட்டர் இல்லாத வீடுகள் இனிமேல் எந்த மனிதர்களும் புழங்காத
"கஸ்டம்ஸ்" பில்டிங் மாதிரி ஆகிவிடும். - இப்போது கஸ்டம்ஸ் இருந்த
இடத்தில் மனை போடப்பட்டிருக்கிறது. ]. நான் இருந்த 5 நாளிலும் இரவில் மட்டும் குறைந்தது 1200 கொசு
அடித்திருப்பேன். இரவு முழுதும் எலக்ட்ரிக் பேட் துணை [கமெர்சியல் டேக் லைன்
மாதிரி இல்லே] கொசுக்களின் டெக்னிக் அதிசயமானது. நாம் எலக்ட்ரிக் பேட்டை கையில்
எடுத்தவுடன் நம் முகத்துக்கு பக்கத்திலும் நம் முதுகுப் பக்கதிலும் ஒழிந்து
கொள்கிறது.
கால ஒட்டத்தில்
மாற்றமடையாத சில இடங்கள் மனதுக்கும் இளமையை புதுப்பிக்கிறது. காலை நேரத்தில் ரயில்வேஸ்டேசனில் ஸ்டேசன் மாஸ்டரிடம்
பேசிக்கொண்டிருந்ததில் என்னை விட அவருக்கு சந்தோசம் என நினைக்கிறேன். அவரிடம்
பேசிக்கொண்டிருக்கும்போது பரீட்சைக்கு படித்த இடங்கள், உப்பு மாங்காய், தூரத்து கானல்நீர், படிக்காமல் ரவுசுபன்னும் பசங்களின் அரட்டை எல்லாம் எனக்கு மறு
ஒளி/ஒலிபரப்பானது.
தெருக்கள்
அனைத்தும் ஒரு முறை உள்ளே போனால் வெளியாவது எங்கே என்று தெரியாத அளவுக்கு சின்னதா
சுறுக்கப்பட்டு விட்டது. சிலர் வீடு கட்டியிருப்பதை பார்க்கும்போது வென்டிலேசனுக்கு
கொஞ்சம் கூட முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. இதனால் காற்றுவராத வீட்டில்
இருந்து மருத்துவத்துக்கு செலவழிக்கும் வயதானவர்களை பார்க்கும்போது மனசுக்கு
ரொம்பவும் கனத்தது. நம் ஊரில் முன்பு
இல்லாத "கூல்ட்ரிங்க்ஸ் / டேங் பவுடர் ட்ரிங்க்ஸ்" இன்னும் 50
வருடத்துக்கு தஞ்சாவூர் டாக்டர்களுக்கு வருமானத்தை உறுதி செய்யும். தோசை / இட்லி /
மோர் போன்ற நல்ல உணவுகளை புறக்கனிப்பதும் / கேவலம் பேசுவதும் நம் மக்களிடம்
இருக்கும் வரை உடல் சுகாதார ரீதீயாக எந்த மாற்றமும் கொண்டுவர முடியாது. இதில்
கொடுமை என்னவென்றால் ஒத்துக்கொள்ளாதவர்களுக்கும் சில உணவுகளை கொடுத்து விட்டு 'ஒன்னும் செய்யாது" என கேஸ்ட்ரொஎன்ட்ராலஜிஸ்ட் மாதிரி நம் சனங்கள்
பேசுவதுதான்.
நம் ஊரில்
பெண்களுக்கு எதிராக ஒரு மவுனயுத்தம் நடப்பதாக நான் கருதுகிறேன். பெண்கள் தொடர்ந்து
பொருளாதாரம் / கல்வி போன்ற விசயங்களில் ஆண்களை சார்ந்திருக்கும் சூழ்நிலை மாறாத
வரை பெண்கள் முன்னேற்றம்
என்பது இன்டர்நெட்டில் எழுதி அதற்கு கமென்ட் எழுதும் விசயத்தோடு ' சுபம்' போட்டுவிட்டதாக நான் நினைக்கிறேன். எதிர்கருத்துள்ளவர்கள் உங்களின் எண்ணத்தை
எழுதலாம்.[ என் கணிப்பும்
தவறாக இருக்கலாம் இல்லையா?] ஊரில்
இருக்கும்போது நடந்த சில விசயங்கள் மனதுக்கு கவலையை அளித்தது. ஒரே இறைவனை
ஏற்றுக்கொண்ட சகோதரர்கள் இன்னொரு சகோதரரை அடித்து மருத்துவமனையில் சேர்க்கும்
அளவுக்கு நடந்து கொண்டது. கந்தூரி என்ற பெயரில் நடந்த ஸிர்க் கான விசயங்கள்
எங்கெல்லாம் முஸ்லீம்களை இழுத்து சென்றிருக்கிறது?. அன்றைக்கு நடந்த
கந்தூரியில் பல முறை கரண்ட் "கட்"டானது
டார்வின் கோட்பாட்டுக்கு உயிரூட்டம்
விரயமாகும் இளையசமுதாய சக்தி
பலர் போலீஸ்
ஸ்டேசனில் போய் நின்றது. / பலர் மருத்துவமனையில் நின்றது/ பலர் ட்ராபிக் ஜாமில்
போக வேண்டிய இடத்துக்கு போக முடியாமல் தவித்தது. இது போன்ற கந்தூரிகள்
தவிர்க்கப்படா விட்டால் நம் மக்கள் மார்ச்சுவரியிலும் , கோர்ட் வாய்தாவிலும், கண்ணீர் அஞ்சலி போஸ்டரிலும், சிறையில் பார்வையாயளர்களின் நேரத்தில் கையில் உணவுப் பொட்டலத்துடன்
காத்துக் கிடக்கும் நம் பெண்களையும் பார்க்கும்
அவலத்தை உருவாக்குவதுடன் , அதற்க்கான நேர / பண விரயத்தையும் உருவாக்கி
விடுவார்கள் என்பது நிச்சயம்.
பொதுவாக
வெளிநாட்டிலிருந்து வரும் பணம் / சென்ட் / மற்றைய பொருட்களை விரும்பும் நம்
மக்கள்... அதை சம்பாதிப்பவனின் வார்த்தைக்கு கொஞ்சம் கூட முக்கியத்துவம் தராமல்..' இவன் பேசுரது நடைமுறைக்கு ஒத்து வராது"ங்ற மாதிரி நினைக்கும்போது
இருக்கும் அவர்களின் எனர்ஜியை என்னால்
ஈசியாக உணர முடிகிறது.
எத்தனையோ மைனஸ்
பாயின்ட் இருந்தாலும் நம் ஊரை பிரிந்து வரும்போது. "மறுபடியும் எப்போது
வருவோம்?" என்ற கேள்விக்கு மட்டும் இன்னும் யாருக்கும் விடை "சரி"யாக தெரியவில்லை.
-ZAKIR HUSSAIN
40 Responses So Far:
//எத்தனையோ மைனஸ் பாயின்ட் இருந்தாலும் நம் ஊரை பிரிந்து வரும்போது. "மறுபடியும் எப்போது வருவோம்?" என்ற கேள்விக்கு மட்டும் இன்னும் யாருக்கும் விடை "சரி"யாக தெரியவில்லை.//
'பஞ்ச் பாயின்ட்'...!
நாகரீகமும், நவீனங்களும், தொழில்நுட்பமும் ஓரணியில் வீருநடை போடும் பெரும் நகரங்களிலும், அமெரிக்க, ஐரோப்பிய, வெளிநாடுகளிலும் தன் வாழ்வில் பெரும் பகுதியை செலவு செய்து விட்டு சொற்ப நாட்களுக்காக விடுமுறையில் ஊர் வரும் பொழுது அங்குள்ள சுகாதாரமற்ற சூழ்நிலைகள், மக்களின் பிற்போக்கு பிடிவாத குணங்கள், இன்னும் வளர்ச்சியடையாத எத்தனையோ பல விசயங்களை கண்ணுற காணும் பொழுது நீண்ட நாட்களுக்குப்பின் ஒரு மகன் பசித்திருக்கும் தன் ஏழைத்தாயை மெலிந்த மேனியில் அழுக்குப்படிந்த கிழிந்த உடையுடன் பார்ப்பது போல் நம்மூரின் நிலைமை இருப்பது என்னவோ வேதனையான உண்மை தான் காக்கா......
நம்மூரின் நிலையைப்பற்றி ஒரு நெடுந்தொடராக சகோ. ஜாகிர் அவர்களின் நகைசுவை நடையில் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.
சமீபத்தில் சகோ. ஜாகிர் அவர்களுடனான என் முதல் சந்திப்பின்போது அவர்களின் நகைசுவை உணர்வைக் கண்டு வியந்தேன் ! இப்பதிவிலும் தொடர்கிறது..............
வாழ்த்துகள் !
திருப்பதி மேலே டார்வின் கோட்பாட்டுக்கு உயிரூட்டம் ஓன்று அமர்ந்திருப்பதை பார்த்தீர்களா ?
இன்னும் கொஞ்சம்நம்ம ஊரைசுற்றி பார்க்க ஆசை ..
கேமராவை எடுத்துக்கொண்டு சுற்றி வந்து
இன்னும் நாலஞ்சு படத்தோடு ஆர்டிகல் தந்தால்
நன்றாக இருக்கும் சகோ .சேகனா .நிஜாம் ..எனது ஆசையை
நிறைவேற்ற்வீர்களா ..?
கடைத்தெருவில் இறால் விலை கேட்டு ஒரு இளைஞனின் கைச்சட்டை கூட வாய் பிழந்து சிரிக்கிறது.
இன்னொரு முதியவரின் வாய் நிறைய பல்லும், தலை நிறைய வெண்புல்லும் (தலை நரையும்) அதற்கு சாட்சிகள்.
ஜாகிர்,
இன்னும் நான் ஊரில்தான் இருக்கிறேன். நீதான் சட்டென புறப்பட்டுவிட்டாய்.
//எத்தனையோ மைனஸ் பாயின்ட் இருந்தாலும் நம் ஊரை பிரிந்து வரும்போது. "மறுபடியும் எப்போது வருவோம்?" என்ற கேள்விக்கு மட்டும் இன்னும் யாருக்கும் விடை "சரி"யாக தெரியவில்லை.//
//'பஞ்ச் பாயின்ட்'...! //
மேலே உள்ளது பஞ்ச் பாயின்ட் எனில், இவனை விமான நிலையத்தில் வழி அனுப்பிவிட்டுத் திரும்புகையில் "மறுபடியும் எப்போது வருவான்?" என்று நெஞ்சுக்குள் நெருடியது என்ன பாயின்ட், காக்கா?
மிக அருமையாக பதிவிட்டு பல பழைய நிகழ்வுகளை நினைவூட்டி இறுதியில் கந்தூரியில் நடந்த வன்முறையை எடுத்துக்காட்டி மன கனத்தை விடுத்துள்ளீர்...பயண அனுபவத்தை அழகாக நகைக்கலந்த விழிப்புணர்வு பதிவாக அமைத்து படமிட்டு காட்டியமைக்கு வாழ்த்துக்கள்
\\பொதுவாக வெளிநாட்டிலிருந்து வரும் பணம் / சென்ட் / மற்றைய பொருட்களை விரும்பும் நம் மக்கள்... அதை சம்பாதிப்பவனின் வார்த்தைக்கு கொஞ்சம் கூட முக்கியத்துவம் தராமல்..'//
இந்நிலை நம்மூரில் இன்ஷா அல்லாஹ் நிச்சயம் மாறும்
//பலர் போலீஸ் ஸ்டேசனில் போய் நின்றது. / பலர் மருத்துவமனையில் நின்றது/ பலர் ட்ராபிக் ஜாமில் போக வேண்டிய இடத்துக்கு போக முடியாமல் தவித்தது. இது போன்ற கந்தூரிகள் தவிர்க்கப்படா விட்டால் நம் மக்கள் மார்ச்சுவரியிலும் , கோர்ட் வாய்தாவிலும், கண்ணீர் அஞ்சலி போஸ்டரிலும், சிறையில் பார்வையாயளர்களின் நேரத்தில் கையில் உணவுப் பொட்டலத்துடன் காத்துக் கிடக்கும் நம் பெண்களையும் பார்க்கும் அவலத்தை உருவாக்குவதுடன் , அதற்க்கான நேர / பண விரயத்தையும் உருவாக்கி விடுவார்கள் என்பது நிச்சயம்.//
இதற்கெல்லாம் காரணம் ஒருவர் வெளிநாட்டில் போய் சம்பாரிப்பதை ஊரில் பத்துபேர் உட்க்காந்து சாப்பிடுவதே.பத்துபேரும் சம்பாரித்தால் இது போன்ற அனாச்சாரங்களில் கவனம் போகாது
நான்காவது போட்டோவில் கச்சல் கட்டிய இளைஞர்களுக்கு மத்தியில் தாடிவைத்து தொப்பி போட்ட ஜிப்பாகளும் தென்படுகின்றார்களே!!!!
//தாடிவைத்து தொப்பி போட்ட ஜிப்பாகளும் தென்படுகின்றார்களே//
ஜிப்பாக்கள் அடம்பிடிக்கும் பேரக்குழந்தைகளின்
அப்பாக்களாக இருக்கலாம்
காக்கா நீங்க ஊரில் போய் ரிலாக்ஸா இருந்தீங்களோ இல்லையோ...உங்கள் இவ்வாக்த்தை படித்தபிறகு நான் ரிலாக்ஸா உணர்ந்தேன்..நல்ல நகைச்சுவை,நல்ல குட்டு
//மேலே உள்ளது பஞ்ச் பாயின்ட் எனில், இவனை விமான நிலையத்தில் வழி அனுப்பிவிட்டுத் திரும்புகையில் "மறுபடியும் எப்போது வருவான்?" என்று நெஞ்சுக்குள் நெருடியது என்ன பாயின்ட், காக்கா?//
நெஞ்ச் பாயின்ட்...!
//மேலே உள்ளது பஞ்ச் பாயின்ட் எனில், இவனை விமான நிலையத்தில் வழி அனுப்பிவிட்டுத் திரும்புகையில் "மறுபடியும் எப்போது வருவான்?" என்று நெஞ்சுக்குள் நெருடியது என்ன பாயின்ட், காக்கா?//
நெஞ்ச் பாயின்ட்...!
எத்தனையோ மைனஸ் பாயின்ட் இருந்தாலும் நம் ஊரை பிரிந்து வரும்போது. "மறுபடியும் எப்போது வருவோம்?" என்ற கேள்விக்கு மட்டும் இன்னும் யாருக்கும் விடை "சரி"யாக தெரியவில்லை.
-------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். எத்தகைய சூழ் நிலையில் நம் மண்ணில் கால் வைத்தாலும் ஏதோ புதிதாய் அன்றுதான் பார்ப்பதுபோல் உணர்வு இருக்கத்தான் செய்கிறது. வரும் வழியில் ஓடும் ரயில் பாதையில் பக்கங்களில், பஸ் ஓடும் சாலையின் பக்கங்களில் நம் கண்கள் உறவுகளைத்தேடுகிறதோ இல்லையோ? ஊரின் பெயர் தாங்கிய பலகையைத்தேடும். அது மேலும் புதுவித உற்சாகத்தை தரும். நமக்கே இப்படியென்றால் ஜனரஞ்ஜக எழுத்தாளருக்கு ஒரு பட்டாம் பூச்சிபோல் ரக்கை முளைத்துஇருக்கும்.பின் கற்பனை ,கலை ரசனை ரெக்கை கட்டிப்பறக்கும் என்பதற்கு இந்த பயண கட்டுரை ஒரு சான்று. முன்பு நான் எழுதிய கவிதை? எங்கே சென்றாலும் எப்படி எம் மண் நம்மை ஆட்கொள்கிறது என்பதை பற்றி. இதை மறுபடியும் இங்கே இடுவதில் மகிழ்கிறேன்.-----------------------
எத்தனை வீதிகள் நான் கண்டதும்,
கடந்ததும்,கேள்விப்பட்டதும்...
வரை படத்தில் பார்த்ததும்,வண்ணப்புகைபடத்தில் பார்த்ததும்.
தொலைக்காட்சி வழிப் பார்த்ததும்.
பல் வகை வீதிகள்....
ஓரே மயான அமைதியாய் சில...
மரன ஓலமாய் சில...
கூட்டம்,கூட்டமாய் கூடவே மவுனமாய்..
கேளிக்கையாய் கூட்டத்துடன் சில...
மழைப்பொழிவாய்...
சிலப்பனிப்பொழிவாய்..
இன்ன பிற ,சுட்டெரிக்கும் சூரிய விளக்கில்.
பகட்டாய் சில, அலங்கோலாமாய் பல..
இப்படி நான் பார்த்த,அறிந்த,நடந்த வீதிகளில்,
என்னை முதலில் சுமந்த...என் பிஞ்சு பாதம் பதிந்த...
என் அன்னையும்,தந்தையும்,
என் உறவுகளும்,சுற்றமும் -
தினம் நடக்கும் என் பால்ய வீதி!
பல நேரம் துற் நாற்றமும்,
அலங் கோலமாய் இருப்பினும்,
நான் எங்கு சென்றாலும்,என்னைதொடருகிறது.
Yasir சொன்னது…
//தாடிவைத்து தொப்பி போட்ட ஜிப்பாகளும் தென்படுகின்றார்களே//
ஜிப்பாக்கள் அடம்பிடிக்கும் பேரக்குழந்தைகளின்
அப்பாக்களாக இருக்கலாம் .
-------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். சகோதரே நலமா? உங்களின் வார்தையில் வருவதற்காகவாவது ஆக்கம் எழுதனும். புகழ் அனைத்தும் அல்லாஹுக்கே ஆனாலும் உங்களின் புகழ்சியில்லாத உண்மை நேசத்தின் வார்தைக்காக இப்படியெல்லாம் எழுத தூண்டுவது நிசம். அப்பாக்களுக்கும், ஜிப்பாக்களுக்கும் பாக்கள் எழுதும் திறன் உள்ள உஙகளின் ஆக்கம் பார்த்து நாளாகிவிட்டதே?என்று வரும் மீண்டும் ஒரு புதியதோர் சிந்தனை.எப்பவும் வித்தியாச கோணத்தில் எழுதும் நீங்கள் அ. நி அவசியம் மாதம் ஒருமுறையேனும் எழுதனும்.(எடிடராக்க கவனிக்கவும் அவரை எப்படியும் கேட்டு வாங்குங)
திரும்பி வரும் தேதி அறியாது பிறந்த மண்ணை விட்டு பல வேதனைகளை தாங்கி உள்ளுக்குள் குழந்தை போல் தேம்மி அழுது வெகுதூரம் பயணிக்க இருக்கும் எமக்கு வேடிக்கை காட்டி உற்சாகப்படுத்த தன் மேனியில் சிகப்பு வர்ணம் பூசி வரவேற்று நின்றது அந்த 'ஏர் ஏசியா' என்ற இயந்திரக்கோமாளி.....
//அஸ்ஸலாமு அலைக்கும். சகோதரே நலமா?//
வ அலைக்கமுஸ்ஸலாம் சகோதரா...நலமே அல்ஹம்துலில்லாஹ்....உங்களின் கண்ணியமான வார்த்தைக்கும்,அன்புக்கும்,ஊக்கத்திற்க்கும் தகுதியானவனாக என்னை மாற்றிக்கொள்ள முயற்ச்சிக்கிறேன்
கிழக்கே போகும் ரயிலா காக்கா, இதுவும் ஒரு வித்தியாசம்தான்
//ஆண்களை சார்ந்திருக்கும் சூழ்நிலை மாறாத வரை பெண்கள் முன்னேற்றம் என்பது இன்டர்நெட்டில் எழுதி அதற்கு கமென்ட் எழுதும் விசயத்தோடு ' சுபம்'//
பெண்கள் முன்னேர விரும்பினாலும், பெற்றோர் ஆசைப்பட்டாலும் நம்மூர் சமுதாயம் எப்பவும் தடைக்கல்தான், கோலம் போட்டு, பூ வைத்து அழகு பார்க்கும் இந்த சமுதாயம்......
கலக்கல் கட்டுரை காக்கா! இந்த கட்டுரைக்கு நெய்னாவின் பின்னூட்டத்தை நிறைய எதிர்பார்த்தேன் .கந்தூரி கூட்டத்தின் பிரதிநிதியாய் திருப்பதி குரங்கு நல்ல பொருத்தம்தான் .
அன்புள்ள தம்பி ஜாகீருக்கு,
குறுவிடுப்பில் அதிரை வந்திருந்த உங்களைப்போல் எனக்கும் இந்த அனுபவங்கள்.
திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம் என்றுதான் பாடி ஆறுதல் அடையவேண்டி இருக்கிறது.
தம்பி சபீர் அவர்கள் இல்லத்திருமண காரியங்களை இழுத்துப்போட்டுக் கொண்டு நீங்களும் நிஜாமும் செய்த பாங்கும் பண்பும் பரவசமூட்டியது. பலகாலங்களுக்கு முன்பு குழந்தை முகமாக கண்ட உங்களை ஒரு முதிர்ச்சியடைந்த முகத்தோடு பார்த்த சந்தோசம் மிகவும் அதிகமாக உணர்ந்தேன். மணவிழா உணவுண்டு விடை பெற்று வரும்போது “ மாமாவைப் பார்த்தது போல் இருக்கிறது” என்று நீங்கள் கூறிய வார்த்தையை வீட்டுக்கு வந்து என் தாயாரிடம் சொல்லி கண்ணீர் விட்டு அழுததை மறக்க முடியவில்லை. கூடவே தோழவாப்பா அவர்களின் நினைவும். இப்போதும் இதை கண்ணீரோடவே எழுதுகிறேன்.
மீண்டும் சந்தித்து நீண்ட நேரம் பேச ஆசை. இன்ஷா அல்லாஹ்.
//என்னை முதலில் சுமந்த...என் பிஞ்சு பாதம் பதிந்த...
என் அன்னையும்,தந்தையும்,
என் உறவுகளும்,சுற்றமும் -
தினம் நடக்கும் என் பால்ய வீதி!
பல நேரம் துற் நாற்றமும்,
அலங் கோலமாய் இருப்பினும்,
நான் எங்கு சென்றாலும்,என்னைதொடருகிறது.//
தம்பி கிரவுன்! முக்காலமும் உண்மை. இப்படி இதயத்தின் மென்மையான நரம்புகளை தீண்டும் வரிகளுக்கு சொந்தக்காரரான நீங்கள் எங்களை அடிக்கடி தீண்டுங்களேன்.
பிறந்த ஊர்/தாய் நாடு, பிறப்பிலிருந்து பேசும் தாய்மொழி இவற்றின் மீது ஓர் ஈர்ப்பு இருப்பதால் பிரிந்தாலும் பிரிக்க முடியாத அளவுக்கு உணர்வோடு ஒட்டிக் கொள்ளும் “உள்ளுணர்வே” இக்கட்டுரையாளர் அன்புச் சகோதரர் அவர்களின் எழுத்திலும், கவிஞர் க்ரவுன் அவர்களின் கவிதையிலும், பின்னூட்டம் இட்டவர்களின் உளப்பூர்வமான உணர்வலைகளுலும் தெளிவாக நிரூபிக்கின்றன! துபையில் நடந்த பட்டிமன்றத்தில் “ புலம்பெயர்ந்தோர் வாழ்வில் விஞ்சி நிற்பது பொருளாதாரக் கனவா? தாயக நினைவா? என்றத் தலைப்பில் அடியேன் “பொருளாதாரக் கனவே” என்ற அணியில் பேசினேன்; ஆனால் தீர்ப்பளித்த நடுவர் சொன்னார்கள், “தாயகத்தின் நினைவுடன் தான் நாம் பொருளாதாரக் கனவில் இங்கு வந்து மீண்டும் தாயகத்தின் நினைவுடன் தான் விடுப்பில் சென்றும் , மீண்டும் விடுப்புக் கழிந்து வரும்போதும் கண்ணீரும் கனவுகளும் சேரச் சுமந்து பயணிப்பதும் தாயக நினைவுகளோடு தான்” என்றுத் தீர்ப்பு வழங்கினார்கள்
அன்புச்சகோதரர் ஜாஹிர் அவர்களின் இக்கட்டுரையில் விடையறியா வினாவாக தொக்கி நிற்பது; அன்புச் சகோதரர் நெய்னா அவர்களின் நெய்நாவால் ”தேம்பித் தேம்பி” அழுவது;கவிவேந்தர் சபீர் அவர்கள் ஆருயிர் நணபர்க்கு விமானநிலையத்தில் கை வீசி வழியனுப்பிய போது - வீசும் கைகளும் பேசும் வீரியமிக்கக் கவிநய உணர்வாய் காற்றில் கலந்தது எல்லாம் பற்றின் ஈர்ப்பு! கவிஞர் அபுஹஷிமா அவர்களின் தொடர் “தொட்டால் தொடரும்” கூறும் உண்மைகள் “சுகமான சுமைகள்” என்று உணர்ந்தோம்! இந்தச் சுகமான சுமைகளையும் ஏற்றிக் கொண்டுதான் “ஏர் ஆசியா” விமானமும் ஏறியது வானில்; தாயகப் பற்று ஊறியது நம் ஊனில்!
ஊரை உயிரோட்டமாய் தந்தமை அருமை!
ஆனால் இந்த ஆர்டிக்கிளை சுருக்கமாய் தந்தமை தவறு (இன்னும் தொடராய் தரும் எண்ணத்துடன் இருக்குமென நம்பிக்கை).
கேமரா, கற்சீப், போன் மற்றும் இதர கொசுரு ஐட்டங்கள் வைக்கத் தான் பச்சை பெல்ட்டுக்கு ஃபேமஸ் பெற்ற ஊருலெயிலோ இருக்கியோ!
Yasir சொன்னது…
//ஜிப்பாக்கள் அடம்பிடிக்கும் பேரக்குழந்தைகளின்
அப்பாக்களாக இருக்கலாம் //
தாடி வைத்த ஜிப்பாகாரர் பேரனுக்காக வந்தாலும் மொபைல் போனில் வீடியோ எடுப்பது யாருக்ககவாம் ?(நான்காவது போட்டோவை நன்கு கவனித்துப்பாருங்கள் வீடியோ எடுப்பது தெரியும் )
///இதில் கொடுமை என்னவென்றால் ஒத்துக்கொள்ளாதவர்களுக்கும் சில உணவுகளை கொடுத்து விட்டு 'ஒன்னும் செய்யாது" என கேஸ்ட்ரொஎன்ட்ராலஜிஸ்ட் மாதிரி நம் சனங்கள் பேசுவதுதான்.///
இவர்கள் கேஸ்ட்ரொஎன்ட்ராலஜிஸ்ட் இல்லை காக்கா... தஞ்சாவூர் டாக்டர்களின் மார்கெட்டிங் ரெப்ஸ்....
யாங்காக்கா, அப்புடியும் இப்புடியும் சொல்லி கடைசியிலெ எப்படியோ ஊர்லெ "கந்துரி கொடி ஊர்வலத்தை" ரொம்ப நாளக்கப்புறம் நீங்க பாத்த மாதிரி தெரியுது?????? கொத்துப்புராட்டா கடைகளெல்லாம் ஊர்லெ அங்கங்கு முளைச்சிருக்குமே??? ஹ்ஹஹ்ஹஹ்......
இந்த பதிவைப் படித்தேன் என்று கருத்திடுவதா ? இல்லை அசத்தல் காக்காவோடு நானும் இங்கே எழுதியிருப்பவைகளையும் அனுபவித்தேன் என்று கூண்டின் மேல் ஏறி மூன்று முறை சொல்வதா ?
ஒரே கொழ்ப்பம்மா ஈக்கே !!
நல்ல ரசனையுள்ள பதிவு,போட்டோக்களும் அருமை.Rojak உடன் Nasi Lemak ஐ சேர்த்து சாப்பிட்ட திருப்தி.
//நன்கு கவனித்துப்பாருங்கள்// உங்க கண்ணு மைக்ரோஸ்கோப் கண்ணு...வீட்டில் அடம்பிடிக்கும் பேத்திக்கு போட்டுக்காட்ட பிடித்திருக்கலாம் : ) நாங்களும் விடுவதா இல்லை :) :)
//Rojak உடன் Nasi Lemak ஐ சேர்த்து சாப்பிட்ட திருப்தி.// இது என்னாண்டு எங்களுக்கு சொன்னால்தான் எங்களுக்கு திருப்தி....ஆனால் விட்டுட்டு சாப்பிட்டதால வயித்துவலி வந்த நாங்க பொறுப்பல்ல
To Brother Adirai Ahamed,
உங்களை முன்பு ஊரில் பார்த்திருந்தாலும், இப்போது பார்த்தபோதுதான் பேசும் வாய்ப்பு இருந்தது கண்டு சந்தோசம். உங்களின் நிதானமான அப்ரோச் இளைஞர்களுக்கு ஒரு பாடம்.
To Brother MSM Nainamohamed,
உங்களிடம் டெலிபோனில் பேசும்போது எனக்கு மிக்க மகிழ்ச்சி. என்னிடமும் சபீரிடமும் பேசியதில் தெரிந்தது உங்கள் அன்புதான். தங்கியிருக்கும் தூரம் அல்ல. ...கொத்துப்பரோட்டா- கந்தூரி ...பார்க்கவில்லை. கொத்துப்பரோட்டா மிக்ஸ் என்று இது வரை பேக்கட்டில் வந்திருக்கலாம்.
To Brother Sekkana Nijam,
உங்களை முதன் முறை ஊரில் பார்த்ததில் மகிழ்ச்சி. உங்கள் எழுத்தை படிக்கும்போது வாழ்க்கையில் நல்ல அனுபவம் தெரிகிறது. இந்த சின்ன வயதில் அனுபவங்களை அதிகம் பெறுபவர்கள் எதிர்காலத்தில் சிறந்து விளங்கலாம்.
To Brother Adirai Siddik,
இன்னொரு முறை ஊர் போகும்போது நானே நிறைய போட்டோ எடுத்து அப்லோட் செய்கிரேன், அசிஸ்டன்ட் [ சாகுல் ] லீவு..அதான் போட்டோ குறைவு
To Bro Tuan Haji Shahul,
அது எப்படி இவ்வளவு சார்ப்பா இருக்கீங்க...தாடி வைத்த ஆள் வைத்திருக்கும் கேமரா போன் மாடல் கூட சொல்லிடுவீங்க போல தெரியுது.
To Bro Yasir & Bro Ara Ala,,..
Rojak செய்வது எப்படி என்று பிரிதொரு சமையல் குறிப்பில் காண்போம். நாசி லேமாக் என்பது கொஞ்சம் தேங்காய் சோறும், நெத்திலி கருவாடு பொரியலுடன், அவித்த முட்டை, கொஞ்சம் நிலக்கடலை வறுத்தது எல்லாம் வைத்து [ சிறிதளவு ] காலையில் சாப்பிடும் சாப்பாடு. இது ஏறக்குறைய மலேசியாவின் தேசிய உணவு. யூரிக் ஆசிட் ஜிவ்வுனு ஏறிடும்.
To Bro Crown,
உங்கள் கணையாழி ஸ்டேன்டர்ட் கவிதை பார்த்த பிறகு எல்லாம் சரியாக இருப்பது போல் தெரிகிறது. நீங்கள் அடிக்கடி எழுதுங்கள்...உங்கள் எழுத்து வலைத்தளங்களுக்கு ஜொலிப்பு.
To Bro Harmy...
குரங்கு வேசம்போட்ட மனிதனும் திருப்பதி என பெயருள்ள லாரியும் எதேச்சை.
To Bro Ebrahim Ansari...
உங்களை பார்த்த பிறகு நிறைய பேச நினைத்து முடியாமல் போனது இந்த முறை. இன்சா அல்லாஹ் மறுமுறை நிறைய பேசலாம்.
To Bro Abulkalam,
உங்களுக்கு இப்போது விடுமுறை இல்லை என்று நீங்கள் சொல்லி விட்டாலும் நீங்கள் வந்திருக்கமாட்டீர்களா என்று எதிர்பார்த்ததும் அன்புதான் அடிப்படை. இன்சா அல்லாஹ் சந்திப்போம்.
To Bro MH. Jahabar Sadik,
உங்கள் பெயரைச்சொன்னவுடன் உங்கள் தகப்பனார் முகத்தில் இருந்த மகிழ்ச்சியையும் சந்தோசத்தையும் வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. அபு இப்ராஹுமும், அபூபக்கரும் என்னை உங்கள் தகப்பனாரிடம் அறிமுகப்படுத்தினார்கள். மகனை எதெற்கெடுத்தாலும் குறை சொல்லும் தகப்பனார்கள் இருக்கும் இடங்களில் உங்கள் மீது அவர் வைத்திருக்கும் அன்புக்கு ஈடு இணையில்லை என்பது என் தலை நிமிர்ந்த கருத்து.
Thanks to Bro Abu ibrahim & Thajudeen...., Hidhayathullah, LMS Abubakar for your unforgettable esteemed brother hood & courtesy to me in my recent visit. May Allah Bless You All.
யதார்தமான ஆக்கம்,என்று தான் தனியுமோ கன்துரி மோகம்.
ஜாஹிர் காக்கா சொன்னதிலிருந்து:-
சலாம் காக்கா!
என் தகப்பனாரை சந்தித்தமைக்கு நன்றியும் மகிழ்ச்சியும்.
சபீர் காக்கா அவர்களை பார்க்கலையே என்று சொன்னார்கள்.
//உங்களுக்கு இப்போது விடுமுறை இல்லை என்று நீங்கள் சொல்லி விட்டாலும் நீங்கள் வந்திருக்கமாட்டீ ர்களா என்று எதிர்பார்த்ததும் அன்புதான் அடிப்படை. இன்சா அல்லாஹ் சந்திப்போம்.//
அன்புதான் அடிப்படை என்பதாற்றான் பொதுவாக எந்த வீட்டுத் திருமண விழாவுக்கும் போக விரும்பாத என் மகனார்க்குக் கட்டளையிட்டுக் கவிவேந்தர் சபீர் வீட்டுத் திருமண விழாவில் கலந்து கொள்ளச் சொன்னேன்; அவரும் கலந்து கொண்டார். இருப்பினும், என் நினைவுகளில் உங்களைக் காண இயலாமல் வாய்ப்புத் தவறிவிட்டதை எண்ணியே கலக்கத்தில் இருந்து வருகின்றேன். மீண்டும் ஒரு வாய்ப்புக் கிட்டுமா என்ற ஏக்கமும் உள்ளத்தில் வாட்டத்தை ஏற்படுத்தி விட்டது! உங்களைப் பற்றிச் சென்ற வருட விடுமுறையில் ஆசிரியர் SKM ஹாஜா முகைதீன் அவர்கள் மிகவும் பாராட்டிச் சொன்னது என்றும் என் நினைவை விட்டும் அகலாது; அன்று முதல் உங்கள் மீது என் அன்பு ஊற்றெடுத்தது.
// பொதுவாக நீண்ட ஆர்டிக்கிள் எழுதி வஞ்சிப்பதில்லை என சபதம் எடுத்திருப்பதால்//
திரும்பத் திரும்ப படித்தபோது மேலே கண்ட சொற்றொடரைக் காணும்போது கத்தத் தோன்றியது
OBJECTION MY LORD!
அப்போ நாங்கள் வஞ்சிக்கிறோமா? எங்கே நண்பர் அலாவுதீன், நெய்னா ஆகியோர்? சப்போட் ப்ளீஸ்.
Majistrate Shaab....
typing error : "நான்" என்ற வார்த்தை முன்னால் எழுத மறந்துவிட்டேன்.
Right word: நான் பொதுவாக நீண்ட ஆர்டிக்கிள் எழுதி வஞ்சிப்பதில்லை என சபதம் எடுத்திருப்பதால்...
இப்படி நான் பாதிக்கப்பட்டு எழுதுவதற்க்கு காரணம்.
"காப்பி / பேஸ்ட் மற்றும் விளக்கமாக இ-மெயில் என்று ஒரு தீசிஸ் விசயத்தை ஒரு இ-மெயிலில் கொண்டுவந்து கொட்டி "படிடா...படிக்காட்டியும் உன் காதை திருகி விடுவேன்" என்கிற மாதிரி சில சகோதரர்கள் என் இன்பாக்ஸ் நிறப்பும் போராட்டம் நடத்துவது.
இமயமலையில் ஜோதி தெரியுது / பள்ளிவாசல்ல படுத்துக்கிடக்கும்போது கனவில் வந்த பெரியவர் சொன்னார்.......இதை நீ ஃபார்வேர்ட் செய்யாட்டா உருப்பட மாட்டே' என்று பைப் அடியில் பெண்கள் திட்டிக்கொள்வது மாதிரி 'சாபம்" அட்டாச்மென்ட்டுடன் எழுதப்படும் இ-மெயில்.
எப்போதோ நடந்த விசயம் இப்போது நடந்த மாதிரி எழுதப்படும் இ-மெயில்.
இப்படி பல கொடுமைகளுக்கு ஆளாகியிருக்கேன். [ ஏதாவது மறுவாழ்வு திட்டம் ஏதுலயாவது உதவித்தொகை கிடைக்குமா?]
வழக்கின் தன்மையை உத்தேசித்தும், குற்றம் சாட்டப்பட்டவர் ஏற்கனவே மிகவும் பரிதாபமாக பாதிக்கப்பட்டு மறுவாழ்வுத்திட்டம் வரை கோரிக்கை வைப்பதாலும் , வழக்குத்தொடுத்தவரும் அத்தைகைய பாதிப்புகளுக்கு ஆளாகி இருப்பதை உத்தேசித்தும், வழக்கு தொடுத்தவரின் முழு சம்மதத்துடன் வழக்கு வாபஸ் பெறப்படுகிறது.
சூப்பர் ஆர்ட்டிக்கிள்.... கடைசி ரயிலடி.... ம்ம்ம்ம்
ம்ம்
ம்ம்ம்....
Post a Comment