Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கள்ளக்காதல் ! 7

அதிரைநிருபர் பதிப்பகம் | May 15, 2012 | , ,


ஒருவர் இன்னொருவரை ஏமாற்றி போலியான உறவுமுறையை ஏற்படுத்திக்கொண்டு தங்களின் அற்ப உடல் இச்சையை தனித்துக் கொள்வதையே “கள்ளக்காதல்” என சமூகத்தால் குறிப்பிடப்படுகிறது, ஏன் இதுவும் விபச்சாரமே !

1. மனிதாபிமானம், அன்பு, பாசம், குழந்தைகள், அவர்களின் எதிர்காலம் என்று எதையுமே பொருட்படுத்தாமல் சுயநலம், சபலம், காமம், துரோகம் என்பதை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படும் கேடு கெட்ட மனிதர்கள் ஒரு வகையாகவும்.

2. கணவன் கடல் கடந்தோ அல்லது ஊர்விட்டு ஊர் சென்று எங்கெல்லாம் போய் குடும்பத்துக்காக உழைத்துக் கொண்டிருக்கையில் இங்கே கள்ளக்காமுகனோடு தொடர்பு ஏற்படுத்தி அவர்களின் போலியான அன்பையும், பாசத்தையும் உண்மை என நம்பி தனது குடும்ப அந்தரங்க ரகசியங்களைச் சொல்லி அவர்களிடம் ஏமாந்து போனவர்கள் மற்றொரு வகையாகவும்.

3. பிள்ளைகள் கல்வி கற்க வேண்டி வீட்டை விட்டு வெளியேறி, பள்ளிக்கூடம். கல்லூரி, ட்யூசன், கம்ப்யூட்டர் கிளாஸ், ட்ரைனிங் கிளாஸ், ஹாஸ்டல், இண்டெர்நெட் கஃபே, கிளப், பஃப்பே, இன்பச்(!!?)சுற்றுலா என்று போகும் இடங்களில் அவர்கள் “காதல்” எனும் கர்ம வலையில் சிக்கிக்கொண்டு இந்த இனம்புரியாத வயதில் சின்னா பின்னமாகி போனவர்கள் ஒரு வகையாகவும்.

4. பொழுதைப் போக்குகின்ற விழாவில் ஏற்பட்ட சந்திப்பு, அலைபேச் எண்கள் பறிமாற்றம், இணையத் தொடர்புகள் மூலம் ஏற்பட்ட தொடர்பு போன்றவற்றால் வீட்டை விட்டு ஓடிப் போனவர்கள் இன்னொரு வகையாகவும்.

5. குடும்ப உறுப்பினர்கள், அக்கம்பக்கத்தினர் சிலரால் ஏற்பட்ட முறையற்ற தொடர்பைக் கொண்டுள்ளவர்கள் மற்றொரு வகையாகவும்.

என சமூகத்தில் இருக்கத்தான் செய்கின்றனர்.

பிள்ளையின் வாழ்க்கை, குடும்ப மானம், இஸ்லாத்தின் கண்ணியம். இவற்றை முன்னிறுத்தி. கவனமாக இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.. இவ்விசயத்தில் சிந்தித்து செயல்பட வேண்டியது ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் மிக மிக அவசியம்.

தங்கள் பிள்ளைகளுக்கு மார்க்கத்தை கற்றுக்கொடுத்து அவர்களின் வாழ்வில் முன்னேற்றம் அடைய உறுதுணையாக இருங்கள். தங்களின் பொறுப்பை மறந்து, தங்களது பிள்ளைகளுக்கு ”செல்லம்” ”பாசம்” “ஃபேஷன்”  என்ற பெயரில் சுதந்திரம் கொடுத்து. பிள்ளைகளின் ஆசைகளை பூர்த்தி செய்வதாக கருதி அவர்கள் வழிகெட காரணமாக இருக்க வேண்டாம்.

பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை தொழுகையை நிலை நிறுத்தும்படி அடிக்கடி ஏவுங்கள், அதனை நினைவூட்டிக் கொண்டே இருங்கள் ”தொழுகை மானக்கேடான காரியத்தை விட்டும் பாதுகாக்கும்” இந்த நபி மொழியை அறியாத அதிரையர் யாரும் உண்டா ? அப்புறம் ஏன் இரட்டை வேடம் !??

பெற்றோர்களே !! உங்கள் பிள்ளைகளை நரகத்தின் தீயிற்கு இறையாக வளர்க்காதீர்கள். உங்கள் குழந்தைகள் உங்களுக்கு எதிராக சாட்சி சொல்லும் நிலைக்கு ஆகிவிடாதீர்கள். இவ்வுலகில் - நாகரிகத்தையும், கவுரவத்தையும், அந்தஸ்தையும் விட,

ஈமான் (இறை நம்பிக்கை)
மானம்
மரியாதை 
குடும்ப நலன்

இவைகள் அனைத்தையும் விட தூய்மையான இறையச்சம் அதி முக்கியம். 

அல்லாஹ். நம் அனைவரையும். மானக்கேடான விஷயத்தில் இருந்து பாதுகாத்து, ஈமானோடு வாழவைத்து முஸ்லிமாக மரணிக்க செய்வானாக! ஆமீன்.

சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! தொடரும்...

7 Responses So Far:

sabeer.abushahruk said...

//. பிள்ளைகள் கல்வி கற்க வேண்டி வீட்டை விட்டு வெளியேறி, பள்ளிக்கூடம். கல்லூரி, ட்யூசன், கம்ப்யூட்டர் கிளாஸ், ட்ரைனிங் கிளாஸ், ஹாஸ்டல், இண்டெர்நெட் கஃபே, கிளப், பஃப்பே, இன்பச்(!!?)சுற்றுலா என்று போகும் இடங்களில் அவர்கள் “காதல்” எனும் கர்ம வலையில் சிக்கிக்கொண்டு இந்த இனம்புரியாத வயதில் சின்னா பின்னமாகி போனவர்கள் ஒரு வகையாகவும்/

படுமுன் தெளிக:
ஒன்பதாம் வகுப்பு
பத்தாம் வகுப்போடு
ஓடிப்போனது...
பெற்றோருக் கிடை
வகுப்புக் கலவரம்!

போய்ச் சேர்ந்த இடத்தில்
தேடிச் சென்றது இல்லை -
வீட்டுப் பாடம் ஒன்றும்
விபரம் புரியவில்லை -
கோனார் உரையிலும்
குறிப்பெதுவும் இல்லை!

குறுஞ்செய்தியில்
முடங்கிய விரல்களால்...
வெறுங்கஞ்சிக்குக்கூட
வேலை யில்லை!

கண்கள் வழி
கற்ற காதலும்...
காதலன் வழி
பெற்ற காமமும்...
வயிற்றுப் பசியில்
வெற்றாகிப் போனது!
கண்மனியும் பொன்மனியும்...
காவியமும் ஓவியமும்...
காசில்லா கதிகேட்டில்
காலாவதி யானது!

அவனுக்கு அவளும் -
அவளுக்கு அவனும் -
அலுத்துப் போன தொரு
அதிகாலையில்...

அரவணைக்க அம்மா,
ஆறுதலுக்கு அப்பா,
அந்தரங்கத் தோழியென
அவதரித்த அக்கா,
அம்மா சாயலில்
அருமைத் தம்பி,
இடுக்கன் களைய
இனியதொரு சகி,
இழந்ததெற் கெல்லாம்
ஏங்கியது மனது...!

மின்வெட்டு இரவொன்றின்
மிதக்கும் மின்மினி...
மழையற்ற தினமொன்றில்
புல்நுனியில் பனித்துளி...
என -
மிகைத்த காதல்;

முடியாத இரவு...
விடியாத வானம்...
படியாத உரவு ...
உலர்ந்த மலர்வனம்...
உருகாத மேகம்...
என -
எதிர்மறை எண்ணங்களில்
அஸ்தமித்தது!

ஏனோ...
பிடிமண் இடுகையில்
நொடிநேரம் காட்டும்
முகமொன்று -
குழிக்குள்...
மின்னி மறைந்தது!

முடிவைத் துவக்கமென்று
மயங்கும் பிஞ்சுகளே...
பழுக்கும் பருவம்வரை
பொறுத்தலே பகுத்தறிவு!

- சபீர்

sabeer.abushahruk said...

//தங்கள் பிள்ளைகளுக்கு மார்க்கத்தை கற்றுக்கொடுத்து அவர்களின் வாழ்வில் முன்னேற்றம் அடைய உறுதுணையாக இருங்கள். தங்களின் பொறுப்பை மறந்து, தங்களது பிள்ளைகளுக்கு ”செல்லம்” ”பாசம்” “ஃபேஷன்” என்ற பெயரில் சுதந்திரம் கொடுத்து. பிள்ளைகளின் ஆசைகளை பூர்த்தி செய்வதாக கருதி அவர்கள் வழிகெட காரணமாக இருக்க வேண்டாம்.//

மேலும் மேலும் நசுங்குது சொம்பு:
ஊரைவிட்டு
விலக்கி வைத்தனர் என்னை
நீரைவிட்டு
நிலத்தி லிட்டனர் மீனை

ஊரினம் யாவரும்
ஓரின மாயினர்
எனக் கெதிராய்
காரண மாயிரம்
தோரண மாயின

சீர்திருத்தம் சொன்னவரை
பெரியார் என்றனர்
சிறுதிருத்தம் சொன்ன எனை
பிரிந்துபோ என்றனர்

பஞ்சாயத்தில்
புலிவேஷத்துடன்
பத்தாயத்து
எலிகள்…
படிப்பறிவு இன்றியே
ஒரு
பிடி பிடித்தன

பிஞ்சுகள் இருவர்
பிழை செய்தனர்
விடியோ விளையாட்டென
வாழ்க்கயை எண்ணினர்
வாழத் தலைப்பட்டு
வீடுகள் துறந்தனர்

ஓடிப் போனவரைத்
தேடிப் பிடித்தனர்
ஊர்கூடி யமர்ந்து
ஓயாது பேசினர்



சட்டமோ
சுய அறிவோ
இன்றி
தீவட்டித் தீர்ப்பு ஒன்றை
சொல்லிவைத்தனர்

பஞ்சாயத்துக்குப்
பணம் கட்டி
பாவம் தீர்க்கச் சொன்னனர்

பிள்ளைகள் தவறுக்கு
பெற்றோருக்குத் தணடனை

ஒழுக்கக் கோட்பாடுகளில்
ஊருக்குப் பொருப்பில்லையா
ஓடிப்போகாமல் தடுக்க
ஊர் என்ன செய்தது

தவற்றை
நிகழாமல்
திருத்தி
தடுக்கத்
தவறிய
பஞ்சாயத்துக்கு
என்ன தண்டனை

சொல்லி முடித்ததும்
என்னை
தள்ளி வைத்தனர்

மசால் வடையும்
மலாய் சாயாவும்
மினெரல் வாட்டரைக்
குடித்தும் கொப்பளித்தும்
கலைந்துச் சென்றது பஞ்சாயத்து

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

//அல்லாஹ். நம் அனைவரையும். மானக்கேடான விஷயத்தில் இருந்து பாதுகாத்து, ஈமானோடு வாழவைத்து முஸ்லிமாக மரணிக்க செய்வானாக! ஆமீன். //

ஆமீன் ஆமீன் ஆமீன்.இதுதான் வேண்டும்

அதிரை சித்திக் said...

கள்ள காதல்..மனிதவாழ்வை கற்காலத்திற்கே

கொண்டுசெல்லும் கொடூர தன்மையுடையது

இது பற்றி சந்தர்ப்பம் வரும்போது கருத்துபரிமாற

வேண்டும் என காத்திருந்தேன் இதற்க்கு பக்க பக்கமாய்

எழுத வேண்டும் ..சுருக்கமாய் சொல்ல விளைகிறேன்

மனிதன் நாகரீகம் எட்டாத கற்காலத்திற்கு முன்

பசி தீர்க்க ஒன்று கூடி வேட்டையாடுதல் தன்னை

காத்து கொள்ள ஒன்று கூடுதல் எண்டிருக்க ..தனது

உடல் இச்சையைதீர்க்க ஒருபெண்ணை இரு ஆண்

அடைய நினைக்கும்போது பலமுள்ள ஆண் மற்றவனை

கொன்று விற்று பெண்ணை அடைவான் அந்த அளவிற்கு

ஆதி மனிதனின் நிலை நாகரீகம் அதையும் தாண்டி

மறு உலக வாழ்வு ..மார்க்கம் வழிகாட்டுதல் என வந்த

பின் பெண்ணுக்கு ஒரு மரியாதை ,அவள் பெரும் பிள்ளைகளுக்கு

மகுடம் என எத்தனையோ சிறப்புகள் பெற்று வாழ்வாங்கு

வாழ்ந்த காலம் இருந்தது ..கள்ள காதல் என்ற பூதம் ..மனிதனை

மீண்டும் கற்காலத்திற்கே கொண்டு செல்கிறது கற்காலத்தில்

உயிர் இழந்தது ஆண் . ஆனால் இந்த காலத்தின் கள்ள காதலால்

மானம் இழந்து உண்ண உணவுக்கு வழியின்றி நாடு வீதியில் நிற்பது

பெண்தான் பெண்தான் பெண்தான் ...பெண்களே அற்ப ஆசைக்காக

மதி இழந்து வாழ்க்கையை இழந்து விடாதீர்கள் ..

Yasir said...

அல்லாஹ். நம் அனைவரையும். மானக்கேடான விஷயத்தில் இருந்து பாதுகாத்து, ஈமானோடு வாழவைத்து முஸ்லிமாக மரணிக்க செய்வானாக! ஆமீன்.

அதிரை சித்திக் said...

ஐ வேலை தொடர்ந்து தொழுது வந்தால்

மான கேடான விசயத்திலிருந்து அல்லாஹ்

நம்மை பாது காப்பான் என எங்கோ பயானில்

கேட்ட ஞாபகம் ...தொழுவோம் ...தொழுது துஆ செய்வோம்

இப்னு அப்துல் ரஜாக் said...

அல்லாஹ். நம் அனைவரையும். மானக்கேடான விஷயத்தில் இருந்து பாதுகாத்து, ஈமானோடு வாழவைத்து முஸ்லிமாக மரணிக்க செய்வானாக! ஆமீன்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு