இன்று (22-05-2012) மாலை மேலத்தெரு கந்தூரியின்போது மேலத்தெருவைச் சேர்ந்த நால்வரால், நடுத்தெரு 19ஆம் வார்டு உறுப்பினர் சகோதரி சவ்தாவின் கணவரும் த.மு.மு.க. தொண்டருமான சகோதரர் அஹ்மது ஹாஜா தாக்கப்பட்டார்.
நமதூரில் கந்தூரிகள் களையிழக்கத் தொடங்கியுள்ள இக்காலகட்டத்தில், அல்லாஹ்வின் இல்லமான பள்ளிவாயில்களைக் கடக்கும்போது, தாரை தப்பட்டை டான்ஸு போன்றவை இருக்கக்கூடாது என்று மேலத்தெரு தவ்ஹீதுச் சகோதரர்களால் காவல்துறையிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டு, ஆர்.டி.ஓ. முன்னிலையில் இருதரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி, அதிரையில் உள்ள பள்ளிகளுக்கு முன்னும் பின்னும் நூறு நூறு மீட்டர்களுக்குள் எவ்விதை ஓசையும் இருக்கக்கூடாது என்று ஆர்.டி.ஓ. உத்தரவிட்டிருந்தார்.
அந்த உத்தரவு மேலத்தெரு பாக்கியாத் ஸாலிஹாத் பள்ளியில் கடைபிடிக்கப்பட்டு, கந்தூரி ஊர்வலம் மௌன ஊர்வலமாகச் சென்றது. தக்வாப் பள்ளிக்கு ஊர்வலம் வரும்போது மக்ரிபுத் தொழுகை நடைபெற்றுக்கொண்டிருந்தது. பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் பள்ளிவாயிலில் கடைபிடிக்கப்பட்ட அமைதியை கந்தூரி ஊர்வலத்தினர் தக்வாப் பள்ளி அருகில் கைவிட்டனர்.
மக்ரிபுத் தொழுகை முடிந்து ஸலாம் கொடுக்கும்போது வழக்கமான முழக்கங்களுடன் கந்தூரி ஊர்வலம் கடப்பதைக் கண்ட சகோதரர் அஹ்மது ஹாஜா, ஊர்வலத்தை மேற்பார்வையிட வந்து, தக்வாப்பள்ளிக்குப் பின்புறம் நின்றிருந்த நமதூர் இன்ஸ்பெக்டர் செங்கமலக் கண்ணனிடம் சென்று புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அங்கிருந்து அகன்று மேள-தாளக்காரர்களிடம் சென்று பாட்டு-தாளங்களை நிறுத்துமாறு சொல்வதற்காகச் சென்றுவிட்ட வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்ட கந்தூரி போதையினர், சகோதரர் அஹ்மது ஹாஜாவைத் தக்வாப் பள்ளிக்குப் பின்புறமுள்ளஅவரது வீட்டுச் சந்தை அடுத்த சந்துக்குள் தள்ளிச் சென்று கீழே தள்ளி, அவரது நெஞ்சிலும் இடுப்பிலும் மாறி, மாறி கால்களால் உதைத்தும் கைகளால் தாக்கியும் நையப் புடைத்துள்ளனர். ஒத்தைக்கு ஒத்தை என்றால் சமாளிக்கக்கூடிய சகோதரர் அஹ்மது ஹாஜா, கயவர்கள் நான்கு பேர் என்பதால் நிலைகுலைந்து போனார். பலத்தை காயமடைந்த அவர், தற்போது பட்டுக்கோட்டை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தனிப்பட்ட முன்விரோதம் ஏதுமில்லாத இந்தக் காட்டுமிராண்டித் தாக்குதல், கந்தூரிக் கமிட்டித் தலைவர் மற்றும் குழுவினரின் தூண்டுதலால் திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கும் என்பதே நடுநிலையாளர்களின் ஐயமாகும்.
சகோதரர் அஹ்மது ஹாஜாவைத் தாக்கிய நால்வரின் பெயர்களைக் குறிப்பிட்டு, நகர த.மு.மு.கவினர் திரளாகச் சென்று, அதிரை நகரக் காவல்துறையில் புகார் அளித்திருக்கின்றனர். புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர் அதற்கான சான்றிதழைத் த.மு.மு.கவினருக்கு வழங்கியுள்ளனர். அத்துடன், எஃப் ஐ ஆர் பதிவு செய்து, குற்றவாளிகளை நாளைக்குள் கைது செய்து விசாரிக்கப் போவதாக உறுதியளித்துள்ளனர். த.மு.மு.கவின் மாநிலச் செயலாளர் தமீமுன் அன்ஸாரி, டி எஸ் பியிடம் தொலைபேசி வாயிலாக புகார் செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேற்கொண்டு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக நகர த.மு.மு.கவினர் நாளைக் காலை பத்து மணிக்கு அலுவலகத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தவுள்ளனர்.
குற்ற நிகழ்வு, நகர காவல்துறை ஆய்வாளர் செங்கமலக் கண்ணன் ஸ்பாட்டில் இருக்கும்போது நடந்தேறியது என்பதால் குற்றவாளிகள் நிச்சயம் தப்பித்துவிட முடியாது.
இச்சம்பவத்தில் நடுநிலை வகிக்க வேண்டிய பொறுப்பான பதவியில் இருப்பவர்களே, கந்தூரிக் கோஷ்டியினருக்கு வெளிப்படையான ஆதரவாளராகத் தன்னை இனங்காட்டிக் கொள்வதும் குற்றவாளிகளுக்குப் பரிந்து பேசுவதும் அவர்களது தூய சேவைகளுக்கு இழுக்கைத் தேடித் தருவனவாகும்.
கந்தூரி எனும் இழிவிலிருந்து நமதூர் என்றைக்கு விடுபடுகிறதோ அன்றைக்குத்தான் அதிரை முஸ்லிம்களின் மானம் காக்கப்படும்.
-அதிரைநிருபர் குழு
29 Responses So Far:
அஹ்மத் ஹாஜாவை தாக்கியவர்கள் கண்டனதுகுரியவர்கள் ....அனாசாரத்தை
தடுக்க முயன்ற அஹ்மத் ஹாஜா உண்மையிலே ஒரு வீரமான ஆண்மகன் .அவரை தாக்கியவர்கள் நிச்சயமாக ஆண்களாக இருக்க முடியாது .
ஓரளவுக்கு மார்க்கம் ,ஷிர்க் பற்றி விரிவாக அறிந்த இந்த காலத்திலும் இந்த மாதிரி மூடர்கள் இன்றும் தெளிவு பெறாமல் இருப்பது வேதனையானது .
அல்லாஹ் அந்த மூடர்களுக்கு ஹிதாயத்தை அளிப்பானாக ..ஆமீன் !
அஸ்ஸலாமு அலைக்கும். மச்சான் அஹமது ஹாஜாவை தாக்கியவர்களும் நம் சகோதரர்கள் என்பது நினைத்து மிக வேதனையாக இருக்கிறது. இது காட்டுமிராண்டித்தனம். அல்லாஹ்தான் நம்மவர்களுக்குள் ஒற்றுமையை ஏற்படுத்துவானாக. மச்சான் குணம் பெற அல்லாஹ்வை வேண்டுகிறேன். ஆமீன்.
கிரன்&குடும்பத்தினர்.
கந்தூரி ஒரு மானக்கேடான விஷயம். கந்தூரியின் பெயரால் சக ஊர்க்காரரைத் தாக்கியது ஈனச்செயல். இப்படி நான்கு பேர் சேர்ந்து ஒருவரைத் தாக்கியது ஆண்மையல்ல.
இதெல்லாம் என்றைக்குத் திருந்தப் போகிறதோ. அடங்கியிருப்பவருக்கு ஈமான் கொண்ட சகோதரர்களே...நேர்வழி நாடுங்கள்.
இந்தக் கோழைத்தனமான தாக்குதலுக்கு எதிராக மக்கள் ஒன்றாய் இருந்து - ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்,இந்த செயல் தெரு பிரிவினையை ஊட்டாதிருக்க வேண்டும்.முதலில் கந்தூரிகள் தடை செய்தால்தான் நாட்டுக்கு நல்லது.சங் பரிவாரும்,தர்ஹா கோஷ்டியும் ஒண்ணுதான்.
இந்த வன்முறைத் தாக்குதல் கடுமையான கண்டனத்திற்குரியது. கந்தூரி எனும் நச்சு மரத்தின் வேரைப் பிடுங்காமல் வெறும் இலை-கிளைகளை அகற்ற முயல்வது பயனற்றதாகும்.
கந்தூரி எனும் புற்றுக்குப் பால் வார்ப்பவர்களாக இருக்கும் தலைமைத்தனம் பெற்று இருப்பவர்களது பதவிகள் பறிக்கப்பட வேண்டும்.
கந்தூரியில் ஈடுபடுபவர்கள், அதற்கு ஆதரவளிப்பவர்கள் அனைத்து முஹல்லாவின் பொறுப்புக்கு வரமுடியாத ஒரு பைலாவை அனைத்து முஹல்லா அமைவதற்கு அரும்பாடுபட்டவர்கள் ஏற்படுத்தவேண்டும்.
தீமையிலிருந்து நன்மை என்பதற்கேற்ப, இந்த வன்முறை நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு, பல அமைப்புகளில் பணியாற்றும் கந்தூரி எதிர்ப்பாளர்கள் ஒன்றுசேர வேண்டும்; கந்தூரிக்கு எதிராக உரக்கக் குரல் கொடுக்க முன்வர வேண்டும்.
குர்ஆன்-ஹதீஸ் எனச் சொல்ல ஆரம்பித்தாலே சிலருக்கு அலர்ஜியாக இருக்கிறது. அதற்காகச் சொல்லாமல் இருக்கமுடியாது:
"மார்க்கம் அறியாத மடையர்கள் மக்களுக்குத் தலைவர்களாவார்கள். மடையர்களான அவர்கள் தாமும் வழிகெட்டு, மக்களையும் வழிகெடுப்பார்கள். அது, மறுமைநாள் அண்மிவிட்டது என்பதற்கான அடையாளங்களுள் ஒன்றாகும்" - நபிமொழி
இந்த காலத்திலும் கந்தூரி எடுக்கும் இந்த வீணா போனவர்களுக்கு மறுமையில் தந்தூரி அடுப்புதான் இருப்பிடம் என்பது
ஏன் இவர்கலுக்கு விளங்க வில்லை
ரஜப், ஸபர் மாதத்தில் நடக்கும் கேவலமான இந்த அனாச்சாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க பிறை ஒன்றாகிய இன்று முதல் தீவிர தடுப்பு முயற்சியில் சம்பந்தப்பட்டவர்களோடு மித அணுகுமுறையை கையாள்வோம்.
சகோ.ஹாஜாவைத்தாக்கியது கடும் கண்டனத்துக்குறிய ஈனச்செயல்...இதனை தெரு சார்ந்த பிரச்சனையாக்கிவிடாமல்..பொதுப்பிரச்சனையாக கருதி...கந்தூரி என்ற சவ ஊர்வலத்துக்கு இப்பிரச்சனையுடன் முற்றிப்புள்ளி வைக்க அனைத்து முஹல்லா அமைப்புகளும் முன்வரவேண்டும்
மதம் மாறியும் மனம் மாறவில்லை ..
இறந்து போன ஒருவரின் நினைவு
நாளுக்காக உயிரோடு இருப்பவரை கொள்ள
நினைக்கும் மூடர்கள் ..என்றோ ஒருவர் மதம் மாறி
இஸ்லாத்திற்கு வந்தாலும் மனம் மாறாமல் கோவில்
கலா சாரத்தை அப்படியே தர்கா வலிபாட்டுமூலம்
தொடர்ந்து செயல் படுத்தி வருவது வன்மையாக
கண்டிக்க தக்கது ,,இவர்கள் பெயரளவில் முஸ்லீம்கள்
மதம் மாறினாலும் இவர்கள் மனம் மாறவில்லை
என்று இவர்கள் செவிக்குஎன்றுதான் எட்ட போகிறதோ தெரியவில்லை
முஸ்லீம்கள் எண்ணிக்கையில் அதிகம் இருப்பதில் புண்ணியம் இல்லை
இறை மறை குர் ஆண் நபி (ஸல் ) போதனை ..,இவைகளை
கடை பிடிக்கும் சிறு கூட்டத்தார் இருந்தால் கூட சக்தி படைதவர்களாகவும்
விண்ணில் மின்னும் நட்சதிரங்கலாகவும் மின்னுவார்கள்
அஹமது ஹாஜாவை அடித்த கரத்தினை இறைவன் இம்மையிலும்
மறுமையிலும் அல்லாஹ் தண்டிப்பனாக ஆமீன் ஆமீன் ..,
அஸ்ஸலாமு அலைக்கும்
எத்தனை இயக்கங்கள்,அமைபுகள் தோன்றினாலும் அல்லாஹ்வும் அவனது சத்திய தூதரும் காட்டி தந்த வழியில் அதாவது குரான் ஹதீஸ் அடிப்படையில் அமைந்த தலைமை அதற்கு கட்டுப்பட்ட மக்கள் என்ற மாற்றம் வராத வரையில் உண்மையில் சமுதாயதிற்க்கு இம்மை மற்றும் மறுமைக்கு எந்த பயனும் இல்லை- அதற்க்கு சத்திய தூதரும் ஸஹாபாக்களுமே சாட்சி - அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக
அஸ்ஸலாமு அலைக்கும்
எத்தனை இயக்கங்கள்,அமைபுகள் தோன்றினாலும் அல்லாஹ்வும் அவனது சத்திய தூதரும் காட்டி தந்த வழியில் அதாவது குரான் ஹதீஸ் அடிப்படையில் அமைந்த தலைமை அதற்கு கட்டுப்பட்ட மக்கள் என்ற மாற்றம் வராத வரையில் உண்மையில் சமுதாயதிற்க்கு இம்மை மற்றும் மறுமைக்கு எந்த பயனும் இல்லை- அதற்க்கு சத்திய தூதரும் ஸஹாபாக்களுமே சாட்சி - அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக
இங்கே இயக்க பேதமின்றி அவரவர்கள் தங்களது கடமையை சரியாகத்தான் செய்திருக்கிறார்கள், முன்கூட்டியே காவல் துறையிடம் முறையிட்டும் இருக்கிறார்கள்... ஆனால் !
முரடர்கள், சமயோசிதமில்லாத மூடர்கள் என்றுதான் சொல்ல வேண்டும்...
பாதிக்கப்பட்டவனை மருத்துவமணைக்கு எடுத்துச் சென்றாகிவிட்டது, அதிலே ஒரு கூட்டம் தான் இருக்கும் பதவியை முன்னிருத்திக் கொண்டு பாதிக்கப்பட்டவனுக்கு எதிராக புகார் செய்ய காவல் நிலையம் வந்து கச்சல் கட்டி நின்றதை கேள்விப் படும்போது என்னவென்று சொல்வது !??
தனிப்பட்ட விரோதம் அவ்வளவு கொடூரமானதா ? அந்த அளவுக்கு தனிமனிதனின் சிந்தனையை மழுங்கச் செய்துவிடுமா ? தனக்கு பிடிக்க வில்லை என்றால் எந்தவிதமான சூழ்நிலையாக இருந்தாலும் அங்கே தன் ஆதிக்கத்தை செலுத்த நினைக்கும் இவர்களை நினைத்தால் வேதனையாக இருக்கிறது...
பதவியிலிருக்கும் மமதை, அடுத்தவரை மதிக்காத தன்மையின் வெளிப்பாடு என்றுமே நிலைக்காது !!
வண்மையாக கண்டிக்கபடவேண்டிய செயல்..!
அஸ்ஸலாமு அலைக்கும்.
'கந்தூரி போதை' எனும் தலைப்பில் அதிரை வலைதளங்களில் வெளியான செய்தியில் கட்டுரையாளரின் கீழ்க்கண்ட பகுதி நீக்கப்பட்டது கண்டனத்திற்குரியது. அவை அபேத-வின் நலனில் அக்கறையுடனும், கடந்த காலங்களில் ஏற்பட்ட தவறுகள் தொடரக் கூடாது என்ற நன்நோக்கத்திலும் சேர்க்கப்பட்டது என்பது கவனத்திற்குரியது. தவறுகள் ஏற்படுவது இயல்பு. அதைச் சுட்டிக் காட்டாத சமுதாயமும் திருத்திக் கொள்ளாத தலைவர்களும் உருப்பட்டதாகச் சரித்திரமில்லை. யாரையும் இழிவுபடுத்தாத, கண்ணியமான அந்த நீக்கப்பட்ட பகுதி சேர்க்கப்பட வேண்டும்.
Quoted
> இச்சம்பவத்தில் நடுநிலை வகிக்க வேண்டிய அதிரை நகரத் தலைவர் அஸ்லம், கந்தூரிக் கோஷ்டியினருக்கு வெளிப்படையான ஆதரவாளராகத் தன்னை இனங்காட்டிக் கொள்வதும் குற்றவாளிகளுக்குப் பரிந்து பேசுவதற்காகக் காவல்நிலையம்வரை வருவதும் அவரது தூய சேவைகளுக்கு இழுக்கைத் தேடித் தருவனவாகும்.>
Unquote
அஸ்ஸலாமு அலைக்கும். மார்க்கம் தெளிவாக வரையறுக்கப்பட்ட பின்பும். கூட்டுக்கு பின்னால் வரும் கூத்தாடிகளுக்கு ஊட்டச்சத்து கொடுத்து காப்பாற்றி வரும் தெளிவற்ற தலைப்பாகைகளை களைவது துரிதமாக எடுக்க வேண்டிய முடிவு.
பேரூராட்சித் தலைவர் இந்த கூத்தாடிகளுக்கு வக்காலத்து வாங்கினார் என்ற செய்தியை என்னால் நம்ப முடியவில்லை. அரசியலில் பல்வேறு தரப்பினர் பலவேறு கொள்கைகளை கொண்டிருந்தாலும், நீதி, மார்க்கம் என்ற விடயங்களில் நல்லவர்கள் ஒரே கட்சியில்தான் இருக்கவேண்டும். குடும்பமும், தெருவும் அவர்களை பிரிக்கக்கூடாது.
யாருக்கு யார் சிபாரிசு செய்கிறார்கள் என்பதைக் கொண்டே அவர்கள் எந்த கொள்கையை சார்ந்தவர் என்றும், எப்படிப்பட்ட குணத்திற்குரியவர் என்றும் அடையாளம் கண்டு கொள்ளலாம். ஒரு ஊருக்கு தலைவர் என்பவர் தனது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை நியாயம் செலுத்துவதில் திணிக்கக்கூடாது. அநியாயங்களுக்குத் துணை போகக்கூடாது.
நடந்த நிகழ்வுகளுக்கு அநியாயம் செய்யப்பட்டவரிடம் சுய விளக்கம் அளித்து அல்லது தனது தரப்பில் தவறு நடந்திருந்தால் மன்னிப்புக் கேட்டு நீதியுடன் நடப்பதே சிறந்த செயலாகும்.
அனைத்து முஹல்லா கூட்டத்தில் கே.கே. ஹாஜா அவர்கள் பேரூராட்சி தலைவரை தாழ்த்தி பேசியதில் ஏற்பட்ட அமளியில் தனக்கு சாதகமாக பேசிய இருவர் சகோ அகமது ஹாஜாவை தாக்கிய பொட்டைக் கும்பலில் இருந்தனர் என்பதற்காக மொத்தக் கும்பலுக்கும் வக்காலத்து வாங்கியும், சகோ. அகமது ஹாஜா அவர்கள் மேல் வலுக்கட்டாயமாக FIR போடவைததும் பேரூராட்சி தலைவர்தான் என்பதையும் அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்.
அடுத்தக் கட்ட நடவடிக்கை என்ன எடுக்கப்போகிறார்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
முஹம்மத் தமீம்
கந்தூரியின் வீரியத்தை குறைக்க
கந்தூரிக்கு ஒரு வாரத்திற்கு முன்பாக
முட்டாசு கடை ..மற்றும் குழந்தைகள் விரும்பும்
விளையாட்டு பொருள் விற்பனை விதவிதமான
உணவுபொருட்கள் குறிப்பாக வான்கோழி பிரியாணி
முட்டை போராட்டா என விற்று பாலா போன கந்தூரிக்கு
சலிப்பை ஏற்படுத்தி விட வேண்டும் ..பால போன நப்சை கட்டு படுத்த
மேலும் சிந்திப்போம் ..
///அனைத்து முஹல்லா கூட்டத்தில் கே.கே. ஹாஜா அவர்கள் பேரூராட்சி தலைவரை தாழ்த்தி பேசியதில் ஏற்பட்ட அமளியில் தனக்கு சாதகமாக பேசிய இருவர் சகோ அகமது ஹாஜாவை தாக்கிய பொட்டைக் கும்பலில் இருந்தனர் என்பதற்காக மொத்தக் கும்பலுக்கும் வக்காலத்து வாங்கியும், சகோ. அகமது ஹாஜா அவர்கள் மேல் வலுக்கட்டாயமாக FIR போடவைததும் பேரூராட்சி தலைவர்தான் என்பதையும் அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்.//
//Quoted
> இச்சம்பவத்தில் நடுநிலை வகிக்க வேண்டிய அதிரை நகரத் தலைவர் அஸ்லம், கந்தூரிக் கோஷ்டியினருக்கு வெளிப்படையான ஆதரவாளராகத் தன்னை இனங்காட்டிக் கொள்வதும் குற்றவாளிகளுக்குப் பரிந்து பேசுவதற்காகக் காவல்நிலையம்வரை வருவதும் அவரது தூய சேவைகளுக்கு இழுக்கைத் தேடித் தருவனவாகும்.>
Unquote//
-=-------------------------------------------------------------
ஊருக்கு பொதுவான தலைவர்( ? ) என்ற முறையில் அஸ்லம் அவர்கள் பதில் அளிக்க கடமைப்பட்டுள்ளார்கள் .
இந்த வன்முறைத் தாக்குதல் கடுமையான கண்டனத்திற்குரியது.
அரசியல் காழ்ப்புணர்வே இத்தாக்குதலுக்கு காரணம்.
தீமையிலிருந்து நன்மை என்பதற்கேற்ப, இந்த வன்முறை நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு, பல அமைப்புகளில் பணியாற்றும் கந்தூரி எதிர்ப்பாளர்கள் ஒன்றுசேர வேண்டும்; கந்தூரிக்கு எதிராக உரக்கக் குரல் கொடுக்க முன்வர வேண்டும் என்ற ஜமீல் காக்காவின் கருத்தை வலுவாக ஆதரிக்கிறேன். உலக அற்ப தேவையை மறந்து ஸிர்க்கு கூத்தாட்டிகளையும் அதற்கு துணை போகும் போலி சமுதாய தலைகளையும் எதிர்ப்பது கட்டாயம் என்பதை எல்லோரும் உணரவேண்டும்.
சகோதரர் தாஜுதீன் கருத்தை நாமும் ஆதரிக்கின்றோம் இருந்தாலும் ஒரு சில கருத்துக்களை இங்கே வைக்கின்றோம். கந்தூரி. ஷிர்க். பித்அத் போன்றவைகளுக்கு எதிராக T N T J பல விளிப்புனர்வு கூட்டங்களை நடத்தியுள்ளது. அது பற்றிய விளம்பரங்களை பல முறை அதிரை நிருபர் இணைய தளத்திற்கு அனுப்பியும் தாஜுதீன் பங்களிப்பாளராக உள்ள இந்த இணைய தளத்தில் போடவில்லை முதலில் தான் சொல்வதை தன் செயலிலும் சகோதரர் காட்டட்டும்.
அஸ்ஸலாமு அலைக்கும்
சகோதரர் ஜுபைர்,
என்னுடைய கருத்துக்கும் அநி தொடர்பான தங்களின் ஆதங்கத்திற்கும் தொடர்பில்லை என்றாலும் ஒன்றிணைந்து ஊரில் களத்தில் எல்லோரும் அமைப்புகளை மறந்து செயல்பட முன்வரலாமே. இதர்க்கு ஒத்துழைப்பு தர தங்களைப் போன்றவர்கள் தயாராக வேண்டும் என்பதே ஜமீல் காக்கா என்னுடைய வேண்டுகோள்.
அதிரைநிருபர் குழு தங்களின் ஆதங்கத்திற்கு பதில் தரும், இன்ஷா அல்லாஹ்.
மேலும் நீங்கள் குறிப்பிட்டுள்ள அமைப்பில் பொருப்பாளறாக இருக்கும் மருமகன் அப்துல் ஜப்பாரிடம் நேரில் தெளிவுப்படுத்தியுள்ளேன். பொதுவில் விவாத்திப்பது நேரவிரையமே என்பது என் கருத்து.
மார்க்கத்தை அறியாத ஒரு சிலர் எடுக்கும் கந்துரிக்காக ஒட்டுமொத்த தெருவையும் சாடும் ஒருசில அறிவு ஜீவிகள் இப்போது வாய் மூடி இருப்பது ஏன் .சேர்மன் தமது தெரு என்பதால் தெரு பாசாம் கண்ணை மறைக்கின்றதோ !
அஸ்ஸலாமு அழைக்கும்
சகோ அஹ்மத் ஹாஜா தாக்கப்பட்டது கடும் கண்டனத்துக்குரியது
அறிவற்ற செயலில் (கந்தூரி வழிபாட்டார்) ஈடுபடும் மூடர்கள் இங்கே கவனிக்க
அவ்லியாக்களுக்கு விழா எடுக்கலாமா?
கப்றுகளை ஸியாரத் செய்யும் பெண்களையும், அதன் மீது கட்டிடம் கட்டுபவர்களையும், அதில் விளக்கு எரிப்பவர்களையும் நபி (ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள்’. (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), ஆதாரம் : அபூதாவூது, திர்மிதி,பைஹகீ: 7457)
நபி(ஸல்)அவர்கள் ‘எனது கப்றை விழா கொண்டாடும் இடமாக ஆக்கிவிடாதீர்கள்’ என தாம் மரணிப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன் எச்செரித்துளார்கள். (அறிவிப்பவர்: அபுஹுரைரா(ரலி), ஆதாரம்:அஹ்மத்,அபூதாவூது)
கப்றுகளைக் கட்டுவது, விளக்கெரித்து அலங்கரிப்பது, பட்டு விரிப்பது, விழா எடுப்பது, கந்தூரி உரூஸ் கொண்டாடுவது போன்ற அனைத்து ஷிர்க், பித்அத்தானஅனாச்சாரங்களையெல்லாம் நபி(ஸல்) அவர்கள் வன்மையாகக் கண்டிப்பதைப் பாருங்கள்.
இவ்வாறு கட்டுவதற்கு மட்டும் மார்க்கத்தில் அனுமதி இருந்திருந்தால், எண்ணை வளங்கொழிக்கும் குபேர நாடான ஸவூதி அரேபியாவில் விண்ணைமுட்டுமளவுக்கு தங்கத்திலும்,வைரக்கற்களிலுமல்லவா சமாதிகளைக்கட்டி அமர்க்களப்படுத்தியிருப்பார்கள். மக்காவிற்கு ஹஜ்ஜுக்குச் செல்வோர் ஸியாரத்திற்காக மக்கா மதீனாவுக்குச் சென்று வருகிறார்கள்.அங்கே எங்கேனும் இவ்வாறு கப்றுகள் கட்டப்பட்டுள்ளனவா? என சிந்தித்துப்
பார்க்கவேண்டும்.
நபி (ஸல்)அவர்களுடையவும், நாற்பெரும் கலீபாக்களுடையவும், ஜன்னத்துல் பகீஃயில் அடக்கமாயிருக்கும் உம்முஹாத்துல் முஃமினீன்கள் (விசுவாசிகளின் அன்னையர்) எனப்படும் நபி (ஸல்) அவர்களின் ஒன்பது மனைவியருடையவும், சுவர்க்கத்துத் தலைவி எனப் போற்றப்படும் பாத்திமா(ரலி)அவர்கள், அவர்களின் மூன்று சகோதரிகளான ஸைனப் (ரலி), ருகைய்யா(ரலி) உம்முகுல்தூம் (ரலி), அவர்களது சகோதரரரும் நபியின் மகனுமாகிய இப்றாஹீம்(ரலி)அவர்கள், இஸ்லாத்திற்காக தங்களின் உயிர்களை அர்ப்பணித்த பத்ரு, உஹுத் தியாகிகள், வலிமார்களுக்கெல்லாம் தலைவராகிய ஸையிதுஷ்ஷ{ஹதா(தியாகிகளின் தலைவர்)ஹம்ஸா(ரலி)
போன்றவர்களுக்கெல்லாம் சமாதிகள் கட்டிவிழாக்கள் எடுக்கிறார்களா? அவ்வாறு எடுக்காதபோது முகவரியும் வரலாறும் இல்லாத யார் யாருக்கோ நமது ஊர்களில் கட்டிடங்கள் கட்டி விழா எடுக்கிறார்களே இதற்கு மார்க்கத்தில்சிறிதேனும் அனுமதியிருக்கிறதா? அங்கீகாரம் இருக்கிறதா என்பதை நமது சமுதாய மக்கள் சிந்திக்க வேண்டும்.
இனிமேலும் இச்சம்பவம் நடக்காதவண்ணம் மாற்று மதத்தினர் விமர்சிக்கும் அளவிற்கு இச்செயலில் ஈடுபடாமலும் கந்தூரி என்னும் பெயரில் அறிவற்ற செயலில் மாட்டி தவிக்கும் அனைத்து முஸ்லிம் சகோதர்களுக்கும் ஏக இறைவன் ஹிதாயத் கொடுத்து நேர்வழி காட்டுவானாக ஆமீன்!!
மார்க்கத்தை அறியாத ஒரு சிலர் எடுக்கும் கந்துரிக்காக ஒட்டுமொத்த தெருவையும் சாடும் ஒருசில அறிவு ஜீவிகள் இப்போது வாய் மூடி இருப்பது ஏன் .சேர்மன் தமது தெரு என்பதால் தெரு பாசாம் கண்ணை மறைக்கின்றதோ ! >>>>>>>>
இப்படி நீங்கள் சுட்டி காட்டுவதுதான் தவறு ..,மார்க்கத்தை அறியாத ஒருசிலர் .. என்று இலகுவாக கூறிவிட்டு பாதிக்க பட்டவர்கள் கூறும் கருத்தை எடுத்துக்கொண்டு சண்டைக்கு வருவது நியாயமில்லை ..அஸ்லாம் சிறுவயதில் கிடைத்த தலைவர் பதவிக்குஉள்ள மரியாதையை எடுத்துகொள்ள தெரிய வில்லை ..
, சின்னபுள்ள தனமா நடந்து. கொச்சை படுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் ..தெரு ,குடும்பம் ,என்று அவர்கள் பேசும்போது நாங்களும் பேச எத்தனிப்பதில் தவறில்லை ..,
//சின்னபுள்ள தனமா நடந்து. கொச்சை படுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் ..தெரு ,குடும்பம் ,என்று அவர்கள் பேசும்போது நாங்களும் பேச எத்தனிப்பதில் தவறில்லை .., //
நடந்த நடக்கும் தவறுகளுக்கு எதிர்ப்பை தெரிவிக்காமல் வாய் மூடி இருப்பவர்களைத்தான் நான் கூறினேன் உங்களைப்போல் எதிர்ப்பை தெரிவித்த "பெரிய"மனிதர்களை அல்ல
அன்பான சகோதரர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்.
இந்தச் செய்தியை அனுப்பியவன் என்ற முறையில், சகோ. அஸ்லம் மீது அன்பும் அக்கறையும் கொண்டவன் என்ற முறையில் சிலவற்றை இங்குப் பகிர்ந்து கொள்கிறேன்:
\\இச்சம்பவத்தில் நடுநிலை வகிக்க வேண்டிய பொறுப்பான பதவியில் இருப்பவர்களே, கந்தூரிக் கோஷ்டியினருக்கு வெளிப்படையான ஆதரவாளராகத் தன்னை இனங்காட்டிக் கொள்வதும் குற்றவாளிகளுக்குப் பரிந்து பேசுவதும் அவர்களது தூய சேவைகளுக்கு இழுக்கைத் தேடித் தருவனவாகும்\\
என்பதில் பேரூராட்சித் தலைவர் சகோ. அஸ்லத்தின் பெயரைத் தவிர்த்து வெளியிட்டிருக்கிறார்கள். சகோ. அஸ்லம், நான் நாள்தோறும் ஊரில் எங்காவது ஒரு பகுதியில் சந்திக்கும் உழைப்பாளி.
அதிகாலையில் பேரூராட்சி அலுவலக வாயிலில் துப்புரவுத் தொழிளார்களுடன்,
பத்து மணியளவில் ஏதேனும் ஒரு தெருமுனையில் குப்பைவண்டிக்குப் பக்கத்தில்,
பகலில்/மாலையில் ஊர் முழுதும் புதிதாகப் போடப்படுகின்ற தார் ரோடுகளின் புகையுடன்,
மெயின் ரோட்டிலும் மார்க்கெட்டிலும் ப்ளாஸ்டிக் பையில் சாமன்கள் விற்பவர்களிடம் நடத்தும் திடீர் சோதனைகளில்
என அவரை நாள்தோறும் கண்டுவருகிறேன். அயராமல் சேவையாற்றிக் கொண்டிருக்கும் அவரது சுறுறுப்பு எனக்கு மிகவும் உவப்பானதாகும்.
துப்புரவுத் தொழிலாளியைத் தன் பைக்கில் அமரவைத்து அழைத்துச் சென்று வேலைவாங்கும் சேர்மனை இதற்குமுன் அதிரையின் வரலாறு சந்தித்திருக்காது.
அடுத்த தேர்தலுக்கு வாக்குச் சேகரிக்கப் போகவேண்டிய அவசியமில்லாமல் நமதூர் பொதுமக்களின் - குறிப்பாக பெண்களின் - மனத்தில் இடம்பிடித்துவிட்ட சேர்மன் சகோ. அஸ்லம் என்பதைத் தற்போது நான் நேரில் பார்க்கிறேன்.
இப்படிப்பட்டவர், மார்க்கத்தால் தடைசெய்யப்பட்ட மீலாது, மவ்லிது, முஹைதீன் ஆண்டவர் பிறந்தநாள், கழிசடைக் கந்தூரி போன்றவற்றிலும் கலந்து கொள்வது; அவற்றுக்கு ஆதரவு காட்டுவது என்பன என் போன்றோருக்கு வருத்தமாக இருக்கிறது. இவரது சேவைகள், மார்க்க முரண்பாடுக் கலப்பால் மதிப்பிழந்து போகக்கூடிய அபாயத்தைச் சுட்டிக்காட்டுவது எனது கடமையாகும். அதைத்தான் நான் செய்தேன்.
இந்த ஆண்டு மேலத்தெருவைச் சார்ந்த சில அறிவிலிகளால் காட்டுப்பள்ளி தர்ஹா கந்தூரி எடுக்கப்பட்டாலும், மேலத்தெரு தவ்ஹீது இளைஞர்களின் உறுதியால் ஏறத்தாழ மேலத்தெரு முழுதும் கந்தூரி ஊர்வலம் 'மௌன ஊர்வல'மாகச் சென்றதை அறிய முடிகிறது. மெஜாரிட்டியை மனத்தில் கொண்டு சகோ. அஸ்லம் கந்தூரிக்கு ஆதரவு காட்டுகிறார் எனில் அவரது கணக்கு, தப்புக் கணக்காகும். அல்லாஹ்வின் அருளால் கந்தூரி எதிர்ப்பாளர்கள்தாம் அதிரையில் மெஜாரிட்டியினர்.
எனது நியாயமான கருத்தை சகோ. அஸ்லம் கருத்தில் கொள்ளவேண்டும் என்பது எனது அவா.
கந்தூரியை எதிர்த்து மேலத்தெரு இளைஞர்கள் ஊர் முழுக்கவும் போஸ்ட்டர் ஒட்டியுள்ளனர். இவர்களின் முன்னுதாரணத்தைப் பின்பற்றி அதிரையின் எல்லா முஹல்லாவைச் சேர்ந்த இளைஞர்களும் தங்கள் எதிப்பைப் பதிவுசெய்தால் கந்தூரியை சந்தூக்கில் வைத்துவிடலாம், இன்ஷா அல்லாஹ்!
வலைத் தளத்தினருக்கு:
செய்தி அனுப்பிய எனது பெயரை அடியில் குறிப்பிடாததில் எனக்கு வருத்தமேதுமில்லை. நான் 'வெறும் பெயர்' வாங்க விரும்பாதவன் என்பது எல்லாரும் அறிந்த இரகசியமே!
ஆனால், எனக்குப் பிரச்சினை வரும் என்ற அக்கரையில் என் பெயரைத் தவிர்த்திருந்தால் அது தவறாகும். நான் மாஹிரல்ல; ஜமீல்.
நன்றி!
வலைத் தளத்தினருக்கு:
செய்தி அனுப்பிய எனது பெயரை அடியில் குறிப்பிடாததில் எனக்கு வருத்தமேதுமில்லை. நான் 'வெறும் பெயர்' வாங்க விரும்பாதவன் என்பது எல்லாரும் அறிந்த இரகசியமே!
ஆனால், எனக்குப் பிரச்சினை வரும் என்ற அக்கரையில் என் பெயரைத் தவிர்த்திருந்தால் அது தவறாகும். நான் மாஹிரல்ல; ஜமீல்.
நன்றி!
-----------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். ஆண்மையான தலைமை பண்புக்கு உதாரனம்.(ஜமில் காக்கா:என் முகத்துல மண்ணள்ளி வீச தேடாதீர்கள். நானும் உங்க ஜாதிதான்).
அஸ்ஸலாமு அலைக்கும்
இத்தோடு இந்த வழிகே(கூ)ட்டு கலாச்சாரம் முற்றுப்பெற அனைத்து தெரு மக்களும் இனைந்து முயற்சி செய்ய வேண்டும். எந்த ஒரு சமுதாயமும் தானாக வருந்தி திருந்தி இறைவனிடம் திரும்பாதவரை அவன் நேர் வழியில் செலுத்தமாட்டான் என்ற வான்மறை போதனையை அனைவரும் சீர் தூக்கி செயல்பட வேண்டும்.
சமீபத்திய கந்தூரி கொண்டாட்டம் நடக்கும்போது நான் ஊரில் இருந்தேன். கந்தூரி எனும் "இழிசெயல்" இஸ்லாத்தில் தடுக்கப்பட்டது தெரிந்தவிசயம்தான். நமது ஊரில் இத்தனை மார்க்க விசயங்களில் முன்னேற்றம் இருந்தாலும் இதுபோன்ற ஸிர்க் விசயங்கள் மலிந்து கிடப்பது ஆச்சர்யம். கந்தூரியில் பாடிக்கொண்டும், விசிலடித்துக்கொண்டும், தொடைதெரிய கச்சல் கட்டி நடந்து சென்றவர்களின் மார்க்கம்தான் எது என்று புரியவில்லை.
மற்ற மதத்தினருக்கு இஸ்லாம் எது என்று புரியவைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நாம் எழுதும் விசயங்கள் அந்த கந்தூரி கூட்டத்தில் நடந்து சென்ற ஆட்கள் படிக்க வாய்ப்பில்லை. ஆட்களைப்பார்த்தால் புத்தகம் / கம்ப்யூட்டர் எல்லாம் 'காரமா ? இனிப்பா?" என கேட்கும் ஆட்கள் மாதிரி தெரிந்தது.
மக்கத்து காஃபிர்களும் கப்ர் வணங்கிகளும்:
கப்ர் வணங்கிகள் பெயரில் முஸ்லிம்கள் என்று அழைக்கப்பட்டாலும், இவர்களின் செயல்களும் நடவடிக்கைகளும் மக்காவில் வாழ்ந்த காஃபிர்களின் செயல்களை தான் ஒத்துள்ளது. இதிலிருந்தே இந்த கப்ர் வணங்கிகள் எந்த பிரிவை சார்ந்தவர்கள் என்று புரிந்து கொள்ளலாம்.
மக்கா காஃபிர்களை பற்றி அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடும் போது, சீட்டி (விசீல்) அடிப்பதும் கை தட்டுவதையும் தவிர வேறு எதுவும் அவர்களின் வணக்கமாக இருக்கவில்லை என்கிறான்.
சீட்டியடிப்பதும், கை தட்டுவதும் தவிர (வேறெதுவும்) அந்த ஆலயத்தில் அவர்களின் தொழுகையாக இருக்கவில்லை. "நீங்கள் (ஏக இறைவனை) மறுத்துக் கொண்டிருந்த காரணத்தினால் வேதனையை அனுபவியுங்கள்!" (என்று கூறப்படும்). அல்குர்ஆன் (8:35)
Post a Comment