முன்குறிப்பு: இந்த பதிப்பால் நம் ஊரில் உள்ள கொசுக்கள் செத்து மடிந்து விடும் என்றோ, அல்லது பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு குறையும் என்றோ நான் நினைக்கவில்லை...எனவே நானே சொல்கிறேன் இந்த பதிப்பால் ஊருக்கு எந்த பயனும் இல்லை. [அப்பாடா... யாராவது இதனால் என்ன பயன் என்று கேட்கும் ஒரு பின்னூட்டம் மிச்சம் செய்ய நம்மால முடிந்தது]
கோபம் புருச லட்சனம்????
மனைவியிடம் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு
வந்த நண்பர் [ஏறக்குறைய 400 கி.மீ பயணம் செய்து] " நம்ம அருமை தெரியனும்னா இப்படி செஞ்சாத்தான்
தெரியும்...என்ன சொல்றீங்க?'
'அது சரி நீங்க
என்ன செஞ்சீங்க.. அருமை தெரிய"நு சொல்லவே இல்லையே...'
“மொபைலெ ஸ்விச் ஆஃப் செஞ்சிட்டேன். நான் இங்கேதான் இருக்கேன்னு
யார்ட்டையும் சொல்லலே.... நான் இல்லாமெ கஷ்டப்படட்டும், மார்க்கெட்லெ கறி வாங்குறதைலேருந்து
சம்பாதிச்சு கொட்டுற வரைக்கும் நம்ம மாதிரி ஆம்பிள்ளைங்கதான்... ஆனால், வீட்டிலெ
இருந்து சீரியல் பார்த்துக்கிட்டு டெலிபோனில் ஊருக்கும், பக்கத்து வீட்டு பொம்பளைங்க கூட பிசாது பேசுர
பொம்பளைங்களுக்கு இவ்வளவு திமிர் இருக்கும்னா.. எனக்கு எவ்வளவு இருக்கும்?,
நண்பரை
ஆசுவாசப்படுத்த கூல்ட்ரிங் ஆர்டர் செய்து விட்டு நான் இளநீர் மட்டும்
குடித்தேன்...
' நீங்க ஏன் பெப்சி
/ கோக் குடிக்கலெ"- நண்பர்.
'முடிந்த அளவு
இயற்கையா இருந்து பழகிட்டேன்...' இப்போவெல்லாம்
இயற்கையான உணவுகள்தான் ரொம்ப காஸ்ட்லி ஆயிடுச்சி... இல்லே'
"ஆமா... அது
சரி நான் கோவிச்சிட்டு வந்ததெ பத்தி என்ன நினைக்கிறீங்க?."..
" உங்க குடும்பம்
கொஞ்ச நாளைக்கு நிம்மதியா இருக்கும்"
"என்ன இப்படி சொல்லிட்டீங்க"
'ஏன்னா நீங்க நினைக்கிறது என்னன்னா... நீங்க இல்லாமெ உங்க மனைவி பிள்ளைங்க ரொம்ப கஷ்டப்படுவாங்கன்னுதானே... எனக்கு என்னவோ அவங்க பகல் சாப்பாடு கூட ஒரு கறி/ரசத்தோடு சிம்பிளா வேலையில்லாமெ இருந்துட்டு சீரியல் பார்த்துட்டு... ராத்திரிக்கு பிஸ்ஸா/மெக்டோனால்ட் ஹோம் டெலிவரிக்கு ஆர்டர் கொடுத்திட்டு எல்லா சீரியலும் உங்களோட ' ரிமோட்டெ கண்ட எடத்துலெ போடாதீங்க.. பேனை போடு, கிச்சன் லைட் ஏன் தேவை இல்லாமெ எரியுது" போன்ற பிக்கல் பிடுங்கல் இல்லாமல் நிம்மதியாக இருப்பார்கள் என்பதெ என் கணிப்பு.
மனுசன் அடுத்த
நிமிடமே திரும்பிப்போக முடிவெடுத்தார். இது மாதிரி
ஆட்களுக்கு புத்தர் மாதிரி அறிவுரை எல்லாம் சொன்னால் திருந்த மாட்டாப்லெ.... உங்க
வீட்டிலெ எல்லாரும் சந்தோசமா இருக்காங்கன்னு சொன்னா பொறுத்துக்கொள்ள முடியாது...
நீதி: கோபிச்சுட்டு வீட்டை விட்டு போகுமுன் யோசிங்கப்பா...
பிரதர் என்ன நினைக்கிறார்னா?
இது நடந்து சில
வருடங்கள் இருக்கும். மலேசியாவின் east coast
பகுதியான Kota Bharuலிருந்து கஸ்டமரை 'கண்டுக்கிட்டு" திரும்பி வரும்போது எனக்கு
மிகவும் பிடித்த Kuantan என்ற ஊரில் நுழையும்போது
சரியாக லுஹர் தொழுகை நேரம் வரும். அங்குள்ள பெரிய பள்ளியில் தொழுதுவிட்டு
பக்கத்திலேயே ஸ்டாலில் சாப்பிட உட்கார்ந்தால் பல முகங்களை பார்க்கலாம். பார்க்கிங்
பிரச்சினையும் அதிகம் இருக்காது.
Beach in Cherating, Kuantan-Malaysia.
என்னை நோக்கி ஒருவர் காலில்
பேன்டேஜுடன் நடந்து வந்து...
"பிரதர்,
ஒரு வெள்ளி இருக்குமா? நான் ஜி.ஹெச் போகனும் , காலுக்கு இன்னைக்கு ட்ரஸ்ஸிங்
அப்பாயின்ட்மென்ட்"...
'அப்படியா... உட்காருங்க... லன்ச் சாப்டாச்சா... உட்காருங்களேன் ஒன்னா சாப்பிடலாம்.. அவர் எதிர்பார்க்கவில்லை என நினைக்கிறேன். நன்றி கண்ணில் தெரிய..
"பிரதர் ...இதுவரை யாரும் என்னை சாப்ட்டியானு கேட்டமாதிரி தெரியலே.. என்னமோ தெரியலெ நீங்க கேட்ட உடனேயே சாப்ட உட்கார்ந்துட்டேன்... அதுக்காக என்னையெ தப்பா நினைக்க மாட்டீங்களே?"...
“தப்பா நினைக்க என்ன இருக்கு... அது சரி ஒரு வெள்ளி கேட்டீங்களே போதுமா?
"போதும்...பஸ்ஸுக்குத்தான்...ஜி.ஹெச் நாலே எல்லாம் ஃப்ரீதான்.
நான் கொஞ்சம் அதிகமாக பணம் கொடுத்து ' செலவுக்கு வச்சிக்கோங்க... தேவைப்படும்'
அதற்கு பிறகு அவர் சொன்னதுதான் க்ளைமாக்ஸ்..
"பிரதர்... உங்களை பார்த்தால் நல்ல மனுசனா தெரியுது.. உங்களுக்கு ஒன்னு சொல்ரேன்..... யாருக்கு இது மாதிரி உதவி செஞ்சாலும்.. இந்த முஸ்லீம்களுக்கு மட்டும் உதவி செஞ்சிடாதீங்க...கெட்டவைங்க அவனுக."
நான் சிரித்தேன்... வேண்டுமென்றே "ஏன் என்று
கேட்கவில்லை... பொங்கி... கொடுத்த காசை திருப்பி கொடுனு சின்ன புள்ளத்தனமாகவும்
நடக்கவில்லை.
பிறகு என் பெயர் என்ன என கேட்டார்... அங்குதான்
ட்விஸ்ட் கிளைமாக்ஸ்...' "என் பெயர் ஜாகிர்
ஹுசேன்".... அவர் முகத்தில் ஈ,
கொசு, மரவட்டை எதுவும் ஆடவில்லை..... [ஈ ஆடவில்லைனு
எழுதினால் ரொம்ப ரிப்பீட் சென்டன்ஸ்னு நானே எடிட் செஞ்சுடுவேன்னு பயம்தான்']
என் பெயர் கேட்ட பிறகு ஒரு ஜவுளிக்கடை அளவுக்கு
சாரி சொன்னார்...
'பரவாயில்லை... யாரோ ஒருவர் உங்களை மனம் நோக
வைத்திருக்க வேண்டும்... துரதிஸ்டவசமாக அவர் முஸ்லீமாக இருந்திருக்க வேண்டும்.. அதுதான்
முஸ்லீம்களின் மீது உங்களுக்கு இவ்வளவு கடுப்பு" மனிதர்கள் செய்யும் தவற்றுக்கு இஸ்லாம் என்ன
செய்யும்...
இது நாள் வரை நான் நடந்து கொண்டதும் பேசியதும்
சரி என்கிறேன்...
நான் கொஞ்சம் அவரிடம் கடுமையாக நடந்து இருந்தால் அவர் போய் இன்னொரு "பிரதரை" உருவாக்கிவிடுவார் என்பது
மட்டும் நிச்சயம்.
_______________________________________________________________________________
பட்ஜட் ஏர்லைனும் பாடாவதி கவனிப்பும்
பட்ஜட் ஏர்லைன் வந்த பிறகு நேராக திருச்சி போய்
இறங்கிடலாம்னு போன வருடம் ஊர் வந்த போது ஏற்பட்ட சில அனுபவங்கள் உண்மையில் மறக்க
முடியாதது. கோலாலம்பூர் ஏர்போர்ட்டில் ஏறக்குறைய ஞாயமான கிலோ மீட்டர் நடக்க
வைத்தார்கள். நேராக நடந்தால் 100 மீட்டரில் இருக்கும் விமானத்துக்கு பக்கவாட்டு குறுக்கு
வாட்டு என ஏறக்குறைய வை. கோ. போன நடைபயணத்தை விட அதிகமாக இருந்தது.
சின்ன வயதில் இருந்து அதிக வெயிட் தூக்கி அனுபவம் இல்லாததால் ' "கையிலெ எவ்வளவு வேனும்னாலும் வச்சிக்கலாம் , பேக் பெரிசா தெரியக்கூடாது" என ஏவியேசன் ரூல்ஸ் தெரிந்தமாதிரி பேசிய குடும்பத்தினரின் சொல்கேட்டது எவ்வளவு தவறு என்று அப்போது தெரிந்தது. இதில் என் மகன் வேறு' வாப்பா... நம்மலெ போர்ட்டரா யூஸ்பன்னிட்டாங்க" நு சொல்லும்போது ஒப்பாரி வச்சி அழனும்போல இருந்தது ஏனோ உண்மை.
இமிகிரேசன் எல்லாம் முடிந்து வெயிட்டிங்
லான்ச்சில் இருக்கும்போது ஒருவன் தன் மொபைலில் திருச்சிக்கு ஏர்போர்ட்டுக்கு ஆள்
அனுப்பிட்டீங்களானு கேட்டு காட்டு கத்து கத்தியது பேசாமல் போனை ஆஃப் செய்து விட்டு
கத்தியிருந்தால் கூட திருச்சியில் இருக்கும் ஆட்களுக்கு காதில் விழுந்திருக்கும்.
மலிவு விலை விமான டிக்கட் என்று மக்களையும்
மிகவும் மலிவாக நடத்துவதுதான் காலக்கொடுமை. திருச்சிக்கு இருக்கும் ஒரே டைரக்ட்
ஃபிளைட் என்பதை தவிற வேறு எதுவும் விசேசம் இல்லாமல் 'ஜன்னல் ஒர சீட்டுக்கு பணம் , சாப்பாட்டுக்கு பணம், 150 மிலி மினரல் வாட்டருக்கு 75 ரூபாய் என்று பிடிங்கி எடுத்ததை
நினைக்கும்போது... இந்த விமானம் நடத்தும் ஆப்பரேசன் சீஃப் நம் ஊரில் இருக்கும்
வரதட்சினை வாங்கும் மாப்பிள்ளை வீட்டார்களிடம் ட்ரைனிங் எடுத்திருக்க வேண்டும், என்று சூடம் அனைத்து சத்தியம் செய்யலாம். [
அ.நி அமீர் ! "சூடம்... ஒரு ஃப்லோவில் எழுதியது... சூடத்துக்கும் மார்க்கத்துக்கும்
சம்பந்தமில்லையே காக்கா என நெறிச்சுடாதீங்க ஸாரி எடிட் செஞ்சிடாதீங்க... அப்புறம் நாம் தடுமல் வந்தால் 'விக்ஸ்' கூட போட முடியாது... ஏன்னா சூடம் இருக்குலே..]
அப்புறம் விமானத்தில் "சொல்லு கேட்காத
பக்கி" யை ஒருவர் கூட்டிக்கொண்டு வந்து அவன்
போட்ட சத்தத்தில் விமான கேப்டனே, கேப்டன் விஜய்காந்த் மாதிரி துப்பாக்கியை
தூக்கிட்டு வந்திடுவாரோனு பயமா இருந்தது.]
திருச்சியில் விமானத்தை விட்டு இறங்கியதும் கொஞ்ச
தூரத்தில் நாம் காரில் ஏறிச்செல்லும் சூழல் மட்டும் மனதுக்கு சந்தோசமாக இருந்தது
-ZAKIR HUSSAIN
24 Responses So Far:
பொறுமை ..,கடலினும் பெரிது ..,
ஒருவன் செய்யும் தவறு ..,அவன் சார்ந்த இனத்தை ,மதத்தை
பாதிக்கிறது ..,ஜாகிர் ஹுசைன் நடந்து கொண்ட விதம் .பிரமாதம் ..,
//திருச்சியில் விமானத்தை விட்டு இறங்கியதும் கொஞ்ச தூரத்தில் நாம் காரில் ஏறிச்செல்லும் சூழல் மட்டும் மனதுக்கு சந்தோசமாக இருந்தது//
repeattu
சொல்ல வந்த நீதி,
அறியாமல் அல்லது பாதிக்கப்பட்டு செய்த தவறுக்கு ஒட்டு மொத்த சமூகத்தை ஒரே கண்ணால் பார்ப்பது,
மற்றும் ஏர்போட்டு நு சொல்லி எல்லா வசதிகளிலும் இறங்கு முகமாக இருக்கும் திருச்சியின் அவலம் என,
பிரதர் சொல்றது நல்லாத்தான் இருக்கு!
திருச்சி விமான நிலையத்தின் புகைப்படத்தில் மூன்று கோபுரங்கள் காட்சியளிக்கிறேதே பார்த்தீர்களா ?
விமான நிலையத்தை வடிவமைத்த நிபுணர் மத ஈடுபாடு உள்ளவராக இருப்பாரோ ! என்னவோ ? மதச்சார்பற்ற இந்தியாவில் உள்ளோம் என்பதை மறந்துவிட்டு கோபுரம் அதன் மீது கவசங்கள் இருப்பது போல் உருவாக்கி கொடுத்துள்ளாரே
அடடா ஜாகிர் ஹுசைன், நகைச்சுவை பரிமாறுவதில் மிகப்பெரும் பந்தியே வைத்துவிட்டீர்கள். 1980 களில் பாக்கியராஜ் செய்த அட்டூலியம். 2000 களில் கிரேசி மோகன் செய்த அட்டூலியம். சிரித்துச் சிரித்து என் ஆயுள் இரட்டிப்பாய் ஆகிவிட்டது. அதே சமயம் எத்தனை அற்புதமான சிந்தனைகள் அந்தச் சிரிப்புக்குள் மலர்ந்து கிடக்கின்றன. இப்படி எழுத முடிவது தனித்திறமைதான். நிறைய எழுதுங்கள். உங்கள் எழுத்தால் ஊருக்கு நிச்சயம் ஏகப்பட்ட பலன் உண்டு
அன்புடன் புகாரி
அப்படின்னா இன்னும் ஒருவாரத்தில் மீண்டும் ஒரு நகைச்சுவை பதிவுக்கு காத்திருக்கலாம் அப்படித்தானே அசத்தல் காக்கா ! :)
ஞான் மதராஸ் போயீ திருச்சி பரையாம்!!
கவிக் காக்கா சரியான்னு சொல்லிடுங்க ! இல்லைன்னா... இல்லேன்னா அ.அ.மாமா மலையாள வாடை அடிக்கலையேன்னு சொல்லிடுவாங்க ! :)
//இது மாதிரி ஆட்களுக்கு புத்தர் மாதிரி அறிவுரை எல்லாம் சொன்னால் திருந்த மாட்டாப்லெ.... உங்க வீட்டிலெ எல்லாரும் சந்தோசமா இருக்காங்கன்னு சொன்னா பொறுத்துக்கொள்ள முடியாது...//
அதெப்படி காக்கா இண்டர்நேஷனல் லெவல் ஒர்க்அவுட் ஆகுது இது !
என்னோட கம்பெனியில் வேலை செய்யும் கன்னியாக்குமரிக்காரர் ஒருவர் அவருடைய மனைவி ஊரிலிருந்து அலைபேசியில் அழைத்தால் வரும் பெயர் என்ன தெரியுமா ?
அதான் காக்கா, பாச(?!!?)க் கையிறு கையில் வச்சுகிட்டு எருமை மாட்டில் மேல் வருவாராமே அவர் வந்துதான் (அவருன்னா இவருக்கு உசுராம் அவர்கையில்தான் இவரின் உயிர் இருக்காம்) அத எடுப்பார்ன்னு காலம் காலமா சொல்லிகிட்டு இருப்பாங்களே அவருடைய பெயர்தான்...
அன்புள்ள தம்பி ஜாகிர்! EXCELLENT!
அது எப்படி உங்கள் பாரூக் மாமா பேசுவதுபோல் நகைச்சுவை கொட்டுகிறது?
AIR INDIA EXPRESS- ல் கடந்த வருடம் மட்டும் துபாய்- திருச்சி இரண்டு முறைகள், மொத்தம் நான்கு முறைகள் பயணிக்க நேரிட்டது. நாலு முறைகளும் டின்னருக்கு அதே மஞ்சள் சோறு, கத்தரிக்காய் கூட்டு. அடுத்த சீட்டில் அமர்ந்திருந்த மேலத்தெரு நண்பர் அடித்த கமெண்ட்: "காக்கா! இந்த சாப்பாட்டை ஒரு வருடத்துக்கு மொத்தமாக தயார் செய்து தேதிவாரியாக மார்சுவரியில் வைப்பதுபோல் குளிர்சாதனப்பெட்டியில் வைத்துவிடுவார்கள் போல இருக்கிறது. எப்போது பயணம் செய்தாலும் இதே சாப்பாடுதான். "
துபாயிலிருந்து இப்போதெல்லாம் கட்டுச்சோறு கட்டிக்கொண்டோ, பர்கர் பார்சலோ, அல்லது மந்தி சாப்பாடு வாங்கிவைத்துக்கொண்டோ குடும்பங்கள் பயணிக்கின்றன.
விமானத்தில் உணவுப் பொட்டலம் ( புயல் காலத்தில் ராணுவ ஹெலிகாப்டரில் இருந்து வீசுவார்களே அதுபோல் )பரிமாறப்ப்படும்போது நம்மவர்களில் பலர் தவறாமல் சொல்லும் வார்த்தை : நோ தேங்க்ஸ்.
//ஞான் மதராஸ் போயீ திருச்சி பரையாம்!!
கவிக் காக்கா சரியான்னு சொல்லிடுங்க//
அதெந்தா எந்ந கேக்குந்நு? ஞான் எந்தா மலையாளியா? அல்லல்லோ? பின்னெந்தா?
எந்தெங்கிலும் பரையாயுனுன்டெங்கில் அத நமக்கு இவிடதன்னே வச்சி அவசானிக்காம். எந்துகொன்டானு மதராசு போயி திருச்சி பரையனும்?
ஒரு பிடியும் கிட்டிந்தில்ல (கே)ட்டோ!
//துபாயிலிருந்து இப்போதெல்லாம் கட்டுச்சோறு கட்டிக்கொண்டோ, பர்கர் பார்சலோ, அல்லது மந்தி சாப்பாடு வாங்கிவைத்துக்கொண்டோ குடும்பங்கள் பயணிக்கின்றன//
பின்னூட்டம் எனும் பெயரில் ஆலோசனை வழங்கிய தென்கச்சி சுவாமி...மன்னிக்கனும்...அன்சாரி காக்கா அவர்களுக்கு தெரிமா காஸி.
நான் என் இரண்டு மகள்களுடன் இதே டன்டனக்கா விமானத்தில் 4 நாட்களுக்கு முன்பு போய் வந்தேன். நீங்கள் குறிப்பிடும் உணவு பொட்டலங்கள் அதிகாலை 7 மணிக்கு வீசப்பட்டன. என் மகள்கள் அதிலிருந்த சான்ட்விச் எனும் ஃபெவிக்காலால் ஒட்டப்பட்ட ரொட்டித் துண்டுகளை எடுத்துக்கொண்டு, மற்ற அயிட்டங்களை டஸ்ட் பின்னில் தூக்கி எறிந்தன.
டஸ்ட்பின்னுக்கு ட்டிக்கெட் தொகை நினைவுக்கு வர அவற்றை தின்று தீர்த்து "காற்றடைத்த ஒரு பையடா" என்று வயிற்றைத் தடவிக்கொண்டு 8 ஹவர்ஸ் வேதனை பட்டது என்றால் அந்த உணவின் தரம் சொல்லித் தெரியனுமா?
அருஞ்சொட்பொருள் விளக்கம்: டஸ்ட்பின் = சபீர்.
//நீதி: கோபிச்சுட்டு வீட்டை விட்டு போகுமுன் யோசிங்கப்பா...//
நீதி சொல்லும் நீதிபதி அவர்களே,
கோபிச்சிக்கிட்டு பிச்சிக்கிட்டு போனவங்க கோட்டையைப் பிடிச்சதா பிதாகரஸ் இல்லைதான் (சரித்திரம் எனக்குப் பிடிக்காது) என்றாலும் ஏன் கோபிக்கிறாங்க. "சகோதரியே" தொடரை இப்பதானே ஆரம்பிச்சிருக்கிறீங்க. இதுக்குமுன்னால் அங்களுக்கு வாழ்க்கையை "தென்றலும், தங்கமும், செல்லம்மா"வும்தானே சொல்லித் தர்ராங்க. அதிலேயெல்லாம் எப்படியெல்லாம் ஆம்படையானை ட்டார்ச்சர் பண்றதுன்னு சொல்லித்தந்துட்டு நம்மாளை கோபிச்சுக்கிட்டு போகாம ரோசனை பண்ணச் சொல்றது எந்தூர் ஞாயமுங்க?
//நண்பரை ஆசுவாசப்படுத்த கூல்ட்ரிங் ஆர்டர் செய்து விட்டு நான் இளநீர் மட்டும் குடித்தேன்//
நண்பர் வீட்டில் நொங்கு நொங்கு என்று நோங்கப்பட்டு வந்ததால் தான் அவருக்கு நொங்கு ஆர்டர் செய்ய வில்லை என்று ஒரு பேச்சு நெட்டில் உலா வருகின்றதாமே!! உண்மையா ?
To Bro அதிரை சித்திக் & ஜஹபர் சாதிக்..நன்றி, இருப்பினும் திருச்சி ஏர்போர்ட் நன்றாகத்தான் இருக்கிறது. பட்ஜட் ஏர்லைனில் காசு புடுங்கும் சிஸ்டம்ட் கண்டுதான் எனக்கு காண்டு.
To Bro சேக்கனா நிஜாம்...நீங்கள் சொன்ன பிறகுதான் கவனித்தேன்.
To Bro Abu Ibrahim.....you mean the "buffalo driver?'
To Bro Ebrahim Ansari, நீங்கள் எழுதிய பின்னூட்டத்திலும் நகைச்சுவை இருக்கிறது. ஏர் இந்தியா எக்ஸ்பிரசில் நடக்கும் கூத்து நான் முன்பே கேள்விப்பட்டிருக்கிறேன். ஏர் இந்தியாவில் 1995 ல் ஊர் வந்தபோது பட்ட கஸ்டத்தில் என் தலைமுடியை அள்ளி முடிக்காமல் ஒரு சபதம் செய்திருக்கிறேன். அந்த விமானத்தில் ஏறுவதில்லை என்று. நான் பட்ட கஸ்டத்தை [ 1995 ல்] ஒரு ஆர்டிக்கில் எழுதும் அளவுக்கு கொடுமையானது.
சபீர் என் வீட்டில் நான் டஸ்ட்பின் அல்ல...என் மனைவி.
சாகுல் இருந்தாலும் உங்கள் தோப்பு இளநீர் இன்னும் நினைவில். நோன்பு நேரத்தில் பாதுகாத்து நோன்பு திறக்க குடித்ததால்.
To Bro Buhari,
நான் நகைச்சுவையாய் முன்பே எழுதியிருக்கேன். [ தேடி பிடிச்சி படிச்சிட்டு " அப்படி ஒன்னும் இல்லியே' நு பின்னூட்டம் போட்டுடாதீங்க"]
யாரும் ஏன் படம் இவ்வளவு பெரிசா போட்டிருக்கீங்கன்னு கேட்கலீயே.....' ஆர்டிக்கில் சொதப்பலா இருந்ததாலே நான் தான் போடச்சொன்னேன்.'
எல்லார்க்கும் இந்த “பட்ஜெட் ஃப்ளைட்” உணவு மற்றும் கவனிப்பு விடயங்களில் ஒரே மாதிரியான அனுபவம்- விரக்தியே உண்டாகியிருந்தாலும், “நமது விடுப்பு நாளை மிகச் சரியாக முழுமையாக முப்பது நாட்களும் முடிக்க மிகச் சரியான நேர அட்டவணை மற்றும் விமான நிலையம் வருவதற்கும்- போவதற்கும் அந்த பட்ஜெட் ஃப்ளைட் ஒன்றே மிகவும் பொருத்தமானதாக இருப்பது என்கின்ற ஒரே காரணத்தினால்” மீண்டும் மீண்டும் பட்டினிக் கிடந்தாலும் பட்ஜெட் ஃப்ளைட்டே கதி என்பது விதி!
// நான் பட்ட கஸ்டத்தை [ 1995 ல்] ஒரு ஆர்டிக்கில் எழுதும் அளவுக்கு கொடுமையானது//
அப்போ ஏற் இந்தியா பற்றி கிண்டி கெளங்கு எடுக்க போறிங்க !
இந்த சுட்டியை பார்த்து ஜாஹிர் காக்கா மட்டுமல்ல நாம் மனதும் சந்தோசமாக ஊருக்கு செல்லும்போது இருக்கும் என்பதை உணரலாம்
http://www.youtube.com/watch?v=utAuhsDTAEk.
ஜாஹிர் காக்கா சூடத்த விக்சுக்குள்ள போட்டு நம்மல மடக்கிட்டியலே... :)
அஸ்ஸலாமு அலைக்கும்.
மேலே பறக்கும் போது ஏர் இந்தியா ஃபிளைட்டில் சவுண்டு வந்திச்சோ இல்லையோ! ஜாகிர் காக்கா உலுப்பிய உலுப்பில் ஃபிளைட்டில் உள்ள பார்ட்ஸ் எல்லாம் சிதறி ஓடுகிறது .
// இந்த விமானம் நடத்தும் ஆப்பரேசன் சீஃப் நம் ஊரில் இருக்கும் வரதட்சினை வாங்கும் மாப்பிள்ளை வீட்டார்களிடம் ட்ரைனிங் எடுத்திருக்க வேண்டும்,//
நம்ம ஊர் மாப்பிளைமார்கள் அடிக்கடி பயணம் செய்வதினாலோ இருந்தாலும் இருக்கலாம்.
அது சரி திரும்ப ஊருக்கு வர இருக்கிறீர்களாமே! அப்பவும் ஏர் இந்தியாவில்தான் பயணமா?
ஜாகிர் காக்கா சொல்வதை நகைச்சுவையா சொன்னால் எதுவுமே (அட்வைஸ் முதற்கொண்டு) ஏற்றுக்கொள்ளப்படும் என்பதுக்கு இந்த பதிவு ஒரு உதாரணம் காக்கா, ஏர் இண்டியா பத்தி பத்தி பத்தியா எழுதலாம், அவ்வளவு கொள்ள காசு வாங்குறானுவோ காசுக்கேத்த விசுவாசம் இல்லே, எப்பவுமெ மோனோபாலி ஒழிஞ்சாதான் (போட்டிக்கு நல்ல விமான சேவை வரனும்) திருந்துவாங்க...
இந்த கட்டுரையில் பட்ஜெட் பிளைட்டே முக்கிய கருவாக இருப்பதால் : விமானத்தைப் பற்றியே கருத்து: மற்ற விமானங்கள் எல்லாம் இறங்கும்பொழுதும், மேல் ஏறும்பொழுதும் எந்தவித சிரமமும் இருக்காது. விமானத்தின் உள்ளே எந்த சத்தமும் இருக்காது.
இந்த ஏர் இந்தியா பிளைட்டிற்கு மட்டும் உள்ள தனிச்சிறப்புகள்:
திடீரென்று ஏறி தரையில் டங் என்று வந்து இறங்கும்.
பிளைட்டின் உள்ளே இரைச்சல் காதை அடைத்து விடும். (திறந்த வெளி பிளைட் போல)
சாப்பாடு சகோதரர் சொன்னது போல ஒரு வருடத்திற்கு உணவை தயார் செய்து வைத்து விட்டு அதையே தினமும் கொடுப்பார்கள்.
நல்ல விமானத்திற்கு இடம் தரமாட்டேன் என்று பிடிவாதம் செய்து இந்த பல்லவன் போக்குவரத்து கழகத்தை ஓட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.
ஆலை இல்லாத ஊருக்கு இழுப்பைப்பூ சர்க்கரை என்பது போல்.
திருச்சிக்கு செல்லும் பல்லவனும் ஒரு பகல் கொள்ளை விமானமே. பேருதான் பட்ஜெட் கட்டணமோ பகல் கொள்ளை.
காலம் ஒரு நாள் மாறும் -- இந்த ஏர் இந்திய கழுதை விமானம் செட்டுக்கு சென்று விடும் ஒரு நாள் --- தனியார் விமானத்தின் பிடி இறுகும்பொழுது.
BRO. S. ALAUDEEN COMMENTED
//ஆலை இல்லாத ஊருக்கு இழுப்பைப்பூ சர்க்கரை என்பது போல்.
திருச்சிக்கு செல்லும் பல்லவனும் ஒரு பகல் கொள்ளை விமானமே. பேருதான் பட்ஜெட் கட்டணமோ பகல் கொள்ளை.//
மெத்தசரி.
கவியன்பன் அவர்கள் இந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் நேரங்களை குறிப்பிட்டுப் பாராட்டி இருந்தார்கள். அபுதாபிக்குரிய நேரங்களாக இருக்கலாம்.
தற்சமயம் துபாய் திருச்சி நேர வசதியிலும் கீழ் மண்ணை சலித்துவிட்டு மேல்மண்ணை அள்ளிப்போட்டு விட்டார்கள். காலை ஆறரை மணிக்கு புறப்படுகிறது அதாவது விடிகாலை மூன்று மணிக்கு விமானத்தளம் செல்லவேண்டும். குடும்பங்கள், குழந்தைகளுடன் போகிறவர்களுக்கு வசதி இல்லாத நேரம். அது போக வியாழன் , வெள்ளி கிழமைகளில் சேவை கிடையாது. முன் வியாழன் மாலை புறப்படுவோர்க்கு வெள்ளி சனி இருநாள் வருடாந்திர விடுமுறையில் சேராமல் வார விடுமுறையில் கிடைத்துக்கொண்டு இருந்தது . இப்போது அதற்கு ரெட சிக்னல் ஆகிவிட்டது.
எல்லாம் போகட்டும் , போகும்போது முப்பது கிலோவும் வரும்போது இருபது கிலோவும்தான் அனுமதி. ஐநூறு கிராம கூடுதலாக இருந்தாலும் எடுக்கச்சொல்கிறார்கள்.
இப்படித்தான் கடந்த முறை நாலே நாலு ஒட்டு மாங்காய்க்கு எடை கூடுதல் என்று அனுமதி தரவில்லை.
விலையும் கூடுதல்தான். லக்கேஜூம் சலுகை இல்லை. சாப்பாடு மற்றும் கவனிப்பும் சரியில்லை.
அலாவுதீன் அவர்கள் கூறியதுபோல் புதுப்பேட்டை காயலாங்கடைக்குப் போகவேண்டிய தள்ளு மாடலை வைத்து ஓட்டுகிறார்கள். பெரிய MONOPOLY யாக இருக்கிறது. வேறு வழி இல்லை. இது ஒரு பொருளாதார EXPLOITATION.
நான் பயணித்தது ஏர் ஆசியா எனும் பட்ஜெட் விமானம். ஏர் இந்தியா / ஏர் இந்தியா எக்ஸ்பிரசில் பயணம் செய்வதில்லை என்று 15 வருடத்துக்கு முன்பே முடிவு செய்தாகிவிட்டது. [அவ்வளவு கொடுமைக்கு உள்ளான பயணிகளில் நானும் ஒருவன்]
ஜாஹிர் காக்கா, எப்பவும் போல ரொம்ப அழகான நடையில் எழுதப்பட்ட அனுபவ கட்டுரை இது.
ஆம்மா, கடல் தண்ணி மேலேயும், தரை/கரையே கீழேயும் வச்சி எப்புடி ஃபோட்டோ எடுத்தியெ??? தண்ணி உள்ளக்க வந்துராது????
இப்பொழுது ஏர் இந்தியா விமானங்களெல்லாம் ஊழியர்களின் ஸ்ட்ரைக் இல்லாமல் குறித்த நேரத்தில் வந்து போனால் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டிய சாதனை தான் (Incredible India).
ஜாஹிர் காக்காவின் கட்டுரையை கடைசியாகத்தான் படிக்கவேண்டும் என்ற தீர்மானத்துடன் இருந்து ..ஆபீஸில் என்னனென்ன வகையில் டென்ஷன் கொடுக்கமுடியுமோ கொடுத்துவிட்டு (நாமெல்லாம் கொடுக்குறபார்டிதான் எடுக்குறது இல்லை) அதற்க்கான மருந்து நிச்சயம் காக்காவின் ஆக்கத்தில் உண்டு என்ற நம்பிக்கையில் படித்”தேன்”....சிரிப்பும் சிந்தனையும் உள்ள செம ஆக்கம் காக்கா...
சில வெட்டிகளுக்கு சில நெத்தியடி வரிகளுடனும் ஆரம்பித்து இருக்கின்றீர்கள்...சூடம் மேட்டர் சூப்பர் !!!
Post a Comment