Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

தலைவர் யார் ? ! 9

அதிரைநிருபர் பதிப்பகம் | May 22, 2012 | , ,


1. நானே பெரியவன்..... நானே சிறந்தவன்......என்னைவிட உயர்ந்து வர ஒருவன் பிறந்து வரனும் என்று தன்னைத் தானே எப்போதும் உயர்த்தி பேசுவது

2. விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இல்லாதது

3. எதிர்மறையாகச் சிந்திப்பது

4. பொய்யான வாக்குறுதிகளை கொடுப்பது.

5. தோல்வியைக் கண்டு முடங்கிவிடுவது

6. அடுத்தவர் வேலைகளில் குறுக்கீடு அல்லது குறைகள் சொல்வது

7. தன்னை அடுத்தவர் புகழக்கேட்டு மனம் மகிழ்வது.

8. சிறியப் பிரச்சனைகளை ஊதிப் பெரிதாக்குவது. அடுத்தவர்கள் மீது பழிபோடுவது

9. மலிவான விளம்பரங்களைத் தேடிக்கொள்வது

10. பதவி...! பதவி...!! பதவி...!!! என்ற நினைவில் வாழ்வது 

போன்ற தீய எண்ணங்களைத் தூக்கி தூர வைத்துவிட்டு

நல்லப் பண்புகளாகிய.............

1. எளிமையாக வாழ்தல்

2. ஒழுக்கம், கட்டுப்பாடு, நல்ல நட்பு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, பொறுமை, அன்பு செலுத்துதல், கடமையை நிறைவேற்றுதல் ( இஸ்லாம் )

3. வேகமாகச் செயல்படுதல்

4. எப்பொழுதும் நேர்மையாக செயல்படுதல்

5. தொடர்ந்து கற்றுக்கொண்டே இருத்தல்

6. மூத்தோர்களின் நல்ல அனுபவங்களைப் பெறுதல்

7. ஆக்கப்பூர்வமாகச் சிந்தித்துச் செயல்படுதல்

8. தீர்க்கமான முடிவு செய்தல்

9. வீண் விரயத்தைக் குறைத்தல்

10. தரத்தை மேம்படுத்துதல்

11. திட்டமிடுதல்

12. முன்னேற்றத்திற்கான ஆலோசனைகளை வழங்குதல்

13. எளியோருக்கு உதவுதல்

போன்றவற்றை வளர்த்துக்கொள்ளுங்கள். வாழ்வில் நிச்சயம் மேன்மை அடைவீர்கள். இதற்கு சிந்தனையைத் தூண்டும் ஒரு எடுத்துக்காட்டை தங்களுக்கு கூற விரும்பிகிறேன்.....

நூறு பேர் கூடியிருந்தக் கூட்டத்தில் ஒரு பேச்சாளார் ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டைக் காட்டி “யாருக்கு இது பிடிக்கும் ? ” எனக் கேட்டார். கூடியிருந்த அனைவரும் தனக்கு பிடிக்குமென கையைத் தூக்கினர். பேச்சாளாரோ “உங்களில் ஒருவருக்குத்தான் இந்த ஆயிரம் ரூபாயைத் தருவேன் ஆனால் அதற்கு முன்” எனச் சொல்லியவாறு அந்த ஆயிரம் ரூபாயைக் கசக்கி சுருட்டினார். பிறகு அதை சரி செய்து “இப்போதும் இதன் மீது உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா ?” என்றார். “ஆம்“ என்று அனைவரும் கையைத் தூக்கினர். 

மீண்டும் அவர் அந்த ரூபாய் நோட்டை தரையில் போட்டு காலால் நசுக்கி அந்த அழுக்கான நோட்டை காட்டி “இன்னும் இதன் மேல் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா ?” என்றார் “ஆம் “ என்று அனைவரும் மீண்டும் கைகளை தூக்கினர். 

அவர் தொடர்ந்தார்.....கேவலம் ஒரு ஆயிரம் ரூபாய்த்தாள் பல முறை கசங்கியும், மிதிப்பட்டும், அழுக்கடைந்தும் அதன் மதிப்பை இழக்கவில்லை. ஆனால் மனிதர்களாகிய நாம் அவமானப்படும் போதும் , தோல்விகளை சந்திக்கும் போதும் மனமுடைந்து போய் நம்மை நாமே தாழ்த்தி கொள்கின்றோம். நம்முடைய மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. நீங்கள் தனித்துவமானவர். இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருத் தனித் தன்மையை “அல்லாஹ்” நமக்கு வழங்கியுள்ளான். அதன் மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. ஆகையால் நாம் ஒவ்வொருவரும் செய்யும் நல்ல செயல்களின் மூலம் சிறந்தவன், ஒழுக்கமானவன், தலைமை வகிக்க தகுதியானவன் போன்ற சிறப்பைப் பெறுகின்றோம்...... 

நீங்கள் ஒருவருக்கோ அல்லது நூறு பேருக்கோ சிறந்தவனாகவோ அல்லது தலைவனாகவோ இருந்தாலும் சரி அல்லது இல்லாவிட்டாலும் சரி தன்னம்பிக்கையை இழக்காமல் நல்ல பண்புகளைத் தேர்ந்தெடுத்துக் கடைப்பிடியுங்கள். சமூகத்தில் நல்லவர்கள் எண்ணிக்கை கூடுதலாக வருவதற்கு நீங்கள் ஒரு காரணமாக இருப்பீர்கள் ( இன்ஷா அல்லாஹ் ! )

-சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! தொடரும்....

9 Responses So Far:

சேக்கனா M. நிஜாம் said...

அருமையான நாற்காலி ! யாவருக்கும் அதில் அமர ரொம்ப ஆசையா ( ? ! )த்தான் இருக்கும் : )

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

தலைவருக்கு நல் இலக்கணம்!
தலைவர் மட்டுமல்ல,அதன் தலைமையும் அதன் அங்கமும் இப்படி இருக்கனும். அதை விட்டு விட்டு நானா நீனா என சட்டம் பேசிக் கொண்டிருந்தால் காலம் தான் கடக்கும் காரியம் நடக்காது.

இறைவா! அதிரைமக்களுக்கு தலைக்கணத்தை போக்கி காரியம் ஆகனும் என்ற நற்குணத்தை கொடு!

Shameed said...

நல்ல கருத்துக்கள் சகோ சேக்கனா M.நிஜாம்

அப்துல்மாலிக் said...

என்னதான் உத்தமனா இருந்தாலும் அதுலே உக்காந்தவுடன் மாறிவிடுகிறார்கள் அ மாற்றப்படுகிறார்கள், அதையும் மீறி நேர்மையா நடக்கவிரும்புகிறவர்கள் தூக்கி எறி(ரி)யப்படுகிறார்கள் என்பதுதான் நியதி...!

KALAM SHAICK ABDUL KADER said...

எட்டுக் குணங்களால் எட்டும் வளங்கள்



அன்பைப் பெருக்கு அனைத்தும் செழித்திடும்
வம்பு வளர்த்தால் வளமே அழிக்கும்

நம்பி இறங்கு நலமே கிடைத்திடும்
வெம்பி கிடந்தால் வளங்கள் உடையும்

நோக்கம் இருந்தால் நெருங்குமே சக்திதான்
ஊக்கம் குறைந்தால் உடையுமே யுக்திகள்

நல்ல மனத்தில் நலங்களே தங்கிடும்
பொல்லாப் பகையால் பிளவுகள் பொங்கிடும்

ஐயம் களைதல் அவசியத் தேவையாம்
பொய்யும் புறமும் பொசுக்கிடும் சேவையை

எதிர்மறை எண்ணம் இருந்தால் தடைதான்
புதிர்கள் பெருகினால் பூஜ்யம் விடையாம்

நன்றி மறப்பதால் நன்மை அழிந்திடும்
என்றும் துரோகமே இன்பம் ஒழித்திடும்

நட்பின் வளையம் நமக்கு வரம்தரும்
தப்பு வராமல் தடுக்கும் அரண்பெறும்


உளத்தூய்மை உருவாக்கும் ஒற்றுமை




எண்ணத்தில் தூய்மை வேண்டும்
***** இதழ்களில் வாய்மை வேண்டும்
மண்ணைப்போல் பொறுமை காட்டு
***** மனத்தெழு யிச்சை யோட்டு
விண்ணைப்போல் உயர்ந்த நோக்கம்
***** வேற்றுமைத் தீயைப் போக்கும்
கண்ணுக்கி மைபோல் நட்பு
***** காத்திடும் கூட்ட மைப்பு

sabeer.abushahruk said...

தம்பி சேக்கனா M நிஜாம்,

தங்களின் விழிப்புணர்வு ஆக்கங்கள் தொடரட்டும்.

தங்களை இத்தனை சீக்கிரம் என் வீட்டில் சந்திப்பேன் என்றோ உரையாடுவேன் என்றோ நினைத்ததில்லை.

எழுத்தில் உள்ள எழுச்சி பேச்சிலும் இருக்கக் கண்டு மகிழ்ந்தேன்.

வாழ்க.

இப்னு அப்துல் ரஜாக் said...

சுகமான நாற்காலி,
சுமையானதும் கூட -
ஆட்களைப் பொறுத்து

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

உற்சாய மடையர்களாக இருந்து கொண்டு சுற்றியிருப்பவர்களின் ஏவலுக்கும் அவர்கள் தன்னை போற்ற வேண்டும் என்ற ஒன்றே தகுதி (!!?) என்ற நிலையில் தலைவர் பதவிக்கு வரும் எவரும் 27ம் புலிக்கேஷி பரம்பரையைச் சேர்ந்தவர்ளாகவே போற்றப்படுவார்கள் !!!

அதிரை சித்திக் said...

தலைவர் ஆகுவதென்பது அவ்வளவு இலகுவான

காரியம் கிடையாது ..யார் தலைவராக்க படுகிறாரோ

அவர் சார்ந்த சமூகத்தில் கவரக்கூடிய பல அம்சங்களை

பெற்றிருப்பார் ..அவற்றின் செயல் பாடுகள் அவர் சார்ந்த

மக்களின் அணுகு முறையாகவே(செயல்பாடுகளாகவே ) இருக்கும் ..

மற்றபடி தற்காலத்தில் பணத்தினை முதலாக

வைத்து குறுக்கு வழியில் வரும் தலைவர்கள்

செய்யும் அடாவடிக்கு அடுத்த முயற்சியில் சரியான

தலை குனிவான தண்டனையும் தோல்வியும் கிடைக்கும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு