Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

‘விழிப்புணர்வு பக்கங்கள்’ - புத்தகம் வெளியீடு அறிவிப்பு 20

அதிரைநிருபர் பதிப்பகம் | May 31, 2012 | , ,

அஸ்ஸலாமு அலைக்கும்! (வரஹ்)...

எல்லாப் புகழும் இறைவனுக்கே !

நமது சமுதாயம் சார்ந்த பிரச்சனைகளுக்கு முன்னுரிமை கொடுத்து, விழிப்புணர்வைத் தூண்டும் விதமாக அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில் கட்டுரைகளை எளிய வடிவில் அமைத்து,  நமதூரைச் சார்ந்த சகோதரர்களின் இணையதளம் மற்றும் வலைப்பூக்கள் போன்றவற்றில் பதிந்துவருகின்றவற்றில் கீழ்க்கண்ட கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து, ‘விழிப்புணர்வு பக்கங்கள்’  என்ற பெயரில் என் முதல் நூலாக வெளியிட ஏற்பாடு செய்துள்ளேன். ( இன்ஷா அல்லாஹ் ! )


1. சீட்டுக் கட்டு ராஜா !
2. ரேஷன் கடைகளில் முறைகேடா ?
3. லஞ்சமா ?
4. கலெக்டரிடம் புகார் செய்ய !
5. தகவல் அறியும் உரிமைச் சட்டம்
6. கவனம்: நிலம் வாங்கும் முன் !
7. பேரூராட்சி மேற்கொள்ள வேண்டிய பணிகள் ?
8. கொசு(த்) தொல்லையிலிருந்து விடுபட...
9. கலப்படம் – ஓர் எச்சரிக்கை !
10. சிட்டுக் குருவியைக் காணவில்லை !
11. வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு !
12. வேலைவாய்ப்பு ! ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி ?
13. V.A.O. வின் பணிகள் யாவை ?
14. புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி ?
15. தண்ணீர் சேமிப்பீர் !
16. அதிரைக் கடல் !
17. குடிக்காதே !
18. அதிரையின் விருந்து உபசரிப்புகள் !
19. மந்திரவாதி !
20. TEEN AGE – பருவம் !
21. கள்ளக் காதல் !
22. மரணத்தின் நிரலாக.....!
23. பயண அனுபவங்கள் 

1. எனக்கு ஊக்கம் கொடுத்து, நல்ல பல ஆக்கங்களைப் பெறும் விதமாகப் பின்னூட்டமிட்டும், நேரிலும், மின்னஞ்சல், தொலைபேசி வாயிலாகவும் தொடர்பு கொண்டு அன்பைக் காட்டிய உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் வாழும் நண்பர்கள், உறவினர்கள், சகோதர சகோதரிகள் மற்றும் சகப் பதிவர்கள் என அனைவருக்கும் எனது வாழ்த்துகளை அன்புடன் அறிவித்தவனாக.!

2. பல வேலைகளுக்கிடயே எனக்காக நேரத்தை ஒதுக்கி, இந்நூலில் உள்ள எழுத்துப் பிழைகளைச் சரிசெய்து தந்ததோடு, நல்ல ஆலோசனைகளை வழங்கிய மூத்த சகோ. அதிரை அஹமது அவர்களுக்கும், எனக்கு ஊக்கம் கொடுத்ததோடு, நல்ல பல ஆலோசனைகளை வழங்கிய மூத்த சகோ. ஜமீல் M.ஸாலிஹ், மற்றும் வலைத் தள நிர்வாகிகள், சக பதிவர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகளை அன்புடன் அறிவித்தவனாக.!

3. மேலும் எண்ணற்ற வலைத் தள நண்பர்களை உருவாக்கித் தந்து, எழுத்து மற்றும் எழுத்து சார்ந்த நல்ல பல விசயங்களை நான் மேலும் கற்றுக்கொள்ள நல்ல அடித்தளமாக அமைத்துக் கொடுத்த நமது அதிரைச் சகோதரர்களின் வலைத்தளங்கள் மட்டுமே என்றால் மிகையாகாது ! நாம் அதிகமாகப் பேசாவிட்டாலும் நமது எழுத்துகள் கண்டிப்பாக அடுத்தவர்களை விழிப்புணர்வு பெறவைக்கும் (இன்ஷா அல்லாஹ்!) என்ற நம்பிக்கையில்.! 

4. இது ஒரு இலவச வெளியீடாகும். எனது சொந்தச் செலவில் முதல் பதிப்பாக ஆயிரம் பிரதிகள் அச்சிடுவதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளேன் என்பதையும்.!

5. இந்நூலை நமதூரிலும் வெளிநாடுகளில் உள்ள நமது சமுதாயம் சார்ந்த பொது அமைப்புகளிடமும் வழங்கி, வெளியிட ஏற்பாடு செய்து, அதன் மூலம் கிடைக்கப்பெறுகிற நிதியை அந்தந்தப் பொது அமைப்பின் சமுதாயச் சேவைகளுக்கென்று பயன்படுத்திக் கொள்வதற்கும் கேட்டுக்கொள்ளலாம் என எண்ணியுள்ளேன். இதற்காகத் தங்களின் மேலான கருத்துகள் – ஆலோசனைகளை எதிர்பார்த்தவனாக.!

6. மேலும் நமது இணையதள வாசகர்கள் படிப்பதற்கு இலகுவாக நமது சகோதர வலைத் தளங்களில் “நூல் வடிவில்” (E-BOOK) பதிவேற்றம் செய்யப்படும் (இன்ஷா அல்லாஹ்!) என்பதையும்.!

7. இப்புத்தகம் மூலமாக நீங்கள் பெறப்போகும் பயனை உங்கள் மூலமாகப்  பலரும் இலவசமாகப் பெறுவதற்கு நீங்கள் மறுபதிப்பு செய்து வெளியிட எனக்கு முழு சம்மதம் என்பதையும்.!

8. இப்புத்தகத்தின் பாகங்கள் ஒன்று இரண்டாகி, மூன்று நான்காகி........என சக பதிவர்களின் சமுதாய விழிப்புணர்வு கட்டுரைகள் பங்களிப்புடன் தொடர வேண்டும் என்பதையும்.!

இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன். 

அன்புடன்,

-சேக்கனா M. நிஜாம்

20 Responses So Far:

Unknown said...

Great Efforts..Congratulations brother S.Nizam.

அதிரை சித்திக் said...

வாழ்த்துக்கள் ..தாங்கள் வலை தளத்தில்

பதிந்தவைகளை புத்தக வடிவில் வெளியிடும்

முயற்சி மெம்மேலும் வெற்றிபெற வாழ்த்துக்கள் ''

புத்தகம் வெளியிட்டு தகுதியானவர்கள் கையில் கிடைக்க

செய்யுங்கள் ஆயிரம் பிரதி என்றால் இருநூறு பிரரதியை

தன்னகத்தே வைத்து கொள்ளுங்கள் மிக முக்கியத்துவம்

வாய்ந்தவர்கள் வெளியீடு முடிந்த பின்னரே கவனத்திற்கு வரு வார்கள்

நூலகம் பிரதியாக அவசியம் அனுப்பி வையுங்கள் முக்கிய மருத்துவமனை

மற்றும் வாடிக்கையாளர்கள் காத்திருக்கும் அலுவகம் ,மற்றும் முடிதிருதகம் ,டிராவல்ஸ்

மக்கள் காத்திருக்கும் இடங்களை ஒன்றுக்கு இரண்டாக கொடுத்து வையுங்கள் ..

இலவச பிரதி என்பதால் வாசகர்கள் இலகுவாக படித்தும் எங்கோ வீசி விடுவார்கள்

எனவே நல்ல வியாபார நிறுவனங்களில் நல்ல வாடிக்கையாளர்களுக்குகொடுக்கும்படி

வேண்டுகோள் வைத்தால் சந்தோசமாக செய்வார்கள் அது மட்டுமின்றி அடுத்த வெளியிட்டிற்கு

விளம்பரம் கேட்டு வாங்கலாம் ..அனைத்துபள்ளிக்கூடங்களின் அலுலகங்கள் ..,அனைத்து பள்ளி

ஆசிரியர்களுக்கும் மறாவாமல்கொடுத்து மகிழுங்கள் ..,

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

தங்களின் தூய விழிப்புணர்வுச் சேவை வெற்றி மேல் வெற்றிபெற வாழ்த்தும், துஆவும்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

நண்பர் நிஜாம், நல்ல சமுதாயப்பணியை செய்துவருகிறீர்கள், உங்கள் சேவை தொடர துஆ செய்கிறேன்...

Ebrahim Ansari said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.

அன்புள்ள தம்பி நிஜாம்,

வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்!

உங்களின் இத்தகைய எல்லா முயற்சிகளுக்கும் எல்லாம் வல்ல இறைவன் துணை இருப்பானாக.

இதே போல் பல வெளியீடுகள் வரவேண்டும் என்று விரும்புகிறோம். எங்களின் அன்பும் ஆதரவும் என்றும் உண்டு. நாங்கள் என்ன செய்யவேண்டுமென்று விரும்புகிறீர்களோ - அவைகளுக்கு அன்புக் கட்டளை இடுங்கள்.

வஸ்ஸலாம்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அதிரை வலைப்பூக்களை திறந்தாலே விழித்துக் கொள்ள வைக்கும் இவரின் எழுத்துப் பக்கங்கள் விரைவில் விழிப்புணர்வு பக்கங்கள் புத்தகமாக இன்ஷா அல்லாஹ் !

வாழ்த்துக்கள், தொடருங்கள்.... நன்னோக்கில் செய்துவரும் அனைத்து காரியங்களும் வெற்றிபெற வாழ்துகிறோம்...

Unknown said...

அல்ஹம்துலில்லாஹ்...இணைய ஊடகத்தில் பதிந்த விழிப்புணர்வுகள் இப்போது அச்சு ஊடகத்திலும்! எப்படியும் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியே ஆகவேண்டும் என்று சகோதரர் நிஜாம் அவர்களின் நன்முயற்சி வெற்றியை தரும் அல்லாஹ்விடம் நற்கூலியையும் பெற்றுதரும்.

அதிரை மக்களிடம் பழங்காலம் தொட்டே எழுத்து,பதிப்பு சமீம காலமாக இணையம் என தகவலை மக்களிடம் கொண்டுசேர்க்கும் ஊடகப்பணி தொடர்ந்து வருகிறது.
ரஹ்மானியா மத்தரஸாவில் அரபு கையழுத்துப் பிரதிகள் பல நூறு இருப்பதாக யூசுப் ஆலீம் அவர்களிடம் பேசிய போது சொன்னார்கள். இவை அதிரைப்பட்டினத்து மார்க்க அரிஞர்களால் எழுத்தப்பெற்றது என்பதும்., இறைமறை,நபிமொழியை அடிப்படையாக வைத்து வன சாஸ்திரம்,சமூக உளவியல்,சமூகம்,மார்க்கம்,விரிவுரை,விளக்கவுரை என்று எழுப்பெற்றது ஆகும்.
என்னிடம், எம் முன்னோர்களால் எழுத்தப்பெற்ற இறைமறை,நபிமொழி ஆய்வு செய்யப்பட்டு எழுதிய அரபு கையழுத்துப் பிரதி உள்ளது. இப்படி பல வீடுகளில் இருப்பதையும் அறிவேன்.
அதிரைப்பட்டினத்து மக்களுக்கு,நல்ல விசயங்களை ஊடகப்படுத்துவது இயல்பிலேயே உள்ளது;அல்லாஹ் தந்துள்ளான்.அல்ஹம்துலில்லாஹ்!
அந்த பாரம்பரிய அணியில் சகோதரர் நிஜாம் இணைந்துக்கொண்டார்.அல்லாஹ் அவருக்கு பரகத்தும் ரஹ்மத்தும் செய்வானாக!
அ.ர.ஹிதாயத்துல்லாஹ்

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

Assalaamu alaikum to everybody,

I wish Mr. Sekkanna M. Nizam for his all success here and in the hereafter due to his new upcoming publication for the collections of his wonderful awareness articles for our whole society published at our hometown's blogs one by one periodically.

It seems his own interest at his own cost to reach the fine and important messages to all the people whoever suffering from various affairs within our community as well as out of community.

May Allah accept his good deed and bless all of us in his mercy for the sake of Islam. Aameen.

Thanks a lot Mr. Sekkanna M. Nizam for his wonderful efforts and I wish him all the best by the grace of Almighty Allah.

Wassalaam.

MSM Naina Mohamed.

அப்துல்மாலிக் said...

Brother Sehana, It is good effort to publish books in such a Topics, There will be lots of adirains specially non Internet users would be get benefited. May the almighty blessed all your dream comes true, Insha allah

ZAKIR HUSSAIN said...

கம்ப்யூட்டரில் நீங்கள் எழுதி வெளியானதை கம்ப்யூட்டரில் படிக்காத வாசகர்களுக்கும் நீங்கள் எடுத்துச்செல்லும் முயற்சி மிகவும் பாராட்டுக்குறியது.

Wish you all the best.

Yasir said...

நண்பர் நிஜாம், நல்ல சமுதாயப்பணியை செய்துவருகிறீர்கள், உங்கள் சேவை தொடர துஆ செய்கிறேன்...நீங்கள் எடுத்துச்செல்லும் முயற்சி மிகவும் பாராட்டுக்குறியது.

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

மகிச்சியான தகவல் / பதிவு, விழிப்புணர்வு வித்தகர் சேக்கனா M. நிஜாம் காக்கா

நீங்கள் செய்து வரும் நற்ப்பணிகளை இணையத்தின் வாயிலாக நமக்கு கிடைத்து பின் நூலின் வாயிலாக காணவுள்ளோம் எனபது அல்ஹம்துல்லிலாஹ்

நல்ல முயற்சி, இம்முயற்சி உங்கள் எழுத்தின் மூலம் அனைத்து சமுதாய மக்களுக்கும் சென்றடைய எனது துவாவும், வாழ்த்துக்களும்

sabeer.abushahruk said...

Great work with great intension.

All the best brother.

Shameed said...

நல்ல முயற்சி மேலும் இருபெரும் தலைகளின் மேற் பார்வையில் வெளி வருவதில் தமிழ் மனக்கும்

crown said...
This comment has been removed by the author.
crown said...

crown சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும். சகோ.சேக்"கனா" நிஜாமின் "கனா" நிஜம்" ஆவதில் மகிழ்சியும் வாழ்த்தும். இதுபோல் பல நூல்கள் நீங்கள் தொகுத்து வழங்கனும் என தூஆ செய்கிறேன் . உங்கள் சமுதாய சேவைக்கு அல்லாஹ்விடம் நற்கூலி உண்டு. ஆமீன்.

இப்னு அப்துல் ரஜாக் said...

எல்லாரும் விழிப்புணர்வு பெறவேண்டும் என்ற அன்பு நண்பர்,சகோதரர் நிஜாமின் கட்டுரைகள் நூலுருப் பெற்று - மக்கள் பயன்பெற்று அதன் மூலம் ஏக இறைவனின் கூலியும் கிடைக்க துவா செய்கிறேன்.நல்ல முயற்சி !

சேக்கனா M. நிஜாம் said...

அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் ! ( வரஹ் )

எல்லாப் புகழும் இறைவனுக்கே !

கருத்திட்ட சகோதரர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் என் வாழ்த்துகள் !
தங்களின் ஊக்கங்கள், ஆலோசனைகள் மேலும் பல ஆக்கங்கள் எழுத என்னைத் தூண்டும் ( இன்ஷா அல்லாஹ் ) நிச்சயமாக..........................

புத்தக வெளியீடு அழைப்பு :

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ( 07-06-2012 ) வியாழக்கிழமை மாலை 4.30 மணியளவில் ஹஜரத் பிலால் நகர் முஹல்லாவில் நடைபெற உள்ள அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் ஆறாவதுக் கூட்டத்தில் “விழிப்புணர்வு பக்கங்கள்” புத்தகத்தை வெளியிட முடிவுசெய்துள்ளேன்.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்,
சேக்கனா M. நிஜாம்

KALAM SHAICK ABDUL KADER said...

அன்புச் சகோதரர், “விழிப்புணர்வு வித்தகர்”, “சமுதாயச் சேவகர்”, சேக்கனா
நிஜாம் அவர்கட்கு

அஸ்ஸலாமு அலைக்கும்,

அல்ஹம்துலில்லாஹ்!

என் வாழ்த்துரை:

விழிப்புணர்வு வித்தகர் வெளியிடும் விழிப்புணர்வுப் புத்தகம்
விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று வழிமேல் விழி வைத்தவனாய்க்
காத்திருக்கிறேன்! சமுதாயப் பிரச்னைகள் சமுத்திரப் பிரளயங்களைப் போல்
பொங்கிடும் தருணம் சிரட்டை அளவேனும் சிரத்தை எடுக்கட்டும்; சிரமங்களைத்
தடுக்கட்டும்! தொழிலின் பணி நெருக்கத்தின் ஊடே எழிலார்ந்த உங்களின்
எழுத்துப் பணி சாலச் சிறந்தது.


கட்டுரைகள் நன்மைகள் கற்பித்துத் தூங்குவோரைத்
தட்டுகின்றப் போக்கில் தனிவழியில் -திட்டமிட்ட
போதனைகள் எத்திக்கும் போய்ச்சேர வேண்டுவதால்
சாதனைகள் வெல்கவென சாற்று


சமுதாயம் விழித்திடவும் விருப்பம் கண்டீர்
****சாய்க்கடையில் வீழாமல் இருக்கச் சொன்னீர்
அமுதாக உணர்வுகளை ஊட்டுஞ் சொற்கள்
****அழகான போதனைகள் காட்டி நிற்கும்
நமதூரின் முன்னேற்றம் வேண்டும் பார்வை
****நடைபயிலும் எழுத்துக்கட் சொல்லும் கோர்வை
“சமதான” அல்லாஹ்வின் ஆசி கிட்டும்
****சாதனையின் அருட்கொடைகள் கதவைத் தட்டும்!


இருபெரும் தமிழறிஞர்களிடம் எழுத்துப்பிழைகளைத் திருத்தம் செய்து கொண்ட வாய்ப்புக் கிட்டியதால் நீங்கள் பேறு பெற்ற எழுத்தாளர் ஆகி விட்டீர்கள்.

Canada. Maan. A. Shaikh said...

Congratulation and I have appreciated you to serving great effort to our community ( MASHA ALLAH ) Thanks lot. and may ALLAH he mercy you he is blessing you to continue to serve up the kind of great job to our communities.




Maan. A. Shaik

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு