Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கல்வி விழிப்புணர்வு இரண்டாவது மாநாடு ! 8

அதிரைநிருபர் பதிப்பகம் | May 17, 2012 | , , ,

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்!
அஸ்ஸலாமு அலைக்கும்.
 
அதிரை இஸ்லாமிக் மிஷன் (AIM) & அதிரை எஜுகேஷனல் மிஷன் (AEM)

ஆகிய அமைப்புகள் இணைந்து வழங்கும்

நல்லொழுக்கப் பயிற்சி முகாம் நிறைவு விழாவும்
கல்வி விழிப்புணர்வு இரண்டாவது மாநாடும்

காலம் : 19.5.2012 சனிக்கிழமை மாலை 3 மணி
இடம் : அதிரை அறிஞர், ‘தமிழ் மாமணி’, புலவர் அஹ்மது பஷீர் அரங்கம்
(A.L.M பள்ளி), CMP லைன், அதிராம்பட்டினம்

சிறப்புரைகள்:
·       மார்க்கக் கல்வியின் சமகால நிலையும் அதன் கட்டாயத் தேவையும்
வழங்குபவர் : மவ்லவீ அப்துல் பாஸித் அல் புகாரீ, M.B.A

·       கல்வியில் விழிப்புணர்வு அடைந்துவிட்டோமா?
வழங்குபவர் : சகோதரர் C.M.N. சலீம், M.A.
(தலைவர்:  தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் ;  நிர்வாகி: அன்னை கதீஜா மகளிர் கல்லூரி, அம்மாப்பட்டினம்)

தொடக்கமாக, பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவியர் வழங்கும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
நிகழ்ச்சியின் இறுதியில் பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவியருக்குப் பரிசுகள் வழங்கப்படும்.

அனைவரும் வருக!                            அறிவமுதம் பருக!


நிகழ்ச்சி ஏற்பாடு: அதிரை தாருத் தவ்ஹீத் ட்ரஸ்ட்

8 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

2- ம் கல்வி மாநாடு மிகச்சிறப்பாக நடந்து முழு பலனை நம்மவர்கள் அடைய வாழ்த்துக்களும் துஆவும்.

சலீம் அவர்களின் எழுச்சிப் பேச்சால் நிச்சயம் நல்ல பலன் மற்றும் சிறப்பு பெறும் அமையும் என்பதில் ஐயமில்லை.

அதிரை சித்திக் said...

மாநாடு சிறப்புற என் வாழ்த்துக்கள் ..,

மாநாட்டின்போது அ. நி .யில் இடம் பெற்ற சிறப்பான

கட்டுரைகளான ...படிக்கட்டு ஏற்றம் ..சகோதரியே

போன்றவைகளை ஆய்வாக எடுத்து வைக்க வேண்டும்

கட்டுரையாளர்கள் கலந்து கொள்ள முடியவில்ல எனில்

சிறப்பு பேச்சாளர்களை வைத்தாவது பேசவைக்க வேண்டும்

KALAM SHAICK ABDUL KADER said...

கல்வி எனும் ஒளிச்சுடரும்
பல்விதமாய் எங்கும் படரும்
ஒருவர் பின் ஒருவராய்ப் பற்றும்
அஞ்சல் ஓட்டம் போல் தொற்றும்
கற்றதைக் கற்பித்தல்; மாசிலா மனதைப்
பெற்றதை ஒப்பித்தல்!


கற்றதனால் நன்மையாம் கற்றதைக் கற்பித்தல்
மற்றவரை நேசித்தல் மாண்பு

புலவர் பஷீர்(மர்ஹூம்)அவர்கள் நினைவரங்கில் புலமை மிக்கப் பாவலர்கள்
ஊரில் இருந்தும் பாவரங்கம் இல்லாமல் நிகழ்ச்சி நடைபெறுகின்றது என்ற
வருத்தமும்; இன்னும் ஒரு மாதத்
திற்குப் பின்னர் இம்மாநாடு நடத்தப்பட்டால் அடியேன் விடுப்பில் வந்து
கலந்து கொண்டிருப்பேன்; இப்பொழுது இயலாமை எண்ணியும் வருத்தம்.

கல்வி விழிப்புணர்வு மாநாடு மிகவும் பயனுள்ளதாக அமைய அல்லாஹ்விடம்
இறைஞ்சுகிறேன்; அமைப்பாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் எல்லார்க்கும் அல்லாஹ்
நற்கூலி வழங்குவானாக!

இப்னு அப்துல் ரஜாக் said...

கல்வி விழிப்புணர்வு மாநாடு மிகவும் பயனுள்ளதாக அமைய அல்லாஹ்விடம்
இறைஞ்சுகிறேன்; அமைப்பாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் எல்லார்க்கும் அல்லாஹ்
நற்கூலி வழங்குவானாக!

அதிரைக்காரன் said...

மேற்படிப்பு படிக்க விரும்பும் மாணாக்கர்களுக்கு சரியான வழிகாட்டல் இல்லாமல் தவறான/பொருத்தமற்ற துறைகளில் தங்கள் வாழ்நாளின் சிலஆண்டுகளைச்செலவளித்து படித்து,பட்டம்பெற்று,வெளிநாடு வந்து வேலைதேடும்போது மிகவும் சிரமப்படுகிறார்கள்.நானறிந்து துபையில் மட்டும் நமதூர் சகோதரர்கள் மூன்றுபேர் நல்ல தகுதிகள் இருந்தும் மிகுந்த மனஉளைச்சலுக்குப் பிறகு கிடைத்த வேலையில் சேர்ந்துள்ளனர்.

இந்த மாநாட்டின்போது கல்லூரி மேற்படிப்பு படிக்கத் திட்டமிட்டுள்ள மாணவர்களுக்கு தனியாகநேரம் ஒதுக்கி சகோ.CMN சலீம் அவர்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பை ஏற்படுத்தினால் மிகவும் பயனாக இருக்கும். மேலும், அத்தகைய மாணாக்கர்களின் ஈமெயில், செல்பேசி ஆகிய விபரங்களை கல்வி ஆலோசனை அமைப்புகள் சேகரித்து, அவ்வபோதைய வேலை மற்றும் கல்வி வாய்ப்புகளை பகிர்ந்து கொள்ளலாம்.

மாநாட்டின்போது நேரமிருப்பின் அ.எ. இல் வெளியான "மாணவிகளின் பெற்றோருக்கான ஆலோசனை" பதிவிலுள்ள சுட்டி : http://adiraixpress.blogspot.com/2012/05/blog-post_7148.html காணொளியை நமதூர் தாய்மார்கள் அறியும் வகையில் ஒளிபரப்ப 10 நிமிடங்களை ஒதுக்குமாறு மாநாட்டு நிர்வாகிகளுக்கு கோரிக்கையாக முன்வைக்கிறேன்.

கல்விப்பணியில் ஈடுபட்டிருக்கும் எமது சகோதரர்களுக்கு அல்லாஹ் எல்லா நலன்களையும் வழங்கட்டும் என்றும் இந்த மாநாட்டுமூலம் பயனுள்ள கல்வியாளர்கள் உருவாகட்டும் என்றும் அல்லாஹ்விடம் துஆச் செய்கிறேன்.

அதிரை சித்திக் said...

.



.

மாநாட்டின்போது நேரமிருப்பின் அ.எ. இல் வெளியான "மாணவிகளின் பெற்றோருக்கான ஆலோசனை" பதிவிலுள்ள சுட்டி : http://adiraixpress.blogspot.com/2012/05/blog-post_7148.html காணொளியை நமதூர் தாய்மார்கள் அறியும் வகையில் ஒளிபரப்ப 10 நிமிடங்களை ஒதுக்குமாறு மாநாட்டு நிர்வாகிகளுக்கு கோரிக்கையாக முன்வைக்கிறேன்>>>>>>>>>>>.

நல்ல யோசனை ....அவசியம் ஏற்பாடு செய்யுங்கள் ,.

Anonymous said...

இந்த மாநாட்டை மாணவ, மாணவிகள் முழுமையாக பயன் படுத்தி அவரவர் கல்வியில் முன்னேற்றத்தை ஏற்படுத்தவும்.

எல்லாம் வல்ல இறைவன் இந்த மாநாட்டை சிறப்பாக நடத்தி வைப்பானாகவும் ஆமீன். இந்த மாநாட்டை மாணவ, மாணவிகள் பயன் படுத்திக்கொள்ளவும்.

அப்துல்மாலிக் said...

கல்வியின் அவசியத்தை அதிகமதிகம் நம்மூர் மக்களிடன் புகுத்த வேண்டும், அந்த வகையில் இதுமாதிரி விழாக்கள் அமையும், வெற்றிப்பெற வாழ்த்துகள், நம்மூர் பெண்கள் அதிகம் கலந்து பயனுறவேண்டிய தருணம்..

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு