கடற்கரையின் காற்றில்
ஒரு வண்ண மயில்
தோகையை விரித்து
அற்புத எண்ணங்களை
ஓவியமாக இறகுகளில் வரைந்து
விரித்து ஆடியது ஒரு நிகழ்வு எனில்......
கடற்கரையின் காற்றுக்கு அருகிலுள்ள கருமேகமே நினைவுகளாகும்...
***************
கார் மேகங்கள் குவிந்து ,
அங்குமிங்கு அலைமோதி ,
தப்படித்து ,குவியல் குவியலாய்
ஒரே இடத்தில் கூடுவது என்பது நிகழ்வு எனில்.....
தரையில்,மலையின் மேலே நீராவது மேகங்களின் நினைவாகும்...
******************
மலையின் மேலே
அழகாய் தவழ்ந்து ,
மேற்படும் நினைவுகளாம்
இலைகளின் அசைவுகளும் ,பூச்சொரிவுகளும் ,
பறவை ,விலங்குகளின் விளையாட்டையும் ,
தன் மீது வீழும் சருகுகள் ,பூக்கள் என
யாவயும் படம்பிடித்து தவழும் நீரோடை என்பது நிகழ்வு எனில் .....
சற்று தொலைவில் மலையின் நுனியில் ஓரம் சென்று பிரம்மாண்ட அருவியாய் மாறுவது அதன் நினைவாகும் ...
***********
ஆர்ப்பரிக்கும் அலப்பறையில்
நெஞ்சு புடைத்து ,
ஆனந்த திமிரில் சந்தோஷ சிதறல்களாய்
கொட்டும் அருவி என்பது நிகழ்வு எனில்....
எதார்த்தம் அறிந்து தரையில் ஆறாக மாறுவது அருவியின் நினைவுகளாகும்..
**************
திக்கு திசை தெரியாமல் ,
பின்புலத்தில் அருவியின் தைரியம் என
மார்தட்டி எதிர்படும் தடைகளை உடைத்து ,மிதித்து
செல்லும் ஆறு ஒரு நிகழ்வு எனில் ..............
சுடும் பிரதேசத்தின் வெயிலினால்
சுட்டு புடமெடுத்த மணல் பருக்கைகளை மின்னிடும்
வைரமாக்குவது ஆற்றின் நினைவுகளாகும் ...........
******************
ஆற்று நீரின் உறவால்
மின்னிடும் மணல் பருக்கையின்
பிம்பங்கள் ஒரு நிகழ்வு எனில் ............
வளமொங்கும் பயிர்களை வளர்த்து
மீந்தும் நீரை வழியனுப்புவது மணல் பருக்கையின் நினைவாகும் ....
*************
கடத்தி வரப்பட்ட நீரின்
ஆற்றுப் படுகையில் காய்ந்து ,
பூக்கள் இழந்து நிற்கும் செடிகள் என்பது நிகழ்வு எனில் ......
பருவக்காற்றில் அசைந்தாடும் பூக்களின்
பிம்பங்களை தன மீது சுமந்து ,செடிகளின்
பார்வைக்கு விருந்தாக்க முனைவது ஆற்றின் நினைவுகளாகும் ..
******************
இல்லாத எல்லைகளை தொட்டு
முடித்து,
ஆற்றின் அடைக்கலம் கடல் என்பது நிகழ்வு எனில் ...........
அதன் நினைவுகள் ..???
முதலிலிருந்து படியுங்கள்
---Harmys---
14 Responses So Far:
To Bro Harmy,
என்ன கொஞ்ச நாளா காணோம்...இப்படி இயற்கையை வர்ணிப்பதில் இணைந்து கொள்வோம் என முடிவுஎடுத்தாச்சா?
//சுடும் பிரதேசத்தின் வெயிலினால்
சுட்டு புடமெடுத்த மணல் பருக்கைகளை மின்னிடும்
வைரமாக்குவது ஆற்றின் நினைவுகளாகும் ...........//
இப்போதுதான் அதிராம்பட்டினம் எனும் தந்தூரி அடுப்பிலிருந்து மீண்டு வந்திருக்கேன். நீங்கள் சொன்ன ஆறுகளைப்பற்றிய நினைவுகள் வார்த்தைகளில் நன்றாய் இருக்கிறது. உண்மையில் இப்போது நிறைய ஆறுகளில் தண்ணீர் வரத்து இல்லாததால் போர் நடந்த இடம் மாதிரி ஆற்று ஒரங்களில் குப்பையும் ப்ளாஸ்டிக் பைகளும் நிறைந்து கிடக்கிறது.விமானத்தில் நுழையும் போது எல்லோருக்கும் முதலில் சீட் நம்பர் தேடுவதில் கவனம் இருக்கும்.எனக்கு ' அப்பாடா ..இங்கு கொசு கடிக்காதுல..' என இருந்தது.
இந்த அதீத கற்பனை அழகாயிருக்கிறது. வாசிக்கயில் வயது குறைகிறது.
வாசித்து முடிக்கவும் மனசு லேசாகிறது.
நன்றி அப்துர்ரஹ்மான்.
நிகழ்வுகளும் நினைவுகளும்
வண்ணமயமான எண்ணங்கள்!
எழிலான தோற்றத்தில் நீர்வீழ்ச்சியாய் ..
பிறகு பவனிவரும் ஆற்றின் அழகு இளம் மங்கையின்
எழில் தோற்றம் கடந்து வரும் பகுதிகளை வனப்பாக்கும்
ஆற்றுக்கு முடிவு கடல் தானா ..சுகமான துவக்கம் சோகமான
முடிவு .எதற்கும் கவிதையால் உயிரூட்ட முடியும் ..
நல்ல கற்பனை ..கவிதையை படிக்காமல் பார்த்தாலே
உணர்த்து கொள்ள உதவும் படங்கள் ..சபாஷ்
ஆகா.... எழுதுக்களில் வர்ணம் மிளிர்கின்றன
நதிமகளின் நடையழகு!
====================
விண்ணகத்துப் பெண்குழந்தை; மேக மென்னும்
***மெல்லியலாள் கருவளர்ந்து இடி யோசை
மண்ணகத்தை அதிர்விக்கப் பிறந்த வள்நான்;
***மலைமங்கை மேலாடை யென்ன வீழ்ந்து
மண்ணகத்தைத் தொட்டபின்னே குதியாய்ச் சென்று
***மடுமேடு காடெல்லாம் திரிப வள்நான்;
மண்ணெல்லாம் நான்தொட்டால் சிரிக்கும்; நல்ல
***மாணிக்கப் பயிர்விளையும்; கொழிக்கும் செல்வம்
அணை;கட்டும் என்றுநானாய்ச் சொன்ன தில்லை
**அடக்கமுள்ள பெண்மகள்நான் ஆத லாலே;
அணைக்கட்டு வேலையங்கே முடிந்த தென்றால்
***ஆசையுடன் பசுமையினை ஈன்று நிற்பேன்;
நினைவெல்லாம் என்தலைவன் கடலை நாடி;
***நீள்பூமி தவழ்ந்தங்கே கிடைப்ப தெல்லாம்
நினைவோடு தலைவன்கா லடியில் சேர்ப்பேன்;
***நிம்மதியாய் அவன்மடியில் தலையைச் சாய்ப்பேன்;
--
அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்
To Bro Harmy,
என்ன கொஞ்ச நாளா காணோம்...இப்படி இயற்கையை வர்ணிப்பதில் இணைந்து கொள்வோம் என முடிவுஎடுத்தாச்சா?
---------------------------
ஹா ..ஹா ...எப்பொழுதும் படிக்கட்டின் பார்வையின் அருகில் தான் காக்கா...
-----
இது ஒரு water recycle மேட்டர்தான் .இருந்தாலும் எல்லா அசைவுகளுக்கும் ஒரு நோக்கம் ,பலன் இருக்கும் என்ற ஒரு சின்ன concept இதில் உண்டு .
ரசனையான ரசிப்பிற்கு சபீர் காக்கா ,ஜஹபர்,சித்திக் சாச்சா,கலாம் காக்கா ,ஹமீது காக்கா ஆகிய அனைவருக்கும் நன்றிகள் .
மென்மையின் சாரளாகத்தான் இருக்கும் எப்போதும் அப்துர் ரஹ்மானின் கவிதைகள்...
அப்துல் ரஹ்மானே.....
உன் இயற்கை வருணனை படிக்கும் என்னை என்றுமே எங்கோ அழைத்துச்செல்லும். இலவசமாய் அங்கு இருப்பிடம் அமைக்கும். உள்ளக்கதவோரமாய் நின்று உற்சாகத்தை வரவேற்று நிற்கும்.
(ஒரு நேரத்தில் உன்னைப்போல் இங்கு கவிதை எழுத பேராசை கொண்டு சிலவற்றை எழுதியும் இருக்கிறேன். பிறகு தான் தெரிந்து கொண்டேன். கவிதை வரிகளை பிரித்து மேய்ந்து அதற்கு விளக்கமும் இலக்கணத்தில் தர கலாம் காக்கா, கவிக்காக்கா, அப்துல்ரஹ்மான், க்ரவ்ன் போன்ற பெருங்கவிஞர்கள் உலாவரும் இடமிது ஆதலால் கவிதை எழுதும் எண்ணம் அன்றே என்னை கை கழுவி "போடா வந்துட்டான் எழுதுறத்துக்கு. நீ அதுக்கு சரிப்பட்டு வரமாட்டா" என்று திட்டி விட்டு சென்று விட்டது போல் தெரிகிறது.)
//பிறகு தான் தெரிந்து கொண்டேன். கவிதை வரிகளை பிரித்து மேய்ந்து அதற்கு விளக்கமும் இலக்கணத்தில் தர கலாம் காக்கா, கவிக்காக்கா, அப்துல்ரஹ்மான், க்ரவ்ன் போன்ற பெருங்கவிஞர்கள் உலாவரும் இடமிது ஆதலால் கவிதை எழுதும் எண்ணம் அன்றே என்னை கை கழுவி "போடா வந்துட்டான் எழுதுறத்துக்கு. நீ அதுக்கு சரிப்பட்டு வரமாட்டா" என்று திட்டி விட்டு சென்று விட்டது போல் தெரிகிறது.//
உங்களுக்கென்று ஒரு வாசகர் கூட்டமே இருக்கு ..மறந்துட்டீங்களா?..
ஜாஹிர் காக்காவுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும்.
சும்மா வல்லாணாலையிலெ யாங்காக்கா பொரளியெ கெழப்புறியெ????????
(கவிக்காக்காவூட்டு கலியாணத்துக்காக நீங்க ஊர் போயிருந்ததால் இப்படி ஒரு நினைப்பு வந்து மவுனமாய் சிரித்துக்கொண்டேன். நமதூர் ரயிலடியை பார்க்க வேண்டும் என்ற ஆவலில் ஒரு நண்பருடன் நமதூர் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை பைக்கில் கடந்து சென்று கொண்டிருக்கிறேன். அப்பொழுது ஒரு ஆம்புளெ கா.மு.மே. பள்ளிக்கு வாயிலில் நிற்கும் அந்த புளிய மரத்தை வளச்சி,வளச்சி ஃபோட்டோ எடுத்துக்கொண்டிருக்க, உடனே நான் பைக்கை நிப்பாட்டி அந்த ஆம்புளையைப்பார்த்து யாங்க, உங்க பேரு ஜாஹிருசனா என்று கேட்க, எப்படி கரக்ட்டா சொல்றியெ என்று நீங்க கேட்க, உடனே நான் 'புளிய மரத்தை வளச்சி, வளச்சி ஃபோட்டோ எடுக்கும் போதே நெனெச்சேன் உங்க பேரு "ஜாஹிருசன் தான்" என்று சொல்ல ஒரே சிரிப்பு அங்கு....அப்படிண்டு நான் தனியே இங்கு நினைத்துக்கொண்டேன்....எப்புடி???????
அஸ்ஸலாமு அலைக்கும். இயற்கையின் நிகழ்வுகளையும், அதன் நினைவுகளையும் நம் சோர்வு "களையும்" வண்ணம் தீட்டி இருக்கும் இந்த கவிதை இயற்கை அதன் , அதன் பாதையிலேயே பயணம் செய்து அதை நம் கண்முன் நிருத்தும் அழகே,அழகு! இந்த கவிதையில் கண்ணுக்கு புலப்படாதவாறு ஒரு வித நூல்(மெல்லிய கயிறு) இணைத்து பிடித்திருப்பதை உற்று நோக்கினால் தெரியும். நாமும் ஆறாகவும்,கடலாகவும் மாறிவிடுவது போல் ஒரு மாய உணர்வவை ஏற்படுத்துவதுதான் இந்த கவிதையின் வெற்றி!!!!!!!
எனக்கென்னவோ அமைதி,ஆனந்தம்,அருமை,சந்தோஷம் என்றாலே ஹார்மியின் நினைவுதான் வருகின்றது
Post a Comment