சமூகத்தில் காலம்காலமாக “இலவசம்” என்ற பெயரில் பொதுமக்களிடயே வழங்கப்பட்டு வரும் பொருட்களால் சமுதாயத்தின் நிலைகள் மாறிக்கொண்டே வருகிறது என்றுச் சொன்னால் மிகையாகாது.
ஆம்....! பிறப்பு முதல் இறப்பு வரை எத்துணை இலவசங்கள் !
1. அரசியல் கட்சிகள் தேர்தல் நேரத்தில் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் செய்யும் அறிவிப்பாகிய “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இவற்றையெல்லாம் இலவசமாக வழங்குவோம்” என்பதாகட்டும்................
2. தேர்தல் நடக்கும் முந்திய நள்ளிரவில் பொதுமக்களுக்கு வழங்கும் ஊக்கத்தொகை, பரிசுப்பொருளாகட்டும்...............
3. இலவசப் பொருட்கள் வழங்க “நமது தலைவர்” வருகிறார் என்ற கட் அவுட் அறிவிப்பாகட்டும்................
4. புதிய கடையின் திறப்பு விழாவின்போது கொடுக்கும் இலவசமாகட்டும்.................
5. ஒரு பொருள் எடுத்தால் மற்றொன்று இலவசம் என்ற அறிவிப்பாகட்டும்.................
6. நூறு சதவீத பொருள் வாங்கினால் கூடுதலாக இருபது சதவீதம் இலவசம் என்ற அறிவிப்பாகட்டும்................
7. பண்டிகைக்கால தள்ளுபடியாகட்டும்...................
8. இன்று ஒரு நாள் மட்டும் எதை எடுத்தாலும் பாதி விலை ( ?! ) என்ற அறிவிப்பாகட்டும்................
9. ஒரு மனை வாங்கினால் இன்னொன்று இலவசம் என்பதாகட்டும்..............
10. நூறு ரூபாய்க்கு டாப் அப் செய்தால் நூற்றுஐம்பது ரூபாய்க்கு டாக் டைம் என்பதாகட்டும்..................
இப்படி இலவசங்கள் சமூகத்தில் ரொம்ப மலிவாகக் காணப்படுகிறது.
“இலவசம்” என்பதின் பொருள் உங்களிடம் ஒன்றை வழங்கிவிட்டு மற்றொன்றை அதாவது அவர்கள் எதிர்பார்க்கும் ஒன்றை உங்களிடமிருந்து மறைமுகமாகப் பெறுவதே.
அரசால் தேவையானவர்களுக்கு இலவசங்கள் வழங்குவதில் தவறில்லை என்றாலும், உழைத்து பிழைக்கக்கூடிய வாய்ப்புள்ளவனுக்கும், வசதி படைத்தவனுக்கும் இலவசங்களைக் கொடுப்பது, அவனை சோம்பேறியாக்கிவிடுகிறது. இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் அரசால் வழங்கப்படும் அனைத்து இலவசங்களும் நாம் ஒவ்வொருவரும் செலுத்தக்கூடிய வரிகளாகிய Professional Tax, Sales Tax, Central Sales Tax, Custom Duty, Income Tax, Dividend Distribution Tax, Excise Duty , Municipal & Fire Tax, Staff Professional Tax, Cash Handling Tax, Food & Entertainment Tax, Gift Tax, Wealth Tax, Stamp Duty & Registration Fee, Interest & Penalty, Road Tax, Toll Tax , Vat & etc போன்றவற்றின் மூலமாக கிடைக்கும் பணமே. அதாவது ஒருவர் பயன்பெற மற்றொருவர் தோளில் சுமக்கும் நிலை.
“பசியோடு இருப்பவனுக்கு ஒரு மீனைக் கொடுப்பதற்கு பதிலாக மீன் பிடிக்கக் கற்றுக்கொடுப்பதே சிறந்தது” என்பது பலமொழி ஒரு மீனைக் கொடுத்தால் அவனுக்கு ஒரு வேலை பசியாற்றிவிடலாம். அந்த நிமிடத்திலேயே அவனை அடுத்தவர்களிடம் கையேந்தவும் பழக்கிவிடுகிறோம். இது மட்டுமல்லாமல் மீனை பரிதாபப்பட்டு கொடுப்பவனுக்கும் இதனால் வீணான செலவு. இதைத்தவிர்த்து அவனுக்கு மீன் பிடிக்கக் கற்றுக்கொடுத்தால் அதன் மூலம் அவன் பிடிக்கும் மீனை அவன் சாப்பிடும்போது ஏற்படும் மகிழ்ச்சியே தனி. நான் பிடித்த மீன் இது ! என்ற நினைவில் மகிழ்ச்சி பொங்கச் சாப்பிடுவான். இலவசமாகக் கிடைத்த மீனை சாப்பிடுவதைவீட, அவன் உழைத்து பிடித்த மீனைச் சாப்பிடும்போது கிடைக்கும் ருசியே தனி.
இன்று பயன்படுத்தப்பட வேண்டிய உழைப்பை நாளை நாம் பயன்படுத்தலாம் என்பதை தூக்கி தூர வைத்துவிட்டு அன்றைய தினம் பயன்படுத்தாத உழைப்பு என்றைக்கும் வீணானது என்பதைக் கருத்தில் கொண்டு இறுதிவரை போராடிக் கடுமையாக உழைப்பதன் மூலமே வாழ்க்கையில் மிக உயர்ந்த நிலையை அடைய முடியும். நீங்கள் உழைக்கும்போது சில தோல்விகள் வரத்தான் செய்யும் தோல்விகள் இல்லாமல் வெற்றி இல்லை. எனவே தோல்விகளைக் கண்டு துவண்டு விடாதீர்கள்.
கடின உழைப்பே உயர்வான வெற்றிக்கு வழி !
சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! தொடரும்...
42 Responses So Far:
விழிப்புணர்வு வித்தகர் தம்பி நிஜாம், அஸ்ஸலாமு அலைக்கும்.
தங்களின் இலவச பட்டியல் எண் 9
//ஒரு மனை வாங்கினால் இன்னொன்று இலவசம் என்பதாகட்டும்..............//
அதிரையில் இவ்வாறு கிடைக்குமா? உலகெங்கும் ரியல் எஸ்டேட் இறக்கத்தில் சென்றாலும், அதிரையில் மட்டும் ஏன் ஏற்றத்தில் செல்கிறது? காரணம் அதிரையில் மனை விற்பனை ரியல் எஸ்டேட் என்ற பெயரில் கூற முடியாது. அதற்கு எதிர்மறையான வார்த்தைகளைத்தான் கூற முடியும்.
//இதைத்தவிர்த்து அவனுக்கு மீன் பிடிக்கக் கற்றுக்கொடுத்தால் அதன் மூலம் அவன் பிடிக்கும் மீனை அவன் சாப்பிடும்போது ஏற்படும் மகிழ்ச்சியே தனி. நான் பிடித்த மீன் இது ! என்ற நினைவில் மகிழ்ச்சி பொங்கச் சாப்பிடுவான். இலவசமாகக் கிடைத்த மீனை சாப்பிடுவதைவீட, அவன் உழைத்து பிடித்த மீனைச் சாப்பிடும்போது கிடைக்கும் ருசியே தனி.//
அந்த ருசியே தனி ருசி. Hard work is mother of good luck என்பதன் விளக்கமே இது.
//இதைத்தவிர்த்து அவனுக்கு மீன் பிடிக்கக் கற்றுக்கொடுத்தால் அதன் மூலம் அவன் பிடிக்கும் மீனை அவன் சாப்பிடும்போது ஏற்படும் மகிழ்ச்சியே தனி. //
//இறுதிவரை போராடிக் கடுமையாக உழைப்பதன் மூலமே வாழ்க்கையில் மிக உயர்ந்த நிலையை அடைய முடியும். நீங்கள் உழைக்கும்போது சில தோல்விகள் வரத்தான் செய்யும் தோல்விகள் இல்லாமல் வெற்றி இல்லை. எனவே தோல்விகளைக் கண்டு துவண்டு விடாதீர்கள்.//
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனது உயிர் யாருடைய கைவசமிருக்கிறதோ அவன் மீது ஆணையாக! உங்களில் ஒருவர் தம் கயிற்றை எடுத்துக் கொண்டு விறகு வெட்டி அதைத் தம் முதுகில் சுமந்து சம்பாதிப்பது, ஒருவனிடம் வந்து யாசிப்பதைவிடச் சிறந்ததாகும். அவன் யாசிப்பவருக்கு கொடுக்கவும் செய்யலாம்; மறுக்கவும் செய்யலாம்."
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
அபூ மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் தர்மம் செய்ய வேண்டும் என ஏவினால் எங்களில் ஒருவர் கடைத் தெருவுக்குச் சென்று கூலி வேலை செய்து, இரண்டு கையளவு தானியம் சம்பாதித்து (அதைத் தர்மம் செய்து) விடுவார். ஆனால் இன்றோ எங்களில் சிலரிடம் ஓர் இலட்சம் (திர்கம்ஃ தீனார்) வரை உள்ளன.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"தாம் சம்பாதித்தது ஹலாலா ஹராமா என்று மக்கள் பொருட்படுத்தாத ஒரு காலம் (இனி) வரும்!"
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ஒரு பெண் தம் வீட்டிலுள்ள உணவைப் பாழ்படுத்தாமல், (பசித்தவர்களுக்குக் கொடுத்து) செலவு செய்தால் (அப்படி) செலவு செய்ததற்காக (அவளுக்குரிய) நற்கூலி அவளுக்கு கிடைக்கும்! (அந்த உணவைச்) சம்பாதித்தற்கான நற்கூலி அவளுடைய கணவனுக்கு உண்டு! கருவூலப் பொறுப்பாளருக்கும் அதுபோல் (நற்கூலி) கிடைக்கும்! ஒருவர் மற்றவரின் கூலியில் எதனையும் குறைத்து விடமாட்டார்!"
என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
SAHIH AL BUKHARI
தம்பி ஷேக்கனா எம். நிஜாம் அவர்கள் நம் நாட்டின் அண்மைக்கால பொருளாதார வீழ்ச்சிக்குரிய ஒரு முக்கிய காரணத்தை தொட்டுச் சென்று இருககிறார்கள்.
இந்த இலவசம் தன்னிலை அறிய முடியாத போதை. வெளிவர முடியாத மாயை. தன்னிடம் பறித்து தனக்கே தருகிறார்கள் என்ற அறியாமையின் அடிப்படை.
எந்த இலவசமாகத் தரப்படும் பொருளும் யார் வீட்டுத் தோட்டத்திலிருந்தும், எந்த கோபுரத்திலிருந்தும் வருவதில்லை என்பதை உணர வேண்டும். எந்த கடைக்காரரும் , வியாபாரியும் நஷ்டத்துக்கு வணிகம் புரியவதில்லை.
என்ன தேசமோ? இது என்று மாறுமோ?
அரசியலாகட்டும் வர்த்தகமாகட்டும் அவர்கள் இலவசம் என்று அளிக்கும் அத்தனையும் வேஷம்.
நீங்கள் நம்மை விழிப்புணர்வூட்டி அள்ளித்தரும் ஆக்கங்களே மூளைக்கு உபயோகமுள்ள இலவசம்.
அரசியல்வாதிகளுக்கு ஆட்சியில் இருக்கும் வரை கார் இலவசம் பெட்ரோல் இலவசம் போன் பில் இலவசம் வீடு இலவசம் இப்படி பல இலவசங்களை இலவசமாக அள்ளிக்கொண்டு மிச்சம் மீதியை மக்களுக்கு அள்ளி வீசுகின்றார்கள்
நல்லவாயன் சம்பாரித்து நாரவாயான் திண்டானம் என்ற சொல்லாடல் இதற்க்கு பொருந்துமா ? சகோ நிஜாம்
தகவல்களுக்காக.
இலவசம் என்பதை சிலர் ஓசி (OC) எனக் கூறுவர். ஏன் தெரியுமா?
இந்தியாவை பிரிட்டிஷ் காரர்கள் ஆட்சி செய்யும்போது, பிரிட்டிஷ் காரர்கள் கம்பெனியில் பணிபுரிவோர் அவர்களுக்குள் கடிதத் தொடர்புகள் வைத்துக் கொள்ள சிறப்பு சலுகை இருந்தது. அவர்களின் கடிதத்தின் மேல் On Company Service அதாவது (OCS) என எழுதிவிட்டால் கட்டணமின்றி கடிதம் போய் சேர்ந்துவிடும்.
எனவே OCS என்ற கடிதம் கட்டணமில்லாத இலவச கடிதம். காலப்போக்கில் OCS என்பதிலிருந்து, இறுதி எழுத்தாகிய S மறைந்து. இறுதியில் OC என மாறி, அதை இன்றும் இலவசத்திற்கு சிலர் ஓசி (OC) என்ற பழக்கத்தை பயன் படுத்துகின்றனர்.
வலைக்கும் முஸ்ஸலாம் !
ஜனாப் “நாவலர்” நூர் முஹம்மது அவர்களுக்கு,
கருத்திட்ட தங்களுக்கு என் வாழ்த்துகள் !
// அதிரையில் இவ்வாறு கிடைக்குமா? உலகெங்கும் ரியல் எஸ்டேட் இறக்கத்தில் சென்றாலும், அதிரையில் மட்டும் ஏன் ஏற்றத்தில் செல்கிறது? காரணம் அதிரையில் மனை விற்பனை ரியல் எஸ்டேட் என்ற பெயரில் கூற முடியாது. அதற்கு எதிர்மறையான வார்த்தைகளைத்தான் கூற முடியும். //
ஏன் இல்லை ?
வயல் வரப்புகளையும்................
சி.எம்.பி. வாய்க்கால்களையும்....................
அடுத்தவர் இடத்தையும்..................................
துண்டுகளாக (மனை) கூறுபோட்டு, அதில் எல்லைக்கல் நட்டு, அதற்கு வர்ணங்கள் பல பூசி, சதுர அடியில் வரைபடம் தீட்டி, அவர்களின் குடும்ப பெயரை அதற்கு சூட்டி, அதில் முதல் மனையை டாக்டர் வாங்கிட்டார், இரண்டாவது மனையை வக்கீல் வாங்கிட்டார், மூன்றாவது மனையை ஹாஜியார் வாங்கிட்டார் என்று “டிக்” செய்துவிட்டு................
இப்படி “பொய்”யைக் கூறி விற்பவர்கள் சமூகத்தில் ஏராளம் !
இதில் தவணை முறையாகட்டும்...................
ஒரு மனை வாங்கினால் இன்னொன்று இலவசம் என்பதாகட்டும்.........................
பத்திர செலவு இலவசம் என்பதாகட்டும்..........................
மனையை பார்த்துவர ட்ரான்ஸ்போர்ட் இலவசம் என்பதாகட்டும்...............
இப்படி ஏராள இலவசம் நமதூரில் தாராளம் !
குறிப்பு :
தற்போது அரசின் நில வழிகாட்டி மதிப்பீடு கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதால்................”ரியல் எஸ்டேட்“ பிஸ்னெஸ் ரியலா படுத்துவிட்டது என்பது வேறுவிசயம்.....!
// அண்மைக்கால பொருளாதார வீழ்ச்சிக்குரிய ஒரு முக்கிய காரணத்தை தொட்டுச் சென்று இருககிறார்கள். //
மூத்த சகோ. இப்ராகிம் அன்சாரி அவர்களே,
சரியாகச்சொன்னீர்கள் !
தங்களுக்கோர் வேண்டுகோள்........ இறைவன் நாடினால் ! இதைப்பற்றி அதாவது "இலவசம்" நமது நாட்டின் பொருளாதாரத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதை விளக்கி கட்டுரை ஒன்றை பதிய தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
நண்பர் M.H.J. அவர்களுக்கு,
கருத்திட்ட தங்களுக்கு வாழ்த்துகள் !
//அரசியலாகட்டும் வர்த்தகமாகட்டும் அவர்கள் இலவசம் என்று அளிக்கும் அத்தனையும் வேஷம்.//
சமூகம் விழிப்புணர்வுபெற்றாலே அவர்களின் வேஷம் கலைந்துவிடும் !
நண்பர் அர அல அவர்களுக்கு,
கருத்திட்ட தங்களுக்கு வாழ்த்துகள் !
அருமையான விளக்கங்களுடன் கூடிய ஹதீஸ்கள் !
“புகைப்பட கலை வல்லுனர்” சகோ. ஹமீத் அவர்களுக்கு,
கருத்திட்ட தங்களுக்கு வாழ்த்துகள் !
// நல்லவாயன் சம்பாரித்து நாரவாயான் திண்டானம் என்ற சொல்லாடல் இதற்க்கு பொருந்துமா ? //
ஆம்......... ஒருவர் பயன்பெற மற்றொருவர் தோளில் சுமக்கும் நிலை.
// இலவசம் என்பதை சிலர் ஓசி (OC) எனக் கூறுவர். ஏன் தெரியுமா?
இந்தியாவை பிரிட்டிஷ் காரர்கள் ஆட்சி செய்யும்போது, பிரிட்டிஷ் காரர்கள் கம்பெனியில் பணிபுரிவோர் அவர்களுக்குள் கடிதத் தொடர்புகள் வைத்துக் கொள்ள சிறப்பு சலுகை இருந்தது. அவர்களின் கடிதத்தின் மேல் On Company Service அதாவது (OCS) என எழுதிவிட்டால் கட்டணமின்றி கடிதம் போய் சேர்ந்துவிடும்.
எனவே OCS என்ற கடிதம் கட்டணமில்லாத இலவச கடிதம். காலப்போக்கில் OCS என்பதிலிருந்து, இறுதி எழுத்தாகிய S மறைந்து. இறுதியில் OC என மாறி, அதை இன்றும் இலவசத்திற்கு சிலர் ஓசி (OC) என்ற பழக்கத்தை பயன் படுத்துகின்றனர்.//
அருமையான விளக்கம் !
“நாவலர்” சகோ. நூர் முஹம்மது அவர்கள் இதுபோன்ற பயனுள்ளவற்றை கட்டுரைகளாக எழுதி பதிய வேண்டுகிறேன்.
தன் வசம் உள்ளவற்றை பிறர்வசப்படுத்த இலவசம் என்றொன்றைக் கொடுத்துப் பரவசப் படுத்துதல் ஒரு டெக்னிக்.
நன்றாய்த் தொகுத்தீர்கள் நிஜாம்.
அருமையான பதிவு சகோ சேக்கனா M. நிஜாம் அவர்களே
ஒரு பொருள் வாங்கும் போது இன்னொரு பொருள் இலவசமாக கிடைத்தால் பெரும்பாலனவர்களுக்கு சந்தோஷமே.
இலவசம்னா வாயைப் பிளப்பது மனித குலத்தின் அடையாளமாக்கும்..அதைப்போயி குறை சொல்லிகிட்டு!....என்று சிலர் முனங்குவது புரிகிறது
எதுக்கு எல்லாம் இலவசம் என்று ஒரு வரை முறையே இல்லாமல் போய்விட்டது.வாடிக்கையாளர்கள் ஈர்ப்பதற்கும் சரியாக ஏமாற்றுவதற்கும் இதைப் போனற் அருமையான டெக்னிக் வேறு இல்லை
நகை கடையில் பார்த்தீங்கன்னா அந்த GIFT BAG வாங்குவதிலேயே நம்ம மக்கள்ஸ் மும்முரமா இருப்பாங்க,ஆயிரமாயிரமா கொட்டி நகை வாங்குறவங்களுக்கு இருபது ரூபாய் பொருள் பெருசா போகுது
இரண்டு சந்திரிக்கா சோப்வாங்கினால் ஒரு சீப்பு இலவசம்
இது விளம்பரம்.... ஒரு சீப்பின் விலை பத்து காசு இருக்கும்
அதற்க்கான விளம்பரம் சன்டிவி போன்ற பல ஊடகங்களில்
லட்சக்கணக்கில் விளம்பரம் செய்தார்கள் ஒன்றுக்கும் உதவாத சீப்புக்கு
எவன் இந்த சோப்பினை வாங்குவான் ..என்று நினைத்தேன்
மக்கள் மனதை நன்கு அறிந்த விளம்பர தாரகளின் உக்தி...
மக்கள் மனதில் ..பொருளின் பெயர் ஞாபகத்தில் இருக்க
வேண்டும் ..அதுதான் . .இலவசம் தூண்டில் போன்றது
இறை வைத்து இலகுவாக பிடித்து விடுகிறார்கள் ...
இலவசம் ..வெறும் வேஷம் ....
sabeer.abushahruk சொன்னது…
தன் வசம் உள்ளவற்றை பிறர்வசப்படுத்த இலவசம் என்றொன்றைக் கொடுத்துப் பரவசப் படுத்துதல் ஒரு டெக்னிக்.
நன்றாய்த் தொகுத்தீர்கள் நிஜாம்.
-----------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். இது சொன்னது சகோ.சபீரா?கிரவுனான்னு யாராவது கேட்பார்களோ? கவிசக்கரவர்த்திக்கு இப்படி எழுதுவது எளிது ஆனால் நான் என்ன சொல்ல நினைத்தேனோ அதையே எழுதுவது. என்னை ஆச்சரியத்தில் ஆழ்தியது.
இலவசம் இல்லாத இந்தியாவா?....நம்பவே முடியலெ. மக்கள் திருந்தாத வரை எதுவும் செய்ய முடியாது. கட்டும் சேலைக்கும் / வேஷ்டிக்கும் க்யூவில் நிற்கும் ஜனங்கள். எப்போதாவது கல்வி / மருத்துவம் இலவசமாக வேண்டும் என்று பொதுமறியல் செய்திருக்கிறதா?.
To Bro Crown,
//இது சொன்னது சகோ.சபீரா?கிரவுனான்னு யாராவது கேட்பார்களோ?.//
உங்களிடம் டெலிபோனில் பேசிய பிறகு ஏற்பட்ட பாதிப்பில் இப்படி எழுதியிருப்பாப்லெ...
அன்பு தம்பி நிஜாம் அவர்களின் அன்புக்கட்டளைக்கு நன்றி.
தலைப்பு நமது அஜென்டாவில் உள்ளதுதான். இன்ஷா அல்லாஹ்.
சின்ன வயதில் மளிகைக் கடைகளில் நிறைய சாமான்கள் வாங்கினால் ஒரு கைப்பிடி பொட்டுக்கடலை தருவார்கள். சந்தோஷமாக இருக்கும். கேட்டால் ஒரு சிறு துண்டு வெல்லக்கட்டியும் கிடைக்கும். காய்கறிக்கடைகளில் கருவேப்பிலை பச்சமிளகாய் ( அன்றைய ஆனத்துக்குபோடும் அளவு ) இலவசம்தான். இறைச்சிக்கடைகளில் தலையும் காலும் வாங்கினால் வக்கும் கூலி இலவசம் ஒருகாலத்தில். ச்லவைக்கடைகளில் சட்டைக்கும், கைலிக்கும்தான் கூலி கணக்கு. கைக்குட்டை சலவை இலவசம். இப்படி வளர்ந்த சமூகம்.
அன்று இலவசம் " கொசுறு". இன்றைய இலவசமோ அரசியல்வாதிகளால் கண்ணிரண்டை விற்று சித்திரம் வாங்கும் நிலை. நீ அரிசி கொண்டுவா நான் உமி கொண்டு வருகிறேன் இரண்டையும் கலந்து ஊதி ஊதி இரண்டு பேரும் அரிசி சாப்பிடலாம் என்ற நிலை.
தம்பி நூர் முகமது தந்த தகவல் புதிது. இப்படி கைவசம் உள்ளவைகளை இறக்கிவிடலாமே.
“கவிநேசர்” சகோ.சபீர் அவர்களுக்கு,
கருத்திட்ட தங்களுக்கு என் வாழ்த்துகள் !
// தன் வசம் உள்ளவற்றை பிறர்வசப்படுத்த இலவசம் என்றொன்றைக் கொடுத்துப் பரவசப் படுத்துதல் ஒரு டெக்னிக்.//
இப்படி ஒரு “டெக்னிக்”கை வியாபாரத்தில் அரசியலில், கல்வியில், மருத்துவத்தில், பத்திரிக்கைதுறையில் பயன்படுத்துவோர் மக்களை ஏமாற்றும் தந்திரவாதி என்றே சொல்லலாம்.
“கவிநேசர்” சகோ.சபீர் அவர்களின் கருத்தை வழிமொழிந்த சகோ. “கிரவுன்” தஸ்தகீர் அவர்களுக்கும் என் வாழ்த்துகள்.
சகோ. இர்பான் அவர்களுக்கு,
கருத்திட்ட தங்களுக்கு என் வாழ்த்துகள் !
// நகை கடையில் பார்த்தீங்கன்னா அந்த GIFT BAG வாங்குவதிலேயே நம்ம மக்கள்ஸ் மும்முரமா இருப்பாங்க,ஆயிரமாயிரமா கொட்டி நகை வாங்குறவங்களுக்கு இருபது ரூபாய் பொருள் பெருசா போகுது //
நகைகடையில் நுழைந்தவுடன் நாம் நகை வாங்குகிறோமோ....இல்லையோ.....! முதலில் அவர்கள் நம்மிடம் வேண்டுவது.....”மாதச்சீட்டு” போடுங்கள் என்றே.
இவற்றில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
சகோ. அதிரை சித்திக் அவர்களுக்கு,
கருத்திட்ட தங்களுக்கு என் வாழ்த்துகள் !
தங்களின் கருத்தில் “விளம்பரம்” என்ற யுக்தியை பயன்படுத்தி எவ்வாறு ஒரு பொருளை மக்களிடம் கொண்டுச் செல்கிறார்கள்........என்பதை பதிந்துள்ளிர்கள்.
ஆம்...மிகச்சரியே........இவற்றில் பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
சகோ. ஜாகிர் அவர்களுக்கு,
கருத்திட்ட தங்களுக்கு என் வாழ்த்துகள் !
// எப்போதாவது கல்வி / மருத்துவம் இலவசமாக வேண்டும் என்று பொதுமறியல் செய்திருக்கிறதா ?.//
கல்வியும், மருத்துவமும் சமுதாயத்தின் உயிர்நாடி ! இந்த இரண்டு துறைகளிலும் லஞ்சமும், தவறுகளும் அறவே ஒழிக்கப்படும்போதுதான் மக்களின் நல்வாழ்வுக்கு உத்தரவாதம் அளிப்பதாக இருக்கும்.
மேலும் இவற்றை தாங்கள் கருத்தில் கூறியதுபோல் அரசு இலவசமாக வழங்க முன்வர வேண்டும்.
//தம்பி நூர் முகமது தந்த தகவல் புதிது. இப்படி கைவசம் உள்ளவைகளை இறக்கிவிடலாமே//
இபுராஹிம் அன்சாரி காக்கா,
உங்கள் முன் நான் இறங்கினால் கடலில் கரைத்த பெருங்காயம்தான்.
இலவசம் என்றால் - முன்னிருப்பதில்லை என்ற குற்றச்சாட்டு என்மீது இருக்கிறதே என்ன செய்யலாம் !?
இந்த பதிவை இலவச விழிப்புணர்வு என்று கவனிக்காமல் இருக்க முடியவில்லை !
பி.கு.: பிளாக்கர் என்ற இலவச தனிக்குடில்கள் மனைபோட்டு தந்ததினால் அங்கேயும் நம்மவர்கள் கோலோச்சுவதை மறுக்கத்தான் முடியுமா ?
இலவசத்துக்கு மயங்கும் மக்கள் இந்தியாவில்மட்டுமல்ல உலகம்முழுதும் இருக்காங்க, அமீரகத்துலேயும் ஏதாவது புது ஷாப்பிங்க் மால் அல்லது ஷோரூம் திறந்தால் இலவசம் மற்றும் கூடுதல் தள்ளுபடிக்காக காவல்துறை வந்து கட்டுப்படுத்தும் அளவுக்கு கூட்டம் அலைமோதும்
ஊரில் ஏதாவது ஒரு மார்க்க நிகழ்ச்சி, திருமணம் நிகழ்ச்சிக்கு பிறகு கொடுக்கப்படும் நார்ஸா இலவசமில்லையா?
To Bro Thajudeen
நார்சாவை நம்பி வருபவர்கள் எப்படியும் உங்கள் மீது "காண்டு" ஆவது உறுதி. [ ஊரில் இருந்துகொண்டே இப்படி எழுத தைரியம் வேண்டும்...எதற்க்கும் உங்கள் வீட்டு சுவரை பார்க்கவும் உங்களை திட்டி பசங்க எழுதியிருப்பாங்க
சகோ. அபூ இப்ராகிம் அவர்களுக்கு,
கருத்திட்ட தங்களுக்கு என் வாழ்த்துகள் !
// பி.கு.: பிளாக்கர் என்ற இலவச தனிக்குடில்கள் மனைபோட்டு தந்ததினால் அங்கேயும் நம்மவர்கள் கோலோச்சுவதை மறுக்கத்தான் முடியுமா ? //
“இலவசம்” என்பதின் பொருள் உங்களிடம் ஒன்றை வழங்கிவிட்டு மற்றொன்றை அதாவது அவர்கள் எதிர்பார்க்கும் ஒன்றை உங்களிடமிருந்து மறைமுகமாகப் பெறுவதே.
"பிளாக்கர்" ரிடம் எதற்கும் எச்சரிக்கையாய் இருப்போம் : )
நண்பர். அப்துல் மாலிக் அவர்களுக்கு,
கருத்திட்ட தங்களுக்கு என் வாழ்த்துகள் !
//இலவசத்துக்கு மயங்கும் மக்கள் இந்தியாவில்மட்டுமல்ல உலகம்முழுதும் இருக்காங்க, அமீரகத்துலேயும் ஏதாவது புது ஷாப்பிங்க் மால் அல்லது ஷோரூம் திறந்தால் இலவசம் மற்றும் கூடுதல் தள்ளுபடிக்காக காவல்துறை வந்து கட்டுப்படுத்தும் அளவுக்கு கூட்டம் அலைமோதும் //
சிட்டி சென்டரில் சில பொருட்களில் கூடுதலாக மற்றொன்றையும் இணைத்து "SPECIAL OFFER " என்று குறிப்பிட்டு தனியா ஒதுக்கிருப்பார்களே ? இப்பவும் உண்டா அங்கே ?
இது போன்ற பொருட்களில் அதன் மீது குறிப்பிட்டிருக்கும் "manufacture date " & "valid date" போன்றவற்றை கவனிக்கப்பட வேண்டியவை.
நண்பர். தாஜுதீன் அவர்களுக்கு,
கருத்திட்ட தங்களுக்கு என் வாழ்த்துகள் !
// ஊரில் ஏதாவது ஒரு மார்க்க நிகழ்ச்சி, திருமணம் நிகழ்ச்சிக்கு பிறகு கொடுக்கப்படும் நார்ஸா இலவசமில்லையா ? //
"நார்ஷா" இதை அரபிக்கில் "தப்ரூக்" என்றழைப்பார்கள் ? !
சமூகத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு "இது" ஒரு வழக்கமான ஒன்றாகிவிட்டது. இவற்றை வழங்கவில்லை என்றால் எதிர்பார்த்தளவு கூட்டம் வராது ! தெரியுமா ?!
//"நார்ஷா" இதை அரபிக்கில் "தப்ரூக்" என்றழைப்பார்கள் ? ! //
இதுலேயும் ரெண்டு வகை உண்டு
கையா? வாயா?
ஜாஹிர் காக்கா,
//நார்சாவை நம்பி வருபவர்கள் எப்படியும் உங்கள் மீது "காண்டு" ஆவது உறுதி. [ ஊரில் இருந்துகொண்டே இப்படி எழுத தைரியம் வேண்டும்...எதற்க்கும் உங்கள் வீட்டு சுவரை பார்க்கவும் உங்களை திட்டி பசங்க எழுதியிருப்பாங்க//
இனி இவன் கண்ல கூட நார்ஸாவை காட்டாதுங்கண்டு எல்லா மஹல்லாவிலும் தீர்மானம் போட வைச்சிடுவிங்க போல தெரியுது.
இசையை பற்றி கருத்திட்டதால், தினமும் இரவில் கோவில் திருவிழா இசைகருவிகளின் இரச்சலை சகிக்க முடியல... இதுல நார்ஸா பிரச்சினையா...
அன்பிற்கினிய சகோ நூர்முகம்மது அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அழைக்கும்!
>>>>காலப்போக்கில் OCS என்பதிலிருந்து, இறுதி எழுத்தாகிய S மறைந்து. இறுதியில் OC என மாறி, அதை இன்றும் இலவசத்திற்கு சிலர் ஓசி (OC) என்ற பழக்கத்தை பயன் படுத்துகின்றனர்.<<<
அருமையான விளக்கம். இதற்கு இன்னொரு விளக்கமும் நான் கேட்டிருக்கிறேன்.
OC - Out of Cost
கல்லூரிகளில் பேராசிரியர்கள் OP அடிப்பார்ப்பர்கள் OP - Out of Portion
நான் கனடா வந்ததும் மிக அதிகமாகக் கண்டது இந்த இலவசங்களைத்தான். அப்போது எழுதிய கவிதை. Published in my first book.
***இலவசம் இலவசம்***
ஒன்று வாங்கினால்
ஒன்று இலவசம்
ஒருநாள் மட்டும்
மூக்குப்பொடி இலவசம்
பலகீனங்கள் இங்கே
பரீட்சிக்கப்படுகின்றன.
தாலி வாங்கினால்
பெண்டாட்டி இலவசம் என்று
கடை திறக்காததுதான் மிச்சம்
இலவசமாய்
ஓர் அற்பத்தை வழங்கிவிட்டு
உங்களையே
வேரோடு இழுத்துக்கொண்டுவிடும்
வணிக சிகாமணிகளின் சாதுர்யத்தை
என்னவென்று சொல்ல
படி அரிசியைப்
பரிசாய்க் கொடுத்துவிட்டு
பாராளுமன்றத்துக்கு ஓட்டுகுவிக்கும்
திருட்டு அரசியல்வாதிக்கு
சற்றும் இளைத்ததோ
இந்த வணிக நுணுக்கம்
முன்னேறிய நாடுகளிலும்
முக்கால்வாசிப்பேர்
முழு பலகீனர்களே என்பது
முக்காடுபோடும் வெட்கம்
ஒன்றுக்கு மூன்று
இலவசம் என்று அறிவித்துவிட்டாலோ
செத்த பிணங்களும்
விற்றுத்தீரும் அவலம்
சீரழியும் வணிகமுறையால்
பொருள் சிக்கனங்கள்
புரட்டி எடுக்கப்படுகின்றன
தேவைகளோ
தீண்டப்படாமல் திண்டாட
தேவையற்றவையே
தேடி வருகின்றன தினந்தோறும்
கௌரவ மனிதனுக்கும்
கையேந்த கற்றுத்தரும்
நாகரிகம் வளரலாமா
நாளுக்கு நாள்
ஆடை குறைத்து
அலையும் இதயங்களை
அடித்து விழுங்கும்
சில்லறைத் திரைப்படங்களைவிட
இலவசம் என்னும்
காந்தக் கணைகளால்
ஒட்டுமொத்த மக்களின்
தேவைகளைப் பெருக்கி
தில்லானா ஆடவைத்து
பொருள் அழிவில்
பணம் குவிப்பது
உலக அழிவில்லையா
இதுதான் வணிக தர்மமா
அதன் பின் செல்வதுதான்
செவ்வாயில் தேடல் நடத்தும்
நம் அறிவின் முதிர்ச்சியா
அன்புடன் புகாரி
கௌரவ மனிதனுக்கும்
கையேந்த கற்றுத்தரும்
நாகரிகம் வளரலாமா.
-----------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.
இவைகள் " நச்'' வரிகள்.
Noor Mohamed சொன்னது…
தகவல்களுக்காக.
இலவசம் என்பதை சிலர் ஓசி (OC) எனக் கூறுவர். ஏன் தெரியுமா?
இந்தியாவை பிரிட்டிஷ் காரர்கள் ஆட்சி செய்யும்போது, பிரிட்டிஷ் காரர்கள் கம்பெனியில் பணிபுரிவோர் அவர்களுக்குள் கடிதத் தொடர்புகள் வைத்துக் கொள்ள சிறப்பு சலுகை இருந்தது. அவர்களின் கடிதத்தின் மேல் On Company Service அதாவது (OCS) என எழுதிவிட்டால் கட்டணமின்றி கடிதம் போய் சேர்ந்துவிடும்.
எனவே OCS என்ற கடிதம் கட்டணமில்லாத இலவச கடிதம். காலப்போக்கில் OCS என்பதிலிருந்து, இறுதி எழுத்தாகிய S மறைந்து. இறுதியில் OC என மாறி, அதை இன்றும் இலவசத்திற்கு சிலர் ஓசி (OC) என்ற பழக்கத்தை பயன் படுத்துகின்றனர்.
----------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். இது திரு.ரங்கராஜன் ஐயா! சொல்லித்தந்தது. காக்கா எழுதியதும் பழய நியாபங்கள் வந்துவிட்டது. நியாபகங்கள் கூட இப்ப ஓஸியால் வருகிறது.
//கௌரவ மனிதனுக்கும்
கையேந்த கற்றுத்தரும்
நாகரிகம் வளரலாமா.//
WONDERFUL
தம்பி தஸ்தகீர், வ அலைக்குமுஸ்ஸலாம்
//இது திரு.ரங்கராஜன் ஐயா! சொல்லித்தந்தது. காக்கா எழுதியதும் பழய நியாபங்கள் வந்துவிட்டது. நியாபகங்கள் கூட இப்ப ஓஸியால் வருகிறது. //
ஆம்! திரு.ரங்கராஜன் ஐயா அவர்கள் 1970 ல் எனக்கு சொல்லித்தந்தார்கள்.
// திரு.ரங்கராஜன் ஐயா அவர்கள் 1970 ல் எனக்கு சொல்லித்தந்தார்கள்.//
தகவலுக்காக,
ரங்கராஜன் சார் அவர்கள் கடலூர் அருகில் “ TIRUPADRIPULYUR” என்ற ஊரில் குடும்பத்துடன் மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள்.
வாழ்த்துகள் சகோ. அன்புடன் புஹாரி அவர்களுக்கு,
தங்களின் "***இலவசம் இலவசம்*** " என்ற விழிப்புணர்வு கவிதை இப்பதிவுக்கு மேலும் மெருகூட்டுகின்றது.
தொடர்ந்து எழுத தங்களுக்கு மீண்டும் என் வாழ்த்துகள்..............
>>>>கௌரவ மனிதனுக்கும்
கையேந்த கற்றுத்தரும்
நாகரிகம் வளரலாமா.
இவைகள் " நச்'' வரிகள்.<<<<<
Thanks Bro Crown. You have perfectly picked up the highlight lines.
Thanks to poet Bro Sabeer and Bro S M Nijam
//முன்னேறிய நாடுகளிலும்
முக்கால்வாசிப்பேர்
முழு பலகீனர்களே என்பது
முக்காடுபோடும் வெட்கம்//
அமெரிக்காவில் நான் கண்டதை கனடாவில் கவிஞர் புகாரி கண்டு வேதனைப் பட்டுள்ளார்கள்.
விழிப்புணர்வு வித்தகர் சேக்கனா அவர்களே!
ஒரு வாக்குப் போட்டால் ஒரு வாக்கு இலவயம் என்ற வருமா?
விலைகொடுத்து வாங்கும் வாக்குக்கு “விலையில்லா” என்று சொல்ல முடியாதல்லவா/அதனாற்றான் தயக்கம் எனலாம்.
Post a Comment