Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மூன்றாம் கண் - பேசும்படம் தொடர்கிறது...! 42

அதிரைநிருபர் பதிப்பகம் | June 28, 2012 | , , , , ,


ஒரு நாட்டின் தரத்தை நிர்ணயிப்பதில் முக்கியமான பங்கு வகிப்பதில் ஒன்று அந்த நாட்டின் சாலைகள். இன்றைய காலகட்டங்களில் நம்நாட்டின் சாலைகள் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது. ஆனால், ஓட்டுனர்களும் பாதசாரிகளும் இன்னும் நம் நாட்டின் சாலைகளின் தரத்திற்கு தங்களை உயர்த்திக் கொள்ளவில்லை. அதுபோல் ஹாரன் அடிப்பதிலும் ரோட்டின் நடுவில் நடந்து வாகனகளுக்கு இடைஞ்சல் கொடுப்பதிலும் நம் மக்களை மிஞ்ச உலகில் ஆட்களே இல்லை.

ட்ராக்டரில் பாட்டு கேட்டுக்கொண்டு வண்டி ஓட்டும் அவலமும், பஸ்சுக்கு காத்திருக்கும் பயணிகள் ரோட்டின் விளிம்பில் உட்கார்ந்திருக்கும் அவலமும், விபத்தில் சிக்கியவரின் உயிரை காப்பற்றாமல் அவர் அணிந்திருக்கும் பொருட்களை திருடும் அவலம்.

பொறுப்புடன் இருக்க வேண்டியவர்கள் அனைவருமே ! அதிலும் பொதுமக்களுக்காக வாகனம் ஓட்டும் ஓட்டுநர்களின் மெத்தனம், ஸ்தரமின்மை, வாகனம் ஓட்டும்போது செல்ஃபோனில் பேசிக் கொண்டே ஓட்டுவது. எதிர்பாராமல் சென்னை அண்ணா மேம்பாலத்தில் கவிழ்ந்த பேருந்து விபத்து ஒரு சாட்சி.

சமீபத்தில் தமிழ்நாடு போக்குவரத்து காவல் துறை தலைவரின் ஆலோசனை "வழிவிட வலப்பக்கம் இருக்கும் இண்டிகேட்டரை போடலாம்" என்பதே!. இவைகளுக்கெல்லாம் எவ்வித சலனமும் இல்லாமல் தான் உண்டு தன் வழியுண்டு என்று இருக்கும் சிட்டியிலிருந்து ஒதுங்கியிருக்கும் ரோடுகளின் அணிவகுப்பை இங்கே பார்ப்போம்:-


ஆலம் விழுதுகள் கைக்கு எட்டினால் இந்த விழுதுகளை கலவானி பயல்கள் கொண்டுபோய் விடுவார்கள் என்று அந்த மரத்திற்கும் விளங்குமோ?!!


அதிரை நிருபருக்காக போட்டோ எடுக்க சென்றால் இந்த ஆட்டுக்குட்டிகள் எங்கிருந்துதான் வருகின்றதோ தெரியவில்லை 


அதிரை பட்டுக்கோட்டை ரோட்டின் ஒரு அதிகாலை போட்டோ 


கோடைக்கு அம்மாவின் ஆட்சியில் இலவச குளிரூட்டிய பரந்தவெளி... அங்கே சட்டசபை மேசைகள் அதிருது...

//பனி படர்ந்ததால் யாரும் பணிக்கு போகவில்லையோ பினி வந்துவிடும் என்று //


அதிக அழுத்தம் கொண்ட மின்சாரம்(????) அதிரைக்கு அடிக்கடி வருவதனால் (!!!!) அதன் வெயிட் (!!) தாங்க முடியாமல் அந்த கம்பியிலேயே தூக்கு மாட்டிக் கொண்டு தொங்கும் மின் கம்பம்.

//கரண்டு இல்லை என்று சொல்லி இந்த EB போஸ்ட் கரண்டு கம்பியில் தூக்கு போட்டுக்கொண்டு செத்துவிட்டதோ //

//ஊருக்கு உழைத்த சகோதரன் ஒருவரின் உயிரை குடித்ததில் வெட்கித் தலைகுனிவா ? இல்லை மின்சாரத் துறையின் மெத்தனம் கண்ட வெதும்பலின் தலைக்குனிவா ? //


என்னதான் சாலைகள் மேம்பட்டு இருந்தாலும் இந்த கிராமங்களின் ரோடுகள் என்றும் மனதை விட்டு அகலாது 


இந்த பிரிவு ரோடு நம்மை சுருக்க கொண்டுபோய் அதிரையில் விட்டுருமாமே (பைக்கை நாய் தொறத்தினால் சீக்கிரம் ஊர் போயிறலாம் என்று யாரோ பைக் ஓட்டி புலம்புவது காதில் விழுகின்றது )


இது வரைகலையில் வலைந்தத மின் கமபம் அல்ல, வராத மின்சாரத்திற்கு முட்டு எதற்கு என்று தலைமுறித்து குனிந்திருக்கும் மின்கம்பம்.

//பார்த்து போங்கோ EB போஸ்ட் பேய் புடுச்சிரபோவுது //


இந்த இடம் அதிரையின் பெர்முடா என்று சொல்லலாம் அந்த அளவுக்கு இந்த இடத்தில் விபத்துகளும் விபரீதங்களும் நடக்கின்றன 


இது எந்த இடம் என்று துல்லியமா சொல்பவருக்கு நம்ம கவிகாக்காவும் அசத்தல் காக்காவும் பரிசு கொடுப்பார்கள் 


இந்த ஏறி மழை பெய்தால் தண்ணீர் ஓடும் மறுநாள் வண்டி ஓடும் (அதெல்லாம் இருக்கட்டும் விளிம்பில் நிற்பவர் நீரில் குதிக்க நிற்கின்றாரா அல்லது koodai குளிருக்கு வெயில் நிற்கின்றாரா சரியாக பதில் சொல்பவருக்கு வெள்ளை தொப்பி, கம்ஸு சட்டை, பச்சை பெல்ட் பரிசு நிச்சயம் உண்டு).

சாலை விதிகள் மதிப்போம், அதன்படி நடப்போம், தலைமுறைகளை பாதுகாப்போம். சாலை விபத்துக்கள் இல்லாத சாலை அமைத்து கொண்டாடுவோம்.

மூன்றாம் கண்ணுடன்...
-Sஹமீத்

42 Responses So Far:

அதிரை சித்திக் said...

ஊருக்கு சென்று வந்த மகிழ்ச்சி ...

ஊருக்குள்ளே நுழையலையா...

நன்றி...வாழ்த்துக்கள் .

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அழகான பசுமைக் காட்சிகளும்,
மின் வாரிய பொடுபோக்கின் தூக்குமரக் காட்சிகளும்!

//அதிரை நிருபருக்காக போட்டோ எடுக்க சென்றால் இந்த ஆட்டுக்குட்டிகள் எங்கிருந்துதான் வருகின்றதோ//
அதிரைக்கும் ஆட்டுகுட்டிக்கும் உள்ள சம்பந்தம் அல்லவா!

உங்க புதிருக்கு பதில்:-
------------------------------
1. //அது எந்த இடம் என்று துல்லியமா சொல்பவருக்கு நம்ம கவிகாக்காவும் அசத்தல் காக்காவும் பரிசு கொடுப்பார்கள் //
பைக்கை நாய் தொறத்தினால் சீக்கிரம் ஊர் போயிறலாம்-நு சொன்ன அந்த மிலாரிக்காடு வழியா அதிரை செல்கிற சாலை.இன்னும் சொல்லப்போனால் எதிர்காலத்தில் கவியும் அசத்தலும் சேர்ந்து மனைபோட உத்தேசித்துள்ள இடமாகவும் இருக்கலாம்!

2. // அந்தாளு நீரில் குதிக்க நிற்கின்றாரா அல்லது குளிருக்கு வெயில் தேடி நிற்கின்றாரா //
குதிக்கிற ஆளாவுந்தெரியலெ, பனி படர்ந்த நேரத்தில் வெயில் காய நிற்பவராகவும் தெரியலெ, நீரின் அளவை பார்ப்பவராகத்தான் தெரியுது.

அன்புடன் புகாரி said...

அன்புச் சகோ சாகுல்,

ரொம்ப நாள் கழிச்சு ஊர்ச் சாலைகளில் என்னை இட்டுக்கொண்டு சென்றதுக்கு நன்றி. அப்படியே ஊருக்குள்ளாரயும் போங்க..... ஏக்கம் எகிறிக்கிட்டுக் கிடக்கு.

ஈராண்டுகளுக்குமுன் கேரளா சென்றிருந்தேன். அப்படியே கனடிய சாலைகளைப்போல அத்தனைக் கோடுகளும் போர்டுகளும் விதிமுறைகளும் மிகச் சரியாக இருக்கின்றன. அதைவிட முக்கியமான விசயம் மலயாளிகள் விதிகளைப் பின்பற்றுகிறார்கள்.

அப்படியே பட்டுக்கோட்டைக்குத் திரும்பி வந்தேன்..... மத்ததெல்லாம்தான் உங்களுக்கே தெரியுமே!

அன்புடன் புகாரி

KALAM SHAICK ABDUL KADER said...

கண்கட்கு விருந்தாக்கிப் படைத்துள்ள இக்காமிரா கவிதைகள், விடுப்பில் தாயகம் வந்து நேரில் தினமும் அனுபவிக்கும் எண்ணங்களை மறுபதிப்பு செய்து காட்டி விட்டதாகவே எண்ணுகிறேன். திருச்சியிலிருந்து அதிரைக்கு வரும் பொழுது, பட்டுக்கோட்டை - அதிரை சாலையில் வாகனம் செல்லும் வேளையில் சுற்றியுள்ள மரங்களின் இளந்தென்றலை அனுபவித்துக் கொண்டு வரும்பொழுது அபுதபியின் “ஏர்கண்டிசன்” காற்றெல்லாம் இத்தென்றலிடம் மடிப்பிச்சைக் கேட்க வேண்டும் என்று என் மனசாட்சியிடம் பேசினேன்.

Ebrahim Ansari said...

மருமகன் சாகுல் ஹமீது!

உனது மூன்றாம் கண் அடிக்கடித்திறக்கவேண்டும். பாராட்டுக்கள்.

அந்த ஒடிந்து வளைந்து தரையில் விழும் நிலையில் உள்ள மின் கம்பம் நமது நாட்டு நிர்வாகத்தின் அடையாளம்.

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும்.
1).ஆளவரமற்ற பாதையில் ஆல மரமே உன் விழுது விழுதா?
இல்லை மேலே எழுதா?
என சந்தேகம் கொள்ளும் அளவிற்கு இருக்கிறாயே
நீ யாருக்கு காத்திருக்கே?
உன் விழுதுகள் சொல்லுமே உன் வரலாறு,
ஆனாலும் புவியில் மாறிவரும் பழக்கத்தால்
நீயும் உன் இனமும் வேறோடு மறைந்துவிடும் காலம் வெகுதூரத்தில் இல்லை.
எல்லாம் மாறிவரும் இந்த யுகத்தில்
உன்னை சகோ. சாகுலின் நிழழ் படத்தில்லாவது பதிந்து வைத்தாயே!
உன் சமயோகிதமா? இல்லை நீ சாவதற்குள் சகோ. சாகுல் உன்னை பதிந்தது உன் அதிஸ்டமா?

crown said...

2). ஆடு போகும் திசையை நோக்கி ஒத்தையாய் என் மனம் பின் தொடர்ந்து போய்கிறது.
இந்த காட்சி தந்த மகிழ்சியில் சிறு நெகிழ்சி!
என் மேனியில் தசைகள் சில்லென மாறி மெல்ல சிலிர்க்கிறது.
"தான்" ஆடாவிட்டாலும் இந்த உள்ளம் தன் மேனியின் சதையை ஆடவிட்டது.
மீண்டும் என் நினைவுகள் அமைதியாய் இந்த ஒத்த அடி பாதையில் மொவுனமாய் சின்ன விம்மலுடன் நடப்பதை என்னை யன்றி யாரறிவார்?

crown said...

ரம்மியமான் அதிகாலை!
அழகாய் மெல்ல எட்டிப்பார்க்கும்
நம்மண்ணின் சாலை!
வயிற்றில் பாலை வார்த்ததுபோல் ஓர் உணர்வு!
இதுவே என் ஏக்கத்துக்கு வந்த சிறு உணவு!
மீண்டு வரும் கடந்த கால நினைவும்
இன்னும் கணவாய் இருப்பதால்
அந்த சாலை போல் என் மனம் ஒன்று சேராமல்
பிரிந்தே கிடப்பது என் துரதிஸ்டம் அல்லவா?
என்று வரும் அந்த சாலையில் என் காலை(கால்களை)
மறுபடியும் பதிக்கும் தறுணம்!!! .அல்லாஹ்தான் அதை தரனும்!!!
.ஆமீன்.

crown said...

4)கொஞ்சம் புல்!
அதை கொஞ்சும் சில்லெண பனி!
மஞ்சள் வெயில்
ரயில் தண்டவாளம் போல் இணையான
இனையாத பாதை!
மண்ணின் மனம்
தேசம் தாண்டியும் மணக்க செய்த
காட்சி படபிடிப்பு!
தந்த உடன் பிறவா சகோ.சாகுலின்
திறமை தனிச்சிறப்பு!
-அல்லாஹுக்கே எல்லாப்புகழும்

crown said...

5).அரசுவின் கையாளத்தனத்தால்
உயிருக்குள் பாயும் மின்சாரம் தாங்கிசெல்லும்
இந்த கடத்தியும் , மின்சாரம் இல்லாததாலும்
நிர்வாக சீர்திருத்தம் இல்லாததாலும்
நம் மண்ணில் ஊன்றி இருப்பதால்
மானம் மனதோடு ஊன்றி போய்விட்டதால்
அரசுவின் போலி ஜம்பம் ஊருக்கு தெரியும் படி
தன் கம்பத்திலேயே தூக்குமாட்டி
நிர்வாகத்திற்கு அதிர்ச்சி (ஷாக்) வைத்தியம்
கொடுத்திருக்கும் காட்சிதான் இது!

crown said...

9).எல்லை கல்லின் எண்ணிக்கை
எல்லை இல்லா மகிழ்வுதர
வெள்ளை ,கருப்பு காலத்திற்கு '
எம்மை அழைத்து செல்லும் காட்சி
உள்ளம் கொள்ளைபோகும்!
என்று மறுபடியும்
குட்டையின் படிதுறையில்
வந்து அமருவேன் என
ஏங்கும் எனதுள்ளத்தின் ஆவல்
இந்த குட்டையைவிட நீளம் மிகுந்தது!

crown said...

அல்ஹம்துலில்லாஹ் சும்மா வார்தை ஜாலத்திற்கு சொல்லவில்லை சொல்லிய எல்லாம் உண்மையிலும்,உண்மை. எம்மை ஊருக்கே அள்ளி சென்றது . இப்படி கேமிராவில் வித்தை காண்பிக்கும் உங்கள் திறமை போற்றபடக்கூடியது. எல்லாம் ஒரு சிரத்தையாய் தரமாய் எடுக்கபட்ட பொக்கிசம். வாழ்த்துக்கள்.

Unknown said...

படங்கள் எல்லாம் அருமை... ஒவ்வொரு படத்திற்கும் போட்டி வைத்திருக்கலாம்..

//இது எந்த இடம் என்று துல்லியமா சொல்பவருக்கு நம்ம கவிகாக்காவும் அசத்தல் காக்காவும் பரிசு கொடுப்பார்கள் //

கடைசியிலிருந்து இரண்டாவதாக உள்ள படம் இது பட்டுக்கோட்டையிலிருந்து அதிரை வரும் வழியில்... புதுக்கோட்டை உள்ளூருக்கு அடுத்து..காளிக்கோயிலுக்கும் முன் வலதுபுறம் பிரியும் நடுவிக்காடு சாலை

சரியாக சொன்னேன் என நினைக்கிறேன்.

பரிசுப் பொருளை கூரியரில் அனுப்பி வைக்கவும்

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

"என்று படங்கள் பேச ஆரம்பித்து விட்டனவோ
அன்றே மனிதர்கள் உறங்க ஆரம்பித்து விட்டனர்"

ஆயிரம் பேரை பலி கொண்டாலும் இது போன்ற
தொங்கிக்கொண்டிருக்கும் ஆபத்தான‌ மின்கம்பத்தை
உடனே சரி செய்து பழுது பார்க்க இயலாதவர்கள் அந்த‌
கண்ணற்ற‌ குருடர்களுக்கு குடி தண்ணீர் குழாய் திறந்து
நீர் புகட்டி தாகம் தீர்க்க உதவி செய்த‌ அந்த குரங்கிடம்
பாடம் படிக்கட்டும்.

வாகனத்தின் பின் இருக்கையில் நம்முடன் அமர்ந்து
பயணிக்கும் நம்மூர் இளங்காற்றே! எங்கோ இருந்தாலும்
உன்னை நினைக்கையில் உள்ளம் துள்ளும் உடலும் குளிரும்.

உடல் புழுக்கமும், உள்ளப்புழுக்கமும் கமுக்கமாய் வெளியேற‌
உன்னிடம் வைத்திருக்கும் வசியக்கலையை எனக்கும்
கற்றுத்தருவாயா???

இன்ஷா அல்லாஹ் உங்களைப்போல் விரைவில் நம் சுற்று
வ‌ட்டார‌ புகைப்ப‌ட‌ங்க‌ள் எடுத்து க‌ண்க‌ளுக்கு ந‌ல்ல‌ குளிர்ச்சி
த‌ரும் விருந்து ப‌டைக்க‌ ஆசை.

இப்படி ரோட்டோட நிண்டுட்டியளே!!! ஊருக்குள் நுழைய
அளவு கம்பு எதுவும் வச்சிக்கிட்டு சேக்காதி நிக்கிறாப்புள்ளயா???

இப்னு அப்துல் ரஜாக் said...

சகோ சாகுல் அவர்களின்
மூன்றாம் கண்
ஒரு காவியம்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அண்மையில் மத்திய அமைச்சர் திரு ஜெய்ராம் ரமேஷ் ஒரு விழாவில் சொன்ன கருத்தை என்றோ நாமும் அதிரை நிருபரில் கட்டுரை மூலமும், பின்னூட்ட மூலம் தெரிவித்திருக்கிறோம்.

"நம் நாட்டில் பெரும்பாலான பாமர மக்களின் வீடுகளில்
கழிப்பறை இல்லை. ஆனால் விண்ணில் நாம் கண்டம் விட்டு
கண்டம் தாண்டும் ஏவுகணைகளை ஏவி வெற்றி பெருவதால்
என்ன பயன்?"

நம் நாட்டில் அரசு அதிகாரிகளுக்கும், அதன் பணியாளர்களுக்கும் மனிதாபிமானமும், மக்கள் நலனும், பொறுப்புகளும் வெறுப்பான ஒன்றாகிப்போய் விட்டது.

அப்துல்மாலிக் said...

ரோடுகள் அனைத்தும் மனதை அள்ளிச்செல்கின்றன, பயணிப்பதைவிட இப்படி படத்தில் பார்ப்பதில் கொள்ளைபிரியம், நன்றி பகிர்வுக்கு த் காக்கா

Yasir said...

உங்களின் முன்றாம் கண் எங்கெளையெல்லாம் ”ஹோம் சிக் ”பிடிக்கவைத்து ஆட்டிப்படைக்கின்றது......அதெப்படி வெல்லனமே முழிச்சு போய் போட்டோ எடுக்க ஆர்வம் வருது.....கேமராவை உடம்போடு சேர்த்து தைத்து வச்சிருக்கீங்களோ காக்கா.....”பெர்முடா” நல்ல ஒப்பீடு....சூப்பர் காக்கா

Noor Mohamed said...

வெளிநாடு வாழ் நம் அதிரை நகர மக்கள், நம் அதிரை பற்றி படம் பார்த்து கதை சொல்லாது, கட்டுரை எழுதி, கருத்துக்களை பரிமாறும் சகோ. சாகுல் அவர்களுக்கு நன்றி.

Shameed said...

சகோ அதிரை சித்திக் அவர்களே மான் குட்டியாய் இல்லை இல்லை குட்டி மானாய் துள்ளி வந்து முதல் பின்னுட்டம் இட்டு தொடங்கி வைத்ததற்கு நன்றி

Shameed said...

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

//அதிரைக்கும் ஆட்டுகுட்டிக்கும் உள்ள சம்பந்தம் அல்லவா!//

ஹா ஹா உண்மைதான்


//மிலாரிக்காடு வழியா அதிரை செல்கிற சாலை.//

சரியான பதில் ,பெல்ட்(பச்சை ) போடும் பழக்கம் உண்டா! பரிசு அதுவாகத்தான் இருக்கும்


//குதிக்கிற ஆளாவுந்தெரியலெ, பனி படர்ந்த நேரத்தில் வெயில் காய நிற்பவராகவும் தெரியலெ, நீரின் அளவை பார்ப்பவராகத்தான் தெரியுது//

ஒரு வேலை விரா மீன் பிடிப்பவரா இருப்பாரோ !

Asan Buhari சொன்னது…

//ஈராண்டுகளுக்குமுன் கேரளா சென்றிருந்தேன். அப்படியே கனடிய சாலைகளைப்போல அத்தனைக் கோடுகளும் போர்டுகளும் விதிமுறைகளும் மிகச் சரியாக இருக்கின்றன. அதைவிட முக்கியமான விசயம் மலயாளிகள் விதிகளைப் பின்பற்றுகிறார்கள்.
//
சரியா சொன்னீங்க ,நான் சமிபத்தில் கொச்சின் சென்றிந்தேன் அது கொச்சினா அல்லது துபாயா என்ற சந்தோகம் வந்து விட்டது அந்த அளவுக்கு முன்னேற்றம் அடைந்துள்ளது

Shameed said...

Ebrahim Ansari சொன்னது…

//உனது மூன்றாம் கண் அடிக்கடித்திறக்கவேண்டும். //

இனி அடிக்கடி மூன்றாம் கண் திறக்கும் காரணம் கூடிய விரைவில் ஊர் செல்ல இருக்கின்றேன்
முடிந்தளவு ஊரின் முக்கிய இடங்களை மெகா பிக்ஸ்சால்களில் அள்ளி வருகின்றேன்.மாமா


crown சொன்னது…

//இந்த காட்சி தந்த மகிழ்சியில் சிறு நெகிழ்சி!
என் மேனியில் தசைகள் சில்லென மாறி மெல்ல சிலிர்க்கிறது.
"தான்" ஆடாவிட்டாலும் இந்த உள்ளம் தன் மேனியின் சதையை ஆடவிட்டது.
மீண்டும் என் நினைவுகள் அமைதியாய் இந்த ஒத்த அடி பாதையில் மொவுனமாய் சின்ன விம்மலுடன் நடப்பதை என்னை யன்றி யாரறிவார்? //

வார்த்தை வித்தகருக்கு பதில் சொல்ல வார்த்தைகள் இல்லை!

Shameed said...

JAFAR சொன்னது…

//கடைசியிலிருந்து இரண்டாவதாக உள்ள படம் இது பட்டுக்கோட்டையிலிருந்து அதிரை வரும் வழியில்... புதுக்கோட்டை உள்ளூருக்கு அடுத்து..காளிக்கோயிலுக்கும் முன் வலதுபுறம் பிரியும் நடுவிக்காடு சாலை//

சரியான பதில் பரிசு கூரியரிலா அல்லது காரியாரிலா என்பது தெரியவில்லை .பரிசு கொடுப்பவர்களை இன்னும் காணோம் பரிசு வாங்க போய் இருப்பார்களோ !


மு.செ.மு. நெய்னா முஹம்மது சொன்னது…

//இன்ஷா அல்லாஹ் உங்களைப்போல் விரைவில் நம் சுற்று
வ‌ட்டார‌ புகைப்ப‌ட‌ங்க‌ள் எடுத்து க‌ண்க‌ளுக்கு ந‌ல்ல‌ குளிர்ச்சி
த‌ரும் விருந்து ப‌டைக்க‌ ஆசை.//

புகைப்படங்களை ஆவலுடன் எதிர் பார்க்கின்றேன்

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

அஸ்ஸலாமு அழைக்கும்

படங்கள் அனைத்தும் அருமை, ஊரிலுள்ள சாலையை படமிட்டு காட்டியமைக்கு ஹமீது காக்கா அவர்களுக்கு நன்றி

படம் 1:

மறுபடியும் (?)ஆல மரத்தின் நிழல்கள் இதை முன்பே பதிந்துள்ளீர்கள் என்றரொரு நியாபகம்

படம் 2:

கவனமாக செல்லக்கூடிய பாதை/சாலை ஏனென்றால் இருவழியிலும் ஆடு மற்றும் மாடுகள் செல்கின்றனர், பைக்கில் செல்லும் ஹீரோக்கள் படு வேகமாக செல்லும் பாதை என்றால் இதுதான்

படம் 3:

அழகியே மூவழிச்சாலை அதில் வெட்கத்தோடு எட்டிப்பார்க்கும் அதிகாலை சூரியன்

படம் 4:

பசுமையான புல் அதன்மேல் பனித்தூளி மணிகளாய்

இருவழி ஒத்தையடி சாலை
எந்தொரு ஆபத்தும் நிகழாத சாலை
முன் அறிவிப்பு ஏதுமில்லாத சாலை
வல/இட பக்கம் செல்லமுடியாத சாலை

தினமும் சட்டசபைகள் நடந்தவண்ணமே உள்ளது மனிதர்களினாலல்லா காகங்களினால்

ஆறறிவு மனிதர்கள் (அரசியல் பிரமுகர்கள்) சட்டசபைக்கு வராமளிருக்கலாம் அனால் ஐந்தறிவு இக்காகங்கள் வந்து கூடும் என்பது சிறப்பம்சம்

படம் 5:

அதிரைபட்டினம் பேரூராட்சி தாங்களை அன்புடன் வரவேற்கிறது என்று ஊர் நுழைவாயில் சல்யுட் அடிப்பதற்காக இதை இப்படியே வைத்திருக்கலாம் எப்படியெல்லாம் யோசிகிராங்கப்பா....அவ்வ்வ்வ்

மாற்று மின் கம்பத்தை பொருத்திய இவர்களுக்கு இதை அப்புறப்படுத்த நேரமில்லையோ?

என்ன ஒரு கடமை உணர்ச்சி, டூட்டிலே பன்சுவாளிட்டியா இருக்காங்கப்பு ...

படம் 6:

ஊட்டி சாலை போன்றறொரு தோற்றம் இருபக்கமும் பள்ளத்தாக்கு,

இரு பஸ்கள் கிராஸ் பண்றப்ப பைக் ஹீரோக்கள் கவனம் தேவை

படம் 10:

\\இது எந்த இடம் என்று துல்லியமா சொல்பவருக்கு நம்ம கவிகாக்காவும் அசத்தல் காக்காவும் பரிசு கொடுப்பார்கள் //

இவ்வழி அதிரை-ப.கோட்டை மெயின் ரோட்டிலிருந்து நடுவிக்காடு உள்ளே புகுந்ததும் "L Turn " க்கு முன்பு, சரியாக சொன்னேனா? பரிசு எனக்கே எனக்கா?

படம் 9:

பெர்முடா வழியை பற்றின சிறு தகவல் போகின்ற வாகனம் காராக இருந்தாலும் சரி பை ஓட்டிகளாக இருந்தாலும் சரி அவர்கள் வழியில் போகாமல் இந்த பெர்முடா சாலை வழியாக போகும்பொழுது வரக்கூடிய மாற்று வழியாக வாகனம் வருகிறதா என்று பார்த்துவிட்டு மாற்று பாதையில் செல்கின்றனர் இதனால்தான் விபத்துகள் நடக்கிறது ஊரிலிருந்து கவனமாக வரும் இவர்கள் ஏன் இப்பகுதிக்கு வந்த சாலை விதிகளை மீறுகின்றனர் ???

கடைசி படம் :

பெரியவர் அதிகாலையில் உடற்பயிற்சி யோகா செய்கிறார்போல, பார்த்து பெரியவரே பின்னாலே லாரி வருது .....லாரிக்கு ஆபத்து/சேதம் வராம பாத்துகிட்ட சரி....

சாலை விதிகளை காலில் போட்டு மிதிப்போம்
என்றல்லாமல் மதிப்போம் என்றுரைப்போம்
மேலும் கவனமாய் இருப்போம்
விபத்துகளில் சிக்காமல் உயிரை காப்போம்

அல்லாஹ் பாதுகாப்பானாக

Shameed said...

அப்துல்மாலிக் சொன்னது…

//ரோடுகள் அனைத்தும் மனதை அள்ளிச்செல்கின்றன, பயணிப்பதைவிட இப்படி படத்தில் பார்ப்பதில் கொள்ளைபிரியம்,//

நன்றி அப்துல் மாலிக்

Yasir சொன்னது…


//உங்களின் முன்றாம் கண் எங்கெளையெல்லாம் ”ஹோம் சிக் ”பிடிக்கவைத்து ஆட்டிப்படைக்கின்றது......அதெப்படி வெல்லனமே முழிச்சு போய் போட்டோ எடுக்க ஆர்வம் வருது.....கேமராவை உடம்போடு சேர்த்து தைத்து வச்சிருக்கீங்களோ காக்கா.....”பெர்முடா” நல்ல ஒப்பீடு....சூப்பர் காக்கா //

வெல்லனமே முழிக்க காரணம் நம்ம EB காரங்கதான் காரணம்.

உடம்போடு போட்டு தைக்க வில்லை ,உடம்போடு பெல்ட் (பச்சை பெல்ட் அல்ல)போட்டு வைத்துக்கொள்வேன்

Shameed said...

அர அல சொன்னது…

//மூன்றாம் கண்
ஒரு காவியம். //

வார்த்தை வித்தகரின் காகாவே வார்த்தைகள் குறைவா இருக்கே !

Noor Mohamed சொன்னது…

//வெளிநாடு வாழ் நம் அதிரை நகர மக்கள், நம் அதிரை பற்றி படம் பார்த்து கதை சொல்லாது, கட்டுரை எழுதி, கருத்துக்களை பரிமாறும் சகோ. சாகுல் அவர்களுக்கு நன்றி//

அழகிய கருத்துக்கு நன்றி காகா

Shameed said...

அதிரை தென்றல் (Irfan Cmp) சொன்னது…

//மறுபடியும் (?)ஆல மரத்தின் நிழல்கள் இதை முன்பே பதிந்துள்ளீர்கள் என்றரொரு நியாபகம்//

அந்த மரமா இந்த மரம் நெறியாளர் கவனிக்கவும்

எந்த மரமா இருந்தாலும் தென்றல் வீசும் IRFAN

ZAKIR HUSSAIN said...

சாகுல்.... சின்ன வயதில் காமிரா தூக்கிக்கொண்டு புதுமைகளை செய்து கொண்டிருந்தது இப்போதைக்கு 'காமிரா கவிதை" எழுத வசதியாக இருக்கிறது.

யாசிர்> வியூ ஃபைன்டரிலும் , டிஜிட்டல் ஸ்க்ரீனிலும் காலை நேரத்தை பார்க்க ஆரம்பித்து விட்டால் எப்படி தூங்குபவர்களாக இருந்தாலும் எழுந்துவிடுவார்கள்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

எனக்கு என்னமோ நாலு கண்ணு பட்டதுபோலாகிவிட்டது...

பேசும்படம்... இனிமேல் தொடரும்... என்று நம்புவோமாக !

இன்று அதிகாலை 4:45 மணி குளிருடன் (சம்மரில்) ஜுரம் அதிமாக இருக்குன்னு ஆஸ்பத்திரிக்கு சென்றதும் அங்கே ஒவ்வொன்னா கேட்டுகிட்டே கணினியில் தட்டுத் தடுமாறிக் கொண்டிருந்த செவிலியப் பெண் ஒவ்வொரு கேள்விக்கும் இருமிக் கொண்டே(!!) கேள்விகளைக் கேட்டார்...

நானும் 'இருமல் இல்லாமே' பதிலுரைத்தேன்...

அடுதடுத்து, ஜுரம் இருக்கா ? பி.பி. இருக்கா ? ஹார்ட் பீட் சரியா இருக்கான்னு ஒவ்வொரு கருவியா வைத்து பார்த்து விட்டு...

"அவட நிக்கி" என்றார் முழித்தேன் (!!?) "ஸ்டேண்ட் தேர்" ன்னு காட்டிய இயந்திரம் எடைபோடும் மெஷின், அடுத்து உயரம் காட்டும் அளவுகோல் எல்லாத்தையும் குறித்துக் கொண்டார் அம்மணி.

"அவட இருக்கி" என்று ஒரு இடத்தையும் காட்டினார் அங்கே மந்திரித்த ஆடு மாதிரி அமைதியாக உட்கார்ந்திருந்தேன், வேறு வழி !? ஜுரம் ஜூட்டு விடுறவரைக்கும் அப்படித்தானே கேட்கனும் !

என் பெயரைச் சொல்லி செவிலி அம்மணி அழைத்தார், பின்னால் சென்றேன்...

டாக்டர் மீண்டும் விபரங்கள் கேட்டார் "நடந்தது என்ன எனக்கு நடப்பது என்ன?" படபடப்பிலும் அலுப்பிலும் அப்படியே சொன்னேன்... அவரும் பொறுமையாக கேட்டு விட்டு... "எந்த ஊர்" என்று கேட்டு வைத்தார் "சென்னை" என்றேன் அவ்வாறு சொன்னதும் ஊதா கலரில் இருந்த பேப்பரை எடுத்தார் அவர் இஷ்டத்திற்கு 'டிக்' அடித்தார்...

அப்புறம்,

தலை வலி இருக்கான்னு கேட்டார்... நான் "இல்லை"

இருமல் இருக்கான்னு கேட்டார்.... நான் "இல்லை" ஆனால் சிஸ்டருக்குதான் இருமல் இருக்குன்னு சொன்னேன்...

சற்றே குழப்பத்தில் என்னை ஒரு மாதிரியாக பார்த்தார்... அந்த அதிகாலை வேலையில்.

என்ன சொல்றேங்கிற மாதிரி பார்த்தார்.... நான் "ஆமா டாக்டர் எனக்கு எதெல்லாம் இருக்கான்னு கேட்டுகிட்டே இருந்த நர்ஸ் ஒவ்வொரு கேள்விக்கும் இருமிகிட்டே கேட்டார்"ன்னும் சொன்னதும்...

அருகில் இருந்த நர்ஸை ஏற இறங்க பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஏதோ தெரியாதுபோல் நைஷாக நழுவிய நர்ஸை அழைத்த டாக்டர் என்னிடம் கேட்ட கேள்வியை கேட்டார்.... அதற்கு நர்ஸ்... "நோ டாக்டர்..."ன்னு என்னை பார்த்து முறைத்தார் !

அந்த டாக்டர் ரொம்ப நல்லவர்... எனக்குரிய டிரீட்மெண்டை முடித்து விட்டு மருந்து வாங்குவதற்கான சீட்டை பிண்ட் எடுத்ததும்... இன்று "லீவு வேனுமா"ன்னு கேட்டார் நானும் தூங்கனும்போல இருக்கு ஊரில ஆஃபீஸ்க்கு போனா தூங்கிடலாம் இங்கே ஆஃபீஸ்ல தூங்க முடியாதேன்னு நினைத்துக் கொண்டு "ஆமாம் டாக்டர் என்றேன்"... ஒரு நாள் மெடிக்கல் லீவும் கிடைத்தது...

எல்லாத்தையும் வாங்கிட்டு டாக்டரிடமிருந்து விடைபெறும்போது டக்டர் என்னிடம் சொன்னது "உன்னால நர்ஸுக்கும் இன்று மெடிக்கல் லீவு கொடுத்துட்டேன்..." என்றார் !!!!!!!!

பேசும்படம்னு சொல்லிட்டு ஒன்னுமே பேசாம இருந்தா எப்படின்னு தோனுச்சு அதான் ஆஸ்பத்திரியில பேசிகிட்டதை இங்கே சொன்னேனுங்க ! :)

Shameed said...

அபுல் கலாம் (த/ பெ. ஷைக் அப்துல் காதிர் )) சொன்னது…


//கண்கட்கு விருந்தாக்கிப் படைத்துள்ள இக்காமிரா கவிதைகள், விடுப்பில் தாயகம் வந்து நேரில் தினமும் அனுபவிக்கும் எண்ணங்களை மறுபதிப்பு செய்து காட்டி விட்டதாகவே எண்ணுகிறேன். திருச்சியிலிருந்து அதிரைக்கு வரும் பொழுது, பட்டுக்கோட்டை - அதிரை சாலையில் வாகனம் செல்லும் வேளையில் சுற்றியுள்ள மரங்களின் இளந்தென்றலை அனுபவித்துக் கொண்டு வரும்பொழுது அபுதபியின் “ஏர்கண்டிசன்” காற்றெல்லாம் இத்தென்றலிடம் மடிப்பிச்சைக் கேட்க வேண்டும் என்று என் மனசாட்சியிடம் பேசினேன். //


இன்னும் எத்தனை நாட்கள் ஊரில் இருப்பீர்கள் ஊர் வந்தால் உங்களை காண வேண்டும்

m.nainathambi.அபுஇபுறாஹிம் சொன்னது

//எனக்கு என்னமோ நாலு கண்ணு பட்டதுபோலாகிவிட்டது.//..

நல்ல படட்டும் கண்ணுல படத்தானே இத்தனை போட்டோகளும்

sabeer.abushahruk said...

எத்தனை பாதைகள்
எத்தனை பயணங்கள்

அத்தனையும்
இலக்கில்தான் முடியுமா
முடியுமுன்
வாழ்க்கைதான் விடியுமா

மூன்றாம் கண்ணுக்கு கவிதை கற்றுத்தந்த ஹமீது பாய் வாழ்த்துகள்.

KALAM SHAICK ABDUL KADER said...

//இன்னும் எத்தனை நாட்கள் ஊரில் இருப்பீர்கள் ஊர் வந்தால் உங்களை காண வேண்டும்//

இன்ஷா அல்லாஹ் 13/07/2012 வரை ஊரில் இருப்பேன்
அலைபேசி 0091-7200332169

Unknown said...

ஊரோடு இந்த இயற்கையோடு வாழும் வாழ்க்கையே உன்னதம் .அதை அடைந்தவர்கள் பாக்கியசாலிகள் .

ஏக்கத்தை அள்ளி தெளித்து ஏங்க வைத்து விட்டது இந்த படங்கள் .

Shameed said...
This comment has been removed by the author.
Shameed said...

Shameed சொன்னது…
அபுல் கலாம் (த/ பெ. ஷைக் அப்துல் காதிர் )) சொன்னது…

//இன்ஷா அல்லாஹ் 13/07/2012 வரை ஊரில் இருப்பேன்
அலைபேசி 0091-7200332169 //



14/07/2012 இந்த நாள் உங்கள் "வாழ்க்கை"யில் மறக்க முடியாத நாளாச்சோ இரண்டு நாள் தள்ளிப்போட்டு புறப்பட்டால் என்ன ?

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

ஹமீத் காக்கா....

//எல்லாம் சரி மூன்றாம் கண் பேசும் படம் உங்கள் கண்ணில் படாமல் போனது ஏனோ//

எங்க தோப்பைபின் அருகில் இருக்கும் ரோட்டையேல்லாம் போட்டோ எடுத்துப்புட்டியேலே என்கிற வருத்தமெல்லாமில்லை காக்கா...

என் கருத்தை முதலில் எழுதி கருத்திட்டபோது கரண்ட் கட்டாயிடுச்சு... பிறகு கருத்திடமால் என்றிருந்தேன்... என்னமோ தெரியலே முதன் முதலில் உங்கள் பதிவில் என் கருத்தில்லாமல் போனதற்கு வருந்துகிறேன்... காக்கா...

//இந்த இடம் அதிரையின் பெர்முடா என்று சொல்லலாம் அந்த அளவுக்கு இந்த இடத்தில் விபத்துகளும் விபரீதங்களும் நடக்கின்றன ///

பயங்காட்டுற இந்த விபத்து ரோடு அதிரையின் பெர்முடாவா? கொஞ்சம் விரிவா சொல்லுங்க காக்கா...

Shameed said...

தாஜுதீன் சொன்னது…
//பயங்காட்டுற இந்த விபத்து ரோடு அதிரையின் பெர்முடாவா? கொஞ்சம் விரிவா சொல்லுங்க காக்கா... //


பெர்முடா இது உலகின் ஒரு மர்மமான இடம் இங்கு நடக்கும் விபத்துக்குகளுக்கு என்ன காரணம் என்பதை கண்டு பிடிக்க முடியவில்லை

அட்லாண்டிக் பெருங்கடலில் அமெரிக்காவின் ஃப்ளோரிடாவுக்குக் கிழக்காக, தீர்க்க ரேகைக்கு மேற்காக 40 டிகிரியில் பெர்முடா என்ற தீவின் அருகாமையில் அமைந்துள்ள பகுதிதான் பெர்முடா முக்கோணம். இந்த முக்கோணத்தைத் தான் இப்படி மர்ம முக்கோணம் – மரண முக்கோணம் என்று அழைக்கின்றனர். காரணம், இது வரை சுமார் 40 கப்பல்களும், 20 விமானங்களும், சிறு சிறு படகுகளும் இப்பகுதி மீது செல்லும் போது காணாமல் போய் விடுகின்றன .இவற்றோடு அதில் பயணம் செய்த ஆயிரக்கணக்கான மனிதர்களும் மாயமாய் மறைந்து போய் விட்டார்கள் .

இந்த பெர்முடாப் பகுதியில் கப்பல்கள் ஏதும் சென்றாலோ அதன் மேல் விமானங்கள் போன்றவை பறந்தாலோ அவை திடீரென மறைந்து விடுகின்றன. ஏன், எதற்கு, எப்படி அவை மறைகின்றன என்பது சரிவரத் தெரியாமல் ஆராய்ச்சியாளர்கள் திகைக்கின்றனர். குறிப்பாக விபத்துகளில் அநேகமானவை பஹாமாஸ் மற்றும் புளோரிடா நீர்ச்சந்தியைச் சுற்றியுள்ள பகுதிகளிலேயே நிகழ்ந்திருக்கின்றன. அவற்றிற்கான காரணம் என்ன என்பது இதுவரை தெரியவில்லை.

இது பற்றி யாரவது ஒரு கட்டுரை எழுதுங்களேன்

Shameed said...

N.A.Shahul Hameed சொன்னது…


அஸ்ஸலாமு அலைக்கும்,
சாவன்னா, மூன்றாவது கண் பேசும் படம் பார்த்த பின்னே நாங்கள் எல்லாம் மெய் மறந்து போய் விட்டோம். அப்புறம் எப்படி கருத்துக் கூற முடியும்.
All the snaps are absolutely fantastic, realistic and exciting.
I know very well that you are a matured photographer. What makes me wondering is that you have an intrinsic capability in writing also.
Maasha Allah.
May Allah bless you. All praise be to Allah the Almighty only.
Wassalam
N.A.Shahul Hameed

வலைக்கும் முஸ்ஸலாம்

நலமா ? என்ன அப்பப்போ மின்னலாய் வந்து போகின்றீர்களே

//What makes me wondering is that you have an intrinsic capability in writing //
எல்லாம் உங்கள் வளர்ப்பின் சாதுர்யமே இங்கு பிரதிபளிக்கின்றது

Unknown said...

பெர்முடா என்பது ஒரு கட்டுக்கதை!

அப்பாடா உலகத்திலேயே மிகச் சிறிய கட்டுரையை எழுதிவிட்டேன் :)

அன்புடன் புகாரி

KALAM SHAICK ABDUL KADER said...

//14/07/2012 இந்த நாள் உங்கள் "வாழ்க்கை"யில் மறக்க முடியாத நாளாச்சோ இரண்டு நாள் தள்ளிப்போட்டு புறப்பட்டால் என்ன ?//

மாஷா அல்லாஹ்! வியந்தேன்: 1) என்பால் இவ்வளவு அக்கறையுடன் அக்கரையில் வாழும் ஓர் அதிரையர்- அன்புச் சகோதரரை அல்லாஹ் எனக்கு இத்தளத்தின் வழியாக தந்துள்ளதை எண்ணினேன்! 2) என் திருமண நாளைச் சரியாக நினைவில் வைத்துள்ள உங்களின் நினைவாற்றலை எண்ணினேன்!!

எங்கள் நிறுவனத்தில் (அபுதபியில்)அனுமதிக்கப்பட்ட விடுப்புக் கெடுவுக்குள் திரும்பி பணியில் சேராவிட்டால் ஒரு வாரம் / ஒரு மாதம் சம்பளம் கழிவு அல்லது பணிநீக்கம் போன்ற அச்சுறுத்தல் நடவடிக்கைகள் உள.

அதனாற்றான் 14/06/2012 லிருந்து 14/07/2012 வரைக்கும் சரியாக ஒரு மாதம் விடுப்பை அனுபவிக்கும் வசதிக்காக “ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்” அபுதபி-திருச்சி-அபுதபி விமானத்தைத் தெரிவு செய்தேன்

அன்புடன் புகாரி said...

இனிய மணநாள் வாழ்த்துக்கள் நண்பர் கலாம்

அன்புடன் புகாரி

KALAM SHAICK ABDUL KADER said...

ஜஸாக்கல்லாஹ் கைரன்; மிக்க நன்றி அன்புடன் புகாரி அவர்களே

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு