இன்று 07-06-2012 மாலை 04:30 மணியளவில் அதிரை பிலால் நகரில் அமைந்துள்ள சகோதரர் சேகன்னா M.நிஜாம் அவர்களின் இல்லத்தில் அதிரை அனைத்து முஹல்லவின் 6வது கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வின் முத்தாய்பாக, அதிரை ஊடகவியளார்களில் விழிப்புணர்வு சார்ந்த பயனுள்ள தகவல்களை முன்னின்று தரும் சகோதரர் சேகன்னா M. நிஜாம் அவர்களின் 'விழிப்புணர்வு பக்கங்கள்' புத்தக வெளியீடு மற்றும் சகோதர இணையதளம் அதிரை எக்ஸ்பிரஸ் சார்பாக 2011-12 கல்வி ஆண்டிற்கான முதல் கல்வி விருது பொது தேர்வில் சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.
புத்தக வெளியீட்டு புகைப்பட காட்சிகள்
புத்தக வெளியீட்டு புகைப்பட காட்சிகள்
மேலும்
தகவல்கள், புகைப்படங்கள், காணொளிகள் சகோதர வலைத்தளம் அதிரை எக்ஸ்பிரஸில் காணலாம்.
விருது பெற்ற மாணவமணிகளுக்கு அதிரைநிருபர் குழு சார்பாக வாழ்த்துகிறோம்.
- அதிரைநிருபர் குழு
40 Responses So Far:
நன்றி அறிவிப்பு !
எனது அன்பு அழைப்பை ஏற்று எனது வீட்டில் நடைபெற்ற “ விழிப்புணர்வு பக்கங்கள் “ புத்தக வெளியீடு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்த அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் நிர்வாகிகள் M.M.S. சேக் நசுருதீன், பேராசிரியர் M.A. முஹம்மது அப்துல் காதர், K.M. பரக்கத் அலி மற்றும் AAMF’ன் செயற்குழு உறுப்பினர்கள், அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள் பேராசிரியர் பரக்கத், வழக்கறிஞர் அப்துல் முனாப், O.K.M. சிபஹத்துல்லா, S.M. முஹம்மது மொய்தீன், அதிரை பேரூராட்சித் தலைவர் S.H. அஸ்லம், காதிர் முஹைதீன் பெண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை, ஆசிரியைகள் மற்றும் மாணவிகள், காதிர் முஹைதீன் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் மாணவர்கள், இமாம் ஷாஃபி மெட்ரிக். மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மாணவிகள், “தமிழ் அறிஞர்” அதிரை அஹமது, “கணினி தமிழ் அறிஞர்” ஜமீல் M. ஸாலிஹ், “கவிக்குறள்” அபுல் கலாம் ( தொலைப்பேசி வாயிலாக தொடர்பு ) , “கவிநேசர்” சபீர், அதிரை நிருபர் – நெறியாளர், சகோ. நெய்னா தம்பி, அதிரை நிருபர் - அமீர் நண்பர். தாஜுதீன், அதிரை பிபிசி நிர்வாகி நண்பர். முஹம்மது, சக பதிவர் நண்பர் “அதிரை அன்பு” , அதிரை போஸ்ட் நிர்வாகி நண்பர். ஹிதாயத்துல்லா, அதிரை.இன் பதிவர் தம்பி முபீன், தம்பி M.N.P. மொய்தீன்
மேலும் அனைத்து முஹல்லாவைச் சேர்ந்த சிறப்பு விருந்தினர்கள், நண்பர்கள், நல் ஒத்துழைப்பு வழங்கிய பிலால் நகர் முஹல்லாவாசிகள், இந்நிகழ்ச்சிக்கு மேலும் வலுவூட்டி சிறப்பித்த “அதிரை எக்ஸ்பிரஸ்” க்கும் மற்றும் அதன் நிர்வாகிகள் குறிப்பாக நண்பர் ஜஃபருல்லா, நண்பர். ஜமாலுதீன், சக பதிவர் “அதிரை புதியவன்“ ஹசன், தொலைப்பேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு அன்பைப் பரிமாறிய சகோதரர்கள், நண்பர்கள், உறவினர்கள் ஆகியோர்க்கு என் நன்றி கலந்த நல் வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்புடன்,
சேக்கனா M. நிஜாம்
சகோ நிஜாம், உண்மையில் உங்கள் புத்தக வெளியீட்டு விழாவில் நான் கலந்துக்கொண்டது மகிழ்ச்சியடைகிறேன்.
மேலும் விழிப்புணர்வு சேவை தொடருங்கள்... இன்ஷா அல்லாஹ்...
நிகழ்ச்சியை மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த பிலால் நகர் முஹல்லா சகோதரர்களை நிச்சயம் பாராட்டியாகவேண்டும். அன்பான உபசரிப்பு....
சகோதரர் நிஜாமின் விழிப்புனர்வு பக்கங்கள் புத்தக வெளியீட்டு விழாவும் அதிரை எக்ஸ்பிரஸ் கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சிகளில் பெரும்பாலான வலைதல நடத்துனர்கள் கலந்து கொண்டு புத்தக ஆசிரியரையும் படிப்பில் வெற்றிப்பெற்ற மாணவ மாணவிளை வாழ்த்தியது உண்மையிலேயே பாராட்ட கூடியதே... ஓங்குக ஓற்றுமை .
அதிரை எக்ஸ்பிரஸ் கல்வி விருது நிகழ்ச்சியில், நெகிழ வைத்த சம்பவம், 10 வகுப்பு பொது தேர்வில் அதிரையில் இரண்டாம் இடம் பிடித்த காதிர் முஹைத்தீன் பெண்கள் பள்ளி மாணவி, தன்னுடைய பரிசுத்தொகையை தன் பள்ளியில் படிக்கும் ஏழை மாணவி யாருக்காவது உதவிதொகையாக மேடையிலே தந்து விழாவில் கலந்துக்கொண்ட பலரை பலரின் மனதில் இடம்பிடித்துவிட்டார். இதை யாருமே எதிர்ப்பார்க்கவில்லை.
அல்லாஹ் அச்சகோதரிக்கும், அவரின் பெற்றோருக்கும் நல்லருள் புரிவானாக,
மாணவமணிகளுக்கு ஊக்கமூட்டும் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியை மிகச்சிறப்பாக அதிரையில் ஏற்பட்டு செய்திருந்த சகோதரர் ஜபருல்லாஹ் மற்றும் சேக்கன்னா நிஜாம் ஆகியோரை பாராட்டாமல் இருக்க முடியாது.
அருமையான நிகழ்ச்சியாக நடந்து முடிந்த தம்பி சேக்கனா நிஜாமின் புத்தக வெளியீடும், அதிரை எக்ஸ்ப்ரஸ்ஸின் கல்வி விருதுகளும் பாராட்டத்தக்கவை.
இருப்பினும், ஆல் மஹல்லாவின் கூட்ட நடவடிக்கைகளில் ஒரு ஒழுங்கின்மையை உணர முடிந்தது வருந்தத் தக்கது. ஆங்காங்கே அவரவர்கள் நீண்ட நேரம் தமக்குள்ளேயே சலசலத்துப் பேசிக்கொண்டிருந்தது சரியல்ல.
அடுத்தடுத்த கூட்டங்களில், ஜமீல் காக்கா சொன்னது போல், கடந்த கூட்டத்தில் பேசப்பட்ட கருத்தும் அதற்கான நடவடிக்கையும் அப்டேட் செய்யப்பட்டே புதுக்கூட்டத்தின் அஜென்டாவைத் தொடங்க வேண்டும்.
ஒவ்வொரு மஹல்லாவுக்கும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்க வேண்டும்.
கண்டிப்பாக கூட்டத்தில் நீண்ட நேர சலசலப்பு கூடவே கூடாது.
ப்ளீஸ் மேக் அ னோட் ஆஃப் த அபோவ் அட் தி நெக்ஸ்ட் மீட்டிங்.
அன்புக்குரியவர்களே!
என் மனதில் பட்டதை எழுதுகிறேன். நான் எழுதி இருப்பது தவறாகக் கூட இருக்கலாம். எல்லோராலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகக்கூட இருக்கலாம். ஆனாலும் நான் இதை வெளிப்படையாக குறிப்பிட விரும்புகிறேன். நான் குறிப்பிட்டிருப்பது தவறு என்று யாராவது சுட்டிக்காட்டினால் என் தவறை மன்னிப்புடன் திருத்திகொள்வதும் எனக்கு உடன்பாடே.
அருமை தம்பி – அதிரையின் பொக்கிஷம் ஷேக்கனா M. நிஜாம் அவர்களின் உழைப்பின் மூலம் வெளிவந்த விழிப்புணர்வு கட்டுரைகள் அடங்கிய நூலை அதிரைக்குப் பொதுவான AAMF கூட்டத்தில் வைத்து வெளியிடுவது சிறந்ததே. வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். இதுபோல் பல விழாக்களை அவரது உழைப்பு காணவேண்டும்.
ஆனால்
தேர்வுகளில் சிறப்பு வெற்றி பெற்ற மாணவச் செல்வங்களுக்கு வழங்கப்படும் ஊக்கமூட்டும் பரிசுகளையும் இந்தக் கூட்டத்தில் வைத்துத்தான் வழங்க வேண்டுமா? இதையே ஒரு பள்ளி வளாகத்தில் அனைத்துப் பள்ளி மாணவக் கண்மணிகளும் கூடியிருக்க வெற்றி பெற்றவர்களை பெயர் சொல்லி மேடைக்கழைத்து – பார்ப்போரின் கர ஒலிகளுக்கிடையே வழங்கி இருக்க ஏற்பாடு செய்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும். இதனால் பரிசு பெறுபவர்களின் ஊக்கமும்- பார்ர்க்கின்ற ஏனைய மாணவர்களின் ஆர்வமும் மேம்பட்டிருக்க சிறந்த வாய்ப்புண்டாகி இருக்கும். ஆனால் மூத்த சகோதரியின் திருமணத்தோடு , வயதுக்கே வராத இளைய சகோதரியின் திருமணத்தையும் ஒரே செலவாக நடத்திவிடவேண்டுமென்று முடிவு எடுத்ததுபோல் இந்த பரிசு வழங்கும் நிகழ்ச்சியை – அதுவும் முக்கிய பரிசு தருவதாக மனமுவந்து ஒப்புக்கொண்டவர் ஊர் வரும் தருணத்தில் – அதற்காகக் காத்து இருக்காமல் அவசர கோலத்தில் நடத்தி இருப்பது அவ்வளவு பொருத்தமாகப் படவில்லை. பெருந்தன்மை படைத்த கவியன்பன் அவர்களின் மனமும் காயப்பட்டிருக்காது.
அதே நேரம், இத்தகைய பரிசுகளை வழங்கும் செயல்களை இந்த வருடம் முன்னெடுத்துச் செய்த நண்பர்களை பாராட்டாமலும் இருக்க முடியவில்லை.
இன்ஷா அல்லாஹ் அடுத்தவருடமாவது இந்த நிகழ்ச்சியை ஏதாவது ஒரு பள்ளியில்- அல்லது அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட நமது கா. மு. மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர்களின் அமைப்பின் மூலமாகவோ அல்லது அனைவரும் இணைந்து ஒரு தனி விழாவாகவோ நடத்த ஆலோசிக்கலாம் என்பது எனது தாழ்மையான கருத்து.
இந்த எனது கருத்தை ஏற்பவர்களும், மறுப்பவர்களும் கருத்துக்களை பதிவு செய்தால் நலமாக இருக்கும்.
சகோ நிஜாம் அவர்களுக்கும்,அதிரை எக்ஸ்பிரஸ் க்கும் என் இனிய வாழ்த்துக்கள் !!!
இபுராஹீம் அன்சாரி காக்கா அவர்களின் கருத்தை நான் முழுமையாக வழிமொழி கிறேன்.
அஸ்ஸலாமு அலைக்கும் கல்வி விருதுகளை அதிரை இஸ்லாமிக் மிஷம் & அதிரை நிருபர் குழு நடத்திய கல்வி விழிப்புணர்வு விழாவில்தான் வழங்க முடிவெடுத்திருந்தோம். ஆனால் இவ்விழா தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பு நடந்து விட்டதால் சாத்தியப்படவில்லை. ஆகவே, அ.அ.மு.கூ விழாவை பயன்படுத்திக் கொள்ள முடிவெடுக்கப்பட்டது.
மரியாதைக்குரிய கலாம் காக்காதான் முதல் பரிசு வழங்க முன்வந்தவர் என்பது அறிந்ததே. எனினும், அவர்களும் இம்மாதம் 16 ஆம் தேதிவாகில்தான் ஊர் செல்ல முடியும். இந்நிலையில் ஊரில் விருது ஏற்பாடு, அழைப்பிதழ் மற்றும் பிற ஏற்பாடுகளைக் கவனிக்க சகோ. ஜபருல்லா தனது விடுமுறைக் காலத்தின் பல நாட்களை செலவளித்தார். எனினும், அவர் அடுத்த ஓரிரு நாட்களுக்குள் பணிக்குத் திரும்பி விடுவதால் அனைத்து முஹல்லா கூட்டம் சரியாத தேர்வாக இருந்தது. இதில் கவியன்பன் கலாம் காக்காவை எவ்விதத்திலும் காயப்படுதும் நோக்கம் ஏற்பாட்டளர்களுக்கு இல்லை என்பதை அவர்கள் அறிந்துள்ளார்கள்.
இத்தகைய நிகழ்வுகளில் நிறைகளோடு ஒருசில குறைகளும் இல்லாமலில்லை. இவற்றை அனுபவமாகக் கொண்டு இன்ஷா அல்லாஹ் அடுத்தடுத்த நிகழ்வுகளில் திருத்திக் கொள்வோம்.
அன்புடன்,
நூ.ஜமாலுதீன்
சகோ .சேகனா .நிஜாம் ..வாழ்த்துக்கள்
தங்களின் நூல் வெளியீடு விழா இனிதே
நிறைவேறியது குறித்து சந்தோசம் ..தங்களின்
புத்தகத்தை காண ஆவலாக உள்ளேன் ..
தங்களின் புத்தகம்ஒன்றை MBA ஹார்டுவேசில்
கொடுத்தால் வெகு விரைவில் கலிபோர்னியா
வந்து சேரும் கொடுத்து விடுகிறீர்களா ..?
/*சகோதரர் சேகன்னா M. நிஜாம்*/
இவற்றில் எந்த புகைப்படத்திலாவது இவர் இடம்பெற்றிருக்கின்றாரா?
இபுராஹீம் அன்சாரி காக்கா அவர்களின் கருத்தை நான் முழுமையாக வழிமொழி கிறேன்.
AAMF-க்கும்,
விழிப்புணர்வு வித்தகர் நிஜாம் அவர்களுக்கும்,
கல்வியில் ஊக்கம் கொடுத்து அதிரையர்கள் உயர உழைக்கும் அதிரை எக்ஸ்பிரஸுக்கும்,
கொடை வள்ளல்களுக்கும்,
அதிரை தளங்களின் அத்தனை ஆளுமையினர்களுக்கும்,
பாராட்டுக்களும் துஆவும்.
இப்ராஹீம் அன்சாரி காக்கா சொன்ன கருத்து ஏற்புடையதே அதற்கான காரனத்தையும் அதிரைக்காரன் விளக்கியுள்ளார்.
ஒரு நிகழ்ச்சியை நடத்துவது சாதாரண காரியமன்று என்பதை எல்லோருமே உணர்வர். குறைகள் இல்லாமல் எந்த நிக்ழ்வும் நிறைவேறியதாக சரித்திரமில்லை.
விருது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களில் நானும் ஒருவன் என்ற முறையில் பதிலளிக்க கடமைப்பட்டுள்ளேன்.
என் விடுமுறை காலம் முடிந்துவிட்டதால் பணிக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில், பொதுவான ஊர் நிகழ்ச்சி வேறு எதுவும் இல்லை ஆதலால் அ.அ.மு.கூ கூட்டத்தினை ஏற்பாட் செய்தோம், நீங்கள் கூறுவதுபோல் பள்ளி அல்லது கல்வி நிறுவன நிகழ்ச்சி சரியானதுதான் ஆனால் அதற்காக காத்திருக்க வேண்டும், மேலும் அதிரை எக்ஸ்பிரஸை நடத்தும் நிர்வாகிகள் பெரும்பாலும் வெளிநாட்டினராதலால். தருனம் அமைவது கடினம், உள்ளூர் பாங்களிப்பாளர்களுக்கும் பல வேலைப்பளு உள்ளதை மனதில் கொண்டு இந்த நேரத்தில் ஏற்பாடு செய்திருந்தோம்.
இந்த ஏற்பாடு யாருடைய மனதையேனும் புண்படுத்தியிருந்தால் என் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
வரும் காலங்களில் இதுபோன்ற தவறுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறோம்.
அஸ்ஸலாமு அலைக்கும்.விழா நல்ல முறையில் நடந்தேறியவை கண்டு சந்தோசம். அல்லாஹ் எல்லா நல் காரியங்களுக்கும் துணை நிற்பானாக. ஆமீன்.பேரரிஞர் அன்சாரி காக்காவின் கருத்தை நானும் ஆதரிக்கிறேன். அதே நேரம் நண்பன் ஜமாலுதீன் விளக்கமும் சகோதர், நண்பர் ஜபருல்லாவின் விளக்கத்தையும் கவனிக்கவும்.
வாழ்த்துக்கள் சகோ.சேக்கனா நிஜாம். இன்னும் நீங்கள் பல நூல்கள் எழுதி வெளியிட எதிர் பார்க்கிறோம்
// புத்தகத்தை காண ஆவலாக உள்ளேன் ..
தங்களின் புத்தகம்ஒன்றை MBA ஹார்டுவேசில்
கொடுத்தால் வெகு விரைவில் கலிபோர்னியா
வந்து சேரும் கொடுத்து விடுகிறீர்களா ..? //
நன்றி சகோ. அதிரை சித்திக்,
தங்களின் பின்னூட்டங்களைத் தொடர்ச்சியாக படிக்கும் வாசர்களில் நானும் ஒருவன். பதிவை ஒட்டிய விசயங்கள் பல அதில் இடம்பெற்றிருக்கும்.
புத்தக வெளியீடுக்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள வேண்டி மூத்த சகோ. M.B. அபூபக்கர் ( உங்களின் மாமா ) அவர்களை நேரில்ச்சென்று அழைப்பு விடுத்துருந்தேன்.
இன்ஷாஅல்லாஹ் ! புத்தகத்தை அவர்களிடம் சமர்பிப்பேன் !
அஸ்ஸலாமு அலைக்கும்.
நான் ஊரில் இருந்தும் நண்பர் நிஜாமின் புத்தக வெளீட்டு விழாவில் கலந்து கொள்ளாதது வருத்தமளிக்கிறது.
காரணம், குப்பைகளுக்கும் கட்டுகதைகளுக்கும் அப்பாற்ப்பட்ட மனிதன் விழிப்புணர்வு பெறவேண்டிய உன்னதமான எழுத்துக்களை வெளியிடுவதால்.மேலும் பொன் எழுத்துக்களை இச் சமுதாயத்திற்கு அதிகமாக பதிக்க வேண்டுமாய் அன்புடன் நண்பரை கேட்டுக் கொள்கிறேன்.
ஜனாப்.இப்றாஹீம் அன்சாரி காக்கா அவர்களின் கருத்தை நானும் வழி மொழிகிறேன்.
வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கான பரிசுகள் வழங்க கூடிய தகுதியான இடம் பள்ளிவளாகம் தான் என்பது என் கருத்து
அதே சமயம் அதிரை எக்ஸ்பிரசின் இம் முயர்ச்சினை வெகுவாக பாராட்ட கடமைப்பட்டுள்ளேன்.
// கவி சபீர் காக்கா சொன்னது.
இருப்பினும், ஆல் மஹல்லாவின் கூட்ட நடவடிக்கைகளில் ஒரு ஒழுங்கின்மையை உணர முடிந்தது வருந்தத் தக்கது. ஆங்காங்கே அவரவர்கள் நீண்ட நேரம் தமக்குள்ளேயே சலசலத்துப் பேசிக்கொண்டிருந்தது சரியல்ல. //
அமர்வுகளில் நபி(ஸல்) அவர்கள் கற்று தந்த ஒழுக்கங்களை பேணி நடந்தால் அல்லாஹ் அதில் அதிகமான நன்மையை தந்து சரியான முடிவு எடுக்கக் கூடிய வழியினை காட்டுவன் .அதற்க்கு மாற்றமான நடந்தால் அல்லாஹ் நம்மை வழி கெட செய்திடுவான்.என்பதை உணர்ந்து இனி வரக்கூடிய அமர்வுகளில் நபி ( ஸல் ) அவர்களின் பொன் மொழியை முன் நிறுத்திக் கொள்வோம்.
புத்தக வெளியீடு சிறப்பாக நடந்த செய்திக்கு மகிழ்வு.இன்னும் பல எழுதி,மக்கள் பயன் பெறவும்,அதன் மூலமும் ஏக இறைவனின் அருள் கிடைக்கவும் சகோ நிஜாம் அவர்களை வாழ்த்துகிறேன்.
//இருப்பினும், ஆல் மஹல்லாவின் கூட்ட நடவடிக்கைகளில் ஒரு ஒழுங்கின்மையை உணர முடிந்தது வருந்தத் தக்கது. ஆங்காங்கே அவரவர்கள் நீண்ட நேரம் தமக்குள்ளேயே சலசலத்துப் பேசிக்கொண்டிருந்தது சரியல்ல. //
//அமர்வுகளில் நபி(ஸல்) அவர்கள் கற்று தந்த ஒழுக்கங்களை பேணி நடந்தால் அல்லாஹ் அதில் அதிகமான நன்மையை தந்து சரியான முடிவு எடுக்கக் கூடிய வழியினை காட்டுவன் .அதற்க்கு மாற்றமான நடந்தால் அல்லாஹ் நம்மை வழி கெட செய்திடுவான்.என்பதை உணர்ந்து இனி வரக்கூடிய அமர்வுகளில் நபி ( ஸல் ) அவர்களின் பொன் மொழியை முன் நிறுத்திக் கொள்வோம்.//
சகோ சபீர் காக்காவின் ஆதங்கம்,சகோ அபூபக்கர் காக்காவின் ஆதங்கம் ஏற்றுக்கொள்ள கூடியதே.முதலில் சபை ஒழுங்கு முக்கியம்.
//அடுத்தடுத்த கூட்டங்களில், ஜமீல் காக்கா சொன்னது போல், கடந்த கூட்டத்தில் பேசப்பட்ட கருத்தும் அதற்கான நடவடிக்கையும் அப்டேட் செய்யப்பட்டே புதுக்கூட்டத்தின் அஜென்டாவைத் தொடங்க வேண்டும்.//
இது மிக முக்கியம்.அனைத்து முஹல்லாஹ் நிர்வாகம் கவனிக்குமா?
//அடுத்தடுத்த கூட்டங்களில், ஜமீல் காக்கா சொன்னது போல், கடந்த கூட்டத்தில் பேசப்பட்ட கருத்தும் அதற்கான நடவடிக்கையும் அப்டேட் செய்யப்பட்டே புதுக்கூட்டத்தின் அஜென்டாவைத் தொடங்க வேண்டும்.//
சென்ற கூட்டத்தின் அறிக்கை வாசித்தல் எனபது அஜென்டாவில் இல்லையா? நடக்கும் கூட்டத்துக்காவது மினிட்ஸ் எழுதுகிறார்களா?
//இத்தகைய நிகழ்வுகளில் நிறைகளோடு ஒருசில குறைகளும் இல்லாமலில்லை. இவற்றை அனுபவமாகக் கொண்டு இன்ஷா அல்லாஹ் அடுத்தடுத்த நிகழ்வுகளில் திருத்திக் கொள்வோம்.//
சகோதரர் ஜமாலுதீன் அவர்களின் பெருந்தன்மையான மேற்கண்ட கருத்துக்கு மிக்க மகிழ்ச்சி.
இன்ஷா அல்லாஹ் அடுத்தவருடம் இந்த நிகழ்ச்சியை இன்னும் சிறப்பாக நடத்திட இறைவன் அருள் புரிவானாக.
எனது கருத்தை வழிமொழிந்த அன்பு சகோதரர்கள் அனைவருக்கும் ஜசக்கல்லாஹ் ஹைரன்.
சகோ Ebrahim Ansari அவர்களின் ஆதங்கம் உண்மையானதே.
இருப்பினும் நான் முன்பு கேள்விப்பட்டவகையில் 'இந்த பரிசளிப்பு விழாவை முதலில் ADIRAI EDUCATION MISSION ல் வைப்பதாகவும், பிறகு காதிர் முஹைதீன் மாணவர் சங்கத்தோடு சேர்த்து வைப்பதாகவும், அதன் பின் ஆண்கள், பெண்கள், மாணவர்கள், மாணவிகள், குழந்தைகள் என்று அதிக மக்கள் கூடும் பைத்துல்மால் மாநாட்டில் வைக்கலாம் என்றும்' முடிவேடுத்திருந்ததாக கேள்விப்பட்டேன் . AEM மற்றும் STUDENT ASSOCIATION நிகழ்சிகள் மதிப்பெண்கள் வெளிவருவதற்கு முன் நடந்துவிட்டதாலும் பைத்துல்மால் மாநாடு இந்த வருடம் நோன்பு பெருநாளைக்கு பின் தள்ளிப்போய்விட்டதாலும் AAMF கூட்டத்தில் வைத்ததாக கேள்விப்பட்டேன்..
பைதுல்மாளில் நடத்த சந்தர்பம் கிடைத்திருந்தால் மிகச்சிறப்பாக அமைந்திருக்கும்.. நாலு பேர் முன்பு பரிசு வாங்குவது பலரை ஊக்கமளிக்கும். இன்ஷா அல்லாஹ் இனி வரும் காலங்கள் அல்லாஹ் அந்த சந்தர்பத்தை உருவாக்கி கொடுக்கட்டும்..
அனைத்து வலை வல்லுனர்களும் ஒன்று கூடியிருந்ததை கேட்டு மனம் மகிழ்ந்தது.
தாஜுதீன் சொன்னது…
//அதிரை எக்ஸ்பிரஸ் கல்வி விருது நிகழ்ச்சியில், நெகிழ வைத்த சம்பவம், 10 வகுப்பு பொது தேர்வில் அதிரையில் இரண்டாம் இடம் பிடித்த காதிர் முஹைத்தீன் பெண்கள் பள்ளி மாணவி, தன்னுடைய பரிசுத்தொகையை தன் பள்ளியில் படிக்கும் ஏழை மாணவி யாருக்காவது உதவிதொகையாக மேடையிலே தந்து விழாவில் கலந்துக்கொண்ட பலரை பலரின் மனதில் இடம்பிடித்துவிட்டார். //
படித்தேன் நெகிழ்ந்தேன்..
MSM(M.R)
தாஜுதீன் சொன்னது…
//அதிரை எக்ஸ்பிரஸ் கல்வி விருது நிகழ்ச்சியில், நெகிழ வைத்த சம்பவம், 10 வகுப்பு பொது தேர்வில் அதிரையில் இரண்டாம் இடம் பிடித்த காதிர் முஹைத்தீன் பெண்கள் பள்ளி மாணவி, தன்னுடைய பரிசுத்தொகையை தன் பள்ளியில் படிக்கும் ஏழை மாணவி யாருக்காவது உதவிதொகையாக மேடையிலே தந்து விழாவில் கலந்துக்கொண்ட பலரை பலரின் மனதில் இடம்பிடித்துவிட்டார். //
படிப்பில் மட்டுமல்ல பண்பிலும் உயர்ந்துவிட்ட உதாரணமான நன்மகள். அவரின் வாழ்வும் கல்வியும் மென்மேலும் உயர து ஆச் செய்வோமாக.
///தாஜுதீன் சொன்னது…
அதிரை எக்ஸ்பிரஸ் கல்வி விருது நிகழ்ச்சியில், நெகிழ வைத்த சம்பவம், 10 வகுப்பு பொது தேர்வில் அதிரையில் இரண்டாம் இடம் பிடித்த காதிர் முஹைத்தீன் பெண்கள் பள்ளி மாணவி, தன்னுடைய பரிசுத்தொகையை தன் பள்ளியில் படிக்கும் ஏழை மாணவி யாருக்காவது உதவிதொகையாக மேடையிலே தந்து விழாவில் கலந்துக்கொண்ட பலரின் மனதில் இடம்பிடித்துவிட்டார். //
தகவலுக்காக, இங்கு குறிப்பிட்டுள்ள மாணவியின் பெயர்: N. நவ்ரீன் - த/பெ. நெய்னா முகம்மது, பள்ளி : காதிர் முஹைதீன் பெண்கள் மேல் நிலைப்பள்ளி, வகுப்பு: 10 வகுப்பு, பொது தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் : 462 / 500 பள்ளியின் முதல் மதிப்பெண் எடுத்துள்ளார்.
இவரின் எதிர்காலம் மிகச்சிறப்பானதாக அமைய நாம் எல்லோரும் துஆ செய்வோமாக....
அஸ்ஸலாமு அலைக்கும்.
சகோ. இப்ராஹீம் அன்ஸாரீ அவர்களின் ஆதங்கம் சரியே என்றாலும் வாய்ப்பும் வசதியும் காலமும் நேரமும் ஒத்துப் போகாத காரணத்தால் அவ்வாறு செய்ய இயலாமற் போனது. இன்ஷா அல்லாஹ் அடுத்த முறை கவனத்தில் கொள்வோம். தம்பி அபுல்கலாம் இவற்றைக் கருத்தில் கொண்டு அமைதியடைய வேண்டுகிறேன்.
நிற்க.
நேற்றைய அமர்வில் அனைத்து மஹல்லா கூட்டமைப்புக்கான பைலாவின் சுருக்கக் கருத்துகள் படிக்கப்பட்டன. அதில், சுன்னத் ஜமாத்தின் கொள்கைப்படியும் ஷரீஅத்படியும் பைலா வகுக்கப்படும் என்று பேரா. அப்துல் காதிர் குறிப்பிட்டார். அது எப்படி என்பது குழப்பமாக உள்ளது.
சுன்னத் ஜமாத் என்று சொல்லிக் கொள்பவர்கள் கந்தூரி எடுப்பார்கள்; ஷரீஅத் அதைத் தடுக்கும்.
சுன்னத் ஜமாத் என்று சொல்லிக் கொள்பவர்கள் வரதட்சனை வாங்குவர்; ஷரீஅத் அதைத் தடுக்கும்.
சுன்னத் ஜமாத் வட்டி, குடி, விபச்சாரம் போன்றவற்றைக் கண்டுகொள்ளாது; ஷரீஅத் அவற்றைக் குற்றங்களென தண்டிக்கும்.
இவை போன்ற பல முரண்கள் சுன்னத் ஜமாத்துக்கும் ஷரீஅத்துக்கும் இருக்கின்றன.
அதிரை அனைத்து மஹல்லாக் கூட்டமைப்பு, தன் பயணத்தை அமைதியாகவும் கண்ணியமாகவும் தொடர விரும்பினால் குறைந்தபட்சம் பொறுப்பில் இருப்பவர்கள் ஐவேளை தொழக்கூடியவர்களாக இருக்கவேண்டும் எனும் நிபந்தனை பைலாவில் சேர்க்கப்படவேண்டும்.
மிகமிக முக்கியமாக கந்தூரிக்கு ஆதரவளிப்பவர்கள் எவரும் கூட்டமைப்பில் இடம்பெறலாகாது. So called சுன்னத் ஜமாத்தாக இல்லாமல் உருப்படியான சுன்னத் ஜமாத்தின் கொள்கைகளான இறைமறையையும் நபிவழியையும் பின்பற்றக் கூடியவர்களாகக் கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள் அனைவரும் மாறவேண்டும்.
இந்தக் கருத்தை, கூட்டமைப்பு உருவாவதற்குப் பாடுபட்ட அனைவரும் வலியுறுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
முதலில் ஒரு அற்புதமான நிகழ்வான கல்வி விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டதில்... மகிழ்வே ! சகோ.ஜபருல்லாஹ் மற்றும் அதிரை எக்ஸ்பிரஸ் சகோதரர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ! தொடரட்டும் இந்த மேலான நன்னோக்கு செயல் !
சகோ.சேக்கனா M.நிஜாம் அவர்களின் விழிப்புணர்வு பக்கங்கள் புத்தகம் அனைவரின் விழி உயர்த்திட வைத்த நிகழ்வு ! அதுவும் சந்தோஷமான நிகழ்வு ! மென்மேலும் வெற்றிப் பதிவுகளாக தொடர்ந்து வெளிவந்து புத்தகங்கள் வடிவில் பிரசவிக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன் இன்ஷா அல்லாஹ் ! - வாழ்த்துகள் சகோதரரே !
அடுத்து... அழைக்கவில்லை ஆனாலும் அடுத்தடுத்து நடந்த இரண்டு சிறப்பான நிகழ்வில் கலந்து கொண்டுவிட்டு அமர்ந்திருந்தபோது ஏதோ அங்கொன்றும் இங்கொன்றும் என்று குரல்களும் எழுந்தது... சற்று சுதாகரித்துக் கொண்டபோது அட ! அதிரை அனைத்து முஹல்லா 6வது-கூட்டம்... மெய்யாலுமே கூட்டமாகவே பேசினார்கள் குழப்பமாக காதுகளில் விழுந்தது.
அனைத்து முஹல்லா நிர்வாகிகள் தவிர்த்து யாரும் இங்கு கருத்து சொல்ல வேண்டாம் என்று ஒரு சகோதரர் வேண்டிக் கொண்டார் அதனால் மவுனமே நல்ல சகுனம் என்று சப்தமின்றி வெளியேறினோம். இருப்பினும், ஒரே ஒரு டவுட் இருந்துச்சு ! அதனையும் ஜமீல் காக்கா 'உரைக்கும்படி கேட்டு வைத்திருக்கிறார்கள்... ஏனென்றால், UAEல் நடந்த துவக்க விழாவின் தூண்டுகோல்களாக இருந்த சகோதரர்கள் அனைவரும் கந்தூரிக்கு எதிரானவர்கள்... அந்த சகோதரர்கள் ஜமீல் காக்கா அவர்களின் கருத்தினை மீண்டும் வழியுறுத்தி இருக்கும் அனைத்து முஹல்லாஹ்(குரல்கள்) அமைப்பினை சீரமைக்க வேண்டும்... பைலாவில் திருத்தத்துடன் !
இதெல்லாம் வேண்டுகோல்தானுங்க ! எந்த குறிக்கோலுல் இல்லைன்னு சொல்லிடாதீங்க !
அஸ்ஸலாமு அலைக்கும்
"நேற்றைய அமர்வில் அனைத்து மஹல்லா கூட்டமைப்புக்கான பைலாவின் சுருக்கக் கருத்துகள் படிக்கப்பட்டன. அதில், சுன்னத் ஜமாத்தின் கொள்கைப்படியும் ஷரீஅத்படியும் பைலா வகுக்கப்படும் என்று பேரா. அப்துல் காதிர் குறிப்பிட்டார். அது எப்படி என்பது குழப்பமாக உள்ளது.
சுன்னத் ஜமாத் என்று சொல்லிக் கொள்பவர்கள் கந்தூரி எடுப்பார்கள்; ஷரீஅத் அதைத் தடுக்கும்.
சுன்னத் ஜமாத் என்று சொல்லிக் கொள்பவர்கள் வரதட்சனை வாங்குவர்; ஷரீஅத் அதைத் தடுக்கும்.
சுன்னத் ஜமாத் வட்டி, குடி, விபச்சாரம் போன்றவற்றைக் கண்டுகொள்ளாது; ஷரீஅத் அவற்றைக் குற்றங்களென தண்டிக்கும்.
இவை போன்ற பல முரண்கள் சுன்னத் ஜமாத்துக்கும் ஷரீஅத்துக்கும் இருக்கின்றன." -
குர் ஆண் ஹதீஸ் அடிப்படையில் அமைந்த தலைமை அதர்கு கட்டுப்பட்ட மக்கள் என்று அமைப்பு மாறாதவரை உயர்ந்த இலக்கினை அடைவது கடினம்தான்.
சகோ. இப்ராஹீம் அன்சாரி அவர்களின் ஆதங்கத்துக்கு சகோ. ஜமால் மற்றும் ஜஃபருல்லாஹ் ஆகியோர் பதில் அளித்துவிட்டனர். கல்வி விருது என்ற வித்தை விதைத்தவர்களில் அடியேனும் ஒருவன் என்பதால் என் தரப்பிலான விளக்கம்.
பொதுத்தேர்வில் நமதூரைச் சார்ந்த மாணவர்கள் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற முயல வேண்டும்; இதன் முன்னோட்டமாக நமது ஊரில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்குப் பரிசளித்து அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்று அதிரை எக்ஸ்பிரஸ் நிர்வாகிகளான நான், ஜஃபருல்லாஹ் மற்றும் ஜமாலுத்தீன் ஆகியோர் ஆலோசனைகளை மேற்கொண்டோம். பரிசுத்தொகையை நிர்வாகிகளே பகிர்ந்து கொள்வது என்பதுதான் அப்போதைய எங்களின் முடிவாக இருந்தது. இதனைத் தொடர்ந்து கல்வி விருது தொடர்பான அறிவிப்பு பதிவை அதிரை எக்ஸ்பிரஸில் இடம் பெறச் செய்தோம்.
அந்தப் பதிவில் பின்னூட்டம் இட்ட சகோ. அபுல் கலாம் காக்கா முதல் மாணவனுக்குரிய பரிசுத் தொகையைத் தருவதாக ஒப்புக் கொண்டார்கள். இது நடந்தது ஜனவரி மாதத்தில்.
பின்னர், விருது வழங்கும் நிகழ்ச்சியை எப்படி நடத்துவது என்று நிர்வாகிகளுக்குள் கலந்தாலோசிக்கும்போது, AEMன் கல்வி விழிப்புணர்வு மாநாட்டிலேயே விருதுகளை வழங்கலாம். இதன் மூலம் தேவையற்ற செலவுகளைக் குறைப்பதுடன் பரஸ்பர புரிந்துணர்வையும் வளர்க்கலாம் என்று நாங்கள் எண்ணினோம்.
ஆனால், தேர்வு முடிவுகள் வெளியாவதற்குள் கல்வி மாநாடு நடத்தப்பட்டுவிட்டது. விருது வழங்கும் நிகழ்ச்சியை நடத்துவதற்கு ஏதுவாக தன்னுடைய விடுப்பை அமைத்துக் கொண்டு தாயகம் சென்ற சகோ. ஜஃபருல்லாஹ்வின் விடுப்பு முடியும் நிலை. எனவே, அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் கூட்டத்தையே விருது வழங்கும் நிகழ்சிக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நாங்கள் முடிவு செய்து அறிவிப்பை வெளியிட்டோம். அதன் பிறகே கலாம் காக்கா 16ஆம் தேதி ஊர் வரும் தகவல் அறிய முடிந்தது. அறிவிப்பை வெளியிட்ட பின், நிகழ்ச்சியின் தேதியில் மாற்றம் செய்ய இயலாது. தவிர மாற்றம் செய்வதாக இருந்தால், சகோ. ஜாஃபர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இயலாது. மேலும் கூடுதல் செலவுகளும் ஆகியிருக்கக் கூடும்.
விருது நிகழ்ச்சியின் தேதி குறித்து கலாம் காக்காவிடம் முன்னரே கலந்தாலோசனை செய்யவில்லை என்பது தவறாக இருக்கலாம். ஆனால் இது நாங்கள் வேண்டுமென்றே செய்த தவறன்று.
கலாம் காக்கா உள்ளிட்ட யாரையும் காயப்படுத்துவதோ அல்லது புறக்கணிப்பதோ எங்கள் நோக்கமாக இருக்கவில்லை என்பதை அல்லாஹ் நன்கறிவான். கலாம் காக்காவும் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறோம். எனவே, இதனை இத்துடன் முடித்துக் கொள்வதே கல்வி விருதுக்கான முயற்சியில் தம்முடைய விடுப்பின் பெரும்பகுதியை செலவழித்த சகோ. ஜாஃபருக்கு ஆறுதலை அளிக்கும்.
கலாம் காக்கா என் விளக்கத்தை ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
இன்ஷா அல்லாஹ் அடுத்து வரும் ஆண்டுகளில் கல்வி விருது நிகழ்ச்சியை இன்னும் சிறப்பாகச் செயல்படுத்துவோம்.
AAMF- உடைய bylaws ஒரு DRAFT ஆகப போடப்பட்டு அதை பலதரப்பிலும் உள்ளவர்கள் அடங்கிய " துணை விதிகள் நிர்ணய குழு " அமைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளவேண்டும். உள்ளூரில் சகோ. ஜெமீல் அவர்கள் போன்ற நிர்வாக அனுபவம் பெற்றவர்கள் இருப்பதால் நிச்சயம் அவர்களும் அந்தக் குழுவில் இடம்பெறவேண்டும்.
ஊருக்குப் பொதுவான அம்சங்கள் மட்டுமல்ல- ஊரிலிருந்து களையப்படவேண்டிய-
கந்தூரி பிரச்னை-
பெண்களுக்கு வீடு கொடுப்பது -
தெருவிட்டு தெரு திருமணம் முடிக்க நிலவில் உள்ள எழுதப்படாத தடைகள்-
மாலை வேலைகளில் பட்டுக்கோட்டைக்கு செல்லும் நமது பெண்களுக்கு பாதுகாப்பான கட்டுப்பாடு மிக்க ஒரு போக்குவரத்து வசதி-
ஷிபா ஆஸ்பத்திரியின் வசதிகள் மேம்பாடு-
சுற்று சூழல் சுகாதார மேம்பாடு-
ஒரேநாளில் நிறைய திருமணங்கள் இருந்தால் உணவு விரயமாக்காமல் அனைவரும் ஒரு இடத்தில் கூடி ஊர் விருந்து வைத்து செலவைப்பங்கிடும் சமுதாயத்திருமணம்-
கட்டிடக்கூலி நிர்ணயம்
ஆட்டிறைச்சி உபயோககுறைப்பு-
பொதுவான கல்வி உதவி-
வட்டி இல்லாக்கடன்-
ஏழைக்குமர்களுக்கு குறைந்தபட்ச உதவி-
ஜப்பான் சுனாமி போன்ற இயற்கை பேரிடர்காரணமாக வாழ்வாதாரம் இழந்த NRI களின் மறுவாழ்வு-
நம்மிடையே ஏற்படும் சொத்து, மணவாழ்வு போன்ற பிரச்னைகளை காவல்துறை மற்றும் நீதித்துறையை நாடாமல் நமக்குள்ளே பேசி முடிப்பது
போன்ற பல பிரச்னைகளை தீர்க்கும் கருவியாக அமையும் வண்ணம் இந்த அமைப்பு உதவும் வண்ணம் துணை விதிகள் நிலைபெறவேண்டும் என்கிற கருத்துக்களை எனது ஆலோசனையாக சம்பந்தப்பட்டோருக்கு சமர்ப்பிக்கிறேன்.
OF COURSE ON THE BASIS OF LAWS OF SHARIA.
//கலாம் காக்கா உள்ளிட்ட யாரையும் காயப்படுத்துவதோ அல்லது புறக்கணிப்பதோ எங்கள் நோக்கமாக இருக்கவில்லை என்பதை அல்லாஹ் நன்கறிவான். கலாம் காக்காவும் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறோம். எனவே, இதனை இத்துடன் முடித்துக் கொள்வதே கல்வி விருதுக்கான முயற்சியில் தம்முடைய விடுப்பின் பெரும்பகுதியை செலவழித்த சகோ. ஜாஃபருக்கு ஆறுதலை அளிக்கும்.//
சகோதரர். அபூ சுஹைமா அவர்களே! ஒரு ஆதங்கம்- கேட்டேன்- ச்மபந்தப்பட்டவர்கள் பதில் தந்தார்கள். அவ்வளவுதான் .இனி வரும் வருடங்களில் நாம் அனைவரும் இணைந்து இன்னும் சிறப்பாக நடத்திட இறைவன் துணை நிற்பானாக.சகோ. ஜாபர் அவர்கள் நான் எழுதியதில் எதுவும் குறையாக எண்ணிட வேண்டாம் என அன்புடன் கோருகிறேன். உங்களின் எண்ணத்தை குறை சொல்லவில்லை. சூழ்நிலைகளை இதற்குமேல் விளக்கவும் வேண்டியதில்லை. அனைத்து நண்பர்களும் உங்களுக்கு இருக்கும் நெருக்கடியை அறிந்தவர்களே! வஸ்ஸலாம்.
1) Plastic Bag ஒழிப்பு பற்றி பேரூராட்சி தலைவரின்வேண்டுகோளுகிணங்க பெரிய ஜும்மா பள்ளியில் பேச அனுமதி வேண்டி AAMF’ல் இருந்து அளிக்கப்பட்டகோரிகை மனு (அனுமதி) மறுப்புக்கப்பட்டது.
2) மீலாதி நபி விழாவில் K.K. Haja அவா்கள் AAMF தலைவா் முன்னிலையில்பேரூராட்சி தலைவரை தரம்தாழ்த்தி பேசியது.
3) கந்தூரி விழாவில் இருஇஸ்லாமிய சகோதரர்கள் அடித்து கொண்டனா். ஒருவா் மற்ற முஹல்லாவை சேர்ந்தவா், ஒருவா்AAMF தலைவா் முஹல்லாவை சேர்ந்தவா்.
மேலே குறிப்பிட்டமூன்று சம்பவங்களும் aamf தலைவர் சம்மந்தப்பட்ட முஹல்லாவிற்கு உட்பட்ட நிகழ்வாக இருப்பதாலும்இன்று வரைது சம்மந்தமாக இது வரை எந்தவித தகுந்த காரணங்களை வெளியிடாமலும், நியாயமன நடவடிக்கைஎடுக்காமல் இருப்பதாலும் அனைவருக்கும் மிகுந்த மனவருத்தத்தையும், AAMF சந்தேகத்தையும்எற்படுத்தி உள்ளது.
எனவே ஊா் நலன் கருதிஇனக்கமான தலைவரை தோ்ந்தெடுக்கப்பட வேண்டும்.
இப்படிக்கு,
Rosekhan
Email Id:rosekhanus@gmail.com
சகோதரர் சேகன்னா M. நிஜாம் அவர்களின் பணி மேன்மேலும் வளர்ந்து,சமுதாயத்திற்க்கு பல உன்னத சேவைகளை ஆற்றிட அல்லாஹ்விடம் துவாச்செய்கின்றேன்......வாழ்துக்கள் நண்பரே
சகோ நிஜாமுக்கும் மேலும் தேர்வில் பரிசு பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் மற்றும் துஆவும்...
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஊரில் எல்லோரும் ஒற்றுமையுடன் ஏதோ ஒரு தெருவில் ஒரு சிறப்பு நிகழ்ச்சி நடத்தி அதன் மூலம் எவரேனும் ஊக்கமும், பயனும் அடைவார்களேயானால் சந்தோசமான நிகழ்வே. மூத்த சகோ. இபுறாஹிம் அன்சாரி காக்கா சுட்டிக்காட்டியது போல் தவறுகள் ஏதேனும் நடந்திருப்பின் வரும் வருடங்களில் சரி செய்து இன்னும் சிறப்புடன் இது போன்ற விழாக்கள் நடந்தேறிட வல்ல ரப்புல் ஆலமீனிடம் து'ஆச்செய்கின்றேன்.
சகோ. சேக்கன்னா நிஜாம் அவர்களுக்கும், இதில் கலந்து கொண்ட சான்றோர்கள், அறிஞர்கள், ஊர்ப்பெரியவர்கள், தலைவர்கள், சமுதாய அக்கறைகொண்ட அனைத்து நல்லுள்ளங்களுக்கும், இதற்கு சிறப்பான ஏற்பாடு செய்திருந்த பிலால் நகர் முஹல்லாவாசிகளுக்கும், எங்கிருந்தாலும் இதனை உற்சாகப்படுத்தும் நம் அனைவர்களுக்கும் அல்லாஹ் நல்லருள் புரிவானாகவும்....ஆமீன்.
நானும் தம்பி ஷஃபாத் போல் தேடினேன் கடைசி வரை காண இயலவில்லை சகோ. சேக்கன்னா நிஜாமின் புகைப்படத்தை....
ஊரிலிருந்தால் புகைப்படங்கள் பெரிதாக தெரிவதில்லை. உலகின் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் பொழுது நமதூர் கடைத்தெரு மீன் வியாபாரியின் புகைப்படத்தை இணையத்தில் பார்த்தால் கூட மனது சாந்தியடைந்து கொள்கிறது என்னவோ உண்மை தாங்க......
"நானும் தம்பி ஷஃபாத் போல் தேடினேன் கடைசி வரை காண இயலவில்லை சகோ. சேக்கன்னா நிஜாமின் புகைப்படத்தை...." - MSM
- முதல் படத்தில், நூலை வழங்குபவர்.
- இரண்டாவதில், வலப் பக்கக் கோடியில்.
- ஆறாவதில் அரைவாசி.
- எழாவதில் தம்பி ஜமீலுக்கு முன்னால் நிற்பவர்.
- கடைசிப் படத்தில் மூக்கைப் பிடிப்பவர்....!
- முதல் படத்தில், நூலை வழங்குபவர். 'காசு ஒண்ணுமில்லை; சும்மா பிடிங்க.'
- இரண்டாவதில், வலப் பக்கக் கோடியில். 'பக்கத்தைப் புரட்டுகின்றாரா? படிக்கிறாரா?'
- ஆறாவதில் அரைவாசி. 'ஏட்டுப் படிப்பில் வென்றவர்களை என் வீட்டு மாடியில் காண மகிழ்ச்சி.'
- எழாவதில் தம்பி ஜமீலுக்கு முன்னால் நிற்பவர். 'விழிப்புணர்வு வித்தகர்' என்று பாரட்டுகின்றீர்களே, அது நாந்தாங்கோ.
- கடைசிப் படத்தில் மூக்கைப் பிடிப்பவர்....! கூட்டத்துக்கு வந்தவர்கள் யாராவது......விட்டார்களோ?
சகோ நிஜாமின் முயற்சி பாராட்டுக்குரியது ,நிஜாமின் எழுத்து நமெக்கெல்லாம் பரிச்சயமாகி விட்டாலும் அவரின் முகம் இன்னும் பரிச்சயம் ஆகவில்லை அவர் அங்கே நிற்கின்றார் இங்கே நிற்கின்றார் என்றாலும் அவரின் தெளிவான புகை படத்தை இதுவரை காண முடியவில்லை!
Post a Comment