போடுங்க பெட்ரோலை... தனியுங்கள் உங்கள் தாகத்தை - இலவசம்...!
அப்புடி என்னத்த தலைப்புல தப்பா சொல்லிபுட்டேன்! உண்மையதானே சொன்னேன்.. "
இந்தா முதல்ல தண்ணீரையோ, குளிர்பானத்தையோ குடி. இல்லாட்டி கோபத்துல வேர்த்து விறுவிறுத்து போகிருக்கின்ற முகத்தை டிஸ்ஸுல துடச்சிக்கோ".
எதுவா இருந்தாலும் கீழே உள்ள படத்தை பார்த்துபுட்டு பேசு.. அப்புறம் தெரியும் நீ யார் மேல கோபப்படனும்னு.
10 ரியாலுக்கு எரிபொருள் எண்ணெய் (Petrol/Diesel) போட்டால் 1 லிட்டர் தண்ணீர் புட்டியோ (பாட்டில்), குளிர்பானமோ அல்லது டிஸ்ஸு பெட்டியோ இலவசம் என்று சாலையோரமா ஒரு பலகை பல்லை இளித்துக்கொண்டு சாய்ந்து நின்றது.அதை அந்த எரிபொருள் எண்ணெய் உரிமையாளருக்கு தெரியாம கப்சுப்னு புகைப்படம் எடுத்தாச்சு..
அதாவது இந்திய நாணய மதிப்புப்படி 2 லிட்டர் (150 ருபாய்) அளவு எரிபொருள் எண்ணெய் போட்டால் 1 1/2 லிட்டர் தண்ணீர் இலவசமாம்.
இதைவைத்து இங்கு தண்ணீர் மலிவுன்னு நினைத்துவிடாதீர்கள்...
1/2 லிட்டர் தண்ணீர் - 1 ரியால்
1 லிட்டர் எரிபொருள் எண்ணெய் - 1/2 ரியால்
இந்தியா எரிபொருள் எண்ணெய்யின் (மூன்றாம் தரம்) விலை = 75.40 ரூபாய் / லிட்டர்.
சவூதியில் எரிபொருள் எண்ணெய்யின் (இரண்டாம் தரம்) விலை = 7.00ரூபாய் / லிட்டர் .
சவூதி அரேபியா, ஈரான் போன்ற எரிபொருள் எண்ணெய் வளமிக்க நாடுகளிடமெல்லாம் கொஞ்சம் கொஞ்சிப்பேசாமல், அறிவாளி ஆட்களையெல்லாம் அள்ளிக்கொண்டு சென்றுக்கொண்டிருக்கும் அமெரிக்காவிடம் மண்டியிட்டு கெஞ்சிக் கொண்டிருக்கும் இந்திய அரசாங்கம் இருக்கும்வரை பெட்ரோலிய விலையில் சதம்காணாமல் விடப்போவதில்லை என்று வருங்காலம் பிரகாசமாய் தெரிகின்றது.. மொத்தத்தில் இந்தியா அரசுக்கு தன் நாட்டு மனிதவளத்தையும் சரிவர உபயோகிப்பதில்லை, பிற நாடுகளையும் சரிவர உபயோகித்துக் கொள்வதில்லை.
இங்கு மின்சாரமும் மலிவுங்கிற தெனாவெட்டுல தினமும் கல்யாணக்காரவீட்டு தோரணம் மாதிரி எண்ணெய் நிறுவனத்தை சோடிச்சி வச்சிருக்கானுங்க பாருங்களேன்.
ஹும்ம்..இதை சொன்னா நம்மள போடா வெண்ணைன்னு சொல்றாங்க..
பின் குறிப்பு:
ஜம் ஜம் தண்ணீர் 5 லிட்டரு இலவசமா சில விமானத்துல ஏற்ற அனுமதிக்கின்றதுபோல் பெட்ரோலை விடமாட்டார்கலாவென்று சிலபேர் ரூம்போட்டு யோசித்துக் கொண்டும் ஆசையாய் இருக்கத்தான் செய்கிறார்கள் நம் ஆசிய பெருமக்கள்.ஹ்ம்ம்..
அன்புடன்,
மீராஷாஹ் ரஃபியா
5 Responses So Far:
தாகம் தீர்க்க போயிட்டாங்களோ ?
அங்கே ஒரு விளம்பரப் பலகை ஏற்படுத்திய வித்தியாசமான சிந்தனை மட்டுமல்ல நல்ல ஒப்பீடு இது எல்லோருக்கும் சட்டென்று உதிப்பதில்லை !
வாழ்த்துக்கள் MSM(r)
எனக்கு ரொம்ப பிடித்தது.... 'ரப்பர்' ஸ்டாம்ப் ! Slogan for India's foreign policy ! :)))))
m.nainathambi.அபுஇபுறாஹிம் சொன்னது…
எனக்கு ரொம்ப பிடித்தது.... 'ரப்பர்' ஸ்டாம்ப் ! Slogan for India's foreign policy ! :)
இந்திய நாணயத்திற்கான இலட்சினை செய்வதுற்கு இந்தியா முழுவதும் போட்டி வைத்தார்கள். அதுபோல் 'வாசகம்' அமைக்க போட்டி வைத்தால் இதை அனுப்பலாம் போல..நிறைய ஓட்டு கிடைக்கும்..
பலே.....! பலே..........!!
சிந்திக்கக்கூடியப் பதிவு
எங்கே ஈந்திங்க இவ்வளவு நாளா ? தொடருங்கள்............இது போன்ற
சிந்தனையை தூண்டுகின்ற பதிவுகளாக...............
இறக்குமதியாளருக்கான கமிஷன் - 1 %
இறக்குமதி வரி – 4 %
கலால் அல்லது உற்பத்தி வரி – 32 %
விற்பனை வரி – 17 %
இப்படி மத்திய, மாநில அரசுகள் கூடுதலாக வசூல் செய்கின்ற வரிகளாலும் பெட்ரோலின் விலை உயர்ந்து காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
உங்க நாட்ல பெட்ரோல் ஏற்கனவே ச்சீப்பு. இதுல இலவசம் வேறயா?
எஞ்சாய் தம்பி.
(ஹோம் மினிஸ்ட்ரி பெர்மிஷன் தந்தாச்சு போல, எழுதறதுக்கு? :))
sabeer.abushahruk சொன்னது…
(ஹோம் மினிஸ்ட்ரி பெர்மிஷன் தந்தாச்சு போல, எழுதறதுக்கு? :))
ss..
Post a Comment