Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கந்தூரி மாயை..... 25

அதிரைநிருபர் | June 04, 2012 | , , , ,

என்னிட முள்ளதொரு கேள்வி – என்
இனத் தவரிடம் கேட்க
முன்பென்று மில்லாத குரோதம் – உன்
உடன் பிறந்தோரிடம் எதற்கு?


அடங்கிய வருக்கேன் ஆராதனை – குழி
முடங்கியவருக்கா முழு அர்ச்சனை
கையில் நெய்யெனக் காப்பவனிருக்க –பொய்
கபுர்தனை வணங்குத லறிவா?


ஈடு இணையற்ற இறையை – எது
ஈருலக வாழ்விலும் விஞ்சும்
ஈனச் செயலாம் கந்தூரி – ஒரு
ஈமான் முறிக்கும் இழிவே


ஊர்வலம் என்றொரு ரனகளம் – நம்
ஊர்ச் சனங்களுக்கே கேவலம்
கொடியேற்றி மகிழும் யார்க்கும் – தம்
குடிகெட்டுப் போவது உறுதி


தோளோடு தோளாகத் தொழுது – நல்
விணையாம் நோன்பினை நோற்று
கணக்காக ஸகாத்தும் கொடுத்து – பின்
கபுர்தனில் கவிழ்தல் சரியா


கலைக் கூத்தாடி கணக்காய் – உன்
களியாட்டம் குமட்டும் குடலை
கண்டெந்தன் கண்கள் கலங்கும் – இக்
கவலையில் நெஞ்சமும் வலிக்கும்


போனது போகட்டும் தோழா – புது
பாதையைப் படைப்போம் நாமே
கந்தூரி கனவினி வேண்டாம் – நம்
சொந்தவூர் ரெண்டுபட வேண்டாம்


அவுலியாவிடம் உன் வேண்டுதல் – அது
முகவரி தவறிய கடிதமே
தீர்வுகள் வேண்டிய இறைஞ்சலை- நீ
தீர்ப்பவன் இடமே கேட்கவும்


இறுதிச் சடங்கென நேற்று – நாம்
உறுதியாய் முடிந்ததெனக் கொள்வோம்
கந்தூரி மாயையை வீழ்த்தி – புது
கலாச்சார மாற்றம் கொணர்வோம்


அல்லாஹ்வை மட்டுமே தொழுவோம் – அவன்
வல்லமை கொண்டே எழுவோம்
தர்கா கலாச்சாரம் ஒழிப்போம் – புது
தலைமுறை செழிக்க உழைப்போம்.


- சபீர்



காணொளி -- அதிரைநிருபர் குழு

25 Responses So Far:

ZAKIR HUSSAIN said...

Video...not clear. not serving the purpose.

சபீரின் கவிதையின் தாக்கமும் உண்மையும் கந்தூரி பார்ட்டிகள் உணர்ந்தால் சரி.

சேக்கனா M. நிஜாம் said...

கவிநேசரின் விழிப்புணர்வு கவிதை !

எளிய வடிவில் உள்ளதால்............துண்டு பிரசுரமாக வெளியிட ஏற்பாடு செய்யலாம். இவை அனைத்து ஊர்களுக்கும் பொருந்தக்கூடியதே !

Unknown said...

மரபுப் பாவின் பக்கம் கொஞ்சம் எட்டிப் பார்க்கிறீர்களே....!
வருக! வாழ்க!

Noor Mohamed said...

மார்க்கம் என்றால் என்னவென அறியா இம்மக்களுக்கு அறிவொளி புகட்டி, அதாவது நன்மையை ஏவி தீமையை தடுத்து நல்வழிப் படுத்த இன்ஷா அல்லாஹ் முயற்சிப்போம்! வெற்றி பெறுவோம்!!

ஆனால்! அதேநேரத்தில், கண்ணியமிக்க சகாப்பா பெருமக்களையே குற்றம் கூறி குறைகாணும் இந்த நவீன காலத்தில், அவுலியாக்கள் என்ற பெயரால் நடைபெறும் அனாச்சாரங்களை அழிப்பதற்கு தீர்வுகள் கிடைக்குமா?

சிந்திப்போம்! செயல்படுவோம்!!

இப்னு அப்துல் ரஜாக் said...

இஸ்லாமிய தீர்வை சொல்லும் கவிதை இது,
இஸ்லாம் விரும்பும் கவிதை இது
இது போல் பலப் பல காண
அவாவுடன் சேர்ந்த
துவாவுடன்
சகோ சபீர் அவர்களை
வாழ்த்தும்
அர அல

Ebrahim Ansari said...

ஆஹா! ஓஹோ! பேஷ்! பேஷ்! ரெம்ப நன்னா இருக்கு. ( கொஞ்ச நாளாய் சகவாச தோஷம்).

சுட்டிக்காட்டல்- சாட்டையடி- அறிவுரை - எச்சரிக்கை- தீர்வு.

கந்தூரி ஊர்வலத்தில் குதிரையை ஜோடித்துக் கொண்டுபோவதை குறிப்பிட்டு பேராசிரியர் தி .மு.அ.காதர் எழுதியது


" மிருகங்கள் கம்பீரமாகத்தான் நடக்கின்றன
மக்கள்தான் மந்தையாகிப் போனார்கள். "
===.
அல்லாஹ் இடம் காவல் தேடுவோம்.

Shameed said...

ஊரில் இரண்டு பார்ட்டிகள் ஒன்று கந்தூரி எடுக்கும் பார்ட்டி இன்னொன்று கந்தூரி எடுக்கா கூடாது என்ற பார்ட்டி .இவர்கள் இருவரின் அணுகுமுறையில் மாற்றம் கொண்டுவரவேண்டும் இல்லையென்றால் கந்தூரி ஊர்வலத்தில் உருப்படிகள் கூடிக்கொண்டே போகும்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//தோளோடு தோளாகத் தொழுது – நல்
விணையாம் நோன்பினை நோற்று
கணக்காக ஸகாத்தும் கொடுத்து – பின்
கபுர்தனில் கவிழ்தல் சரியா//

வரட்டு கவுரவத்திற்காக மட்டுமே இந்த கந்தூரி என்பது கந்தூரி கமிட்டியார்களுக்கும் ஊர் தலைகளுக்கும் நன்றாகவே தெரியும் மனசாட்சியிருந்தால்....

சகோ நிஜாம் சொல்லுவது போல் எளிய நடையில் இருப்பதால் துண்டு பிரசுரமாக வெளியிட ஏற்பாடு செய்யலாமே...

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//Shameed சொன்னது…
ஊரில் இரண்டு பார்ட்டிகள் ஒன்று கந்தூரி எடுக்கும் பார்ட்டி இன்னொன்று கந்தூரி எடுக்கா கூடாது என்ற பார்ட்டி .இவர்கள் இருவரின் அணுகுமுறையில் மாற்றம் கொண்டுவரவேண்டும் இல்லையென்றால் கந்தூரி ஊர்வலத்தில் உருப்படிகள் கூடிக்கொண்டே போகும்//

ஹமீத் காக்கா... கந்தூரி எடுக்கவேண்டும் என்கிற பார்ட்டிகள் இந்த வருடம் தங்கக்காசுகள் கொடுத்து மக்களை கூட்டி கூட்டுராவை முடித்துள்ளார்கள்...

Shameed said...

தாஜுதீன் சொன்னது…
//ஹமீத் காக்கா... கந்தூரி எடுக்கவேண்டும் என்கிற பார்ட்டிகள் இந்த வருடம் தங்கக்காசுகள் கொடுத்து மக்களை கூட்டி கூட்டுராவை முடித்துள்ளார்கள்//

முன்பெல்லாம் கந்தூரி பார்ட்டிகள் கந்தூரி எடுத்தது அவுலியாகளுக்கு ஆனால் இன்றைய கந்தூரி கந்தூரி எதிர்ப்பாளர்களை வெருபேத்தவே என்பது வெட்ட வெளிச்சம் இவர்களின் வறட்டு பிடிவாதத்தால் இவர்களின் பொருளாதாரம் வரண்டு போகும் என்பது மட்டும் உண்மை

Ebrahim Ansari said...

//சகோ நிஜாம் சொல்லுவது போல் எளிய நடையில் இருப்பதால் துண்டு பிரசுரமாக வெளியிட ஏற்பாடு செய்யலாமே...//

ஆமாம். செய்யவேண்டும். உடனே இன்றே.

அதிரை என்.ஷஃபாத் said...

தூக்குதல் உனது நோக்கமெனில்
தூக்குவாய் நல் சகோதரத்துவம்.

கூடுதூக்குதல் ஒழித்திடுவோம். அன்பை
கூடி தூக்குவோம் வாரீரோ.

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

// கலைக் கூத்தாடி கணக்காய் – உன்
களியாட்டம் குமட்டும் குடலை
கண்டெந்தன் கண்கள் கலங்கும் – இக்
கவலையில் நெஞ்சமும் வலிக்கும் //

தர்கா கூத்தாடிகளின் களியாட்டத்தை வெறுத்து இருந்த என் கண்கள் மாற்று மத காவடி ஆட்டத்தை இரண்டு நாட்கள் தொடர்ந்து பார்த்து குமட்டலோடு கண்கள் கலங்குது காக்கா. தர்கா கூத்தாடிகள் சிந்திப்பார்களா? நாம் எங்கே போய் கொண்டிருக்கிறோமென்று.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

கந்தூரி கலைந்திட இறுதிச்சங்கு!

இனி. ஷபர் காலத்தில் அறவே நடக்காமல் இருக்க
இந்த ஷபீர் காக்காவின் அருமைக் கவி தடைக் கல்லாய் இருக்கட்டும்.

crown said...

அவுலியாவிடம் உன் வேண்டுதல் – அது
முகவரி தவறிய கடிதமே
தீர்வுகள் வேண்டிய இறைஞ்சலை- நீ
தீர்ப்பவன் இடமே கேட்கவும்.
-----------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். தெளிவான மார்கத்தில் தெளிவில்லா பேதைகள். இவர்கள் போகும் பாதை நரகத்தின் பாதை! கொடி நாள் எனும் கொடிய நாள் கூத்தாட்டம் எல்லாம் எத்தனை நாளைக்கு? நாளை உன் கபுர்தனில் வெளிச்சம் தருமா நீ செய்திடும் இந்த கூத்தாட்டம்? அல்லாஹ்விடம் மன்னிப்பு தேடிக்கொள் சோதரா! இல்லையெனில் உன் வாழ்வெல்லாம் நிரந்தர சோதனைதான்.

crown said...

அல்லாஹ்வை மட்டுமே தொழுவோம் – அவன்
வல்லமை கொண்டே எழுவோம்
தர்கா கலாச்சாரம் ஒழிப்போம் – புது
தலைமுறை செழிக்க உழைப்போம்.
-----------------------------------------------------
ஆமீன், ஆமீன்,ஆமீன்.... நற்சிந்தனை, நல் போதனை! வழக்கம் போல் சமுதாயக்கவலை கவிஞரின் எழுத்தில்.

Yasir said...

ஆழ்ந்த சமுதாய விழிப்புணர்வு உள்ள கவிதை கவிக்காக்காவிடமிருந்து...சிந்தனை செய்யவேண்டும் இந்த மாயையில் சிக்குண்டு கிடக்கும் மாக்கள்

//ஈனச் செயலாம் கந்தூரி – ஒரு
ஈமான் முறிக்கும் இழிவே///

exactly....

தலைத்தனையன் said...

We need this. We need your slashes to thrash over the satanic awakening to push its nasty face and bury it deep into the trench.

Not every word but every letter you impressed here and every moment you spent on this are honored.

May Allaah bless you and I plead our so called satire singing brothers in this site to evolve your thoughts on this subject. And plead not to describe the form of Allah or to challenge to prove his existence or existential act.

Contribute your wisdom to educate the society please. May Allaah bless us all.

MOHAMED THAMEEM

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//அவுலியாவிடம் உன் வேண்டுதல் – அது
முகவரி தவறிய கடிதமே
தீர்வுகள் வேண்டிய இறைஞ்சலை- நீ
தீர்ப்பவன் இடமே கேட்கவும்//

முகவரி தவறிய கடிதங்கள் ஏராளம்....
நானும் மின்னஞ்சல் முகவரியாவது சரியாக கிடைக்குமா என்று தேடிக் கொண்டிருக்கிறேன்... சீக்கிரம் ஜங்க் மெயில் பாக்ஸை கிளியர் செய்யச் சொல்லலாமே என்று... !!!!!!!

எங்கேடா கவிக் காக்காவின் சாட்டை சுழலவில்லையே என்று நினைத்திருந்தேன் அதனாலென்ன....

கந்தூரி என்ற சாக்கடை நடந்தேறுவதை எதிர்த்தே அந்தப் பகுதியில் வசித்து வந்த கவிக் காக்கா சொல்லிவிட்டு வெளியேறியிருக்கிறார்கள் அந்த (சொந்த)இடத்தை விட்டு அப்படியே அவ்லியாக்கள் பெயரில் நடக்கும் அனாச்சாரங்களாலே வேறு இடம் கண்டெடுத்து வீடு கட்டி சென்றிருக்கிறார்கள் !

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//Video...not clear. not serving the purpose. //

காக்கா, அவய்ங்க நடத்தும் இந்த இரண்டு கூத்துக்களுக்கு இருக்கும் purposeபோல்தான் இருக்கிறது என்று சொல்ல வர்ரீங்களா !?

இது ஒரே நாளில் பாதை கடந்து சென்றபோது போதை பார்ட்டிங்க நடத்தும் கூட்டத்தில் நின்று கம்பு கட்டி வீடியோ எடுத்திருந்தால்... இவய்ங்களா அவய்ங்கன்னுள கச்சல் கட்டிகிட்டு கிளம்பியிருப்பாங்க...

அதான் காக்கா ஒரு நோட்டீஸ் செலவை மிச்சம் செய்தும் விட்டோம் !! :(

Yasir said...

//வசித்து வந்த கவிக் காக்கா சொல்லிவிட்டு வெளியேறியிருக்கிறார்கள்/// காக்கா...மூணாறு எப்படி இருந்தது.......பகிரலாமே :)

கவிக்காக்கா வீட்டை காலிபண்ணிவிட்டு போய்விட்டார்கள் எங்கெலுக்கெல்லாம் அந்த வசதி இல்லததால்...கவிக்காக்காவிடம் சொல்லி பொக்லைன் ஒன்று இறக்குமதி செய்து தர்ஹாவையே காலி பண்ணலாம் என்று இருக்கின்றோம்...எப்படி ஐடியா ??

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//மூணாறு எப்படி இருந்தது.......பகிரலாமே :)//

அதெல்லாம் முடியாதுன்னு சொன்னா விட்டுவிடுவீங்களாக்கும் !

("அட இவனுக்குமா இந்த வேலைன்னு யரோ முனுமுனுப்பது கேட்கிறது...) 'படிகட்டில்' உட்கார்ந்து படிச்ச அனுப்பவம் இருக்கிறதால அவங்க என்ன சொன்னாலும் என்னோட முடிவுல தெளிவா இருக்கேன் !

sabeer.abushahruk said...

ஒரு முழுமையான ஏற்புரை எழுதி நாளாகிறது. விடுமுறையில் கடும் சோலியாகிப்போனது இதுதான் முதல் முறை. நேரத்துடன் காரியங்கள் கொண்டு செய்யும் முற்றுகைகளில் நேரமே வெற்றியடைகிறது.

எனவே, வாசித்து கருத்திட்ட சகோதரர்களுக்கு என் நன்றியும் வாழ்த்துகளும் என்று இம்முறை முடித்துக் கொண்டாலும் சில குறிப்புகள் தருவது அவசியம்.

அஹ்மது காக்காவின் வரவேற்பிற்கும் வாழ்த்துக்கும் நன்றி. ஒரு ரிதமும் ட்டெம்போவுமாகவே இதை எழுத முனைந்தேன். அது மரபுப்பாவிற்கு அருகாமையில் வந்திருப்பதாக கண்டறிந்தது தங்களின் ஞானமேயன்றி என் திறமை என்று சொல்லிக்கொள்ள மனம் வரவில்லை. நன்றி காக்கா.

தர்ஹா கூத்தாடிகளைப் பற்றிய எல் எம் எஸ் மற்றும் ஷஃபாத்தின் குமுறல்கள் உணர்ச்சிபூர்வமாயிருந்தன.

அர அல வாழ்த்துமளவுக்கு கவிதை எழுதியது...ஐ மீன்...கவிதை எழுதியது அல்லாஹ்வின் அருளே. நன்றி அர அல.

தமீமின் ஆங்கில பின்னூட்டத்தில் தாய்மொழியால் மட்டுமே சொல்ல இயலக்கூடிய உணர்ச்சிபூர்வமான கவலை சொட்டுகூட குறையவில்லை.

க்ரவுனின் எச்சரிக்கை அர்த்தம் பொதிந்தது.

தம்பி சேக்கனாவின் பின்னூட்டத்தில்கூட சமூக சிந்தனை மற்றும் யதார்த்த கவலை.

வஸ்ஸலாம்.

sabeer.abushahruk said...

//
" மிருகங்கள் கம்பீரமாகத்தான் நடக்கின்றன
மக்கள்தான் மந்தையாகிப் போனார்கள். "//

நான் ரொம்ப ரசித்த மேற்கண்ட மேற்கோலைப் பகிர்ந்து கொண்ட இ.அன்சாரி காக்காவுக்கும் அவர்கள்தம் தோழர் அவர்களுக்கும் என் ஸ்பெஷல் தேங்க்ஸ்

இப்னு அப்துல் ரஜாக் said...

//அர அல வாழ்த்துமளவுக்கு கவிதை எழுதியது...ஐ மீன்...கவிதை எழுதியது அல்லாஹ்வின் அருளே. நன்றி அர அல.//

அன்புக்குரிய சகோ சபீர் அவர்களுக்கு,அல்லாஹ்வின் சாந்தியும்,சமாதானமும் நிலவட்டுமாக.

காக்கா,அந்த வாழ்த்துக்கள் என் உள்ளத்தில் இருந்து குதித்து வந்த வார்த்தைகள்.
தர்ஹா மாயையை செருப்பால் அடித்த மாதிரியான,அந்த செதுக்கப்பட்ட உங்கள் வார்த்தைகள்.கேடு கெட்ட அந்த மூட வழக்கம் மண் மூடி போக,உங்கள் பேனாவின் அருமை வரிகள்.மாஷா அல்லாஹ்.அது கவிதை,Yes,உன்னத கவிதை.மெய்யாகவே.

அடுத்து,அறிஞர் அஹமது சாச்சாவின் கவிதை பற்றிய ஆய்வின் மூலம் பல தெளிவுகள் பெற்றுள்ளேன்.இதற்காக அவர்களை நான் பாராட்டுவதோடு - அல்லாஹ்விடம் துவா செய்கிறேன்.
தெளிவு 1)இஸ்லாம் நல்ல கவிதையை அனுமதித்துள்ளது.உதாரணமாக ஏகத்துவம் போற்றி,அல்லது விளக்கி வரும் கவிதை
தெளிவு 2)இஸ்லாம் கெட்ட கவிதைகளை கண்டிக்கிறது,உதாரணமாக,ஷிர்க்கை ஆதரிப்பது,(தரீக்கா,தர்ஹா,வாப்பா நாயகம்????) இந்த கவிதைகள் கூடாது (நாத்திகம் சொல்லும் கவிதைகளையும் இந்தப் பட்டியலில் சேர்க்கலாம்).

இன்னும் விளக்கம் பெற,இன்ஷா அல்லாஹ் இன்னும் அவர்கள் எழுத வேண்டும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு