பிரதமர் பதவியிலிருந்து லோக்கல் பஞ்சாயத்து போர்டு தலைவர் பதவி வரைக்கும் அலசுவதில் நம்மவர்களுக்கு சொல்லவே வேண்டியதில்லை, அப்புறமென்ன இன்னும் ஒரே ஒரு பதவி மட்டும்தான் மீதி இருக்கு அதற்கு யாரை உட்காரவைக்கலாம் !?
டெல்லி அம்மையார் 'கை'காட்டிவிட்டார் ஒருவரை, தமிழக அம்மா சுட்டிக் காட்டுகிறார் மற்றொருவரை, பெங்கால் அம்மா சுத்தி சுத்தி ஒருவரையே காட்டுகிறார் !
தமிழக தாத்தாவோ தனது வார்த்தை ஜாலத்தால், பத்திரிகையாளர்கள் மத்தியில் 'கலகமே' உருவாக்கிவிட்டார், பின்னர் அது திசை திருப்பப் படுவதாகவும் சொல்லிவருகிறார் !
இதற்கிடையில் ஆளும்கட்சி எதைச் சொன்னாலும் எதிர்ப்பதற்கென்றே இருக்கும் எதிர்கட்சியோ மற்றொரு எதிராளியை தேடுகின்றனர் இன்னும் முடிவுக்குள் வந்ததாகவும் தெரியவில்லை.
சரி, இவர்கள் கெடக்கட்டும் நீங்க என்ன நினைக்கிறீங்க ? தகுதின்னு பேசினா எல்லோருக்குமே மைனஸ் மார்க்குகள் அதிகம் கொடுப்பீங்க அதிலே யாருங்க மிகக் குறைவான மைனஸ் மார்க்கோடு ஜெயிப்பாங்க ?
சலசலப்பு இல்லாம மேடையேறி உங்க கருத்தை சொல்லிட்டு போங்களேன் !
வாருங்கள் விவாதிக்கலாம்.
-அதிரைநிருபர்-குழு
21 Responses So Far:
ஆரம்ப காலங்களில் யார் துணை ஜனாதிபதியாக இருக்கிறார்களோ அவர்கள் தான் ஜனாதிபதி பதவிகாலம் முடிந்ததும் எவ்வித சலசலப்பும், தேவையற்ற விவாதங்களும், நேர விரயமும் இன்றி நேரடியாக ஜனாதிபதியாக்கப்பட்டு விடுவார். அதே நடைமுறையை இப்பொழுது கடைபிடித்து சிறுபான்மை இனத்துக்கு ஒரு மகுடம் சூட்டி மகிழ்வது போல் (இதில் மட்டுமாவது அந்த இனம் சந்தோசப்பட்டுக்கொள்ளட்டுமே என்றெண்ணி) தற்சமயம் துணை ஜனாதிபதியாக இருந்து வரும் ஜனாப் ஹமீத் அன்சாரி அவர்களை ஜனாதிபதி ஆக்குவதே நியாயமானதும், புத்திசாலித்தனமானதுமாகவும் இருக்கும்.
இந்த தொன்றுதொட்டு வரும் நடைமுறைகளை அண்மைக்காலங்களில் தகர்த்தெறிவதன் அவசியம் தான் என்ன? யார் ஜனாதிபதி ஆனாலும் மத்தியில் ஆளும் கட்சியின் சொல் கேட்டுத்தானே நடக்கப்போகிறார்கள்? வேறென்ன இதில் பெரும் யோசனையும், தேவையற்ற சலசலப்பும் வேண்டிக்கிடக்கிறது?
நம் நாட்டின் முதல் குடிமகனை தேர்ந்தெடுக்க நடக்கும் அக்கப்போரை பாருங்க, இதிலேர்ந்து தெரியுது அரசியல் தலைவர்களுக்கு நாட்டில் வேறு வேலை(?) இல்லை என்று..
ஜனாதிபதியின் மிக முக்கிய நிகழ்வுகளாவன
- ஜனவரி 26 அன்று கோட்டையில் கொடியேற்றுவது
- நாட்டிற்கு வரும் விருந்தாளிகளை (வெளிநாட்டு தலைவர்களை) விமானநிலையம் சென்று வரவேற்பது
- அவர்களுக்கு விருந்து உபசரிப்பு அளிப்பது
- போரடிச்சால் ஒவ்வொரு நாடுகளுக்கும் பயணிப்பது
குடியரசு தலைவர் என்றால் வெறும் “ரப்பர் ஸ்டாம்ப்” தான், எந்த அதிகாரமும் தன்னிச்சையாக எடுக்கமுடியாது என்ற சொல் அடித்தட்டு மக்கள் வரை வேறூன்றிவிட்டது. தனது கடந்த 5 வருட குடியரசு தலைவர் ஆட்சியில் தினமும் பத்திரிக்கையில் செய்தி வரும் அளவுக்கு அந்த “ரப்பர் ஸ்டாம்ப்” என்ற சொல்வழக்கை மாற்றி அறிவுப்பூர்வமாகவும், இளைஞர்களையும் மாணவர்களையும் “கனவு” காணும்படி ஏவியும், நாளை இந்தியா இளைஞர்களின் கையில் உள்ளது 2020ம் ஆண்டு இந்தியாவின் வல்லரசு கனவு நனவாகும் என்ற விதையை ஒவ்வொரு மக்களிடமும் விதைத்து அந்த கனவை நோக்கி காய்நகர்த்திய ஒரு தலைவர் (முதல் குடிமகன்) டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம். இவரை தவித்து குடியரசு தலைவர்கள் என்றால் “ரப்பர் ஸ்டாம்ப்” மட்டுமே என்று மீண்டும் மீண்டும் நிரூபிக்கும் விதமாக அரசியல் தலைவர்களும் கட்சிகளும் போராடுவது ஏன்....?
வெறும் “ரப்பர் ஸ்டாம்ப்’ மாதிரி அடக்கமாக இருந்தாலும், பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்துவைக்கும் அதிகாரம் உள்ளதோடு மட்டுமல்லாமல், ஐந்து ஆண்டு காலத்திற்கு மாத ஊதியமாக பெருந்தொகை, வசதியான வாழ்க்கை, சிம்லா, ஹைதராபாதில் அரண்மனை போன்ற சகல வசதிகளுடன் பங்களாக்கள், உல்லாச சுற்றுலா, தனி விமானப் பயணம், முப்படைகளின் தளபதி, நாட்டின் இறையாண்மையைக் காக்கும் பாதுகாவலர், முதல் குடிமகன் எனப் பல பெருமை வேறு !
இருந்தும், பிரதமர் மற்றும் அவரின் சகாக்கள் வழங்குகின்ற ஆலோசனையின் பேரில்தான் அவர் இயங்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி !
குறிப்பு : இதுவரையில் “வடக்கு”க்குத்தான் அதிகபட்சமாக இப்பதவிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. அதுவும் “அவா”ளுக்குத்தான் இருக்கும்
இந்திய ஜனாதிபதி என்றால் என்ன?
இந்தியா 1947 ல் விடுதலை பெற்றது. 1950 ல் குடியரசு என பிரகடனப் படுத்தப்பட்டது. இருப்பினும் இன்றுவரை பிரிட்டிஷ் பாராளுமன்ற முறையைத்தான் சில சிறிய மாறுதல்களுடன் நம் இந்திய ஆட்சி முறை தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகின்றன.
பிரிட்டிஷ் ஆட்சி முறையில் ராணி என்ற ஒரு பதவியுண்டு. அதற்கு பதிலாகவே இந்தியாவில் பல நவீன வசதிகளுடன் கூடிய பாதுகாப்புகள் நிறைந்த அதிகாரமற்ற காட்சிக்கு அரிதாகத் தோன்றும் அழகிய பொம்மை பதவிதான் இந்திய ஜனாதிபதி பதவி.
இந்த இந்திய ஜனாதிபதி பதவி மற்ற நாடுகளின் ஜனாதிபதி போன்று ஆட்சியில் அதிகாரம் கொண்ட பதவியல்ல.
அபுல் கலாம் ஜனாதிபதியாக தேர்ந்து எடுக்கப்பட்டால் மிகவும் நல்லது! ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்!
அபுல் கலாமை மீண்டும் குடியரசுத்தலைவராக்கவேண்டுமென்று நான்தான் முதன்முதலில் சிபாரிசு செய்தேன் - சுப்பிரமணியம் சுவாமி.
அபுல் கலாமை ஆதரிக்க பா.ஜ.பா.வில் பலர் ஆதரவு.
https://www.facebook.com/photo.php?fbid=163836090416376&set=a.103121836487802.3993.100003699577480&type=1&ref=nf
இப்படியெல்லாம் கலக்கமான செய்திகள் வந்து கலக்கிக்கொண்டு இருந்தபோது
பலரின் வேண்டுகோளை ஏற்று, ஆரிய சூழ்ச்சியை முறியடித்து, இந்திய ஜனாதிபதி போட்டியிலிருந்து விலகிக்கொண்ட நமது முன்னாள் ஜனாதிபதி திரு. அப்துல் கலாம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும்
ரப்பர் ஸ்டாம்ப் பதவிக்கு இத்தனை அக்கப்போரா?
என்ன கொடும ஸார்!
ஜனாதிபதி பதவிக்கு தகுதியானவர் அந்த அன்சாரி காக்கா,
பிரதமர் பதவிக்கு தகுதியானவர் இந்த இப்ராஹீம் அன்சாரி காக்கா !
குள்ளமான உயரமுடையவர் ஜனாதிபதியவது முதல் முறை என்று வேறு நேற்று புதிய தலைமுறை செய்தி சேனலில் விவாதித்தவய்ங்க பேசுனதை கேட்டதும், எப்படியெல்லம் யோசிக்கிறாய்ங்கன்னு புலம்பத்தான் முடிந்தது.,
APJ அப்துல் கலாம், முன்னரே மறுத்திருக்கலாம் இன்று அவர் மறுப்பதற்கு பதிலாக, அவரை வைத்து காமெடி செய்தவர்களுக்கு அடிதான்... சூழ்ச்சியிலிருந்து தப்பித்து விட்டார் என்பதே உண்மை ! இல்லையே... வலை பின்னப்பட்டு பதவியில் அமர்ந்ததும் அரங்கேற்றப்படும்...(அதில் கில்லாடிகள் தான் அவரை முன்மொழிகிறார்கள்).
முன்னல் ஜனாதிபதி ஆர்.கே.நாராயணன் போல் ஒவ்வொரு கோப்பிலும் அரசு கேட்டாலும் கேட்காவிட்டாலும் குறிப்பெழுதி அனுப்பும் ஜனாபதி வருவது கஷ்டம் தான் !
இன்று காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த இளங்கோவன் சொன்னதுதான் வேடிக்கை...
ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் பிரணாப் முகர்ஜியை அப்துல்கலாமுடன் ஒப்பிட முடியுமா?
ஏன் முடியாது.பிரணாப் முகர்ஜிக்கு ஜனாதிபதி பதவிக்கான அனைத்து தகுதிகளும் உள்ளது.அவர்தான் ஜனாதிபதிக்கு தகுதியான நபர்.அவரிடமும் திறமையும், நேர்மையும் உள்ளது.
பிரணாப் முகர்ஜி மீது அன்னா ஹசாரே குழுவினர் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளார்களே?
அதில் எள்ளளவும் உண்மை கிடையாது.அன்னாஹசாரே ஊழல் குற்றம் சுமத்தாத ஒரே ஆள் கடவுள் மட்டும்தான்.
மக்களால் அதிகம் நேசிக்கப்படும் அப்துல்கலாமை ஏன் காங்கிரஸ் நிராகரித்தது?
அப்துல்கலாம் 5 ஆண்டுகள் இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்து விட்டார்.அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் உள்ளது.எனவே இந்த தேர்தலில் அவர் போட்டியிட்டு பதவி ஆசை இருப்பதாக காட்டிக் கொண்டால் அப்துல்கலாம் மீதான அந்தஸ்து, மரியாதை போய்விடும்.
அதற்கு மாறாக அப்துல்கலாம் பிளாஸ்டிக்கினை நிரந்தரமாக ஒழிக்க மாற்றுப்பொருளை கண்டுபிடிக்க வேண்டும்.குதிரை பூட்டிய சாரட் வண்டியில் செல்ல இனிமேலும் ஆசைப்படக் கூடாது.
முன்னாள் முதல்வர்ர் கருணாநிதி அப்துல்கலாமை கலகம் என்று கூறியது சரியா?
கலைஞர் வார்த்தை விளையாட்டில் வல்லவர்.அதை நகைச்சுவை உணர்வுடன்தான் சொல்லி இருப்பார்.அதை பெரிய குறையாக எடுத்து விமர்சிப்பது தவறு.
முதலமைச்சர் ஜெயலலிதா ஜனாதிபதி பதவிக்கு சங்மாவை ஆதரிப்பதாக சொல்லி இருக்கிறாரே?
இது ஜெயலலிதாவின் தகுதிக்கு மீறியவிஷயம்.வேண்டுமானால் சங்மாவை ஜெயலலிதா தமிழகத்துக்கு அழைத்து வந்து ஏதோ ஒரு வாரியத்துக்கு தலைவர் ஆக்கலாம்.அதைவிட அந்தஸ்தான பதவிகொடுக்க விரும்பினால் யானைகளுக்கென தனியாக ஒரு வாரியம் அமைத்து அதற்கு சங்மாவை தலைவர் ஆக்கலாம்.அதுதான் ஜெயலலிதாவால் செய்ய முடியும்” என்றார்.
----
உயர் பதவிகளுக்கு மதசார்பற்ற தலைவர்கள் வருவதே நல்லது .ஏன் என்று சொன்னால் சட்டங்கள் உருவாக்கும் போது அதற்க்கு அங்கீகரிக்கும் உரிமை ஜனாதிபதிக்கு உரியது சில சமயங்களில் ஐந்து வருடங்களுக்கு முன்பே ஆட்சி மாற்றம் ஏற்படும் அந்த சந்தர்பத்தில் ஜனாதிபதிக்கு நல்ல அதிகாரம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் போன்ற அதிகாரம் சில சமயங்களில் தனிச்சையாக எடுக்க நேரிடும் ..நல்லவர்கள் ..நேர்மையானவர்கள் நீதிபதியாக வேண்டும் ..இந்து மத வெறியர்கள் ஆட்சியில் நியமிக்க பட்ட உச்ச நீதி மன்ற நீதி பதிகளின் நேர்மையற்ற தீர்ப்பு இன்று வரை தொடர்கிறது ..ஆந்திர மாநில அரசு. முஸ்லீம்களுக்கு இட ஒதுகீட்டில் மூன்று சதவிகிதம் உள்ஒதுகீடாக வேலை வாய்ப்பு .படிப்பு மற்றும் இதர வசதிகள் செய்தது ..எவனோ ஒரு பாசிச எண்ணம் கொண்ட இந்து வெறியனின் உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதில் முஸ்லீம் களுக்கு எதிரான தீர்ப்பு ,அதே போன்று ஹஜ் மானியம் தொடர்பான வழக்கில் முஸ்லீம் களுக்கு எதிரான தீர்ப்பு ..எனவே ஜனாதி பதி பதவி ரப்பர் ஸ்டாம்ப் பதவி என்றாலும் சில சமயங்களில் மிகவும் முக்கியத்வம் வாய்ந்தது . மற்றவர்களை விட முஸ்லீம்களின் வாகுகளை எதிர் பார்க்கும் காங்கிரஸ் காரர் ஜனாதி பதியாக வந்தால் நல்லது ..
மற்றொரு விஷயம் ரொம்ப காலமாக தேர்தல் கமிசன் என்றால் ஏதோ அரசு ஊழியர் என்பதை போல் இருந்தது ..சேஷன்என்ற பாலகாட்டு ஐயர் அந்த பொறுப்புக்கு வந்து அரசியல் வாதிகளை கண்ணில் விரலை விட்டு ஆட்டினார் அதன் தாக்கம் இன்று வரை தொடர் கிறது அது போல நல்ல திறமை சாலி ஜனாதிபதியாக வந்தால் ரப்பர் ஸ்டாம்ப் என்ற அவப்பெயர் நீங்கும் ..பிரணாப் முகர்ஜி ,,ஜனாதி பதியாக வந்தால் நல்லது என்பதே என் கருத்து...
கட்சி கொரடா கட்டுப்பாடு இல்லாத இந்த தேர்தல் மூலம் சில முக்கிய கட்சிகள் உடையும்.
பெரும்பான்மையாக எதிர்பார்த்தவர் நிச்சயம் வெற்றி பெற மாட்டார்.
யாராக இருந்தாலும் அவர் இஸ்லாம் போற்றும் ஜனாதிபதியாக, நாளை இஸ்லாத்தை தழுவும் முதல் ஜனாதிபதியாக வர துஆ செய்வோம். இன்சா அல்லாஹ்.
>>>>>>அன்னாஹசாரே ஊழல் குற்றம் சுமத்தாத ஒரே ஆள் கடவுள் மட்டும்தான்<<<<<
பிள்ளையார்மேல் பெரிய ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. குற்றம் சுமத்தியது இன்னொரு கடவுளான முருகன். அபகரித்தப் பொருள் ஞானப்பழம். கையாண்ட முறை அப்பட்டமான ஊழல். உடன் போனவர் சிவபெருமான். கண்டுகொள்ளாமல் இருந்தவர் சக்திதேவி. இது நடந்தது தேவ லோகத்தில்.
அன்புடன் புகாரி
அஸ்ஸலாமுஅலைக்கும்.
பிரனாப் முகர்ஜி நல்ல முதிர்சியானவர் என்றாலும். கலாம் கலகம் இல்லாதவர் என்றாலும் இந்த "ரப்பர்ஸ்டாம்புகள்" ஏதும் தனித்து "முத்திரை" பதிக்கப்போவதில்லை. முத்திரை பதிக்கும் ரப்பர்ஸ்டாம்புகள் என்றாலும் இவர்கள் ஆட்சியாளரின் "கை"யில் உள்ள ரப்பர்ஸ்டாம்பு. விலாசம் தெளிவாக இருக்கும் கடிதம் என்றாலும் அரசியல் கழுதை வாயில் உள்ள கடுதாசி இவர்கள்.
தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள். ஜனாதிபதி ஆனாலும்
பனாதிபதிகளின் கைபாவை இவர்கள்.
மூத்த குடிமகன் என்றாலும் கடைக்குடிமகனின் அளவிற்கு சமமாய் சுயமரியாதைகூட பெறமுடியாதவர்கள்.
//பிரனாப் முகர்ஜி நல்ல முதிர்சியானவர் என்றாலும். கலாம் கலகம் இல்லாதவர் என்றாலும் இந்த "ரப்பர்ஸ்டாம்புகள்" ஏதும் தனித்து "முத்திரை" பதிக்கப்போவதில்லை. முத்திரை பதிக்கும் ரப்பர்ஸ்டாம்புகள் என்றாலும் இவர்கள் ஆட்சியாளரின் "கை"யில் உள்ள ரப்பர்ஸ்டாம்பு. விலாசம் தெளிவாக இருக்கும் கடிதம் என்றாலும் அரசியல் கழுதை வாயில் உள்ள கடுதாசி இவர்கள்.
தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள். ஜனாதிபதி ஆனாலும்
பனாதிபதிகளின் கைபாவை இவர்கள்.
மூத்த குடிமகன் என்றாலும் கடைக்குடிமகனின் அளவிற்கு சமமாய் சுயமரியாதைகூட பெறமுடியாதவர்கள். //
COMMENT OF THE DAY. WONDERFUL!
ஜனாதிபதி பதவி ஒரு உயர்ந்த பதவி ஜனாப் அபுல்கலாம் அவர்கள் ஜனாதிபதியாக இருந்தபோது ...சுவிஸ் விஜயத்தின்போது அந்நாடு பொதுவிடுமுறை அறிவித்து ,இவர் வருகையால் எங்க நாட்டிற்க்கு மேலும் பெருமை என்று ...புகழ்ந்தது .நாம் சில நேரங்களில் வெளிநாட்டினரிடமும் ரொம்ப பெருமையாகவும் சொல்லிக்கொள்வோம். முஸ்லிம் என்ற ஒரு பெருமையாகவும் இருந்தது. ஆனால், சங்கராச்சாரி காலில் விழுந்ததை கண்டவுடன்தான்.........அவுச்சும் பச்சையாச்சே.....என்றாகிப்போனது.
ஜனாதிபதி பதவிக்கு வருகிறவர்கள் ஒரு ஆக்டிவ் பார்ட்டியாக இருந்தால் தேவலாம்.என்பது என் கருத்து.
குடியரசுத் தலைவர் தேர்தல் வந்தாலும் வந்தது. அப்துல் கலாமின் பெயரால் கலகம் விளைவித்து சிலபேர் சுய ஆதாயம் அடைந்து விட்டார்கள். அதற்கு ஆதரவாக வரிந்து கட்டிக் கொண்டு கொஞ்சம் முஸ்லிம்களும் "எவ்வளவு முடியுமோ" அவ்வளவு தூரம் அவர்மீது அவதூறு செய்திகளை பரப்பி விட்டார்கள். குறிப்பாக...."அவர் முஸ்லிம் இல்லை....சாமியார் காலில் விழுந்து கிடக்கு காபிர்" "பி.ஜே.பி.யின் கையாள்... நரேந்திர மோடியின் அடியாள்....முஸ்லிம்களை இந்தியாவில் ஒரேயடியாக ஒழித்துக் கட்ட ஆர்.எஸ்.எஸ். கொண்டு வரும் முஸ்லிம் முகமூடி ஆயுதம்" என்றெல்லாம் எழுதி தள்ளிவிட்டார்கள். பாவம் கலாம்.... இதற்கெல்லாம் பதில் சொல்லும் நேரம் அவருக்கில்லாமல் போய்விட்டது.
தாங்கள் சார்ந்த கழகத்தின் தலைவருக்கு ஆதரவாக.... அவர்மீது தூசுகூட பட்டுவிடக்கூடாது என்ற ஆவேசத்தில் "முஸ்லிம் பெயர் தாங்கிய" ஒரு பெரிய மனிதரை "அல்லாஹ்வால் I .S .I . முத்திரை குத்தப்பட்ட ஒரிஜினல் முஸ்லிம்கள்" போட்டுத் தாக்கிய கொடுமை இருக்கிறதே....சுப்ஹானல்லாஹ் ....இனி ஒரு முஸ்லிமுக்கு இது போன்றதொரு கொடுமை நிகழக் கூடாது.
மற்றவர்களை குறை சொல்ல விரும்பவில்லை.... என்னையே எடுத்துக் கொள்ளுங்கள். நான் நல்ல முஸ்லிமா கெட்ட முஸ்லிமா எனக்குத் தெரியாது.நான் நரக வாதியா சொர்க்கவாதியா....அல்லாஹ்வைத் தவிர யாருக்கும் தெரியாது. என்னிடம் இறை நம்பிக்கை..இறை அச்சம் எவ்வளவு இருக்கிறது என்பதும் எனக்குத் தெரியாது. இத்தனை "தெரியாதுகளை" என்னிடம் நான் வைத்துக் கொண்டு அடுத்தவரைப் பற்றித் "தெரியும்" என்று நான் சொன்னால் என்னைவிட "அநியாயக்காரன்" யாராவது உண்டா?
கலாம் என்மனசாட்சிப்படி நல்லவர். பதவிக்காக கட்சி நடத்தும் அரசியல்வாதியில்லை. ஊழல் வாதியில்லை. குடும்ப அரசியல் இல்லை. அவர் குடும்பத்தை தன் பதவியால் முன்னுக்கு கொண்டு வரவில்லை. அவர் அறிஞர். அறிஞர் என்றும் தன்னை அவர் கூறிக் கொண்டதில்லை. அவர் ஒரு மக்கள் ஜனாதிபதியாக இருந்தார். மக்களை மதித்தார். மக்களுக்காக குரல்கொடுத்தார். தான் வகித்த பதவிக்கு தன் தகுதியால் பெருமை சேர்த்தார். இரு
சூட்கேசுகளோடு ராஷ்டிரபதி பவனில் நுழைந்து இரு சூட்கேசுகளோடு வெளியேறியவர் கலாம்.ஒன்றில் துணிமணி..மற்றொன்றில் புத்தகங்கள்.
அவர் முஸ்லிமாக இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? அவர் என்ன.... சஊதி அரேபியா ஜனாதிபதியாகவா போட்டி போடுகிறார்? சரி...இருக்கட்டும்...பிரணாப் முகர்ஜி முஸ்லிமா? பிரணாப் இருக்கும் இடத்தில் கலாம் இருந்தால் உங்களுக்கு என்னய்யா குறைந்துவிடப் போகிறது?>அவர் முச்ளிமில்லைஎன்று ஒரு முஸ்லிமே சொல்லலாமா? இது வரம்பு மீறிய சொல்லாடல் இல்லையா? பகுத்தறிவுப் பகலவனாக வாழ்ந்த தங்கள் தலைவனின் லட்சணம் எப்படி? தெரியாதவர்கள் படத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
கலாம் வேண்டாம் என்றே வைத்துக் கொள்வோம்... இந்த பரிசுத்த முஸ்லிம் கழகத்தவர்கள் ஹமீது அன்சாரி என்ற ஒரு முஸ்லிம் இருக்கிறாரே? அவரையாவது ஜனாதிபதியாக்க தங்கள் தங்கத் தலைவர் குரல் கொடுக்கவேண்டும் என்று சொல்லக் கூடாதா? கூட்டணியில் இருந்தாலும் தன் கருத்தை மம்தா சொல்லவில்லையா? பேச்சுரிமை கூட இல்லாத காங்கிரசின் கொத்தடிமைகளா இந்த கழகத்து " தமிழ் மகன்"கள்?
மற்றொரு குற்றச் சாட்டு....குஜராத் கலவரத்தை அவர் கண்டு கொள்ளவில்லையென்று....குஜராத் கலவரம் நடந்தது 2002 பெப்ருவரியில். ஜூலை 24 ..2002 வரை ஜனாதிபதியாக இருந்தவர் கே.ஆர்.நாராயணன். இப்படி
கண்ணை மூடிக்கொண்டு கலாமைத் தாக்கி தங்கள் தலைவரை சந்தோசப் படுத்தி இவர்கள் தங்கள் விசுவாசத்தை காட்டிக் கொள்வதை நினைத்தால்
சிரிப்பாகத்தான் இருக்கிறது.....இவர்களும் தங்களை முஸ்லிம் என்று சொல்வதைப் பார்த்து.
( நமது நண்பர் அபூ ஹஷிமா அவர்கள் எழுதியது.)
எனக்கும் மேடை ஏறி மைக் பிடித்து பேச ஆசைதான் ஆனா மேடை ஏறினா பேச வராது. அப்போ ஊமையான்னு யாரோ நைஜீரியாவில் இருந்து கத்துவது காதுல உழுவுது
எனக்கு தெரிந்து ஜனாதிபதியா வர்ற ஆளுக எல்லாம் வீடு போ போன்னும் காடு வா வான்னும் சொல்லுற மாதிரி ஆட்கள்தான் இருக்காக இத்தனை கோடி மக்கள் இருந்தும் ஒரு நாற்ப்பது வயசுக்குள்ள ஒரு ஜனாதிபதி கிடைக்கவில்லை என்றால் இதுவே ஒரு மிக பெரிய கேவலம்
..குஜராத் கலவரம் நடந்தது 2002 பெப்ருவரியில். ஜூலை 24 ..2002 வரை ஜனாதிபதியாக இருந்தவர் கே.ஆர்.நாராயணன்.
-------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். கே.ஆர். நாராயணனின் அண்ணன் கேரளாவின் ஆர்.ஸ்.ஸ் அமைப்பு செயலாளராக இருந்தவ(ர்)ன்.
Post a Comment