கொசு(றுச்) செய்தியானாலும் இது உசுரு மேட்டரு !

“விடாமல் துரத்திக்கடிக்கும் கொசுக்களை, ஒரு வாய்ப்பு கிடைத்து போட்டுத்தள்ளும்போது இருக்கும் சுகமே அலாதிதான்“

ஆம்....தண்ணீருக்கு அடுத்தபடியாக நோய்களை பரப்புவது கொசுவே. டெங்கு காய்ச்சல் மற்றும் மஞ்சள் காய்ச்சல் போன்ற பயங்கர வியாதிகளை கொசுக்கள் பரப்புகின்றன. இது தவிர பலவித வைரஸ்களை பரப்புவதன் முலம் வேறு சில வியாதிகள் தொற்றவும் காரணமாக இருக்கின்றன.

1. கொசு(க்) கடித்தவுடன் அந்த இடத்தில் அரிப்பு ஏற்படுவது ஏன் ? 
2. மேலும் அந்த இடம் வீங்குவது ஏன் ?
3. கொசு ஒரு நேரத்தில் எவ்வளவு ரத்தம் உறிஞ்சும் ?

இதுபோன்ற கேள்விகளுக்கு பதிலாக...............

மனிதர்களை கடிப்பதற்கு கொசுவிடம் பற்கள் கிடையாது. உண்மையில் கொசு கடிப்பதில்லை. அதன் தலைப்பகுதியில் ஊசி போன்ற கூர்மையான குழல் பகுதி உள்ளது. அந்த ஊசி மூலம் ரத்தத்தை உறிஞ்சும் போது அது உறைந்துவிடக்கூடாது என்பதற்காக தனது எச்சில் போன்ற திரவத்தை வெளிப்படுத்துகிறது. இதில் உள்ள ரசாயனம் தோலில் பட்டதும் எரிச்சலையும் அரிப்பையும் ஏற்படுத்துகிறது.

ரத்தம் உறிஞ்சும் அளவு ஒவ்வொரு கொசுவுக்கு கொசு மாறுபடும். இருப்பினும் ஒரு கொசு தனது உடல் எடையில் ஒன்றரை மடங்கு அளவு ரத்தத்தை உறிஞ்சும். சராசரியாக ஒரு கொசு 2.5 மில்லி கிராம் எடை கொண்டதாக இருக்கும்.

இந்த கொசுக்களால் மனித இனம் அனுபவிக்கும் துன்பங்கள் கொஞ்சமல்ல. உலகில் 40 சதவீதம் பேருக்கு டெங்கு காய்ச்சல் கொசுக்கள் முலம் பரவுகிறது. ஆண்டு தோறும் 10 கோடி பேர் பாதிப்புக்குள்ளாவதில் ஏறக்குறைய 22 ஆயிரம் பேர் பாதிப்பு அதிகமாகி இறந்துவிடுகிறார்கள். குறிப்பாக “ஏடிஸ்” இன கொசுக்களே இதற்கு காரணமாகும்.

மனிதர்களின் உயிரையே பறிக்கும் மிகவும் அபாயகரமான நோய்களை வேகமாக உண்டாக்குவதில் கொசுக்களுக்கே முதலிடம். கொசுக்களிடமிருந்து நம்மை காப்பாற்றிக் கொள்வது நமது நிகழ்வுகளில் ஒன்றாகி விட்டது. குறிப்பாக குழந்தைகள் இதனால் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். 

ஒரு கொசுவின் இனப்பெருக்க காலத்தில் அது ஆயிரக்கணக்கான கொசுக்களை உற்பத்தி செய்து விடுகிறது. எனவே கொசுக்களை முற்றிலும் ஒழிப்பது என்பது சாத்தியமில்லாதது. ஆனால் அவற்றின் உற்பத்தியைக் குறைக்க முடியும். கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாவதற்கு நாமே காரணமாக இருக்கிறோம். 

இயற்கையாக கொசுக்களின் உற்பத்தியை ஓரளவு தடுப்பது எப்படி ?

1. வீட்டின் பின்பகுதியில் தண்ணீரைத் தேங்க விடுவது கூடாது. நீர் தேங்கும் இடங்களில் பிளிச்சிங் பவுடரை இடலாம் மற்றும் பினாயிலையும் ஆங்காங்கே தெளிக்கலாம்
.
2. சுத்தம் என்பது ஒவ்வொரு மனிதருக்கும் இன்றியமையாதது சுற்றுப்புறத்தை அசுத்தமாக வைத்திருத்தல் கூடாது.

3. தெருக்களில், குளம் குட்டைகளில் கழிவுகள் மற்றும் குப்பைகளை கொட்டுவது உள்ளிட்ட சில காரணங்களால் கொசுக்களின் உற்பத்தி பல மடங்காகி விடுகிறது. இதை முதலில் நிறுத்த வேண்டும். 

எனவே இயற்கையாக கொசுக்களின் உற்பத்தியைத் முழுவதுமாக தடுக்க முடியாவிட்டாலும், கொசுவின் உற்பத்தியைத் ஓரளவு தடுக்கும் விதத்தில் நாம் செயல்பட முயற்சி செய்யவேண்டும். 

செயற்கையாக கொசுக்களின் “கடி” யை தடுப்பது எப்படி ?

1. சீன தேசத்தில் உள்ள Ningbo, Foshan, Shunde போன்ற மகாணங்களில் உள்ள தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படுகிற Electronic Insect Killer Machine, Insect Killer Bat மற்றும் இன்றைய காலக்கட்டங்களில் வந்துள்ள பல நவீன எலக்ட்ரானிக் சாதனங்கள் போன்றவைகளையும் பயன்படுத்தலாம்.

2. மேலும் Electronic Spray, Insect Killer Liqued, Coil போன்றவைகளையும் பயன்படுத்தலாம். ஆனால் இவைகள் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்க கூடியது என்ற ஒரு கருத்தும் மருத்துவத்துறையில் நிலவுகிறது.

மேலும் கொசுத்தொல்லையை ஒழித்திட, நமது பேருராட்சியை அணுகி அவர்களை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் / மாவட்ட மலேரியா ஒழிப்பு அலுவலர்களுடன் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கைகள் எடுக்க அன்புடன் கேட்டுக்கொள்ளலாம்.

-சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! தொடரும்....

18 கருத்துகள்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

கொசு கடியால் அரிப்பதன் அறியாத அரிய தகவல்!

ஏனுங்க! கொசுத்தொல்லையை ஒழிக்க அன்போடு சொன்னால் தான் பேரூராட்சி கேட்குமா?
தாமாக முன் வந்து அல்லது சாதாரண வேண்டுகோளை செவி சாய்க்க மாட்டார்களா?

அதிரை சித்திக் சொன்னது…

கொசு ..தொல்லை ..பற்றி தொடரே

எழுதலாம் அவ்வளவு செய்தி இருக்கு

குறிப்பா கொசு எப்படி உருவாகிறது என்பதை

விளக்கி ..அது உருவாகுவதை தடுக்குக்கும் முறை

ஆராய்ந்து வெளியிடலாம் ..ஒரு டாகுமென்றி பார்த்த

ஞாபகம் மிகசிறு நீர் தேகத்தில் தான் கொசு லார்வா என்கிற

முட்டையை பாதுகாக்கிறது அதாவது கொட்டாங்குச்சி எனப்படும்

செரட்டை அதில் நாள்பட தண்ணீர் இருக்குமால் அதுவே கொசுவின் வீடு

அதே போன்று சிறு சிறு டப்பாக்கள் அதில் தண்ணீர் கொசுவுக்கு சொகுசான வீடு

ஓடும் தண்ணீரில் கொசு ஐயா இருக்க மாட்டார் அவருக்கு நன்னீர் அவசியம்

எனவே குடிநீர் தேக்கம் அவருக்கு அடைக்கலம் கொடுக்கும் அற்புதமான இல்லம்

குடிநீர் சேகரிப்பு தொட்டியை யாரும் சரியாக பராமரிப்பதில்லை ..காத்து கொசுவுக்கு

பகை சிறு சிறு செடி கொடிகள் தவிர்த்தல் நலம் ... சுத்தம் கொசுவுக்கு பகை ...

தாஜுதீன் (THAJUDEEN ) சொன்னது…

பயனுல்ல தகவல்

இப்னு அப்துல் ரஜாக் சொன்னது…

கொசுதானே என லேசா விடும் செய்தி அல்ல இது,கொசுதான் பிரச்சனை என்று தீர்க்க வேண்டிய முக்கிய மேட்டர்.இல்லையெனில் மருத்துவர்கள் பாடு கொண்டாட்டம்,நம்ம உடல் நிலை திண்டாட்டம்தான்.விழிப்புணர்வு கட்டுரை வித்தகர் சகோ நிஜாம் அவர்களுக்கு மிக்க நன்றி.

அப்துல்மாலிக் சொன்னது…

//த்தத்தை உறிஞ்சும் போது அது உறைந்துவிடக்கூடாது என்பதற்காக தனது எச்சில் போன்ற திரவத்தை வெளிப்படுத்துகிறது. இதில் உள்ள ரசாயனம் தோலில் பட்டதும் எரிச்சலையும் அரிப்பையும் ஏற்படுத்துகிறது//

இது புதுசு, நன்றி பகிர்வுக்கு, நல்ல பயனுள்ள தகவல்..

Yasir சொன்னது…

கொசுபற்றிய மேலும் சில தகவல்கள்


குர்ஆனில் கொசு ஓர் அதிசயம்:

கொசு தோற்றத்தில் மிகவும் சிறியது! அற்பமானது! ஆனால் படைப்பில் அது அற்புதமானது விந்தையானது. நுண்கருவி மூலம் பெரிது படுத்தப்பட்ட அதன் அற்புதத் தோற்றத்தை படத்தில் கீழே காணலாம்.

விந்தையான கொசு பற்றிய விபரங்கள்:
1. அது பெண்பால்.
2. அதற்கு அதன் தலையில் 100 கண்கள்.
3. அதன் வாயில் 48 பற்கள்.
4. அதன் உடலில் மாறுபட்ட மூன்று இதயங்கள்.
5. அதன் தும்பிக்கை நுனியில் ஆறு அறைகள்.
6. அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி அலுவல்கள்
7. ஒவ்வொரு பக்கத்திலும் மூன்று இறக்கைகள்.
8. எக்ஸ்ரே கருவி போன்ற நுண்ணிய தர்மோமீட்டர் பொருத்தப்பட்ட சிவப்பு நிறத்தில் ஒரு நுண்ணிய கருவி அதனுள் படைக்கப்பட்டுள்ளது. அதன் வேலை அது மனித உடலில் இருளில் வந்து அமர்ந்து இரத்தத்தை உறிஞ்சும் போது யாரும் கண்டு கொள்ள முடியாத அளவுக்கு மனிதனுடைய நிறத்திற்கேற்றவாறு தன் நிறத்தை மாற்றிக்கொள்கிறது..
9. மனித மூளையே வியக்குமளவுக்கு அதனிடமுள்ள கூரிய ஊசி முள்ளால் குத்தி சிறிஞ்சியைப் போல் உறிஞ்சிக் குடிக்கிறது. அது எப்படீ பாய்ந்து உள்ளே செல்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்ள முடியாது.
10. மனிதனின் இரத்த வாசனையை 60 கி.மீட்டர் தொலைவிற்கு அப்பாலிருந்து நுகர்ந்து தெரிந்து கொள்ளும் அற்புத ஆற்றலை அது பெற்றிருக்கிறது.
11. இவை எல்லாவற்றிற்கும் மேலாக அதன் முதுகின் மேல் கண்களால் பார்க்கமுடீயாத அளவுக்கு மிகச்சிறிய ஒரு பூச்சி உள்ளது என இன்றைய அறிவியல் கண்டு பிடித்துள்ளது.

அது அல்லாஹ்வின் அருள் மறையின் அற்புதச்செய்தியை முன்னறிவிப்பதாக உள்ளது. அது என்ன வசனம் தெரியுமா?

إِنَّ اللَّهَ لاَ يَسْتَحْيِي أَن يَضْرِبَ مَثَلاً مَّا بَعُوضَةً فَمَا فَوْقَهَا

நிச்சயமாக அல்லாஹ், கொசுவையோ அதைவிட அற்பமானதையோ (அதன் மேலுள்ளதையோ) உதாரணமாகக் கூற வெட்கப்படமாட்டான்
(அல்பகரா :2:26)

இந்த இறை வசனம் எப்போது அருளப்பட்டது தெரியுமா?

இணைவைப்பவர்களுக்கு எடுத்துக்காட்டாக அல்லாஹ் ....22:73-வது வசனத்தில் ஈயையும்,
....29:41-வது வசனத்தில் சிலந்தியையும் உவமையாகக் கூறுகிறான். இதைக் கேட்ட இணைவைப்பாளர்கள் ஈயும், சிலந்தியும் அல்லாஹ்வின் வேதத்தில் கூறப்படுகின்றனவா? என்று இளக்காரமாகக் கேட்டனர்.

அப்போது தான் அல்லாஹ் இவ்வசனங்களை அருளி இப்படிக் கூறினான்.

நிச்சயமாக அல்லாஹ் கொசுவையோ அதைவிட அற்பமானதையோ (அதன் மேலுள்ளதையோ) உதாரணமாகக் கூற வெட்கப்படமாட்டான்
(அல்பகரா :2:26)

அதாவது சத்தியம் என வந்து விட்டால் அது எவ்வளவு அற்பமானதாக இருந்தாலும்,பெரிதாக இருந்தாலும் அதைக் கூறுவதற்கு அல்லாஹ் தயங்கமாட்டான். எனக்கூறிவிட்டு அறிவியலுக்கு ஒரு சவாலாக கண்ணுக்குப் புலப்படாத ஓர் அற்பமான ஒரு பூச்சியையும் அதன் மேல் படைத்துள்ளான். அது அதன் குழவிக்குஞ்சாகவோ அதை தூய்மைப் படுத்தும் ஒரு அரிய படைப்பாகவோ இருக்கலாம். அதை அல்லாஹ்வே நன்கறிந்தவன்.

இதில் நூறு கண்கள் இருக்கமுடியுமா? என்ற ஐயம் நம்மில் எழலாம். அதற்கு விடையாக, (இடப்பக்கம் கீழே உள்ள படத்தில் பார்க்கவும்) படம்-1 கொசுவின் முகத் தோற்றத்தின் ஒரு பகுதியையும், படம்-2 . A. முகத் தோற்றத்தையும், B அதன் நுண்ணிய கண்களையும், C அதைப் பெரிது படுத்திக் காட்டிய கண்களையும் படத்தில் காணலாம்.

ஸுப்ஹானல்லாஹ் அல்லாஹ் யாவற்றின் மீதும் ஆற்றலுள்ளவன்.வல்லமையுள்ளவன் என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும்

Yasir சொன்னது…

//அற்புதத் தோற்றத்தை படத்தில் கீழே காணலாம்.// சாரி படங்களை இங்கே போட முடியவில்லை....

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

ஒவ்வொரு நாளும் உசுரோடு விளையாடும் கொசுவைப் பற்றிய தகவல்கள் அடங்கிய பதிவு !

தம்பி யாசிர் ! முன்பெல்லாம் கொசு(போல்) கடிகள் வாசிப்பதில் அலாதி ரசனை... இப்போ கொசு பற்றி ஆராய எடுத்து வைத்திருக்கும் குர்ஆனிலிருத்து அத்தாட்சிகள் பற்றி தொடரே எழுதலாம் போல இருக்கே... ஏற்கனவே... நினைய கொசுபற்றி நீங்கள் சிந்திக்க வைத்திருக்கிறீர்கள் !

சேக்கனா M. நிஜாம் சொன்னது…

பதிவுக்கு மேலும் மெருகூட்டுவது போல் உள்ளது நண்பர் யாசிரின் விளக்கங்கள். வாழ்த்துகள் !

தாஜுதீன் (THAJUDEEN ) சொன்னது…

சகோதரர் யாசிர்,

கூடுதல் தகவல் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி

அதிரை தென்றல் (Irfan Cmp) சொன்னது…

பயனுள்ள பதிவு நிஜாம் காக்கா அவர்களுக்கு மேலும் தகவல் தந்த யாசிரக்கா அவர்களுக்கும் நன்றி

கொசுக்களைக் கட்டுப்படுத்த நாம் பயன்படுத்தும் கொசுவர்த்திச் சுருள், மேட், லிக்யுட் மற்றும் ஸ்பிரேயர் போன்றவை உடல் நலத்திற்கு கேடு விளைவிப்பவை. ஆகவே, நோய்களை பரப்பும் கொசுக்களை கட்டுப்படுத்த நம் வீட்டை மற்றும் தெருக்களை சுத்தமாக வைத்திருப்பதே சிறந்தது,

Shameed சொன்னது…

இந்த கொசுக்குள்ளே இத்தனை விசயங்களா ! ஆச்சர்யமாக உள்ளது

sabeer.abushahruk சொன்னது…

பயனுள்ள தகவல்களைப் பகிர்ந்துகொண்ட தம்பி நிஜாமுக்கும் இலவச இணைப்பு தந்த தம்பி யாசிருக்கும் நன்றியும் வாழ்த்துகளும்

Ebrahim Ansari சொன்னது…

அன்புள்ள தம்பி ஷேக்கனா எம். நிஜாம் அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்.

இதுபோல் பல உசுரு மேட்டர்கள் தந்து இருக்கிறீர்கள்.

நீங்களும் மருமகனார் யாசிர் அவர்களும் சேர்ந்து அளித்துள்ள இந்த கலப்பு தகவல்கள் "எனக்கு இதெல்லாம் கொசு மாதிரி" என்று எவரும் கொசுவை அலட்சியப் படுத்திவிட முடியாது.

மீண்டும் மீண்டும் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

இப்னு அப்துல் ரஜாக் சொன்னது…

கொசுவைப் பற்றிய இஸ்லாமிய நோக்கு பற்றியும்,அது சம்பந்தமான மேலும் விளக்க வெளிச்சம் தந்த சகோ யாசிர் அவர்களுக்கு நன்றி

ZAEISA சொன்னது…

கொசுவிடமிருந்து தப்பிப்பதற்க்கும்,மேலும் கொசுவை ஒழிப்பதற்கும் எளியவழி ;
வீட்டு ஜன்னலுக்கு வெளியே அதாவது எந்தந்த வழியாக காற்று வீட்டுக்குள் வருகிறதோ அந்தந்த இடங்களில் ஒரு லேசான துணியில் சூடத்தை[கற்பூரம்]
கட்டி தொங்க விடவும்
அடுத்து,வாரத்தில் இரண்டு மூன்றுமுறை சாம்பிராணி யுடன் குந்துருக்கத்தையும் போட்டு வீட்டில் புகைபோட்டால் நம்முடைய சுவாசம்
சுத்தமாவதுடன் வீடும்,நம் உடைகளும் நறுமணங் கமழும்.பின்னே என்ன.....?
கொசு வரவே வராது.நம்ம M .L .A .மாதிரிதான்.

ZAKIR HUSSAIN சொன்னது…

மலேசியாவில் உள்ள ஒரு மருந்து [ இயற்கையான மருந்தை கேப்ஸ்யூலில் அடைத்து விற்கிறார்கள் ] டெங்கி ஜுரம் வந்து ப்லேட்டலட் குறைந்து மோசமான நிலமைக்கு போன நோயாளிகளுக்கு கொடுத்து உடனேயே ப்லேட்டலட். அளவை அதிகரிக்க செய்து நோயாளிகளை காப்பாற்றுகிறார்கள். இது நான் 4 நோயாளிகளுக்கு நடந்ததை என் கண் முன்னால் கண்டது.தமிழ்நாட்டை பொருத்தவரை மருத்துவ துறையில் Patient Management on Dengue அவ்வளவு திருப்திகரமாக இல்லை.

சமீபத்தில் மலேசியாவில் ஒரு பல்கலைக்கழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட Genetically Modified கொசு ஏடிஸ் கொசுக்களுடன் இன உற்பத்தி செய்து சீக்கிரம் மண்டையை போடுகிறமாதிரி கண்டு பிடித்து வெற்றி அடைந்திருக்கிறார்கள்.


டெங்கியை கட்டுப்படுத்த ஒவ்வொரு வீட்டிலும் சகோ. சேக்கனா நிஜாம் சொன்ன விசயங்களை கடைபிடிக்க வேண்டும். மெத்தனமாக இருந்தால் ஊரில் ஆம்புலன்ஸ் அதிகம் தேவைப்படும்.

பெயரில்லா சொன்னது…

Yasir சொன்னது…
கொசுபற்றிய மேலும் சில தகவல்கள்


குர்ஆனில் கொசு ஓர் அதிசயம்: அன்பு யாசர் அவர்களுக்கு.


அஸ்ஸலாமு அலைக்கும். சகோ எமது பதிவை உங்கள் வலைப்பூ வாசகர்களோடு பகிற்ந்து கொண்டமைக்கு நண்றி.

பதிவை முழுமையாக பதிவு செய்யுங்கள் பிளாஸ்மோடியம் (கொசுவின் மேல் உள்ள ஒரு உயிரி) பற்றி லிங்க் செய்யுங்கள்.

பதிவை காப்பி செய்யும் போது kaleelsms.com பதிவில் கட்டுரையை எங்கேயாவது காப்பி செய்கிறீர்கள http://www.kaleelsms.com/2012/02/blog-post_01.html என்னும் பதிவை படிக்கவும். இன்ஷா அல்லாஹ் இணைப்பில் தொடர்ந்து இருங்கள்.உங்கள் நண்பன் ஓ.பி. கலீல் ரஹ்மான். எஸ்.பி. பட்டிணம்